புதன், 18 நவம்பர், 2020

ஸ்ரீரங்கம்

ஸ்ரீ ரங்கம் பெரிய பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை தெரியுமா!

ஒரு சுவையான சம்பவம் ஸ்ரீ ராமானுஜர் அவதார சமயத்தில் நடந்தது. ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்க்க சென்றார்.

அப்பொழுது தைல காப்பு சாத்தி இருந்தார் பெரிய பெருமாள். என்ன காரணத்தாலோ, துணியால் போர்த்திக்கொண்டு படுத்து இருந்தார் பெரிய பெருமாள்.

இதை பார்த்த ஸ்ரீ ராமானுஜருக்கு பெரிய பெருமாளுக்கு உடம்புக்கு ஏதோ சௌகரியம் இல்லையோ என்று மனதில் தோன்றியது.

அர்ச்ச அவதாரம் தானே, கல் தானே என்று நினைக்கும் அஞானிக்கு, ஸ்ரீ ராமானுஜரின் நிலை எப்படி புரியும்?

பெரிய பெருமாளை பார்த்து "ஏன், திருமேனி பாங்கு இல்லையோ?" என்று கேட்டே விட்டார் ஸ்ரீ ராமானுஜர்.

ஸ்ரீ ராமானுஜரை பார்த்தார் பெரிய பெருமாள். பக்தன் மனோபாவத்துக்கு ஏற்று, பெருமாள் பழகுவார்.

அர்ச்ச அவதாரமாகவே பேசினார்,
"ஆமாம். கொஞ்சம் சரியாக இல்லை." என்று சொன்னார் பெரிய பெருமாள்.

"ஏன் இப்படி ஆனது?" என்று ஸ்ரீ ராமானுஜர் கேட்க,

எனக்கு தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்து விட்டனர். நாமும் பக்தன் கொடுப்பதால் சாப்பிட்டு விட்டோம்.
இதனால் கொஞ்சம் உடலுக்கு ஒத்துக்காமல் ஆகி விட்டது. ஜுரம் வந்து விட்டது" என்றாராம் பெரிய பெருமாள்.

தன் பக்தனிடம், பக்தனின் மனோ நிலைக்கு ஏற்றாற்போல லீலை செய்வார் பகவான்.

அதுவரை ஸ்ரீ ரங்கராஜ்யம் நடத்தும் பெரிய பெருமாளுக்கு, தன் ரங்க ராஜ்யத்தில் அரச மருத்துவன்  இல்லையாம்.
இதற்காக ஸ்ரீ ராமானுஜரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்ற சங்கல்பம் செய்தார், பெரிய பெருமாள்.

பெரிய பெருமாளோ அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் 'பெருமாளுக்கு ஜுரம்' என்று கேட்டவுடன், கண்ணீர் விட்டார்.

ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்த்து,
"ஒரு மாமிச சரீரமாக இருந்தால், ஒரு மருத்துவரை கூட்டிக்கொண்டு வந்து காட்டலாம்.
உங்களுடைய அப்ராக்ருத திவ்ய சரீரத்துக்கு எந்த மருத்துவரை (டாக்டரை) கொண்டு வந்து காட்டுவேன்?"
என்று கண்ணீர் விட்டார்.

"நமக்கு தான் டாக்டர் இருக்கிறாரே"
என்றாராம் பெரிய பெருமாள்.

"அதை தேவரீர் தான் சொல்ல வேண்டும்" என்று ராமானுஜர் பிரார்த்திக்க,
"நம் சன்னதியில், 'தன்வந்திரி'யை பிரதிஷ்டை செய்யும். அவர் என்னை அடிக்கடி பார்த்துக்கொள்வார்"
என்று பெரிய பெருமாள் சொன்னார்.

அன்று முதல்,
பெரிய பெருமாளுக்கு எந்த பதார்த்தங்கள் தயார் செய்தாலும், அந்த பதார்த்தங்கள் பெரிய பெருமாளுக்கு உகக்குமா? என்று தன்வந்திரி எதிரில் வைத்து, அவர் அனுமதித்த பின் தான், பெரிய பெருமாள் நிவேதனம் செய்வாராம்.

பெரிய பெருமாளும், தன்வந்திரி அனுமதித்த பதார்த்தங்களை மட்டும் தான், அன்று முதல் தொடுவாராம்.
அப்படி ஒரு ப்ராதான்யம் (முக்கியத்துவம்) பெரிய பெருமாள், தன்வந்திரிக்கு கொடுத்துவிட்டார்.

தன்வந்திரியின் பெருமையை காட்ட, ஸ்ரீ ராமானுஜரின் பக்தி பாவத்தை காட்ட பெரிய பெருமாள் செய்த ரசிக்கதக்க லீலை இது.

இப்படி பெரிய பெருமாளே தனக்கு மருத்துவன் என்று வைத்து இருக்கும் தன்வந்திரியும் அவரே தான்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

சரணம் சரணம் ஸ்ரீரங்கா!
திருவடி சரணம் ஸ்ரீரெங்கா!!

ஸ்படிக மாலை

ஸ்படிக மாலை

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். திடீரென்று பெரியவா அவரிடமும்,அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”

யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்துவிட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தார...

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார். அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.
பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,”ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா” என்று கேட்டார். ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும். அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார். எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார். அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ரநாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். ஸ்ரீவாசுதேவர் கூறினார்,”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக‘ மாலை அணிந்திருந்தான். சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்‘ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்‘ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. ‘ஸ்வேதம்பரராகவும்‘ ‘ஸ்படிகமாகவும்‘ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக‘ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக‘, அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது… என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்...

இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல் எண்
வேதங்கள் பூஜித்து பரவியதால் ஈசனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும், தலத்தை வேதாரண்யம் என்றும் புகழப்படும் இத்தலத்தை நான்கு மறைகளும் இறைவளை வணங்கிய பின்னர், கதவை பூட்டி தாழிட்டுவிட்டன. நான்மறை பூட்டிய கதவை  திறப்பார் யார் என காத்திருந்தார் மறைநாதர். திருநாவுக்கரசரும் குழந்தை சம்பந்தரும் நெடிய கதவு முன் வந்து நின்று ஈசனை கதவு திறக்க வேண்டினர். அமைதி காத்தார் ஈசன். "அப்பரே! கதவைத் திறக்கும் பதிகத்தை பாடுங்களேன்" என சம்பந்தர் வேண்ட, ஈசன் தன் செவிகளை கூர்மையாக்கி தேன் வந்து பாயாதோ என ஏக்கம் நிறைய காத்து இருந்தான். *பண்ணின் நேர் மொழியாளுமை பங்கரோ* என முதல் பதிகம் பாடினார். கதவு இன்னும் சில பதிகம் பாடேன்" என்பது போல் திறக்காமல் இருந்தது.தொடர்ந்து 10 தேன் சொட்டும் பதிகங்கள் பாடியும் கதவு திறக்கவில்லை. கதவினருகில் நெருங்கிச் சென்று *அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்* எனத் தொடங்கி, *சரக்க விக் கதவந் திறப்பிம்மினே* எனக் கேட்டபோது கதவு அதிர்ந்தது. அதிலுள்ள மணிகள்
தானாக ஒலித்து பெருத்த சப்தத்துடன்
நான்மறைகளும் விடுபட அவர்களை வரவேற்கும் விதமாக கதவுகள் அகல திறந்தன. *மறைக்காடனே யாழைப் பழிக்கும் மொழியம்மையே* என்று அப்பரும் சுந்தரரும் இரு கைகளைத் தூக்கி தொழுது கொண்டே கோவில் உள்ளே நுழைந்தனர். உலகாளும் அம்மையையும் அப்பனையும் கண்டு ஆனந்தக் கடலில் மூழ்கினர். அப்பரும் சம்பந்தரும் பாக்களால் பரமனைத் துதித்து பாடினர். *வேதாரண்யம் விளக்கழகு* என்று போற்றப்படும் இத்தலம் சென்று வணங்கி வர நமது ஞானக்கதவு திறக்கும் என்பதில் ஐயமில்லை. *திருச்சிற்றம்பலம்*

சுவாமிமலை திருவேரகம்

சுவாமிமலை திருவேரகம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வதாக திகழ்வது சுவாமிமலை.

கும்பகோணம்- திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் பேருந்து வழியில் திருவலஞ்சுழியில் இறங்கி, வடக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவு பயணித்தால், சுவாமிமலையை அடையலாம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரயில்பாதையில் சுவாமிமலை ரயில் நிலையத்தில் இறங்கி வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

சுவாமிமலையை புராணங்களும் இலக்கியங்களும் திருவேரகம் என்று குறிப்பிடுகின்றன. 'ஏர்' என்றால் அழகு; 'அகம்' என்றால் வீடு என்பர். அழகு மிக்க படைவீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம். ஏர்த் தொழிலான விவசாயம் சிறக்கும் பகுதியில் உள்ள படைவீடு ஆதலால் திருவேரகம் ஆனது என்பாரும் உண்டு. அடியவர்களின் மனதை 'அருள்' எனும் ஏர் கொண்டு உழுது, 'அன்பு' எனும் பயிரை வளர்ப்பவர் முருகப் பெருமான். இவர் அருள் பாலிக்கும் தலம் ஆதலால் இந்தப் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.

தவிர... சிரகிரி, சிவகிரி, முருகப் பெருமான் இங்கு குரு அம்சமாக அருள் பாலிப்பதால் குருமலை, குரு கிரி, ஸ்வாமிநாத ஸ்வாமியின் கோயில் கட்டுமலை அமைப்புடன் அழகுற காட்சி தருவதால் சுந்தராசலம், நெல்லி (தாத்ரி) மரத்தைத் தல மரமாகப் பெற்றதால் தாத்ரிகிரி ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு வழங்கப்படுகிறது.

முருகப் பெருமான், குரு அம்சமாகத் திகழும் இரண்டு தலங்களில் ஒன்று சுவாமிமலை. மற்றொன்று திருச்செந்தூர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளும் ஆறு ஆதார மையங்களைக் குறிப்பன என்பர். அதாவது, திருப்பரங்குன்றம்- மூலாதாரம்; திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம், திருவாவினன்குடி (பழநி)- மணிபூரகம், திருத்தணி- விசுத்தி, பழமுதிர்ச்சோலை- ஆக்ஞை. இந்த வரிசையில் சுவாமிமலை- அனாகதம் என்பர்.

'குரோசம்' என்பது, கூப்பிடு தூரத்தில் உள்ள அளவு. இப்படி, கும்பகோணத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள ஐந்து தலங்களை பஞ்ச குரோசத் தலங்கள் என்பர். அவற்றில் சுவாமிமலையும் ஒன்று. மற்றவை திருவிடைமருதூர், திருப்பாடலவனம், தாராசுரம், திருநாகேஸ்வரம்.

சுவாமிமலைக்குத் தெற்கே காவிரியும், அதன் கிளை நதியான அரசலாறும் ஓடுகின்றன.

மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கட்டு மலை (செயற்கையான குன்று) கோயிலைக் கொண்டிருப்பது, இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.

சோழ நாட்டை சிவாலயமாக பாவித்து, வழிபடும் ஒருமுறை உண்டு. அதில், திருவலஞ்சுழி மற்றும் சுவாமிமலை திருத்தலங்களை முறையே விநாயகர் மற்றும் முருகன் சந்நிதிகளாகக் கொள்வர்.

திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருவிடைமருதூர் தல புராணம், திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானை மையமாக வைத்து திருவலஞ்சுழி (விநாயகர் தலம்), சுவாமிமலை (முருகன் தலம்), திருச்சேய்ஞலூர் (சண்டேசர் தலம்), சீர்காழி (சட்டநாதர் தலம்), சிதம்பரம் (நட ராஜர் தலம்), திருவாவடுதுறை (நந்தி தேவர் தலம்), சூரியனார்கோயில் (நவக்கிரக தலம்), ஆலங்குடி (தட்சிணாமூர்த்தி தலம்) என்று வரிசைப்படுத்துகிறது.

சிற்ப வல்லுனர்களை தன்னகத்தே கொண்ட தலம் என்பது சுவாமிமலையின் தனிச் சிறப்பு. இங்கு வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் (பஞ்சலோகம்) உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றன. செய்குன்று (செயற்கை மலை) ஆகிய சுவாமிமலையை கயிலைமலையின் கொடுமுடி என்கிறார் அருணகிரிநாதர். இதை, 'கொடுமுடியாய் வளர்ந்து புயல் நிலையாய் உயர்ந்த திருமலை' என்ற அவரது பாடல் வரிகளால் அறியலாம்.

அருணகிரிநாதரின் 38 திருப்புகழ்ப் பாடல்கள் பெற்ற தலம் சுவாமிமலை. அவரால், 'திருவேரகம்' என்றும், 'சுவாமிமலை' என்றும் தனித்தனியே குறிப்பிடப்பட்டு, திருப்புகழ் பாடல்கள் பாடப் பெற்றிருந்தாலும் இரண்டும் ஒன்றே என்பதைக் குறிக்கும் பாடல்களும் திருப்புகழில் உண்டு. உதாரணமாக, 'ஏரக வெற்பெனும் அற்புதம் மிக்க சுவாமிமலைப் பதி' என்ற பாடல் வரிகளைச் சொல்லலாம்.

சிலப்பதிகாரத்தில், 'சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்' என்று ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றுகிறார் இளங்கோவடிகள்.

நக்கீரரது 'திருமுருகாற்றுப் படை'யில் 177 முதல் 190-வரையுள்ள பாடல் வரிகள் சுவாமி மலையைக் குறிப்பன.

சுவாமிமலையில் வாழ்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர், 'திருஏரக நவரத்தின மாலை' என்ற நூலை இயற்றியுள்ளார். 'ஒரு தரம் சரவணபவா...' எனத் துவங்கும் நவரத்தின மாலையின் 3-வது பாடல் பிரபலமானது.

ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றும் சுவாமிநாத ஷட்பதீ ஸ்தோத்ரம் மகிமை வாய்ந்ததாகும். இதை இயற்றியவர் ராம கிருஷ்ணானந்தர் என்ற யதீந்த்ரரின் சீடரான ராமச் சந்திரன் என்ற முருக பக்தர் ஆவார். இதைப் பாராயணம் செய்து, முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும்.

முத்துசுவாமி தீட்சிதரும் சுவாமி மலை முருகனை போற்றியுள்ளார். இவரது, 'சுவாமிநாத பரிபாலயதுமாம்' என்ற நாட்டை ராகக் கீர்த்தனை பிரபலமானது.

இந்தத் தலத்தையும், ஸ்வாமிநாதனையும் போற்றும் இன்னும் பல நூல்களும் உண்டு. அவை திரிசிரபுரம் சுப்பராய பிள்ளையின் திருஏரக நான் மணிமாலை, கபிஸ்தலம் வேலையரின் திருஏரக யமக அந்தாதி, மற்றும் திருஏரக மாலை, எவ்வளூர் ராமசாமி செட்டியாரின் துதி மஞ்சரி, வித்துவான் நடேசக் கவுண்டரின் சுவாமிமலை பிள்ளைத்தமிழ், சுவாமிமலை அப்பாவு சிவாச்சார்யாரின் சுவாமிமலை தலபுராணம், சாம்பமூர்த்தி பாகவதரின் சுவாமிமலை மகாத்மியம் (வடமொழி நூல்) ஆகியன.

ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றும் வேறு சில வடமொழி நூல்களும் உண்டு. அவை ஸ்வாமிநாத புஜங்கம், ஸ்வாமிநாத பஞ்சரத்னம், ஸ்வாமிநாத கரா வலம்ப ஸ்தோத்திரம், ஸ்வாமிநாத ஸ்வாமி சுப்ரபாதம், ஸ்வாமிநாத அஷ்டோத்திரம்.

பிரம்மன், பூமாதேவி, இந்திரன், சுகபிரம்ம மகரிஷி, பிரகதீஸ்வரர் என்ற அந்தணர், யக்ஞமித்திரன், ரவிமித்திரன், கார்த்தவீரியன், வசு, சரவணன், சுமதி, சோழ மன்னன் ஒருவன் மற்றும் வரகுணபாண்டியன் ஆகியோர் இங்கு வந்துஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.

அருணகிரிநாதருக்கு, முருகப் பெருமான் பாத தரிசனம் தந்த திருத்தலம் இது என்பதை,

முதுமறைக்குளரு மா பொருட்டுள்

மொழியே யுரைத்த

தகையா தெனக்குனடி காணவைத்த

தனியேரகத்தின் முருகோனே! என்ற

பாடல் வரிகளால் அறியலாம்.

ஜய வருடம் வைகாசி மாதம் 8-ஆம் தேதியன்று, (20.5.1894) விழுப்புரம் நகரில் மான் சுப்ரமண்ய சாஸ்திரிகள் - மகாலட்சுமி தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக உதித்த காஞ்சி மகா பெரியவாளுக்கு தங்கள் குலதெய்வமான சுவாமிமலையில் குடிகொண்ட சுவாமிநாதனின் திருநாமத்தையே சூட்டினர் பெற்றோர்.

ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலின் தல புராணம் 'படைப்புக்கு தானே காரணகர்த்தா!' என்ற கர்வத்துடன் திரிந்தார் பிரம்மன். ஒரு முறை அவர், திருக்கயிலைக்கு வந்தார். அங்கிருந்த முருகப் பெரு மானை, ஆணவம் மிகுந்த பிரம்மன் கவனிக்காது சென்றார்.

உடனே பிரம்மனை அழைத்த முருகப் பெருமான், பிரணவத்தின் பொருளைக் கூறுமாறு பிரம்மனிடம் கேட்டார். பொருள் தெரியாத பிரம்மன் திகைக்க... அவருடைய தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன். அத்துடன் படைப்புத் தொழிலையும் தானே ஏற்றார். இறுதியில் சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்மனை விடுவித்ததுடன் தந்தைக்கும் பிரவணப் பொருளை உபதேசித்தார்.

முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவனார், தம் உள்ளத்தில் உவகை பொங்கிட... தன் மகனை 'நீயே சுவாமி!' என்று கூறினாராம். இதனால் இந்தத் தலம் சுவாமிமலை எனும் பெயர் பெற்றது. முருகப் பெருமான் ஸ்வாமிநாத ஸ்வாமி மற்றும் தகப்பன் ஸ்வாமி ஆகிய திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டார்.

ஒரு முறை 'பிருகு' மகரிஷி தீவிர தவத்தில் ஆழ்ந்தார். தனது தவத்துக்குத் தடை ஏற்படுத்து பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தம் சிறப்பை இழப்பார்கள் என்று ஆணையிட்டிருந்தார். அவரது தவ வலிமையால் அகில உலகமும் தகித்தது. தேவர்கள் அனைவரும் சிவனாரை வேண்ட... அவர் பிருகு முனிவரின் தலையில் கை வைத்து தகிப்பை கட்டுப்படுத்தினார். இதனால் தவம் கலைந்தது. முனிவரது ஆணைப்படி சிவனார் பிரணவ மந்திரத்தை மறந்தார்.

இதன் பிறகு, பிரம்மனுடன் முருகப் பெருமான் நிகழ்த்திய அருளாடலின்போது, அவரிடமே பிரண வப் பொருள் உபதேசம் பெற்றார் ஈசன். இந்தப் பெருமை சுவாமிமலை திருத்தலத்தையே சாரும். தந்தைக்கு வலக் காதில் பிரணவப் பொருள் உப தேசித்த வேலவன், தன் தாயாகிய பராசக்தியும் அதன் அர்த்தத்தை அறிய வேண்டும் என்பதற்காக சிவனாரின் இடக் காதிலும் உபதேசம் செய்தார் என்கிறது புராணம்.

இந்தத் தலத்தின் தல விருட்சம் நெல்லி மரம். இதன் பின்னணியை சுவாரஸ்யமாக விளக்குகிறது தல புராணம். 'சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகன் தன் மடியில் தவழாமல் பூமாதேவியின் மடியில் (சரவணக் காட்டில்) தவழ நேர்ந்ததே!' என்று கோபம் கொண்ட பார்வதிதேவி, பூமா தேவியை சபித்து விட்டாள். சாப விமோசனம் தேடி அலைந்த பூமாதேவி, இறுதியில் சுவாமிமலை தலத்தை அடைந்து, ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றாள். பிறகு, இங்கிருந்து பிரிய மனமின்றி நெல்லி (தாத்ரி) மரமாகி நின்று, இன்றும் தன் வழிபாட்டைத் தொடர்கிறாள் என்கிறது தல புராணம்.

தல விருட்சத்துக்கு மட்டுமின்றி இங் குள்ள தீர்த்தங்களுக்கும் தனித் தனி சிறப்புகள் உண்டு.

வஜ்ர தீர்த்தம் கீழக் கோயிலான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் கிணறாகக் காணப்படுகிறது இந்தத் தீர்த்தம். இதில் இருந்தே ஸ்வாமி அபிஷேகத்துக்கு நீர் எடுக்கிறார்கள். இதை சுவாமி கூபம், «க்ஷத்திர கூபம் என்றும் அழைப்பர். இந்த நீரை தெளித்துக் கொண்டால் எல்லா வித நோய்களும் பிரம்மஹத்தி தோஷமும் அகலும்;

குமாரதாரை இங்கு பாயும் காவிரியின் கிளை நதியையே குமாரதாரை என்பர். எல்லோரும் தன்னிடம் வந்து பாவத்தைக் கழுவிச் செல்ல... அதை, தான் எங்கு போய் போக்குவது என்று கலங்கிய கங்காதேவி, ஈசன் அறிவுரைப்படி இங்கு வந்து, காவிரியுடன் கலந்து குமாரக் கடவுளை வழிபட்டு புனிதம் பெற்றாளாம். இப்படி கங்கை, தாரையாக (நீர்ப் பெருக்காக) வந்து காவிரியில் கலந்ததால், இங்குள்ள காவிரிக்கு குமாரதாரை என்று பெயர்.

சரவண தீர்த்தம் திருக்கோயிலின் வடகிழக்கில் உள்ள தீர்த்தம். ஜமதக்னி முனிவரது சாபத்தால் கரடி உருப் பெற்ற தன் தந்தை உய்வடையும் பொருட்டு... சரவணன் என்ற சிறுவனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இது. அவன் தந்தை இதில் நீராடி,ஸ்வாமி நாதரை வழிபட்டு சுயரூபம் பெற்றாராம்.

நேத்திர தீர்த்தம் (சுவாமி தீர்த்தம்) இது, திருக்கோயிலின் கிழக்கே உள்ளது. கந்தவேளின் வேலாயுதத்தால் உருவாக்கப்பட்டது. இதன் மகிமையை 'சப்த ரிஷி வாக்கியம்' என்ற சோதிட நூல் விவரிக்கிறது.

'பார்க்கக் கூடாததை பார்க்கக் கூடாது!' என்ற பெரியோரது ஆணையை மீறிய சுமதி என்பவன் பார்வை இழந்தான். பிறகு, பரத்வாஜ முனிவரது அறிவுரைப்படி இதில் நீராடி, கண்பார்வை பெற்றான். இதனால் இதற்கு நேத்திர (கண்) தீர்த்தம் என்று பெயர். கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில்,ஸ்வாமிநாத ஸ்வாமி இதில் தீர்த்தவாரி கொண்டருள்கிறார்.

சுக்லபட்ச அஷ்டமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாளில் இதில் நீராடி, ஸ்வாமி நாதரை வழிபட்டால் பிரம்ம ஹத்தி பாபம் நீங்கும்.

சுக்லபட்ச அஷ்டமியும் பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் நீராடி சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு கோ தோஷம் நீங்கும்.

ஆடி மாதம் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நீராடி வழிபட்டால், பிறரது பொருளைக் கவர்ந்ததால் ஏற்படும் பாவங்கள் நீங்கும்.

ஆவணி மாதம் பூரட்டாதி, உத்திரட்டாதி கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி, வழிபடுபவர்கள் உயர் பதவியை அடைவார்கள்.

புரட்டாசி மாதம் அஷ்டமியில் நீராடி வழிபடு பவர்கள், அன்னத்தை வீண் செய்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கப் பெறுவர்.

ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் கூடிய ஞாயிற்றுக் கிழமை அன்று இதில் நீராடி, கோயிலை(கிரி) வலம் வந்து அன்னதானம் செய்தால், தீவினைகள் நீங்கப் பெறுவர்.

கார்த்திகை மாதம் நீராடி வழிபட்டால், ஏழு பிறவி களில் செய்த பாவங்கள் அகலும்.

மார்கழி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய நாளில் நீராடி வழிபட்டால் பெரிய பதவிகள் கிடைக்கும்.

தை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் நீராடி இறை வனை வழிபட்டால் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும்.

மாசி மாதம் மக நட்சத்திர நாளில் நீராடி இறைவனை வழிபடுவோருக்கு வீடுபேறு கிடைக்கும்.

பங்குனி மாதம் உத்திர நாளில் நீராடி வழிபடுபவர்களுக்கு எல்லா இன்பங்களும் கிடைக்கும்.

பிரம்ம தீர்த்தம் பிரணவப் பொருளை அறிய விரும்பிய பிரம்மன், முருக வழிபாட்டுக்காக ஏற்படுத்திய தீர்த்தம் இது. புராணங்களில் இந்தத் தீர்த்தம் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்காலத்தில் இது எங்குள்ளது என்பது தெரியவில்லை. சிலர், சுவாமிமலையின் ஈசான திக்கில் உள்ள பெரமட்டான் குளத்தை, 'பிரம்ம தீர்த்தம்' என்கிறார்கள். ஆனால், இதற்கு ஆதாரங்கள் இல்லை.

சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருக்கோயில் நில மட்டத்தில் இருந்து, சுமார் 60 அடி உயரத்துடன் திகழும் கட்டுமலை (செயற்கைக் குன்று) மீது அமைந்துள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மேலும் விஸ்தாரமாக்கப்பட்டது என்கிறார்கள்.

கட்டுமலை மீது எழுந்தருளி உள்ள ஸ்வாமி நாத ஸ்வாமியின் கோயிலை மேலக் கோயில் என்றும், மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்தை கீழக் கோயில் என்றும் அழைப்பர். ஸ்வாமிநாத ஸ்வாமி குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த தலம் ஆதலால் இங்கு, முருகப் பெருமான் கட்டுமலையின் மேலும், ஈசன் அடிவாரத்திலும் குடிகொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலுக்கு ஏழு கோபுரங்கள் இருந்த தாகச் சொல்கிறது தலபுராணம். யாத்ரீகர்கள் சுவாமி மலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வ பெண்கள் இருவரை வணங்கி வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

கட்டுமலையில் ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதானத்தை அடைய 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைவதாக திருக்குடந்தை புராணம் குறிப்பிடுகிறது. இந்தப் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தேங்காய் உடைத்து வழிபட்ட பிறகே படியேற வேண்டும்.

இந்தக் கோயிலுக்கு மூன்று திருவாயில்கள் உண்டு. கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் மொட் டைக் கோபுரங்கள் அணி செய்கின்றன. பிரதான ராஜ கோபுரம் தெற்கு வாயிலில் அமைந்துள்ளது. 5 நிலைகளுடன் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது இது.

மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது கோயில். கட்டுமலையின் அடிவாரத்தில் உள்ள 3-ஆம் பிராகாரத்தை வலம் வந்து 28 படிகள் ஏறிச் சென்றால் 2-ஆம் பிராகாரத்தை அடையலாம். அங்கிருந்து 32 படிகள் ஏறிச் சென்று கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரத்தை அடையலாம்.

தெற்குக் கோபுர வாயில் முகப்பு மண்டபத்தின் மேற்கே திருக்கோயில் அலுவலகம். கோபுர வாயிலில் நுழைந்தால் இடப் புறம் விசாலமான திருமண மண்டபம். இதன் மேற்புறம் திருக்கோயில் அலுவலகம் உள்ளது. திருமண மண்டபத்தைக் கடந்து சென்றால் பெரிய சுற்று மண்டபம். அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் சந்நிதி (கீழக் கோயில்) தனிக் கோயிலாக திகழ்கிறது.

மதுரையை ஆட்சி செய்த வரகுண பாண்டியன், பிரம்மஹத்தி தோஷத்தால் அல்லலுற்றான். நிவர்த்தி வேண்டி அவன், திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்தில் தங்கி இளைப்பாறினான். தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடாமல் உண்பதில்லை என்று விரதம் கடைப் பிடித்த வரகுண பாண்டியன், இங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஸ்தாபித்து வழிபட்டானாம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வரும்போது,தட்சிணாமூர்த்தி, விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்கை, சண்டீகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களை தரிசிக்கலாம்.

இந்தக் கோயிலை தரிசித்த பிறகு (28) படிகள் ஏறி 2-ஆம் பிராகாரத்தை அடைய வேண்டும். இதன் கிழக்குச் சுற்றில் முருகப் பெருமான், சிவபெருமானுக்குப் பிரணவ உபதேசம் செய்வதை விளக்கும் அழகிய சுதைச் சிற்பம் உள்ளது. சிவ பெருமானின் மடி மீது சுவாமிநாதன் எழுந்தருளி யிருக்க... இடப் பக்கத்தில் அகத்தியர், பிரம்மன், வீர பாகு ஆகியோரும், வலப் பக்கத்தில் திருமால், நாரதர் ஆகியோரும் சிவபெருமானின் திருவடியருகில் நந்தியம் பெருமானும் உள்ளனர்.

2-ஆம் பிராகாரத்தின் தெற்கு சுற்றுச் சுவரில், கந்தரனுபூதி இடம்பெற்றுள்ளது. மேலும் அருணகிரி நாதரது 'திருஎழு கூற்றிருக்கை' பாடலையும் தேர் வடிவ சித்திரகவியாக சலவைக்கல்லில் பொறித்து வைத்துள்ளனர். இதை ரதபந்தம் என்றும் கூறுவர்..

2-ஆம் பிராகாரத்தில் இருந்து 32 படிகள் ஏறிச் சென்றால் உச்சி (முதல்) பிராகாரம். இங்கு முதலில் தல விநாயகர் தெற்கு நோக்கி அமைந்துள்ளார். கொங்கு நாட்டில் இருந்து இங்கு வந்த பிறவிக் குருடன் ஒருவன், உணவில்லாமல் பட்டினி கிடந்து இந்த விநாயகரை வழிபட்டு, பார்வை பெற்றானாம். இதனால், இவருக்கு நேத்திர விநாயகர் என்று பெயர் (நேத்திரம்- கண்).

கருவறை மூலவர் தரிசனத்துக்கு முன் மகா மண்டபம். இதன் வாயிலின் வலப் புறத்தில் இடும்பனின் உருவமிருக்க, இடப்புறத்தில் அகத்தியர், அருணகிரியார் ஆகியோர் வடிவங்கள் உள்ளன.

இந்த மண்டபத்தில் உள்ள கருங்கல் தூண் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளும், வளைவான கொடுங்கைகளும், கல்லால் ஆன தொங்கும் தாமரை மொட்டும், யாளி உருவங்களும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. மகா மண்டபத்தில் தங்கக் கொடி மரத்தையும் தரிசிக்கலாம்.

மற்ற படைவீடுகளில் இல்லாத, சுவாமி மலையின் தனி சிறப்பம்சம்... இங்குள்ள பாகுலேய சுப்பிரமணியர் திருமேனி! மகா மண்டபத்தின் வடக்குச் சுவர் பக்கம் தெற்கு நோக்கி காட்சி தருகிறார் இவர். இரண்டு திருக்கரங்களை நீட்டியாவாறும், மேலும் இரு கரங்களை மேல் நோக்கி திகழ... நடராஜப் பெருமானைப் போன்று காட்சி தரும் இவரை சபாபதி என்றும் அழைப்பர். தெய்வானை யுடன் திகழும் இவர், மார்கழி மாதம் திருவாதிரை உற்சவத்தின்போது மட்டுமே வீதியுலா வருகிறார்.

உச்சி பிராகாரமாகிய முதல் பிராகாரத்தில் மகா மண்டபம் தவிர... வலத்தின்போது, பாலசுப்பிரமணியர், திருமகள், கலைமகள், அருணகிரிநாதர், ஸ்கந்த சண்டீசர், விசாலாட்சி- விஸ்வநாதர், நடராஜர், சண்முகர், பைரவர், சாஸ்தா, சூரியன், நவவீரர்கள், அகத்தியர், இடும்பன், கார்த்தவீரியன் முதலானோரையும் உற்சவ விக்கிரகங்களையும் தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானை தேவியருக்கு தனிச் சந்நிதிகள் இல்லை.

இந்த பிராகாரத்தில், தண்டபாணி மூர்த்தியின் விக்கிரகம் ஒன்றையும் தரிசிக்கலாம். இவரின் மேனியில் இடது பாகம் பின்னம் அடைந்துள்ளது. அந்நியர்கள் படையெடுப்பின்போது, ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலைப் பாதுகாக்கும் பொருட்டு, கோயிலை மறைத்து பெரும் சுவர் ஒன்று எழுப்பி சிறிய சந்நிதி ஒன்றில், மயில் வாகனத்துடன் கூடிய இந்த தண்டபாணியை பிரதிஷ்டை செய்தார்கள்.

படையெடுத்து வந்த அந்நியர்கள் இதுதான் கோயில் என்று எண்ணி இதை மட்டுமே தாக்கினர். இதனால் தண்டபாணியின் திருமேனி பின்னம் அடைந்தது. பின்னம் அடைந்த உருவத்தை கோயிலில் வைக்கக் கூடாது என்றாலும், அழகான இந்த மூர்த்தியை அகற்ற விருப்பமில்லாமல் இந்தக் கோயிலிலேயே இடம்பெறச் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. கருவறையில், அகரம்- உகரம்- மகரம்- நாதம்- பிந்து... என ஐவகையான ஓங்காரத்தின் உருவினனாக, மெய்ஞான குருவாக அருள்பாலிக்கிறார் ஸ்வாமிநாத ஸ்வாமி. இவர், தம் இடது திருக்கரத்தை இடுப்பில் அமர்த்தி, வலக் கரத்தில்- திருத்தண்டம் (தண்டாயுதம்), தலையில்- ஊர்த்துவ சிகாமுடி (கிரீடம்), திருமார்பில்- முப்புரி நூல் மற்றும் ருத்திராட்சம் ஆகியன திகழ (சுமார் 6 அடி உயரத்துடன்) காட்சி தருகிறார்.

ஸ்வாமிநாத ஸ்வாமியை உன்னிப்பாகக் கவனித்தால், அவர் எழுந்தருளியுள்ள பீடம், சிவ லிங்கத்தின் ஆவுடையாராகவும் ஸ்வாமிநாதர், லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம். இது, 'ஈசனே முருகன்; முருகனே ஈசன்!' என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

செவ்வாய்க் கிழமைகளில் மாலை வேளையில், நான்கு சரங்கள் கொண்ட சகஸ்ரார மாலை, வைரத்தா லான ஷட்கோணப் பதக்கம் முதலியனவும், வியாழக் கிழமைகளில் தங்கக் கவசம், வைர வேல் மற்றும் பல அணிகலன்களும் அணிவிக்கப் பெற்று காட்சி தரும் ஸ்வாமியைக் காண கண்கோடி வேண்டும்!

ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத் தினராகவும், சந்தன அபிஷேகத்தின்போது பால குமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் ஸ்வாமிநாதர்.

பழநியில் பால பருவத்தினனாகக் காட்சி தரும் முருகப் பெருமான் இந்தத் தலத்தில் இளங்காளை (வாலிப) பருவத்தினனாகக் காட்சி தருவதாக ஐதீகம்.

இவருக்கு ஸ்வாமிநாதன், தகப்பன்சாமி, சுவாமி, குருநாதன், புத்ரக குருக்கள் ஆகிய திருநாமங்களும் உண்டு. வடமொழியில் ஞானஸ்கந்தன் என்பர். இவரின் கொடி- சேவற்கொடி; ஆயுதம்- வேல்; மாலை- நீபம்; வாகனம் யானை!

அரிகேசன் எனும் அரக்கனை அழிக்க எண்ணிய இந்திரன், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமிநாதரை வழிபட்டு வல்லமை பெற்று அசுரனை அழித்தான். இதற்கு நன்றிக்கடனாக ஐராவதம் எனும் வெள்ளை யானையை ஸ்வாமிநாதருக்கு வாகனமாக அளித் தான். எனவே, இந்தத் தலத்தில், கருவறைக்கு முன் மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் காட்சி தருகிறது.

மூலவரை பூஜிக்கும்போது, 'நமோ குமாராய நம' என்று மந்திரம் உச்சாடனம் செய்யப்படுகிறது. இந்த மந்திரத்தை முதன் முதலில் ஓதி, முருகனை குருவாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான். இதை

'நாதாகுமரா நம' என்று அரனார்

ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்

பாதா! குறமின் பதசேகரனே' என்ற

அருணகிரி நாதரது கந்தரனுபூதி பாடல், விளக்குகிறது.

உற்சவர் திருநாமம் சந்திரசேகரர். இவரின் மற்றொரு பெயர் சேனாபதி. திருவிழாவின்போது 10-ஆம் நாளன்று தெய்வானையுடன் தீர்த்தம் தர எழுந்தருள்கிறார். இந்த மூர்த்தியை 'சேனாபதி' என்றும் அழைப்பர். இங்குள்ள ஆறுமுகப் பெருமான் தேவியர் இருவருடன் காட்சி தருகிறார்.

சிவபெருமான் 'ஞானோபதேசம்' பெற்ற திருத் தலம் ஆதலால் இங்கு 'யக்ஞோபவீதம்' நடத்துவது சிறப்பு என்கிறார்கள்.

ஸ்வாமிநாத ஸ்வாமி புத்திர பாக்கியம் அருள்பவர் ஆதலால், இங்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் பக்தர்கள் ஏராளம்!

திருவலஞ்சுழி பிள்ளையாரை வழிபட்ட பிறகே சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட வேண்டும் என்பது மரபு.

தமிழகத்தின் சுவாமிமலை திருத்தலத்தைப் போற்றும் விதம் புதுடில்லியில் உத்தர சுவாமிமலையும், அமெரிக்காவில் ஒரு ஸ்வாமிநாதன் ஆலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தில் பிரம்மா வழிபட்ட சிவலிங்கம் முன்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரணவப் பொருள் உபதேசம் பெற வேண்டி இங்கு வந்த பிரம்மன் ஸ்தாபித்த லிங்கம் அது என்கிறார்கள்.

இங்கு காரணாகமம் முறைப்படி யும் குமாரதந்திர முறைப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன. ஆதி சைவ மரபினரே பூஜைகள் செய்து வருகிறார்கள்.

ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலின் திருவிழாக்கள் சித்திரை மாதம் - பிரம்மோற்சவம் (10 நாட்கள்), வைகாசி - வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி- பவித்ரோற்சவம் (10 நாட்கள்), புரட்டாசி- நவராத்திரி விழா (10 நாட்கள்), ஐப்பசி - கந்த சஷ்டிப் பெருவிழா (10 நாட்கள்), கார்த்திகை- திருக்கார்த்திகைப் பெருவிழா (10 நாட்கள்), மார்கழி- திருவாதிரைத் திருநாள்; தனுர்மாத பூஜை (10 நாட்கள்) தை- தைப்பூசப் பெருவிழா, பங்குனி-வள்ளிதேவி திருக்கல்யாண திருவிழா.

இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் துவஜாரோஹணத்துடன் (கொடியேற்றத்துடன்) நடைபெறுகின்றன.

இங்கு, வருடம்தோறும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) நடைபெறும் திருப்படி திருவிழாவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவின்போது, ஆன்மிக அடியார்கள் இங்கு ஆன்மிகக் கூட்டங்கள் நிகழ்த்தி விழாவை சிறப்பிக்கிறார்கள்.

பிரார்த்தனையாக நாள்தோறும் காவடி கள், பாற்குடங்கள் எடுத்து வந்து ஸ்வாமிநாத ஸ்வாமியை அபிஷேகித்து வழிபடுகிறார்கள். நேர்த்திக் கடன் செய்தவர்கள் உரிய கட்டணம் கட்டி தங்கத் தேர் இழுப்பதும் உண்டு.

இந்தக் கோயிலில், அரசு ஆணைப்படி 'அன்பு இல்லம்' ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கு உணவு- உடை- இருப்பிட வசதிகள் இலவசமாகத் தருவதுடன், அவர்கள் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவிர, சுவாமி மலையின் தெருக்களைப் பராமரித்தல், மின் வசதி செய்தல் ஆகிய பணிகளிலும் திருக்கோயிலின் பங்கு, போற்றுதலுக்கு உரியதாகும்.

ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருவருள் பெற்ற அடியார்கள் ஏராளம். யக்ஞமித்திரன் என்பவன் தன் மகன் பேச்சுத் திறன் பெறும் பொருட்டு, சிவனாரின் ஆணைப்படி இங்கு வந்து, தினமும் குமாரதாரையில் நீராடி (தொடர்ந்து 12 ஆண்டுகள்) முருகப் பெருமானை வழிபட்டானாம். இதன் பலனாக அவனின் மகன் பேச்சாற்றலுடன் ஞானமும் கைவரப் பெற்று சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தானாம்.

பிரகதகலர் (பிரகத்கலர் என்றும் கூறுவர்) என்பவர் பெரும் ஞானி. ஒரு முறை இவர், இறைவனை நேரில் கண்டு தரிசிக்கப் போவதாகக் கூறினார். 'இது இயலாத காரியம்' என்று எல்லோரும் பரிகாசம் செய்தனர். ஆனால், பிரகதகலர் கலங்கவில்லை.

தனது நோக்கம் நிறைவேறும் பொருட்டு, தல யாத்திரை புறப்பட்டார். பல தலங்களுக்குச் சென்று தரிசித்தும் எண்ணம் ஈடேறாமல் போகவே, சுவாமிமலை திருத்தலத்துக்குப் போய்ப் பார்ப்போம் எனப் புறப்பட்டார். இந்த ஊரின் எல்லைக்குள் வந்ததும் அவருக்கு ஒரு புது உணர்வு ஏற்பட்டு முருகப் பெருமான் மயில் வாகனத்தில் புறக்கண்களுக்குக் காட்சியளிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். அதனால், அவர் இங்கு வஜ்ர தீர்த்தக் கரையிலேயே மடம் அமைத்து தங்கி விட்டார்.

ஒரு நாள் இவரைச் சந்தித்த அந்தணர் ஒருவர், தன்னைப் பற்றியுள்ள பிரமஹத்தி தோஷம் நீங்க வழி கூறுமாறு வேண்டினார். அவரிடம், ''முற்பிறவி களில் செய்த புண்ணியத்தால், இந்தத் தலத்துக்கு வந்துள்ளீர். இங்கே உமக்கு நன்மையே ஏற்படும்!'' என்ற பிரகதகலர், இந்தத் தலம் பற்றிய புராணச் சம்பவம் ஒன்றையும் விளக்கினார் ''ஆடைகளைத் திருடி விற்றுப் பிழைக்கும் கொடியவன் ஒருவன், தனது பாவத்தின் காரணமாக வெண்குஷ்ட நோயால் அவதியுற்றான்.

ஒரு நாள் உணவு கிடைக்காமல் அலைந்து வருந்தியவன் சுவாமி மலையை அடைந்தான். இரவில் ஒரு வீட்டுக்குள் புகுந்தவன், அங்கிருந்த ஆடை- ஆபரணங்களைத் திருட ஆரம்பித்தான். ஆனால், சத்தம் கேட்டு விழித்த அந்த வீட்டுக்காரர்கள் அவனை விரட்ட ஆரம்பித்தனர். தப்பியோடிய திருடன், இங்குள்ள வஜ்ர தீர்த்தம் அருகில் வரும்போது கால்தவறி உள்ளே விழுந்து விட்டான். இரவு முழுவதும் அந்தக் கிணற்றுக்குள்ளேயே இருக்க நேரிட்டது.

விடிந்ததும் ஊர்க்காரர்கள் அவனை வெளியே எடுத்தனர். அப்போது, வெண் குஷ்டம் நீங்கி அவன் உடல் பொலிவுடன் திகழ்ந்தது. அவன் மகிழ்ந்தான். வஜ்ர தீர்த்தத்தின் பெருமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினர். தாங்களும் வஜ்ர தீர்த்தத்தில் மூழ்கி ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நலம் பெறலாம்!'' என்றார். அதன்படி வஜ்ர தீர்த்தத்தில் நீராடி ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றார் அந்தணர்.

மிகச் சிறந்த சங்கீத மேதை துரைமாரியப்ப சுவாமிகள். இவர் ஒரு முறை, தனக்கு பாட்டுப் புலமை வாய்க்கவில்லையே என்று வருந்தி, ஸ்வாமிநாத ஸ்வாமிடம் முறையிட்டதுடன், சந்நிதியிலேயே தனது நாவை அறுத்துக் கொண்டாராம். பிறகு, முருகப் பெருமானின் அருளால் துரை மாரியப்ப சுவாமிகளின் அறுபட்ட நாக்கு வளர்ந்ததுடன், அவர் கவிபாடும் திறனும் பெற்றாராம்!

இந்த ஆலய ஓதுவராக இருந்தவர் ஏ.என். பஞ்சநாத தேசிகர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே நேரத்தில் ப்ளு, நிமோனியா ஜுரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார் இவர்.

மருத்துவர்கள் கைவிட்டு விட்ட நிலையில், ஓர் இரவில் கோயிலில் தங்கி நிந்தா ஸ்துதி செய்ய ஆரம்பித்ததார். சற்று நேரத்தில் தூக்கம் மேலிட உறக்கத்தில் ஆழ்ந்தார் ஓதுவார்.

அதிகாலையில், எவரோ ஒருவர் தன் முதுகில் மூன்று முறை தடவுவதாக உணர்ந்த ஓதுவார் கண் விழித்தார். அப்போது அழகிய குழந்தை ஒன்று அங்கிருந்து விலகி ஓடுவதைக் கண்டு மெய்சிலிர்த்தார்!

அத்துடன் அவரது நோய் முற்றிலும் நீங்கி நலம் அடைந்தாராம். (இந்தத் தகவலை சுவாமிமலை தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் தல வரலாறு புத்த கத்தில் இருந்து அறிய முடிகிறது)

வள்ளிமலை சுவாமிகள் ஒரு முறை, 'அருணகிரிநாதர் முக்தி பெற்ற நாள் எது?' என்று ஸ்வாமிநாத ஸ்வாமியை வேண்ட... 'கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம்!' என்று அசரீரியாக பதிலளித்தாராம் ஸ்வாமிநாத ஸ்வாமி!

என்பவன் பார்வை இழந்தான். பிறகு, பரத்வாஜ முனிவரது அறிவுரைப்படி இதில் நீராடி, கண்பார்வை பெற்றான். இதனால் இதற்கு நேத்திர (கண்) தீர்த்தம் என்று பெயர். கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில்,ஸ்வாமிநாத ஸ்வாமி இதில் தீர்த்தவாரி கொண்டருள்கிறார்.

தந்தைக்கு உபதேசித்த ஸ்வாமிநாதன்!

தந்தைக்கு உபதேசித்த ஸ்வாமிநாதன்!

கைலாய மலை. ‘‘சர்வேஸ்வரா... அபயம்...’’ ‘‘நீங்கள்தான் எங்களைக் காத்தருள வேண்டும்...’’ என்று பலவிதமாகக் கூக்குரலிட்டபடி கூப்பிய கரங்களுடன் எதிர்வந்து நின்றனர் தேவர்கள். கண் மூடியிருந்த பரமசிவன் கண்களைத் திறந்து புன்னகை புரிந்தார். ‘‘‌தேவேந்திரா! ஏனிந்தப் பதட்டம்? என்ன நடந்தது?’’

தேவேந்திரன் முன்னால் வந்தான். ‘‘பிரபு! பூலோகத்தில் பிருகு முனிவர் கடுந்தவம் புரிந்து வருகிறார். அவரது தவத்தின் எண்ண அலைகள் தேவலோகத்தையும் எட்டி விட்டது. அவரது தவ அலைகளைத் தடுப்பவர் எவராயினும் தன் அறிவு முழுவதையும் இழந்துவிட வேண்டும் என்று வரமும் பெற்றிருக்கிறார். அகில உலகங்களுக்கும் நாயகனாகிய தாங்கள்தான் இதைத் தடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று வேண்டினான்.

சிவபெருமான் புன்னகைத்தார். தன் இரு கரங்களையும் நீ்ட்டி முனிவரின் சிரசை மூடினார். முனிவரின் எண்ண அலைகள் தடை பட்டதன் காரணமாக, சிவன் தன் நினைவி லிருந்த வேத மந்திரங்கள் அனைத்தையும் மறந்தார். பிருகு முனிவர் கண் விழித்தார். கைலாயபதியைக் கண்டதும் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து வருந்தினார். “பரமேஸ்வரா... தாங்களே ஆனாலும் நான் பெற்ற வரத்திற்கு விதிவிலக்கல்ல. என் தவத்தைக் கெடுத்ததின் விளைவை அனுப வித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், உங்களின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றும் புதல்வனிடம் நீங்கள் பிரணவ மந்திரத்தைக் கேட்டறிந்தால் இழந்ததை திரும்பப் பெறுவீர்கள்’’ என்றார்.

பின்னாளில் சூரபத்மனை அழிப்பதற்காக பரமேஸ்வரன் தன் நெற்றிக் கண்ணி லிருந்து உருவாக்கிய குழந்தை முருகன், அளவில்லாத சுட்டித்தனமும், அளப்பரிய வீரமும் பெற்றிருந்தான். ஒருமுறை பிரம்ம தேவன், சிவபெருமானைத் தரிசிக்க வேண்டி கைலாயம் வந்திருந்தார். சிறுவன் குமரன் அவரிடம் ஓடி வந்தான்.

‘‘ஓ... பிரம்ம‌ தேவரே! நில்லுங்கள்... நில்லுங்கள்...’’

‘‘என்ன வேலவா! எதற்கு இவ்வளவு வேகமாக ஓடி வருகிறீர்கள்? என்ன வேண்டும்?’’

‘‘பிரம்ம தேவரே... ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளை நீங்கள் எனக்கு விளக்கமாகக் கூறியருள வேண்டும். கணபதிக்கும் இது தெரியாதென்கிறார்...’’

பிரணவ மந்திரத்தை மறந்து விட்டிருந்த பிரம்மன் திருதிருவென்று விழித்தார். தன் இயலாமையை வேலவனிடம் தெரிவித்தார். கடுஞ்சினம் கொண்டான் கார்த்திகேயன். ‘‘பிரணவ மந்திரத்திற்குப் பொருள்கூறத் தெரியாத நீர் படைக்கும் உயிர்கள் ஞான சூன்யங்களாக அல்லவோ விளங்கும்? நீர் படைப்புத் தொழிலைத் தொடர்வது நியாயமில்லை. இனி படைப்புத் தொழிலை யாமே மேற் கொள்வோம்...’’ என்று அவரை பூவுலகில் ஓர் உயர்ந்த மலையில் சிறை யிலிட்டான். சரஸ்வதி தேவியும், தேவர்களும் ஈஸ்வரனை அணுகி, பிரம்மனைக் காப்பாற்றும்படி வேண்டினர்.

‘‘கந்தா... பிரம்ம தேவனை விடுவித்து படைப்புத் தொழில் செம்மையாக நடைபெற வழி செய்..’’’ என்று மகனிடம் ஆணையிட்டார் சர்வேஸ்வரன். ‘‘முடியாது தந்தையே. பிரணவ மந்திரத்தின் பொருளையே மறந்துவிட்ட அவரை எப்படி விட்டுவிட இயலும்?’’ என்றான்.

‘‘குமரா... பிரணவ மந்திரத்தின் உட்‌பொருள் இன்னதென்று நீ அறிவாயா?’’ என்று வினவினார் வெள்ளியங்கிரிவாசன்.

‘‘நன்றாக அறிவேன் தந் தையே...’’ என்று வேலவன் கூற, ‘‘அப்படியானால் அதை எனக்கு உபதேசம் செய்...’’ என்று வேண்டுகோள் விடுத் தார் சிவபெருமான். குறும்புக் கடவுளான சிவகுமரன் புன்முறு வல் பூத்தான். ‘‘தந்தையே... உபதேசம் என்று வந்துவிட்ட பின்னர் நான் குரு. நீங்கள் சிஷ்யன். இதுதான் உறவு. நீங்கள் கை கட்டி, வாய் புதைத்துக் கேட்டால் நான் சொல்லித் தருகிறேன்’’ என்றான்.

சிவபெருமான் கை கட்டியபடி குமரனைத் தன் மடியில் வைத்துக் கொள்ள, சிவனின் காதில் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தான் குமரன். பிருகு முனிவரின் சாபத்தால் சிவன் இழந்திருந்த மந்திர சக்திகள் அனைத்தும் அந்த உபதேசத்தின் மூலம் பரமேஸ்வரனுக்குத் திரும்பக் கிடைத்தன. தன் சக்திகள் முழுவதையும் திரும்பப் பெற்ற ஈசன், மகனை உவப்புடன் அணைத்து, ‘‘தந்தைக்கு உபதேசம் செய்த நீ இன்று முதல் ‘ஸ்வாமிநாதன்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவாய். நீ உபதேசம் செய்த இந்த மலையும் இன்று முதல் ‘ஸ்வாமி மலை’ என்ற பெயரில் வழங்கப்படும்’’ என்று வரம் அளித்தருளினார்.

ஸ்வாமி மலை திருத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. முருகனின் ஆறு படை வீடுகளில் நான்காவது படை வீடாகச் சொல்லப்படுகிறது இத்தலம். ஏனைய முருகனுறை மலைக்கோவில் களைப் போலன்றி, இந்த ஆலயம் செயற்கையான உருவமைக்கப்பட்ட ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. அறுபது அடி உயரமுள்ள இந்த மலையில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அறுபது படிக்கட்டுகளையும் ஏறிச் சென்றால் தமிழ்க் கடவுளான ஸ்வாமிநாதனைத் தரிசித்து அவனருள் பெறலாம். மலைக்குக் கீழே சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.

அருணகிரிநாதரால் திருப்புக ழிலும், நக்கீரரால் திருமுருகாற் றுப் படையிலும் பாடல் பெற்ற ஸ்தலம் இது. தினம் ஆறுகால பூஜைகள் நடக்கின்றன. 7 கிலோ தங்கத்திலும், 85 கிலோ வெள் ளியிலும் அழகுற வடிவமைக் கப்பட்ட தங்கத் தேரில் வலம் வரும் முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

பக்தர்கள் ஸ்வாமி மலையில் தங்கி இறைவனைத் தரிசிப்பதற்கு வசதியாக அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்படும் தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கின்றன. மாதந்தோறும் கிருத்திகை, ஏப்ரல் மாதத்தில் தேர்த் திருவிழா, மே மாதத்தில் விசாகத் திருவிழா மற்றும் நவராத்திரி விழா, அக்‌டோபர் மாதத்தில் கந்தசஷ்டிப் பெருவிழா, நவம்பர், டிசம்பர் மாதங்களில் கார்த்திகைத் திருவிழா, ஜனவரி மாதம் தைப்பூசத் திருவிழா, மாதத்தில் பங்குனி உத்திரத் திருவிழா என்று இங்கே ஆண்டு முழுவதும் விழாக்கள் நடப்பதால் குமரனைத் தரிசித்து அருள் பெறுவதற்கு உகந்த இடமாக விளங்குகிறது.

சுவாமிமலைக்கு திருவேரகம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. கவிகாளமேகம் எழுதிய...

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை-மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே

-என்ற தனிப்பாடல் கூட இந்தத் திருவேரகத்தை (ஏரகத்துச் செட்டியாரே) குறிப்பதுதான் எனச் சொல்வார்கள். குமரக் கடவுள் அருள் மழை பொழியும் ஆலயமான ஸ்வாமி மலையை நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்து அவனருளுக்குப் பாத்திரமாகுங்கள்..!

பழனி

பழநி

ஆறுபடை வீடுகளுள் மூன்றாம் வீடு. சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம்.

அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.பழநி செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய இடம்!

பழநி: பொதுவாக நமக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள், நல்அறிவுரைகள் வழங்கும் ஆன்மிகபெரியோர்கள், பெற்றோர்களை கடவுளாக பாவித்தும் இன்றளவும், அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கி நல்ஆசிபெறுகிறோம்.

சாதாரண மனிதர்களின் பாதத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் என்றால், கடவுளின் திருப்பாதம் தரிசன வழிபாடு ஜென்ம பாவ விமோசனம். மறுபிறப்பில்லா முக்தியை அளிக்கும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது. அந்தவகையில் தனது தந்தை சிவபெருமானுக்கு (இறைவன்) பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த, காரணத்தால் முருகப்பெருமானை இறைவனுக்கே இறைவன் தந்தைக்கு பாடம் சொன்ன குருபரன், குமரன் என ஆன்மிக பெரியோர்கள் போற்றி புகழ்ந்து பாடி வழிபடுகின்றனர்.

ஒரு சமயம் கைலாய மலையில் சிவபெருமான் ஞானபழத் திற்காக நடத்திய நாடகத்தின் போது முருகப்பெருமான் கோபித்துகொண்டு மலைமீது ஏறிநின்ற இடம் தான் மூன்றாம் படை வீடு (பழம்+நீ) பழநி என அழைக்கப்படுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் நின்ற பழநிமலையில் போகர் சித்தரால் நவபாஷன மூலிகையால் வடிவமைக்கப்பட்ட ஞான தண்டாயுதபாணி தெய்வத்தை, நம் நாட்டவர்கள் (இந்தியா) மட்டு மில்லாமல் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் தரிசனம் செய்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் அதிகவருமானமுள்ள ஆன்மிக சுற்றுலா ஸ்தலமாக பழநிகோயில் விளங்குகிறது

. சுவாமி திருப்பாத தரிசனம்: கைலாயமலையில் முருகப் பெருமான் ஞானபழத்திற்காக கோவித்துகொண்டு மலையில் மயிலுடன் வந்து நின்ற இடம் ரோப்கார்மேல்தளத்தின் அருகே உள்ளது. அங்கு பக்தர்கள் ஞானதண்டாயுதபாணியின் திருப்பாதம், மயிலையும் ஒருசேர தரிசனம் செய்யமுடியும்.

பழநி முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் முருகன் பழநி மலையில் மயிலுடன் வந்து நின்ற இடத்தை தரிசித்து விட்டு பின் முருகனை தரிசித்தால் தான் முழு பலன் கிடைக்கும் என தலபுராணங்கள் கூறுகின்றன. இறைவனுக்கே இறைவன் (பழநியாண்டவர்) திருப்பாதத்தை தரிசனம்செய்தால், ஜென்ம பாவ விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் சுவாமியின் பாதத்தை வழிபட்டு, பின் நவபாஷன மூர்த்தி ஞானதண்டாயுத சுவாமியை தரிசனம் செய்து வாழ்வில் எல்லா நலனும் பெறுகின்றனர்.

பழனி முருகன்

பழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் :

1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

2.ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

3.இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

4.அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

5.இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

7.தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

8.அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

9.இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.

10.அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

11.இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

12. 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

13. இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

14.அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

15.போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

16.கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

17.தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

18.பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.

திருவாவினன்குடி சிறக்கும் குருபரா குமரா குழந்தை வேலாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா
ஏழைபங்காளா பரமேஸ்வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா.

ஸ்ரீ பழநி மலை முருகப் பெருமானுக்கு அரகரா.. அரகரா.. அரகரா.. அரோகரா..

இடும்பன் வரலாறு

கந்த சஷ்டி விழா சிறப்பு பதிவு  இடும்பன் வரலாறு!

"வருபவர்களோலை கொண்டு நமனுடைய தூதரென்று'' என்று துவங்கும் "பரகிரியுலாவு செந்தி மலையினுடனேயிடும்பன் பழனிதனிலேயிருந்த குமரேசா'' என்ற அடிகளில் இடும்பனைப் பற்றிய வரலாற்றைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.

அகஸ்திய முனிவர் கந்தகிரிக்குச் சென்று முருகனைத் துதித்து வணங்கி அங்கு சிவசொரூபமாகவும் சக்திரூபமாகவும் விளங்கும் சிவமலை, சக்திமலை ஆகிய மலைச் சிகரங்களைத் தந்தருள வேண்டும் என்றும் தான் அவற்றைப் பொதியமலையில் வைத்து வழிபாடு செய்யப்போவதாகவும் கூறுகிறார். முருகன் அவ்வாறே அவருக்கு அருள அவர் அந்த இரண்டு மலைகளையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு பூலோகம் வருகிறார். அவற்றை திருக்கேதாரத்திற்கு அருகில் பூர்ச்சவனம் என்ற இடத்தில் இறக்கி வைத்துவிட்டுப் பொதியமலை நோக்கிக் கிளம்புகிறார்.

இடும்பாசுரன் என்னும் அசுரன் வில் வித்தையில் மகா நிபுணன். சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற அசுரர்களின் சேனைகளுக்கு வில்வித்தை கற்பித்த குரு. முருகனின் வேலாயுதத்தால் அசுரர்கள் யாவரும் மாண்டுபோகவே அவன் தன் மனைவி இடும்பியுடன் வனசஞ்சாரம் மேற்கொள்கிறான். இடும்பவனம் என்னும் வனத்தில் சிவபெருமானை நோக்கித் கடும் தவம்புரிய, அவர் அவன்முன் தோன்றுகிறார். இடும்பன் தான் ஆறுமுகக் கடவுளுக்கு அடிமையாகி அவருக்குத் தொண்டு செய்து வாழ அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டுகிறான். சிவனும், ""திருக்குற்றாலமலையை நோக்கிச் செல். உன் எண்ணம் ஈடேறும்'' என்று கூறி மறைகிறார்.

இடும்பன் இடும்பியுடன் திருக்குற்றாலம் வந்து அகஸ்திய முனிவரைக் கண்டு வணங்கித் தன் உள்ளக்கிடக்கையை வெளியிடுகிறான். அகஸ்தியருக்கு உள்ளூர மகிழ்ச்சி. தான் இறக்கி வைத்த சிகரங்களைத் தூக்கி வருவதற்குச் சரியான ஆள் கிடைத்துவிட்டான் என்று மகிழ்ந்து, ""அன்பனே! நீ கவலையுறாதே. குமரவேளின் அருள் உனக்கு நிச்சயம் கிடைக்கும். நீ நான் சொல்லும் இடத்திற்குச் சென்று இரு மலைச் சிகரங்களை எடுத்துக் கொண்டு வந்து இங்கே வைக்க வேண்டும்'' என்கிறார். அதற்கு இடும்பன் உடன்படவே அவனுக்குச் சில மந்திரங்களை உபதேசம் செய்கிறார் அகஸ்தியர்.

இடும்பன் வெகு வேகமாக பூர்ச்சவனத்திற்கு வழிகேட்டுக்கொண்டு சென்று அம்மலைச்சிகரங்களைக் காண்கிறான். மலைகளின் முன்புநிஷ்டையில் அமர்ந்து அகஸ்தியர் உபதேசித்த மந்திரங்களைப் பக்தியுடன் உச்சாடனம் செய்ய அப்போது பிரமதண்டம் புயதண்டாகவும் அட்டதிக்கு நாகங்களும் கயிறுகளாக அவன் முன் வந்தன!

அவற்றைக் கண்டு அதிசயித்த இடும்பன் அந்த நாகங்களை உறிபோல் அமைத்து இரு மலைகளையும் அதில் வைத்து பிரமதண்டுடன் பிணித்து மூலமந்திரத்தை ஓதி, முருகனை மனதால் பணிந்து, காவடியாக்கி எடுத்துத் தன் தோள்களில் அவற்றை வைத்து "அரோகரா! அரோகரா!'' என்று கூவிக்கொண்டு தென்திசை நோக்கி நடந்தான்.

பலமுறை நடுவில் வழிதெரியாது மயங்கி தவறான பாதைகளில் சென்று மீண்டும் சரியான பாதையை கண்டுபிடித்து இறுதியில் வராகமலை வழியாக திருவாவினன்குடியை அடைந்தான். அங்கு வந்ததும் அவன் தோள்மேல் சுமந்திருந்த மலைகள் மிகவும் கனக்கத் தொடங்கி அவற்றின் பாரம் தாளாமல் கீழே இறக்கி வைத்துச் சற்று இளைப்பாறுகிறான். அவன் கூடவே வந்த இடும்பி காட்டில் தேடி காய்கனி, கிழங்குகளைக் கொண்டு வந்துதர அவற்றை உண்டு பசியாறுகிறான். மீண்டும் கிளம்பலாம் என்று எத்தனித்து காவடியைத் தூக்க முயன்றால்... முடியவில்லை! சுற்றுமுற்றும் பார்த்தான். சிவகிரியின் மீது ஒருபுறம் குராமர நிழலில் ஒரு சிறு குழந்தை! "இது யார் குழந்தை? எதற்கு இந்த மலைமீது தனியாய் நிற்கிறது. ஏதாவது துஷ்ட மிருகங்கள் வந்து அடித்துப் போட்டால் குழந்தையின்கதி என்னாவது' என்று பதைத்தான் இடும்பன்.

காரணம் அந்தக் குழந்தை ஆயிரம் கோடி சூரியர் ஒன்று திரண்டாற் போன்ற பேரொளியுடன் விளங்கியது! இடும்பன் அந்தக் குழந்தையிடம் பல கேள்விகள் கேட்டு அது யார் குழந்தை என்று அறிய முயல்கிறான்.

ஆனால் அந்தக் குழந்தையோ இவன் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாது இவனைப் பார்த்து புன்னகை புரிந்து கொண்டிருந்தது. இடும்பனுக்கு கோபம் வந்துவிட்டது. சிறுவன் மீது பாய்கிறான் அடிக்க.

ஆனால் அந்தச் சிறுவனோ ""இது என்னுடைய மலை. இதிலிருந்து என்னை ஏன் போகச் சொல்லுகிறாய்? உனக்கு வலிமையிருந்தால் இவற்றை எடுத்துக் கொண்டு போ பார்க்கலாம்!'' என்று சவால் விடவே, இடும்பன் ""நான் அகஸ்திய மாமுனிவரின் சீடன். என்னிடம் வம்பு வைத்துக் கொள்ளாதே... உன்னைப் பொடிப் பொடி ஆக்கி விடுவேன்!'' என்று கூறி சிறுவனை அடிக்க கையை ஓங்கினான்.

குராவடி குழந்தையாக வந்தது சாஷாத் அந்தக் குமரக் கடவுள் அல்லவா? குமரன் தன் திருக்கரத்தில் விளங்கும் தண்டாயுதத்தினால் இடும்பன் மீது லேசாக இடிக்க, அந்த இடியைத் தாங்காது இடும்பன் கீழே விழுந்து மாண்டான்.

மகா வீரனான தன் கணவன் இறந்ததைக் கண்ட இடும்பி ஓடிவந்து கதறுகிறாள். சிறுகுழந்தை வடிவில் இருந்த குமரக்கடவுள் காலடியில் விழுந்து கதறுகிறாள். உடனே முருகன் மயில்மீது அவளுக்குக் காட்சி தருகிறார். தூங்கி எழுந்தது போல் இடும்பனும் எழுந்து கொள்கிறான். தன்னைச் சோதித்தது தான் தொண்டு செய்ய விரும்பிய பழநியாண்டவராகிய குமரக் கடவுள், ""இடும்பனே... இந்த மலைகள் இனி இங்கேயே இருக்கட்டும். குறுமுனியும் இங்கு வந்து வழிபடட்டும். பக்தர்களும் உன்னைப்போல் காவடி கட்டி எடுத்துக் கொண்டு வந்து முதலில் உன்னை வணங்கி வழிபட்டு, பின் என்னை வந்து வழிபடட்டும்!'' என்று கூறி மறைகிறார். அதுமுதல் பழநிமலைக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் முதலில் இடும்பனையும் பின் தண்டபாணியையும் வழிபட்டு வரலானார்கள்.

கந்த சஷ்டி

கந்த சஷ்டி விழா சிறப்பு பதிவு மூன்றாவது நாள் படம் ஆவுடையார் கோயில் சிற்பம் குழந்தை வரம் தரும் சஷ்டி தேவதை

கந்த சஷ்டி என்பது ஓர் திதி விரதம். இது ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்குப் பிறகு வருவதாகும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது ஓர் புராதனத் தமிழ்ப் பழமொழியாகும்.

இதற்கு சஷ்டி திதியில் விரதம் அனுஷ்டித்தால் அகத்தில் உள்ள கருப்பையில் கரு உருவாகி வளரும். சிலர் இதனை சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று வேறுவிதமான பழமொழியாக்கி பொருள் சொல்வது மிகவும் தவறாகும்.

சஷ்டி என்பவள் ஒர் திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். இவள் பிரம்ம தேவனின் மானசபுத்ரி.

முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும்  இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்ததால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தேவயானை என்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியா கத் திகழ்ந்த (தேவ சேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள்.

அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது. சஷ்டி எனும் இந்த திதி தேவதையானவள் குழந்தை இல்லாதப் பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள். இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை.

மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பாலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள். அதனால் இந்த சஷ்டி திதி தேவதையை குழந்தை பாக்கியம் வேண்டி அக்கால மக்கள் வழிபட்டனர். இவளை பிரசவம் நடந்த வீட்டில் 6-வது நாளும், 21-வது நாளும் அவர்கள் வணங்கி பூஜித்துள்ளனர்.

அப்போது இவளை சம்பத் ஸ்வரூபிணியாக அவர்கள் வழிபடுவார்களாம். ஒரு சமயம் சுவாயம்புவ மனு எனும் மன்னனுக்கும், அவன் மனைவி மாலினி தேவிக்கும் வாரிசாக ஓர் ஆண் குழந்தையின்றி புத்ரதோஷம் இருந்தது. அவர்கள் சஷ்டி விரதமிருந்து சஷ்டி தேவியின் அருளால் 12 ஆண்டுகள் கழித்து புத்ரபாக்யமும் ஏற்பட்டது.

ஆனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளால் அக்குழந்தை இறந்தே பிறந்தது. அதனால் அக்குழந்தையை மயானத்தில் கொண்டு சென்று புதைப்பதற்கு முன்பு அழுது புலம்பினர். அப்போது அங்கு நேரில் தோன்றிய சஷ்டி தேவி அக்குழந்தையிடம் சென்று அதனை எடுத்து தம் மார்போடு அணைத்து தம் இதழ்களால் முத்தமிட்டு அதை ஆசிர்வதித்தாள்.

உடனே இறந்த அக்குழந்தை உயிர் பெற்றெழுந்தது. இதனைக் கண்டு அரசனும், அரசியுடம் அவன் சேனைகளும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். அக்குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டழைத்த சஷ்டிதேவி, இவன் நெடுநாட்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து அரசு புரிவான் என்று ஆசீர்வதித்தாள் பிறகு அக்குழந்தையை சுவாயம் புவ மனுவின் மனைவி மாலினியின் கைகளில் தந்து மறைந்தாள்.

சுவிரதன் என்றால் நன்கு விரதம் அஷ்டித்ததால் பிறந்தவன் என்பது பொருளாகும். அதனால் தான் குழந்தை வரம் வேண்டும் அனைவருமே முருகப்பெருமானுக்கு மிகவும் பிரியமான தேவதையான இந்த சஷ்டி தேவியின் நாளில் சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானையும் சஷ்டி திதி தேவதையையும் வழிபட்டு புத்ரபாக்கியம் பெறுவதோடு மற்றும் பல பெரும்பேறுகளையும் பெற்று மகிழ்கிறார்கள்.

கந்தபுரானம் பகுதி மூன்று

கந்தபுராணம் பகுதி-3

ஒம் சரவணபவ

அந்த அன்பான வருடலில் ஆறுதல் பெற்று திரும்பினார் காஷ்யபர்.அங்கே அவரது தந்தை பிரம்மா நின்று கொண்டிருந்தார். காஷ்யபா ! இதென்ன கோலம் ? மன்மதனின் இலக்குக்கு தப்பியவர்கள் யாருமுண்டோ? நீயும் அவ்வாறே சிக்கினாய். நடந்ததைப் பற்றி கவலைப்படுவதில் என்றுமே பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் கேள். இந்த தந்தையின் சொல்லை மதித்து நட. நீ காமவயப்பட்டு உலகத்திற்கே கேடு இழைத்து விட்டாய். உன்னால் அசுரகுலம் தழைத்து விட்டது. இந்தப் பாவத்தைப் போக்க சிவபெருமானால் தான் முடியும். இந்த பாவ விமோசனத்திற்காக, அவரைக் குறித்து கடும் தவம் செய், புறப்படு, என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். காஷ்யபரும் ஒருவாறாக தன்னைத் தேற்றிக் கொண்டு தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு போய் விட்டார். மாயையால் தூண்டிவிடப்பட்ட பத்மாசுரன் உள்ளிட்ட இரண்டு லட்சம் அரக்கர்களும் ஆராவாரக்குரல் எழுப்பியபடி, அன்னை குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். எதிரே சுக்ராச்சாரியார் வந்து கொண்டிருந்தார். அசுரர்களின் குருவாயினும் கூட, இப்படி சிங்கம், ஆடு, யானைத் தலைகளைக் கொண்ட அசுரர்களை அவர் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இவ்வளவு கொடூரமான குரல்களையும் கேட்டதில்லை. அவரே சற்று ஆடிப்போய் விலகி நின்றார். அப்போது, பத்மாசுரன், அவரிடம், நீர் யார் ? எங்களைக் கண்டு ஏன் ஒதுங்கி நின்றீர் ? என்றான் உறுமல் குரலுடன்.சுக்ராச்சாரியார் நடுங்கியபடியே, அடேய்! நீங்கள் யார் ? அசுர சிங்கங்களா ? என்றார். ஆம்... நாங்கள் அசுரர்கள் தான். ஏன் எங்களைப் பற்றி விசாரித்தீர் ? என்ற சூரபத்மனிடம், பிழைத்தேன், நான் அடேய் ! சீடர்களே! நான் தான் உங்கள் குலத்திற்கே குரு அசுரேந்திரனின் மகள் மாயாவின் பிள்ளைகள் தானே நீங்கள் ? என்றார் சந்தேகத்துடன். பத்மாசுரன் ஆம் என்றான். குருவே ! தங்களைக் கண்டது எங்கள் பாக்கியம். எங்களை ஆசிர்வதியுங்கள் என்றான். இரண்டு லட்சம் சூராதி சூரர்களும் அசுர குருவிடம் ஆசிபெற்றனர்.பின்னர் சில மந்திரங்களை சூரபத்மனுக்கு உபதேசித்தார். அவை அவர்களுக்கு பலமளிக்கும் மந்திரங்கள் பின்னர், அவர்களிடம் விடை பெற்று புறப்பட்டார்.புதிய சக்தி பெற்ற சூரர்கள் இன்னும் வேகமாக நடந்து, வடத்வீபம் என்ற இடத்தை அடைந்தனர். அங்கே யாகமாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாதராண யாகசாலையா அது ? பத்தாயிரம் யோஜனை பரப்பின் யாகசாலை அமைக்கப் பட்டது. இக்கால அளவுப்படி ஒரு யோஜனை என்றால் 8 மைல் (12.8 கி.மீ). அதாவது ஒரு லட்சத்து 28 ஆயிரம் கி.மீ பரப்பதி இதை அமைத்திருக்கிறான். யாகமாலையின் நடுவில் ஆயிரம் யோஜனை சதுரமும் ஆழமும் கொண்ட யாக குண்டத்தை அமைத்தான். அதைச் சுற்றி இதே அளவில் 108 அக்னி குண்டங்களையும் அதையும் சுற்றி ஓரளவு சிறிய அளவில் 1008 குண்டங்களையும் நிர்மாணித்தார். இப்பணி முடியுவும் இவர்களின் தாய் மாயா யாகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தாள். அதில் கற்பூரத்தில் குருந்து எருமைகள், ஆடுகள், லட்சம் பசுக்கள் உள்ளிட்ட அனைத்தும் அடக்கம் இந்த பொருட்கள் இருந்த தூரம் மட்டும் 3 ஆயிரம் யோஜனை பரப்பு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த பொருட்களெல்லாம் அக்னி குண்டத்தில் ஹோமப் பொருட்களாக போடப்பட்டன. யாகம் என்றால் அப்படி ஒரு யாகம்... உண்ணாமல் உறங்காமல் பத்தாயிரம் வருஷங்கள், சிங்கமுகன் 108 குண்டங்களிலும், தாரகாசுரன் 1008 குண்டங்களிலும் யாகத்தை நடத்தினர். அந்த பரமேஸ்வரன் இதற்கெல்லாம் மசியவே இல்லை. பத்தாயிரம் ஆண்டும் கடந்து விட்டது. பத்மாசுரன் எழுந்தான். தன்னைத் தானே வெட்டிக் கொண்டு அந்த ரத்தத்தை அக்னி குண்டத்தில் பொழிந்தான். அதைப் பார்த்த தாரகாசூரனும், சிங்கமுகனும் அவ்வாறே செய்தனர். சிங்கமுகன் ஒரு படி மேலே போய் தன் தலையை அறுத்து குண்டத்தில் போட்டான்.தேவர்கள் மகிழ்ந்தார்கள். சிங்கமுகன் தொலைந்தான் என்று. ஆனால், புதுப்புது தலைகள் முளைத்தன. அவற்றைத் தொடர்ந்து வெட்டி அக்னி குண்டத்தில் அவன் போட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.எதற்கும் பரமேஸ்வரன் அசைந்து கொடுக்காதைதைக் கண்டு கோபித்த சூரன், சிவபெருமானே ! என் பக்தி நிஜமானதெண்றால் என்னையே ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறி, யாக குண்டத்திற்குள்ளேயே குதித்து உயிர்விட்டான். அண்ணனின் துயர முடிவு கண்டு ஏராளமான அசுரர்களும் ஆங்காங்கே இருந்த குண்டங்களில் குதித்தனர்.சிங்கமுகன் அக்னி குண்டத்தில் குதிக்கப் போன வேளையில் ஒரு முதியவர் அங்கே வந்தார்.மக்களே ! நீங்களெல்லாம் யார் ? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்றார் சிங்கமுகன் அவரை வணங்கி, தங்களைப் பார்த்தால் அந்த சிவனே வந்து விட்டதாகத் தோன்றுகிறது. முதியவரே ! நாங்கள் காஷ்யபரின் புதல்வர்கள். அசுர சகோதரர்கள் பரமேஸ்வரனிடம் வரங்கள் பெற இங்கே யாகம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாண்டுகள் கடந்தும் அவர் வரவில்லை. நானும் சாகப் போகிறேன். என்றான், கவலை வேண்டாம் மகனே ! நீங்கள் நினைத்தது இப்போதே நடக்கப் போகிறது. பரமசிவன் வரும் காலம் நெருங்கி விட்டது, என்றவர் சற்றே தலை குனிந்தார். அவரது தலையில் இருந்து ஒரு நதி பெருக்கெடுத்து ஒடி அத்தனை குண்டங்களில் இருந்த நெருப்பையும் அணைத்தது. அப்போது ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது.

தொடரும்

கந்தபுரானம் பகுதி இரண்டு

கந்தபுராணம் பகுதி-2

ஒம் சரவணபவ

தன் காலில் கிடந்த காஷ்யபரை நோக்கி புன்முறுவல் பூத்தாள் மாயா.முனிவரே ! தாங்கள் என் காலிலேயே சரணடைந்து விட்டதால், உமது ஆசைக்கு இணங்குகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை, நான் பேரழகி. உம்மைப் போன்ற கிழவருடன் உறவு கொள்வதை என் மனம் ஏற்காது. எனவே, உம் தவ வலிமையால் நீர் இளைஞனாக மாறும் பிற உருவங்களை எடுத்துக் கொள்ளும் நானும் பல <உருவங்கைள எடுக்கும் சக்தி படைத்தவள். அதற்கேற்ப நீரும் மாறிக் கொள்ள வேண்டும், என்றாள்.காஷ்யபர் அதற்கும், சம்மதித்து, பேரழகு மிக்க இளைஞனாக வடிவெடுத்தார். அந்த சுந்தர அழகன் மாயாவை அடைந்தான். அந்த முதல் இரவிலேயே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தாமரை போன்ற மலர்ந்த முகம் உடையவனாக இருந்ததால், பத்மாசுரன் என பெரியரிட்டனர். பத்மம் என்றால் தாமரை எனப் பொருள். இவனே சூரபத்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவர்கள் கூடிக்களித்த போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து மேலும் முப்பதாயிரம் அசுரர்கள் வெளிப்பட்டனர். இரண்டாம் ஜாமத்தில் இருவரும் இளஞ்சிங்கங்களாக உருமாறி கூடிக்களித்தனர். அப்போது, ஆயிரம் முகம் கொண்டவனும், இரண்டாயிரம் கைகள் உள்ளவனுமான ஒரு மகன் பிறந்தான். இவனது பெயரே சிங்கமுகன் அப்போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து நாற்பதாயிரம் சிங்கமுக அசுரர்கள் உற்பத்தியானார்கள். மூன்றாம் ஜாமத்தில் யானையாக அவர்கள் வடிவெடுத்து களித்திருந்த போது, யானை முகம் கொண்ட தாரகாசுரனும், அவனோடு நாற்பதாயிரம் யானை முக சூரர்களும் பிறந்தனர். நான்காம் ஜாமத்தில் ஆடுகளாக மாறி கூடினர். அப்போது ஆட்டு முகம் கொண்ட அஜாமுகி என்ற மகள் பிறந்தாள். அவளோடு ஆட்டுமுகம் கொண்ட முப்பதாயிரம் அசுரர்கள் உருவாயினர். மறுநாள் பகலிலும் காஷ்யபரின் ஆசைக்கடல் வற்றவில்லை. அவர்கள் காட்டெருமை, பன்றி, கரடி, புலி, குதிரை, மான், காண்டாமிருகம், கழுதை என பல மிருகங்களின் வடிவை அடைந்து கூடி, மொத்தத்தில் இரண்டுலட்சம் பேரை பெற்றெடுத்து விட்டனர்.இவர்கள் யாரும் குழந்தை வடிவினராகப் பிறக்கவில்லை. காஷ்யபரின் நவசக்தி, மாயாவின் மாயாஜாலம் ஆகியவற்றால் இளைஞர்களாக பிறந்தனர். இவர்களின் முதல் மகனான சூரபத்மன்பெற்றோர் முன்வந்து வணங்கினான்.தாயே தந்தையாரே ! லட்சக்கணக்கில் சகோதரர்கள் எனக்கு இருக்கிறார்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் ? எங்களால் உங்களுக்கு ஆக வேண்டியதென்ன ? சொல்லுங்கள். தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறோம், என்றான்.காஷ்யபர் தன் மக்களுக்கு நல்லுபதேசம் செய்தார்.மக்களே ! இவ்வுலகில் தர்மமே என்றும் வெல்லும். நீங்கள் தர்மத்தின் வயப்பட்டு இருங்கள். தர்ம காரியங்கள் பல செய்யுங்கள். சிவபெருமானைக் குறித்து நீங்கள் தவம் செய்யுங்கள். ஆன்மிக சாதனைகளே உங்களுக்கு நிரந்தர இன்பம் தருபவை. குத்ஸர் என்ற முனிவர் இறந்த ஒருத்தியைக் கூட தன் தவ வலிமை மூலம் பிழைக்க வைத்தார். மிருகண்டு முனிவரின் புதல்வன் மார்க்கண்டேயன். சிவனின் திருவருளால் எமனையே வென்று என்றுமே இளைஞனாக இருக்க வரம் பெற்றான். சிவன் தான் இவ்வுலகமே. அவரை வணங்கி தர்மத்தை நிலை நாட்டுங்கள். இதன் மூலம் என்றும் அழியா தேவலோக வாழ்வைப் பெறலாம் என்றார்.இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி விட்டார்.தன் மக்களை தாய் மாயா அழைத்தாள்.என் அன்புக் குழந்தைகளே ! பெற்ற தாய் சொல்வதைக் கேட்பதே பிள்ளைகளுக்கு அழகு. உங்கள தந்தை சொல்வதில் கருத்தும் இல்லை, இன்பமும் இல்லை, சாரமும் இல்லை. இதற்காகவா நான் உங்களைப் பெற்றேன்.அவர் சொல்லும் வாழ்க்கை துறவறம் போல் அமையும். முனிவர்களுக்கும், யோகிகளுக்குமே அது பொருந்தும். என் ஆசை அதுவல்ல. நீங்கள் இந்த ஜகத்தையே வெல்ல வேண்டும். எல்லா லோகங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும். தேவலோகமும் உங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும். தேவர்கள் உங்களுக்கு பணியாளர்களாக இருக்க வேண்டும். ஆனால், இதை அடைவது எளிதல்ல. பரமேஸ்வரனே இந்த தகுதியை உங்களுக்குத் தர முடியும். ஆனால், அவரை வரவழைப்பது அவ்வளவு எளிதல்ல.நீங்கள் வீரத்தையும், தீரத்தையும் பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும். வடக்கே வடத்வீபம் என்ற இடம் இருக்கிறது. அது யாகம் செய்வதற்கு ஏற்ற இடம். அங்கே செல்லுங்கள். யாகத்தை துவங்குங்கள். யாகத்திற்கு தேவையான பொருட்களை யாகம் துவங்கும் வேளையில், நானே கொண்டு வந்து தருவேன், என்றாள்.தாயின் மொழி கேட்டு சூரர்கள் ஆர்ப்பரித்தனர். அன்னையை வாழ்த்தினர். அவளிடம் விடை பெற்று வடத்வீபம் புறப்பட்டனர்.கண்விழித்த காஷ்யபர், அங்கு தன் மக்கள் இல்லாதது கண்டு மாயாவிடம் காரணம் கேட்டார்.தவசீலரே ! அவர்கள் மட்டுமல்ல, நானும் இப்போதே புறப்படுகிறேன். நான் அசுரகுரு சுக்ராச்சாரியாரால் அனுப்பப்பட்டவள். எங்கள் அசுரகுலத்தை தழைக்க வைக்க, வேண்டுமென்றே உம்மை மயக்கி கூடினேன். அதையறியாத நீரும் என்னோடு மகிழ்ந்து இரண்டு லட்சம் அசுரர்களை உருவாக்கினீர். என் பணி முடிந்தது. நானும் செல்கிறேன், என்றவள் மாயமாய் மறைந்து விட்டாள். அவள் மட்டுமல்ல ! அவள் எழுப்பிய மாட, மாளிகை, கூட கோபுரங்களும் மறைந்தன.காஷ்யபர் தான் செய்த தவறை நினைத்து அழுதார். அப்போது அவரது முதுகை வருடிக் கொடுத்து, காஷ்யபா, என் அன்பு மகனே, என அழைத்தது ஒரு குரல்.

தொடரும்