மனிதனுக்கு உண்மை தேவை அறிவியலா? ஆன்மிகமா?
படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர்.செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவான உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.
வெய்யில் சுட்டெரிக்கும் போது உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது. வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது. ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை. மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது,காலராவை ஒழித்தது விஞ்ஞானம். கால் கடுக்க
நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம். கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம். இத்தனையும் தந்த விஞ்ஞானம், இதை போற்றுவதை விட்டுவிட்டு ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்? என்று கேட்கலாம். அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும். வெப்பத்தில் வியர்க்கிறது. வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது. காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும். ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.
குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது. நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது. கம்பளி குளிரை தடுக்கலாம். நோயை தடுக்காது. எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம் மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும். ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது. அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிகாட்டும். நிரந்தரமான சந்தோஷமே ஆன்மிகத்தின் இறுதி நோக்கம். நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரலாம் ஆனால் மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கும் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல. எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே. சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான். மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம். அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும். சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி. இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறது ஆன்மிகம். பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறது அறிவியல். சொல்லும் முறையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.
அறிவியல் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதற்காக!
ஆன்மிகம் என்பது என்ன தேவை என்பதை அறிவது அல்ல
தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக