தூணிலும் இருப்பான் இறைவன்!
ஒரு ஊரில் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கோயிலைக் கட்டினார்கள்,
அவரவர் தங்களால் இயன்ற தொண்டுகளைக் கோயிலுக்கு செய்தார்கள். அந்த ஊரில் ஒரு
வயது முதிர்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். அவனுக்கும் கோயிலில் ஏதாவது
செய்ய வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று எனக்கும் ஏதாவது வேலை கொடுங்கள்
என்றான். நீ கிழவன் உன்னால் என்ன செய்ய முடியும்? என்று அந்த நிர்வாகி
அலட்சியாமாகக் கேட்டார். ஏதோ, என்னால் முடிந்ததை செய்கிறேன் ஏதாவது
மூலையைக் காட்டுங்கள் அங்கே ஏதாவது செதுக்குகிறேன் என்று கெஞ்சினான்.
கிழவனுடைய வேண்டுகோளுக்கு இரங்கிய அவர் கோயிலில் இருட்டாக இருந்த
ஓரிடத்தில் உள்ள கம்பத்தைக் காட்டி, அதில் ஏதாவது செய்து கொள் என்று
சொன்னார். கிழவன், அந்த இடமாவது கிடைத்ததே என்ற மகிழ்ச்சியோடு வேலை செய்யத்
தொடங்கினான். அவனுக்கு வயசு ஆயிற்றே தவிர, சிற்பத் திறனில் தளர்ச்சி
உண்டாகவில்லை. மெல்ல மெல்ல அந்தத் தூணில் ஓர் அழகிய உருவத்தைக் கோலம்
செய்யத் தொடங்கினான். ஆர்வத்தோடும், பக்தியோடும், உருவைச் செதுக்கினான்.
நாளுக்கு நாள் அவனுக்கு ஊக்கம் மிகுந்தது உருவமும் அழகு பெற்று வந்தது.
ஒரு நாள் வெளியூரிலிருந்து ஒரு கலாரசிகர் வந்தார் கோயிலில் பல சிற்பங்கள் அமைத்து வரும் சிற்ப உருவங்களை எல்லாம் கண்டு இன்புற எண்ணிக் கோயிலுக்குள்
புகுந்தார். முகப்பில் பல சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அவர்களுடைய உழைப்பில் உருவாகி வந்த சிற்பங்களைக் கண்டு வியந்தார். சிற்ப
வடிவங்களில் சில முற்றுப் பெற்றிருந்தன. சில முடிவடையும் நிலையில் இருந்தன.
ரசிகர் எல்லாவற்றையும் பார்த்து மகிழ்ந்தார். பிறகு, கோயிலைச் சுற்றிக்
கொண்டு வந்தார். ஒரு மூலையில் உள்ள தூணில் கிழச் சிற்பி வேலை செய்து
கொண்டிருந்தான். சற்றே இருண்ட அந்த மூலைக்கும் ரசிகர் சென்றார் சிறிது
நேரம் நின்ற பிறகுதான் தூண் தெரிந்தது; தூணில் உருவாகிய வடிவமும் தெரிந்தது
கண்ணைச் சுருக்கியும் விரித்தும் பார்த்தார். அங்கேயே நின்ற விட்டார்.
மயில் மேல் ஏறிவரும் முருகன் திருவுருவத்தை கிழவன் அங்கே படைத்து
முடித்திருந்தான். அந்த உருவத்தின் ஒவ்வோர் அங்கமும் குழைந்து இழைந்து
கொஞ்சியது. திருமுக மண்டலம் உயிர் பெற்று விளங்கியது. இத்தனை நேரமும்
ரசிகர் கண்ட சிற்பங்களை எல்லாம் எங்கோ தள்ளிவிட்டு இந்த முருக வடிவம்
மேலோங்கி நின்றது ரசிகர் உலகையே மறந்து பார்த்தார்; அந்தக் கிழவனுடைய
கையில்தான் எத்தனை திறமை!
அவர் எதையோ நினைத்துக் கொண்டார் கண்ணில் நீர் துளித்தது. அவனைப்
பார்த்து பேசலானார். அப்பா! இந்த அழகிய உருவத்தை இந்த இருண்ட மூலையிலே
அமைக்கிறாயே! இதை யார் அப்பா, பார்க்கப் போகிறார்கள்? உனக்கு இந்த இடம்தானா
கிடைத்தது? மூலஸ்தானத்து விக்கரகத்தைச் செய்யும்படி அல்லவா உன்னிடம்
சொல்லியிருக்க வேண்டும்? சொல், இதை யார் பார்த்து மகிழப் போகிறார்கள்?
என்று கேட்டார். சிற்பி கனைத்துக் கொண்டான், ஒருவரும் பார்க்க மாட்டார்கள்
என்றா சொல்கிறீர்கள்? அவர்கள் பார்க்க வேண்டாமே! ஒருவன் நிச்சயமாகப்
பார்ப்பான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்ற தலை நிமிர்ந்து அவன்
சொன்னான். அவனுடைய நெஞ்சத் திண்மையைக் கண்டு ரசிகர் பிரமித்துப் போனார்.
கிழவன் கூறியபடி அவனுடைய சிற்பத்தை அந்த ஒருவன் தானா கண்டான்? கோயிலைப்
பார்க்க வந்தவர்கள் எல்லோரும் கண்டார்கள். கர்ப்பகிருகத்துக்குள்இருக்கும் சுவாமிக்குப் பூஜை செய்வது தான் வழக்கம். ஆனால் யாரோ ஒரு
பக்தர் இந்த தூணைச் சுற்றி கம்பி கட்டி அதையே ஒரு கோயில் ஆக்கி விட்டார்;
விளக்குப் போட்டார். தனியே பூஜை நடத்தினார்.
முருகன் கம்பத்து இளையவனாகக் காட்சி தரலானான் இப்படி ஒரு கதை உண்டு.
திருவண்ணாமலை கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தக் கரையில் கம்பத்து இளையனார்
கோயில் என்று ஒரு சன்னதி இருக்கிறது. அருணகிரிநாதருக்கு அருள் செய்த
பெருமான் திருக்கோயில் அது. ஒரு மண்டபத்தின் தூணில் முருகன்
எழுந்தருளியிருக்கிறான் பின்னர் ஒரு கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. தூணில்
உருவத்தை வடித்தபோது அங்கே இந்தச் சிறப்பு ஏற்படும் என்று அந்தக்
காலத்தில் யாரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். சிதம்பரத்தில் நடராஜர்
சன்னதியில் ஒரு தூணில் தண்டாயுதபாணி எழுந்தருளியிருக்கிறார். அந்தத் தூணே
இப்போது கோயிலாகி விட்டது. இப்படியாக தூணில் உள்ள ஆஞ்சநேயருக்கும்
தண்டபாணிக்கு மகிமை உண்டான இடங்கள் பல.
சீர்காழியிலும் இப்படி ஒரு நடைபெறுகின்றன அந்த தேவஸ்தானத்தில் தலைமைப்
பதவியை சட்டைநாதர் தம்முடைய மகிமையினால் பெற்றார் பக்தர்களும் இப்போது
அவரது அருள் வேண்டி நிற்கிறார்கள். இந்த சட்டைநாதர் உருவம் தோணியப்பர்
கோயிலைச் சார்ந்த ஒரு மூலையில் இருக்கிறது. கோயிலில் பிரம்மபுரீசர்
சன்னதிக்குப் பின்னே ஒரு கட்டுமலை இருக்கிறது. அந்த மலையில் தோணிபுரேசர்
எழுந்தருளியுள்ளார். சட்டைநாதரோ ஒரு மூலையில் தனியனாக உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக