திங்கள், 21 செப்டம்பர், 2020

விநாயகரின் எட்டு அவதாரங்கள்

விநாயகரின் எட்டு அவதாரங்கள் என்ன என்பது தெரியுமா?
விநாயகரின் எட்டு அவதாரங்கள்  என்ன என்பது தெரியுமா?

 நம்முடைய முதன்மைக் கடவுளான "விநாயகரின் எட்டு அவதாரங்களையும் முட்கல புராணம்" கூறுவது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.
 விநாயகரை வக்ரதுண்டா, லம்போதரா,  கஜனம் என பல பெயர்களைக் கொண்டு அவர்களை அழைக்கப்படுகிறது. இவ் வடிவங்களை இந்தியாவில் பல இடங்களில் அவர்களை வைத்து வழிபாடு இன்றுவரை செய்து வருகிறார் ,ஆனால் இருப்பினும் விநாயகரின் வடிவங்களைப் பற்றி பல கருத்துக்கள் இன்று வரை நிலவி வருகிறது ,விநாயகர் "புராணத்தின்" படி விநாயகர் நான்கு வடிவங்களைக் கொண்டுள்ளார். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகத்தை சார்ந்தது ஆகும். இருப்பினும் அவை எட்டு உருவடிவங்களைக் கொண்டுள்ளார், என்றும் அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட  வழிபாடு உள்ளது என்று முட்கல புராணம் கூறுகிறது .

 8 வடிவிலான விநாயகருக்கு வெவ்வேறு  விசேஷங்கள் உள்ளது, அதில் ஒவ்வொரு வடிவத்தில் மாறுபட்ட  வடிவம்  கொண்டவை அதில் சரும நிறம், வாகனம்  அவர் கைகளில் வைத்திருக்கும் சில பொருட்கள்  இது போன்ற அனைத்துமே வேறுபட்டிருக்கும்,  ஒவ்வொரு உருவத்திற்கும் மாறுபட்டு   வடிவமைக்கப்பட்டிருக்கும்.
  இந்த எட்டு வடிவத்திற்கும் உண்டான காரணங்களையும் என்னவென்று இப்பதிவில் காணலாம்.

 அசுரர்கள் அல்லது நம்மை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை அளிப்பதற்கு விநாயகரின் இந்த எட்டு வடிவமும் ஒவ்வொரு கணங்களையும் பெற்றிருக்கும்.

 வக்ரதுண்டா


 வக்ரதுண்டா என்பதுதான் விநாயகரின் முதல் வடிவம் வக்ரதுண்டா என்றால் "வளைந்த தும்பிக்கையை" குறிப்பதாகும். இது  மட்சர்யசுரா  என்றால்  அரக்கனை கொல்லவே இந்த அவதாரத்தை எடுத்தார் , விநாயகர் மட்சர்யசுரா  என்றால் மனிதர்களில் உள்ள பொறாமை குணத்தை குறிப்பதாகும், அந்த பொறாமையை எதிர்கொண்டு அதில்  வெற்றி பெறுவது எப்படி என்று இவ்வடிவம் குறிக்கும். இந்த அவதாரம் அவர் சிங்கத்தின் மீது வீற்றிருப்பார்.

  ஏகடண்டா


 இது  விநாயகரின் இரண்டாவது வடிவமாகும். ஏகடண்டா என்றால் "தந்தம்"என்று பொருளாகும். இந்த அவதாரம் மடசுரா என்ற அரக்கனை கொல்லவே இந்த அவதாரத்தையும் விநாயகர் எடுத்தார். இதில் சக்தி மற்றும் இதர காரணங்களால் மனிதர்கள் மனதில்  குடிபுகும் நஞ்சை குறிப்பதாகும். மனிதர்களில் உள்ள நஞ்சை நீக்கி வெற்றிப்பெற ஏகடண்டா பிறந்தார். இந்த அவதாரம்  எலியின் மீது வீற்றிருப்பார்.

 மகோதரா


 இதுதான் விநாயகரின் மூன்றாவது பெரிய தந்தையை கொண்ட வடிவமாகும் இதில் எண்ணமயக்கத்தின் அரக்கனான மோஹசுராவை  கொல்வதற்காகவே இந்த அவதாரம் எடுக்கப்பட்டது .
இதில் "அறியாமையை ஒழித்து எதிர்மறையான எண்ணங்களை அழித்து விடவே இந்த வடிவம்" எடுக்கப்பட்டது .
இந்த அவதாரமும் எலியின்  மீது வீற்றிருப்பார்.

  கஜானன்


 கஜானம் என்றால் "யானை முகத்தனை " குறிப்பதாகும். இந்தத் தோற்றம் "பேராசையின் அரக்கனை அழிக்கவே" இந்த அவதாரத்தை  எலியின்மீது வீற்றிருப்பார்.

  லம்போதரா


 இதுதான் விநாயகரின் ஐந்தாவது வடிவமாகும் லம்போதரா என்பது "பானை தந்தத்தை" கொண்டதாகும்.  இந்த வடிவம்  கொண்ட விநாயகர் கோபத்தில் அசுரனான க்ரோதாவை அழித்தார், இந்த அவதாரமும் எளிய மீது தான் வீட்டில் இருப்பார்.

  விகடா


 விகடா என்றால் எப்போதும் இல்லாததை போன்ற வடிவம் கொண்டதாக இருக்கும், இந்த வடிவமானது "காமவெறி அரக்கர்களை அழிக்க" இந்த அவதாரம் எடுத்து வைத்தார். இந்த அவதாரத்தில் மயிலின் மீது அவர்   அமைந்திருப்பார்.

 விக்னராஜா

இந்த  தோற்ற அமைப்பு கொண்டது  ஈகோவின் அரக்கனான "மாமாவை" அழிக்கவே இந்த அவதாரம் எடுத்துரைத்தார். விநாயகர் விக்னராஜா என்றால் தங்களை நீக்குபவர் என்று பொருள் ஆகும். இது  சேஷா
என்ற நாகத்தின் மீது அமர்ந்திருப்பார்.

தும்ரவர்ணா


  இதுதான் விநாயகர் "எட்டாவது அவதாரம்" ஆகும் தும்ரவர்ணா என்றால் "புகை நிறம்" கொண்ட வடிவமாகும், இந்த அவதாரம் ஆணவ அரக்கர்களை அபிமனராசுவை அழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார், இந்த அவதாரமும் எலியின் மீது தான்  அமைந்திருப்பார்.


சற்குருதாசன்
ராமமூர்த்தி BSNL
நாடி ஜோதிடர்
9444113777
9790901567


கருத்துகள் இல்லை: