செவ்வாய், 3 நவம்பர், 2020

ஆதிசேஷன்

ஆதிசேஷன் ஸ்தல வரலாறு

பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த செண்பகவனம் வந்தான். 

இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். நாகராஜனுக்கு அருளிய மூலவர் "நாகநாதசுவாமி" என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாக தீர்த்தம் ஆனது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். 

1986 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது பஞ்ச குரோசத்தலங்களில் ஒன்றாகும்.

வழிபட்டோர்: இராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி...
ஆகியோர் வழிபட்ட தலமாகும்... 


கருத்துகள் இல்லை: