யமனை வேண்டி யாராவது தவம் இருப்பார்களா இருந்தான் ஒருவன்.
யமனுடைய வாகனமான எருமை மாட்டை நோக்கி தன் தவத்தினைத் தொடங்கி னான் அவன்.
1508-ஆம் ஆண்டு பீரப்பா என்னும் இடையருக் கும் பச்சம்மா என்கிற பெண்மணிக்கும் பிறந்த குழந்தையான திம்மப்பாதான் யமனை வணங்கி முக்தி பெற்றவன்.
இடையர் குலத்தில் பிறந்து மாடு மேய்க் கும் தொழிலைச் செய்து வந்தாலும் இறை பக்தி மிகுந்தவனாக விளங்கி வந்தான் திம்மப் பன்.
அவன் பிறந்த ஊரில் மிகப் பிரசித்தமான ஒரு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இருந்தது.
தினமும் ஆதிகேசவப் பெருமாளை காலையும் மாலையும் தரிசிக்காவிட்டால் தூக்கம் வராது திம்மப்பனுக்கு.
ஒரு நாள் பெருமாள் அவன் கனவில் தோன்றி, ""திம்மப்பா... நீ எப்போது என்னுடைய அடிமையாகப் போகிறாய்?'' என்று கேட்டார்.
""நான் இப்போதே உங்கள் அடிமைதானே சுவாமி'' என்றான் திம்மப்பன்.
""போதாது திம்மப்பா. நீ எனக்கு அடியவ னாகி நிறைய பக்திப் பாடல்கள் பாட வேண்டும்'' என்றார் பெருமாள்.
திடுக்கிட்டு எழுந்தான் திம்மப்பன்.
"என்ன இது... சாதாரண இடையர் குலத்தில் பிறந்த நான் பாட்டெழுதுவதா? அது எப்படி சாத்தியம்' என்று யோசித்தான்.
மற்றொரு நாளும் கனவில் வந்த கடவுள், ""என்ன திம்மப்பா... எப்போது பாடப் போகிறாய்?'' என்றார்.
சுவாமி ஏதாவது ஒரு குருவிடம் மந்திரோபதேசம் கிடைக்காமல் நான் பாட்டெழுதி தங்கள் தாசனாக முடியுமா?''
முடியும். மதனபள்ளி அருகே ஸ்ரீ வியாச ராஜர் வந்திருக்கிறார். அவரைப் போய் தரிசனம் செய். அவர் உனக்கு மந்திரோபதேசம் செய்வார்'' என்றார் பெருமாள்.
மறுநாளே மதனபள்ளி சென்று ஸ்ரீ வியாச ராஜரின் முன் நின்றான் திம்மப்பன்.
""யாரப்பா நீ?'' -வியாசராஜர் கேட்டார்.
""சுவாமி! என் பெயர் திம்மப்பன். ஒரு சமயம் பூமியைத் தோண்டும்போது எனக்கு நிறைய பொன் கிடைத்தது.
அதை அப்படியே எங்கள் ஊர் கோவிலுக்குக் கொடுத்து விட்டேன்.
அதனால் என்னை கனகன் (கனகம்-பொன்) என்றும் அழைப்பார்கள்.''
""என்ன வேண்டும் உனக்கு?''
""தாங்கள் எனக்கு மந்திரோபதேசம் செய்ய வேண்டும் சுவாமி.''
""என்ன தொழில் செய்கிறாய் கனகா?''
""மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி.''
வியாசராஜர் பெரிதாகச் சிரித்தார்.
""இடையனுக்கு என்ன மந்திரம் சொல்லித் தருவது. உனக்கு எருமை மாடுதான் மந்திரம்'' என்று அவர் கிண்டலாகச் சொல்ல,
"எருமை மாடுதான் மந்திரம்' என்று நினைத்துச் சென்றுவிட்டான் திம்மப்பன்.
ஒரு மரத்தடியில் அமர்ந்து, "எருமை... எருமை' என்று ஜபம் செய்ய ஆரம்பித்தான் கனகன்.
பல நாட்கள் கழித்து, அவன் எதிரே வந்து நின்ற பிரம்மாண்டமான எருமை ஒன்று பெருங் குரலெடுத்து, "கனகா' என்று கூப்பிட்டது.
யமனின் வாகனம் அது.
வியப்படைந்த கனகன் நேராக வியாசராஜரிடம் சென்று சொல்ல, அவரும் வியப்புற்றார்.
"இவன் ஏதோ விளையாட்டுத் தனமாகப் பேசுகிறான்' என்று நினைத்தார்.
""கனகா... மிகவும் சந்தோஷம். நான் ஊருக்கு வெளியே மக்களுக்காக ஒரு பெரிய ஏரியை உருவாக்கி கரையை உயர்த்திக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.
அதன் ஒரு மூலை பள்ளமாக இருக்கிறது. அதன் அருகிலேயே நூறு மனிதர்கள் சேர்ந்தாலும் தள்ள முடியாத சில பாறைகள் இருக்கின்றன.
உன் எருமை மாட்டால் அந்தப் பாறைகளைத் தள்ளிப் பள்ளத்தை மூட முடியுமா என்று கேள்'' என்று சொல்லி கனகனை அனுப்பி விட்டார் வியாசராஜர்.
ஒருசில மணி நேரங்களில் மீண்டும் ஓடி வந்த கனகன் பள்ளத்தை மூடிவிட்டதாக வியாச ராஜரிடம் சொன்னான்.
ஸ்ரீசுவாமிகள் திடுக்கிட்டார். "என்ன இது... இவன் புதுக் கரடி விடுகிறானே' என்று சந்தேகித்து, ஏரிக்கரையை அடைந்த வியாசராஜர் பிரமித்து நின்றார்.
""இவன் சாதாரண இடைக்குல கனகன் இல்லை; இவன் ஒரு மகத்தான மனிதன்; தேவ புருஷன்'' என்று சொல்லி, கனகனை ஆசீர் வதித்து தன்னுடைய சீடனாக்கிக் கொண்டார் வியாசராஜர்.
அன்று முதல் அவனுக்கு கனகதாசர் என்று பெயரிட்டு, அரசவையில் தன் பக்கத்தில் வைத் துக் கொண்டார்.
அவருடைய இன்னொரு பக்கத்தில் கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று சொல்லப்பட்ட புரந்தரதாசரையும் அமர வைத்து, கிருஷ்ண தேவராயரிடம் கனக தாசரின் பெருமையையும் கூறினார்.
ஆனால் அவையிலிருந்த பல வேத பண்டிதர் களும் அறிஞர்களும் வல்லுநர்களும் வியாசரா ஜர் தன் பக்கத்தில் இடைக் குலத்தவனான கனக தாசரை அமர வைத்துக் கொண்டதில் பொறா மைப்பட்டனர்.
ஆனால் ஸ்ரீ வியாசராஜரோ கனகதாசரின் அறிவை வெளியே கொண்டு வரவும், அவர் புகழைப் பரப்பவும் பல விந்தை களைச் செய்து காட்டினார்.
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் அரச வையில் ஒரு விவாதம் நடந்தது.
"யார் மோட்சத் திற்குச் செல்வார்கள்?' என்னும் கேள்வியே அது.
வியாசராஜர் பண்டிதர்களைப் பார்த்து, ""உங்கள் தகுதியை நன்றாகக் கணித்து உங்களில் யார் மோட்சம் செல்வீர்கள் என்று சொல்லுங்கள்'' என்றார்.
யாராலும் பதில் சொல்ல முடிய வில்லை.
உடனே, ""கனகா. யாருமே மோட்சம் போக மாட்டார்கள் போலிருக்கிறதே? இவ்வளவு தான தருமம் செய்த மன்னரே பதில் சொல்ல வில்லையே. நீயாவது மோட்சம் போவாயா?'' என்று கேட்டார்.
உடனே கனகதாசர், ""நான் போனால் போவேன்'' என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட மன்னர் உட்பட அனைவருமே கோபப்பட்டனர்.
""என்ன திமிர் இவனுக்கு?'' என்று சத்தம் போட்டார்கள்.
ஆனால் வியாசராஜரோ, ""அதெப்படி கனகா? இந்த அவையினர் அனைவரும் இந்த வினாவிற்கு விடை சொல்லாமல் அமைதியாக இருக்க, நீ மட்டும் "நான் போனால் போவேன்' என்கிறாயே? என்றார்.
கனகதாசர் சற்றும் தாமதிக்காமல்,
நான் என்கிற அகந்தை போனால் அனைவருமே மோட்சம் போகலாமே சுவாமி?
அந்த நான் எனும் அகங்காரம்தானே மனிதனை நரகத்திற் குத் தள்ளுகிறது?'' என்றார்.
அவை கனகதாசரைப் பாராட்டியது.
இப்படிப் பல பரீட்சைகளில் தேறிய கனக தாசர், கடைசியாக உடுப்பி சென்றார்.
அங்கே உள்ள பட்டர்கள் இவர் இடைக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் கோவிலினுள் விட மறுத்தனர்.
உடனே மேற்குப்புறம் சென்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணனின்மீது ஒரு பாடலைப் பாட,
கோவிலின் மேற்குப்புறச் சுவர் உடைந்து, கிழக்கே சிலையாக நின்று கொண்டிருந்த பரமாத்மா மேற்குப் புறமாகத் திரும்பி நின்று கனகதாசருக்குக் காட்சியளித்தார்.
உடுப்பியில் பல காலம் வாழ்ந்து பல்லாயிரக் கணக்கான பாடல்களை கிருஷ்ணனின்மீதும் தனது ஊர் ஆதிகேசவப் பெருமாள்மீதும் பாடிப் புகழ் பெற்றார் கனகதாசர்.
இன்றும் அவர் சாகித்தியங்கள் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன.
கடைசியில் திருப்பதி வேங்கடாசலபதியையும் தரிசித்து தன் சொந்த ஊரான காகிநெலெ சென்று 98 ஆண்டுகள் வாழ்ந்து, பாகவதோத்த மராகத் திகழ்ந்து பரமபதம் அடைந்தார். (கி.பி. 1606-ல்).
யமனின் வாகனம்மீது அவர் செய்த தவம், யமனைக் குறித்தே செய்த தவமாகி அவருக்கு நீண்ட ஆயுளையும் புகழையும் கொடுத்தது.
மீண்டும் நல்லதொரு தகவலுடன் உங்களை சந்திக்க வரும் *தர்ம ரக்ஷண ஸமிதியின் தர்ம நெறி 142*
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020
தர்ம ரக்ஷண சமிதியின் தர்ம நெறி
தர்ம ரக்ஷண சமிதியின் தர்ம நெறி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக