ஞாயிறு, 24 மே, 2020

மாவீரன் கர்ணன் யுத்த கலத்தில் மற்ற எவராலும் எதிர்க்க முடியா (எதிர் ஆயுதம் இல்லாத) 3 அஸ்திரங்களை கொண்டிருந்தார் விதியின் சூழ்ச்சி அதை பயன் படுத்த முடியாமலே போனது.

1. விஜய தனுசு
2. ருத்ர அஸ்திரம்
3. நாக அஸ்த்திரம்

விஜய தனுசு : (சிவனுடைய தனுசு) சிவ பெருமானும், பரசு ராமரும் மட்டுமே பயன் படுத்திய தனுசு பரசூராமர் கர்ணனை தனக்கு நிகராக கருதிய ஒரே வீரன் கர்ணன் என்பதால் அவருக்கு அளித்தார் இதன் சக்தி அர்ஜுனனிடம் இருக்கும் பாசுபததாஸ்திரத்தை விட பல ஆயிரம் மடங்கு சக்தி படைத்து பசுபததாஸ்திரத்தையும் நொடியில் அளிக்கும் கர்ணன் தேர் சக்கரத்தில் மாட்டி அனைத்தும் மறக்கும் தருவாயில் இது மட்டுமே கர்ணனிடம் மிஞ்சியது இதை அறிந்ததால் கிருஷ்ணர் கர்ணனனை அப்பொழுதே கொள்ள பணித்தார் கர்ணன் அஸ்த்திரம் ஏந்தி விட்டால் கர்ணனை கொள்ள இயலது என்று தெரியும் காரணம் விஜய தனுசின் நானை அறுக்கும் சக்தி சிவனை தவீர வேர் எவராலும் இயலாது...

ருத்ர அஸ்திரம்: சிவபெருமானின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது, ஒரு முறை ஏவி விட்டால் எதிர் இருப்பது எப்பேர்பட்ட சக்தி வாய்ந்த தேவ, கடவுளாக இருந்தாலும் அளித்து விடும் சிவன் எதிர் தோன்றி நின்றால் மட்டுமே கட்டுப்படும் தேவந்திரனுக்கும் கர்ணனுக்கும் ஏற்பட்ட முதல் போரில் கர்ணன் ருத்ர அஸ்திரம் பயன்படுத்த முற்பட்ட போது அதிர்ச்சியுற்றவர் தன் தோல்வியை கர்ணனிடம் ஒப்பு கொண்டார் இதன் பின் விளைவே கர்ணனனை பழி வாங்க வண்டு உருவம் கொண்டு கர்ணன் தொடையை குடைந்து பரசு ராமரின் சாபத்தில் சிக்க வைப்பார்

நாக அஸ்திரம்: இராமாயனத்தில் இந்திரஜுத்தால் ஶ்ரீ இராமர் மீது ஏவபட்டது இதன் தாக்கம் கடவுளையும் கட்டி போட்டது கர்ணன் தன் தாய் குந்திக்கு செய்த சத்தியத்தால் அர்ஜுணன் மீது இரண்டாவது முறை பயன் படுத்த வில்லை அது மட்டுமல்லாது தனி ஒருவனாய் நின்று பாண்டவர் ஐவரையும் கொள்ளும் சக்தி நாகாஸ்த்திரத்தில் உள்ளது...

மற்றைய சக்தி படைத்த அனைத்து அஸ்திரத்திற்க்கும் எதிர் அஸ்திரம் உண்டு ஆனால் கர்ணனிடம் உள்ள இந்த மூன்று அஸ்த்திரத்திற்க்கும் எதிர் இல்லை ஒட்டு மொத்த யுத்த கலத்திலும்..

கருத்துகள் இல்லை: