மதுரை மீனாட்சி கோயிலில் எப்போது தரிசிக்கலாம்!
தினமும் காலை 5 மணிக்கு அம்மன் சன்னதி வாசலில் சித்தி விநாயகர்,
முருகனுக்கு பூஜை செய்யப்படும். காலை 5.10 மணிக்கு பள்ளியறையில் உள்ள
சுவாமி, அம்மனுக்கு பூஜை செய்தவுடன், காலை 5.15 மணிக்கு, மூலஸ்தானத்தில்
தீபாராதனை காட்டி, திரை விலக்கப்படும். காலை 5.30 மணிக்கு
பள்ளியறையிலிருந்து சுவாமி, தனது சன்னதிக்கு புறப்படுவார். அங்கு காலை 5.45
மணிக்கு பூஜைகள் செய்து, திரை விலக்கப்படும். பின், பரிவார தெய்வங்களுக்கு
பூஜை செய்யப்படும். காலை 6.30 மணிக்கு அம்மன் சன்னதியில் அபிஷேகத்திற்காக
திரை போடப்படும். காலை 6.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை
நடக்கும். மீண்டும் திரை போடப்பட்டு காலச்சந்தி பூஜை நடத்தப்படும். பின்
காலை 7.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன், காலை 10.30 மணி வரை அம்மனை
தரிசிக்கலாம். சுவாமி சன்னதியிலும் இதேமுறை பின்பற்றப்படுகிறது. மீண்டும்
காலை 10.30 மணிக்கு திரை போடப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். காலை 10.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை காட்டி, மீண்டும் திரை போடப்படும்.
காலை 11.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன் அலங்கார கோலத்தில் மதியம்
12.30மணி வரை அம்மனையும், சுவாமியையும் தரிசிக்கலாம். பின் நடை
சாத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக, மாலை 3.45 மணிக்கு பூஜை செய்து, 4
மணிக்கு திரை விலக்கப்படும். இரவு 7.30 மணி வரை தரிசனம் செய்யலாம். இரவு
7.30 மணிக்கு அர்த்தசாம பூஜைக்காக திரை போடப்பட்டு, இரவு 8 மணிக்கு
விலக்கப்படும். அப்போது அம்மனை வெள்ளை பட்டுபுடவை அல்லது காட்டன் புடவையில்
இரவு 9.15 மணி வரை தரிசிக்கலாம். பின், பள்ளியரை பூஜை நடக்கும். விசேஷ
நாட்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக