வியாழன், 19 நவம்பர், 2020

நவ பிருந்தாவனம்

ஸ்ரீ மதாநந்த குருப்யோ நமஹ
ஸ்ரீ ராகவேந்திராய நம

கர்நாடக மாநிலத்தில், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி தாலுக்காவில் ஆனேகுந்தியில் துங்கபத்ரா ஆற்றின் நடுவில் உள்ள ஒரு திட்டில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் நினைத்தாலும், துதித்தாலும் மனக்குறைகளை நீக்கி நன்மைகளை வழங்கி பிரார்த்தனைகள் நிறைவேற செய்யும் அற்புதமான ஸ்தலமாகும்.

மத்வாச்சார்யரின் குரு பரம்பரையில் உள்ள ஒன்பது ஆசார்ய குருமார்களின் ஜீவ சமாதி அமைந்து உள்ள மிகவும் புனிதமானதும் சக்தி வாய்ந்த ஸ்தலமாகவும் திகழ்கின்றது.

இந்த ஒன்பது ஜீவ சமாதிகளில் அந்த மகான்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

இந்த இடம் தான் ஸ்ரீமத் ராமாயணத்தில் சொல்லப்படும் கிஷ்கிந்தா.

சுக்ரீவரும் அவரது வானர சேனையும் இங்கு தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.  

அந்த ஒன்பது குருமார்களின் பெயர்கள்
கீழே !!

ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்,
ஸ்ரீ ஜய தீர்த்தர்,
ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர்,
ஸ்ரீ வாகீச தீர்த்தர்,
ஸ்ரீ வியாசராஜர்,
ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர்,
ஸ்ரீ ராமதீர்த்தர்,
ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர்,
 ஸ்ரீகோவிந்த தீர்த்தர்

ஒன்பது த்வைத மடாதிபதிகளின் பிருந்தாவனம் இருப்பதால் நவ பிருந்தாவனம் என்று அழைக்கப்படுகிறது.

இது மிகவும் சிறப்பு மிகுந்த ஆலயமாகும்

மத்வ மதத்தில் மிகவும் தொன்மையான பீடாதிபதி ஸ்ரீ வியாசாராஜர் பாரதம் முழுக்க இந்து சமய கருத்துகளையும் பல க்ரந்தங்களையும் பரப்பியவர்.

இந்த ஸ்ரீ வியாச ராஜரின் மறுபிறவியே மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள்.

ஸ்ரீ வியாசாராஜர் கிருஷ்ண தேவராயர் அரசருக்கு அலோசகராகவும் இருந்தவர்.

ஒருநாள் கிருஷ்ண தேவராயரை குஹ பீடையில் இருந்து காப்பாற்றி அரச பதவி ஏற்று வியாசராய தீர்த்தராக இருந்தவர் வியாசராஜர் ஆனார்.

இந்தியாவில் பல மாநிலங்களில், நம் தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆஞ்சநேய விக்ரஹங்கள் உட்பட 700 ஆஞ்சநேயர் விக்ரஹங்களை ப்ரதிஷ்டை செய்தவர்.

நவ பிருந்தாவனத்தை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்

ஒரு முறை நவ பிருந்தாவனம் சென்று பாருங்கள் வாழ்வில் ஒரு திருப்பம் கண்டிப்பாக ஏற்படும்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.


கருத்துகள் இல்லை: