படலம் 70: ஸிம்மாசன பிரதிஷ்டா விதி...
70 வது படலத்தில் ஸிம்மாசனம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் தேவர்களுக்கும் அரசர்களுக்குமான ஸிம்மாசன விதியும் மற்ற மகான்களின் ஸிம்மாசன, விதியும் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு தேவர்கள் சிவன் முதலானவர்கள் என்பது பிரசித்தமானதே. அரசர்களில் சக்ரவர்த்தி, அதிராஜன், நரேந்திரன் என்று விசேஷமாக எண்ணத்தகுந்தது ஆகும். நான்கு சமுத்திரம் வரையிலான பூமியையார் பரிபாலனம் செய்கிறானோ, அவன் சக்ரவர்த்தி என கூறப்படுகிறான். யார் ஏழு ராஜ்யத்தை ஆள்கிறானோ அவன் அதிராஜன் எனப்படுகிறான். யார் மூன்று ராஜ்யத்தை சாசனம் செய்கிறானோ அவன் நரேந்திரன் எனப்படுகிறான். கால்படை தலைவர்களும் மற்ற அரசர்களாக விளங்குகிறார்கள் இவர்களின் ஆசனங்கள் பல விதமாகும் என கூறப்படுகின்றன. பிறகு ஸிம்மாசனங்களில் பலவித அளவுகள் உயரத்திலும், அகலத்திலும் அளவுகள் கூறப்பட்டு தேவர்களுக்கும் அரசர்களுக்கும், ஸிம்ம பீடம், சம சதுரமாகவும் வட்டமாகவோ, செய்யலாம் என கூறப்படுகின்றது. ஸிம்மாசனத்தில் பித்திகல்பனம் என்கிற சாய்மான சுவர் கூறப்படுகிறது. பிறகு உபபீடத்தில் பாதங்களின் நடுவிலோ பாதங்கள் அமைக்கவும் அங்கு பாதத்தில் பாதங்களின் நடுவில் அல்லது வேறு இடத்தில் ஸிம்ம ரூபங்களை செய்யவும். பெரிய மீன், முதலை, இலைகள் போன்ற பலவித சித்ரங்களால் அழகுபடுத்தவும் என கூறப்படுகிறது. பிறகு உபபீடத்தின் அளவு கூறப்படுகிறது. உபபீடம் ஸ்தாவரம் ஜங்கமம், என்றும் சலாசலம், என்று இருவிதமாக உதாரணம் செய்யப்பட்டுள்ளது. அந்த உபபீடமும் கருங்கல், மண், விருக்ஷம், உலோகம், சந்தனம், இவைகளாலோ பிறகு சுண்ணாம்பு பூச்சினாலோ செய்யவும் அதில் சைல பீடம் மனிதர்களுக்கு விரும்பதக்கதல்ல, தேவர்களின் விஷயத்தில் எல்லா திரவ்யமும் ஏற்றுக்கொள்ள தக்கதாகும். சந்தனம், விருக்ஷம், இவைகளால் செய்யப்பட்ட உபபீடம் தங்கம், ரத்னம், இவைகளால் அலங்கரிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு அரசர்களுக்கு ஸிம்மாசனம் சிரேஷ்டமாகும். அதன் லக்ஷணம் கூறப்படுகிறது என கூறி ஸிம்மாசனத்தின் உச்சியில் வைக்கப்பட வேண்டிய தாமரை முதலான பலவித உருவ விசேஷங்களை விதிப்படி கூறி பத்திரகம் சவும்யம் என்ற ஸிம்மாசனங்களின் இரண்டுவித ஸ்வரூபத்தை விளக்குகிறார். பிறகு இரண்டு விதமான சவுபத்திரம் வாஹம் என்கிற ஸிம்மாசனத்தின் ஸ்ரூப லக்ஷணம் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இந்த ஐந்துவித ஆசனங்களின் பின்பக்கத்தில் விஜி என்ற பெயர் உள்ள அங்க விசேஷம் செய்யப்படவேண்டும் எனக் கூறி விஜி லக்ஷணம் கூறப்படுகிறது. பிற ஸிம்மாசனத்தில் தோரணம் அமைக்கும் முறையும் நிரூபிக்கப்படுகின்றன. அங்கு தோரனத்தின் பின்பக்கத்தில் தங்க மயமான கற்பகவிருக்ஷம் அமைக்கப்படவேண்டுமென கூறப்படுகிறது. உபபீடவிஷயத்தில், பஞ்சாங்கம், அஷ்டாங்கம் 12 அங்கம் 14 அங்கம் என உபபீடங்களை செய்யும் முறை கூறப்படுகிறது.
பிறகு ஆசனங்களின் ஆயாதி என்கிற அளவு முறைகளின் விதி நிரூபிக்கப்படுகின்றன பிறகு ஆசனத்திற்காக தயார் செய்யவேண்டிய மரங்கள் கூறப்படுகின்றன. பிறகு அரசர்களின் ஸிம்மாசன விஷயத்தில் ஸம்ஸ்காரமுறை நிரூபிக்கப்படுகிறது. அதில் யஜமானனுக்கு அனுகூலமான முன்பு கூறப்பட்ட நன்மைபயக்கும் காலமே ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என கூறப்படுகிறது. சில்பியை திருப்தி செய்வித்து புண்யாகபிரோக்ஷணத்திற்கு பிறகு கிருத மந்திரத்தினால் பஞ்சகவ்ய பிரோக்ஷணம் எட்டு மிருத் ஜலத்தினாலும், தர்ப ஜலத்தினாலும் சுத்தி செய்வித்து சுத்தோ தகத்தினால் ஸ்நபனம் செய்வது பிறகு பஞ்சபிரும்ம மந்திரத்தை கூறிக்கொண்டு சந்தனாபிஷேகம் செய்விப்பது ஆகியவை கூறப்படுகின்றன. பிறகு ஸ்தண்டிலத்திற்கு மேல் ஸிம்மாசனத்தை வைத்து வஸ்திரம், தர்பம், இவைகளை அதன் மேல் போர்த்தவும். ஸிம்மாசன மந்திரத்தினால் சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்கவும் என கூறி பூஜைக்காக ஸிம்மாஸந மந்திரம் கூறப்படுகிறது. பிறகு சிம்மாசனத்திற்கு முன்பாக ஸதண்டிலம் அமைத்து அங்கு சமித்து முதலான திரவ்யங்களால் ஹோமம் செய்யவும் ஹோம முறை கூறப்படுகிறது. பிறகு பூர்ணாஹுதிசெய்து சாந்தி கும்ப தீர்த்தத்தால் ஸிம்மாசனத்தை பிரோக்ஷித்து மறுபடியும் சந்தன புஷ்பங்களால் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு நல்ல முகூர்த்தலக்னத்தில் ஸ்நானம் செய்து வெண்பட்டாடை உடுத்தி கிரீடம் எல்லா ஆபரணங்களையும் தரித்தவனாக சம்ஸாரத்துடன் கூடியவரான ராஜாவை ஸிம்மாசனத்தில் அமர்த்தவும் என ஸம்ஸ்காரமுறை கூறப்படுகிறது. பிறகு தேவனுக்கு ஸிம்மாசன ஸம்ஸ்கார விதியில் விசேஷம் உண்டு என கூறி அந்த விஷயத்தில் கும்பஸ்தாபன விதி, ஹோம விதி, கும்பதீர்த்த அபிஷேகவிதி விசேஷார்ச்சனை பூர்வமாக ஸ்வாமிக்கு ஸிம்மாசனம் ஸமர்ப்பண முறை ஆசார்யனுக்கு வஸ்திர சொர்ணாங் குலீயங்களால் ஆகிய தட்சிணை கொடுப்பது, என்ற விஷயங்கள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு மற்ற மஹான்களின் ஆசன முறையும் நிரூபிக்கப்படுகின்றன. அதில் ஆசன அளவு ஆசனம் அமைக்க உபயோக திரவ்ய குறிப்பு, ஆசனம் செய்யும் முறை ஆகிய விஷயங்களும் நிரூபிக்கப்படுகின்றன. இங்கு ஆசனத்திற்கு பாதம் அமைக்கும் முறை பலமுறைகளாக வர்ணிக்கப்படுகின்றன. பலகாசனம், கூர்மா சனத்திற்கு, யோனி அமைக்கும் முறை விசேஷமாக கூறப்பட்டுள்ளன. சிம்மாசனத்திற்கு கூறப்பட்ட முறைப்படியே ஆயாதி என்ற கணக்கு முறையும் செய்யவும் என அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறாக 70வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. பிராம்மணோத்தமர்களே! தேவர்கள், அரசர்கள், மனிதர்கள், பெரியோர்களினுடையதுமான ஸிம்மாஸன விதியை கேளுங்கள்.
2. சிவன் முதலானோர் தேவர்கள் ஆவார். அரசர்கள் பலராவர். அதில் சக்ரவர்த்தி முதலிலும் அதிராஜன் இரண்டாவதாக கூறப்படுகிறது.
3. நரேந்திரன் மூன்றாமவர். அவர்களின் லக்ஷணம் கூறப்படுகிறது. நான்கு சமுத்ரம் வரை பரவியுள்ள பூமியை பரிபாலிப்பவன்.
4. சக்ரவர்த்தியானவான், ஏழுராஜ்யத்தை காப்பாற்றுபவன் அதிராஜன், மூன்று ராஜ்யத்தை காப்பாற்றுபவன்.
5. நரேந்திரனாவான். யானை படை தலைவன் முதலானோர் பல ராஜாக்களாக கூறப்படுகிறது. அவர்களின் ஆஸனங்கள் பலவிதமாகும்.
6. வாசற்படி உயரத்தின் மூன்றில் ஒருபாகம் உத்தமமாகும். அதில் அரைபாகம் அதிகமாகும். வாசற்படியின் அகலத்தை எட்டு பங்காகச் செய்து ஒன்பது வகையான உயரங்களாக கூறப்படுகின்றது.
7. வாசற்படியின் ஆரம்ப பாகம் எட்டு பாகம் அல்லது ஒன்பது பாகமோ அதற்கு குறைவாகவோ அரசனுக்கு சமமாக கை, துடை, தொப்பூழ் வரையிலுமோ உள்ளது.
8. பிரதேசமானம் என அரசர்களுக்கு கூறப்படுகிறது. பதினைந்து அங்குலம் முதல் இரண்டிரண்டு அங்குலமாக கூறப்படுகிறது.
9. ஐம்பத்தைந்து அங்குலம் வரை உள்ள அம்சங்கள் வரையிலாக உயரங்கள் கூறப்பட்டுள்ளன. உயரத்தின் சமமாகவோ முக்கால் பங்குக்கு மேற்பட்டதாகவோ
10. அகலத்தை இரண்டு பங்காக்கினால் நான்கு பாகமாகி புதிய அளவாகிறது. ஹீநர்களுக்கு குறைந்த அளவாயும், உயர்ந்தவர்களுக்கு எல்லாமும் கூறப்பட்டுள்ளது.
11. சிம்ம பீடம் நான்கோணமாகவோ செவ்வகமாகவோ இருக்க வேண்டும். நாற்கோணத்திற்கு சமமான விருத்தமாகவும் (வட்டம்) சக்ரவர்த்திகளுக்கு செய்ய வேண்டும்.
12. எட்டிலொரு பாகம் ஆரம்பித்து, அதில் இரண்டு பாகம் அதிகரித்து ஸிம்மாஸனத்தின் நீளம் அங்குல அளவுகளால் செய்ய வேண்டும்.
13. இரண்டங்குலம் முதல் இரண்டிரண்டங்குல அதிகரிப்பால் ஆறங்குலம் வரை செய்யவும் ஆயாம கணக்கிலும் இவ்வாறேயாம்.
14. தேவர்களுக்கு பாதத்திற்கு மேற்பட்டும் சக்ரவர்த்திகளுக்கு கால்கள் நடுவிலும் மற்றவர்களுக்கு கால்கள் முடிவிலும் வரையாக ஆயாமாதி அளவு கூறப்பட்டுள்ளது.
15. யாவர்க்கும் எல்லா அளவும் பொருத்தமானது என்று கூறி பாத அளவு கூறப்பட்டுள்ளது. ஒன்றரை அங்குலம் முதல் அரை அங்குல அதிகரிப்பாக
16. ஐந்தங்குலம் வரை பாத விஸ்தாரமாகும். அதன் சாய்வு சுவர் பாதத்தின் நான்கில் ஒருபங்கு வெளிக்கொணர்ந்து நல்ல பலமாகவும் அழகாகவும் செய்யலாம்.
17. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு பாக விஸ்தார அளவில் ஆஸன பித்தியாகும். நீளத்தில் ஒன்பதிற்கும் அதிகமாக நீளமுடைய பித்தியின் அளவு முன்பு கூறப்பட்ட பிரிவுகளாக கூறப்படுகிறது.
18. பாதங்களின் நடுவில் உபபீடத்தில் பாதங்களை அமைக்க வேண்டும். பாதத்திற்கும், பாதநடுவிலும் சிங்க உருவங்களையும் வரையவும்.
19. முதலை, சுறாமீன் இலை வடிவான பல சித்ரங்களால் அலங்கரிக்கவேண்டும், சிம்மாஸன மூன்று பாகத்தினாலோ நான்கு பாகத்தினாலோ கீழ்பாகத்தில்
20. ஒன்று, மூன்று, இரண்டு, நான்கு மாத்ராங்குலங்களால் விஸ்தாரத்திற்காக உபபீடமாக அறிய வேண்டும். அதன் வடிவம் கூறப்படுகிறது.
21. உபபீடம் ஸ்தாவரம், ஜங்கமம் என இரு வகைப்படும். மண், கல், மரங்களாலும், தந்தங்களாலும் உலோகங்களாலும் சுண்ணாம்புக் கலவை பூச்சுகளாலும் செய்யலாம்.
22. மனிதர்களுக்கு கருங்கல்லாலான உபபீடம் கூடாது. தேவர்களுக்கு எல்லா திரவ்யமும் யோக்யமாகும். தந்தம், மரங்கள், தங்கம், ரத்னம் இவைகளினால் அலங்கரிக்கப்பட்ட
23. ராஜ சிம்மாஸனம் உயர்ந்து. அதன் உருவ அமைப்பு கூறப்படுகிறது. ஸிம்மாஸன உயரத்தில் இருபத்தியேழு பாகத்தில் ÷க்ஷபணம், பங்கஜம், களம்
24. வேத்ரம், களம், பத்மம், குமுதம், பத்ம பட்டிகை, வேத்ரம், கர்ணம், வேத்ரம், கம்பபத்ரம், கபோதம்
25. வேத்ரம், கர்ணம், நித்ரா, மசூரா, அதாரபட்டிகா இவைகளை ஏழு ஒன்றை அரைபாகமோ ஐந்து, நான்கு அதன் பாதியோ
26. அரைபங்கு, அதன்பாதி, அரையின் கால் பாகங்களாலும் அரை, கால், அரைக்கால் பாகங்களாக அமைக்கவேண்டும். அரைபாகத்துடன் பத்தொன்பது அம்சம் வரை செய்வது பத்ரகம் என்ற ஸிம்மாசனமாகும்.
27. அதன் உயரத்தில் முப்பதம்சத்தில் நான்கின் பாதி, இரண்டின் பாதி, ஒன்றரை, அரை, இரண்டின் பாதி, ஒன்றரை எட்டின் ஒருபாகம், ஒன்றரை பாகங்களால்
28. அரை, கால், இரண்டின்பாதி, ஒன்றரை, ஐந்தின் பாதி இவைகளின் தொடர்ந்ததாக (பத்மகம்) பத்மம், கம்பம், கர்ணம், கம்பம், பத்மம் வாஜனம்
29. பத்மம், கம்பம், கர்ணம், கண்டம், நித்ரா, பட்டிகா, பாதம், மேலுள்ளபட்டி நித்ரா பத்மம், கபோதகம்
30. நடுவில் நன்கு சேர்ந்ததாக மேல் நோக்கி வெளிப்பட்டு தெளிவாக அங்கங்களோடு கூடியது சவும்யம் என்று கூறப்பட்டுள்ளது. இருபத்தொரு அம்சங்களோடு கூடியது.
31. மேற்கூறியவற்றையே முன்பக்கமும் பின் பக்கமும் உடையதும், பத்ரங்களோடு கூடியது சவுபத்ரம் எனப்படும். இரண்டு பக்கமும் பத்ரத்துடனுள்ளது ஸ்ரீவஹமாகும்.
32. ஐந்து வகை ஆஸனங்களுக்கும் விஜி என்ற அமைப்பு பின்பாகம் கூறப்படுகிறது. ஆஸமனமானது பிரிக்கப்பட்ட உயரத்தையுடையதாயும் மஸூரா என்பது ஆதாரபீடத்தில் சேர்ந்ததாகும்.
33. விருப்பப்பட்ட உயரம் விஸ்தாரமாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸன உயரபாக நடுவில் மகரதோரணம்
34. தோரண மத்தியில் பத்மாபிஷேக ஸம்பந்தமாக இருக்க வேண்டும். நக்ரபட்டிகை தோரணத்தில் கால்பாக அளவாகவும்
35. கைவைத்துக் கொள்ளுமிடம் யாளித்தலையுடையதாகவும் இருக்க வேண்டும். சிறிய தூணை வைத்து, கபோதங்களை பலவிதமாக அலங்கரிக்க வேண்டும்.
36. முதலை, சுறா மீன்கள் போன்ற பலவித சித்ரங்களாலும் அலங்கரிக்கவும். இரும்பிலானான நாராசம், கீலங்கள், பட்டிகைகளையும் சேர்க்க வேண்டும்.
37. தங்க ஜரிகைகளாலான பட்டுகளாலும், ரத்னங்களாலும் அலங்கரிக்கவும். தோரணத்தின் பின்புறம் தங்கத்தாலான கற்பக வ்ருஷத்தை அமைக்க வேண்டும்.
38. பலவிதமான ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட பலவித படங்களை உடையதான பாம்புகளையும், விஜி என்ற அமைப்பை விட்டு கற்பக வ்ருஷத்தையாவது செய்ய வேண்டும்.
39. தோரணமில்லாத விஜியையோ ஆஸனத்தை மட்டுமோ, செய்ய வேண்டும். ஐந்து அங்கத்துடன் கூடிய உபபீடம் பத்மத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.
40. பத்மகம் முதலியவை நான்கு வகைப்படும். பன்னிரண்டங்கம் உடையது உபாஸநம். உபபீடத்தின் பத்திலொரு பங்கில் நான்கு பாகங்களால் கண்டம் கூறப்படுகிறது.
41. க்ஷúத்ர கம்பங்களை அதன் மேலும் கீழுமான பாகத்தில் அமைக்கவும். இரண்டம்ச அளவால் இரண்டு மஹாகம்பம் செயற்பாலது. இது ஐந்து அங்கத்துடன் கூடிய உபபீடத்தை அமைக்க வேண்டியது.
42. பதினான்கம்சம் உடைய உயரத்தில் இரண்டு, ஒன்றரை, அரை, நான்கு, அரை, அரை இரண்டு, ஒன்று, அரை, அரை என்ற அளவுகளால் வரிசையாக.
43. பாதுகம், பங்கஜம், வேத்ரம், கம்பம், கண்டம், வேத்ரகம் என்றும் வேத்ரம், அப்ஜம், வாஜநம், பத்மம், கம்பம், வேத்ரம் என்று வரிசைப்படி
44. பன்னிரெண்டு பிரிவுகளை உடையதாக அழகான உபபீடம் அமைக்கவும். இருபத்தியெட்டம்சமுடைய உயரத்தில் ஜகதீ, பங்கஜம், களம்
45. வேத்ரம், களம், பத்மம், குமுதம், பத்மம், கம்பம், வேத்ரம், களம், வேத்ரம், கம்பம், நித்ரா, கபோதம்.
46. மேல்பாகத்திய மத்தியில் நன்கு சேர்க்கப்பட்ட பிரதிவாஜநமும், அதற்கு மேல் மஸூரகாதாரபட்டிகா ஆகும். கீழிருந்து மேலாக
47. ஒன்றரை அம்சங்கள் ஒன்று, அரை, அரை, அரை, அரை, ஒன்று, அரை, ஏழு பாகங்களால் அரை, அரை, ஒன்றரை,
48. அரை, அரை, ஒன்றரை ஒன்பதரை மஸூரகா தாரபட்டிகா அளவுகளால் ஸ்ரீகாந்தம் என்று பொருள்படும். இதுவே களத்திற்கு கீழ் உள்ளவைகள் இரண்டு, அரை, ஒன்றரை பாகங்களால்
49. கர்ணம், வாஜநம், நித்ரை, என்ற அளவுகள் வேதியுகைடன், பத்மம், கம்பகம், சேர்த்தால் வ்ருத்த காந்தம் என்ற பீடமாகும். முப்பத்திரண்டு பாகங்களால் நிர்மாணிக்கப்பட்டதாயும் இருக்க வேண்டும்.
50. ஒன்பதும், பத்தும் ஆன 14 அம்சத்தில் அரை, ஒன்றரை, இரண்டு, அரை, மூன்று, பாதி அரை, இரண்டு, பாதி பாதி, பாதி ஒரு பாகங்களால்
51. பாதுகம், பங்கஜம், நேத்ரம், பங்கஜம், குமுதம், பங்கஜம், வாஜநம், பத்மவேத்ரம், பங்கஜம், வாஜநம், தாமரை
52. வேத்ரம், வாஜநம், இவைகள் அடியிலிருந்து பதினான்கங்கத்துடன் கூடியதாகும். ஸ்ரீகாந்தம் முதலிய நான்கிற்கும் எட்டு அங்குமுடைய உபபீடமாகும்.
53. இரண்டு, ஒன்று, அரை, நான்கு, அரை அரை இரண்டு அரை பாகங்களால் பாதுகம், பங்கஜம், வேத்ரம், பத்மவேத்ரம், வாஜநம்
54. பட்டிகா, வாஜநம், பதினொன்றாக பிரிக்கப்பட்ட உயரத்தில் எல்லா இடத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அஷ்டாங்கமுடைய உபபீடம் ஆகும்.
55. முன்பே பிரசாத லக்ஷணத்தில் பல விபரங்கள் கூறியுள்ளேன். எல்லா அதிஷ்டானங்கள் உபபீடத்துடன் கூடியவைகள்
56. தேசிகர்களால் நியாயமாக ஏற்றுக் கொள்ளப்படுபவையாகும். விசேஷமாக தேவர்களுக்கு தொங்குகிற பாதமாக இருப்பது நல்லது.
57. ஸிம்மாஸநாங்கத்தை தொட்டுக் கொண்டதான பாத பீடம் கூறப்பட்டுள்ளது. சிம்மாஸன அகல, உயரத்தின் நான்கிலொரு பாக அளவில்
58. கண்டத்தின் மேலும் கீழுமானவைகளால் கம்பம், பத்மம், கம்பங்களால் அலங்கரிக்கவும். நன்கு அழகான ஏழுபாகங்களால் வட்ட அளவில்
59. யவைமுதல் மாத்ர அளவுவரை அதிகத்தையும், குறைகளையும் அறியவும். எல்லா ஆஸனமும் பத்ராஸனமாகவோ செய்ய வேண்டும்.
60. கால், அரை, முக்கால் பாகமாகவோ எல்லா இடத்திலும் வெளிப்படையாகவும் அவயவத்தை வெளிப்படுத்தவும் கவர்ச்சியோடும் பலத்தோடும் நுழைவை செய்ய வேண்டும்.
61. எல்லா ஆஸனத்திலும் முதலில் செய்யும் முறை கூறப்படுகிறது. பரிதி, விபுலம், தைர்க்யம், துங்கம், ஸகலம்
62. பந்தவேதம், சதுர்பந்தக்ரஹம், முதலிய வரிசை முறைகளால் எண்ணி அறியவும். ஏழு, ஐந்து, ஒன்பது, எட்டு, ஏழு ஸங்க்யையுடைய பாகங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
63. ஆயம், வ்யயம், நக்ஷத்ரம், ஸோநி, வாரம் இவைகளை பார்த்து செய்யவும். காய்கறிகளை கொடுக்கும் மரம், மரமல்லிகை, பலாமரம், சிம்சுபம், சந்தனம்
64. திந்துகம், மருதமரம், காரகில், வேப்பமரம், பூவரசு, எலும்பிச்சை, மாமரம், வெண்பால்மரம், தேக்குமரம்.
65. பில்வம் ஆகிய ஜாதி விருக்ஷங்களில் பாலுள்ள வ்ருக்ஷங்கள் நான்கு வகைப்படும். நாவல், இலுப்பை, நரிமூக்கை, இவைகள்
66. த்ரவ்ய ஸங்க்ரஹண விதிப்படி ஆஸனதிற்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிம்மாஸனம் செய்து அதன் ஸம்ஸ்காரத்தை செய்ய வேண்டும்.
67. காலமும் முன்பே கூறப்பட்டுள்ளது. மற்றும் யஜமானனின் நக்ஷத்ரத்தை அனுசரித்து காலத்தை பார்த்து சில்பியை திருப்தி செய்து அவரை அனுப்பி விட்டு புண்யாஹ ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.
68. ஹ்ருதய மந்திரத்தினால் பஞ்ச கவ்ய ப்ரோக்ஷணம் செய்து தர்பை நுனிதீர்த்தத்தாலும் எண்வகை மண்கலந்த நீரால் சுத்தம் செய்து
69. பஞ்சப்ரம்ம மந்திரத்தால் சுத்த ஜலத்தை அபிஷேகித்து சந்தனம், கலந்த வாசனையுள்ள நீரால் மறுபடியும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
70. ஸ்தண்டிலத்தில் மேல் வைத்து தர்பை, வஸ்திரங்களால் போர்த்தி சந்தனம், புஷ்பம், தூபம் இவற்றை அதன் மந்திரத்தினால் அர்ச்சிக்கவும்.
71. சிம்மாஸநாய ஹும் பண்ணம: என்று தன் பீஜ மந்திரத்தோடு கூறி
72. மந்திரத்தை கூறி (தேசிகன்) ஆசார்யன், உத்தமன் பூஜிக்க வேண்டும். சிம்மாஸ னத்தின் முன்பு ஸ்தண்டிலத்தில் ஸமித்து முதலியவைகளால் ஹோமம் செய்ய வேண்டும்.
73. சமித்து, நெய், அன்னம், எள், பொறி இவைகளை சிவமந்திரத்தை கூறி நூற்றியெட்டு ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும்.
74. பிறகு பூர்ணாஹூதி செய்து, சாந்தி கும்ப தீர்த்தத்தால் பிரோக்ஷித்து சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் சிம்மாஸனத்தை மறுபடியும் பூஜிக்க வேண்டும்.
75. ஸ்னானம் செய்து வெண்மையான வஸ்திரம் தரித்து எல்லாவித ஆபரணங்களுடன் கிரீடம் அணிந்து, குடை, சாமரங்களுடன் கூடிய
76. ராஜாவை நல்ல சுபமுஹூர்த்த லக்னத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். சிம்மாஸனம், இதுவரை ராஜசிம்மாஸன ஆரோபணம் கூறப்பட்டது. இனி தேவர்களுக்கு கூறப்படுகிறது.
77. தத்வதத்வேஸ்வர நியாஸம், மூர்த்தி மூர்த்தீஸ்வர ந்யாஸத்துடனும், ஆஸன, மூர்த்தி பூஜை, தத்வதத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர ஹோமமும் செய்ய வேண்டும்.
78. ஆதார சக்தி முதற் கொண்டு, சிவாஸனம் வரை பூஜித்து இந்திரனுக்கும் ஈசானத்திற்கும் மத்தியில் சிவகும்பத்தையும், எட்டு திக்கில் அஷ்டவித்யேச கும்பங்களை ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும்.
79. தங்கம், வஸ்திரங்களோடு கூடிய பிரதான கும்பத்தில் சிவனை பூஜித்து, அவற்றின் வெளியில் அஷ்டகும்பங்களில் இந்திராதி லோகபாலர்களை பூஜிக்க வேண்டும்.
80. தேசிகோத்தமன் இவ்வாறு பூஜித்து முன்பு பூஜித்த மந்திரங்களால் ஹோமம் செய்து முடிவில் பூர்ணாஹூதியை செய்ய வேண்டும்.
81. ஸிம்மாஸனத்தில் ஆஸன மூர்த்தி மூலத்துடன் அர்ச்சிக்கவும். கும்பத்தில் ஆவாஹித்த சிவனை மூலமந்திரம் உச்சரித்து சிம்மாஸனத்தில் ஆவாஹித்து
82. எட்டு வித்யேச்வரர்களை எட்டு லோகபாலர்களை இவற்றை நியஸித்து அபிஷேகம் செய்யவும். அந்தந்த மந்திரங்களால் ஆசார்யன் சந்தனம், புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.
83. விசேஷார்ச்சனையுடன் பரமேஸ்வரனை அபிஷேகிக்கவும். நல்ல முஹூர்த்தத்தில் நல்ல லக்னத்தில், பரமேச்வரனை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
84. வஸ்திரம், தங்க மோதிரங்களால் ஆசார்யரை பூஜித்து முடிந்தவரை தட்சிணையை குருமூர்த்தியோ ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும்.
85. மற்ற ஆஸனங்களின் அளவு கூறப்படுகிறது. தங்கம், வெள்ளி, தாம்பரம், பித்தளை, வெண்கலம்
86. கலப்பு உலோகம், கற்சிலை, மரம், மண் (மண்சாந்து) ரத்னங்களாலும், க்ஷüத்ர சித்திக்காக தந்தங்களாலும், தகரம், ஈயம் இரும்புகளாலும் செய்யலாம்.
87. பீடத்திற்கான திரவ்யம் கூறப்பட்டுள்ளது. அந்தந்த ஆஸன பலத்தால் இரண்டு, மூன்றங்குல முதல் ஒவ்வொரு அங்குல அதிகரிப்பால்
88. ஐந்தங்குலம் வரை விஸ்தார அளவாகும். ஒன்றேகால், ஒன்றரை, எட்டின் ஒரு பாகமான ஒன்றரையரக்கால் முக்கால் பாகமதிகமாவும்
89. இரண்டங்குலம், ஒவு அங்குலம் முதல் நூறங்குலம் வரை ஆயாமத்தின் அளவு கூறப்பட்டுள்ளது. பாதத்தின் அளவு கூறப்பட்டுள்ளது.
90. ஒரு மாத்திரை முதல் ஐந்து மாத்திரை அதிகரித்து ஐம்பது முழம் வரையிலாக பாதங்களின் நீளம் கூறப்படுகிறது.
91. அரையங்குலம் முதல் காலங்குல அதிகரிப்பால் அகலத்தில் (ஏழங்குலம் வரையும்) பதினான்கங்குலம் வரை காலின் நீளம் கூறப்பட்டுள்ளது.
92. பாதங்கள் நேராகவும், ஸிம்மபாதம், யாளிபாதம், வ்ருஷபபாதம், பூதபாதம், கழுதைக்கால் போலும் சக்ரத்தோடு கூடியதாகவோ, ஸ்வயாவமாக உள்ளதாகவோ
93. பறவை பாதம் போல், மனுஷ்ய பாதம் போல், மீதியை நல்லவைகளின் உருவம் போலாவது செய்யவும். ஸிம்மாஸனம் பத்ம பீடத்தில் இருப்பதாக செய்ய வேண்டும்.
94. ஸிம்ம சிரஸ் பாதத்துடன் கூடியதாகவாவது சிம்மாஸனம் செய்ய வேண்டும். உள்ளிட்ட முகமோ, வெளிக்கொணர்ந்த முகத்தையுடையதாகவோ பாதத்தின் அலங்காரத்துடன் கூடியதாகவோ
95. பலவித பட்டை அமைப்பு, குச்சியமைப்புகளாலும், பறவைகள் போன்றும் தாமரைப்போன்று பத்ரங்களால், பத்ம தளங்களாலும் ரத்னங்களாலும் அலங்கரிக்கப்பட வேண்டும்.
96. அதன் முகப்பில் வளைவான அமைப்பை உடைய பலகையை சேர்க்கவும். இடைவெளியுள்ள மேலும் கீழும் உயரமான அந்த பாதங்களுடன் சேர்க்க வேண்டும்.
97. பாத்திற்கு மேல் உசிதமான பலகையை சேர்க்கவும். யவை யளவு முதல் அரை யவை அளவு அதிகரிப்பால் பதினோரு மாத்ரையளவு வரை
98. (ஸ்வர்ணம்) தங்கம் முதலிய திரவ்யங்களால் ஆன பலகாஸனம் கூறப்பட்டுள்ளது. பறவைகள் போன்ற அமைப்பு தாமரை இதழ்களாலும், மாலை முதலிய அமைப்புகளாலும் சேர்க்கப்பட்டவைகளாலும்
99. ரத்னங்களால் ஆன தாமரைகளாலும், பலவித தண்ட அமைப்புகளாலும், பலகையை அலங்கரிக்கவும். அல்லது இயற்கையழகான பலகையாவது செய்யவும்.
100. அதற்கு மேல் உருண்டை போன்ற அமைப்புள்ள பாதங்களையும், பல கலம்பங்களை யுடையதாகவும், பல சித்ரங்களை (நாடக) உடையதாகவும், இரும்பிலானான தாழ்பாளையுடையதாகவும்
101. பல பட்டங்களாலும், புஷ்பங்களாலும், நல்லத்ருடமாக சேர்க்கவும். சதுரஸ்ரம், வட்டவடிவமாகவோ அந்தந்த நீள அளவிலாவது
102. எண்கோணம், பதினாறுகோணம், பதினைந்து கோணம் முதல் ஆஸனம் செய்ய வேண்டும். அதன் பாதமும் அவ்வாறே இருத்தல் வேண்டும்.
103. மூன்று, நான்கு, ஐந்து பாதத்தையுடையதாக விருப்பப்படியாக பாதங்களை செய்ய வேண்டும். நான்கு கால், தலை, புச்சம் (வாலுடன்) கூடிய ஆமைபோல்
104. கூர்மாஸனம் செய்ய வேண்டும். மற்ற ஆஸனங்களை இவ்வாறே அறியவும் (பூஜிக்கவும்) தங்கம், புலித்தோல் முதலிய தோல்களால் முழுவதுமாக விரிக்க வேண்டும்.
105. ஆயாதி லக்ஷணங்கள் ஸிம்மாஸன விதிப்படி செய்யவும். பலகையின் பலத்தைக் கொண்டு அளவை செய்து மேற்படி கிரியையகளை செய்ய வேண்டும்.
106. மேற்கூறிய அமைப்புகளுடன் வெளியிலும் தங்கங்களின் வெளியிலும் அளவைச்செய்யவும். இந்த ஆஸனங்களில் ஸம்ஸ்காரம் முன்பே கூறப்பட்டுள்ளது.
107. ஆயாதிகளின் லக்ஷணம் முன்பு செல்லப்பட்டபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸிம்மாஸனம் அமைக்கும் முறையாகிற எழுபதாவது படலமாகும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வெள்ளி, 11 அக்டோபர், 2024
படலம் 70: ஸிம்மாசன பிரதிஷ்டா விதி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக