செவ்வாயின் பிறவி ரகசியம்!
நவக்கிரகங்களில் செவ்வாயை அங்காரகன் என்பர். இவரது அதிதேவதை முருகன்.
முருகனைப் போல செவ்வாயும், சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்தே அவதரித்தார்.
ஒருசமயம், பார்வதியை விட்டுப்பிரிந்த சிவன் யோகநிஷ்டையில் ஆழ்ந்தார்.
அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை அரும்பி பூமியில் விழுந்தது. அது
ஒரு குழந்தையாக மாறியது. பூமாதேவி அக்குழந்தையை வளர்த்து ஆளாக்கினாள்.
சிவந்த அந்தக் குழந்தையை செவ்வாய் என்றனர். சிவனை நோக்கி தவம் செய்த
செவ்வாய் கிரகபதவி பெற்றார். மச்சபுராணத்தில் செவ்வாயின் வரலாறு
வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. தட்சன் நடத்திய யாகத்தை அழிக்க சிவபெருமான்,
வீரபத்திரரை அனுப்பினார். யாகத்தை அழித்த வீரபத்திரர் ஆவேசம் தணியாமல்
இங்கும் அங்கும் அலைந்தார். அவரைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சாந்தமாகும்படி
வேண்டினர். வீரபத்திரரும் தன் வடிவை மாற்றிக் கொண்டு சாந்தமானார். அவரே
செவ்வாய் என்று கூறப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வீரபத்திரரை
வணங்கி அருள் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக