ஞாயிறு, 28 ஜூலை, 2019

274 Sivalayam  sri Sapthapureeswarar temple

Moolavar    : Sapthapureeswarar
Amman : Osai Kodutha Nayaki
Thala Virutcham : Kondrai
Theertham : Surya and Ananda theerthams opposite the temple
Old year : 2000 years old
Historical Name : Sapthapuri
City : Thirukolakka
District : Nagapattinam
State : Tamil Nadu
Singers : Saint Sundarar in his Thevaram hymn had mentioned the mercy of the Lord in gifting thalams-sound producing instrument to Saint Gnana Sambadar.  This is the 15th Shiva Temple on the northern bank of Cauvery praised in Thevaram hymns.      
             
Festival : Chithirai Tiruvadhirai festival in April-May is celebrated in Sirkali Sattainathar temple with the milk utsav on the second day. After this event, Saint Gnanasambandar comes to this temple, when Lord Shiva gives the golden plate to the saint. The saint returns to the first temple in a flower decorated palanquin. Theerthavari is celebrated on all Karthikai Sundays in November-December.
             
Opening Time : The temple is open from 7.30 a.m. to 11.00 a.m. and from 4.30 p.m. to 8.00 p.m, Sri Sapthapureeswarar Temple, Tirukolakka : 609 110. Nagapattinam district, Phone:+91- 4364-274 175.     



 
         
Information:Ananda Theertha tank opposite the temple, Vrushbaruda Darshan of Lord on the west of front entrance near a spring, Vahan mandaps while entering the temple, shrines of four Saivite saints, Adhikara Nandhi greet the devotees.  Lords Vinayaka, Somaskanda, Subramania, Mother Lakshmi, Sani Bhagwan, Lord Bhairava and Sun shrines are in the prakara.  Procession deities are safely kept in the mandap right of the prakara.  Mother Ambica is in a separate shrine.  Of the procession deities, noteworthy is the one of Saint Gnana Sambandar holding the golden plate.  Lords Vinayaka, Dakshinamurthi, Lingodhbava, Brahmma and Mother Durga are on the goshta walls. Those unable to speak and facing stammering problems bathe in the Ananda Theertha and pray to Ambica to bless them with the sound as she introduced the sound to a metal plate. (Osai in Tamil means sound. Kodutha means given and Nayaki Mother Goddess. Hence the name Osai Kodutha Nayaki. Lord gave the plate to the saint but it was Mother who gave the life to it with the sound).  Devotees place honey at the feet of Mother, perform archanas and consume it then.  As this is also the place where Mother Mahalakshmi performed penance on Lord Vishnu seeking His hands, women pray in the shrine on Mondays and Fridays for 6 weeks continuously with turmeric archanas to realize their wedding wish.

Greatness Of Temple : Those aspiring excellence in music pray in the temple.  It is noteworthy that Lord who gave the Thalam plate to Ganasambandar and Mother who gave the sound, bless the devotees at the entrance of the temple.  Indira and Sun had gained rich benefits from their prayers to Lord. Mother Mahalakshmi in the temple is a powerful and merciful Goddess pouring all boons to devotees. As the wedding of Mahalakshmi with Lord Vishnu took place here, the place is named Tirukolakka. Presently, the temple is known as Tiru Thalam Udayar Koil.
     
Temple History : Saint Gnanasambandar, fed with the wisdom milk by Mother Parvathi, visited many Shiva temples singing his praise clapping his hands in ecstasy. Seeing the little saint clapping his hands, to relieve him from the pain of doing so, Lord gave him two golden plates, but they produced no sound.  Mother infused the sound energy into them.  Hence, Lord is praised as Thalapureeswarar and Mother Osai Kodutha Nayaki.
--------------------------------------------------------------------------------------------------------------------
 274 சிவாலயங்கள் : அருள் மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்)
அம்மன் : மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை)
தீர்த்தம் : அர்ஜுன தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவிசயமங்கை
ஊர் : திருவிஜயமங்கை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம் : மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர் தண்ணறுஞ் சாந்தமும் பூவு நீர்கொடு விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே. திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 47வது தலம்.  
      
திருவிழா : திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனியில் திருக்கல்யாணம் நடைபெறும்.  
      
தல சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 09:00 மணி முதல் 10:00 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.  அருள் மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை : 612 301, தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91- 435- 294 1912, 94435 86453, 93443 30834 
     

தகவல் : மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர்.

ஆயுள் விருத்தி வழிபாடு : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் இத்தலத்தைப் போற்றி தேவாரம் பாடியுள்ளனர். திருநாவுக்கரசர் எமனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இதனால் ஆயுள் விருத்திக்காகவும் ஆயுள் தோஷம் நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். அம்பாள் மங்களநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். படித்து முடித்து முதலில் வேலைக்குச் செல்பவர்கள் தேர்வில் வெற்றி பெற விஜயநாதருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள். அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது. கோயிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலைபைரவர், சூரியன், நால்வர் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.

ஸ்தல பெருமை : சோழர்கால முறைப்படி கட்டப்பட்ட கோயில். இங்கு மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும் ராஜகோபுரம் சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும் பின் இரண்டு கைகளில் ஒரு கையில் அட்சரமாலையும் ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

ஸ்தல வரலாறு : மகாபாரத போரின்போது பாண்டவர் கவுரவர் படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். இவ்வேளையில் வேதவியாசர் அர்ஜுனரிடம் சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனன் சிவனை வேண்டி தவமிருந்தான். இதையறிந்த துரியோதனர் முகாசுரனை அனுப்பி தவத்தை கலைக்க முயன்றார். பன்றி வடிவில் வந்த அசுரனை அர்ஜுனன் வீழ்த்தினான். அங்கு வந்த ஒரு வேடன் தானே பன்றியை வீழ்த்தியாகச் சொன்னார். இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அவ்வேளையில் சுயரூபம் காட்டிய சிவன் பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம் ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா? என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம் அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம் என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார். அர்ஜுனனுக்கு விஜயன் என்றும் பெயருள்ளதால் சிவன் விஜயநாதர் என்று பெயர் பெற்றார். தலத்திற்கும் திருவிஜயமங்கை என்ற பெயர் ஏற்பட்டது.
-------------------------
அத்தி வரதர்

தங்க கவசமிட்ட அனந்த பத்மநாபரே இப்போது அந்நிய பயம் நீங்கி தைரியமாக உலகுக்கு காட்சி அளிக்க... 1709ல் துவங்கிய பழக்கம் இப்போதும் தேவையா! அத்தி வரதர் 4  முதல் இரண்டு பதிவை நீக்கி விட்டேன் என்பதால் என் கருத்தில் மாற்றம் உள்ளதாக நினைக்க வேண்டாம். வட கலை / தென்கலை ப்ரச்சனை நமக்கு தேவை இல்லாத ஒன்று... ராமானுஜர் வைணவ சித்தாந்தங்களை பரப்ப ஸ்ரீ ரங்கம் மற்றும் காஞ்சி ஆகிய இரண்டு இடங்களில் பாடசாலைகளை நிருவினார்... அவை, வட கலா சாலை காஞ்சி தென் கலா சாலை ஸ்ரீ ரங்கம் என காலப் போக்கில் வட / தென் கலை ஆகிப் போனதாம். எது எப்படியோ... பாரம்பர்ய திருமங்கை மன்னன் (தென்கலை) பாசுர பாடல்களை வரதருக்குப் முன் பாடக்கூடாது என கைகலப்பில் இறங்கிய பொருக்கிகள் தான் பகுத்தறிவுவாதிகளே விட அதிகம் விஷ்ணுவை அசிங்கப்படுத்தி உள்ளனர். வடகலை / தென்கலை பிரச்சனை பூதாகாரமாக ஒரு சமீபத்திய வைணவ ஆச்சாரியர், A1, அவளுக்கு நக்கிய பைபிள் மாமா வேணு ஆகியோர் மூல காரணம். திருமங்கை மன்னன் பாசுரம் பாடும் போது, சடலம் போர்த்தப் படுவது போல பெருமாள் துணியால் மூடப்பட்டு, இஸ்லாமியர்கள் மெக்காவில் வல இடமாக (சுடு காட்டில் ப்ரேத சமஸ்காரம் போல அப்ரதக்ஷிணமாக) வரதரரை தூக்கிச் சென்ற புறம் போக்கு நாய்களை தண்டிக்காத பெருமாள் சொரியான் சக்களத்தன் ஈனமணியை தண்டிச்சாராம்... ஆண்டாள் ப்ரச்சனையின் போது சைவ வைணவ ஒற்றுமை அதிகமாகவே வெளிப்பட்டது... அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்தின் போது சிவ விஷ்ணு பேத அபஸ்வரம் விகாரமாக வெளியே தெரிந்து...  இன்று வைணவத்துக்கு உள்ளேயே வட / தென் கலை போர். தினமும் சந்தியாவந்தனம் (ஒரு வேளையாவது) செய்து விஷ்ணு வழிபாட்டை தவறாது செய்து வரும் எனக்கே அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது இல்லவே இல்லை.

ஒரு முக்கிய சந்தேகம் கலந்த செய்தி...

மாற்று மதத்தினருக்கு பயந்தே அத்திவரதர் ஜலத்தில் மறைக்கப்பட்டார்...  இனி நிரந்தரமாக வெளியில் ப்ரதிஷ்டை செய்து விடலாம்... சரிதானே...

பட்டர்களுக்கும் / அற வேசி அரசுத்துறை க்கும் நல்ல வருமானம் வருமே!!!

கூட்டத்தை கட்டுப்படுத்த திட்டமிட்டு இப்படி ப்ரசாரம் செய்கிறார்களோ என்று நான் எண்ணுகிறேன்... காரணம்... திருநின்றவூர் ராமர், கோழிகுத்தி வான்முட்டி பெருமாள், வந்தவாசி பொன்னூர் மச்சாவதார பெருமாள் கோவில்களில் எல்லாம் இன்று விளக்கு எரிக்கக் கூட வழி இல்லை...

பழகப் பழக பாலும் புளிக்கும்... இப்போது திரண்டுள்ள கூட்டம்... விளம்பர /செல்ஃபி மோக கூட்டம். பெருமாள் அருள் பாலிக்க... பொருள் பாலிக்க அல்ல... கடவுளை காட்சிப் பொருளாக்கிய காசுக்கு நடத்நப்படும் கூத்து இது. அத்திவரதர் : 5  24 நாள் சயன கோலம்; 24 நாள் நின்ற கோலம்
இப்ப செய்தி உலாவுது... பிண்ணம் ஆகி உள்ளதால் நாளை துவங்க இருந்த நின்ற கோலம் ஆகஸ்ட் 1 முதல் துவங்குமாம்!! இல்லை இல்லை கடைசி 10 நாள் மட்டுமாம்... சேதமாகி விட்டதால் தான் நீரில் விஸர்ஜனம் செய்யப்பட்டதா?! அல்லது நிரந்தர மறு ப்ரதிஷ்டை கோரிக்கையை நிராகரிக்க புதிய பொய்யா?! பிண்ணம் ஆகிவிட்ட வரதரை எதற்காக 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளிக் கொண்டு வந்து ஆராதிக்க வேண்டும்?!
வரதரே நின்ற கோலம்தானே... அவருக்கு ஏன் சயன கோலம்?!
பிண்ணம், 40 வருடம், சயண கோலம் / நின்ற கோல சடங்குகள் / விதிகள் யாரால் எப்போது எந்த அடிப்படையில் வகுக்கப்பட்டது?! அத்திவரதர் : 6
அத்தி மரத்தால் உருவாக்கப்பட்ட திருமேனி... இந்த வரிசையில் இப்போது, கோழி குத்தி வான் முட்டி பெருமாள், திருநின்றவூர் ராமர், வந்தவாசி பொன்னூர் மச்சாவதார பெருமாள் வந்துள்ளார்கள். இதே போல ஒரு தகவல் ... திருவெள்ளரை (ஆதி திருவரங்கம்) செந்தாமரை கண்ணன் ... சுமார் 12+ அடி உயரம்... 100 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர்... இப்போது உள்ள மூலவர்... இலுப்பை மரத்தால் உருவாக்கப் பட்டவர்... எவ்வளவு பெரிய மரம் தேடிக் கொண்டு வந்து உருவாக்கி இருப்பார்கள்... பிரமிப்பாக உள்ளது... எழுத துவங்கிவிடவில்லை... நிறைய தகவல் சேகரித்து / பெரியவர்களுடன் விவாதித்து / தகவல் குறிப்பு எடுத்துக் கொண்டே எழுதுகிறேன். அத்திவரதர் 7... இந்த தொடரில் சில கூடுதல் தகவல்கள்...

மூலவர் திருமேனி பற்றி...

கடு சக்கரா... ஆம், இதுவும் ஒரு விதமான மூலிகை தயாரிப்பு... 1000 கணக்கில் சாளக்ராமங்களை உள்ளே வைத்து மூலிகை கலவை கொண்டு உருவாக்கப்பட்ட திருமேனி... அதன் மீது தங்க கவசம் வைத்து உருவாக்கப்பட்டதே... திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர், திருவட்டாறு ஆதி கேசவர்... (பின்னவர் களவாடப்பட்டார்) அத்திவரதர் 8

திருக்கோவிலூர்... திருவிக்ரமஸ்வாமி... உலகளந்தபெருமாள்...
மரத்திருமேனி... சாத்துப்படி தைலக்காப்பு... தைலக் காப்பிலும் வித்யாசம் உண்டு... மரம் / சுதை / தயாரிப்பு கலவை அனுசரித்து... புணுகு /சாம்பிராணி தைலம் என நிறைய வித்யாசங்கள்... ஸ்ரீ ரங்கத்தில் சுதையால் ஆன அரங்கனுக்கு புணுகுத் தைலம்... திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாளுக்கு சாம்பிராணி தைலம்... அத்திவரதர் 9
சிவாலயங்களில் பெரும்பாலும் கல் திருமேனிதான்... விஷ்ணு ஆலயங்களில் தான் மூலவர் உருவாக்கப்பட்ட விதம் நிறைய வித்யாசம் வகைகள்... வர்ண கலாபம்... என்ற ஒரு வகை... (களபம் என்றால் சந்தனம்)
வர்ண கலாபமும் சுதை தான்... ஆனால் மேல் பூச்சு தைலம் அல்ல... இயற்கை மூலிகை வர்ணம்... திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள்
ஸ்ரீ வில்லிப் புத்தூர் வட பத்ர சாயி  அத்திவரதர் 10 வரதர்  பற்றிய விவாதம் துவங்கி வேறு மரங்கள், சுதை, கல் சக்கரா, வர்ண கலாபம் என நீட்டி... மூலவர் / தைலக்காப்பு என பயனித்து... முருங்கை மரத்தால் ஆன ஒரு தெய்வத் திருமேனி பற்றி சொல்லட்டுமா... இருங்க... அதுக்கு முன்பாக... திருக்கண்ணமங்கை பக்தவத்ஸலன் பற்றி... ஆம், தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கல் திருமேனி பெருமாள் (16 அடி உயரம்) மற்றும் தாயார்கள் இருவர்... வருடம் ஒரே ஒரு திருமஞ்சனம் மட்டுமே... ஆடி அமாவாசை கழிந்த கேட்டை நக்ஷத்திரத்து அன்று... ஜேஷ்டாபிஷேகம் என்று பெயர்...
குறைந்த பட்சம் 400 லிட்டருக்கு மேல் நல்லெண்ணெய்.... எனத் துவங்கி... வித விதமான அபிஷேக த்ரவியங்கள்.... 10 - 12 மணி நேரத்துக்கு நீடிக்குமாம் அபிஷேகம்!!! இங்கு கருவறை உள்ளே இரு பெரிய துவாரங்கள் உண்டு ... அதில் தேனீக்களின் கூடு... தக்ஷிணாயனம் உத்திராயணம் என்று மாறி மாறி வலம் / இட மாடங்களில் கருவறை உள்ளேயே கூடு கட்டுமாம் தேனீக்கள். யாருக்கும் எந்த ஆபத்தும் விளைவிக்காது... (இப்போது இல்லை - களவாணி அரசின் அறமில்லா திருட்டுத்துறை யை நம்ப தேனீக்கள் கூட தயாரில்லை). திருவெள்ளறையில் கூட இரு வாசல்கள் உண்டு... நீங்களே விபரம் தேடுங்கள்... ப்ரயோக சக்கரம் பற்றி... எழுதிவிட்டு பின் முருங்கை மர திருமேனி குறித்து...
சில கோயில்களில் மூலவர் சிவன் மேற்கு நோக்கி இருப்பது ஏன்?

பெரும்பாலும் கோயில் கிழக்கு நோக்கியேஇருக்கும். பழமையான கோயில்கள் மேற்கு நோக்கி இருக்கும். இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது. சுவாமி எந்த திசை நோக்கி இருந்தாலும், வாசலை கிழக்கு திசையாகப் பாவித்து வணங்க வேண்டும் என சில ஆகமங்களும், மேற்கு திசை நோக்கிய சிவலிங்கம் சிறப்புடையது என சில ஆகமங்களும் கூறுகின்றன. இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் இரண்டுமே சிறப்புடையவை தான்.
------------------------------------------------------------------------------------------------------------
சர்வம் லிங்க மயம்

லிங்கத்திலிருந்தே அனைத்தும் உண்டாயின. அதுபோலவே இறுதியில் லிங்கத்திலேயே எல்லாம் அடங்குகின்றன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய யாவும் அதிலேயே அடங்கியுள்ளன. எனவே அது லிங்கம் எனப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------
பைரவ விரதம்!

தை மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் பைரவரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. செவ்வாய்க்கிழமையை மங்கல வாரம் என்று அழைப்பார்கள். செக்கச் செவேல் என்று சிவந்த ஒளி வீசுவதால் இந்தக் கிரகம் செவ்வாய் எனப் பெயர் பெற்றது. சித்திரை மாத பரணி நட்சத்திரமும், ஐப்பசி மாத பரணி நட்சத்திரமும் பைரவ விரதத்துக்கு உரிய நாட்களாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
காணிக்கைகள் ஏலம்!

பட்டுக்கோட்டைக்கு அருகில், பரக்கலக் கோட்டையில் வெள்ளால மரமாக காட்சி தருகிறார் பொது ஆவுடையார். இவருக்கு, திங்கள்தோறும் இரவு நடைபெறும் பூஜையில் சமர்ப்பிக்கும் நெல், தானியம் போன்ற காணிக்கைகளை, பொங்கல் அன்று ஏலம் விடுவார்கள். அவற்றை ஏலம் எடுத்துச் செல்வதால் வாழ்க்கை வளமாகும் என்பது நம்பிக்கை.
------------------------------------------------------------------------------------------------------------
மிருதங்க தட்சிணாமூர்த்தி!

ஞானமும் மங்கலமும் அருளக்கூடியது தட்சிணாமூர்த்தி தரிசனம். கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் நிலையில் அருளும் தட்சிணாமூர்த்தி, பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு  கோலங்களில் அருள்பாலிக்கிறார். அந்தத் தலங்களில் சில இங்கே:

தலை சாய்ந்த நிலை- வேலூர் மாவட்டம்-திருவூறல்.

சிற்ப அழகு- ஆலங்குடி

வீராசன நிலை- சென்னை, திரிசூலம்

யோகாசன மூர்த்தி- அனந்தழர், ஆந்திரா

வியாக்யான மூர்த்தி - காஞ்சி அருகில் அகரம் கோவிந்தவாடி.

நந்தியுடன் கூடிய மூர்த்தி - வள்ளலார்கோயில்-மயிலாடுதுறை

வீணையுடன் தட்சிணாமூர்த்தி-நஞ்சன்கூடு

மிருதங்க தட்சிணாமூர்த்தி-கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.

வீணையுடன் நின்ற நிலையில்- நாகலாபுரம் வேதநாராயணன் திருக்கோயில், திருத்தணி.
------------------------------------------------------------------------------------------------------------
தஞ்சை பெரிய கோயிலில் வாராஹி வழிபாடு!

தஞ்சை பெரிய கோயிலில் சப்தமாதர்களுள் ஒருவரான வாராஹி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இருள் கவ்வும் மாலை வேளையில் இங்குள்ள வாராஹியைத் தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனை தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார அபிவிருத்தியும் கிடைக்கும். பில்லி, சூனியம், திருஷ்டி மற்றும் எதிரிகளின் தொல்லைகள் நீங்க சனிக்கிழமைகளில் வழிபடுதல் நலம் என்கிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
பூதூவும் கை!

தினமும் வீட்டில் காலையிலும்,மாலையிலும் விளக்கேற்றி வழிபாடுசெய்யும்போது, இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்லோகம் ஜெபிப்பதும், தேவார, திருவாசக, பிரபந்தப் பாடல்களைப் பாடுவதும் அவசியம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி, சுவாமியின் திருவடியில் தூவ வேண்டும். இதற்கு புஷ்பாஞ்சலி என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால் தான் செய்ய வேண்டும் என்றாலும், புஷ்பாஞ்சலியின்போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வதில் தவறில்லை என்கிறது சாஸ்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------
சுயம்புவை வணங்கலாம்!

கோயிலில் கருவறையில் மூலவரும், அதன் அருகில் உற்சவரும் எழுந்தருளியிருப்பர். திருவிழா காலத்தில் உற்சவர் மட்டும் திருவீதி எழுந்தருள்வது வழக்கம். சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கும் அருள்புரிவதற்காக வீதியுலா நடக்கிறது. அப்போது உற்சவர், மூலவரின் அனைத்து சக்தியையும் தன்னோடு எடுத்து வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சித்தல், வலம் வருதல் போன்ற எந்த வழிபாட்டையும் மேற்கொள்வது கூடாது என்கிறதுசிவயோகி ஸம்வாதம். ஆனால், சுயம்பு மூர்த்தியாக(தானாக தோன்றியது) எழுந்தருளியுள்ள கோயில் களில் மட்டும் மூலவரைத் தரிசிக்கலாம். ஆனால், அர்ச்சனை செய்யவோ, வலம் வரவோ கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
தந்தையின் பெயரை மாற்றிய மகள்!

தட்சன் என்பவனுக்கு மகளாகப் பிறந்ததால், பார்வதிதேவிக்கு தாட்சாயணி என்ற பெயர் உண்டு. அவன் அவளை சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தான். மருமகனுக்கு மதிப்பளிப்பது உலக இயல்பு. அதிலும், தனது மருமகன் இறைவன் என்பதால் அதீத மதிப்பளித்திருக்க வேண்டும். ஆனால், தட்ச@னா, மருமகன் தனக்கு மதிப்பளிக்க வேண்டுமென விரும்பினான். இதனால் அவனுக்கு பார்வதிதேவி சிவேதரன் என்று பெயர் வைத்தாள். சிவனுக்கு இதரன் என்று இதைப் பிரிக்கலாம். சிவ என்றால் மங்களம். மங்களத்துக்கு இதரன் என்றால் மங்கள குணங்களுக்கு எதிரானவன் என்று தந்தைக்கே பெயர் சூட்ட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானாள். தந்தையே தனக்கு எதிராகத் திரும்பியதால் தன் தந்தையின் பெயரால் ஏற்பட்ட தாட்சாயணி என்ற பெயர் தனக்கு தண்டனை தரப்பட்டது போல உணர்ந்தாள் அவள். எனவே, தன் தந்தைக்கு தட்சன் என்ற பெயரை மாற்றி, சிவேதரன் என்று பெயரைச் சூட்டிவிட்டாள். பாகவதம் ஸ்லோகம் ஒன்றில் தாட்சாயணியின் கதையும், சிவேதர என்ற வார்த்தையும் வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
தனியாக இருந்தால் பயமா?

இக்காலத்தில், பெரும்பாலும் தனிக்குடித்தனம் இருப்பவர்களே அதிகம். கணவர் வேலைக்குப் போய்விட்டால், வீட்டில் இருக்கும் மனைவிக்கு பயமாக இருக்கலாம். பெண்கள் வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால், வெளியாட்களால் பிரச்னை ஏற்படலாம். இப்படிப்பட்டவர்கள் நவதுர்க்கைகளின் பெயரைச் சொன்னாலே போதும். இந்த துதிக்கு சக்தி காப்பு என்று பெயர். மார்க்கண்டேய முனிவருக்கு பிரம்மா உபதேசித்த மந்திரம் இது. சைலபுத்ரீ, பிரும்மசாரிணீ, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனீ, காளராத்ரீ, மகா கவுரி, சித்தி தாத்ரீ என்ற நவ சக்திகளே! உங்கள் திருப்பாதங்களில் சரணடைகிறேன், என்பதே அந்த மந்திரத்தின் பொருள். இந்த வாக்கியத்தை உச்சரித்தாலே போதும். பயம் விலகிப்போகும். இந்த மந்திரத்தைச் சொல்பவர்கள் தீயில் சிக்கி னாலும் தப்பித்து விடுவர். பகைவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர். இருளான பகுதிகளுக்குச் செல்லும் போது பயம் இருக்காது. எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். செல்வ வளமும் ஏற்படும் என்கின்றன நூல்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
புரியாவிட்டாலும் நன்மை!

சீதக்களப செந்தாமரைப் பூம் என்று துவங்குகிறது அவ்வையார் அருளிய விநாயகர் அகவல். இதைப் படித்தால் புரியவில்லையே என பலர் ஏங்குவதுண்டு. யோக சாஸ்திரத்தின் ஒரு பகுதி இந்த அகவலில் இருப்பதால், எதற்கு வம்பென விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் போன்ற எளிமையான பாடல்களையே பக்தர்கள் பாடுகிறார்கள். நிஜத்தில் விநாயகர் அகவல் பல நன்மைகளைத் தரக்கூடியது. இதைப் புரிந்து படித்தால் தான் பலன் என்பதில்லை! புரியாமல் படித்தாலும் நன்மை தரும். ஏனெனில், அத்தகைய மகத்துவம் அவ்வையாரின் பாடல்களுக்கு உண்டு. குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் இந்த அகவலைத் தவறாமல் படிக்க வேண்டும். அவ்வையார் பெண் என்பதாலும், குழந்தைக் கவிஞர் என்பதாலும் அவர்களுக்கே இதில் உரிமை அதிகம். இந்த அகவலைச் சொல்வதால் வீட்டுக்குமட்டுமல்ல, நாட்டுக்கும் நன்மை கிடைக்கும். இன்றைய பாதுகாப்பற்ற நிலையில் விநாயகர் அகவல் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
------------------------------------------------------------------------------------------------------------
சிவனுக்கு பிரியமான பூக்கள்!

சிவபெருமானுக்கு என்னென்ன மலர்கள்  பிரியமானவை என்பது பற்றியும், அதை அணிவிப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் அப்பைய தீட்சிதர் என்ற தீவிர சிவபக்தர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் எழுதியுள்ளார். அந்த ஸ்லோகத்தின் பொருளைக் கேளுங்கள்.  பரமேஸ்வரா! உன் மேல் எருக்கையும், த்ரோணம் என்னும் தும்பை மலரையும், அர்ச்சனை செய்தாலே போதும். அது ஒருவனுக்கு மோட்ச சாம்ராஜ்யத்தை என்னும் பேரின்ப வீட்டைத் தந்து விடுகிறது,  என்பதாகும். எருக்கு, தும்பை மலர்கள் பெண்கள் சூடாதவை. எல்லாராலும் ஒதுக்கப்படுபவை, விநாயகருக்கு மட்டுமல்ல, சிவனுக்கும் எருக்கு உகந்ததாகிறது. இனி சிவனுக்கு வில்வமாலையுடன், எருக்கம் மலர்களையும் அர்ச்சனைக்கு எடுத்துச் செல்லலாம். இந்த மலர்களை சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்து அதையே பிரசாதமாகப் பெற்று வந்து, நம் பூஜை அறையில் வைத்துவிட்டால், இறைவனின் தன்மையே நமக்கும் வந்துவிடும். காஞ்சிப்பெரியவர் சொல்லும் தகவல் இது.
------------------------------------------------------------------------------------------------------------
கஞ்சி முகம் என்றால்.. அர்த்தம் கொள்வது எப்படி?

அம்பாள் கோயில்களில் கஞ்சி படைப்பது வழக்கம். குறிப்பாக, ஆடிமாதத்தில்  ஆடிக்கஞ்சி என்றே சொல்வார்கள். ஆனால், கஞ்சி குடிக்காதவள், கம்பஞ்சோறு உண்ணாதவள், வெஞ்சினங்களை (காய்கறிகள் சேர்த்து சமைத்த சாதம்) விரும்பாதவளாக ஒரு அம்பாள் இருக்கிறாள். யார் அவள் என்றால் காஞ்சி காமாட்சியம்மனைக் குறிப்பிடுகிறது ஒரு பாடல். கஞ்சி குடியாளே கம்பஞ்சோறு உண்ணாளே வெஞ்சினங்களொன்றும் விரும்பாளே என்ற பாடல் அது. இதில் கஞ்சி  குடியாளே என்றால் காஞ்சிபுரத்தில் வசிப்பவள் என்று பொருள். இன்னொரு அர்த்தமும் உண்டு. கஞ்சி என்னும் சொல்லுக்கு தாமரை என்றும் ஒரு பொருளுண்டு. கஞ்சி குடியாள் என்றால் தாமரையை தன் முகத்தில் குடிவைத்தவள், அதாவது தாமரை மலர் போன்ற முக அழகுடன் திகழ்பவள் என்றும் ஒரு பொருளுண்டு. அதனால், அழகான பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் கூட இனி கஞ்சி முகத்தவனே, கஞ்சி முகத்தவனே என்றும் வர்ணிக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
கோயில் பூஜையின் போது மணியைவேகமாக ஒலிப்பது ஏன்?

கோயிலில் சுவாமியை தரிசிக்கும் போது ஐம்புலனும் ஒன்றி வணங்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும் வழிபாட்டில் ஈடுபடும்போது வேறுகாட்சிகளை கவனித்தால் மன ஒருமைப்பாடு குலைந்து விடும். மனம் ஒன்றுபடாமல்  வழிபடுவது வீண் செயல். மணியை வேகமாக ஒலிக்கச் செய்யும் போது, அதன் நாதத்தில் மனம் லயித்து விடுவதால், புலன்கள் செயல் இழந்து விடுகின்றன. ஒன்றியிருந்து நினைமின்காள்; உன் தமக்கு ஊனமில்லை என்னும் திருநாவுக்கரசரின் தேவாரமும் இதை வலியுறுத்துகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
சுவாமியை நேருக்கு நேர் நின்று வணங்கக் கூடாது .. ஏன்?

பொதுவாக பெரியவர்களிடமும், சுவாமியிடமும் நேருக்கு நேர் நின்றுவணங்குதல், பேசுதல் கூடாது. நமது பணிவையும், அன்பையும் தெரிவிக்க ஒருபுறம் சற்று விலகியிருந்து வணங்குவதே முறையாகும். தெய்வங்களை நேரே நின்று வணங்காமல், கடைக்கண் அருட்பார்வை பெற ஒதுங்கியிருந்து வழிபடும்படி சாத்திரங்கள் கூறுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
விரத காலத்தில் பயறுவகை, பாகற்காயைத் தவிர்ப்பது ஏன்?

அப்படி ஒன்றும் வழக்கில் இருப்பதாகத்தெரியவில்லையே! உங்கள் குடும்ப வழக்கமாக இருக்கலாம். வெங்காயம், பூண்டு போன்ற சிலவற்றைத் தவிர பயறு வகை, பாகற்காயைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை.
------------------------------------------------------------------------------------------------------------
கோபத்தைப் போக்க எந்த தெய்வத்தை வணங்குவது?

விநாயகர், முருகன், லட்சுமி நாராயணர், உமாமகேஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபட கோபம்அகலும். இது மட்டும் போதாது. ஒரு விஷயத்தில் கோபப்படும் சூழல் ஏற்பட்டால், முதலில்பேச்சைத் தவிர்த்து விட வேண்டும். தனிமையில் நிறைய யோசிக்க வேண்டும். நமக்கு வெற்றியைத் தரும் வழியைத் தேர்ந்தெடுத்து நிதானமாக நிறைவேற்ற வேண்டும். கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. வளைந்து கொடுத்தால் உலகையே வெல்ல  முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------
திருமாலும் சிவராத்திரியும்!

திருமால் பன்றி அவதாரமெடுத்து சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சென்ற இரவே சிவராத்திரி என்பது பல இலயக்கங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அநேகமாக எல்லா சிவன்கோயில்களிலும் அமைந்துள்ள லிங்கோற்பவ திருவுருவங்களில், மேற்சொன்ன வரலாற்றை விளக்கும் திருமாலை முழுப்பன்றி வடிவத்தில் அல்லது பன்றி முகத்துடன் கூடியவராக அமைத்துள்ளனர். இதற்கு முற்றிலும் மாறாக, சிவலிங்கத்தினின்று வெளிப்படும் சிவபெருமானையும், அவரை திருமால் முழு தேவ வடிவில் மண்டியிட்டு வணங்கிப் பூசிக்கும் நிலையிலும் அமைந்த திருவுருவத்தை தஞ்சை பெரிய கோயிலில்  காண்கிறோம். இது ஓர் ஊழிக்காலத்தில் நீண்ட இரவில் திருமால் சிவபூஜை செய்ததையும், சிவபெருமான் அவருக்கு லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அருள்பாலித்ததையும் குறிக்கும் சிற்பம் என்றும் கூறுவர்.
------------------------------------------------------------------------------------------------------------
எமனும் சிவராத்திரியும்!

சிவராத்திரி வேளையில், பெருமானைப் பூசிக்கும் மார்க்கண்டேயனைப் பிடிக்கவந்த எமன் உதைபடுவது. பின்னாளில் அவனுக்கு சிவராத்திரி மகிமை உரைக்கப்படுவது போன்றவை கதைகளில் காணப்படும் பொது அம்சமாகும். சிவராத்திரியின் அடிப்படைக் கருத்து- ஆன்மாவானது தனது வினைகளை நீக்கிக்கொண்டு, எமவாதனையை அகற்றி சிவபெருமானுடன் ஐக்கியமாவதேயாகும். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவதும் இங்கு எண்ணத் தக்கதாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
அபூர்வ மலையார்!

திருவண்ணாமலை கோயிலின் இரண்டாம் பிராகாரத்தின் தென்மேற்கு முனையில் கிழக்கு நோக்கியவாறு ஒரு சிற்கோயில் உள்ளது. இதனை அடிமுடிகாணாத கோயில் என அழைக்கின்றனர். இங்கு அபூர்வமான அண்ணாமலையார் சிலை ஒன்றுள்ளது. இதில் சிவபெருமானும் அம்பிகையும் எழுந்தருளியிருக்க, பின்னணியில் இடபவாகனம் நிற்கிறது. அதன் பின்னணியில் அண்ணாமலையும், அதன் உச்சியில் தீபமும் காட்டப்பட்டுள்ளன. மூலையின் உச்சியைக் காணமுயல்வதுபோல அன்னப்பறவையும், பீடத்தில் பன்றி வடிவமும் காட்டப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
சிவபெருமானின் எட்டுப்பெயர்கள்!

சிவராத்திரி காலத்தில் சிவபெருமானின் எட்டுப்பெயர்களை ஓயாது ஜெபிக்க வேண்டும். அப்பெயர்கள்: ஸ்ரீபவாய நம; ஸ்ரீசர்வாய நம; ஸ்ரீருத்ராய நம; ஸ்ரீபசுபதயே நம; ஸ்ரீஉக்ராய நம; ஸ்ரீமகாதேவாய நம; ஸ்ரீபீமாய நம; ஸ்ரீஈசாநாய நம.
------------------------------------------------------------------------------------------------------------
தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்த ஆதிசங்கரர்!

ஆதிசங்கரர்,  இந்து மதத்தின் குலகுருவான இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் மேற்கொண்டிருந்த போது, ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என்று பிøக்ஷ கேட்டார்.  அந்த பெண் தன்னிடமிருந்த உலர்ந்த நெல்லிக்கனியை தானமாக கொடுத்தார். இந்த தானம் ஆதிசங்கரரின் உள்ளத்தை உருக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்படையில், ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். இதனால் மகிழ்ந்த மகாலட்சுமி, இவர் 19 ஆம் ஸ்லோகம் பாடிய போது, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.

இதன் அடிப்படையில்  கேரளா மாநிலம் காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கனகதாரா யாக மண்டபத்தில் ஏப்ரல் 30 முதல் மே 4ம் தேதி வரை கனகதாரா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் மற்றும் கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகளால் 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகளால், அட்சய திரிதியான மே 2ம் தேதி, காலை 9 மணிக்கு மகாலட்சுமி விக்ரகத்திற்கு கனகாபிஷேகம் நடைபெறுகிறது. கனகதாரா யாகம் முடிந்ததும், அபிஷேகம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நெல்லிக்கனி மற்றும் எந்திரத்தை பக்தர்கள் வாங்கி சென்றால், சிறந்த உடல் வளமும், செல்வவளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

கனகதாரா எந்திரம்  ரூ. 351
தங்க நெல்லிக்கனி  ரூ. 12,001
வெள்ளி நெல்லிக்கனி  ரூ.2001
பிராமண போஜனம்  ரூ.   3,501
லெட்சுமி நாராயண அபிஷேகம்  ரூ. 17,001
பிராமண தட்சிணை  ரூ.1001
அன்னதானம்  ரூ.6001
கனகதாரா அர்ச்சனை  ரூ.101
நெல்லிக்கனி பாரா  ரூ.51
நெல்லிக்கனி சமர்ப்பணம்  ரூ.11

தொடர்புக்கு: காப்பிள்ளி ஸ்ரீகுமார் நம்பூதிரி, மேனேஜிங் டிரஸ்டி, ஸ்ரீகிருஷ்ணன் கோயில், காலடி - 683 574, எர்ணாகுளம் மாவட்டம். போன்: 093888 62321
------------------------------------------------------------------------------------------------------------
மோட்ச சாதனம்!

மோட்சத்திற்கு சாதனமாக இருப்பவை நான்காகும். அவை, சிவார்ச்சனை; உருத்திர பாராயணம்; அஷ்டமி, திங்கட்கிழமை, தேய்பிறைச் சதுர்த்தசி (சிவராத்திரி) ஆகிய மூன்று நாள் உபவாசம்; காசியில் மரணமடைதல் ஆகியவையாகும் இவை நான்கிலும் சிறந்தது சிவராத்திரி விரதமே யாகும். சிவராத்திரி இரவில் சிவபுராணம் கேட்டல், சிவாலய தரிசனம் செய்தல் ஆகியவை மோட்சத்திற்கு எளிய சாதனமாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். ஒரு பெண் மேட்டுமணியில் அவளின் பயோடேட்டாவை பதிவு செய்தால். நிறைய வரன்கள் வந்த வண்ணம் இருந்தது. பெண்ணின் தந்தை ஒரு டூபாகூர் ஜோசியர் எந்த ஜாதகத்தை கொடுத்தாலும் சரியில்லை என்று சொல்வார். ஆனால் பையன் வீட்டில் சரியாக இருக்கிறது என்று சொல்வார்கள். பிறகு என்னடா விஷயம் என்றால் அந்த பெண் மாதம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். இவருக்கு அந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை.  இந்தியில் ஒரு ஜாதகம் வந்து பையன் வீட்டார் ஜாதகம் மிகவும் சரியாக பொருந்தியுள்ளது என்று சொன்னார்கள். ஆனால் பெண்ணின் அப்பா பொருத்தம் இல்லை என்று வழக்கம் போல் சொன்னார். பையன் மிகவும் நல் பையன் வெளி நாட்டில் வேளை. பூரணமாக வேதம் கற்றுள்ளான். சொந்த வீடு உள்ளது. இப்படி இருக்கும் போது தான் விதியை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு ஏற்ப பையனும் பெண்ணும் தொடர்ந்து போனில் பேசி வர இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைத்து பெண் தனது தாய் தந்தையினரிடம் திருமணம் என்று ஒன்று நடந்தால் இவருடன் தான் என்று தீர்மானமாக சொல்லி விட்டால். ஆனால் அந்த பெண்ணின் தந்தை நீ இவனை திருமணம் செய்து கொண்டால் ஒரு வருடத்தில் நீ செத்து விடுவாய் என்று சொன்னார். பெற்ற பெண்ணிடம் எந்த ஒரு அப்பனும் சொல்ல கூடாத வார்த்தையை இவர் சொல்லியிருக்கிறார். உடனே அந்த பெண் பரவாயில்லை நான் செத்தாலும் பரவாயில்லை அவனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றால். இது பெரிய பிரச்சினையாக வெடித்தது. இருதில் அந்த பெண் அப்படி நான் செத்தால் உங்களுக்கு இருபத்தி ஐந்து லட்சம் கிடைக்கும் அதை வைத்து கொண்டு நீங்கள் சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு வந்தால் தனது. அக்காவின் கணவர் அத்திம்பேரிடம் சொல்ல அத்திபேரின் பெரும் முயற்சியில் நிச்சயம் நடைபெற்றது பெண்ணின் பெற்றோர் வராமலேயே. அக்காவும் அத்தபேரும் சேர்த்து கல்யாண வேலைகளை செய்து கொண்டு இருக்க ஒரு நாள் பெண்ணின் தந்தை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அப்போதிருந்து இவர்களுக்கு நிச்சயம் செய்த அத்திப்பேரை இவர்கள் கண்டு கொள்ள வில்லை. இவ்வளவுக்கும் கல்யாண பத்திரிகை முதற்கொண்டு அத்திபேர் தான் அடித்து கொடுத்தார்கள். இருதில் திருமணத்திற்கு அத்திம்பேரை அழைக்க வில்லை. அவருக்கு பத்திரிகையும் கொடுக்க வில்லை. இதில் இன்னும் ஏராளமான விட்டு நடைபெற்றது. டைப் செய்ய மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
விநாயகரை எந்தெந்த மலர், இலைகளால் அர்ச்சனை செய்யலாம்?

அருகம்புல், வன்னி இலை, மரிக்கொழுந்து, அந்தி மந்தாரை, நந்தியாவர்த்தம், செம்பருத்தி, பவளமல்லி, செவ்வரளி, செவ்வந்தி, தாமரை போன்றவை விநாயகருக்கு உகந்தவையே. துளசியால் மட்டும் அர்ச்சிக்கும் வழக்கம் கிடையாது.
------------------------------------------------------------------------------------------------------------
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பது ஏன்?

ஆன்மிகம் மட்டுமில்லாமல் எந்த செயலுக்கும் இது பொருந்தும். எதிரெதிரான இரண்டு விஷயத்தில் ஈடுபட்டால், இரண்டிலும் பலன் கிடைப்பதில்லை. குளிப்பது என்பது உடல் அழுக்கைப் போக்குவது, சேற்றில் வைப்பது என்பது குளிப்பதற்கு மாறானது. செய்வதை திருந்தச் செய் என்பதை இது குறிக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------
நவக்கிரக கோயில்களுக்கு பரிகாரம் செய்வதாக இருந்தால் மட்டுமே செல்ல வேண்டுமா?

நவக்கிரக கோயில்கள் அனைத்திலும் பிரதானமாக கருவறையில் சிவபெருமானே இருக்கிறார். நவக்கிரகங்கள் பரிவார தேவதையாக பிரகாரத்தில் மட்டுமே இருக்கின்றன. தீமை மட்டுமில்லாமல் ஒருவனுக்கு நன்மை செய்வதும் கிரகங்களே. கடவுளின் அடியவர்களான நவக்கிரகங்களை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

பிரம்ம மந்திரம் ஜபித்து பிரும்மம் எனப்படும் பரம்பொருளை மட்டுமே சிந்தித்து வாழ்பவர் களை பிராமணர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவர்களைக் கொல்லுதல், துன்பப்படுத்துதல் போன்றவை பிரம்ம ஹத்தியாகும். ஹத்தி என்றால் அழித்தல். இதே போன்று போரில் ஒருவரைக் கொன்று விட்டால் வீரஹத்தி தோஷம் என்றும், கருவைக் கலைத்தால் ப்ரூணஹத்தி தோஷம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எந்த விதத்திலும் யாரையும் கொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. கொல்லாமை என்னும் அகிம்சையே ஆன்மிக வாழ்வின் அடிப்படைத் தத்துவம்.
------------------------------------------------------------------------------------------------------------
துளசிமாடத்தில் உள்ள இலையைப் பறித்து பூஜை செய்யக் கூடாதா?

ஆம்! இதனை லட்சுமியின் அம்சமாக கருத வேண்டும். மாடத்தில் உள்ள செடியை துளசிமாதா என்பர். இந்த இலையை லட்சுமி தாயாராக கருதி, விளக்கேற்றி துளசி ஸ்தோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். இளம்பெண்கள் வெள்ளியன்று வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.
------------------------------------------------------------------------------------------------------------
அம்மா தந்த அனுமதி!

விவேகானந்தருக்கு துறவு நாட்டம் எழுந்தது. ஆனால், அவரது தாய் புவனேஸ்வரி அனுமதி தர வேண்டுமே! இதற்காக, வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் அம்மாவிடம் சொல்லி வந்தார். அவரோ புன்னகைத்தபடி, நரேன்! (விவேகானந்தரின் இளமைப் பெயர்) சமையல் அறைக்குச் சென்று கத்தியை எடுத்து வா! என்று சொல்லி விடுவார்.விவேகானந்தரும் கத்தியை எடுத்து வந்து கொடுக்க,இப்போ! என்னப்பா அவசரம்! கொஞ்ச காலம் பொறுமையாய் இரு! என்று பதிலளிப்பார். அம்மாவின் பதிலை ஏற்றுக் கொண்டாலும், அவர் ஏன் தாமதிக்கிறார் என்பதற்கான காரணம் மட்டும், விவேகானந்தருக்கு விளங்கவில்லை. ஒருநாள் அம்மாவின் அனுமதியும் கிடைத்தது.அம்மா! இத்தனை நாளும் மறுத்த நீங்கள், இன்று அனுமதி தர காரணம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர். நரேன்! இத்தனை நாளும், நீ கத்தியை கொண்டு வரும் போதெல்லாம் கைப்பிடியை உன் பக்கமும், கூர்மையான பகுதியை என் பக்கமுமாய் நீட்டியபடி தருவாய். அது சுயநலத்தின் வெளிப்பாடு. ஆனால், இன்று கைப்பிடி என் பக்கமும், கூரிய பகுதி உன் பக்கமுமாக இருந்தது. மற்றவரின் நன்மையில் அக்கறை காட்டும் தியாக மனப்பான்மை தான், துறவுக்கான அஸ்திவாரம் என்றார். துறவு பொதுநலத்திற்குரியது. அதில் சுயநலம் துளியும் இருக்கக்கூடாது என்பதை உணர்த்திய அம்மாவின் திருவடிகளை விவேகானந்தர் வணங்கினார்.
------------------------------------------------------------------------------------------------------------
கொடிமரம் இல்லாத கோயிலில் சுவாமி புறப்பாடு நடத்தலாமா?

தாரளமாகச் செய்யலாம். ஏகதின உற்ஸவம் என்ற அடிப்படையில் சாஸ்திரம் இதை அனுமதிக்கிறது. கொடிமரம் இருந்தால், கொடியேற்றி பத்து நாள் திருவிழா நடத்தலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
விரதத்தை உபவாசம் என்பது ஏன்?

விரதம் வேறு உபவாசம் வேறு. விரதம் என்ற சொல்லுக்கு சிறிதளவு உணவு, பழம் சாப்பிட்டு ஏற்படும் கஷ்டத்தை சகித்துக் கொள்வது. வ்ரு என்பது வேர்ச் சொல்லுக்கு கஷ்டம் என்று பொருள். வ்ருதம் என்பதே விரதம் என்றானது. உபவாசம் என்றால் சமீபத்தில் வசிப்பது. அதாவது முழுமையாக உணவைத் தவிர்த்து, கடவுளின் அருகில் இருப்பதாக கருதுவதாகும். விரதத்தை விட உபவாசம் மேலானது. மாதம் ஒருமுறை இருந்தால் போதும். மனவலிமையும், ஆரோக்கியமும் உண்டாகும். விரத நாளில் வெங்காயம், பூண்டு, மாமிசம் தவிர மற்ற எளிய உணவுகளை அளவு குறைத்து சாப்பிடலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
பழைய துணிமணிகளை ஏழைகளுக்கு கொடுப்பது தானமாகுமா?

ஆகாது. புதிதாக துணிமணி வாங்கிக் கொடுப்பதே வஸ்திர தானம்.
------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளை மனசு வேணுமா?

மந்திரங்களில் சிறந்த காயத்ரியை, வேதத்தின்தாயாகப் போற்றுவர்.  அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில்(4.30-6.00) கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து, காயத்ரி மந்திரம் சொல்வது சிறப்பு. புருவநடுவிலோ அல்லது இதயத்திலோ காயத்ரி வீற்றிருப்பதாக எண்ணியபடி, 108 முறை ஜெபிப்பர். இதனால்,நல்லறிவு, மனஉறுதி, முகப்பொலிவு, உடல்நலம் உண்டாகும். மனம் தூய்மை பெற இதை விட சிறந்தவழி வேறில்லை என சிவானந்தர் குறிப்பிடுகிறார். எல்லா பாவங்களையும், அறியாமையையும்போக்குபவரே! வணக்கத்திற்குரியவரே! உலகைப் படைத்த கடவுளே! உமது புகழை நாங்கள்தியானிக்கிறோம். நீங்கள் எங்கள் புத்தியை நெறிப்படுத்த வேண்டும், என்பது இதன் பொருள்.
------------------------------------------------------------------------------------------------------------
பூஜைக்குரிய திசை!

அம்பிகை தவிர்த்த விநாயகர்,முருகன், சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய தெய்வங்களை வணங்கும்போதுசுவாமியை கிழக்கு நோக்கி வைத்து, நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்வதே சிறந்தது. ஆனால், பெண் தெய்வங்களான காளி, மாரி, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களை வழிபடும்போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜை செய்யலாம்.அதாவது அம்மன் கிழக்கு நோக்கி இருக்க, நாம் மேற்கு நோக்கியோ அல்லது அம்மன் வடக்கு நோக்கி இருக்க நாம் தெற்குநோக்கியோ பூஜை செய்யலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
நேர்மை மிக்க பெரியவர்!

பெரியவர் ஒருவர் தன் நண்பர்களுடன், வேலூர் மாவட்டம், காங்கேய நல்லூரில் இருந்து (83 கி.மீ.) நடந்து திருவண்ணாமலைக்கு யாத்திரை சென்றார். அந்த சமயம் வேலூரைச் சுற்றி காலரா பரவிக்கொண்டிருந்தது. திருவண்ணாமலையில் நோய் பரவாமல் இருக்க, நோய் பரவிய ஊர்க்காரர்கள்திருவண்ணாமலைக்குள் நுழையக்கூடாதென, சுகாதார துறை அனுமதி மறுத்தது. காங்கேயநல்லூரில் இருந்துவந்தவர்களோ, தாங்கள் அரக்கோணத்தில் இருந்துவருவதாகச் சொல்லி விட்டு திருவண்ணாமலைக்குச் சென்றனர். ஆனால், பெரியவர் மட்டும்,நான் காங்கேயநல்லூர்க்காரன் என்ற உண்மையைச் சொன்னதால்அனுமதி மறுக்கப்பட்டார். அந்த இடத்திலேயே, அண்ணாமலையானுக்கு அரோகரா என்று சொல்லி வணங்கி விட்டு ஊர் திரும்பினார். நேர்மையான நெஞ்சம் கொண்ட பெரியவர் வேறு யாருமல்ல!வாரியார் சுவாமிகளின் தாத்தா சாமியண்ணா தான். ஆண்டுதோறும் அண்ணாமலை தீபம் தரிசிக்கும் அவர், பொய் சொல்ல விரும்பாமல் ஊர் திரும்பியதுகுறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------------------
தலைகீழாகும் இலை!

வீட்டிலேயே தோட்டம் உள்ளவர்கள், பூஜைக்குரிய பூக்களைப் பறித்து சுத்தமான கூடையில் போட வேண்டும். புடவைத் தலைப்பில் போடக்கூடாது. பூக்களை சுவாமியின் பாதத்தில் போடும் போது, காம்பு கீழேயும் பூவிதழ் மேலாகவும் இருக்குமாறு போடுவதே முறையானது. பூ மட்டுமில்லாமல் இலை, பழம் இவற்றிற்கும் இது பொருந்தும்.புஷ்பம் பத்ரம் பலம் சைவ யதோத்பன்னம் ததார்ப்பயேத்என்கிறது சாஸ்திரம். அதாவது, பூக்கள், இலைகள், கனிகள் அனைத்தையும் மேல்நோக்கி படைக்க வேண்டும் என்பதுஇதன் பொருள். ஒரே ஒரு இலைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. வில்வ இலையால் சிவனை அர்ச்சிக்கும்போது தலைகீழாக கவிழ்ந்து இருக்குமாறு அர்ச்சிப்பது சிறப்பு.
------------------------------------------------------------------------------------------------------------
சுயம்புவை வணங்கலாம்!

கோயிலில் கருவறையில் மூலவரும், அதன் அருகில் உற்சவரும் எழுந்தருளியிருப்பர். திருவிழா காலத்தில் உற்சவர் மட்டும் திருவீதி எழுந்தருள்வது வழக்கம். சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கும் அருள்புரிவதற்காக வீதியுலா நடக்கிறது. அப்போது உற்சவர், மூலவரின் அனைத்து சக்தியையும் தன்னோடு எடுத்து வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சித்தல், வலம் வருதல் போன்ற எந்த வழிபாட்டையும் மேற்கொள்வது கூடாது என்கிறதுசிவயோகி ஸம்வாதம். ஆனால், சுயம்பு மூர்த்தியாக(தானாக தோன்றியது) எழுந்தருளியுள்ள கோயில் களில் மட்டும் மூலவரைத் தரிசிக்கலாம். ஆனால், அர்ச்சனை செய்யவோ, வலம் வரவோ கூடாது.
------------------------------------------------------------------------------------------------------------
பூதூவும் கை!

தினமும் வீட்டில் காலையிலும்,மாலையிலும் விளக்கேற்றி வழிபாடுசெய்யும்போது, இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்லோகம் ஜெபிப்பதும், தேவார, திருவாசக, பிரபந்தப் பாடல்களைப் பாடுவதும் அவசியம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி, சுவாமியின் திருவடியில் தூவ வேண்டும். இதற்கு புஷ்பாஞ்சலி என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால் தான் செய்ய வேண்டும் என்றாலும், புஷ்பாஞ்சலியின்போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வதில் தவறில்லை என்கிறது சாஸ்திரம்.
------------------------------------------------------------------------------------------------------------
அனுமன் பூஜித்த ஆதி ராமர்!

மந்திராலயம் திருத்தலத்தில் ஆதிராமர் விக்ரகம் உள்ளது. இந்த விக்ரகத்தை முதலில் அனுமன் பூஜித்தாராம். பின்னர் பீமன் மற்றும் பலரால் பூஜிக்கப்பட்டு மத்வாச்சாரியாரிடம் வந்தது. அதன்பின் ஸ்ரீராகவேந்திரரால் பூஜிக்கப்பட்டது. அது முதல் இந்த விக்ரகம் மந்திராலயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
2ம் நூற்றாண்டு சிவலிங்கம்!

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?

பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !

சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!

அவர் மறைந்ததும், அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் “உபாசனையில் வாக்கு, சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு, மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை” என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.

கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும், பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு, தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி, வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை………..

“தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா, மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா”

“என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?”

“மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால, பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு”

“அதுக்கு நா என்ன பண்ணறது?”

“மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும்”

“என்ன படிச்சிருக்கே?”

…………சொன்னார்.

“இத்தனை படிச்சும், ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது”

“என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன்”

“என்னை என்ன செய்ய சொல்றே?”

“மனஸ் சாந்தி அடையணும்”

“நீ என்ன பூஜை பண்றே?”

“அம்பாளை படத்துலேயும், விக்ரஹத்துலேயும், யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்”

“ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?”

“ஆமாம்”

“அப்போ……. இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே? நெறைய படிச்சிருக்கே. படம், விக்ரஹம், யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?”

மிகவும் சூடாக பதில் வந்ததும், உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்………..

“ரொம்ப கோவிச்சுண்டுட்டேன.! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனை…ன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம, நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!….ங்கறதாலதாĪ 5;் கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே…… என்ன கொறையானாலும் எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ… யாரா இருந்தாலும் சரி அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?… நம்பிகை தான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே…..க்ஷேமமா இரு!” என்று அபயஹஸ்தம் “கொடுத்தாள்” !

இனி ?… எனக்கென்ன மனக்கவலை? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை.

ஸ்ரீ சிவ பஞ்சாட்சர நட்சத்திர மாலா.


​ஆதி சங்கர பகவத் பாதாள்  அனேக விஷயங்களை நமக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.

கனக தாரா ஸ்தோத்திரம்,
நரசிம்ம கரா வலம்பம்
விவேக சூடாமணி  இதுபோல் நிறைய சொல்லி இருக்கிறார்கள். தனித்தனியாக பாப்போம் அன்பர்களே. முதலில்

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திரங்களுக்கான மந்திரக் கோர்வை ஸ்ரீ சிவ பஞ்சாட்சர நட்சத்திர மாலா.

சகல சௌபாக்கியம் பெற தினமும் அவரவர் நட்சத்திர மந்திரத்தை மனமுருக பிரார்த்திக்கவும்.

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய
-------------------------
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு!
==================================
ஒரு பெண் தனக்குப் பெரிதாக பூஜை பக்தி செய்ய நேரமில்லை. ஏதாவது சுலபமான வழிபாடு உண்டா என்று கேட்ட போது கீழ்க்கண்ட மந்திரத்தை அருளினார். இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தால் விரிவான பூஜை செய்த பலன் முழுவதும் கிடைக்கும் என்றார்.

✌ஹரி நாராயண துரித நிவாரண✌
✌பரமானந்த சதாசிவ சங்கர✌
-------------------------
பன்னிரண்டு ராசி கணபதி மந்திரங்கள்.

மேஷம்
கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம் பாலசூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம்

ரிஷபம்
நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம் சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாதிபம்

மிதுனம்
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம் சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம் பயாபகம் சக்தி கணேசமீடே

கடகம்
பக்வசூத பலபுஷ்பமஞ்சரீ இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ! உத்வஹஞ் பரசுஹஸ்த தே நம: ஸ்ரீ சம்ருத்யுத தேவ பிங்கல

சிம்மம்
நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக:

கன்னி
தந்த கல்ப லதா பாசம் ரத்ந கும்ப அங்குசோஜ்வலம் பந்தூக கமநீயாபம், த்யாயேத் க்ஷிப்ர கணாதிபம்

துலாம்
பாசாங்குச ஸ்வதம்தாம்ர பலவான் ஆகுவாகன: விக்நம் நிஹந் துந ஸர்வம் ரக்த வர்ணோ விநாயக:

விருச்சிகம்
சிந்தூரபலம் நிபானனம் த்ரிநயனம் ஹஸ்தேச பாசாங்குஸௌ: பிப்ராணாம் மதுமத் கபாலம் அதிசம் சாது சிந்து மௌலீம் பஜே:

தனுசு
சங்கேஷூ சாபருகமேஷூ மேஷகுடாரபாச சக்ரம் விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌரம்

மகரம்
ஹரித்ராபம் சதுர்பாஹும் ஹரித்ரா வதனம் ப்ரபும் பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்த மேவ ச பக்தா மய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாசனம்

கும்பம்
லம்போதரம் ஸ்யாமநிபம் கணேசம் கடாக்ஷம் அட்ச ஸ்ரஜ ஊர்த்வகாப்யாம் ஸலட் டுகம் தந்த மரக்யாப்யாம் வாமேதராப்யஞ்ச ததானமீடே

மீனம்
பாசாங்குச ஸ்வதந்தாம்ர பலவா நாஹ வாஹந: விக்னம் நிசந்துரு: சோன ஸ்ருஷ்டி தஷோ விநாயக:
------------------------
பிரம்மஹத்தி தோக்ஷம் என்றால் என்ன ?

ப்ரம்ஹத்தை அறிந்துணர்ந்தவனை கொல்வதால் பிரம்மஹத்தி தோக்ஷம் தொற்றிக்கொள்கின்றது !

பிரம்மன் மனித உயிர்களைப் படைக்கிறார்.

அந்த உயிர்களுக்கு மண்ணுலகில் உள்ள வாழும் காலம் முடிந்த பிறகு இறைவனே எடுத்து கொள்வார். இந்த உண்மைக்கு மாறாக, போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர். அப்படிப் பழிவாங்கும் போது சொத்துக்காகவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும் இரக்கமின்றி ஒரு உயிரைக் கொலை செய்து விடுகின்றனர். ஒரு கொலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமா என்ன? கொலை செய்தவர்களையும் அவர்கள் சந்ததியினரையும் இந்த பாவம் பிடித்துக்கொள்ளும். இந்த பெரும்பாவமே சம்பந்தப்பட்டவர்களை தோஷம் என்று தொத்திக்கொண்டு விடுகிறது. இதுவே ‘ பிரம்மஹத்தி தோஷம் என்பதாகும்.

ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சீதா பிராட்டியாரை சிறையெடுத்த காரணத்துக்காக மட்டுமல்ல; இராவணனின் அட்டூழியத்திலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றவுமே இராவணனை வதம் செய்தார் ராமபிரான். இராவணனை வதம் செய்த காரணத்தால் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தார். எனவே பிரம்மாவால் படைக்கப்பட்ட மனித உயிர்களை கொலை செய்தவர்கள் கொலைக்கு என்ன புனிதமான காரணம் இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷத்தை அடைகிறார்கள். நமது முன்னோர்கள் யாரையும் கொலை செய்திருந்தால் அந்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் குருவுடன் இணைந்தாலோ குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை, கல்வித் தடை, சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை, கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும். இது போன்ற நிலையில் பிரம்மஹத்தி தோஷம் விலகப் பரிகாரங்கள் செய்து வாழ்வை வளமாக்கலாம்.

சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்தனர். பைரவர் – பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது. சப்தகன்னியர் – மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது. வீரசேனன், வரகுண பாண்டியன் – பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது. நாம் வணங்கும் பல இறைவன்கள் அசுரர்களை கொன்றதால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்து பின் அதற்கு பரிகாரம் தேடியதாக பல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பிரம்மஹத்தி திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டி கோயிலில் கல் வடிவில் இருக்கிறது. சூரனைக் கொன்று அதனால் தோஷம் பிடித்த முருகன் இத்தலத்தில் சிவபெருமானை வணங்க பிரம்மஹத்தி அவரை விட்டு நீங்கி கல்லாக மாறி இத்தலத்தில் நிற்கிறார் என்பது ஐதீகம்.

விடைமருதூர் வாழீசா வல்வினைகள்போக்கி வாழ்வளிப்பாயே

வீழ்ந்தயெம் வாழ்வில் வன்துயர்போக்கிநீ விழிவழிகாட்டாயோ

வழிந்தோடிடும் வன்கண்ணீர் வந்துடைத்து வாதுயர்த்திடாயோ!

வாழ்வளி பிருஹத்சுந்தரகுஜாம்பிகையே மஹாலிங்கேஸ்வரா!

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில்: காவிரிக் கரையில் அமைந்துள்ளவற்றில் ஆறு சிவ தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்த கோவில். பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் வரகுண பாண்டியன். இவன் ஒரு முறை அருகில் உள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். வேட்டையாடி முடித்து அரண்மனை திரும்புவதற்கு இரவு நேரமாகி விட்டது. அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கடுமையான இருள் காரணமாக வழியில் படுத்திருந்த அந்தணன் ஒருவன் பாண்டிய மன்னன் அமர்ந்து சென்ற குதிரை மிதித்து இறந்து விட்டான். தன்னையும் அறியாமல் இந்த பிழை செய்திருந்தாலும், அந்தணனை கொன்ற பாவத்தால் வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. மேலும் அந்தணனின் ஆவியும் அரசனை பற்றிக்கொண்டு ஆட்டுவித்தது. வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்தும் அந்தணனின் ஆவியின் பிடியில் இருந்தும் விடுபட மதுரை சோமசுந்தரரை நாடினான். அப்போது சோமசுந்தரர், வரகுண பாண்டியனின் கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு மகாலிங்கேஸ்வரராக உள்ள தன்னை தரிசனம் செய்து வரும்படி உபாயம் கூறினார். ஆனால் எதிரி நாடான சோழ நாட்டில் அமைந்துள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்ற குழப்பம் வரகுண பாண்டியனை தொற்றிக்கொண்டது. இந்த நேரத்தில் சோழ மன்னன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வரும் தகவல் வரகுணபாண்டியனுக்கு கிடைத்தது. வரகுண பாண்டியன், சோழ மன்னனுடன் போர் புரிந்து அவரை போரில் வெற்றி கொண்டு சோழ நாடுவரை அந்த மன்னனை துரத்திச் சென்றான். சோழ நாட்டுக்குள் புகுந்ததும் திருவிடைமருதூர் சென்று அங்குள்ள மகாலிங்கேஸ்வரரை கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தரிசனம் செய்தான்.

கோவிலுக்குள் நுழைந்த வரகுண பாண்டியனை பின் தொடர முடியாமல் பிரம்மஹத்தி தோஷமும், அந்தணனின் ஆவியும் கோவில் உள்ளே நுழைய தைரியமின்றி வாசலிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும் போது மறுபடியும் பிடித்துக் கொள்ளலாம் என்று கிழக்கு வாசலின் வெளியே காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாசல் வழியாக வெளியேறி செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டார். அதன் படி அரசனும் மேற்கு வாசல் வழியாக வெளியேறி பிரம்மஹத்தி தோஷம் நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இதனை நினைவு கூறும் வகையில் இன்றளவும், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து மேற்கிலுள்ள அம்மன் சன்னதி வழியாக வெளியே செல்லும் முறையை கடைபிடித்து வருகின்றனர்.

மகாலிங்கேஸ்வரர் : இந்த கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள இறைவன் தன்னைத்தானே அர்ச்சித்து கொண்டு பூஜை விதிகளை சப்தரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் இது. மார்க்கண்டேயர் விருப்பத்தின் படி இத்தல இறைவன் அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுத்துள்ளார்.

பிருஹத்சுந்தரகுஜாம்பிகை : அம்மன் பிருஹத்சுந்தரகுஜாம்பிகை நன்முலைநாயகி என்ற பெயரில் அருள் புரிந்து வருகிறார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் அருகே திருவலஞ்சுழி விநாயகர் கோவில், சுவாமி மலை முருகர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில், திருசேய்ஞலூர் சண்டேச்சுரர் கோவில், சீர்காழி பைரவர் கோவில், சூரியனார் நவரக்கிரக கோவில் போன்ற பரிவார மூர்த்த தலங்கள் அமையப் பெற்றுள்ளதால் திருவிடை மருதூர் கோவில் மகாலிங்க ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

நாளை முதல் மூன்று நாட்கள் பரிகாரங்கள் பற்றி பார்போம்.
-------------------------
பிரம்ம முகூர்த்த நேரம் என்றால் என்ன?

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன!!!!! சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால் பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும். காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான் பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம் உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான தொரு கடமையாகும்.

இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது. மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது. அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள் எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது. பொழுது புலராத முன்பு பூமியில் சப்தங்கள் குறைவாக இருக்கும். நிசப்தம் எங்கும் பரந்து இருக்கும் இவ்வேளையே தியானம் செய்ய மிகவும் அருமையான நேரம். அதிகம் சலனமில்லாது இருக்கும் நம் மனமும் எளிதில் வசப்படும். ஆனால் பகலில் சப்தங்களிடையே மனதை நிலை நிறுத்துவது இயலாத காரியம். விடியற்காலை நேரம் கடவுளை நினைத்து மனமொன்றி இருக்க ஏற்றது. இந்த வேளையில் படித்தால் மனதில் நன்கு பதியும். அதிக முயற்சி இல்லாமல் நினைவு வைத்துக் கொள்ளலாம்!

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்றால் முந்திய இரவு ஆகாரம் மிதமாக இருக்க வேண்டும். சரியான வேளையில் சாப்பிட வேண்டும். அலாரம் மணி அடித்து எழுந்த பிறகு மேலும் சுழலும் தூக்கத்தோடு இருக்கக் கூடாது. அதிகாலையில் எழும் மனம் உடையவர்களுக்கு சோம்பல் கிட்டே நெருங்காது. நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருப்பர். காலையில் பல் தேய்த்த பின் ஒரு தம்ளர் தண்ணீர் அருந்துவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். ஆயுளை விருத்தி செய்யும். கிழத்தன்மையை நீக்கும். கடவுள் பெயரை நினைத்துக் கொண்டே காரியங்களை தொடர்ந்தால் அந்தக் காரியம் பலிதமடைவது நிச்சயம்.

*காலையில் எழுந்ததும் இன்றைய தினம் எல்லாம் நல்லபடியாக அமையவேண்டும் என்று மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.

* அமைந்ததாக எண்ண வேண்டும். நாம் தியானம் செய்ய இந்தப் பயிற்சியே முதல் படியாக உதவும்.
காலையில் கடமைகள் ஒவ்வொன்றாக ஆற்றிவரும் போதே, கடவுளை மனதில் நினைத்தப்படி செய்வதால் அச்செயல்கள் சிறப்பாக நடக்கும்.

*இந்த சிந்தனையால் நமது பல சங்கடங்களும் தீரத்துவங்கும். நமது கவலைகளின் கூர்மையான முட்கள் கட்டாயம் அகற்றப்படும்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் கோபம், வெறுப்பு, எரிச்சல், எதுவுமே நம்மை அண்ட விடக்கூடாது. ஏனெனில் அது அதிகாலைப் பயனைக் கெடுத்து விடக்கூடும். எனவே மனதை லேசாக வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதாக மனதிற்குள் உணர வேண்டும். சுத்தமான காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால், காலைக்குளிர் மென்மையாக நமது உடலைத் துவட்டிவிட்டு, சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். நிம்மதியின் அறிகுறியான புன்னகை நமக்கு பல நன்மைகள் தரும். அதனால் பிரம்ம முகூர்த்த வேளையில் நம் செயல்களைத் துவக்கினால், வாழ்க்கையில் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்தான்…..
-------------------------