சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி (கோபால சுந்தரி
)
ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!
பொருள்:
வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்.
#கோபாலசுந்தரி_தியானம்
1. க்ஷீராம்போநிதி மத்ய ஸம்ஸ்தித
லஸத் த்வீபஸ்த கல்பத்ருமோ
த்யானோத்யத்மணி மண்டபாந்த
ருதிதஸ்ரீபீட பாதோஜகம்
தோர்தண்டை: அரிசங்கவேணு ஸ்ருணி
ஸத்பாசேஷூ சாபாசுகான்
பிப்ராணம் கமலாமஹீ விலஸிதம்
வந்தேருணாங்கம் ஹரிம்.
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரணபூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்த்ரீ ரூபிணம்
ததா
ஸங்கம் சக்ரம் ஸாங்குஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இக்ஷு சாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம்
புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானுலிப்தாங்கம் புஷ்பவஸ்த்ர த்ர
குஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண
மாஸ்ரயே.
பாற்கடலில், கற்பக விருட்சத்தின் நடுவில் மணி மண்டபத்தில் ஒய்யாரமாக குழலூதியபடி, தன் கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம் போன்றவற்றை ஏந்தி பக்தர்களுக்கு அருள்புரியும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்று வணங்கப்படும் கோபாலசுந்தரியை நமஸ்கரிக்கிறேன். கிருஷ்ணனும், தாமரைக் கண்ணனும், சர்வாலங்காரங்களுடன் திகழ்பவனும் த்ரிபங்கி நிலையில் லலிதையோடு பேரழகாய் அருட்கோலம் காட்டுபவனும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் கோபாலனாம் கிருஷ்ணனை வணங்குகிறேன். இந்த மந்திரங்கள் மிகவும் அற்புதமானவை. இதை நம்பிக்கையுடன் ஜபம் செய்து வந்தால் பெருஞ்செல்வம் கிட்டும். மழலைவரம் வேண்டுவோர்க்கு அந்த பாக்கியம் பெறுவார் கள். கண்ணனின் திருவருளும் லலிதா பரமேஸ்வரியின் பேரருளும் கிட்டும்.
2. கோதண்டம் மஸ்ருணம் ஸுகந்தி விசிகம் சக்ராப்ஜ பாசாங்குசம்
ஹைமீம் வேணுலதாம் கரைச்ச தததம் ஸிந்தூர புஞ்ஜாருணம்
கந்தர்ப்பாதிக ஸுந்தரம் ஸ்மிதமுகம்
கோபாங்கனா வேஷ்டிதம்
கோபாலம் ஸததம் பஜாமி வரதம்
த்ரைலோக்ய ரக்ஷாமணீம்
க்ருஷ்ண கர்ணாம்ருதம்.
விசித்திரமான வில்லையும் நல்ல மணமுடைய புஷ்ப பாணத்தையும் சக்கரத்தையும் சங்கத்தையும் பாசத்தையும் அங்குசத்தையும் பொன்மயமான கொடி போன்ற குழலையும் ஏந்தி, அடர்ந்த நிறம் கொண்டவனாய், மன்மதனைக் காட்டிலும் பேரழகு கொண்டவனாய், புன்முறுவல் பூத்த முகத்தினனாய், கோபியர்களால் சூழப்பெற்றவனாய், மூவுலகையும் காப்பவனாய், வேண்டியதை எப்போதும் அருளும் கோபாலனாய் திகழ்பவனை தியானிக்கிறேன்.
கோபாலசுந்தரி காயத்ரி
ஓம் லலிதாயை வித்மஹே
கோபாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.