வியாழன், 24 ஏப்ரல், 2014

ழுகையை ஆப் பண்ணுங்க!

சந்தியா என்றால் சேர்க்கை அதாவது சந்திக்கும் நேரம் என்று பொருள். பகலும், இரவும் சந்திக்கும் மாலையிலும், இரவும், பகலும் சந்திக்கும் காலையிலும் வரும் இரண்டு நாழிகையை (48 நிமிடம்) சந்தியாகாலம் என்பர். சூரிய உதயம், மறைவுக்கு முன்வரும் 36 நிமிடமும், சூரிய உதயம், மறைவுக்குப் பின்வரும் 12நிமிடமும் இதில் அடங்கும். இந்த சமயத்தில் வாசல் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆண்கள் சந்தியாவந்தனம், பூஜையில் ஈடுபட வேண்டும். லட்சுமி வீட்டுக்கு வரும் இந்த நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஜெபிப்பது சிறப்பு. இந்த சமயத்தில் சாப்பிடுவதோ, தூங்குவதோ, வீண் பேச்சு பேசுவதோ கூடாது என்கிறது சாஸ்திரம். குறிப்பாக டிவியில் வரும் அழுகைத் தொடர்களைப் பார்க்காமல் ஆப் செய்து விட வேண்டும். இன்று முதலாவது சந்தியா நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துங்களேன்!
உனக்கு என்ன லாபம்!

பிரச்னோத்ர ரத்ன மாலிகா என்னும் நூலில் ஆதிசங்கரர்,சம்சாரம் என்னும் பிறவிச்சக்கரத்தில் சுழன்று கிடப்பதால் உனக்கு என்ன லாபம்? என்று கேட்கிறார். இந்த கேள்வியை எப்போதும், உனக்குள்ளேயே கேட்டுக் கொண்டே இரு. அதுவே பிறவிப் பயன், என்று அவரே பதிலும் அளிக்கிறார். அதாவது,நாம் பூமியில் பிறந்த நோக்கம் என்ன? நமக்கு ஏன் ஆசை, கோபம், பாவம் இவையெல்லாம் வருகிறது. எப்போதும் ஆனந்தமாக இருக்க முடியாதா? என்றெல்லாம் அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினால் கோப தாபம் மனதில் எழாது. மனம் பக்குவப்படும். புளித்துக் கிடந்த மாங்காய், கனிந்து பழமாவது போல், மோட்சம்கிடைத்து விடும்.
குணம் தருள்வாள் பணம் தருவாள்!

எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப் படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் பலச்ருதி என்னும் ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்ய லஹரி ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா என்னும் ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்கு உண்டாகும் பலன் பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையே உண்டாகும். அதனால், பராசக்தியான அம்பிகை, தன்னை வழிபடுவோருக்கு முதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வ வளத்தை அருள்கிறாள்.
அரைகுறை வீட்டில் கிரகப்பிரவேசம் கூடாது

குடியிருக்கும் வீட்டை க்ருஹ லட்சுமி என்று தெய்வத்திற்கு ஒப்பிடுவர். நல்லநாள் பார்த்து, வாஸ்துபூஜை நடத்தி, பூமி பூஜையோடு கட்டிடப்பணி தொடங்க வேண்டும். முழுவதும்கட்டிய பிறகு, நல்லநாளில் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும். புதுவீட்டில் எல்லா பணிகளும் முடிந்த பிறகு, குடிபுகுவதே உத்தமம் என்று சாஸ்திரம் சொல்கிறது. குறிப்பாக, வீட்டின் நிலை, பிரதான கதவு, மேல்கூரை அமைக்காமலும், வாஸ்துபலியிடாமலும், உறவினருக்கு உணவிடாமலும் கிரகப்பிரவேசம் செய்வது கூடாது. தற்காலத்தில் நவீன வேலைப்பாடுகள் அமைந்த புதுவீட்டில் ஹோமப்புகை பட்டால் பளபளப்பு குறைந்து விடும் என்ற எண்ணத்தில், அரைகுறையாக வேலை முடிந்திருக்கும் போதே ஹோமம் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வீடுகளில் புகுந்தால் சோதனைகள் வர வாய்ப்புண்டு. எனவே, கிரகப்பிரவேச விஷயத்தில் கவனமாய் இருங்கள்!
குணம் தருள்வாள் பணம் தருவாள்!

எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப் படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் பலச்ருதி என்னும் ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்ய லஹரி ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா என்னும் ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்கு உண்டாகும் பலன் பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையே உண்டாகும். அதனால், பராசக்தியான அம்பிகை, தன்னை வழிபடுவோருக்கு முதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வ வளத்தை அருள்கிறாள்.
சந்தேகம் தான் தீயை வைக்கும்!

எந்தப் பொருளைப் பார்த்தாலும், மெய்ப்பொருளான கடவுளையே பார்க்கப் பழகுங்கள். இதனால், நான் என்னும் சிறிய எண்ணம் அற்றுப் போய் விடும்.அன்பும் தெய்வமும் ஒன்றே. தெய்வமாகிய இறைநிலையை உணர்ந்தால், மனம், அன்பு நிலையில் மலரத் தொடங்கும். உலகில் நிகழும் ஒவ்வொன்றும் கடவுளின் செயலே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இயற்கை, நீதி, தர்மம் இவற்றுக்கு முரண்படாமல் வாழ முடியும்.கடமையை உணர்ந்துசெயலாற்றினால், சமுதாயத்தில் எல்லா மக்களின் உரிமையும், நலமும் காக்கப்படும்.கடமையில் சிறந்தவன் கடவுள் நாட்டமுடையவனாக இருப்பான். கடவுளை உணர்ந்தவன்கடமையில் ஈடுபாட்டுடன் இருப்பான்.உள்ளத்தில் கருணை,உடையில் ஒழுக்கம், நடையில் கண்ணியம் இவையேநல்லோரின் அடையாளங்கள்.ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். வாழ்வில் உயர்வு அடைவீர்கள்.கடவுளே எல்லாமுமாக இருக்கிறார். நமக்கும்கடவுளுக்கும் ஒரு சங்கிலிப்பிணைப்பு இருக்கிறது.

வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வில் துன்பமே அதிகமாகும். இன்பம்பெற வேண்டுமானால், உணவு, உறக்கம், உழைப்பு, எண்ணம் என ஒவ்வொன்றையும் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இனிய மொழி பேசுபவர்கள், உலகையே வசப்படுத்துவதோடு, வெற்றிகரமான வாழ்வு நடத்தும் ஆற்றல் பெற்றிருப்பர்.பிறக்கும் போது யாரும் எதுவும் கொண்டு வந்ததில்லை. போகும் போதும் கொண்டு போவதும் இல்லை. இந்தசமுதாயமே நமக்கு வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறது.அறிவாற்றல், உடல் ஆற்றல் இரண்டாலும் முடிந்த செயல்களை, சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டியது மனிதனின் கடமை.வாழ்க வளமுடன் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்தும் போது, பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப் படுகிறது.பிறருக்கு நன்மையைச் செய்வதும், பயன் பெற்றவர்கள் நிறைவோடு வாழ்த்துவதும் தான் உண்மையான புகழாகும்.உண்மையில் மனிதனுக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்றால், அது அவன் உள்ளத்தில்எழுகின்ற ஒழுங்கற்ற எண்ணங் களும் சந்தேகமும்தான். சந்தேகம் வாழ்வில் தீயை வைக்கும்.எண்ணத்தில் உறுதியும், ஒழுக்கமும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டால், எண்ணிய அனைத்தையும் எண்ணிய படியே பெற்று மகிழலாம்.

நம்பிக்கை வாழ்வில் தீபமேற்றும். மனதை அடக்க நினைத்தால் அலையும். அதையே அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் நம்மனதில்தான் இருக்கிறது. தன்னை தானே சீர்படுத்திக் கொண்டு விட்டால், இந்த மண்ணிலுள்ள எல்லா இன்பமும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.வாழ்வில் வெற்றி பெற விரும்பினால், எதிர் வரும் பிரச்னையை நேருக்கு நேர் துணிவுடன் மோதும் அணுகுமுறை வேண்டும்.ஆசையை அடியோடு ஒழித்து விடுவது இயலாத காரியம். ஆசையை சீர்படுத்திக் கொண்டால் வாழ்வில் துன்பம் குறைந்து விடும்.எந்தச் சூழ்நிலையிலும்,ஒருவரை கோபம் அணுகாவிட்டால், அவரது மனம்பக்குவம் அடைந்து விட்டதாக கொள்ளலாம்.
பக்கத்திலே நான் இருக்கேன்!

கவுரவர் சபையில் திரவுபதி நிறுத்தப்பட்டாள்.துரியோதனன், தன் தம்பி துச்சாதனனை அழைத்து,இவளது ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்து என்று உத்தரவிட்டான். துச்சாதனனும் அவ்வாறே செய்ய முற்பட்டான்.கணவன்மாரோ, பீஷ்மர், துரோணர் போன்றமகானுபவர்களோ உதவி செய்ய முன்வராத நிலையில், அபலையாய் நின்று கதறினாள் பாஞ்சாலி. வேறு யாரும்கதியில்லை என்ற நிலையில், கிருஷ்ண பரமாத்மாவை அழைத்துக் கதறினாள்.கண்ணா! மதுசூதனா!திரிவிக்கிரமா! பத்மநாபா! கோவிந்தா! புண்டரீகாக்ஷõ, கிருஷ்ணா, கேசவா, சங்கர்ஷணா, வாசுதேவா,புரு÷ஷாத்தமா, அச்சுதா, வாமனா, தாமோதரா, ஸ்ரீதரா... என்றெல்லாம் அழைத்தாள்.அடுத்து, துவாரகா வாசா என்று கூப்பிட்டாள். கண்ணன் வந்தான். ஆடையை வளரச் செய்தான். அவளது மானம் காப்பாற்றப்பட்டது. பின்னொரு நாளில், இதுபற்றி திரவுபதி கண்ணனிடம் கேட்டாள். அண்ணா! நான் அன்று அப்படி கதறினேனே! நீ ஏன் வருவதற்கு தாமதித்தாய்? என்றாள். கண்ணன் சிரித்தான். திரவுபதி! எனது எல்லாநாமங்களையும்சொல்லிஅழைத்த நீ, துவாரகாவாசா என்றும்சொன்னாய்அல்லவா! நான்துவாரகையில்இருந்து வரவேண்டாமா! அதனால்தான் தாமதம் ஆகிவிட்டது. அதற்குப் பதிலாக இருதய வாசா என்று அழைத்திருந்தால், உன் இதயத்திலிருந்து உடனே வெளிப் பட்டிருப்பேன், என்றார். பார்த்தீர்களா! இறைவனை நம் நெஞ்சில் குடியமர்த்த வேண்டும். அப்படி அமர்த்தி விட்டால், எந்தக் கஷ்டம் வந்தாலும், அவன் உடனே வருவான்.
முழு மனதுடன் கொடுங்கள்!

பாரசீக மன்னர் ஒருவர் ஆண்டுதோறும் தன் நாட்டு வீரர்களுக்கு போட்டி ஒன்றை நடத்துவார். ஆனால், கஞ்சப்பிரபுவான அவருக்கு பரிசு கொடுக்க மனம் வராது. ஒருமுறை, நவரத்தினங்கள் பதித்த மோதிரம் ஒன்றை ஒரு கயிற்றில் கோர்த்து, அரண்மனை மேலுள்ள மினாரில் தொங்கவிட்டார். அந்த மோதிரம் யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்தார்.மோதிரத்தை எடுக்க வேண்டும் என்பதே போட்டி! அதை எடுக்க பல வீரர்கள் வந்தனர். அதன்மீது அம்பை எய்தனர். ஊஹும்... யாருக்கும் மோதிரம் கிடைக்கவில்லை. அரசருக்கு சந்தோஷம். இன்னும் ஒரே ஒருநாள் தான் பாக்கி! அதற்குள் யாருக்குமோதிரம் கிடைத்து விடப்போகிறது! என்ற நினைப்பில் இருந்தார். அரண்மனையின் எதிரே ஒரு சிறுவன் விளையாட்டு வில் அம்பை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விட்ட அம்பு நேராக மோதிரத்தை அறுத்துத் தள்ளியது. பிறகென்ன! சிறுவனுக்கே மோதிரத்தைபரிசாகக் கொடுக்க வேண்டியதாயிற்று! ஒன்றைக் கொடுக்க நினைப்பவர்கள், நிறைந்த மனதுடன்பிறருக்குக் கொடுக்க வேண்டும். கொடுப்பது போல் நடித்து தாங்களே வைத்துக் கொள்ள நினைத்தால், அந்தப் பொருள் ஏதோ ஒரு வழியில் போய்விடும்.
சிவ பெருமானின் தத்புருச முகத்தில் ஜெபம் செய்ய உகந்த மந்திரங்களும் பலாபலன்களும்!

1.ஒம் கிலியும் யநமசிவ என்று ஜெபம் செய்ய அரசர்கள் முதல்
உலக ஜீவராசிகள் அனைத்து; வசியமாகும்.

2.அங் சிவயநம என்று ஜெபம் செய்து வர புத்திர பாக்கியம் உண்டாகும்.

3.ஹரி ஓம் நமசிவய என்று ஜெபம் செய்து வர தேகத்தில் நோய் அணுகாது.

4.அம் கிலி சிவாயநம என்று ஜெபம் செய்து வர யோக சித்தி உண்டாகும்.

5.லங் சிவாயநம என்று ஜெபம் செய்து வர ஆயுள் விருத்தி உண்டாகும்.

6.இம் ஏ சிவாயநம என்று ஜெபம் செய்து வர பேய் பூதங்கள் ஓடும்.

7.ஓம் கிலியும் நமசிவய என்று ஜெபம் செய்து வர அரசர்கள் மனுக்கள்
ஆகியோர்கள் ஸ்தம்பனமாகும்.
ஸ்ரீ பாலாம்பிகே ஸமேத வைத்தியநாத ஸ்வாமிநே நம:

1. ஸ்ரீ ராம ஸெளமித்ரி, ஜடாயுவேத
ஷடாந நாதித்ய, குஜார்ச்சி தாய
ஸ்ரீ நீலகண்டாய, தாயமயாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய

2. கங்கா ப்ரவாஹேந்து, ஜடாதராய
த்ரிலோச நாய ஸ்மரகால ஹந்த்ரே,
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய:

3. பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிதே, துஷ்ட ஹராய நித்யம்,
ப்ரத்க்ஷலீலாய, மனுஷ்ய லோகே
ஸ்ரீ வைத்ய நாதாய நம: சிவாய.

4. ப்ரபூதவரதாதி, ஸமஸ்த ரோக
ப்ரணாசகர்த்ரே, முநிவந்திதாய,
ப்ரபாகரேந்த்வக்நி, விலோசனாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

5. வாக். ச்ரோத்ர, நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ:
வாக் ச்ரோத்ர, நேத்ராங்க்ரி முகப்ரதாய
குஷ்டாதி, ஸர்வோன்னத ரோக ஹந்த்ரே,
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

6. வேதாந்த வேத்யாய ஜகன்மயாய
யோகீச்வரத்யேய பதாம்பு ஜாய,
த்ரிமூர்த்தி ரூபாய ஸஹஸ்ர நாம்நே
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

7. ஸ்வதீர்த்த, ம்ருத், பஸ்மப்ருதங்க பாஜாம்
பிசாச துக்கார்த்தி பயாபஹாய,
ஆத்ம ஸ்வரூபாய சரீர பாஜாம்
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

8. ஸ்ரீ நீலகண்டாய, வ்ருஷத்வஜாய,
ஸ்ரக், கந்த, பஸ்மாத்யபி சோபிதாய,
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய,
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

9. ஸ்வாமின், ஸர்வ ஜகந்நாத்,
ஸர்வரோக சிகித்ஸக
க்ஷúத்ரரோஜ பயார்த்தான்.
நஸ்த்ராஹி மஹாப்ரபோ.

10. அசிகித்ஸா சிகித்ஸாய
சாத்யந்த ரஹிதாயச,
ஸர்வலோகைக வந்த்யாய
வைத்ய நாதாய தே நம:

11. அப்ரமேயாய மஹதே
ஸுப்ரஸன்ன முகாய ச,
அபீஷ்ட தாயிநே நித்யம்
வைத்ய நாதாய தே நம:

12. ம்ருத்யஞ் ஜாயாய சர்வாய
ம்ருடாநீ வாமபாகி நே,
வேதவேத்யாய, ருத்ராய
வைத்யநாதாய தே நம:

13. ஸ்ரீ ராமபத்ர வந்த்யாய
ஜகதாம் ஹிதகாரிணே
ஸோமார்த்த தாரிணே துப்யம்,
வைத்யநாதாய தே நம:

14. நீலகண்டாய ஸெளமித்ரி
பூஜிதாய ம்ருடாய ச
சந்த்ர வஹ்ந்யர்க்க நேத்ராய
வைத்யநாதாய தே நம:

15. சிசிவாஹந வந்த்யாய
ஸ்ருஷ்டி, ஸநித்யந்தகாரிணே
மணிமந்த்ரௌஷ தேசாய,
வைத்யநாதாய தே நம:

16. க்ருத்ர ராஜாபி வந்ந்யாய
திவ்ய கங்காதராய ச,
ஜகந்மயாய ஸர்வாய
வைத்யநாதாய தே நம:

17. குஜ, வேத, விதீந்த்ராத்யை
பூஜிதாய, சிதாத்மநே,
ஆதித்ய, சந்த்ர வந்த்யாய.
வைத்யநாதாய தே நம:

18. வேதவேத்ய, க்ருபாதார
ஜகந்மூர்த்தே சுபப்ரத,
அநாதி வைத்ய, ஸர்வஜ்ஞ,
வைத்யநாதா நமோஸ்து தே.

19. கங்காதர, மஹாதேவ
சந்த்ர வஹ்ந்யர்க்க, லோசன
பிநாகபாணே, விச்வேச,
வைத்யநாத நமோஸ்து தே.

20. வ்ருஷவாஹந, தேவேச,
அசிகித்சா சிகித்ஸக
கருணாகர கௌரீச
வைத்யநாத நமோஸ்து தே.

21. விதி விஷ்ணு முகைர் தேவை:
அர்ச்யமான பதாம் புஜ.
அப்ரமேய ஹரேசாந
வைத்யநாத நமோஸ்து தே.

22. ராம லக்ஷ்மண ஸூர்யேந்து
ஜடாயு ச்ருதி பூஜித
மத நாந்தக ஸர்வேச,
வைத்ய நாத நமோஸ்து தே.

23. ப்ரபஞ்ச பிஷகீசாந
நீகண்ட மஹாச்வர
விச்வநாத மஹா தேவ
வைத்யநாத நமோஸ்து தே.

24. உமாபதே லோகநாத
மணி மந்த்ரௌஷ தேச்வர,
தீ நபந்தோ, தயாசிந்தோ
வைத்யநாத நமோஸ்து தே.

25. த்ரிகுணா தீத சித்ரூப
தபாத்ரய விமோசந,
விரூபாக்ஷ, ஜகந்நதா
வைத்யநாத நமோஸ்து தே.

26. பூதப்ரேத பிசாசாதே;
உச்சாடந விசக்ஷண
குஷ்டாதி ஸர்வ ரோகாணாம்
ஸ்ம்ஹர்த்ரே தே நமோ நம:

27. பாதயந்த பங்கு குப்ஜா தேர்
திவ்யரூப ப்ரதாயிநே,
அநேக மூக ஜந்தூநாம்
திவ்யவாக் தாயிநே நம:
கணேச நாமாவளிகள்

ஜெய கணேச ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய பாஹிமாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷமாம்

ஜெயஸரஸ்வதி ஜெயஸரஸ்வதி ஜெயஸரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீஸரஸ்வதி ஸ்ரீஸரஸ்வதி ரக்ஷமாம்

மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீதேவி ஸ்ரீதேவி ரக்ஷமாம்

ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷ்மி ஸ்ரீலெக்ஷ்மி ஸ்ரீலெக்ஷ்மி ரக்ஷமாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷமாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீசிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷமாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீஸ சபரிகிரீஸ சபரிகிரீஸ ரக்ஷமாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷமாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷமாம்

கௌரி நந்தானா கஜவதனா கணேச வரத மாம்பாஹி
அம்பிகைபாலா அன்பர்கள் சீலா தும்புருநாரதர் ஸேவித லோலா

பாரதமெழுதிய பரமசரித்ரா ஆரமுதருளிய ஐங்கர சித்ரா
லம்போதர கங்கா தரபுத்ரா அம்பாமுகபங் கேருகமித்ரா

அரஹர வரஹர வாதியனே அரனருள் விநாயக ஜோதியனே
கஜமுகத்தரசே கணபதியே கற்பகத்தருவே குணநிதியே

பிரணவப் பொருளே பெம்மானே பேசருமறை புகழ்எம்மானே
இபமாமுகனே இகமாவரதா சுபமாகவும் சுமுக அருள்வாய்

ஸ்ரீ ஜயசீல விநாயகனே தேவர் தொழும் தெய்வநாயகனே!