மண்ணுக்குள் மறையும் முன்னோர் வீரம்: சிதிலமடையும் வரலாற்று சின்னம்!
ஆனைமலை: தென் கொங்கு நாட்டில் (ஆனைமலை) பல்வேறு வரலாறு கூறும் சின்னங்கள் சிதிலமடைந்து யாராலும் கவனிக்கப்படாமல் உள்ளன. அரசு தொல்லியல் துறையினர் இது குறித்து அகழ்வராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். கொங்கு 24 நாடுகளில் ராஜகேசரி பெருவழி என அழைக்கப்பட்ட ஆறை நாட்டு பகுதியான இன்றைய கோவை நகர் பகுதி, அவினாசி வட்டம், பல்லடம் வட்டம் ஆகிய பகுதிகளிலும், வையாபுரிநாடு, நல்லுருக்காநாடு என அழைக்கப்பட்ட இன்றைய உடுமலை, பழநி வட்டங்களில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது முதுமக்கள் தாழி, கல்திட்டைகள், நாணயங்கள் கிடைத்தன. பல வரலாற்று செய்திகளும் வெளி வந்தன. அதுபோல் வீரநாரயணன் பெருவழி அமைந்ததாக எண்ணப்படும், தென் கொங்கு நாடுகள் என அழைக்கப்பட்ட ஆனைமலை நாடு (பொள்ளாச்சி வட்டத்தின் தென் பகுதி), காவடிக்கா நாடு (பொள்ளாச்சி வட்டத்தின் தென் மேற்கு பாகம்) ஆகிய பகுதிகளை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்யவில்லை. இதனால் பல வரலாறுகள் மண்ணில் புதைந்து கிடக்கிறது.ஆனைமலை அருகே பெத்தநாயக்கனூர்-கோட்டம்பட்டி ரோட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட புலி குத்தி கல் 3 அடி உயரத்தில் கம்பீரமாக புடைப்பு சிற்பங்களுடன் உள்ளது. முன்னோர்களின் வீரத்தை பறை சாற்றும் இந்த புலி குத்தி கல் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வேடிக்கை பொருளாகி வருகிறது.
கோவை கல்வெட்டியல் பட்டயப்படிப்பு பொறுப்பாசிரியர் ரவி கூறியதாவது:இந்த சிற்பமானது அடுக்குக்கல் சிற்ப வகையைச்சேர்ந்தது. ஒரு கல்லில் கூறிய செய்தியின் தொடர்ச்சியை அடுத்த கல்லில் கூறுவதே அடுக்கு கல் சிற்பமாகும். ஒரு கல்லை முழு தனி சிற்பமாக செதுக்காமல், கல்லில் உருவம் மட்டும் வெளிப்படுமாறு செதுக்குவதை புடைப்பு சிற்பம் எனப்படும். மேலும் இதற்கு புலி குத்திக்கல் என்று பெயர்.முற்காலங்களில் வேளாண்மையின் உப தொழிலாக கால்நடை வளர்ப்பும் இருந்து வந்தது; அச்சமயம் வன விலங்குகளிடம் இருந்து கால்நடைகளையும், மக்களையும் காக்க அன்றைய காலத்தில் கிராம காவல் வீரர்கள் அடங்கிய படை ஒன்று இருந்தது.
புலி,சிறுத்தை போன்ற வன விலங்குகளிடம் இருந்து மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளையும், அவற்றை மேய்ப்பவர்களையும் காப்பதே அவர்களின் பணியாகும். இந்த சிற்பத்தில் கூறப்படும் செய்தி; கை கூப்பிய நிலையில் காணப்படும் பெண்ணின் உருவமானது; அப்பெண் இறந்து தெய்வீக நிலையை அடைந்ததைக்குறிக்கிறது. கை கூப்பிய நிலையில் காணப்படும் ஆணின் உருவமும், அவனும் தெய்வீக நிலையை அடைந்ததை விளக்குகிறது. புலியின் உடலில் காணப்படும் வரிகள், அது சிறுத்தை வகையை சேர்ந்தது என்பதைக்காட்டுகிறது. மேலும் ஆணின் உடலில் இருந்து ஒரு ஆயுதம், சிறுத்தையின் உடலில் பாய்ந்து வெளியே வருவதும், அவன் சிறுத்தையுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளதைக்காட்டுகிறது.
சிறுத்தையின் வால் அதன் தலை வரையில் நீண்டு இருப்பது அதன் ஆக்ரோஷத்தை
குறிப்பிடுகிறது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற, ஒரு பெண்ணை
சிறுத்தையானது தாக்கிக்கொன்றுள்ளது. ஒருபடைவீரன், பெண்ணை கொன்ற அந்த
சிறுத்தையுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்ததின் நினைவாக புலிகுத்திக்கல்
அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணின் உருவத்தில், ஆபரணங்கள் அணிந்து இருப்பது
அவன் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதைக்கூறுகிறது.அடுத்த சிற்பத்தில்
கை கூப்பிய நிலையில் ஆணும், செண்டு (வெண் சாமரம்) வீசிய நிலையில் பெண்ணும்
காணப்படுகிறது; இது வீரமரணம் அடைந்த அவ்வீரனை தேவமங்கையொருத்தி வெண்சாமரம்
வீசி தேவலோகத்துக்கு அழைத்துச்செல்வதை குறிக்கிறது.இருவருக்கும் இடையில்
மேலே கொம்புடன் கூடிய விலங்கின் உருவம் உள்ளது. அது அப்பகுதியில் ஆட்சி
செய்த குறுநில மன்னர்களின் (பாளையக்காரர்கள்) அரசு சின்னத்தைக்குறிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.நமது முன்னோர்களின் வரலாற்றையும், வீரத்தினையும்
வெளிப்படுத்தும் இந்த வரலாற்று சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே
இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனைமலை: தென் கொங்கு நாட்டில் (ஆனைமலை) பல்வேறு வரலாறு கூறும் சின்னங்கள் சிதிலமடைந்து யாராலும் கவனிக்கப்படாமல் உள்ளன. அரசு தொல்லியல் துறையினர் இது குறித்து அகழ்வராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். கொங்கு 24 நாடுகளில் ராஜகேசரி பெருவழி என அழைக்கப்பட்ட ஆறை நாட்டு பகுதியான இன்றைய கோவை நகர் பகுதி, அவினாசி வட்டம், பல்லடம் வட்டம் ஆகிய பகுதிகளிலும், வையாபுரிநாடு, நல்லுருக்காநாடு என அழைக்கப்பட்ட இன்றைய உடுமலை, பழநி வட்டங்களில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது முதுமக்கள் தாழி, கல்திட்டைகள், நாணயங்கள் கிடைத்தன. பல வரலாற்று செய்திகளும் வெளி வந்தன. அதுபோல் வீரநாரயணன் பெருவழி அமைந்ததாக எண்ணப்படும், தென் கொங்கு நாடுகள் என அழைக்கப்பட்ட ஆனைமலை நாடு (பொள்ளாச்சி வட்டத்தின் தென் பகுதி), காவடிக்கா நாடு (பொள்ளாச்சி வட்டத்தின் தென் மேற்கு பாகம்) ஆகிய பகுதிகளை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்யவில்லை. இதனால் பல வரலாறுகள் மண்ணில் புதைந்து கிடக்கிறது.ஆனைமலை அருகே பெத்தநாயக்கனூர்-கோட்டம்பட்டி ரோட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட புலி குத்தி கல் 3 அடி உயரத்தில் கம்பீரமாக புடைப்பு சிற்பங்களுடன் உள்ளது. முன்னோர்களின் வீரத்தை பறை சாற்றும் இந்த புலி குத்தி கல் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வேடிக்கை பொருளாகி வருகிறது.
கோவை கல்வெட்டியல் பட்டயப்படிப்பு பொறுப்பாசிரியர் ரவி கூறியதாவது:இந்த சிற்பமானது அடுக்குக்கல் சிற்ப வகையைச்சேர்ந்தது. ஒரு கல்லில் கூறிய செய்தியின் தொடர்ச்சியை அடுத்த கல்லில் கூறுவதே அடுக்கு கல் சிற்பமாகும். ஒரு கல்லை முழு தனி சிற்பமாக செதுக்காமல், கல்லில் உருவம் மட்டும் வெளிப்படுமாறு செதுக்குவதை புடைப்பு சிற்பம் எனப்படும். மேலும் இதற்கு புலி குத்திக்கல் என்று பெயர்.முற்காலங்களில் வேளாண்மையின் உப தொழிலாக கால்நடை வளர்ப்பும் இருந்து வந்தது; அச்சமயம் வன விலங்குகளிடம் இருந்து கால்நடைகளையும், மக்களையும் காக்க அன்றைய காலத்தில் கிராம காவல் வீரர்கள் அடங்கிய படை ஒன்று இருந்தது.
புலி,சிறுத்தை போன்ற வன விலங்குகளிடம் இருந்து மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளையும், அவற்றை மேய்ப்பவர்களையும் காப்பதே அவர்களின் பணியாகும். இந்த சிற்பத்தில் கூறப்படும் செய்தி; கை கூப்பிய நிலையில் காணப்படும் பெண்ணின் உருவமானது; அப்பெண் இறந்து தெய்வீக நிலையை அடைந்ததைக்குறிக்கிறது. கை கூப்பிய நிலையில் காணப்படும் ஆணின் உருவமும், அவனும் தெய்வீக நிலையை அடைந்ததை விளக்குகிறது. புலியின் உடலில் காணப்படும் வரிகள், அது சிறுத்தை வகையை சேர்ந்தது என்பதைக்காட்டுகிறது. மேலும் ஆணின் உடலில் இருந்து ஒரு ஆயுதம், சிறுத்தையின் உடலில் பாய்ந்து வெளியே வருவதும், அவன் சிறுத்தையுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளதைக்காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக