ஞாயிறு, 22 மார்ச், 2020

யானைக்கும் எம்பெருமானுக்கும் உள்ள பொருத்தங்கள் என ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமியின் நூலில் படித்ததை பகிர்கிறேன்:🙏🙏
யானை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே பரமானந்தம் தரும். எம்பெருமானும் அப்படியே

யானையின் மீது ஏற அதன் காலைப் பற்ற வேண்டும். பகவானிடமும் அவன் திருவடியைப் பற்ற வேண்டும்.

யானை தன்னைக் கட்ட கயிறை தானே எடுத்துக் கொடுக்கும் பகவானைக் கட்ட பக்தி எனும் கயிற்றை அவனே எடுத்துத் தருகிறான்.

யானையைப் பிடிக்க பெண் யானை உதவி தேவை அது போல் பிராட்டியின் அருளின்றி எம்பெருமான் வசப்பட மாட்டான்.

பாகன் அனுமதி இல்லாமல் யானை கிட்டே போக முடியாது. பாகவத சம்பந்தம் இல்லாமல் பகவான் இல்லை.

யானையின் பாஷை பாகனுக்கே தெரியும் எம்பெருமான் பாஷை திருக்கச்சி நம்பி போல் வார்க்கே தெரியும்.

யானையின் நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட கட்டளைப்படி.
எம்பெருமானும் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு என்கிற திருமழிசைப்பிரான் போல்வார்க்கு சாத்தியம்.

யானை உண்ணும் போது இறைப்பது ஆயிரமாயிரம் எறும்புகளுக்கு உணவு எம்பெருமான் அமுது செய்த ப்ரஸாதம் பக்தர்களுக்கு

யானைக்குக் கை நீளம் அலம் புரிந்த நெடுந்தடக்கையனிறே (பெரிய திருமொழி)

யானைக்கு ஒரு கை தான் எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளுங்கை இல்லை

பாகனுக்கு யானை சம்பாதித்துத் தருகிறது எம்பெருமான் அர்ச்சக பரிசாரக வித்வான்களுக்கு சம்பாத்யம் உண்டாக்கித் தருகிறான்

மேலும் யானைக்கு முறம் போன்ற பெரிய காதுகள் சதாஸர்வமும் அசைத்து கொண்டே இருக்கும்
பகவானும் சாமகானப்ரியர் ஸ்தாயி ஸ்துதி ஸ்தோதா

யானைக்கு ஒரு வாழை பழம் தந்தாலும் சாப்பிடும் ஒரு குலையே தந்தாலும் வேண்டாம் என ஒதுக்காது

பகவானும் அப்படியே ஒரு கட்டி கற்கண்டு தந்தாலும் ஏத்துப்பார் அன்னகூடமே தந்தாலும் ஸ்வீகரித்துப்பார்

யானைவரும்  பின்னே  மணியோசை வரும் முன்னே  பகவானின் புறப்பாடிலும் வாணவேடிக்கை பிரபந்தம் கோஷ்டிகள் மூலம் அறியலாம்

யானைக்கு நான்கு பெரிய தூண்கள் போல் கால்கள்  பகவானை பற்றி தெரிந்துகொள்ள நான்கு வேதங்கள்

யானை மீது அமரவேண்டும் என்றால் காலை பிடித்து காதை பிடித்து பிறகு மேல் அமரலாம்

பகவானை அடைவதும்  மாமேகம் சரணம் வ்ரஜ என்கிறது போல் திருவடி பிடித்து திரு த்வய சரம ஸ்லோகம் காதில் வாங்கிக்கொண்டு அனுசரம் செய்தால் முக்தி நிச்சயம்
எவ்வளவு அழகான உவமை
🌹🌹🕉🕉🔯🔯🌴🌴🚩🚩
---------------------------

கருத்துகள் இல்லை: