வெள்ளி, 13 செப்டம்பர், 2019

கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடு!

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதைத்தான் கண்திருஷ்டி என்கிறார்கள். குழந்தைக்கு திருஷ்டிபடக் கூடாது என்பதற்காக தாய் கன்னத்தில் திருஷ்டி பொட்டு இடுகிறாள். அகத்திய முனிவர் கண் திருஷ்டியில் இருந்து விடுபட, சுபதிருஷ்டி கணபதி என்ற மகா சக்தியை தோற்றுவித்தார். இது கணபதியின் 33 வது மூர்த்தமாகும். இவர் விஷ்ணுவின் அம்சமாக சங்கு சக்கரம், மூன்று கண்கள் (சிவாம்சம்), சூலம் (சக்தி அம்சம்), அனைத்து தெய்வங்களின் ஆயுதங்கள், சீறும் சிங்கம், முஞ்சூறு வாகனம் ஆகியவற்றுடன், லட்சுமிக்குரிய விரிந்த செந்தாமரையில் போர்க்கோலத்துடன் உதித்தார். இவரது தலையை சுற்றி ஒன்பது நாகங்களும், அக்னி பிழம்பும் உள்ளன. 51 கண்களைக் கொண்டுள்ளார். விஸ்வரூப வடிவில் ஸ்ரீ சுபதிருஷ்டி கணபதி என்ற பெயர் கொண்டுள்ளார். இவரை வீடு, வியாபார தலங்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களில் வடக்கு திசை நோக்கி வைத்து வழிபட்டால் கண்திருஷ்டி விலகும் என்பது நம்பிக்கை. புதன்கிழமை இவருக்கு உகந்த நாளாகும்.
---------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: