ஆன்மீக கதை
ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார். அதுக்கப்புறம் காட்டுக்கு போவார். விறகு வெட்டுவார் அதை கொண்டு போய் விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வைத்துக் கொண்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .
ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. ஏதோ விபத்துல இழந்து விட்டது போல இருக்கு.. ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார். அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்? இந்த நரிக்கு இரண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்
இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது.. அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டார். ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...
அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...
புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..
திருப்தியா போய்ட்டது !
இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார். இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார். " ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ... தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சார் .
அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை. கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு. பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார்.
அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்." கடவுள் நம்மை காப்பாத்துவார்... அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் அப்படின்னு நம்பினார்.
கண்ணை முடிகிட்டு கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார். ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு... சாப்பாடு வந்த பாடில்லே.. !
இவர் பசியால வாடி போனார் உடம்பு துரும்பா இளைச்சு போய்டுச்சு. எலும்பும் தோலுமா ஆயிட்டார்.
ஒரு நாள் ராத்திரி நேரம் கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார். ஆண்டவா என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா.....? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன். என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே இது நியாயமா ? ன்னாரு
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து ..!
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்....
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 3 நவம்பர், 2020
ஆன்மீக கதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக