மெய்யூர் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்
ஆதியில் சத்யபுரி என்று அழைக்கப்பட்ட மெய்யூர் கிராமத்தில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஆனந்த விமானத்தைக்கொண்ட இத்திருக்கோயில் பாஞ்சராத்திர ஆகமத்தை சேர்ந்தது. பிரகாரத்தில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயாரும் ஸ்ரீ ஆண்டாளும் தனிக்கோயில் கொண்டு காட்சி கொடுக்கின்றனர். விஸ்வக்சேனர், நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கை ஆழ்வார், மணவாளமாமுனிகள் ஆகிய ஆழ்வார் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் இவ்வூரில் உள்ள ஒரு பெரியவருக்கு கனவில் யான் ஆற்றங்கரையில் உள்ளேன் நானே நாகை சுந்தரராஜன் என்று உரைத்திட ஊர் மக்கள் மறு நாள் ஆற்றங்கரையில் நான்கு பஞ்சலோக விக்கிரகங்களை கண்டு கொண்டு வந்து இத்திருக்கோயிலில் சேர்த்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீ அன்னம்மாசாரியார் இத்திருக்கோயில் பற்றி சுலோகம் செய்துள்ளார். இங்கு ஆவணி மாதம் பவித்ரோத்சவம், ஆழ்வார்கள் திருநட்சத்திரங்கள் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெறுகின்றன. செங்கல்பட்டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பாலாறு தாண்டிய உடன் செக்போஸ்ட் நிறுத்தத்தில் இறங்கி இவ்வூருக்கு வரலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக