ராமகிருஷ்ண உபநிஷதம்!
மாடுகள் அசை போடுவதுபோல்: பசுவானது பால் தருகிறது. இந்தப் பால் பசுவின்
உடலில் ஓடும் ரத்தத்தில் கலந்து, அதன் உடல் முழுவதுமே இருக்கிறது, ஆயினும்
பசுவின் காதைப் பிழிந்தால் பால் வருமா? வராது. பசுவின் மடியில்தான் பால்
சுரக்கும். உலகமெல்லாம் கடவுள் மயம் என்பது உண்மை. ஆயினும் பசுவின் உடலில்
பால் சுரக்கும் மடியைப் போன்றது, புண்ணிய ÷க்ஷத்திரங்களில் மகிமை. அங்கே
பக்தர்கள் சென்று, அந்த ஸ்தலங்களில் சுரக்கும் பக்தியைப் பெற்று, பகவானை
அடைகிறார்கள். தலைமுறை தலைமுறையாகப் பல பக்தர்கள் தவமும் தியானமும் செய்த
அந்த ஸ்தலங்களில் ஆண்டவன் தன் தரிசனத்தை எளிதில் தருகிறான். எண்ணற்ற
பக்தர்களுடைய தவம், ஜபம், தியானம், பூஜை, பிரார்த்தனை இவற்றின் புகை அங்கே
படிந்து நிற்கிறது. அது அவ்விடம் பக்தியுடன் செல்லும் மக்களின்
உணர்ச்சியைத் தன் மயமாக்கும். பக்தர்களின் கால் தூசி பட்டாலுமே போதும்
என்று சொல்வது இதுதான். கோடிக்கணக்கான பக்தர்கள்-படித்தவர்கள்,
படிப்பில்லாத பாமரர்கள்-விழுந்து புரண்டு வழிபட்ட இடங்களுக்குத் தனியொரு
சக்தி உண்டு. உலக வாழ்க்கையையும், ஆசைகளையும் நீக்கி உள்ளம் உருகி ஆடியும்
பாடியும் புனிதமாக்கிய ஸ்தலங்களுக்கு நாமும் சென்று நம் உள்ளத்தை ஆண்டவன்
பாதங்களில் சமர்ப்பித்தால் நம்முடைய கல் மனமும் உருகும். ஆனபடியால் அத்தகைய
இடங்களில் எங்கும் பரவி நிற்கும் ஈசனை எளிதில் காணலாம்.
பூமியை எங்கேயும் தோண்டி ஜலம் எடுக்கலாம். ஆனால் சில இடங்களில் ஏற்கனவே
கிணறும் குளமும் ஏரியும் தயாராக இருக்கிறது. அவற்றை நாம் அடைந்து சுலபமாகத்
தாகம் தணித்துக் கொள்ளலாம் அல்லவா? அப்படியே கோயில்களும்
÷க்ஷத்திரங்களும், தீர்த்தங்களும், பக்தி தாகத்தை அவ்விடங்களில்
சிரமமில்லாமல் தீர்த்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக