படலம் 67: வித்யா பீட பிரதிஷ்டை...
67 வது படலத்தில் வித்யா பீட பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் வித்யையானது. சமஸ்கிருத பாஷையுடன் கூடியது, வேறு பாஷையுடன் கூடியது என இருவிதமாகும் என கூறப்படுகிறது. பிறகு வித்யா பீடத்திற்கு ஸ்தாபிக்க உரியதான ஸ்தாபன நிரூபணம், புஸ்தக அளவு முறை புஸ்தக நிர்மாணம் செய்ய காட்டு புரசு இலை, முதலிய திரவ்ய நிரூபணம், புஸ்தகத்தில் அக்ஷரம் எழுதும் முறை ஆகிய விஷயங்கள் கூறப்படுகின்றன. பிறகு புஸ்தகம் எழுதும் முறையின் முன்பும் படிக்கும் முன்பும் செய்ய வேண்டிய பூஜாமுறை கூறப்படுகிறது. கால வசத்தாலும் அறியாமையாலும் அழிந்ததும் சிற்றறிவு உடைய ஆசார்யர்களால், சோதிக்கப்பட்டதும், வீணான பதத்தை உடையதும் கூறியதை திரும்பவும் கூறப்பட்டுள்ளதும் முன்பின் என்ற முறையற்றதும், தன் சித்தாந்தத்திற்கு விரோதமான அர்த்தங்களை கூறியதுமான தோஷங்களை உடைய சிவஞானத்தை சொல்கிற சித்தாந்த சாஸ்திரத்திற்கு சம்ஸ்காரம் செய்யும் முறையும். அவ்வாறு பரமேஸ்வரனுடைய வித்யைகளை சிவபக்த சிஷ்யர்களுக்கு நன்கு கற்பிக்கும் முறையும், சிஷ்யனை அனுசரித்து தேச பாஷைகளின் உபாயத்தால் சுத்தமான சமஸ்கிருத சப்தங்களாலும், பிராகிருத சப்தங்களாலும், லவுகீக சப்தங்களாலும், சுலபமான வழியால் பரமேஸ்வரனுடைய வித்யையை கல்பிக்கவும் என்பதான முறையுடன் கூடியதான கல்வியை போதிக்கும் முறை. பலவித விசேஷமாக கூறப்படுகிறது. எவ்வாறு சம்பூர்ணமான, மஹாத்மாவான சிவனுக்கு முடிவு இல்லையோ அவ்வாறே சைவவித்யையை சொல்லி கொடுப்பதற்கு முடிவில்லாத பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. சிவஞானத்தால் பிரகாசிக்கிறவன் பரமேஸ்வரனை போல் பூஜிக்க தக்கவன் என கூறப்படுகிறது. பிறகு சிவஞான ஸ்வரூப முடைய சிவசாஸ்திரத்தை புஸ்தகத்தில் நன்கு யார் எழுதுகிறானோ, அவனுக்கு விசேஷமான பலன்கள் நிரூபிக்கப்படுகின்றன.
சிவஞான ஸ்ரூபம் உடைய சிவ சாஸ்திரத்தை படிப்பது கேட்பது சிந்தனை செய்வது இவைகளின் பலன்கள் கூறப்படுகின்றன. போஜனம், வஸ்திர, தானம் சிவஞானத்தை உடையவர்களுக்கும் சிவஞானத்தை காப்பாற்றுபவர்க்கும் வித்யாதானத்திற்கு சொல்லப்பட்ட பலன் கூறப்படுகிறது. பிறகு எந்த ராஜ்யத்தில் சிவஞானரூபமான சிவசாஸ்திர வியாக்யானம் நன்கு நடக்கிறதோ அந்த ராஜ்யத்தில் ராஜா. அரசர்களுக்கு அரசராக ஆகிறான் எந்த ராஜ்யத்தில் ராஜ குருஸ்தானத்தில் அமைச்சர் அவையிலும், புரோகித ஸ்தானத்திலும் மற்ற எல்லா ராஜ கார்யத்திலும் சுத்த சைவம் பிரயோகிக்கப்படுகின்றனவோ அந்த ராஜ்ய அதிபர் ஸ்ரேஷ்டமான ராஜாவாகிறான். பிறகு யார் சைவ சித்தாந்தற்கு விரோதமின்றி வேதம் வேதாந்தங்கள் பாசுபதம், காரூடம், முதலிய தந்திரங்களின் அர்த்த நிச்சயத்தை செய்கிறானோ அவன் அனேக தர்மத்தை அறிந்தவன் மற்றவன் இல்லை என்கிறார் யார் சுத்த சைவ விரோதமாக சாஸ்திரத்தின் அர்த்தத்தை நிச்சயம் செய்கிறானோ அவன் தர்மத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். இவ்வாறு பலவிதமாக சைவ வித்யையின் பெருமை கூறப்படுகிறது. பிறகு சைவ சாஸ்திரம் அறிந்த ஆசார்யனாலேயே அரசர்களுக்கு சாந்திகம், பவுஷ்டிகம், முதலியகர்மாக்களை முடித்து கொடுக்கவேண்டுமென கூறப்படுகிறது. இவ்வாறு வித்யாபீட பிரதிஷ்டை கூறப்படுகிறது. அங்கு வித்யாபீட பிரதிஷ்டையானது. ஆலயத்திலோ, மண்டபத்திலோ, சாலையிலோ, செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வித்யா பீடம் செய்யும் முறை கூறப்படுகிறது. வித்யாபீடம் சம சதுரஸ்ரமாகவோ, நீண்ட சதுரஸ்ரமாகவோ செய்ய வேண்டும். வித்யா பீடத்தை நிர்மாணம் செய்து அதை பஞ்ச கவ்யத்தால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வித்யாபீட பிரதிஷ்டை விஷயத்தில் செய்ய வேண்டிய கும்பஸ்தாபனம், கும்பபூஜை, ஹோம விதி, மந்திரன்நியாம் முதலியவைகள் விளக்கப்படுகிறது. இவ்வாறு 67வது படலத்தில் கருத்து சுருக்கமாகும்.
1. சுருக்கமாக வித்யா பீட பிரதிஷ்டையை கூறுகிறேன். அந்த வித்யையானது ஸம்ஸ்க்ருதா, ஆத்மிகா என்று இரு வகைப்படும்.
2. பிரகாரத்தின் முன்பாக நான்கு திக்குகளிலும், விதிக்குகளிலும் அந்தராளத்திலும் பக்தர்களை பிரதிஷ்டை செய்யும் இடத்திலோ வித்யா பீடத்தை அமைக்க வேண்டும்.
3. மூன்று அங்குலம் முதல் ஐந்து அங்குலம் அதிகமான இருபத்தைந்து மாத்ராங்குலம் வரை புஸ்தங்களின் நீளம் இருக்க வேண்டும்.
4. ஐந்து, அங்குலத்திலிருந்து கால், கால் பாகம் கூடுதலாக பன்னிரெண்டு அங்குலம் வரை உள்ளதாகும். பெரிதெனில் பட்டி பதினைந்து அங்குலம் உள்ளதாக அமைக்கலாம்.
5. காட்டு புரசு இலை, ஸ்ரீதாளம் என்ற ஓர்வகை பனைஓலை இவைகளால் நிர்மானித்தோ தங்கம் முதலியவைகளால் நிர்மானிக்கப்பட்டது.
6. கருங்கல் போன்ற ஒரு விதமரம். மரப்பலகை, முதலியவற்றால் செய்யப்பட்டதிலோ குங்குமம் முதலியவைகளாலோ புஷ்பங்கள் முதலியவைகளாலேயோ தயாரிக்கப்பட்ட மையினால் அழகிய எழுத்துக்களால் எழுத வேண்டும்.
7. தூரிகையால் ஆன எழுதுகோலாலோ ஆசிரியரோ, சிஷ்யரோ எழுத வேண்டும். சுபமான கிழமை, யோகம், சுபநக்ஷத்ரம் கூடிய தினத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
8. சாதாரண ஆத்மாவினால் முயற்சியோடு சிவக்ஞானத்தை எழுதக்கூடாது. ஆத்மாக்களின் அருகில் படிக்க கூடாது.
9. பலவகை தேசங்களிலிருந்து உண்டானதும், அழகானதும் ஆன எழுத்துக்களால் நேர்மையாக எழுதவும். அந்த எழுத்தை பத்ரத்தின் ஓரத்தில் எழுதக் கூடாது.
10. சந்தனம், முதலியவைகளால் சிவமயமான மாத்ருகா எனப்படும் அக்ஷரங்களில் ஈஸ்வரனை பூஜித்து குருவுக்கு வஸ்திரம் முதலியவற்றை விருப்பத்துடன் கொடுத்து எழுத்துப் பலகையையும் பூஜிக்க வேண்டும்.
11. பசுஞ்சாணத்தால், மெழுகி கோலமிடப்பட்ட இடத்தில் வாரி இறைக்கப்பட்ட புஷ்பத்தை உடையதாகவும் தூபம் இடப்பட்டதாயும்
12. ஜ்வலிக்கின்ற தீபங்களுடன், சுத்த சைவர்களால் சூழப்பட்டு ஆசார்யர், எழுதியோ சொல்லிக் கேட்கப்பட்டோ படிக்க வேண்டும்.
13. எவ்வாறு எழுதிபடிக்க முடியுமோ அவைகளால் பிழையின்றி எழுதவும், சிவஞானத்திற்கு காலத்தினாலும் ஏமாற்றம் அடைந்ததாலும் அழிவடைந்தாலும்
14. கவனக் குறைவுள்ளவர்களாலோ எழுதப்பட்டவையாகவோ குறைவாகவோ, அதிகமாக இருந்தாலும் குறைவுள்ள அறிவுடையவர்கள் கவனமற்றவர்களால் செய்யப்பட்டதும் அழிவு அடைந்ததுமான
15. குறைந்த அறிவுடைய ஆசார்யர்களால் பரிசோதிக்கப்பட்டதும் அவசியமில்லாத பதங்களுடன் கூடியதும், சொன்னதையே திரும்பவும் கூறிய பொருளுக்கும்
16. முன் பின் தொடர்பின்றியும், தன் கோட்பாட்டிற்கும் எதிரியாயும் அதிகமாக விடுபட்ட சேர்க்கையையுடையதும், சொல்லிற்கு பொருளின்றி யுமாக உள்ளதுமாக
17. மேற்கூறிய முறைப்படி குற்றங்களை சிற்சில இடங்களில் யார் செய்கிறானோ அவனை ஆசார்யன், நன்கு முறைப்படுத்துதல் வேண்டும்.
18. எவன் சிவதத்வத்தை அறிந்த அறிஞனாக இருக்கிறானோ அவன் பரமேஸ்வரனுடைய வித்யைகளை சிவ பக்தர்களுக்கும் சிவ சிஷ்யர்களுக்கும் சொல்லிக் கொடுத்து அறிவிக்க வேண்டும்.
19. சிவ விதியை அனுசரித்து, வித்யாதாநமானது கூறப்படுகிறது. ஸம்ஸ்க்ருதத்தாலும் நெருக்கமான சொற்களாலும் தேசத்தின் பாஷை முறைப்படியும் வித்யாதானம் கூறப்படுகிறது.
20. பழமையான சொற்களாலும் சுத்தமான ஸம்ஸ்க்ருத சப்தங்களாலும் இங்கு உலக வழக்கு சொற்களாலும் அனுசரித்துள்ள எந்த சிஷ்யன் உள்ளானோ அவன்
21. தேசத்தின் சொல் முதலியவைகளாலும் அப்பேற்பட்ட ஆகமங்களாலும் அவ்விடத்தில் உள்ளவைகளாலும் எல்லா தேசத்திலுள்ளவர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.
22. பெரியோரான முழுமையான சிவனுக்கு எவ்வாறு முடியவில்லையோ அவ்வாறு எல்லா குணத்தையும் உடைய வித்யையை கொடுப்பதற்கும் முடிவில்லை என்பதாகும்.
23. வித்யையை கொடுப்பதின் பயன், ஐச்வர்யத்தையும் சிவனை அடையும் வரையிலான குணமும், புகழ், செல்வம், ஸரஸ்வதி, திருவருள், பேரொளி, பொருட் செல்வம் நன்மை இவைகளால் கிடைக்கும்.
24. எவன் சுத்தமற்ற வித்தையை அபஹரித்து உயர்ந்ததான அறிவை போதிக்கிறானோ அவன் பயங்கரமான நரகத்தையும், பாபம் செய்தவனாகவும் அறிவை அழிக்கிறவனாகவும் ஆகிறான்.
25. சிவஞானத்தை அளிக்கக் கூடிய புஸ்தகத்தை சிவனைப் போல் பூஜிக்கவும். தன்னால் இயன்றபடி தினந்தோறும் சிவாகமங்களை எழுத வேண்டும்.
26. சிவஞான புஸ்தகத்தில் எவ்வளவு எண்ணிக்கையில் எழுத்துக்கள் இருக்கின்றதோ அவ்வளவாயிரம் சிவலோகத்தில் கொடையாளியாக இருக்கிறான்.
27. முன்னதாக பத்து தலைமுறை பித்ருக்களை கரையேற்றி மற்றுமுள்ளதான பத்து தலைமுறைக்காரர்கள் தாய், தந்தை, மனைவி இவர்களுடன் ஸ்வர்கத்தை அடைந்து
28. அந்த ஸ்வர்கத்தில் மேற்கூறியவர்களை நிறுத்தியிருத்தி தான் மட்டும் சிவலோகத்தை அடைகிறான். ஒரு ஸ்லோகத்தையோ பாதி ஸ்லோகத்தையோ சிவஞானத்தை உடையதாக எவன் படிக்கிறானோ அவன்
29. படிப்பிக்கவோ, சொல்கிறானோ, நினைக்கவோ, எழுதவோ, எழுதும்படி செய்யவோ ஒரே மனதுடன் கேட்கவோ அதன் பொருளை ஆராயவோ
30. பிறர்க்கு கேட்கும்படி செய்யவோ யார் முனைகிறானோ மேற்கூறிய கார்யங்களை செய்பவனுக்கு சிவஞானமுடைய அவனுக்கு உணவு, உடை முதலியவைகளால் பெரிய புண்யபலன் கிடைக்கும்.
31. அவர் ஆயுள் முழுவதும் வரை காக்க வேண்டும். இவ்வாறாக கல்வியை கொடுப்பதின் பயனும் ஆகும். பண உதவி செய்தாவது, (செய்வதாலே) அந்த பலனை அடைகிறான்.
32. எந்த அரசாங்கத்தில் சிவாகம விரிவுரை புஸ்தகம் உள்ளதோ அந்த ராஜாவும் அந்த அரசாங்கமும் வளர்வதாகும். அவன் அரசனுக்கு அரசனாக விளங்கப்படுகிறான்.
33. அரசாங்கத்திலும் அரச குருவினிடத்திலும் மந்திரியிடத்திலும் மற்ற கார்யங்களில் புரோஹிதரிடத்திலும் மற்ற எல்லா கார்யத்திலும் மற்றவர்களின் தர்சனத்திலும்
34. சுத்த சைவனும் யோக்யனுமாக ஆவான். அவனே சாந்தாநிகனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான். எவன் சைவ சித்தாந்தத்திற்கு விரோதமில்லாமலுள்ள வேத வேதாங்கமும்
35. அவ்வாறு பாசுபதம் முதலிய தந்திரங்களும் காருடம் முதலிய பலவகை சாஸ்திரங்களையும் சாஸ்திரத்திற்காக நிச்சயம் செய்கிறானோ அவனே தர்மத்தை அறிகிறான். மற்றவன் அறிவதில்லை.
36. எவன் சுத்த சைவத்திற்கு முரன்பாடாக சாஸ்திரத்திற்கு நிச்சயம் செய்கிறானோ அவனுடைய புத்தி தாமசம் என்றும், அவன் தர்மத்திலிருந்து தள்ளப்பட்டவன் என்றும் கூறப்படுகிறது.
37. ஆகையால் ஆதரவோடு சுத்த சைவனானவன், சித்தாந்த சைவத்தால் சாந்தி கர்மா, பவுஷ்டிக கர்மாவை அரசன் செய்தல் வேண்டும்.
38. மற்ற எல்லோருக்கும் ஆபிசாரம் முதலான கர்மாவானது, தர்மத்தை கடைபிடித்து உயர்ந்த சாந்தானிகனால் செயற்பாலதாகும்.
39. அவனால் அனுஷ்டிக்கப்பட்ட கர்மாவானது எப்பொழுதும் அரசர்களுக்கு பலனை தரக்கூடியதாகும். இவ்வாறாக கல்வியின் பெருமை கூறப்பட்டு புஸ்தகத்தை வைக்கும் முறை கூறப்படுகிறது.
40. வித்யா சாலையின் விசாலமானது. பிராஸாதத்திலோ மண்டபத்திலோ மூன்று முழம் ஆரம்பித்து முப்பத்தி மூன்று முழம் வரை இருக்க வேண்டும்.
41. ஒரு சாலை முதலிய விதமான சாலைகளில் சாலையானது லக்ஷணத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். வித்யா பீடத்தின் அகலம் ஏழங்குல அளவாகும்.
42. இரண்டிரண்டு அங்குலமாக அதிகரித்து முற்பத்தியொன்று அங்குலத்தினால் அகலமும் அதே அளவு நீளமும் ஆகும், ஐம்பது முழ நீள அளவுள்ளதாகவும்
43. நாற்கோணமாகவோ, நீண்ட சதுரமாகவோ ஆகும். மற்ற ஆஸன முறைப்படியான வழியினால் எல்லாவற்றையும் செய்யலாம்.
44. பிறகு ஸம்ஸ்காரங்களை செய்து பஞ்சகவ்யத்தினால் பிரோக்ஷணம் செய்யவும். மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து வஸ்திரத்திற்கு மேல் பீடத்தை வைக்க வேண்டும்.
45. சிவனிடத்தில் பூஜை செய்வது போல் ஆஸனம் முதலியவைகளையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும் சிவ பேதத்தில் சிவனையும், ருத்ர பேதத்திலும் சிவனையும் பூஜிக்க
46. நடுவில் சிவ கும்பத்தையும் பக்கங்களில் இரண்டு வர்தனியையும் இரண்டிலும், சிவனையும் வெளி ஆவரண தேவதைகளாக வித்யேசர்களையும்
47. சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜித்து ஹோமம் முன்போல் செய்யவும். ஸமித், நெய், எள், ஹவிஸ் இவைகளுடன் கூடவும்
48. யவை தான்யத்தால் நூற்றி எட்டு ஆவிருத்தி ஹோமம் செய்து பூர்ணாஹூதி செய்யவும் பெற்றுக் கொண்ட தட்சிணையையுடையவனாய் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.
49. புஸ்தகத்தின் நடுவில் சிவனையும் அட்டைகளில் தேவியையும் பூஜிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் வித்யா பீட பிரதிஷ்டா விதியாகிற அறுபத்தேழாவது படலமாகும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வெள்ளி, 11 அக்டோபர், 2024
படலம் 67: வித்யாபீட பிரதிஷ்டை...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக