கிருஷ்ண லீலை
கிருஷ்ணன் என்றாலே லீலைகள் செய்வதில் வல்லவன் என்று சொல்லக் கேட்டிருப்போம். கிருஷ்ணனின் லீலைகளால் அவன் மகிழ்நதானோ இல்லையோ கோபியர்களும் அந்த கதைகளைக் கேடபவர்களும் ரசித்து மகிழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த கதைகளையெல்லாம் இப்போது நாம் கேட்டாலும் படித்தாலும் இதெல்லாம் நிஜமாகவே நடந்திருக்குமா? கிருஷ்ணன் பெண்களிடம் இப்படி தான் நடந்து கொண்டாரா என்றெல்லாம் ஆச்சர்யப்பட வைக்கும். அவர் பெண்களுடனும் ராதையுடனும் விளையாடிய அந்த இடம் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? ஆனால் கிருஷ்ணன் இன்றைக்கும் அவர் கோபியர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடிய பிருந்தாவனத்துக்கு தினமும் இரவு வந்து போகிறாராம். கேட்கவே சிரிப்பாக வருகிறதா?... அவர் வருகிறார் என்று சொல்வதே இப்படி ஆச்சர்யப்படுகிறீர்களே அவருடைய தினசரி வருகைக்காக தினந்தோறும் சில சுவாரஸ்யமான பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. அவை என்ன என்று தெரிந்தால் இன்னும் நிறைய ஆச்சர்யப்படுவீர்கள்.
நீதிவான் கோவில்
உத்திரப் பிரதேச மாநிலம், மதுரா நகரில் உள்ள பிருந்தாவனத்தில் நீதிவானன் கோவில் இருக்கிறது. இந்த பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ணா தினமும் இரவு வந்து ஆடிப்பாடிச் செல்கிறார். பிருந்தாவனத்தில் இருக்கிற இந்த நீதிவான் கோவில் மிகவும் அமைதியான பகுதி. சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் இங்கு வந்து போகிறார்கள். இங்குள்ள பிருந்தாவன தோட்டத்தில் தான் வழக்கமாக தன்னுடைய சிறு வயதில் இருந்தே கிருஷ்ணர் விளையாடி வந்திருக்கிறார். இப்போதும் இந்த வனம் மிக அழகாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த அழகிய நந்தவனத்தைச் சுற்றிலும் ராதை மற்றும் கிருஷ்ணரின் ஓவியங்களும் சிற்பங்களும் நிறைந்த பெரிய மதில்கள் இருக்கின்றன. அந்த வனத்துக்குள் கொஞ்சம் அச்சம் தரக்கூடிய அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்று உண்டு. ராதையும் கிருஷ்ணரும் இரவில் ஆடிப் பாடி மகிழ்ந்து முடித்தவுடன் இந்த வனப்பகுதியில் சென்று தான் ஓய்வெடுப்பார்களாம். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதனாலேயே பகல் நேரத்தில் இந்த கோவிலுக்குச் செல்பவர்கள், ராதையும் கிருஷ்ணரும் புரியும் லீலைகள் மற்றும் பல மர்மங்கள் நடப்பதற்கான அடையாளங்களைப் பார்க்க முடியும்.
ரங் மஹால்
இந்த பகுதிக்கு அருகிலேயே ரங் மஹால் என்று சொல்லக்கூடிய ஒரு கோவில் இருக்கிறது. இது கிட்ட தட்ட ராதைக்கும் கிருஷ்ணருக்குமான அந்தப்புரத்தைப் போன்ற இடம். அவர்களுக்காக ஊஞ்சல் போன்ற பொருள்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் விட சுவாரஸ்யடான ஒரு விஷயம் என்ன என்றால் இந்த கோவிலின் உள் அறையில் ஒரு கட்டில் மெத்தை போடப்பட்டிருக்கிறது. அது ராதையும் கிருஷ்ணரும் ஓய்வு எடுப்பதற்காக. இந்த கோவிலுக்குப் போக வேண்டும் நினைத்து பிருந்தாவனத்துக்குள் நுழைபவர்கள் வெகுதூரம் வரைக்கும் வெறும் வனத்தைத் தவிர வேறு ஒன்றையும் பார்க்க முடியாது. கொஞ்ச தூரம் சென்ற உடன் ஒரு சிறிய அறை பூட்டப்பட்டு இருக்கும். ஆனால் அந்த கதவு கண்ணாடியால் அமைக்கப்பட்டு இருக்கும். கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இந்த தூண் விழும் போது உலகம் அழிந்து விடும் என்பது சொல்லப்பட்ட வரலாறு.
நோ எண்ட்ரி
இந்த கோவிலுக்குள் இருக்கும் கிருஷ்ணரும் ராதையும் அழகும் அமைதியும் ததும்பும் நகைகள் எல்லாம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு பூஜை நடக்கும். அதன்பின் யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது. மாலை ஐந்து மணிக்கு இந்த கோவில் அடைக்கப்படும். மாலை மங்கி, இருள் கவ்வத் தொடங்கியதும் கிருஷ்ணர் நடனமாடத் தொடங்குவாராம். அந்த வனத்தில் மரங்களாக வீற்றிருக்கும் கோபியர்கள் கிருஷ்ணனுடன் இரவு முழுக்க நடனம் ஆடுகிறார்கள். காலை விடியும் போது மாலை எப்படி இருந்ததோ அதே பழைய நிலைக்கு அந்த இடம் மாறி விடும்.கிருஷ்ணரின் தீவிர பக்தரான சுவாமி ஹரிதாஸ் மிகப் பெரிய இசைக்கலைஞர். இவர் ஒரு கல் பலகையில், தினமும் இரவு நடக்கும் கிருஷ்ண ராதை லீலையைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். கிருஷ்ணன் - ராதை லீலைகள் பற்றி வாய்வழிக் கதைகள் மூலமும் புத்தகங்களின் வாயிலாகவும் நிறைய கேட்டிருப்போம். ஆனால் இங்கிருப்பவர்கள் அதை சிலாகித்துச் சொல்கிறார்கள்.
வனத்தின் அதிசயம்
கோபியர்கள் ராதையையும் கிருஷ்ணனையும் சூழ்ந்து நிற்க கிருஷ்ணன் புன்னகையோடு புல்லாங்குழலை எடுத்து வாசிக்க கோபியர்களுடன் விடிய விடிய நடனம் ஆடிக் களிப்பார்கள். இந்த கிருஷ்ண லீலை பிருந்தாவனத்தில் தினமும் நடந்தால் கூட இதை மனிதர்கள் யாராலும் பார்க்க முடியாது. இந்த வனமே மிகவும் வித்தியாசமானது தான். பொதுவாக மரங்கள் என்பவை எப்படி இருக்கும். கிளைகள் விரிந்து மேல்நோக்கி உயரச் செல்லும். ஆனால் வேர்களோ மண்ணை நோக்கி உள்ளே பாய்ந்து செல்லும். ஆனால் இந்த வனத்தில் அப்படியே நேர்மாறாக நடக்கிறது. மண்ணுக்குள் இருக்கும் வேர்கள் மண்ணைப் பிளந்து கொண்டு வெளியே வருகிறது. அதே போல் கிளைகள் கீழ்நோக்கிச் செல்கின்றன.
கோயில் நடை
மாலை ஐந்து மணி ஆனதும் கோவிலுக்குள் இருப்பவர்கள் அனைவரும் வெளியேறி விடுவார்கள். வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு விடும். உள்ளே யாரும் இருக்கக்கூடாது. அப்படி தங்கி, கிருஷ்ணனின் லீலைகளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் குருடாகி விடுவார்கள். காது செவிடாகிடும். வாய் பேச முடியாது. இப்படி தான் கிருஷ்ணனின் தீவிர பக்தர் ஒருவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக யாருக்கும் தெரியாமல் மாலை கோவிலுக்குள் ஒளிந்திருந்து கிருஷ்ண லீலையை பார்க்க உள்ளே இருந்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் கதவு திறக்கும் போது அவருக்கு பேச்சு வரவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டு, இயல்பு நிலையிலேயே இல்லாமல் அவரை மீட்டிருக்கிறார்கள்.
விசாகா நீர்த்தொட்டி
இந்த பிருந்தாவனத்துக்குள் விசாகா என்று நீர்த்தொட்டி இருக்கிறது. ஒருமுறை கோபியர்கள் சூழு நடனமாடிக் கொண்டிருந்த போது கோபியர்களில் ஒருவரான விசாகாவுக்கு தாகம் எடுத்ததாம். உடனே கிருஷ்ணர் தன்னுடைய புல்லாங்குழலால் கீழே ஒரு துளையிட்டாராம். தண்ணீர் பீறிட்டு வந்து விசாகாவின் தாகம் தீர்த்ததாம். இன்னும் இந்த நீர்த்தொட்டி அந்த பகுதியில் விசாகா நீர்த்தொட்டி என்ற பெயரில் இருக்கிறது.
சந்தனக் கட்டில்
நிதிவான் என்னும் கிருஷ்ணருக்காகவும் ராதாவுக்காகவும் ரங் மஹாலில் சந்தன கட்டில் ஒன்று போடப்பட்டிருக்கும். அந்த கட்டில் முழுக்க பூக்களால் நிரப்பி ஏழு மணிக்கெல்லாம் கட்டில் தயாராகி விடுகிறது. அதோடு தாமரை தண்ணீர் வாசனைக்காக கட்டிலின் அருகில் வைக்கப்பட்டிருக்கும். அங்கு உள்ளே சமாதிக்குள் உறைந்திருக்கும் மாஸ்ட்ரோ ஹரிதாஸ் பாடல்கள் பாடுவதாகவும் நம்புகிறார்கள். லட்டுக்கள், பழங்கள், டூத் பேஸ்ட், பிரஸ் ஆகியவை எல்லாம் படுக்கைக்கு அருகிலேயே வைத்திருக்கிறார்கள்.
துளசி செடிகள்
துளசி செடிகள் சூழ்ந்த அந்த வனத்தில், எல்லா துளசி செடிகளும் ஜோடி ஜோடியாகவே இருக்கின்றன. ஏனென்றால் இரவு லீலை தொடங்கியதும், அவை அப்படியே கோபியர்களாக மாறிவிடும். பகல் நேரத்தில் இங்கு வரும் பக்தர்களுக்கு இந்த துளசி செடிகளைத் தொடவோ பறிக்கவோ தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இவை வெறும் துளசி செடிகள் அல்ல. அவற்றை கோபியர்களாகவே தான் கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக