ஞாயிறு, 24 மே, 2020

*சிவனின் 3 மகள்கள் யார்..??என்றும்., அவர்களின் பிறப்பின் ரகசியங்களும்.....*🔱🔱🔱

அழிக்கும் கடவுளான சிவனை பற்றி நாம் அறிந்தது மிகவும் குறைவுதான். ஏனெனில் பெரும்பாலானவர்கள் அறிந்தது சிவபெருமானுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் அது உண்மையல்ல.

ஆம் சிவனுக்கு கஜாணன்., ஸ்ரீ தர்ம சாஸ்தா., மற்றும் காா்த்திகேயன் மட்டுமின்றி *மூன்று மகள்களும்* இருக்கிறார்கள். சிவபெருமானின் மகன்கள் அளவிற்கு அவரின் மகள்களை பற்றி அதிகம் தெரியவில்லை. ஆனால் அவர்கள் இந்தியாவின் பல மூலைகளில் அவர்களை இன்னும் வழிபடுகின்றனர். சிவபெருமானின் மூன்று மகள்களை பற்றியும்., அவர்களின் சிறப்புகளை பற்றியும் காண்போம்.....

*சிவபெருமானின் மகள்கள்*

சிவனின் மகள்களின் பெயர்கள் *அசோக சுந்தரி., ஜோதி* மற்றும் *வாசுகி.* இந்த தகவல் பலருக்கும் தெரிந்திருக்கலாம். இதற்கான குறிப்புகள் சிவபுராணத்திலும்., வேறு சில இடங்களிலிலும் உள்ளது. அவற்றின்படி இவர்களின் ஒவ்வொருவரின் பிறப்பிற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கின்றது.

*☆ அசோக சுந்தரி ☆*

சிவன் மற்றும் பார்வதியின் முதல் மகள் *அசோக சுந்தரி* ஆவார். இவரை பற்றிய விரிவான குறிப்புகள் பத்ம புராணத்தில் உள்ளது. அதன்படி பார்வதி தேவி தன் தனிமையை போக்கி கொள்வதற்காகவே அசோக சுந்தரியை உருவாக்கினார். அவரின் பெயர் காரணம் என்னவெனில் தனது சோகத்தை (தனிமையை) போக்க உருவாக்கப்பட்டதாலும்., மிகவும் அழகாக இருந்ததாலும் அவருக்கு *அசோக சுந்தரி* யென்று பெயர் சூட்டினார்.

இவர் குஜராத்தில் எல்லோராலும் வணங்கப்படுகிறார். இந்தியாவின் மற்ற பகுதிகளில் இவரை பற்றி யாரும் அறியவில்லை.

*★ ஜோதி ★*

சிவனின் இரண்டாவது மகள் ஜோதி. அவரின் பெயரே அதன் பொருளை விளக்குகிறது. இவர் ஒளியின் கடவுளாக அனைத்து கோவில்களிலும் வணங்கப்படுகிறார். ஜோதியின் பிறப்பிற்கு பின் இரண்டு கதைகள் உள்ளது. முதல் கதையானது அவர் சிவனின் ஒளி வட்டத்திலிருந்து பிறந்தார் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது கதை என்னவெனில் ஜோதி பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட தீ பொறியிலிருந்து உருவானவர் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது உண்மையென்று கூற இயலாது. இந்த ஜோதியானவர் ஜுவாலாமுகி என்ற பெயரால் இந்தியா முழுவதும் ஏன் தமிழ்நாட்டிலும் கூட பல கோவில்களில் வணங்கப்படுகிறார்.
ஹிமாசல பிரதேசத்தில் உள்ள *ஜுவாலாமுகி ஆலயம்* அன்னையின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

*★வாசுகி★*

வாசுகி என்பவர் அனைத்து கோவில்களிலும் பாம்புக்கடியை குணமாக்கும் கடவுளாக கும்பிடப்படுகின்றார். இவர் சிவபெருமானின் மகள் ஆனால் பார்வதியின் மகள் இல்லை. ஏனெனில் பாம்புகளின் கடவுளான கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவபெருமானின் உயிரணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்தார். அதனால்தான் அவர் சிவனின் மகளாகவும்., பார்வதியின் மகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்தபோது அவரை காப்பாற்றியது வாசுகிதான். இவருக்கு மானசா என்ற ஒரு பெயரும் உள்ளது.

இவரின் அதீத கோபத்தால் இவர் தன் தந்தை சிவன்., பார்வதி., கணவர் என அனைவராலும் ஒதுக்கப்பட்டார். இவர் மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமாக வணங்கப்படுகிறார். மேலும் இவர் பார்வதி தேவியை எப்பொழுதும் வெறுத்துக்கொண்டே இருந்தார். இவருக்கென எந்தவித உருவமும் கிடையாது ஆனால் பாம்பின் வடிவத்தில் வணங்கப்படுகிறார். இவர் பாம்புக்கடி மற்றும் அம்மை நோய்களை குணப்படுத்தக் கூடியவர் என்று நம்பப்படுகிறது...

 🕉️ *ஓம் சக்தி* 🕉️

கருத்துகள் இல்லை: