வெள்ளி, 11 அக்டோபர், 2024

54. ஸ்ரீ வியாசாசல மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

54. ஸ்ரீ வியாசாசல மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

ஐம்பத்தி நான்காவது ஆச்சார்யர் [கி.பி. 1498 - 1507]

ஸ்ரீ வியாசாசல மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், காஞ்சியில் ஸ்ரீ காமேஸ்வரர் - ஸ்ரீ கமலாம்பா தம்பதிகளுக்குத் மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் "குப்பண்ணா". இவரும் தம் குருநாதரைப் போலவே தம் காலத்தை ‘'வியாசாசலம்'' என்ற மலைக் குகையில் தவம் புரிவதிலே காலத்தை செல விட்டார். அதனால் '‘வ்யாசாசல மஹாதேவர்'' என்றே அழைக்கப்பட்டார்.

சங்கர விஜயத்தைப் பற்றி இவர் வழங்கிய நூல் ''வ்யாசாசலீயம்’' எனப்படுகிறது.

இவர் காலத்தில் விஜய நகர அரசனாக இருந்தவர் "வீர நரசிம்மன்". கிருஷ்ண தேவராயரின் தமையனான இவர், ஸ்ரீ மடத்துக்கு நிவந்தங்கள் [மானியங்கள்] அளிக்கும் செப்பேட்டில் ஸ்ரீ சதா சிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளும், அவரது பிரதான "ஸ்ரீ மஹா தேவேந்திரரும்" சிஷ்யரான
மெய்யெல்லாம் திருவெண்ணீறு பூசியவர்கள்.

பனியாலும், வெயிலாலும் பாதிப்புறாதவர்கள்; சாஸ்திரங்களை முற்றுமுணர்ந்த தபஸ்விகள்.

அஷ்டமாசித்திகளும் கைவரப் பெற்றவர்கள். நிறையருள் பெற்றவர்கள்; முற்றறிவாளர்கள்.

"சிவமாகவே திகழ்ந்தவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 1507-ம் ஆண்டு எழிச்சூர், வெண்பாக்கம், குடியாந்தண்டலம் முதலான கிராமங்களை நிவந்தமாக [மானியமாக] அளித்துள்ளார்.

இந்த கிராமங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. படப்பையில் இருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில் உள்ளது இவரின் பிருந்தாவனம்.

இந்தச் செப்புப்பட்டயம் மூன்று ஏடுகளைக் கொண்டது.

இவர் 1507 ஆம் ஆண்டு, அக்ஷய வருடம், ஆடி மாதம், தேய் பிறை பிரதமை திதியில் சித்தி அடைந்தார்.

இவர் 9 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.



கருத்துகள் இல்லை: