வியாழன், 23 ஜனவரி, 2014

இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......வெந்நீர் வேணாம்..உச்சநீதி மன்றத்தின் ஆணை

கார்த்திகை மாசம்! ஓரளவு குளிர் ஆரம்பித்து விட்டிருந்தது. பெரியவா விடியும்முன் ஸ்நானம் பண்ணுவதால், கோட்டை அடுப்பை மூட்டி, வெந்நீர் போடவேண்டும். ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்பை மூட்ட எழுந்தார்.

"டொக்"கென்று ஒரு சொடக்கு சத்தம் அவரை நிறுத்தியது! தாழ்வார அரைகுறை வெளிச்சத்தில் பெரியவாளின் அற்புத திருமேனி தெரிந்தது.

"இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......வெந்நீர் வேணாம்...."

வெந்நீர் போடாமல் இருக்கலாம். ஆனால், அடுப்பு மூட்டாவிட்டால், நைவேத்யம் தயார் பண்ண முடியாதே!

"வெங்கட்ராமனை கூப்டு!.." திருவாரூர் வெங்கட்ராமையர் என்ற சமையல் கார்யஸ்தர் வந்தார்.

"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ?....அதை பத்த வை! ஸ்வாமி நைவேத்யத்தை அதுல பண்ணு..."

கோட்டை அடுப்புப் பக்கம் யாரும் போகவேயில்லை. கொஞ்சம் தள்ளி உக்ராண அறை வாசலில் இரும்பு அடுப்பு பத்த வைக்கப்பட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது.

காலை சுமார் ஏழு மணி இருக்கும்....."மியாவ்" என்று மெல்லிசாக குரல் கேட்டது.

"அடேய்! பூனை எங்கேடா வந்துது? நைவேத்யத்துல வாயை வெச்சுடப் போறது!

ஷ்ஷ்ஷூ....ஷூ...!!! குத்து மதிப்பாக விரட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், பூனை ஓடும் சலசலப்பு எதுவும் இல்லை! பூனை எங்கே?

ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்புப் பக்கம் போய் பார்த்தார்..அதற்குள் ஒரு தாய்ப்பூனை. அதன் மேல், தாயின் உடல் கதகதப்பும், கோட்டை அடுப்பின் கதகதப்பும் சேர, தாயின் ஏறி இறங்கும் வயிற்றின் மேல் நாலு பூனைக்குட்டிகள்!!! இன்னும் கண்கூடத் திறக்காமல்!!

ஆஹா! "கோட்டை அடுப்பு இன்னிக்கு மூட்ட வேணாம்...." என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணையின் அர்த்தம் இப்போதல்லவா புரிந்தது!

குளிர் தாங்காமல் தன் குட்டிகளோடு லோக ஜனனியின் திருவடி நிழலுக்கு வந்துவிட்டாள் அந்த அம்மாப் பூனை! அவளை விரட்டிவிட்டு, தனக்கு குளிருக்கு வெந்நீர் போட்டுக் கொள்ளுவாரா என்ன?

பூனைகள் நன்னா தூங்கட்டும்....எனக்கு வெந்நீர் வேணாம்!!

ஏகம் ஸத் ! நமக்கெல்லாம் வெறும் மேல் பூச்சாக சொல்லும் வார்த்தை!

பெரியவாளுக்கு? அவரே அதன் பொருள்!

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
Photo: இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......வெந்நீர் வேணாம்..உச்சநீதி மன்றத்தின் ஆணை

கருத்துகள் இல்லை: