சனி, 23 மே, 2020

கலைவாணியின் அருள் கிடைக்க   சியாமளா தண்டகம் - ஸ்ரீ சியாமளா தேவி.

தயமான தீர்க்க நயநாம் தேசிகரூபேண தர்சிதாப்யுதயாம்
வாம குச நிஹித வீணாம் வரதாம் ஸங்கீத மாத்ருகாம் வந்தே||

கருணை பொழியும் கண்களை உடையவளும் தேசத்திற்கே குருவாக இருந்து உபதேசம் செய்பவளும் இடது பக்கம் வீணையை வைத்திருப்பவளும்பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுபவளும், சங்கீதத்திற்குத்  தாயுமான ஸ்ரீ சியாமளா தேவியை நமஸ்காரம் செய்கிறேன்.

மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
மஹாகவி காளிதாஸர்.

'சியாமளா' என்றும், 'ஸ்ரீ ராஜ சியாமளா' என்றும், 'ஸ்ரீமாதங்கி' என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத‌ மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே 'சியாமளா நவராத்திரி' யைக் கொண்டாடி வழிபடுகிறோம். இந்த அம்பிகையைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்,
"மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம: என்று போற்றுகிறது. மேலும் 'கதம்பவனவாஸினீ' என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான‌ ஸ்ரீ நகரத்தில் ,சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்த திருநாமம்.
மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு 'கடம்பவனம்' என்ற ஒரு பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில்( ஏழு தட்டுக்கள் உள்ள ரதம்) இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.

'கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா'(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்)
சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே 'பண்டாசுரன்' (உலகாயத)விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே 'விஷங்க வதம்' செய்கிறாள்.
'மந்த்ரிண்யம்பா -விரசித- விஷங்கவத- தோஷிதாயை நம:(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்).

ஸ்ரீ லலிதோபாக்கியானம், 'சங்கீத யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர நாயிகா' என்று துவங்கி அம்பிகையைப் போற்றுகிறது.

அம்பிகையின் திருவுருவம்:

வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.
கவி காளிதாஸர் அருளிய ஸ்ரீ சியாமளா தண்டகம், தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது.

இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

சில தாந்த்ரீக நூல்களில், ஸ்ரீ ராஜ சியாமளா தேவி, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, நெற்கதிர், தாமரை, பாசம், அங்குசம், ஜபமாலை, புத்தகம், வீணை முதலியவற்றைத் தாங்கியவளாக சித்தரிக்கப்படுகிறாள். தேவியின் திருத்தோள்களில் கிளியும் இருப்பதாகக் குறிக்கப்படுகிறது.

இதில், நெற்கதிர், ஜீவனின் முந்தைய கர்மவினைகளையும், பாசம், ஆசையையும், அங்குசம் கோபத்தையும், ஜபமாலை புத்தகம் முதலியவை அறிவையும், வீணை யோகத்தையும் குறிக்கிறது.

அம்பிகையின் திருக்கரத்திலிருக்கும் கிளியே 'ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியாக' அவதரித்து, ஸ்ரீமத் பாகவதம் முதலான நூல்களை அருளியதாக ஐதீகம்.
தாந்த்ரீக முறையில் ஸ்ரீ ராஜசியாமளா தேவி.

முதலில் தாந்த்ரீக முறை என்றால் என்னவென்பதைப் பார்க்கலாம். யந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவற்றின் துணை கொண்டு ஓர் உயரிய இலக்கை அடையும் முறைக்கு 'தாந்த்ரீகம்' என்று பெயர்.
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். தசமாஹவித்யா தேவியரின் தோற்றம் குறித்து பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை பின்வருமாறு.

தாக்ஷாயணியாக அம்பிகை திருஅவதாரம் புரிந்த சமயத்தில், தேவி, தன் தந்தை தக்ஷன், சிவனாரை மதிக்காமல் துவங்கிய யாகத்திற்கு சென்று அவனுக்குப் புத்தி புகட்ட விரும்பினாள். சிவனார் அதைத் தடுத்ததும் அம்பிகையின் கோபம் பன்மடங்காகப் பெருகியது. அந்த உணர்ச்சி நிலையே பத்து மஹாவித்யைகளாகப் பிரிந்து, எல்லாத் திசைகளிலும் சிவனாரைச் சுற்றி நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, வடமேற்குத் திசையில் நிலைகொண்ட மஹாவித்யையே ஸ்ரீமாதங்கி.

தசமஹாவித்யா தேவியரின் ஒன்றிணைந்த வடிவமாக, ஸ்ரீ தத்தாத்ரேயரின் தர்மபத்தினியான ஸ்ரீ அனகாதேவி போற்றப்படுகிறார். கீழ்வரும் ஸ்லோகம் அதைச் சொல்கிறது.

"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ
மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ
கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி
அனகாதேவீ நமோஸ்துதே.'

மற்றொரு புராணக்கதையின்படி, மதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அளித்த வரத்தின் பலனாக, அவருக்கு மகளாக வந்துதித்தவளே ஸ்ரீ மாதங்கி. மதங்க முனிவரின் மகளாக வந்துதித்த காரணத்தாலேயே 'மாதங்கி' என்ற திருநாமம் அம்பிகைக்கு ஏற்பட்டது. கிராமப்புறங்களில், 'பேச்சி', 'பேச்சாயி' 'பேச்சியம்மன்' என்ற திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஸ்ரீ தேவிபாகவதத்தின் படி, தசமஹாவித்யைகளும் ஸ்ரீ லலிதா தேவியின் பரிவார தேவதைகளாகப் போற்றப்படுகிறார்கள்.

எல்லைகளற்ற கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதை பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

பாட்டு, நடனம், நினைத்த பொழுதில் கவி இயற்றும் திறன் போன்ற நுண்கலைகள் அம்பிகையின் அருளாற்றலாயே ஒருவருக்குக் கிடைக்கிறது. சரஸ்வதி தேவியின் விரிந்த, பேராற்றலுள்ள வடிவமே ஸ்ரீ மாதங்கி தேவி எனக் கொள்ளலாம். சரஸ்வதி தேவியை மொழி, கலைகள், கற்கும் திறன் இவற்றின் அதிதேவதையாகக் கொண்டால், மாதங்கி தேவியை மனதை உள்முகமாக திருப்பி, தான் யார் என்பதை அறியும் ஆற்றலுக்கும், ஆத்மவித்தைக்கும் அதிதேவதையாகக் கொள்ளலாம்.

சியாமளாவிற்கு மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி என்பவர்களே அவர்கள்.

நவக்கிரகங்களில் புதபகவான் இந்த தேவியின் அம்சத்தோடு கூடியவராகக் கருதப்படுகிறார். ஸ்ரீமாதங்கி தேவி, தசாவதாரங்களில் புத்த அவதாரத்தோடு தொடர்புடையவராகவும் கருதப்படுகிறார் (பத்து மஹா வித்யா தேவியரும் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு தொடர்புடையதாக கொள்ளலாம்.)

சில சோதிடர்கள், ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஜாதகரின் பலன்களைச் மிகச் சரியாகச் சொல்வதைக் காணலாம். இதற்கு, 'கர்ணமாதங்கி' என்கிற, மாதங்கி தேவியின் திருவடிவைப் போற்றும் மந்திர உபாசனையே காரணம். இந்த மந்திரத்தை முறையாக‌ உபாசிப்பவர்களின் கேள்விகளுக்கு, அவர்களின் காதுகளில் தேவியே வந்து பதிலை உச்சரிப்பதாக ஐதீகம்.

தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்து கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி.
ஸ்ரீ நகரத்தில் அம்பிகையின் இருப்பிடம்.

ஸ்ரீ லலிதாம்பிகையின் வாசஸ்தலமாகிய ஸ்ரீ நகரத்தில், பலவிதமான கோட்டைகள் அமைந்துள்ளன. அவற்றுள், தங்க, வெள்ளிக் கோட்டைகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள கதம்பவனத்தில்,(ஸ்ரீ சக்ரத்தில், இந்த இடம், த்ரிகோணம், பஞ்சகோணம்,அஷ்டதளபத்மம், ஷோடச தள பத்மம், உள் பத்து கோணம், வெளிப்பத்து கோணம், சதுரம் என்ற ஏழு ஆவரணச் சக்கரங்கள் கூடும் இடமாக உள்ளது) தங்கத்தினாலான படிகள் உள்ள, மாணிக்கத்தால் ஆன மண்டபங்கள் உள்ள விசாலமான ஆலயத்தில், ரத்தினம் இழைத்த அழகான சிம்மாசனத்தில், ப்ரஹ்ம வித்தையின் 98 அக்ஷரங்களின் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ சியாமளா தேவி வீற்றிருந்தருளுகிறாள்.

கஸ்தூரி திலகம் அணிந்து, மூன்று கண்களுடனும், தாம்பூலத்தால் சிவந்த திருவாயில் தவழும் புன்சிரிப்புடனும், சந்திரகலை சிரசில் மின்ன,கதம்ப மாலை துளசி மாலை முதலியன அணிந்து, கிளி, தாமரை மலர் முதலியவற்றைத் தாங்கிய திருக்கரங்களுடன், வீணா கானம் செய்து கொண்டு, சிருங்கார ரஸம் ததும்பும் கருணா கடாக்ஷத்துடன், 'ஸங்கீத மாத்ருகை' எனப் போற்றப்படும் மந்திரிணீ தேவியாகிய ராஜ மாதங்கி தேவி தன்னைத் தொழுவோருக்கு அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறாள்.
நம் உடலில் அமைந்துள்ள ஆதாரச்சக்கரங்களில், தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள 'விசுத்தி' சக்கரத்தில் பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள். விசுத்தி சக்கரத்தினைப் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.

ஆதார நூல்கள்: ஸ்ரீ தேவி பாகவதம், தசமஹாவித்யா தேவியர், ஸ்ரீவித்யையும் ஸ்ரீ சக்கரமும், சாக்த மஹா பாகவத புராணம்.
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே
இப்பதிவு.

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும்
ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம்
ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க
வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே
இப்பதிவு.

பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை
பார்த்துவிடுவோம்.

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை
விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில்
நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி
கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது
வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.
வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை
தியானத்திலும் பிராத்தனையிலும்
செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து
கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி
குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.
தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில்
சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை
என்பது துளிகூட இல்லை. அவனுக்கு
சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி
செய்வது என்பது வாடிக்கையான வேலை.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்
மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய்
என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை
என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு
ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான
பிராத்தனையில் ஈடுபட்டான்.

போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு
அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று
விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து
கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க
உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ
உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று
விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை
பார்த்து, அதையும் மூட்டையாக
கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன்
வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில்
வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு
முட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.

இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது
அசிங்கம் என்று சித்தனின் மனைவி
அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை
நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட
அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை
என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல்
ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து
கொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து
தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ
தூக்குவது போல் உணர்ந்தான்.

ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே தெய்வம் அவனை
காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க
தோனவில்லை, மாறாக சண்டை போட
தொடங்கினான். தனது ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.
அனைத்தையும் பொறுமையுடன்
கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை
தன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான்
சித்தன்.

இப்பொழுது கடவுள் பேச
தொடங்கினார்,

சித்தா நீ இப்பிறவியில்
நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.
நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில்
நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல
நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ
செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.
என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ
அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,
மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும்
ஒருவன் முதலில் அவனது பாவ பதிவையே  
அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக
அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன்
செய்த புண்ணியங்களை அனுபவித்தபின்
அவன் பாவ பதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே
அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.
அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு
புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து
பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை
நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய
உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு
கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில்
வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது
மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும்
பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.
தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய
சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை
எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க
விதிவிலக்குகளும் உண்டு. அதுதான்
"பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள
வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை
பார்த்துவிடுவோம். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.

இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில்
பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த
இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து
ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும். எப்படியென்றால்
நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது
உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர
வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால்
அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த
கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு
மாடோ அல்லது வண்டியோ உங்களை
குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே
கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.
ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது
மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம். இங்கேயும் அதே
கர்மவினைதான் செயல்படும்.

 அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வரவேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும். ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு. எப்படியென்றால் நீங்கள் அதே தெரு
வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை
அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது
சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.

இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட
வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
உள்ள சேற்றை துடைப்பதற்காக
தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில்
அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித
சேதமும் ஏற்படவில்லை.

நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த
கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு
ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால்
அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்ற
து. இதைதான் " தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது " என்பர்
பெரியோர்கள். அந்த பொருளுக்கும்
உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும்
நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
செயலை கொண்டே வினையும், வினையை
கொண்டே எதிர்வினையும், அந்த
எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும்
நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை.

இதைத்தான் " தீதும் நன்றும்
பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"
என்பதை விட்டுவிட வேண்டும். ஆன்மீகத்தில்
இதற்கு பெயர் பூரண சரணாகதி.
அந்த விதிவிலக்கு என்பது கூட
இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்
சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
மட்டும்?

எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம்
என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி
நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?
எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?
கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற
எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான
வினைகள்தான் தற்போது நீங்கள்
அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான
புரிதல் ஏற்படும்.

புரிதல் ஏற்படும்போது
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம்
வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை
நீங்கள் அடையும்போது, உங்களின் 95%
கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்
அனுபவித்து விடுவார். காரணம்!! நீங்கள்
அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த
அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு
வழியே சென்று கொண்டு இருந்தார். திடீர்
என்று அங்கே உள்ள சாக்கடையில்
குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர்
குழாயில் காலை கழுவிவிட்டு
சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர்
பைத்தியகாரன் என்று தோன்றலாம். ஆனால்
அவரை பொறுத்தவரை பொருளுக்கும்
அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது
ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி
இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர்
அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி
வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை
என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.

காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம்
தான் உள்ளது. அதாவது அவருக்கு மனம் என்ற
ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்
இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும்
உதிப்பதும் கிடையாது!! மறைவதும்
கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "
என்று சொல்லப்படுகின்றது.

 ஒருவன ்அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள் சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்
என்ற விதி இருக்கும், ஆனால் இவன்
உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த ஞானி அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை
கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண
அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில்
சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்
தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு
செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.
முடிவில் இவர்களும் அந்த ஞானியின்
நிலைக்கே வந்துவிடுகின்றனர்.

 அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!
நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
கேட்க நினைப்பது கூட சிறியதாக தான்
இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ
கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு
அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும்.

இதில் பூரண சரணாகதி என்பது இனி
அனைத்தும் உன் செயல் என பற்றுகளை
துறப்பதுவே ஆகும். "நான்" என்ற
எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.
அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட
எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்
கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு
செயலும் அவன் செய்வதாகவே இருக்க
வேண்டும்.

 இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை
அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
மாறிக்கொண்டே இருக்கும். அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல்
உள்ளவர்களை பொறுத்தவரை, அவர்களுடைய
வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில்
"ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர
ஒவ்வொரு முறையும் இருக்காது. ஏனென்றால்
அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில்
அத்தனையும் அடங்கியும் விடும்.

இதையும் புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு
அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு
தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி
பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
என்பது அவள் கனவு. கடவுளிடமும் இதை
குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும்
பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால்
இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.
மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே
மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு
தெரிந்ததெல்லாம் அவனே என்பதால்
மறுபடியும் ஒரு வேண்டுதல்!!

இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு
அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"
என்று ஒரே ஒருமுறை மட்டும்
வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை
வசந்தமாகி இருக்கும்.

புரியும்படி கூற வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல்என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால் ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய
அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும்
கர்மவினை இதுதான் என்பது யாருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு
இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான
கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
தீர்வை நாடுகின்றோம்.

உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம்
அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி
அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.
எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே
ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.
இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர்.   எப்படியென்றால் உங்கள்
அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.

உங்கள்
தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்
ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு
பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால்
அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!!

 எனவே உங்கள் அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும்
நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால்
இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்!! நன்றி...

ஓம் நமசிவாய
#ஸ்ரீலலிதா !! #ஸ்ரீமாத்ரே.நம:

எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது ‘#லோகமாதா’ என்றே குறிப்பிடுவர்.

அம்பாளுக்கு இந்த வளையல் அணிவிப்பது அவரவர் சந்ததியினரை நன்கு காக்கும். தீமைகளை விலக்கி விடும் என்பது ஐதீகம்.

#லலிதா என்றால் ‘விளையாடுபவள்’ என்று பொருள்படும். ஆம் இந்த உலகில் அன்னை லோக மாதா நம் அம்மாதானே. அவ்வன்னையின் குழந்தைகள் நாம்.

நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக, சகல நன்மைகளையும் நம் அன்னையிடம் பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம்.

#லலிதாசகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 வது பிரிவாக #லலிதோபகன்யா என்று வருகின்றது. அகத்திய மாமுனிவருக்கும் ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் சம்பாஷனையாக இடம் பெற்றுள்ளது.

ஹயக்கிரீவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மறு உருவமே. ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதமகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறுகின்றனர்.

ஸ்ரீபுரம் எனும் அம்பிகையின் இருப்பிடமான ஊரினைப்பற்றி விவரிக்கின்றார். அம்பிகையினை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையைப்பற்றிக் கூறுகின்றார்.

#பஞ்சசடாஷ்சரி என ஒன்று படும் #ஸ்ரீயந்த்ரம், #ஸ்ரீவித்யா, #லலிதாம்பிகா, #ஸ்ரீகுரு மற்றும் தேவியை உபசரிக்கும், தேவியின் பணிகளைச் செய்யும் மற்ற தெய்வங்கள் தேவதைகளைப்பற்றி கூறுகின்றார். இத்தனையும் கூறினாலும் #ஹயக்கிரீவர் #அகத்தியரிடம் #லலிதா #சகஸ்ரநாமத்தினைப் பற்றி கூறவில்லை.

அகத்திய மாமுனி பலமுறை ஹயக்கிரீவரிடம் கேட்ட பிறகே ஹயக்கிரீவர் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைப் பற்றிச் சொல்கின்றார். இதிலிருந்தே இந்த ஆயிரம் நாமங்களின் புனிதத்தினை நாம் உணரலாம் அல்லவா.

ஒரு சமயம் லலிதாம்பிகை வாசினி மற்றும் வாக்கு  தேவதைகளை நோக்கி ‘நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். யார் யார் ஸ்ரீ சக்ரம், ஸ்ரீ வித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர்கள் என்னைப் பற்றிக் கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள். என் பக்தர்கள் இதனைச் சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார்.

அதன்படி வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர்.

ஒரு நாள் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள். இது கணக்கற்ற பரம்மாக்களும், கணக்கற்ற விஷ்ணுக்களும், கணக்கற்ற ருத்ரர்களும் மந்த்ரினி, டந்தினி போன்ற தேவதைகளும் அம்பிகையை கண்டு வணங்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதன் பின்னர் லலிதாம்பிகை வாசினி உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தினை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள்.

கைகளையும் கூப்பி அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூற அனைவரும் தெய்வ அருளில் நனைந்தனர். லோக மாத மனம் குளிர்ந்து கூறினாள்.

‘ குழந்தைகளே, வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனை படிப்பவர்கள் என்னை அடைந்து அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்றார்.

இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்க, நன்மைகளைப்பெற வேண்டும் வழிபாட்டு முறையாக பின் பற்றப்படுகின்றது.

பக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ‘ஸ்ரீ வித்யா’ எனப்படும். ஞான அறிவு கிட்டும்.  அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும்.

உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ‘ஸ்ரீ’ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா. பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தையும் ஒன்றே.

லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம்.

துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக் கொள்கின்றன. மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.

லலிதாம்பிகை சிவ சக்தி ஒன்றாய் இணைந்தவள்’லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவினையும் படிக்க அரிய ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். லலிதா சகஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தின் மேலும் கூறும் பொழுது

* லலிதாசகஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.

* இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.

* உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்

* குழந்தைவரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர்.

* அன்றாடம் சொல்வதில் தீமைகள் விலகும்.

* பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும்.

* அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும்.

* கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.

* எதிரிகள் நீங்குவர்.

* வெற்றி கிட்டும்.

* பொன், பொருள், புகழ் சேரும்.

* லலிதா சகஸ்ரநாமம் அன்றாடம் சொல்வது ஒரு தவம்.

* இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினைச் சொல்வதே போதும்.

* தன்னம்பிக்கை கூடும்.

* லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.

* ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.

படிக்க ஆரம்பித்தால் 1000 நாமத்தினையும் முழுமையாக சொல்லி முடிக்க வேண்டும். பகுதி பகுதியாக இடைவெளி விட்டு சொல்ல வேண்டாம். காலை மாலை இருவேளையும் உகந்த நேரம். ஒரு குரு மூலம் ஆரம்பித்துக் கொள்வது மிகவும் நல்லது. நமோ தேவ்யை.

குமார் ராமநாதன்.
பத்மராக சிலா தர்ஸ பரிபாவி கபோலபூ! நவ வித்ரும பிம்ப ச்ரீ ந்யக்காரி ரதனச்சதா!!

அம்பாளின் கன்னம் எப்படி இருக்கிறது தெரியுமா!! .

பத்மராகக் கல் என்று ஒன்று உண்டு. அதனுடைய குணம் எதிரில் உள்ள பொருளை அப்படியே பிரதிபலிக்கும். இப்பொழுது இருக்கும் கண்ணாடியைப் போல். ஆனால் அம்பாளின் கன்னம்.

அந்த பத்மராகக் கல்லை ஒண்ணுமே இல்லாமல் செய்யக்கூடிய காந்தி படைத்தது. அவ்வளவு அழகு. நமது கண்ணை சிமிட்டாமல் அவள் அழகினில் நம்மை மயங்க வைப்பாள். அப்படி அவள் அழகினில் மயங்கினால் தானே குழந்தைக்கு தாயிடம் எப்படி அன்பு வழிகிறதோ அதுபோல் நமக்கும் அன்பு பெருகி, அவள் பால் நம்மை கவர்ந்து அவள் அருளினால் அவளிடம் இலையம் ஏற்படும்.

அந்த இரண்டு உதடுகளும் மேலும் கீழும் சிகப்பாக இருக்கும். எதைப்போல என்றால்.ஒரு உதடு செங்காந்தாள்(பிம்ப)மலர் போல சிகப்பாக இருக்குமாம். மற்றொரு இதழோ புத்தம் புதிதாக உருவெடுத்த பவழத்தின் சிகப்பு நிறத்தை ஒத்து இருக்குமாம்.

திரும்பி ஒருமுறை சகஸ்ரநாம வரிகளை படிக்கலாமா!!

பத்மராக சிலா தர்ஸ பரிபாவி கபோலபூ! நவ வித்ரும பிம்ப ச்ரீ ந்யக்காரி ரதனச்சதா!!

இதையே ஸெளதர்ய லகரியில் 59வது ஸ்லோகத்தில் சங்கரர் வர்ணிக்கிறார்.

ஸ்புரத்கண்டாபோக ப்ரதிபலித தாடங்க யுகளம்

சதுஶ்சக்ரம் மன்யே தவமுகமிதம் மன்மதரதம்

யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத மர்க்கேந்து சரணம்

மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே

கண்ணாடிபோல் பிரகாசிக்கிற கன்னப்பிரதேசத்தில் பிரதிபலிக்கின்ற இரண்டு தாடங்கங்களுடன் கூடின உன்னுடைய இந்த முகமானது நாலு சக்கரங்களுடன் கூடின மன்மதனின் தேர் என்று கருதுகிறேன். அதில் ஏறிக்கொண்டு மன்மதன் மஹாவீரனாக விளங்குபவனாய் சூரிய, சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட பூமியாகிய தேரில் போருக்குச் செல்லும் பிரமத கணங்களுக்கு அதிபதியான பரமேசுவரனையே வஞ்சிக்க எண்ணி எதிர்க்கிறான் என்கிறார்.

அவள் அழகை வர்ணிக்க எனக்கு இந்த ஆயுள் மட்டும் போதாது. அவளின் நாமம் தெகுட்டாத அமிர்தம். இதை எழுத எழுத உங்களுடன் நானும் அந்த தேவாமிருதத்தை அருந்துகின்றேன். நமோ தேவ்யை.

குமார் ராமநாதன்
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

திருநீற்று மேனியனாய், கீளொடுவெண்கோவணம் தரித்துத் தண்டினைக் கையில் ஏந்தி, பழனி வெற்பில் பொலிவுடன் விளங்கும் தண்டாயுதபாணியாகிய அவன்தனை நான் என்றும் மறவேன்

மஹாசய, வ்யாசத்தைப் வாசிப்பதெல்லாம் அடுத்த பக்ஷமே. வேலேந்திய புன்சிரிப்புடன் கூடிய பழனிப்பதிவாழ் பாலகுமாரனின் சித்திரம் இந்த வ்யாசத்தை வாசி வாசி என தூண்டியது என்றால் மிகையாகாது.

அவனை நினைவிலிருத்தி படிக்கப் படிக்க மேற்கண்ட வாசகத்தை வாசிக்குங்கால் தேசாந்திரியான எமக்கு எம் குலதெய்வத்தைப் படியேறி தரிசித்தது போன்ற ஒரு உணர்வுடன் கண்கள் பனித்ததற்கு தலையல்லால் கைமாறறியேன்.

வள்ளிச்சன்மார்க்க வ்யாசமளித்த தேவரீரிடமிருந்தே இப்படி ஒரு வாசகம் எதிர்பார்க்கவியலும் போலும்.

\\\\ மக்களைத் தாம் சென்று தீண்டுவதைக் காட்டிலும் மக்கள் தாமாகவே வந்து தம்மைத் தீண்டுதலே பேரின்பம்\\\\

எங்கள் திருப்புகழ் சபையில் “முத்துக்குமாரனடி அம்மா” என்றொரு பாடல் பாடுவதுண்டு. பாடல் புனைந்த அருளாளர் யார் அறியேன். முன்னமும் இது பற்றி பதிவு செய்துள்ளேன். கீழே திரும்ப கொடுத்துள்ளேன்.

நெஞ்சம் உருகி நின்று நீயே துணை என்று
கெஞ்சி அழைத்தால் வருவான் குமரன்
கேட்பதெல்லாம் தருவான்

இதை எந்த இடத்தில் கேட்டாலும் மீனுலவு க்ருத்திகை குமாரன் புள்ளிமயிலிலேறி வருவதுபோலேன்றோ தோன்றும். கேழ்க்குமிடம் மறந்து அதுவே பழனியாகவும் திருச்செந்தூராகவும் திருத்தணிகையாகவும் ஆகிவிடுமன்றோ.

அப்படி அடியார் நெஞ்சுருகப் பாடுகையில் முந்தைவினை தீர்க்க வரும் முத்துக்குமரன் என்னவெல்லாம் செய்தான் என அருளாளர் (பெயர் மறந்தேனே!) பாடுகிறார் :-

கன்னத்தை தொட்டான்
கையைப் பிடித்தான்

கந்தன் பிஞ்சுத் தளிர் கரங்களால் பிடித்த கையை விடவும் தோன்றுமோ, ஆகவே கேட்கிறார் :-

கைவிட்டு விடுவாயோ என்றேன் கந்தனிடம்
கைவிட்டு விடுவாயோ என்றேன்

அடியார்க்கு நல்ல பெருமாள் சொல்கிறானாம் :-

கைவிடேன் கைவிடேன் கைவிடேன் என்றான்
முத்துக்குமாரனடி அம்மா

பின்னும் சொல்கிறான்

தீராத வினை தீர திருவருள் துணையுண்டு
திருப்புகழைப் பாடென்று சொன்னான்
அருணகிரி திருப்புகழைப் பாடென்று சொன்னான்

யாக்கையில் பிறவாத சிவபரம்பொருளை ஒழித்துப் மகவாகப் பிறந்த கதைகளையுடைய அனைத்துத் தெய்வங்கட்கும் பிள்ளைத் தமிழ்நூல்கள் தோன்றின. சிவபெருமானுக்கு உண்டா என்று அறியேன்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

ஓயாது ஒழியாது அவன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவான் முருகா என்பதில் ஐயம் ஏதுமில்லை.
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...

அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..

'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..

'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...

'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...

'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது...
ஏறுவதா...
திருப்பிப் போவதா...

குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..

'மவராசியா இரு...'

வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!

'இங்கென்ன செய்கிறீர்..!!'

* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*

'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்...
சிரமப்பட்டு!!!!..."*

'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'

* "அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."*

'அப்படியென்றால்..??'

* "வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....

பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..

தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..." *

'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..

* "தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.." *

'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'

* "புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..
என்னைக் காண,  நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே
எனைக் காண்பாய்.
புன்னகைத்தார் கடவுள்!🙏WhatsApp இல் சற்று முன் வந்த ஒரு அற்புதமான பதிவு. முழு அர்த்தம் தெரிந்து படித்து, உணர்ந்து,  பகிர்ந்து மகிழ்வோம் நண்பர்களே:
ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது?

பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன  நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்.  அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ஸ்படிகப் பாறைகள்  ஆறு மற்றும் ஏழு  பட்டைகள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.

ஸ்படிக மாலை கோர்க்கும் முறை

ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது). தனித்தனியாக அணிந்து கொள்ளலாம்.  தரமற்ற ஸ்படிகமணியை  மாலையாக கோர்க்கக் கூடாது. ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் கோர்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம்.

ஸ்படிகமணி மாலை அணிவதால் என்ன பயன்?

மனிதர்களாகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை  சராசரியாக 21,600 மூச்சாகும். ஆனால், இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள்.  ஸ்படிக மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள். அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும். முழுமையான கவசமாக ஸ்படிக மணி விளங்குகிறது. இதனால், தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.

ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்

ஸ்படிக மாலை உடல் சூட்டை சீரான  சரியான அளவில் இருக்க வைக்கும்.
நமது மனதை அலைபாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும். ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.
உள்ளச்  சூட்டை தணிக்கும் ஆற்றல் ஸ்படிகத்திற்க்கு உள்ளது.
ஸ்படிக மாலை அணிய  விதிமுறைகள் ஏதாவது கடைப்பிடிக்க வேண்டுமா?

ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள், நாஸ்திகர்கள் எல்லோரும் அணியலாம்.  இறைவனின் படைப்புகள்  அனைவருக்கும் பொதுவானது, அதனால்,  நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகமாலை எல்லோரும் அணிய உகந்தது.   ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மற்ற அனைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். குளிக்கும் பொழுது, கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது. ஸ்படிக மாலை அணிவோர்கள் அசைவம் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழும் சாப்பிடலாம், ஸ்படிகமாலையை தொடர்ந்து அணியும் போது உங்களுக்கு அசைவம் சாப்பிடும் ஆசையை நிறுத்த வைக்கும்.

ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது?

ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து விதமான தரம் இருக்கிறது. ஸ்படிக மாலையில் நீங்க கை வெத்தவுடன் ஒரு வித குளிர்ச்சியை உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது. உயர்ந்த வகை ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் ஸ்படிகம் கண்ணுக்கு தெரியாது, நீரோடு நீராக ஒன்றி இருக்கும். முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன. முதல் தர ஸ்படிகமணி மாலைதான் நல்ல பலனைத் தரும்.  பார்த்துக் கொண்டே இருக்கச் செய்யும் வசீகர தன்மை ஸ்படிகத்திற்கு  உண்டு. முக்கியமாக துல்லியமற்ற, ஊடுருவும் தன்மையற்ற, வெள்ளையாக இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும்.

ஜெபம் செய்ய பயன்படுத்தலாம்

தெய்வ பக்தி உள்ளவர்கள். 108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வைத்து உங்களுக்கு பிடித்த இறைவனின் பெயரை, கிடைக்கும் நேரத்திற்க்கு தகுந்தார் போல் ஜெபம் செய்யலாம்.  உங்கள் லட்சியம் மற்றும் ஆசை  என்னவோ அதை நிறைவேற்ற விரும்பினால், அதிகாலையில் எழுந்து மொட்டை மாடி போன்ற திறந்த வெளியில், உங்கள் லட்சியம் மற்றும் ஆசை  என்னவோ, அதையே திரும்ப, திரும்ப ஜெபம் போல் ஸ்படிக மாலையை வைத்து செல்லுங்கள்.  உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தால் நிறைவேறும்,   இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் (Positive Thoughts) அதிகரிக்கும்.

நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் நம் மனம் ஒருநிலைப்பட வேண்டும். அமைதியான அதிகாலை வேளை தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.  இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்க.

அணிபவர்கள் கவனிக்கவேண்டிய விதிமுறைகள்

ஸ்படிகமாலையை வாங்கி உபயோகப்படுத்தும் முன் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது சுத்தமான நீரில் ஊறவிட வேண்டும் அதேபோல்  ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் அடுத்தவர் மாற்றி அணியும் போது நீரில் 3 1/2 மணி நேரம் ஊறவிட வேண்டும்.  ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது தான் பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும்.

காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருக்கும்.  இதை அணிந்த  தருணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறைவதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஆன்மிகத்தில் ஸ்படிகத்தின் முக்கியத்துவம்

ஆன்மிகத்தில் ஸ்படிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது அபரிதமான ஈர்ப்பு சக்தி ஏற்படும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்வது நல்ல பலனைத் தரும். முக்தி லிங்கம்- கேதார்நாத், வரலிங்கம்-நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம்-சிருங்கேரி, யோகலிங்கமாக சந்திரமௌலீஸ்வரராக-காஞ்சியில் ஈசன் அருள்பாலிக்கிறார். இவையெல்லாமுமே ஸ்படிக லிங்கங்கள்தான். தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மேரு. இந்த மேரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மேருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்கள்...
குரு ஒருவரின் உபதேசக் கூட்டத்தில் புகுந்த ஒருவன், 
அவரை மட்டம் தட்டும் எண்ணத்துடன்,

நீங்களோ சிவனை வணங்குவதாகச் சொல்கிறீர். 
கூட்டத்தில் ஒருவர் பெருமாளின் திருமண் அணிந்துள்ளார். 
மற்றொருவர் நான் முருக பக்தன் என்கிறார். 
உங்களுக்குள் ஏன் இவ்வளவு குழப்பம்? 
அனைவரும் ஒரே தெய்வத்தை வணங்கக்கூடாதா? 
இறைவனுக்கு உருவமில்லை என்றும் சொல்கிறீர்கள்? 
பின் ஏன் இவ்வளவு உருவத்தைப் படைத்துள்ளீர்கள்? 
என ஏளனமாகக் கேட்டான்.

புன்னகைத்த குரு, 
ஒரு துணியை எடுத்து 
இது என்ன? எனக் கேட்டார். 
துணி என்றான் அவன் 
இடுப்பில் கட்டினால்?  துண்டு என்றான். 
அதைத் தன் தோள் மேல் போட்டுக் காட்டி, 
இப்போது என்ன? என்றார் குரு. 
அங்க வஸ்திரம். 
அதையே தரையில் விரித்து, 
இப்போது? என்றார் குரு. 
படுக்கை விரிப்பு என்றான் அவன்

துணி என்பது ஒன்றுதான். 
அது இருக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடுகிறதல்லவா? 
அதைப்போல இறைவனுக்கும் அவரவருக்கு விருப்பமான வடிவம் தந்து, 
உயர்வான கதைகள், 
ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுகிறார்கள்.

பொருள் ஒன்றுதான். 
வடிவம்தான் வேறு. 
ஒருவரான கடவுளே எல்லா வடிவங்களிலும் உள்ளிருந்து அருள்புரிகிறார்.
தமிழ் சுப்ரபாதம்

1. வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

2. எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

3. போர்புரிந்து மதுகைடபர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் (2)

4. திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருளி புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்

5. தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு நின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

6. ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைகள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்

7. நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

8. நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்.

9. எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து(உ)ம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்

10. வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்

11. தனதனங்கள் நிமிர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழ்ந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்

12. பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்

13. வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

14. மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோலேறி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்

15. திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர்காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

16. அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன், அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும் நின்
திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்

17. திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பு(உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்

18. சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

19. நின் முக்தி விழையாமல் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

20. எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்திபெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்

21. மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்

22. பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்

23. திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்

24. மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்

25. ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

26. அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்

27. நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்

28. திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியனே வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

29. விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய் ....
இந்த பதிவு உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய பதிவு.

*ஒவ்வொருவரும் அவர்கள் செய்த ஊழ் வினையால்தான் கஷ்டப்படுகிறார்கள்... காலதாமதமான திருமணம், குழந்தை பாக்கியமின்மை, சரியான வேலைவாய்ப்பு அமையாமல் போவது என பல பல கஷ்டங்கள்...*

*கவனமாக படித்து விஷயத்தை உள்வாங்கி…. உரியவற்றை செயல்படுத்தி பலன் பெறுங்கள்...*

*ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள்..*

நம்மை சுற்றி எத்தனையோ அநீதிகள் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருக்கின்றன. நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள். தீயவர்கள் சுகப்படுகிறார்கள். அதர்மம் அரசாள்கிறது. ஒரு பாவமும் அறியாதவர்களுக்கு ஏன் இந்த கதி என்று நம் மனம் குமுறும் அளவுக்கு நாளிதழ்களை புரட்டினால் விபத்து, கொலை, கற்பழிப்பு போன்ற செய்திகளே பிரதானமாக கண்ணில் படுகிறது.

எதைப் பற்றியும் கவலைப்படாது, ‘எனக்கு நடக்காதவரைக்கும் எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை’ என்று குதிரைக்கு கடிவாளம் போட்டபடி செல்பவர்களை விடுங்கள்…. ஆனால் இது போன்ற செய்திகளை படிக்கும்போதே கேள்விப்படும்போதோ பொதுநலவாதிகள் & கடவுளை சற்று தீவிரமாக நம்புபவர்கள் பாடுதான் படு திண்டாட்டம்.

*“ஏன் இப்படி……..? இவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும் நடப்பதற்கு எத்தனை நேரம் பிடிக்கும்……….? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்………? எல்லாம் அவரவர் கர்மா…. அவரவர் செய்த முன்வினைப் படியே எல்லாம் நடக்கிறது.*

 இதில் நாம் என்ன செய்துவிட முடியும்? அனுதாபப்படுவதை தவிர? ஒருவேளை நாம் கடந்த காலங்களில் அல்லது முன்ஜென்மங்களில் செய்த பாபத்திற்கு நமக்கு தண்டனை சற்று கடுமையாக இருக்குமோ?

 சே.. சே… நாம நிச்சயம் புண்ணியம் பண்ணியிருக்கிறோமோ இல்லையோ…. பாவம் பண்ணியிருக்க மாட்டோம்………..”

மனம் இப்படி சுய பரிசோதனை செய்துகொள்ளும் தருணங்களில், வேறு வழியின்றி ஆண்டவனை அவன் இந்த உலகை இயக்கும் விதத்தை ஒப்புக்கொண்டே தீரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.

அன்பினால் மட்டுமே அறியவேண்டிய ஆண்டவனை நம்மை சுற்றி நடக்கும் அநீதியை கண்டு அக்கிரமங்களை கண்டு அஞ்சி அண்டுகிறோம்.

 அப்படி அண்டினாலாவது கர்ம வினையிலிருந்து தப்ப முடியாதா என்கிற நப்பாசை தான். எப்படியோ ஆண்டவனை அவன் இந்த உலகை இயக்கும் விதத்தில் நமக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அவனை ஒப்புக்கொண்டுவிடுகிறோம். வேற வழி?

*சரி… இந்த கர்ம வினை என்பது அத்துணை பலமிக்கதா? அதிலிருந்து தப்பவே முடியாதா? தப்பவே முடியாது என்றால் இறைவன் எதற்கு?*

*இறை வழிபாடு எதற்கு?* *பரிகாரங்கள் எதற்கு?* *இதற்க்கெல்லாம் அவசியமே இல்லையே…. என்ற கேள்விகள் எழலாம்…*

*1) ஆம்… கர்மவினை பலமிக்கது தான். நீங்கள் நினைப்பதை விட.*

2) ஆனால் அதிலிருந்து தப்ப முடியும். நாம் மனது வைத்தால். நாம் மனவுறுதியுடன் செயல்பட்டால்.

*3) என்ன தப்பமுடியுமா? எப்படி? எப்படி? அதை சொல்லுங்க முதல்ல!*

*முதல்ல கர்ம வினை என்பது எத்தனை பலமிக்கது என்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.*

அடுத்து அதிலிருந்து தப்ப முடியுமா? அது பற்றி பெரியோர்கள் ஏதாவது கூறியிருக்கிறார்களா என்பது பற்றி அடுத்து தெரிந்துகொள்வோம்.

அடுத்து அதிலிருந்து தப்பி – தீய பலன்களை நற்பலன்களாக மாற்றிக்கொள்ள – வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

அந்தரத்தில் துள்ளிய தர்ப்பை புல்

அப்பைய தீட்சிதர் (1520 – 1593) தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர்.

 பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் காசி வரையில் பரவி யிருக்கிறது.

 இந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.

தீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி (சூளை நோய்) அவரை மிகவும் வாட்டி வதைத்தது.

 அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேசவேண்டியிருந்தாலோ, 

ஒரு தர்ப்பை புல்லை அருகே போட்டு அந்த புல்லின் மேல் அந்த வலியை தன் தவ சக்தியால் இறக்கி வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடுவாராம். அந்தப் புல் அது பாட்டுக்கு இப்படி அப்படி என்று துள்ளிக்கொண்டே இருக்குமாம்.

பிறகு வேலை முடிந்தவுடன் புல்லிடமிருந்து அந்த வலியை திரும்ப தனக்குள் வாங்கிக் கொள்வாராம்.

ஒரு பண்டிதருடன் இவ்வாறு ஒருமுறை வாதத்தில் ஈடுபட நேர்ந்தபோது, வழக்கம் போல, தமது வலியை தற்காலிகமாக தர்ப்பை புல்லின் மேல் இறக்கி வைத்துவிட்டு வாதம் புரியலானார். புல்லும் அதுபாட்டுக்கு துள்ள ஆரம்பித்தது.

 ஒரு கட்டத்தில் வாதம் மிகவும் தீவிரமடைய, உட்கார்ந்திருந்த இருவரும் நின்றுகொண்டு வாதம் புரியலாயினர். புள் துள்ளுவது அதிகரித்து சற்று உயரமாகவே துள்ள ஆரம்பித்தது.

இதை ஆச்சரியத்துடன் பார்த்த அந்த பண்டிதர் தீட்சிதரிடம், “இவ்வளவு தவ வலிமை கொண்ட நீங்கள் ஏன் நிரந்தரமாக அந்த வலியை போக்கிகொள்ளக்கூடாது? எதற்கு புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.

*“இந்த வயிற்று வலி என் கர்ம வினையால் எனக்கு வந்தது. நமது முந்தைய செயல்களினால் ஏற்படும் கர்ம வினையை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.*

*அதிலிருந்து தப்பிக்க எண்ணக் கூடாது. முற்பிறப்பில் நான் செய்த சிறு பாவத்தின் பலன் தான் இந்த சூளை  நோய். இப்போது நான் இதை அனுபவிக்கவில்லை எனில், இதை அனுபவிப்பதற்காக இன்னொரு பிறவி எடுக்க நேரிடும். அதற்காகத் தான் புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறேன்!” என்றாராம்.*

இதிலிருந்து மிகப் பெரிய தவசீலர்களே கூட கர்மாவிலிருந்து தப்பிக்க நினைக்காமல் அதை அனுபவித்து தீர்க்கவே முனைந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறதல்லவா?

தவசீலர்களை விடுங்கள்…. படைத்தவனே கூட அவன் செய்த வினையிலிருந்து தப்ப முடியாது எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?

குருக்ஷேத்திரத்தில் அர்ச்சுனனுக்கு யாதவ குலத் தலைவனான கிருஷ்ணன் போர்க்களத்திலேயே கீதையைப் போதித்தார்.

 பின் 18 நாட்கள் நடந்த பாரதப் போர் பாண்டவர்களின் வெற்றியுடன் முடிவடைந்தது. பின்னர், தருமருக் குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு துவாரகை சென்ற கண்ணன் அரசாண்டார்.

மிதமிஞ்சிய கர்வத்தில் திளைத்த யாதவர்கள் துவாரகையில் வரம்பு கடந்த சுகபோகத்தில் ஈடுபட்டனர்.

 ஒரு நாள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணிப் பெண் போல வேடமிட்டு, அங்கு வந்த ஒரு ரிஷியிடம், “என்ன குழந்தை பிறக்கும்?’ எனக் கேட்டனர். உண்மையை உணர்ந்த ரிஷி கடுங்கோபத்துடன், “இரும்பு உலக்கைதான் பிறக்கும்;

 அதனால் உங்கள் குலமே அழியும்’ என சாபமிட்டார். அதன்படியே மதுவனத்தில் மது உண்ட மயக்கத்தில் யாதவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள பிரபாசபட்டினக் கடற்கரையில் யாதவர் குலம் முற்றும் அழிந்தே போனது.

(தனது இனம் தன்னைத் தானே அடித்துக்கொண்டு அழிவதை எந்த மன்னன் கண்டு மெளனமாக இருப்பான் ?

 மதுவினால் அது நடந்துவிடக்கூடாது என்று எண்ணி யாதவர்களின் அரசன் உக்ரசேனன் ஒரு கட்டத்தில் துவாரகையில் மது உற்பத்தியையும் மது அருந்துவதையும் கூட தடை செய்தான்.

 கிருஷ்ணர் அனைத்து யாதவர்களையும் சமுத்திரத்தில் குளிக்கச் செய்து பாவத்தை போக்க முற்பட்டார். ஆனால் விதி வலியதன்றோ? பிரபாசப் பட்டின கடற்கரையில் மதுவருந்தி தங்கள் முடிவை தேடிக்கொண்டார்கள் யாதவர்கள்!)

இது கண்டு கவலையுற்ற பலராமர் யோகத்தில் அமர்ந்து உயிர் துறந்து பலராம அவதாரத்தை முடித்துக் கொண்டார்.

நடந்த அனைத்தையும் பார்த்த கிருஷ்ணர், தன்னைத் தவிர யாவரும் அழிந்தனர்; தானும் தன் அவதாரத்தை முடிக்கும் காலம் வந்துவிட்டது என எண்ணி, குரா மரத்தடியில் சரிந்து அமர்ந்தார்.

அங்கு வந்த ஜரா எனும் வேடன் எய்த அம்பு குறி தவறி கண்ணனின் காலில் தைத்தது; கண்ணனின் உயிர் பிரிந்தது. அவர் சரீர தியாகம் செய்து கொண்ட இடம்தான் இப்போது தோரஹரசாகர் என அழைக்கப்படுகிறது.

இது ஹிரண்ய நதிக்கரையில் உள்ளது. இந்நதிக்கரையில் அர்ச்சுனன் கண்ணன் மகனின் உதவியுடன் சந்தனக் கட்டைகளை அடுக்கி, கண்ணனுக்கு ஈமக்கிரியைகளைச் செய்து முடித்தான்.

அப்போது கண்ணனின் தேகம் ஒரு மரக்கட்டையாகி நீரில் மிதந்து பூரி கடற்கரையருகில் ஒதுங்கியது. அதை எடுத்து ஒரு சிலை செய்து பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர்.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது கடவுள் அவதாரத்துக்கும் பொருந்தும் என்பதை இதனால் நாம் அறிந்து கொள்ளலாம்.

 கிருஷ்ணாவதாரம் துவாபர யுக முடிவில் நிறைவுற்றது. அதன்பின் தோன்றிய யுகம்தான் நாம் வாழும் இந்த கலியுகம். கிருஷ்ணர் இந்த பூமியிலிருந்து சென்றவுடன், கலி புருஷன் அவதரித்துவிட்டான்.

*இதிலிருந்து என்ன தெரிகிறது…. நீங்கள் மமதையால் செய்யும் சிறு பாவம் கூட உங்கள் சந்ததியையே வாட்டும் ஆபத்து இருக்கிறது என்பது தானே?*

*மொத்தத்தில் கர்மவினை என்பது கடவுளுக்கும் பொருந்தும். அதிலிருந்து எவருமே தப்ப முடியாது ! ஆகவே தான் வள்ளுவர் கூட திருக்குறளில் ‘ஊழ்’ என்று ஒரு தனி அதிகாரமே படைத்திருக்கிறார்.*

*ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று*
*சூழினுந் தான்முந் துறும். (குறள் 380)*

*பொருள் : விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.*

*ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*மந்திர ஜபம் என்றால் என்ன ?*

*மந்திர ஜபம் செய்வதற்கான நேரம்*

*ஜபத்தில் பலவகை உண்டு*

*ஜபம் செய்யும் திசையும் பலனும்*

*ஜபம் செய்யும் இடமும் பலனும்*


*மந்திர ஜபம் என்றால் என்ன ?*

அமைதி மற்றும் நிம்மதி வெளியே காசு கொடுத்து வாங்கும் விஷயம் இல்லை . அது நமக்குள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய புதையல் . இருந்த இடத்தில் இருந்தே இறைவனை காணவும் , மனதை நெறிப்படுத்தவும் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த விஷயம் தான் மந்திர ஜபம் .

இறைவனின் சக்தி கொண்ட வார்த்தை மந்திரம். இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை அல்லது மந்திரத்தை திரும்பத் திரும்பச் சொல்வதே ஜபம்.

ஒரு தெய்வத்துக்கு உரிய மந்திரத்தை, முறையாக, குருவிடம் இருந்து உபதேசம் பெற்று, அவர் காட்டிய வழியில் ஜபிப்பது ‘மந்திர ஜபம்’.
மந்திர ஜபம் செய்ய நல்ல ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலை வேண்டும் . அதை நல்ல குருமார்களின் அறிவுரையோடு தேர்வு செய்துக் கொள்ளலாம் .

இதற்காக 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். இதன் தாத்பரியமாவது ,உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும் எனக் கூறப்படுகிறது .

மந்திர ஜபம் செய்யும் போது வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் தான் மாலையை அழுத்த வேண்டும். நமக்கு வசதியாக இருக்கிறது என்று ஆட்காட்டி விரலில் ஜபம் செய்யக்கூடாது . மந்திர ஜபம் செய்யும் போது , கிருஷ்ண மணி என்று அழைக்கப்படும் 109 வது மணியை எப்போதும் தாண்டக்கூடாது. மேலும் மீண்டும் ஜபித்த வழியே மாலையை திருப்பி ஜபிக்க வேண்டும் என்பது நியதி .

*மந்திர ஜபம் செய்வதற்கான நேரம்*

சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜபம் செய்தாலும் பன்மடங்கு பலன் ஏற்படும்.

*ஜபத்தில் பலவகை உண்டு*

வாசிக ஜபம் : உரக்க வாய்விட்டு (பிறர் கேட்கக் கூடிய அளவுக்கு ) ஜபம் செய்வது வாசிக ஜபம் எனப்படும்.

உபாம்சு ஜபம் : ஒலி வெளியே எழுப்பாமல், உதடுகளும் நாக்கும் அசைய மந்திரத்தை உச்சரிப்பது உபாம்சு ஜபம் எனப்படும்.
மானஸ ஜபம் : இந்த முறையில் புனித மந்திரம் மனதிற்குள்ளேயே ஜபிக்கப்படுகிறது.

லிகித ஜபம் : புனித மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதுவது என்பது லிகித ஜபமாகும்.

அகண்ட ஜபம் / ஜபயக்ஞம் : இதில் புனித மந்திரமானது ஒரு குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபிக்கப்படுகிறது. இதை கூட்டு வழிபாடாகவும் செய்வது வழக்கம். மிக நீண்ட நேரம், பலரால் சேர்ந்து செய்யப்படும் ஜபம், ‘ஜபயக்ஞம்’ என்று அழைக்கப்படுகின்றது.

அஜபா ஜபம் : இறைவன் நாமத்தை எந்த நேரமும் ஒவ்வொரு மூச்சுடனும் இடைவிடாமல் ஓதி வருவதே அஜபா ஜபமாகும்.
ஆதார சக்ரங்களில் ஜபம் : இந்த முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி, சக்ஸ்ராரம் வரையிலுள்ள ஒவ்வொரு சக்ரத்திலும் மனதை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது.

புரஸ்சரணம் : இதில் ஒவ்வொரு நிலையையும் தாண்டி சக்ஸ்ராரத்தை அடைந்தவுடன் சாதகனானவன், மீண்டும் சகஸ்ராரத்தில் தொடங்கி ஒவ்வொரு ஆதாரமாக மனதை நிறுத்தி ஜபம் செய்வது புரஸ்சரணம் எனப்படும்.

சாதாரண பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு மேலானது. அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது, உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபமானது 1000 மடங்கு உயர்ந்தது, அதிகமான விரைவாக பலனை தர கூடியது. என்று “ மனு சம்ஹிதை “ என்ற நூல் கூறுகிறது.

*ஜபம் செய்யும் திசையும் பலனும்*

கிழக்கு நோக்கி ஜபம் செய்தால்: வசியம்
தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால்: நோய் தீரும்
தெற்கு நோக்கி ஜபம் செய்தால்: பெரும் தீமை
தென்மேற்கு நோக்கி ஜபம் செய்தால்: வருமை
மேற்கு நோக்கி ஜபம் செய்தால்: பொருட்செலவு
வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால்: தீயசக்திகளை ஓட்டுதல்
வடக்கு நோக்கி ஜபம் செய்தால்: தங்கம் கல்வி கிடைக்கும்
வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால்: முக்தி கிடைக்கும்

*ஜபம் செய்யும் இடமும் பலனும்*

வீடு: பத்து மடங்கு பலன் பலன்
பசுவின் அருகில் : 100 மடங்கு பலன்
வனம் : 1000 மடங்கு பலன்
ஆற்றங்கரை ,குளம்: ஆயிரம் மடங்கு பலன்
பர்வதத்தின் மீது அமர்ந்து: 10000 மடங்கு பலன்
கோவிலில் அமர்ந்து: லட்சம் மடங்கு பலன்
மலை உச்சி: ஒரு கோடி மடங்கு பலன்
சிவன் கோயில் : இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னிதி : பத்து மடங்கு பலன்
சிவன் சன்னிதி : பல கோடி மடங்கு பலன்
குருவின் பாத கமலங்களுக்கு அருகில்: கோடானகோடி பலன்

*மந்திர ஜபத்தால் ஏற்படக்கூடிய பலன்கள்*

ஞாபக சக்தி,
கூர்மையாக சிந்தித்தல்,
வேகமான செயல்

தீராத வியாதியஸ்தர்களின் அருகில் அமர்ந்து ஜபம் செய்தால் அவர்கள் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாகக் காணலாம்.

தினம் மிகக் குறைந்த அளவு, மிகக் குறைந்த நேரத்தில் செய்யப்படும் ஜபத்தின் மகிமையை, எவ்வளவு சொன்னாலும் அனுபவத்தின் மூலமே உணர முடியும். நம் தினசரிக் கடமைகளுள் ஒன்றாக ஜபம் செய்வதைச் சேர்க்க முடியுமெனில், நமக்குள்ளும் அற்புதங்களை உணரலாம்.