அன்றே சாட்டையை சுழற்றிய ராஜராஜசோழன்!
ராஜராஜசோழன் ஆன்மிகத்தில் எந்தளவுக்கு உயர்ந்தவனோ, அந்தளவுக்கு அரசு
நிர்வாகத்திலும் சிறந்தவன். இவனது காலத்தில் ஐந்து வாரியங்கள்
இருந்தன.சம்வத்சர வாரியம் வழக்குகளை விசாரிக்கும். ஏரி வாரியம் வாய்க்கால்,
குளக்கரைகளைப் பாதுகாத்தல், தண்ணீரைப் பங்கிட்டுக் கொடுக்கும். நிலவளம்
குறித்து ஆய்வு செய்து தீர்வளிப்பது தோட்ட வாரியம். பொற்காசுகளையும்,
செப்புக்காசுகளையும் ஆய்வு செய்து போலிகளைக் கண்டுபிடிப்பது பொன் வாரியம்
(எப்பவுமே ஏமாத்துறவங்க இருக்கத்தான் செய்திருக்காங்க) நிலவரி, பிற வரிகளை
வசூலிப்பது பஞ்சவார வாரியம்.இந்த வாரியங்களின் நிர்வாகிகளாக கணக்காளர்கள்
நியமிக்கப்பட்டனர். வாரியங்களை கண்காணிக்க ஒரு சபை இருந்தது. சபையாளர்கள்
கேட்கும்போது, கணக்காளர்கள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்.
கணக்காளருக்கு சம்பளம் என்ன தெரியுமா?தினமும் ஒருநாழி நெல்,
வருடத்துக்கு ஏழரை கழஞ்சு (39.750 கிராம்) தங்கம் போனஸ், இரண்டு சீருடை.
கணக்கை வாசிக்கும்போது, என் மனதறிந்து இதில் எந்தத் தவறுமில்லை. யாருக்கும்
எந்த சலுகையும் காட்டவில்லை, என்று உறுதி சொல்ல வேண்டும். சும்மாவா!
பழுக்கக் காய்ச்சிய கோடரியை கையில் பிடித்துக் கொண்டு சொல்ல வேண்டும்.
கணக்கை முடித்ததும், கையில் காயம் படாமல் இருந்தால் ஏழேகால் கழஞ்சு (உத்தேசமாக 38.425 கிராம்) தங்கம் சிறப்பு போனஸ். காயம்
பட்டாலோ, கழுதை மேல் ஏற்றி, சாட்டையால் அடித்து ஊர்வலம்... பத்து கழஞ்சு
(53 கிராம்) தங்கம் அபராதம் வேறு. அபாராதம் கட்டாவிட்டால் சிறை.அந்தக்
காலத்திலே ராஜாக்கள் நேர்மையா இருந்திருக்காங்க! இப்ப இது மாதிரி தண்டனை
பத்தி பேசினாலே, மனித உரிமையை பறிச்சுட்டோமுனு போர்க்கொடி தூக்கிட
மாட்டாங்களா என்ன!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக