ஞாயிறு, 22 மார்ச், 2020

பாசுரம்  1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

பாசுரம்  6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பாசுரம்  10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பாசுரம்  11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பாசுரம்  15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

பாசுரம்  16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

பாசுரம்  17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

பாசுரம்  18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

பாசுரம் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பாசுரம் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பாசுரம்  25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பாசுரம்  29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பாசுரம்  30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
​கிருஷ்ண லீலை

கிருஷ்ணன் என்றாலே லீலைகள் செய்வதில் வல்லவன் என்று சொல்லக் கேட்டிருப்போம். கிருஷ்ணனின் லீலைகளால் அவன் மகிழ்நதானோ இல்லையோ கோபியர்களும் அந்த கதைகளைக் கேடபவர்களும் ரசித்து மகிழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த கதைகளையெல்லாம் இப்போது நாம் கேட்டாலும் படித்தாலும் இதெல்லாம் நிஜமாகவே நடந்திருக்குமா? கிருஷ்ணன் பெண்களிடம் இப்படி தான் நடந்து கொண்டாரா என்றெல்லாம் ஆச்சர்யப்பட வைக்கும். அவர் பெண்களுடனும் ராதையுடனும் விளையாடிய அந்த இடம் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? ஆனால் கிருஷ்ணன் இன்றைக்கும் அவர் கோபியர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடிய பிருந்தாவனத்துக்கு தினமும் இரவு வந்து போகிறாராம். கேட்கவே சிரிப்பாக வருகிறதா?... அவர் வருகிறார் என்று சொல்வதே இப்படி ஆச்சர்யப்படுகிறீர்களே அவருடைய தினசரி வருகைக்காக தினந்தோறும் சில சுவாரஸ்யமான பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. அவை என்ன என்று தெரிந்தால் இன்னும் நிறைய ஆச்சர்யப்படுவீர்கள்.

​நீதிவான் கோவில்

உத்திரப் பிரதேச மாநிலம், மதுரா நகரில் உள்ள பிருந்தாவனத்தில் நீதிவானன் கோவில் இருக்கிறது. இந்த பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ணா தினமும் இரவு வந்து ஆடிப்பாடிச் செல்கிறார். பிருந்தாவனத்தில் இருக்கிற இந்த நீதிவான் கோவில் மிகவும் அமைதியான பகுதி. சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் இங்கு வந்து போகிறார்கள். இங்குள்ள பிருந்தாவன தோட்டத்தில் தான் வழக்கமாக தன்னுடைய சிறு வயதில் இருந்தே கிருஷ்ணர் விளையாடி வந்திருக்கிறார். இப்போதும் இந்த வனம் மிக அழகாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த அழகிய நந்தவனத்தைச் சுற்றிலும் ராதை மற்றும் கிருஷ்ணரின் ஓவியங்களும் சிற்பங்களும் நிறைந்த பெரிய மதில்கள் இருக்கின்றன. அந்த வனத்துக்குள் கொஞ்சம் அச்சம் தரக்கூடிய அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்று உண்டு. ராதையும் கிருஷ்ணரும் இரவில் ஆடிப் பாடி மகிழ்ந்து முடித்தவுடன் இந்த வனப்பகுதியில் சென்று தான் ஓய்வெடுப்பார்களாம். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதனாலேயே பகல் நேரத்தில் இந்த கோவிலுக்குச் செல்பவர்கள், ராதையும் கிருஷ்ணரும் புரியும் லீலைகள் மற்றும் பல மர்மங்கள் நடப்பதற்கான அடையாளங்களைப் பார்க்க முடியும்.

​ரங் மஹால்

இந்த பகுதிக்கு அருகிலேயே ரங் மஹால் என்று சொல்லக்கூடிய ஒரு கோவில் இருக்கிறது. இது கிட்ட தட்ட ராதைக்கும் கிருஷ்ணருக்குமான அந்தப்புரத்தைப் போன்ற இடம். அவர்களுக்காக ஊஞ்சல் போன்ற பொருள்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் விட சுவாரஸ்யடான ஒரு விஷயம் என்ன என்றால் இந்த கோவிலின் உள் அறையில் ஒரு கட்டில் மெத்தை போடப்பட்டிருக்கிறது. அது ராதையும் கிருஷ்ணரும் ஓய்வு எடுப்பதற்காக. இந்த கோவிலுக்குப் போக வேண்டும் நினைத்து பிருந்தாவனத்துக்குள் நுழைபவர்கள் வெகுதூரம் வரைக்கும் வெறும் வனத்தைத் தவிர வேறு ஒன்றையும் பார்க்க முடியாது. கொஞ்ச தூரம் சென்ற உடன் ஒரு சிறிய அறை பூட்டப்பட்டு இருக்கும். ஆனால் அந்த கதவு கண்ணாடியால் அமைக்கப்பட்டு இருக்கும். கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும் போது உலகம் அழிந்து விடும் என்பது சொல்லப்பட்ட வரலாறு.

​நோ எண்ட்ரி

இந்த கோவிலுக்குள் இருக்கும் கிருஷ்ணரும் ராதையும் அழகும் அமைதியும் ததும்பும் நகைகள் எல்லாம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு பூஜை நடக்கும். அதன்பின் யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது. மாலை ஐந்து மணிக்கு இந்த கோவில் அடைக்கப்படும். மாலை மங்கி, இருள் கவ்வத் தொடங்கியதும் கிருஷ்ணர் நடனமாடத் தொடங்குவாராம். அந்த வனத்தில் மரங்களாக வீற்றிருக்கும் கோபியர்கள் கிருஷ்ணனுடன் இரவு முழுக்க நடனம் ஆடுகிறார்கள். காலை விடியும் போது மாலை எப்படி இருந்ததோ அதே பழைய நிலைக்கு அந்த இடம் மாறி விடும்.கிருஷ்ணரின் தீவிர பக்தரான சுவாமி ஹரிதாஸ் மிகப் பெரிய இசைக்கலைஞர். இவர் ஒரு கல் பலகையில், தினமும் இரவு நடக்கும் கிருஷ்ண ராதை லீலையைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். கிருஷ்ணன் - ராதை லீலைகள் பற்றி வாய்வழிக் கதைகள் மூலமும் புத்தகங்களின் வாயிலாகவும் நிறைய கேட்டிருப்போம். ஆனால் இங்கிருப்பவர்கள் அதை சிலாகித்துச் சொல்கிறார்கள்.

​வனத்தின் அதிசயம்

கோபியர்கள் ராதையையும் கிருஷ்ணனையும் சூழ்ந்து நிற்க கிருஷ்ணன் புன்னகையோடு புல்லாங்குழலை எடுத்து வாசிக்க கோபியர்களுடன் விடிய விடிய நடனம் ஆடிக் களிப்பார்கள். இந்த கிருஷ்ண லீலை பிருந்தாவனத்தில் தினமும் நடந்தால் கூட இதை மனிதர்கள் யாராலும் பார்க்க முடியாது. இந்த வனமே மிகவும் வித்தியாசமானது தான். பொதுவாக மரங்கள் என்பவை எப்படி இருக்கும். கிளைகள் விரிந்து மேல்நோக்கி உயரச் செல்லும். ஆனால் வேர்களோ மண்ணை நோக்கி உள்ளே பாய்ந்து செல்லும். ஆனால் இந்த வனத்தில் அப்படியே நேர்மாறாக நடக்கிறது. மண்ணுக்குள் இருக்கும் வேர்கள் மண்ணைப் பிளந்து கொண்டு வெளியே வருகிறது. அதே போல் கிளைகள் கீழ்நோக்கிச் செல்கின்றன.

​கோயில் நடை

மாலை ஐந்து மணி ஆனதும் கோவிலுக்குள் இருப்பவர்கள் அனைவரும் வெளியேறி விடுவார்கள். வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு விடும். உள்ளே யாரும் இருக்கக்கூடாது. அப்படி தங்கி, கிருஷ்ணனின் லீலைகளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் குருடாகி விடுவார்கள். காது செவிடாகிடும். வாய் பேச முடியாது. இப்படி தான் கிருஷ்ணனின் தீவிர பக்தர் ஒருவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக யாருக்கும் தெரியாமல் மாலை கோவிலுக்குள் ஒளிந்திருந்து கிருஷ்ண லீலையை பார்க்க உள்ளே இருந்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் கதவு திறக்கும் போது அவருக்கு பேச்சு வரவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டு, இயல்பு நிலையிலேயே இல்லாமல் அவரை மீட்டிருக்கிறார்கள்.

​விசாகா நீர்த்தொட்டி

இந்த பிருந்தாவனத்துக்குள் விசாகா என்று நீர்த்தொட்டி இருக்கிறது. ஒருமுறை கோபியர்கள் சூழு நடனமாடிக் கொண்டிருந்த போது கோபியர்களில் ஒருவரான விசாகாவுக்கு தாகம் எடுத்ததாம். உடனே கிருஷ்ணர் தன்னுடைய புல்லாங்குழலால் கீழே ஒரு துளையிட்டாராம். தண்ணீர் பீறிட்டு வந்து விசாகாவின் தாகம் தீர்த்ததாம். இன்னும் இந்த நீர்த்தொட்டி அந்த பகுதியில் விசாகா நீர்த்தொட்டி என்ற பெயரில் இருக்கிறது.

​சந்தனக் கட்டில்

நிதிவான் என்னும் கிருஷ்ணருக்காகவும் ராதாவுக்காகவும் ரங் மஹாலில் சந்தன கட்டில் ஒன்று போடப்பட்டிருக்கும். அந்த கட்டில் முழுக்க பூக்களால் நிரப்பி ஏழு மணிக்கெல்லாம் கட்டில் தயாராகி விடுகிறது. அதோடு தாமரை தண்ணீர் வாசனைக்காக கட்டிலின் அருகில் வைக்கப்பட்டிருக்கும். அங்கு உள்ளே சமாதிக்குள் உறைந்திருக்கும் மாஸ்ட்ரோ ஹரிதாஸ் பாடல்கள் பாடுவதாகவும் நம்புகிறார்கள். லட்டுக்கள், பழங்கள், டூத் பேஸ்ட், பிரஸ் ஆகியவை எல்லாம் படுக்கைக்கு அருகிலேயே வைத்திருக்கிறார்கள்.

​துளசி செடிகள்

துளசி செடிகள் சூழ்ந்த அந்த வனத்தில், எல்லா துளசி செடிகளும் ஜோடி ஜோடியாகவே இருக்கின்றன. ஏனென்றால் இரவு லீலை தொடங்கியதும், அவை அப்படியே கோபியர்களாக மாறிவிடும். பகல் நேரத்தில் இங்கு வரும் பக்தர்களுக்கு இந்த துளசி செடிகளைத் தொடவோ பறிக்கவோ தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இவை வெறும் துளசி செடிகள் அல்ல. அவற்றை கோபியர்களாகவே தான் கருதுகிறார்கள்.
பிராமண ரத்னா அட்சய பாத்திரமாகிய அன்னதானசிவன்

பலவருடங்களாக ஒரு பிரசாரம் நடக்கிறது….

தமிழ் மொழிக்கு பாரத தேசத்தின் விடுதலைக்கு சமூக நல்லிணக்கத்திற்க்கு பொதுவாழ்க்கைக்கு, ஜாதி வேறுபாட்டிற்க்கு அப்பாற்பட்டு மனித குல உயர்வுக்கும் கூட பிராமண குலத்தின் பல பெரியோர்கள் ஆங்காங்கே செய்துவந்த எத்தனையோ நற்பணிகள் மறைக்கப்பட்டு... பிராமண எதிர்ப்பு மற்றும் வெறுப்பு என்னும் நச்சுப்புகை பகையாக, அரசியல், ஊடகம், எழுத்து, பேச்சு மூலம் பரப்பப்படுகிறது.
பிராமணர்கள் இந்த தேசத்தில் வாழக்கூடாத விஷக்கிரிமிகள் போலவும் சுயநலம் கொண்ட இனவெறியர்கள் என்றும் விஷமிகள் பொய்யை பிரசாரம் செய்து வருகிறார்கள். பிராமணர்கள் ஆற்றிய அறவாழ்வின் சுவடுகள், தியாகங்கள், தொண்டுகள்,செயற்கரிய சேவைகள் மறக்கடிக்கப்படுகின்றன. அந்த பிராமண துவேஷிகளின் கூற்றுகளை மறுத்துரைக்கவும், இந்த கருத்துலக  தோழர்கள், மானமிகுகள், உடன் பிறப்புகள் எனச் சொல்லிக்கொள்ளும் “மயக்க வா(வியா)திகள்” எல்லோருக்கும் புரியவைக்கவும்… தமிழ் மொழி, தேசம், மனிதகுல வளர்ச்சி என அத்தனை துறைகளிலும் பிராமண பெரியோர்கள் பலர் தன் உடல் பொருள், ஆவி, என தியாகம் செய்து வந்த,வருகின்ற அறப்பணிகளை அடையாளம் காட்டி அந்த பெரியோர்களை “பிராமண ரத்னாக்களை”ப் பற்றிப் பதிவு செய்யும் பகுதியாக “பிராமண ரத்னா” என்னும் சிந்திக்கவைக்கும் சிந்தனைப் பகுதி...

சின்னஞ் சிறுவயதில் செயலதுவோ பெரியதுவாம்
செவியில் ஒலித்ததுமே சிலுசிலுத்துப் போகுதடா
அன்னதான சிவம் அறமேற் கொண்டதுவோ
அதுவல்லோ தேப்பெருமாள் நல்லூரின் அழியாப்புகழ்

“சான்ஸே இல்லப்பா” என சுத்த தமிழில் 21 ஆம் நூற்றாண்டு தலைமுறையின் உதடுகள் உச்சரிக்கும் இவரைப் பற்றிய செய்திகளைக் கேட்டால்... ஆம்! நம்ப முடியாது தான், தன்னலம், சுயமுன்னேற்றம், இவையே மூச்சுக்காற்றாகக் கொண்டு அப்படி வாழ்வதே வாழ்க்கை....  பொதுநலம், தியாகம் என்பதெல்லாம் முட்டாள்தனம் என வாழ்க்கையை வகுத்துக்கொண்டுள்ள இன்றைய மனிதர்களுக்கு நம்ப முடியாதது தான். “ஒரு நாய் பட்டினி கிடந்தால் அந்த நாய்க்கு உணவிடுவதே என் மதம். அந்த நாயே என் கடவுள்.” என்றார் விவேகானந்தர்... இப்படிப்பட்ட மனிதாபிமானம் கொண்ட மதத்திற்க்கு, தேசத்து மக்களுக்கு இன்றைக்கு சிலர் மனிதாபிமானம் பற்றி போதிக்கிறார்கள்.


பிறப்பு, இளமைக்காலம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேப்பெருமாள்நல்லூர் என்னும் சிற்றூர். பிராமணர்களில் அஷ்டஸகஸ்ரம் என அழைக்கப்படும் பிரிவினர் அதிகம் உள்ள ஊர்.


     தமிழ் இலக்கியம் பதிவுசெய்துள்ள உதியஞ் சேரலாதன் எப்படி மஹாபாரத போரில் கௌரவ, பாண்டவ என இரு படைகளுக்கும் உணவு படைத்தானோ அப்படி யார் எவர் என ஜாதி, மொழி, இனம், ஊர், ஏதும் பாராது கோயில்களுக்கு விழாக்காலங்களில் இறையருள் பெற வரும் மக்களுக்கு இல்லையென சொல்லாது அன்னதானம் செய்து அதற்கென்றே தனது உடல் பொருள் ஆவியை தந்தவர் அன்னதான சிவன்.


     1852 இல் அசுவத நாராயண சாஸ்திரியார், லக்ஷ்மி அம்மாள் தம்பதிக்கு பிறந்த இராமசாமி என்னும் சிவனுக்கு அன்னம்மாள் என்னும் சகோதரி மற்றும் சுப்ரமணிய சாஸ்திரி என்னும் சகோதரர் உண்டு.


     தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தியிடம் இவர் குழந்தை பருவம் முதல் கொண்ட பக்தி வியப்புக்குரியது. உள்ளூர் ஆரம்ப பாடசாலைக்கு சரிவர செல்லாமல் சிலேட்டில் பூக்களை கொண்டு சென்று தக்ஷிணாமூர்த்திக்கு ஸமர்பிப்பார்.


     உள்ளூர் காளியாட்டத்திருவிழாவின் போது தண்ணீர் பந்தல் அமைக்க படிக்கும் காலத்தில் துவங்கிய சிவனின் தயை... பின்னாளில் அன்னதான சிவனாக்கியது.


     வேத அத்யயனம் செய்து வந்தாலும் பின்னர் வைதீகத்துக்கு வரவில்லை. திருவிடைமருதூர் செட்டியார் சத்திரத்தில் தங்கும் யாத்ரீகர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் தலைமை சமையல்காரர் வேலை.. மாத சம்பளம் மூன்று ரூபாய் உணவு வசதி உண்டு.


     உணவு தயாரித்தவுடன் சிறிது கிண்ணத்தில் சாதத்தினை எடுத்து வைப்பார் எல்லோருக்கும் உணவு வழங்கியபின் மீண்டும் குளிப்பார் கால் நடையாகவே தேப்பெருமாள்நல்லூர் சிவன் கோவிலுக்கு வருவார் தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு நிவேதனம் செய்வார் பின் தனது வீட்டில் உணவு உண்பார்.


     சிலசமயம் நேரம் ஆகி சாதம் கெட்டுவிடக்கூடாது என்பதால் சிறிது நீர் சேர்த்து சாதத்தினை எடுத்துவந்து தக்ஷிணாமூர்த்திக்கு சமர்பிப்பார். அதனை காணும் சிலர் பழைய சாதத்தினை சிவன் நிவேதனம் செய்வதாக எண்ணி “பழையசோற்று சிவன்” என அழைப்பதுண்டு.


     ருசியான பழத்தினை ஸ்ரீ ராமனுக்கு சமர்பிக்க எண்ணிய சபரி சுவைத்துப்பார்த்து பழங்களை கொடுத்தாலும் அந்த எச்சில் பழத்தின் பின்னால் உள்ள பக்திக்காக ஸ்ரீ ராமன் ஏற்றான். அப்படி சிவனின் நீர் கலந்த அன்னத்தின் பின்னால் உள்ள பக்திக்காக தக்ஷிணாமூர்த்தி அந்த அன்னத்தினை ஏற்றார் போலும்.


     இருபத்தைந்தாவது வயதில் சிவகாமி என்னும் தர்மவதியை பெற்றோர்கள் ஏற்பாட்டில் மணந்த சிவனுக்கு உண்மையில் அவரது தர்ம வாழ்க்கைக்கு உதவும் சகதர்மிணியாகவே இருந்தார்.


அன்னதானம்


    தேப்பெருமாள்நல்லூர் பெருமாள் சன்னதியில் சித்திரை மாதம் நடைபெற்றுவந்த வஸந்தோத்ஸவத்தின் போது ஸம்ப்ரதாய நாட்டிய நாடகங்கள் நடைபெறும்.  உலகப் புகழ் பெற்ற அந்த நாடகங்களை காண பல ஊர் மக்கள் வருவது வழக்கம். அவர்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என தோன்ற ராமசாமி தனது பூர்வீக சொத்தினை விற்று ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத வரதராஜர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் சன்னதி உத்ஸவத்தில் தனது முதல் அன்னதானத்தினை துவங்கினார்.


     பெருமாள் சன்னதியில் ராமசாமி ஆரம்பித்த அன்னதானம் பின்னாளில் அவரை அன்னதான சிவனாகியது 50 வருடம் அவரது அன்னதான பணி தடையின்றி வளர்ந்து தமிழகத்தின் பல ஊர்களில் கோயில் திருவிழாக்களில் நடந்தது.


     சில பாத்திரங்களுடன் முதல் நாள் இரவு செல்வார் சிப்பந்திகள் வருவார்கள். முதல் நாள் மாலை வரை அன்னதானத்திற்கான எந்த அறிகுறியும் தெரியாத அந்த இடத்தில் மறுநாள் காலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் என்றால் யாருக்கும் வியப்புதான்.


     சிவன் உபயோகித்த சமையல் பாத்திரங்கள் பல கும்பகோணம் ஸ்ரீ காஞ்சிமடத்தில் இருந்தது.


     சிவன் அவர்களின் வருடாந்திர அன்னதான நிகழ்ச்சிகள் - சித்திரை மாதம் நாகைப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி அமுது படையல் திருவிழா. வைகாசியில் தேப்பெருமாள் நல்லூர் வசந்தோத்ஸவம், நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகேயுள்ள திருமாளகரம் திருவிழா.  ஆனி மாதம் காரைக்காலில் மாம்பழத்திருவிழா. ஆடி மாதம் சங்கமுகம், ஆடி அமாவாசை மயிலாடுதுறை அருகே பூம்புகாரில்.  ஐப்பசியில்    மாயூரம் (மயிலாடுதுறை) துலாஸ்நானம், கார்த்திகையில் திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவாரத்திருவிழா, மார்கழியில் நாச்சியார் கோயில் தெப்பம், தை மாதம் எண்கண் புஷ்யம் திருவிழா, மாசியில் கும்பகோணம் மகம், திருவைகாவூர் சிவராத்திரி பங்குனியில்  எட்டுக்குடியில் உத்திரம். மற்றும் பல இடங்களில் நடந்த திருவிழாக்கள்... என அவர் சேவை தொடரும் ...


அட்சய பாத்திரமானார்


    யாரிடமும் சிவன்  காசு பணம் என வாங்கமாட்டார், அன்னதானத்துக்கு “இந்த இடத்துக்கு இந்த பொருள்களை அனுப்பி வை” என உத்தரவிடுவார், அதே சமயம் அவரவர் தகுதி வசதி தெரிந்து வாங்குவார். ஒருமுறை இரண்டு மூட்டை அரிசி அனுப்பி வைத்தவரிடம் உன் குடும்பம் பெரியது ஒருமூட்டை போதும் என்றாராம். 


     ஒருமுறை ஸமாராதனைக்கு ஊறுகாய்க்கு நெல்லிக்காய் பத்து வண்டியில் வந்ததாம். இரண்டு நாளில் தீர்ந்துவிட மேலும் பத்துவண்டியில் நெல்லிக்காய் வந்ததாம்.


     விறகு நூறு வண்டி, உணவு பரிமாறப்பட்ட இடத்தினை உடனடியாக சுத்தம் செய்வது சிவனின் தூய்மையான குணத்துக்கு அடையாளம். சுத்தம் செய்ய துடைப்பம் மட்டும் இரண்டு மாட்டுவண்டியில் வந்ததாம்.

     திருச்சி திருவானைக்கா கோயில் தாடங்க பிரதிஷ்டையின் போது ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது என்றால் யோசித்துக்கொள்ளுங்கள்.


     அவரின் மனதின் விசாலம் மற்றும் தூய்மை தன்னலம் பாராத தன்மை இவற்றினால் கவரப்பட்ட பல நூறு செல்வந்தர்கள் அவரின் வாக்குக்கு கொடுத்த மரியாதை இன்றைக்கு நினைத்துக்கூட பார்க்கமுடியாத செயல். ஆம் அது சிவன் ஸமாராதனை.


     பரிமாற பாத்திரங்களை அந்தந்த இடங்களில் வாங்கி பின் பணி முடிந்தவுடன் ஏலம் விட்டு அதன் மூலம் சிப்பந்திகளுக்கு சம்பளம் கொடுத்து, உணவு மீதம் இல்லாமல் பார்த்துக்கொள்வதுடன் யாருக்கும் இல்லை என சொல்லாது உணவளித்து, தயிர் ,நெய் மீதமானால் அவற்றினை பீப்பாய்களில் நிரப்பி...  கெடாமல் இருக்க குளத்துக்குள் குளிர்ந்த நீரில் மூழ்க வைத்து ... பாதுகாத்து பின் பயன்படுத்திக்கொள்வது அவரின் சிக்கன நடவடிக்கை.


     உணவு தயாராகும் போதே அதனில் ஏதும் குறை இருக்கிறதா என வாசனையின் மூலம் அறிந்து “டேய்! சாம்பாருக்கு இரண்டு முறம் மல்லி சேர்க்கணும், ஒரு முறம் உப்பு சேர்க்கணும்” என சிவனிடமிருந்து உத்தரவு வரும்.

 ஸமாராதனையில் உண்டவர்கள் எழுந்தவுடன் அவர்கள் உண்ட எச்சில் இலையின் மீது விழுந்து புரளுவது சிவனின் வழக்கம். கரூர் அருகே உள்ள நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை (நினைவு) தினத்தில் பலதரப்பட்ட மக்கள் உண்ட இலைகளின் மீது பிரார்த்தனை செய்துகொண்டவர்கள் உருள்வது இன்றும் நடைபெறுகிறது. எனவே சிவனின் இந்த செயல் அவர் மன அடக்கத்துக்கு செய்த செயல். சாதாரண மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட உயர்ந்த நிலையை அடையும் நிலை அதை புரிந்துகொள்ள எல்லாராலும் முடியாது.    


      எல்லோருக்கும் உணவு அளித்துவிட்டு தான் மட்டும் யாரோ ஒரு அன்பரின் வீட்டிற்க்கு சென்று மோர்சாதம் சாப்பிடுவார், அப்படி செல்லும் வீடுகளில் பிராமணர் அல்லாதவர்கள் வீடும் உண்டு.


     வயது முதிர்ந்த பிறகு மாட்டு வண்டியில் பயணம், அதுவும் வண்டிக்காரனுக்கு கட்டளை -  என்ன தெரியுமா? மாட்டை அடித்து விரட்டி ஓட்டுவதோ அல்லது தார் குச்சி போடுவதோ கூடாது என்பார். சில சமயம் மாட்டுவண்டியின் பின் தானே நடந்தும் செல்லுவார் அதிக தூரம் பயணித்ததால் மாட்டிற்கு துன்பம் கூடாது என எண்ணிய மகாத்மாதான் சிவன்.


     மனைவிக்கு உடல்நிலை சரியில்லை உடனே வரவும் என செய்தி , ஸமாராதனை முடிந்தவுடன் வருகிறேன் போகிற உயிரை பிடிக்கவாடா முடியும்? இத்தனை பேருக்கும் சாப்பாடு போடவேண்டாமா... ஸமாராதனை முடிந்து சிவன் சென்றபோது அவரது தொண்டிற்க்கு, கொள்கைக்கு, தியாகத்துக்கு உற்ற துணையாய் இருந்த தர்ம பத்னி சிவகாமி தீர்க்கசுமங்கலியாய் பிரிந்திருந்தார். தன்னலம் பாராத சிவனுக்கு சுயநலம் பாராத சிவகாமி என்னே பொருத்தம்!!!!


.    பலர் அறியாத செய்தி, சிவன் நன்றாக ஜோதிடம் பார்க்கக்கூடியவர். அவரிடம் ஜோதிடம் பார்த்து  அவர் கூறியபடியே நடந்து  பலனடைந்தவர்கள் பலர்.

    1852 இல் பிறந்து தனது 87வது வயதில் 19/5/1939 இல் இறைவனடி சேர்ந்த கலியுக பீமன் அன்னதான சிவன் பற்றி அவரது நூற்றாண்டு விழாவின் போது... .


     “தேப்பெருமாள்நல்லூர் அன்னதானசிவன் .. உலகில் பிறக்கும்போது எப்படி தனக்கு என்று உடமை ஏதுமின்றி பிறந்தாரோ அது போல வாழ்நாள் எல்லாம் வாழ்ந்திருந்தவர். மேலே ஆகாசம், கீழே பூமி, சுற்றிலும் காற்று, தண்ணீர், பறவைகள், மனிதர்கள், இடுப்பில் ஒரு கந்தல், தோளில் ஒரு சவுக்கம், வயதான பிறகு ஊன்றிக்கொள்ள கையில் ஒரு தடி, இவ்வளவுதான் அவருடய உடமைகள்! சில அபூர்வ மனிதர்களைப் போல முகவெட்டு “பெர்சனால்டி” என்று சொல்வதற்கும் அவரிடம் ஒன்றுமில்லை.


     ஆயினும் அந்த அதிசயமனிதர் தமது வாழ்நாளில் லட்ச லட்ச லட்ச மக்களுக்கு அறுசுவை உண்டி அளித்திருக்கிறார் என்றால் அந்த அற்புதத்தினை என்னவென்று சொல்வது. --  (கல்கி 25/5/1952) 


     ஓயாத உழைப்பு... உழைப்பு... சரியாக நேரத்துக்கு வேண்டிய உணவு கூட உண்ணாத உழைப்பு... காலத்தின் கைகளில் ஸ்ரீ சிவன் உடல் தளர்ந்தது.

      “மாமா உங்களது அந்திம கைங்கர்யத்தினை நான் செய்ய அனுமதிக்கவேண்டும்”.. சகோதரியின் மகன் பிரார்திக்க...


     எனது ஈமக்கிரியைக்காக யாரிடமும் நீ கைநீட்டி பணம் வாங்கக்கூடாது உன்னிடம் உள்ள பணத்தினை கொண்டே செய்யவேண்டும் அப்படி என்றால் அனுமதி தருகிறேன்...


     ஆஹா! என்ன ஒரு உயர்ந்த சிந்தனை. தன்னலம் சிறிதும் இல்லாது தான் செய்யும் அன்னதானத்துக்கு கூட யாரிடம் பல் இளித்து கேட்காது, தன் சுயமரியாதையும் விட்டுக்கொடுக்காது, கருணை கூடிய அதிகாரத்தில் “இதை இதை அனுப்பி வை” என கட்டளையிட்டு அப்படி அவர் கேட்பதே தாங்கள் செய்யும் பாக்கியம் என மிட்டா மிராசுகள் செல்வந்தர்கள் தனவந்தர்களை நினைக்க வைத்தவர் அல்லவோ சிவன். 

 

      சிவனின் காலத்துக்குப் பிறகும் பல தர்ம காரியங்கள் நடந்தன. அவருடன் பணியாற்றிய அந்தரங்க பக்தர் ஸ்ரீ ஏ.கிருஷ்ணஸ்வாமி ஐயரால் தேப்பெருமாள்நல்லூரில் அன்னதானசிவன் ஹரிஜன் எலிமெண்டரி பள்ளிக்கூடம் துவங்கினார் அதில் 110 ஹரிஜன மாணவர்கள் படித்தனர்.

     இவர்களின் பகல் உணவுக்காக அறக்கூழ் சாலை அமைக்கப்பட்டது

குடந்தையில் 28/5/53 இல் தாயற்ற அல்லது உணவு பெற முடியாத குழந்தைகளுக்கு  “அன்னதான சிவன் சிசு நலவிடுதி” ... தேப்பெருமாள் நல்லூரில் சிவன் இலவச வாசக சாலை..

 அன்னதான சிவன் ஞாபகார்த்த சங்கம் 19/10/1952 இல் சிவன் நூற்றாண்டின் போது மழையின்மையால் ஏற்பட்ட பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட வடஆற்காடு மாவட்டம் வாலாஜா தாலுக்கா செங்காடு கிராமத்தில் ஸ்ரீ கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் உதவும் பணிகள் கி.வா.ஜ. போன்ற பிரபலங்கள் பலர் போற்றும் வகையில் துவக்கிவைக்கப்பட்டு நடந்தது..

 

     தேப்பெருமாள் நல்லூரில் சிவனை நினைவுகூற ஒரு சிலையோ மணிமண்டபமோ இல்லை ... ஆனால் இன்று அவரது உறவினர் நடத்தும் அன்னதானசிவன் முதியோர் இல்லம் சிவனின் சிந்தனையை தாங்கி நிற்கிறது. தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோயில் சன்னதியில் தட்சிணாமூர்த்தியை சேவிக்கும்போது நமக்கு அன்னதானசிவனின் ஞாபகம்தான் மேலோங்குகிறது.


     ஆம்! அன்னதான சிவன் என்னும் மகான் செய்த பணிகளை எண்ணும்போது அவர் உருவம் மனித மனங்களில் சிலையாக வருகிறது., அந்த மனங்களே அவருக்கு மணிமண்டபம்.


       தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி என்னும் மஹாகவி.


     பல லட்சம் தனிமனிதர்களுக்காக அவர்களுக்கு பசிப்பிணியை போக்கவே தன் வாழ்வை அற்பணித்தார் தேப்பெருமாள் நல்லூர் அன்னதானசிவன்... என்னும் ஏழை பிராமணன்.  


       சொன்னதானம் செய்திடினும் சேர்விலாது புகழோங்கும்

        என்னதானம் செய்திடினும் ஏழையெளியர் பசிதீரும்

        அன்னதானம் செய்வதுவே அரியபெரிய தானமதாம்

        அன்னதானம் செய்த சிவன் அன்பு வாழ்க வாழியவே 

 1&2 அன்னதான சிவனின் ஆத்மார்த்த தெய்வம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மற்றும் ஸ்ரீ அன்னதான லிங்கம்     -   தேப்பெருமாள் நல்லூர் சிவன் சன்னதி

                                                    




3) அன்னதான சிவன் நினைவாக ஹரிஜன குழந்தைகளுக்கு கல்வி அறிவு வளர அவரது நூற்றாண்டு 1952 இல் விஸ்வநாத ஐயரின் தந்தையால் துவக்கப்பட்டு  1954 இல் அரசு அங்கீகாரம் கிடைத்து. ஹரிஜன கல்வி மேம்பாட்டு தொண்டு செய்து பின் விஸ்வநாத ஐயரால் பலவருடம் நடத்தப்பட்டு பின்   வேறு ஒருவரால் அரசு உதவி பெரும் பள்ளியாக இன்றும்  நடந்துவரும் துவக்கப்பள்ளி.

                            

     
.
4) அன்னதான சிவனுடைய திருமாளிகை (வீடு).தற்சமயம் இந்த கிரஹம் அவர் உறவினர் வசம்  உள்ளது.

      அன்னதான சிவன் பற்றிய பாட்டு


அன்னதான சிவத்தின் புகழ் யாரால் சொல்ல முடியும்

யாரால் சொல்ல முடியும்


அவரைப்போல அன்னமிட்டால் அன்றே துன்பம் ஒழியும்

அன்றே துன்பம் ஒழியும்

என்னதானம் செய்திட்டாலும் இந்த அன்னதானம்


இந்த அன்னதானம்

இவைகளிலே மிகப்பெரிதாய் இதனால் பெய்யும் வானம்

என்ன தானம் செய்திட்டாலும் இந்த அன்னதானம்

இந்த அன்னதானம்

அன்னதான சிவத்தின் புகழ் யாரால் சொல்ல முடியும்
(சென்னை பல்லாவரம் அன்னதான சிவன் அறக்கட்டளை பள்ளியில் உணவு உண்ணும் முன்  அவர் மீது மாணவர்கள் பாடும் பாடல் - நினைவுகூறி பாடிகாட்டியவர் தேப்பெருமாள் நல்லூர் வே. ஆண்டவன் மாமா )

ஒரு பெண் {வயது 65} கடந்த இருபது ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்து கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த {கீழே கொடுக்கப்பட்டுள்ள} மருந்தை பயன் படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகி விட்டது. இனிப்பு உட்பட அவருக்கு பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார். டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதை நீங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள். மேலும் இது அதிக பட்ச நன்மைகளை அளிக்கும். டி.ஆர். டோனி ஆல்பீடா {பாம்பே சிறுநீரக நிபுணர்} விடா முயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார். நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டு பிடித்தார். இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்களாக முதியவர்கள் குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:

1 - *கோதுமை 100 கிராம்
2 - *பார்லி 100 கிராம்
3 - *கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை: ஐந்து கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள். அதை பத்து நிமிடம் கொதிக்கவைத்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும். அது குளிர்ந்த பின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை: உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஏழு நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும். மீண்டும் அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும். இந்த சிகிச்சையால் இரண்டு வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

குறிப்பு: ஒரு வேண்டுகோள் முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம். இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை.
யானைக்கும் எம்பெருமானுக்கும் உள்ள பொருத்தங்கள் என ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமியின் நூலில் படித்ததை பகிர்கிறேன்:🙏🙏
யானை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே பரமானந்தம் தரும். எம்பெருமானும் அப்படியே

யானையின் மீது ஏற அதன் காலைப் பற்ற வேண்டும். பகவானிடமும் அவன் திருவடியைப் பற்ற வேண்டும்.

யானை தன்னைக் கட்ட கயிறை தானே எடுத்துக் கொடுக்கும் பகவானைக் கட்ட பக்தி எனும் கயிற்றை அவனே எடுத்துத் தருகிறான்.

யானையைப் பிடிக்க பெண் யானை உதவி தேவை அது போல் பிராட்டியின் அருளின்றி எம்பெருமான் வசப்பட மாட்டான்.

பாகன் அனுமதி இல்லாமல் யானை கிட்டே போக முடியாது. பாகவத சம்பந்தம் இல்லாமல் பகவான் இல்லை.

யானையின் பாஷை பாகனுக்கே தெரியும் எம்பெருமான் பாஷை திருக்கச்சி நம்பி போல் வார்க்கே தெரியும்.

யானையின் நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட கட்டளைப்படி.
எம்பெருமானும் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு என்கிற திருமழிசைப்பிரான் போல்வார்க்கு சாத்தியம்.

யானை உண்ணும் போது இறைப்பது ஆயிரமாயிரம் எறும்புகளுக்கு உணவு எம்பெருமான் அமுது செய்த ப்ரஸாதம் பக்தர்களுக்கு

யானைக்குக் கை நீளம் அலம் புரிந்த நெடுந்தடக்கையனிறே (பெரிய திருமொழி)

யானைக்கு ஒரு கை தான் எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளுங்கை இல்லை

பாகனுக்கு யானை சம்பாதித்துத் தருகிறது எம்பெருமான் அர்ச்சக பரிசாரக வித்வான்களுக்கு சம்பாத்யம் உண்டாக்கித் தருகிறான்

மேலும் யானைக்கு முறம் போன்ற பெரிய காதுகள் சதாஸர்வமும் அசைத்து கொண்டே இருக்கும்
பகவானும் சாமகானப்ரியர் ஸ்தாயி ஸ்துதி ஸ்தோதா

யானைக்கு ஒரு வாழை பழம் தந்தாலும் சாப்பிடும் ஒரு குலையே தந்தாலும் வேண்டாம் என ஒதுக்காது

பகவானும் அப்படியே ஒரு கட்டி கற்கண்டு தந்தாலும் ஏத்துப்பார் அன்னகூடமே தந்தாலும் ஸ்வீகரித்துப்பார்

யானைவரும்  பின்னே  மணியோசை வரும் முன்னே  பகவானின் புறப்பாடிலும் வாணவேடிக்கை பிரபந்தம் கோஷ்டிகள் மூலம் அறியலாம்

யானைக்கு நான்கு பெரிய தூண்கள் போல் கால்கள்  பகவானை பற்றி தெரிந்துகொள்ள நான்கு வேதங்கள்

யானை மீது அமரவேண்டும் என்றால் காலை பிடித்து காதை பிடித்து பிறகு மேல் அமரலாம்

பகவானை அடைவதும்  மாமேகம் சரணம் வ்ரஜ என்கிறது போல் திருவடி பிடித்து திரு த்வய சரம ஸ்லோகம் காதில் வாங்கிக்கொண்டு அனுசரம் செய்தால் முக்தி நிச்சயம்
எவ்வளவு அழகான உவமை
🌹🌹🕉🕉🔯🔯🌴🌴🚩🚩
---------------------------
108ன் சிறப்பு* *தெரியுமா?*

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

1. வேதத்தில் 108 உபநிடதங்கள்.

2. பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
#கார்த்திகை_ஒன்று
3. பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.

4. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.

5. நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

6.அர்ச்சனையில் 108 நாமங்கள்
#கார்த்திகை_ஒன்று
7. அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.

8. சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.

9. தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.

10. திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108

11. ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

12. மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.

13. முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.

14. உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.

15. உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.

16. குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.

17. மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

18. சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.

19. 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

20.    108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.

"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
சநாதன தர்மம் என்று சொல்லப்படும் நம் இந்து மதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்?

1. நமது மதம் தத்துவங்களை ஆதாரமாக கொண்டது.

எந்த மகானையோ மனிதர்களையோ ஆதாரமாக கொள்ளவில்லை. பிற மதங்கள் அந்த மதத்தை தோற்று வித்த மனிதர்களை ஆதாரமாக கொண்டது.

2.நமது மதத்தின் முடிவுகள் இன்றைய விஞ்ஞானிகளின் இன்றைய கண்டு பிடிப்புகளுக்கு ஒத்து இருக்கிறது.

உதாரணமாக

1. சூன்யத்திலிருந்து எந்த பொருளையும் படைக்க முடியாது, சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை படைக்க முடியாது.

2. அனைத்தும் வட்டம் போல உள்ளது. முட்டையிலிருந்து குஞ்சு, குஞ்சுவிலிருந்து முட்டை இதே போல் சுழற்சி. பிரபஞ்சமும் தோற்றம், ஒடுக்கம், தோற்றம் ஒடுக்கம் என்று தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

3. ஒரு சக்தி தான் இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சூன்யத்திலிருந்து புதிதாக சக்தியை உருவாக்க முடியாது.

4. ஒரு உயிர் தான் இன்னொரு உயிராக பரிணமிக்கிறது. ஓர் அறிவு, ஈர் அறிவு என்று அறிவு படிப்படியாக விரிந்து உயர் நிலையாக மனிதனாக பரிணமிக்கிறது.

5. இந்த உலகில் எப்போதும் இரண்டு சக்திகள் உள்ளன கவர்தல் சக்தி மற்றும் விலக்கும் சக்தி.

6. இந்த உலகிற்கு எது தேவையோ அதை இந்த உலகமே உருவாக்கி கொள்ளும் படைப்பாற்றல்.

7. தொடர் மாற்றம் பற்றிய கருத்து இன்று நமது உடலில் உள்ள அணுக்கள் நாளை இன்னொருவரின் உடலுக்குள் செல்கிறது.

இவ்வாறு உடல் தொடர்ந்து மாறுகிறது.

அதே போல் மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது.

ஆனால் நாம் மாறுவதில்லை

 8. உடலும், மனமும் ஜடப்பொருள் உணர்வு இல்லாதது. ஆனால் இந்த இரண்டையும் இயக்குவது உணர்வுப்பொருள்.

 9. அனைவரின் மனமும் பிரபஞ்ச மனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன .

இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். விஞ்ஞானம் நம்மிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளன.

3.   நமது மதம் வேதங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. அவைகளின் மொழி சமஸ்கிருதம் இல்லை. அவை வேதமொழி. வேதங்கள் இது வரை எழுதப்படவில்லை. இறைவனின் வார்த்தைகளே வேதம்.

4. நமது மதம், இது வரை உலகில் தோற்றிய அனைத்து மதங்களையும், இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் மஹா சமுத்திரம் போல உள்ளது. அதாவது இதில் இல்லாத எந்த புதிய கருத்துக்களையும் வேறு மதத்தில் நீங்கள் காண முடியாது.

5. நமது மதத்தில் மட்டுமே மனிதன் இறைவனாக மாற முடியும் என்ற கருத்து உள்ளது. அவ்வாறு இறைவனுடன் ஒன்று கலக்கும் முக்தி நிலை பற்றி கருத்து இங்கு மட்டுமே உள்ளது.

6. உலகின் இது வரை கண்டு பிடிக்கப்பட்ட மிக உயர்ந்த தத்துவமான அத்வைத தத்துவம் வேறு மதங்களில் இல்லை.

7. நமது மதம், கடவுள் நன்மை, தீமை இரண்டையும் கடந்தவர் என்கிறது.
மற்ற மதங்களில் கடவுள் நல்லவர் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
தீமையை அவரால் தடுக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சாத்தான் என்பது கடவுளுக்கு கட்டுப்படாத தன்னிச்சை பெற்ற வேறு ஒரு சக்தி

8.  நமது மதத்தில், மறு பிறப்பு பற்றிய கருத்து உள்ளது. ஒரு உயிர் பரிணாமம் அடைந்து வேறு உயிர்களாக மாறுவதை ஏற்றுக்கொள்கிறது. இது விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்துவருகிறது. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிமணமிப்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதை மறுபிறப்பு என்று சொன்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லையே…

9. நமது மதத்தின் கடவுள், அனைத்து இனங்களின், அனைத்து உயிர்களின் கடவுள். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலக்குகளுக்கும் அவரே கடவுள். அவர் மனிதர்களை மட்டும் நேசிப்பவரல்ல, இந்த உலகில் உள்ள அனைவரையும் நேசிப்பவர். அவர் நல்லவர்களை நேசிக்கிறார், தீயவர்களை வெறுக்கிறார் என்று கருத்து நமது மதத்தில் இல்லை. அவர் அனைவரையும் சமமாக நேசிக்கிறார்.

10.  நமது மதத்தில் கர்மா தியரி இருக்கிறது. அதாவது ஒரு செயல் அதற்கு சமமான எதிர் செயலை உருவாக்கும். ஒருவர் துன்படுவதற்கு காரணம், அவர் அதற்கு முன்பு செய்த தீய செயல். இனி ஒருவர் இன்பமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இனிமேல் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். இவ்வாறு மனிதனின் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் மனிதனே காரணமாகிறான்.

11. பிறமதங்களில் மனிதன் சூன்யத்திலிருந்து தோன்றினான் என்று சொல்கிறது. நமது மதம் மனிதன் இறைவனிலிருந்து தோன்றினான்,
இறைவனில் வாழ்கிறான், இறைவனில் ஒடுங்கி முடிவில் இறைவனாகிறான் என்கிறது.

12. எல்லையற்ற காலம் பற்றிய கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது.
அதாவது இந்த பிரபஞ்சம் எல்லையற்ற காலம் வரை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் திடீரென தோன்றியது. ஒரு நாள் திடீரென அழிந்து விடும் என்ற கருத்து இல்லை. நாம் காலத்தை கடந்து வாழ்ந்து கொண்டே இருப்போம்.

13. ஆன்மாவுக்கு உருவம் இல்லை. அதே போல் இறைவனுக்கும் உருவம் இல்லை என்ற கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மதங்களின் கடவுள் ஏதோ ஒரு உருவத்தை உடையவராகவே இருக்கிறார். உருவங்களுக்கு அழிவு உண்டு என்று நமது மதமும், விஞ்ஞானமும் கூறுகிறது. அதன் படி பார்த்தால் மற்ற மதங்களின் இறைவன் ஒரு நாள் அழிந்துவிடுவார்.

14. நமது மதத்தில் மனிதன் இந்த வாழ்க்கையிலேயே முக்தியடைய முடியும் என்று சொல்கிறது. மற்ற மதங்களில் மனிதன் இறந்த பிறகு கல்லறையில், கடைசி நாள் வரும் வரை காத்திருக்க வேண்டும். நமது மதத்தின் சிறப்புகளை இன்னும் பக்கம் பக்கமாக அடுக்கிக்கொண்டே போகலாம்…
*கோவில் மண்டபங்கள்*

1. அர்த்த மண்டபம்
2. மகா மண்டபம்
3. நிருத்த மண்டபம்
4. பதினாறு கால் மண்டபம்
5. நூற்று (அ) ஆயிரங்கால் மண்டபம்
6. ஸ்நபன மண்டபம்
7. கேய மண்டபம்
8. வாத்திய மண்டபம்
9. முகமண்டபம்
10. சோபானமண்டபம்
11. கோபுரத்துவார சாலாமண்டபம்
12. ஆஸ்தான மண்டபம்
13. யாக மண்டபம்
14. புஷ்ப மண்டபம்
15. பூசை மண்டபம்
16. விஜய மண்டபம்
17. சுற்று மண்டபம்
18. உத்யான மண்டபம்
19. வல்லி மண்டபம்
20. சூர்ணமண்டபம்
21. நறுமணக் கலவை மண்டபம்
22. நீராழி மண்டபம்
23. கந்தமண்டபம்
24. ஆபரண மண்டபம்
25. மஞ்சனமண்டபம்
26. அலங்கார மண்டபம்
27. வசந்த மண்டபம்
28. உபசார மண்டபம்
29. முரசு மண்டபம்
30. தமிழ்வேதப் பயர்ச்சி மண்டபம்
31. தமிழ் ஆகம மண்டபம்
32. புராண விரிவுரை மண்டபம்
33. தீக்கை மண்டபம்
34. வீணா மண்டபம்
35. கொடியேற்ற மண்டபம்
36.தேர் மண்டபம்.
ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர
திங்கள் - இந்து வாஸர
செவ்வாய் - பவும வாஸர
புதன் - சவும்ய வாஸர
வியாழன் - குரு வாஸர
வெள்ளி - ப்ருகு வாஸர
சனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே
வைகாசி - ரிஷப மாஸே
ஆனி - மிதுன மாஸே
ஆடி - கடக மாஸே
ஆவணி - ஸிம்ம மாஸே
புரட்டாசி - கன்யா மாஸே
ஐப்பசி - துலா மாஸே
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே
மார்கழி - தனுர் மாஸே
தை - மகர மாஸே
மாசி - கும்ப மாஸே
பங்குனி - மீன மாஸே.
*🔯காமாக்ஷி என்ற நாமாவின்_அர்த்தம்.*

1. காமனுக்கு கண்களாலே உயிர்பிக்ஷை அளித்து ரதியின் மாங்கலயத்தை ரக்ஷித்ததால் இவள் "காமாக்ஷி".

2. நமஸ்கரிப்போரின் காமங்களை ( விருப்பம்) தனது பார்வையாலேயே பூரணம் செய்விப்பதால் இவள் "காமாக்ஷி"

3. கா -- காலம், மா -- மாயை காலத்தையும் மாயையையும் க்ஷீணமடையச் (அழியச்) செய்வதால் இவள் "காமாக்ஷி". காலத்தையும் மாயையையும் கடந்த மஹாத்ரிபுரஸுந்தரி என்பது பொருள்.

4. கா -- ஸரஸ்வதி, மா -- லக்ஷ்மீ லக்ஷ்மியையும் ஸரஸ்வதியையும் நேத்ரங்களாய் உடையதால் இவள் "காமாக்ஷி"

5. காமன் -- காமேச்வரனான ஏகாம்ரநாதன் ஏகாம்ரநாதனின் நேத்ரமாக விளங்குவதால் இவள் "காமாக்ஷி"

6. காம என்பதற்கு கடபயாதி ஸங்க்யா ரீதியாக அர்த்தம் ஐம்பத்து ஒன்று. ஐம்பத்தியோரு அக்ஷரங்களையும் கண்களாக கொண்டதால் இவள் "காமாக்ஷி"

7. கா -- ஸரஸ்வதீ, மா -- மலைமகள், க்ஷீ -- க்ஷீரஸாகரகன்யையான லக்ஷ்மீ. தான் ஒருவளே லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, பார்வதியாக விளங்குவதால் இவள் "காமாக்ஷீ"

8. கா -- ஒன்று, மா -- பதினைந்து, ஷோடஷீ மஹாமந்த்ரத்தை தனது கண்களாய் தரிப்பதால் இவள் "காமாக்ஷி"


9. கா -- ஒன்று, மா -- ஐந்து, க்ஷீ -- ஆறு, ஓரே வஸ்துவான லலிதாம்பாளே
தனது பஞ்ச ரூபங்களான "த்ரிபுரா", "ராஜராஜேச்வரீ", மஹாகாமேசவல்லபா", "காமாக்ஷீ", "காமகோடி" என ஐந்து வடிவங்களிலும்( ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி ஆவரண மந்த்ரங்கள் உண்டு), மூன்று சக்தி பேதங்கள், இரண்டு சிவ பேதங்கள், ஒரு விஷ்ணு பேதம் என ஆறு வடிவங்களிலும் உறைவதால் இவள் "காமாக்ஷி".

10. தான் ஒருவளே பஞ்சகோசாதீதையாகவும், ஷட்பாவரஹிதையாகவும் ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷீ".

11. தான் ஒருவளே "பஞ்சபஞ்சிகா" வடிவினளாகவும், ஷடாம்ணாய தேவதா ரூபமாகவும் ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி".

12. தான் ஒருவளே பஞ்சபூத மயமான இந்த சரீரத்தில் ஷட்சக்ர யோகினி வடிவாக ஜ்வலிப்பதால் இவள்  "காமாக்ஷீ"

13. தான் ஒருவளே பஞ்சப்ரஹ்ம மஹாமஞ்சத்தில் ஷடன்வயீ சாம்பவீ வித்யையாக ஜ்வலிப்பதால் இவள் "காமாக்ஷி".

14. தான் ஒருவளே பஞ்சமுக மஹாசம்புவால் அர்ச்சிக்கப்பட்ட "துரீய வித்யையாகவும்" ஆறுமுக ஸுப்ரமண்யனால் பூஜிக்கப்பட்ட ஸ்கந்தவித்யாவாகவும் இருப்பதால் இவள் "காமாக்ஷி".

15. தான் ஒருவளே பஞ்சாயதன கணபதி, அம்பிகா,சூர்ய, விஷ்ணு,சிவ வடிவான பஞ்சாயதன ரூபிணியாகவும், சைவ, வைஷ்ணவ, சாக்த, கௌமார, காணாபத்ய, ஸௌர ஷ்டதர்சணங்களுக்கும் ஆதார மஹாவித்யையாக இருப்பதாலும் இவள் "காமாக்ஷி".

16. தான் ஒருவளே பஞ்சஞானேந்த்ரியங்களுக்கும் புலனாகாது, ஆறு ஆதாரங்களைக் கடந்து ஸஹஸ்ரகமலத்தில் பரப்ரும்ஹ மயமாக ப்ரகாசிப்பதாலும் இவளே "காமாக்ஷி".

"காமாக்ஷி" எனும் அக்ஷரம் பரமசிவனுக்கும் கிடைக்காதது. மங்கலமே வடிவானது. இக்காமாக்ஷி எனும் விலைமதிக்க முடியா ரத்னம் பேரொளி வீசிக் கொண்டிருக்கின்றது.

*🙏காமாக்ஷி கடாக்ஷி🙏*

*🚩 🔯 ⚜ 🕉 🌹⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜*🚩 🔯 ⚜ 🕉 🌹
யஜுர் வேதம் ஆபஸ்தம்ப பங்குனி மாத அமாவாஸ்யை   தர்பபணம்

23.03.2020 திங்கட்கிழமை

ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா + தாமோதரா

வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.

ஶூக்லாம் + ஸாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்

மமோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

விகாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே  சிசிர   ருதௌ  மீன   மாஸே  க்ருஷ்ண  பக்ஷே அமாவாஸ்யாயாம்  புண்யதிதௌ இந்து வாஸர  யுக்தாயாம் பூர்வப்ரோஷ்டபதா நக்ஷ்த்ர யுக்தாயாம், சுப  யோக, சகுனி கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ

ப்ராசீனாவீதி

தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

........கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம்

தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

…............கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸமத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்

அமாவாஸ்ய புண்யகாலே தர்ச ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால்
துடைத்துக்கொள்ளவும். பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும். கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்

ஆவாஹந மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச// அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி/

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.

ஆஸன மந்த்ரம்

ஸக்ருதாச்சின்னம் பர்ஹி: ஊர்ணாமிருது ஸ்யோநம் பித்ருப்யஸ்தவா, பராம்யஹம், அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதா மஹாஸ்ச்ச அனுகைஸ்ஸஹ//

வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

தர்ப்பண மந்த்ரம்

உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் ய ஈயு: அவ்ருகா: ரிதக்ஞா: தேனா வந்து பிதரோஹவேஷு

......கோத்ரான் ........ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

அங்கிரஸோந: பிதர: நவக்வா: அதர்வான: ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியாநாம் அபிபத்ரே.ஸௌமனஸே ஸ்யாம

......கோத்ரான் ........ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்

......கோத்ரான் ........ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்

......கோத்ரான் ........ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: பிதாமஹேம்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம:

......கோத்ரான் ........ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

யேசேஹ பிதர: யேசனேஹ, யாகுச்ச வித்ம யாகும் உசனப்ரவித்ம அக்னேதான் வேத்த யதிதே ஜாதவேத: தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்து

......கோத்ரான் ........ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுவாதா: ருதாயதே, மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ன: ஸந்து ஓக்ஷதீ:

......கோத்ரான் ........ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுநக்த்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துந: பிதா

......கோத்ரான் ........ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுமான்னா: வனஸ்பதி: மதுமான் அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துந:

......கோத்ரான் ........ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாத்ருஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாதாமஹவர்க்கம்

.....கோத்ராணாம்........ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: மாதுப் பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதாக்ஞாத, வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)

கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்

மந்த்ரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

ப்ரதக்ஷிண மந்த்ரம்

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

ப்ராசீனாவீதி

யதாஸ்தான மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்

மந்த்ரம்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

மந்த்ரம்

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து

பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்

ஶுபம்