காய்ச்சலை குணமாக்கும் சாமி..!
மருத்துவத்துறையில் நவீன வளர்ச்சிகள் வந்தாலும், நமக்கு ஏதாவது உடல்
சார்ந்த நோய்கள் வரும் போது, மருத்துவத்துடன், நம் இஷ்ட தெய்வங்களை
முறையிட்டு, அந்த நோயிலிருந்து விடுபடுகிறோம். காய்ச்சல் வந்தால், அதை
குணப்படுத்தும் சாமி, நம்மூரில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியுமோ...
மேலமாசிவீதியில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலில் உள்ள
ஜூரஹரலிங்கம் முன் ரசம் சாதம் படைத்து, மிளகு வைத்து பூஜித்தால் காய்ச்சல்
பறந்து விடும், என்பது ஐதீகம்.ஞாயிறு ராகுகாலத்தில், இங்குள்ள காலபைரவர்
சன்னதியில் உள்ள சூலத்தில், எலுமிச்சம் பழம்சாத்தி வழிபட்டால், வேண்டுதல்
நிறைவேறும்.அரசு பதவி அடைவதற்கு, சிவலிங்கத்தை திங்கள் தோறும் அல்லது 21
நாட்கள் தொடர்ந்து வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடுமாம்.பிரம்மா
வீற்றிருக்கும் ஸ்தலம் என்பதால், பிறவி புண்ணியத்தை இந்த பிறவியில்
அனுபவித்து, நற்கிரியை அடைய பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தல் சிறப்பு.
கல்வி வளர்ச்சிக்கு குருஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி, திட்டை,
திருச்செந்தூர் என்ற சிறப்பு பட்டியலில் இக்கோயிலும் இடம் பெற்றுள்ளது.
பொதுத் தேர்வு எழுதுவோருக்கும், மாணவர்களுக்கும் ஞாபக சக்தி வளரச் செய்யும் தட்சணாமூர்த்தி சகல பாக்கியமும் தருவார்.
ஆடிவீதியில் பிரதட்சணம் செய்தால் விதிபயனையும் மாற்றிவிடும். இங்கு
மேற்கு @நாக்கி இருக்கும் சிவனை வழிபடுவதால் ஐஸ்வரியம் பெருகும். தினமும்
காலை 6.30 - காலை 11.45 மணி, மாலை 4 - இரவு 9.30 மணி வரை நடை
திறந்திருக்கும். சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலவச ஆன்மிக வகுப்புகள்
மற்றும் தினமும் காலை யோகா, தியான பயிற்சிகள் நடக்கிறது. மாதந்தோறும்
பூசநட்சத்திரத்தில் நடக்கும் கூட்டுப்பிரார்த்தனையில், இளம்பிறை மணிமாறனின்
சொற்பொழிவு நடக்கும். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில்
இயங்கும் இக்கோயிலில், ஸ்தல அர்ச்சகராக தர்மராஜ் சிவன், மேலாளராக இளங்கோ,
கண்காணிப்பாளராக எழில் அரசன் செயல்படுகின்றனர். கோயில் வழிபாடு மற்றும்
சிறப்புகளை அறிய 94434 55311ல் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக