108 பெருமாள் திவ்ய தரிசனம்!
இப்பிரபஞ்சத்தில் பெருமாளை சேவிக்க 108 திவ்ய தேசங்கள் உள்ளன. முதல் தேசம் ஸ்ரீரங்கம். 108 வது தேசம் பரமபதநாதர். 102வது தேசம் முக்திநாத் பெருமாள் (சாலக்கிராமப் பெருமாள்). இது நேபாளம் ஜாம்ஜோம் அருகே உள்ளது. தவிர ஏனைய 107 திவ்ய தேசங்கள் இந்தியாவில் உள்ளது. அவை வடநாட்டு திருப்பதி. தென்நாட்டு திருப்பதி, சோழநாட்டு திருப்பதி, நடுநாடு திருப்பதி (சோழ மண்டலம்), மலைநாடு திருப்பதி (கேரளம்) என ஐந்து மண்டலங்களாக பரவி உள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்தது தான் 108 பெருமாள் திவ்ய தேசம்.
108 பெருமாள் திவ்ய தேசம் தரிசனத்தை ஒரே இடத்தில் சேவிக்க... மதுரை தமுக்கம் மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புரட்டாசியை முன்னிட்டு தினமும் அதிகாலை 5.45 முதல் காலை 8 மணி வரை திருப்பதி ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி), திருச்சானுார் அலமேலு மங்கை தாயார் (பத்மாவதி தாயார்) பாராயணம் மற்றும் சுப்ரபாதம் சிறப்பாக நடக்கிறது.
108 திவ்ய தேசம் பெருமாள் சுவாமிக்கு காலை 6 மணி, மாலை 6 மணிக்கு இரண்டு கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பெருமாள் தரிசனத்தை முன்னிட்டு பஜனைகள், கோலாட்டம், ஆன்மிக சொற்பொழிவுகள் அருமை. பிரசாத ஸ்டாலில் லட்டு, முறுக்கு, புளியோதரை பிரசாதம் தலா ரூ.10.
அற்புதங்கள் நிறைந்த 108 பெருமாள் திவ்ய தரிசனம் தினமும் அதிகாலை 5.45 முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. செப்.,21ல் நிறைவடைகிறது.
கட்டணம் நபருக்கு ரூ.50. விவரங்களுக்கு மேலாளர் ஜெயப்பிரகாசின் மொபைலில் 98941 33523 தொடர்பு கொள்ளலாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். 108 பெருமாள் திவ்ய தரிசனம் நூறு கோடி புண்ணியம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக