குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்!
குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானை சஷ்டி விரதமிருந்து வழிபடுகிறார்கள். இதற்கான காரணத்தை புராணங்கள் விளக்குகிறது. கஷ்யப முனிவருக்கு அதிதி என்னும் மனைவி மூலம் தேவர்கள் பிறந்தனர். இவர்கள் ஆதித்யர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். திதி என்னும் மனைவி மூலம் அசுரர்களாகிய தைத்தியர்கள் பிறந்தனர். தேவர்கள் நற்குணம் உள்ளவர்களாகத் திகழ்ந்தனர். சித்தியின் பிள்ளைகளான தைத்தியர்கள் மீது
@தவர்கள் பாசம் கொண்டிருந்தனர். ஆனால், தைத்தியர்களோ, தங்கள் தேவ சகோதரர்களை வெறுத்தனர். இருவருக்கும் கடும் போர் ஏற்பட்டது. அசுரர்கள் நல்லவர்களான தேவர்களைத் தாக்கவே, திருமால் கோபம் கொண்டார். பாற்கடலைக் கடைந்து கிடைக்கும் அமிர்தத்தைக் குடித்தால், இறப்பே இல்லாத சூழல் அமையும் என்று தேவர்களுக்கு சொன்னார். இந்தத் தகவல் சுரர்களின் காதுக்கும் போகும்படி செய்தார். இருதரப்பாரும், கிடைப்பதில் பாதியைப் பகிர்ந்து கொள்வதென ஒப்பந்தம் செய்து கடைந்தனர். மாயங்கள் செய்யும் திருமாலோ, மோகினி வடிவமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தம் முழுவதையும் கொடுத்து விட்டார். சக்தியிழந்த அசுரர்களை தேவர்கள் அடித்து நொறுக்கினர். அசுர வம்சமே அழிந்து விட்டது. இதனால் திதி வருத்தமடைந்தாள். தன் கணவர் காஷ்யபரிடம்,அன்பரே! எனக்கு பிள்ளைகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. புத்திர பாக்கியம் அருளுங்கள், என வேண்டிக்கொண்டாள்.
கஷ்யபரும் அவளது தாயுள்ளத்தைப் புரிந்து கொண்டு புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். சிவனுக்கு 274, பெருமாளுக்கு 108 தலங்கள் என்று இருப்பது போல, முருகனுக்கு 64 முக்கியத்தலங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அதில் சிறந்ததான கதிர்காமம் என்ற இடத்துக்கு அவர் சென்றார். யாகத்தைத் துவங்கினார். திதிக்கு மீண்டும் குழந்தைகள் பிறந்தால், நிலைமை என்னாகுமோ என்று தேவர்கள் பயந்தனர். யாகத்தை அழிப்பதற்காக பல இடையூறுகளைச் செய்தனர். இதனால், வருத்தமடைந்த காஷ்யபர், அத்தலத்தில் இருந்த சுப்பிரமணியப் பெருமானை வேண்டினார். சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் என்று மும்முறை சொல்லவே முருகப்பெருமான் அங்கு எழுந்தருளினார். கஷ்யபரே! கவலை வேண்டாம். தேவர்களால் இனி தங்களை ஏதும் செய்ய முடியாது. இதோ, எனது வல்லபம், வேல் ஆகிய ஆயுதங்களை தங்கள் யாகசாலையை சுற்றி நிறுத்துகிறேன். அவற்றை மீறி எந்த சக்தியாலும் தங்களை அழிக்க முடியாது, என அருள்பாலித்தார். கஷ்யபர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. யாகத்தை தடையின்றி நடத்திக் கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த தேவர்கள், சுப்பிரமணியப் பெருமானிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லாமல், மிகுந்த ஆணவத்துடன் தங்களால் எல்லாம் முடியும் என்ற தைரியத்தில் அவர்களும் ஒரு யாகத்தை துவங்கினர். அந்த யாக குண்டத்தில் இருந்து மாரன், மலையன் என்ற அசுரர்கள் தோன்றினர். அவர்களிடம், மார மலையர்களே! நீங்கள் புத்திரகாமத்தில் யாகம் செய்து கொண்டிருக்கும் கஷ்யபருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆயுதங்களை தகர்ப்பதுடன், அவரது வேள்விக்குண்டத்தையும் அழித்து விடுங்கள், என உத்தரவிட்டு அனுப்பினர்.
மாரனும் மலையனும் புத்திரகாமத்தை வெகு விரைவில் அடைந்தனர். ஆனால், அவர்களை முருகப்பெருமானின் ஆயுதங்கள் தடுத்து விட்டன. அவர்கள் தூரத்தில் நின்றபடியே வேள்விகுண்டத்தை அழிக்க முற்பட்ட போது, கஷ்யபர் மீண்டும் குமரப்பெருமானை உருக்கமாக வேண்டி அழைத்தார். முருகப்பெருமானும் அங்கு தோன்றி, மார மலையர்களைக் கொன்றார். கஷ்யபரே! தங்கள் யாகம் வெற்றி பெறட்டும். தங்களுக்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு சிவஞானத்தை ஊட்டி முக்திக்கு வழி காட்டுங்கள், என்று அருள் செய்தார். கஷ்யபர் அந்த இடத்தில் முருகன்சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக