உறவினர்கள் இறந்து விட்டால் அந்த வருடத்தில் பண்டிகைகளை கொண்டாடலாமா? தர்ம சாஸ்த்ரம் சொல்வது என்ன.
பிராஹ்ம்மணர்களாகிய நாம் அனைவரும் அடிப்படை தர்ம சாஸ்திரத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.
சட்டம் (தர்ம சாஸ்த்திர சட்டம்) தெரியாது. என்பது குற்றமாகும் (பாபமாகும்.) IGNORANCE OF LAW IS NOT AN EXCUSE.
தர்ம சாஸ்திரப்படி ஒரு கர்மாவைச் செய்வதற்கு கர்த்தா (அக்கர்மாவைச் செய்கின்றவன்) காலம் (அக்கர்மாவை செய்ய விதிக்கப்பட்ட காலம்) இடம் (அக்கர்மாவைச் செய்யக்கூடிய இடம்) இவை மூன்றும் தோஷமற்றதாக இருக்க வேண்டும் என்கிறது சாஸ்த்திரம்.
மேலே கூறப்பட்ட அடிப்படையின் படி ஒரு கிருஹத்தில் யாராவது இறந்து விட்டால் அவர்களுக்கு (அந்த இறந்தவருக்கு) கர்மா செய்யக்கூடிய பிள்ளை (அ) கர்மாவைச் செய்யக்கூடிய உறவினர் யாரோ அவர்கள் அந்த ஒரு வருடம் நித்ய கர்மாவைத் தவிர மற்ற கர்மாக்களஈச் செய்வத்ற்கு சுத்தி போறாது என்று கூறுகிறது. அது மட்டுமல்ல அக்கர்மாவை செய்பவன் எங்கு வஸிக்கின்றானோ அந்த இடத்திற்கும் போவதால் சுத்தி போறாது என்கிறது.
இதன் அடிப்படையில் முற்காலத்தில் (அவிமுக்த குடும்பம்) அதாவது பந்துக்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்தார்கள். (சமையல், பூஜை) ஆகையால் பந்துக்கள் அனைவரும் ஒரு வருடம் பண்டிகைகளைக் கொண்டாடமாட்டார்கள். இக்காலத்தில் அப்படியல்லாமல் உறவினர்கள் அனைவரும் தனித்தனியாக இருக்கின்றார்கள். இப்படி இருக்க மேலே கூறிய சாஸ்த்திரப்படி கர்த்தாவைத் தவிர (கர்மா செய்யக்கூடிய) மற்றவர்களுக்கு எப்படி அசுத்தி வரும். மற்றவர்கள் வீட்டிற்கு எப்படி அசுத்தி வரும். ஆகவே இறந்தவரின் கர்மாவைச் செய்யக்கூடிய பிள்ளைகளுக்கும் (அ) அந்த இறந்தவரின் கர்மாவை தொடர்ந்து செய்யக்கூடியவர்களுக்கும் மட்டுமே இந்த அசுத்தி பொருந்தும். மற்ற தாயாதிகள் மற்றும் உறவினர்கள் இறந்தவரின் சபிண்டீகரணம் என்று சொல்லக்கூடிய பன்னிரெண்டாம் நாள் கர்மா முடிந்தவுடன் அவரவர்கள் வீட்டில் எல்லா பூஜைகளையும், பண்டிகைகளையும் செய்யலாம்.
சாஸ்திரத்தில் கூறப்பட்ட கர்மாக்களை நாமே அசுத்தி என்று நினைத்துக் கொண்டு செய்யாமல் விடக்கூடாது. இயற்கையாக (தெய்வாதீனமாக) வந்தால் மட்டுமே விசேஷ கர்மாக்களை செய்யாமல் விடவேண்டும். சாஸ்த்திரம் எப்போதும் நமது நன்மையைத்தான் கூறும். நாம் தான் சாஸ்த்திர்ம் என்ற பெயரில் பல ஸம்பிரதாயங்களை வளர்த்துக் கொண்டுள்ளோம்.
இதைப்பற்றி ஒரு சமயம் மஹாஸ்வாமிகள் கூறுகையில் நானும் பெரியவர்கள் (முன்னோர்கள்) செய்த ஸம்பிரதாயங்களை விடக்கூடாது என்று கூறிவந்தேன். ஆனால் வடக்கத்தியர்கள் விவாஹ விஷயங்களில் என்னை கண்டித்து கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் சாஸ்த்ர விரோதமான ஸம்பிரதாயங்களை கடைபிடிக்க கூடாது என்று கூறினார். ஆதிசங்கர பகவத் பாகவதர்களும் இதையே உபநிஷத் பாஷ்யத்தில் விவரமாகக் கூறியுள்ளார். ஏதோ ஒரு கட்டத்தில் (தவிர்க்க முடியாத) சூழ்நிலையில் தனது குருவே சாஸ்திரத்திற்கு மாறாக செய்திருந்தால் கூட நாம் அதைப் பின்பற்றக் கூடாது என்று கூறியுள்ளார். இதை பல பேர் எங்காத்து சாஸ்த்ரிகள் ஒரு வருடம் பண்டிகை செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்களே என்று கேட்கிறார்கள். யாரும் வைதீகர்களை குறை கூற வேண்டாம். நாம் தான் சாஸ்த்திரம் தெரிந்த வைதீகர்களை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். தர்ம சாஸ்திரம் தெரியாத வைதீகர்களைக் கேட்டுப் பயனில்லை. தர்ம சாஸ்திரம் சைவம், வைணவம் எல்லோருக்கும் ஒன்று தான். ரிஷிவாக்கியங்களான ஸ்ம்ருதியை கடைபிடிப்பவர்கள் அனைருக்கும் இது பொருந்தும்.
தற்காலத்தில் உள்ள குழப்பங்களுக்கு அருமையான விளக்கம்.
பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக