ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ஸ்ரீ கருப்பசாமியின் வரலாறு

 ஸ்ரீ கருப்பசாமியின் வரலாறு

(வால்மீகி, தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண் ணசாமியானது என்பது, வாலமீகி ராமாயண த்தகவல். 'தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி’ எனும் கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். வீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள்.)

சீதாதேவி வனவாசம் இருக்கையில்.  ஒரு முறை முனிவரின் பூஜைக்காக நீர் கொண்டு வர செல்லும் போது,

தனது மகனான லவனை தொட்டிலில் இட்டுச் செல்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி, செல்கிறார்.

பாதி தூரத்திலேயே குழந்தை அழுது விட்டால் முனிவரின் பூஜை கெடுமே  என்று நினைத்து சீதாதேவி திரும்ப வந்து குழந்தையை தூக்கி சென்று விடுகிறார்

 சிறிது நேரம் கழித்து தொட்டிலை முனிவர் பார்க்கையில் குழந்தை இருக்காததை  கண்டு  அதிர்ச்சி  அடைகிறார்.

உடனே  அருகில்  இருக்கும் தர்ப்பை புல்லை பிய்த்து தொட்டிலில் போட்டு  தன் தவ வலிமை யில் ஒரு குழந்தையை உருவாக்கினார்.  

பிறகு நீர் கொண்டு வருகையில் சீதையின் கையில் குழந்தை இருப்பதை கண்டு  ஆச்சர் யம் அடைகிறார். பிறகு அந்த குழந்தையையும் லவனோடு சேர்ந்து குசன் என்று வளர்ந்து வருகிறது.

சில காலம் கழித்து ராமருக்கு சொந்தமான குதிரையை அடக்கி ஹனுமானை வென்று ராமரோடு போட்டியிட்டு என ஏராளமான சாகசங்கள் லவனும்  குசனும் செய்தனர்.

சீதையின் வனவாசம் முடிந்த பிறகு தங்கள் குடும்பத்தில் இரட்டை குழந்தை பிறப்பதில் லையே இப்பொழுது எப்படி இரட்டை குழந்தை கள் நமது வம்சத்தில் என அனைவரும் கேட்க சீதை உண்மையை கூறினார்.

லவனை மட்டும் அனைவரும்  ஏற்று கொள்ள.  குசன் தன் அண்ணன் லவன் நாட்டை ஆள நான் காட்டை பாதுகாத்து ஊர் எல்லையில்   வீற்றிருப்பேன் என்று கூறி மாபெரும்  அக்னி வளர்த்து அதில் இறங்கி தன்னை புனிதப்படு த்தி வெளியே வருகிறார்

அக்னியில் இறங்கியதால் குசன் கருப்பு நிற மானார் எல்லையை காப்பதால் சாமி ஆனார். இதுவே கருப்பசாமி வரலாறு. இவரை கருப்ப ண்ணசாமி என்றும் அழைப்பார்கள். இவர் சபரிமலை போன்ற பல ஆலயங்களில் அருள்புரிகிறார்

வடமொழியில் ஓம் ஸ்ரீகிருஷ்ணபுத்ராய நமோ நம: என்று அர்ச்சிப்பார்கள்.

கருத்துகள் இல்லை: