அரிசியில் ஆண்டவன்!
"அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று சொல்வது மரபு. அதாவது,
அன்னம் வேறு; ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்று தான் இதையே
நாட்டுப்புறங்களில் "சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும்
குறிப்பிடுவர். சிவபெருமானுக்கு, ஐப்பசிமாதம் பவுர்ணமியன்று அன்னத்தால்
அபிஷேகம் செய்கிறார்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் கங்கை
கொண்ட சோழபுரத்திலுள்ள பெரிய லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடப்பதைக் காண
ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அன்னம் இட்ட கை சின்னம் கெட்டுப் போகாது.
ஒருவர் செய்த அன்னதான புண்ணியபலன் பல பிறவிகளுக்கும் தொடரும் என்று தர்ம
சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னம் அரிசியிலிருந்து தயாராகிறது. "அரிசி என்ற
சொல்லில் இருவித மந்திரங்கள் சேர்ந்துள்ளன. "அரி என்பதை விஷ்ணு என்றும்,
சிங்கம் என்றும் கூறலாம். பிரகலாதனைக் காப்பதற்காக பெருமாள் எடுத்த
அவசரத்திருக்கோலம் சிங்க முகத்துடன் கூடிய நரசிம்ம அவதாரம். "சிஎன்பது
சிவபெருமானைக் குறிக்கும். மகான்களுக்கு மட்டும் "சி என்ற மந்திரம் சொல்லி
சிவனை வழிபட உரிமை இருக்கிறது. "சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சாப்பாட்டு
ராமன்களுக்கு உதாரணம் காட்டி சொல்வார்கள். உண்மையில், சோறால் அபிஷேகம்
நடக்கும் சிவலிங்கத்தை தரிசிப்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையே இப்படி குறிப்பிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக