வியாழன், 23 ஜனவரி, 2014

ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி

அருள்தரும் மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அய்யாவடி (ஐவர்பாடி) என்ற கிராமத்தில்அமைந்துள்ளது இந்த கோவில் இந்தியாவில் இங்கு மட்டுமே உள்ளது என்பது தனி சிறப்பு. 18 சித்தர்கள் பூஜித்ததும், அகஸ்தியருக்கு காட்சி கொடுத்ததும், மேகநாதன் (இந்திரஜித்) நிகும்பலாயம் செய்ய வேண்டி வந்த இடம் இதுவே.
பஞ்ச பாண்டவர்கள் பூஜித்த ஸ்தலம். இந்த தேவியை தரிசனம் செய்தால் ரணம், ரோகம், கடன், சத்ரு இவைகளை அழித்து நமக்கெல்லாம் வேண்டிய 16 செல்வங்களையும்
கொடு்க்கக்கூடிய தெய்வம் இவள் ஒருவள் மட்டுமே. இத்தேவியை தரிசனம் செய்து எல்லா கஷ்டங்களும் நீங்க நிகுபாலயாகம் செய்து வேண்டும் வரங்களை அடைவீர். பிரதி அமைவாசை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை யாகம் நடைபெறும். இத்திருக்கோவிலில் கரிய வண்ணமுடையவளாய், சந்திர கலை சிரத்தில் பிரகாசிக்க, சூலம், பாசம், டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திய பதினெட்டு கைகளுடன் சிம்மவாகனமாக நான்கு சிங்கங்கள் அவள் முன்னே நிற்க, இடது காலை மடித்து வலது புறமாக கலைமகள் சரஸ்வதியும் வலது புறமாக அவள் மகள் மகாலெட்சுமியும் வண்ணச் சிற்பங்களாக நின்று அருள் புரிகின்றனர். இத்தல விருட்சத்தில் ஒரே ஆலமரத்தில் ஐந்து விதமான இலைகள் உள்ள அதிசயத்தை காணலாம்.

பிரத்தியங்கிரா தேவியின் மூல மந்திரம் :
ஓம் – க்ஷம்
பக்ஷஜ்வாலா ஜீஹ்வே
கராள தம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கரே
க்ஷம் – ஹ்ரீம்பட் – ஸ்வாஹா

தினமும் பக்தியுடன் ஜெபிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய், பில்லி சூனியம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வி்ல் எல்லா ஆனந்தத்தையும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள். கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ தொலைவில் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: