செவ்வாய், 17 செப்டம்பர், 2019

வழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்?
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.
------------‐-----------------------------------------
சதுர்த்தியன்று கடைபிடிக்க வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,
ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும்படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.
------------‐-----------------------------------------
கணபதிக்கு பிரியமானவை!

கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.
------------‐-----------------------------------------
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் காலத்தால் பழமையான ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் தஞ்சை மாவட்டத்தில் திருவுடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியவையாகும்.

விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும். நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

இருப்பிடம்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகாவில், திருப்புத்தூர் - காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ளது பிள்ளையார்பட்டி. திருப்புத்தூரிலிருந்து சுமார் 9 கி.மீ., தூரத்திலும், காரைக்குடியிலிருந்து மதுரை வரும் ரோட்டில் சுமார் 18 கி.மீ., தூரத்திலும் உள்ளது.
------------‐-----------------------------------------

------------‐-----------------------------------------
விநாயகரின் 32 வடிவங்கள்!

விநாயகரின் 32 வடிவங்கள்: 1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்தி கணபதி, 4. வீர கணபதி, 5. சக்தி கணபதி, 6. துவிஜ கணபதி, 7. சித்தி கணபதி, 8. உச்சிஷ்ட கணபதி, 9. விக்ன கணபதி, 10. க்ஷிப்ர கணபதி, 11. ஹேரம்ப கணபதி, 12. லட்சுமி கணபதி, 13. மகா கணபதி, 14. விஜய கணபதி, 15. நிருத்த கணபதி, 16. ஊர்த்துவ கணபதி, 17. ஏகாட்சர கணபதி, 18. வர கணபதி, 19. த்ரயக்ஷர கணபதி, 20. சிப்ரப்ரசாத கணபதி, 21. ஹரித்ரா கணபதி, 22. ஏகதந்த கணபதி, 23. சிருஷ்டி கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. ருணமோசன கணபதி, 26. துண்டி கணபதி, 27. துவிமுக கணபதி, 28. மும்முக கணபதி, 29. சிங்க கணபதி, 30. யோக கணபதி, 31. துர்க்கா கணபதி, 32. சங்கடஹர கணபதி.

கோபுர கணபதி: கோயில்களின் கோபுர வாயிலில் கணபதிக்குத் தனிச்சன்னதி அமைக்கப்படும். அவரைக் கோபுரக் கணபதி என்று கூறுவர். அவ்வாறு இல்லாதபோது கோபுர கோஷ்டத்தில் இவரை அமைப்பர். இவரை வணங்கிய பிறகே, பக்தர்கள் ஆலய தரிசனத்தைத் தொடங்குவர். சில ஆலயங்களில் கோபுரக் குடைவரை எனப்படும் கோபுரத்தின் உட்புறம் அமைந்த மேடைகளிலும் விநாயகரைக் காணலாம். இவரைக் குடைவரைப் பிள்ளையார் என்பர். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் குடைவரையில் கலங்காமல் காத்த விநாயகர் என்ற பெயரில் குடைவரைப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

எதிர்நோக்கும் கணபதி: சில ஆலயங்களில் இறைவன் கிழக்கு நோக்கியிருக்க ராஜ கோபுரம் அல்லது தலைவாசல் தெற்கு நோக்கி இருக்கும். இத்தகைய கோயில்களில் கோயிலுக்குள் நுழைந்ததும் வழிபடத்தக்க வகையில் உள்மதில் ஓரமாக வாயிலை நோக்கியவாறு ஒரு கணபதியைச் சிறிய சன்னதியில் எழுந்தருள வைத்துள்ளனர். இவரை எதிர்கொள் கணபதி என்பர். மேற்கு நோக்கிய திருமயிலை கபாலீசுவரர் ஆலயத்தில் கிழக்கு வாயிலுக்கு நேராகவுள்ள நர்த்தன கணபதி, திருமழிசை ஒத்தாண்டேசுவரர் ஆலயத்தின் தேவராஜகணபதி, திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின் முல்லைவன கணபதி முதலான கணபதியர் எதிர்கொள் கணபதியராக விளங்குகின்றனர்.

கொடிமர கணபதி : கோயிலில் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கொடிமரத்திற்கு முன்பாகவோ, அவற்றின் பீடத்தின் அடியிலோ சிறிய மாடத்துள் இருப்பவரைக் கொடிமரக் கணபதி என்றும், கம்பத்தடி கணபதி என்றும் கூறுவர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கொடிமரக் கணபதியாகப் படித்துறை விநாயகர் அமைந்துள்ளார். இந்த ஆலயம் செப்பு ஓடு வேய்ந்து மூன்று கலசங்களுடன் அழகிய சபையாக உள்ளது. தனிச் சன்னதியாக அமைக்க முடியாதபோது பலிபீடத்தின் கிழக்கு அடிப்பட்டைப் பகுதியில் சிறிய மாடம் அமைத்து அங்கு விநாயகரை அமைப்பர். இப்படிச் சிறிய மாடத்துள் இருந்தாலும் பெரும் புகழ் பெற்ற விநாயகரைப் பல இடங்களில் காணலாம். திருவலஞ்சுழியில் மூலஸ்தானத்தில் கடல் நுரையால் ஆன வடிவில் விநாயகர் ஸ்வேத (வெள்ளை) விநாயகர் என்ற பெயரில் விளங்குகிறார். பலிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கணபதிக்குச் சிறப்பளித்து முகமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றை அமைத்துத் தனி ஆலயமாக ஆக்கியுள்ளனர். இவருக்குக் கொடியேற்றி விழா நடத்துகின்றனர். பலிபீடத்திற்கு முன்பாக அமையும் கணபதிக்குச் சங்கல்ப கணபதி என்று பெயர். முன்னாளில் இவருக்கு முன்பாகச் சங்கல்பம் செய்து கொண்டு, அன்றைய பஞ்சாங்கத்தைப் படித்த பின்னரே ஆலயத்தில் பூசைகளை மேற்கொள்வர்.

கன்னிமூலை கணபதி: பிராகாரங்களில் கன்னிமூலை எனப்படும் தென்மேற்குமுனையில் விநாயகர் சன்னதி அமைப்பது வழக்கம். அனைத்துப் பிரகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி ஆலயம் அமைகிறது என்றாலும் முதல் பிரகாரத்தில் அமையும் கன்னிமூலை கணபதியே பிரதான கணபதியாகப் போற்றப்படுகிறார். இவரைத் தல விநாயகர் என்று கொண்டாடுகின்றனர். சபரிமலையில் கன்னிமூலை கணபதி மிகவும் விசேஷமானவர்.

துவார கணபதி: ஆலயத்தின் ஒவ்வொரு வாயிலிலும் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனும் அமைக்கப்படுகின்றனர். இவர்களை முறையே துவார கணபதி, துவார சுப்பிரமணியர் என்று அழைப்பர். தத்துவவாதிகள் இவர்களை உலக உற்பத்திக்கு ஆதாரமான பிந்து நாதங்களின் வடிவம் என்கின்றனர். மேலும், விநாயகர் கல்யாண கணபதி, பந்தக்கால் கணபதி, நந்தவனப் பிள்ளையார், வசந்த மண்டப கணபதி, தேரடிமண்டப கணபதி என்று பல்வேறு பெயர்களில் ஆலயத்தில் பல இடங்களில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

விமான கணபதி: ஸ்ரீவிமானத்தில் அமையும் பஞ்ச கோட்டங்களில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள கோட்டத்தில் நர்த்தன விநாயகரைக் காணலாம். இவர் கோஷ்ட கணபதி. சில விமானங்களில் மேற்பகுதியில் விநாயகரை அமைத்துள்ளனர். மயிலாடுதுறை மயூரநாத சுவாமி ஆலயத்தில் ஸ்ரீவிமானத்தின் அருகில் சிறிய சன்னிதியில் ஸ்ரீவிமான கணபதி எழுந்தருளியுள்ளார். அகத்தியர் மணலைத் திரட்டி இவரது திருமேனியை அமைத்து வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகிறது.
------------‐-----------------------------------------
வினை நீக்கும் மந்திரம்!

ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள்; நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம், ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.  அதே போல் எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் போதும் விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தால் விநாயகர் அருளால் எந்த வினைகளும் தடைகளும் வராமல் நாம் தொடங்கும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.

பழங்காலத்தில் சுவடிகள் எழுதத் துவங்கும்போது பிள்ளையார்சுழிக்குப் பதிலாக விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று எழுதினர். இவ்வாறு சொல்லியோ அல்லது எழுதியோ தொடங்கும் பணிகள்  தடங்கலின்றி விரைவில் நிறைவேறும் என்பர்.
------------‐-----------------------------------------
சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே!

பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!

ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே!

என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே!

தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க  வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே!

எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.
------------‐-----------------------------------------
விநாயகர் அகவல்!

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன் அரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும் மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்து துரிய மெய்ஞ்ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத்தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து

குரு வடிவாகிக் குவலம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே!
------------‐-----------------------------------------
வடக்கே தலை வச்சா என்னாகும்?

இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை பெரியவர்கள் கண்டித்தால் நீ பழைய பஞ்சாங்கம்! எங்கே தலை வைத்தால் உனக்கென்ன! என்று குரலில் கேலியைக் குழைத்து பேசுகிறார்கள். பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில் சிவனுடன் போர் புரிந்தாராம். போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன் வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ அவரது தலையை வெட்டி வரும்படி கூறினாராம். ஒரு யானை வடக்கே தலை வைத்து படுத்திருந்ததாம். அதன் தலையைக் கண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். இதெல்லாம் புராணக்கதை என்று நம் பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் இந்தக் கதைக்கு அறிவியல் பின்னணியே காரணம். பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம். அதனால் வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். இதனால் குழம்பிய மனநிலை உருவாகும். ஆழ்ந்த தூக்கம் உண்டாகாது. தூக்கம் கெடும்போது உடல்நலம் பாதிக்கும். உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நம் மரபு. சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட எண்ணினால் வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர். இதற்குசள்ளேகனம் என்றும் பெயருண்டு. நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது.  அறிவியல் செய்தியை படித்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள். பாமரர்கள் புரிந்து கொள்ளவே பிள்ளையார் பற்றிய புராணக்கதையை பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். புரிகிறதா!
------------‐-----------------------------------------
   தரணியாள வந்த தர்மத்தின் தலைவன்

மனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி : ராமன் என்பதற்கு ஆனந்தமாக இருப்பவன் ஆனந்தம் தருபவன் என்று இருவிதமான பொருள்கள் உண்டு. மனதில் மகிழ்ச்சி இருக்கும் போது புறச்சூழ்நிலைகள் ஒருவனை பாதிப்பதில்லை. கைகேயி பெற்ற வரத்தால் பட்டு உடுத்தி பட்டாபிஷேகத்திற்கு தயாரான ராமன். மரவுரி கட்டி காட்டுக்கு கிளம்பிச் சென்றார். முகத்தில் எந்த வருத்தமும் இல்லை. மலர்ந்த தாமரை மலரைப் போல புன்னகையுடன் கிளம்பினார். கவிச்சக்கரவர்த்தி கம்பர் இதனை "சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை முகத்தினன் என்று குறிப்பிடுகிறார். கடவுளாகிய மகா விஷ்ணு தர்மத்தை மனிதனால் கடைபிடிக்க முடியும் என்று வாழ்ந்து காட்டுவதற்காக ராமனாக அவதரித்தார். எந்த இடத்திலும் ராமன் "இது என் அபிப்ராயம் என்று சொன்னதே இல்லை. "தர்மம் இப்படி சொல்கிறது "மகான்கள் இவ்விதம் சொல்கிறார்கள் என்று தான் சொல்வார். தந்தை தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ராமன் காட்டுக்குச் சென்று தர்மத்தை நிலைநாட்டினார். எந்தநிலையிலும் அவர் மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில் மலர்ச்சியையும் இழந்ததே இல்லை.

மகிழ்ச்சி தந்த ராமாயணம் : மூதறிஞர் ராஜாஜி "சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதினார். அவர் ராமாயணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ""சீதை, ராமன், அனுமன், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு செல்வமோ நிம்மதியோ இல்லை. இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து வாசகத் தமிழில் எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. கங்கையும், காவிரியும் ஓடும்வரையில் சீதாராம சரிதம் பாரத நாட்டில் இருந்து அனைவரையும் தாய் போல் பக்கத்தில் இருந்து காக்கும். நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றைவிட "சக்கரவர்த்தி திருமகன் எழுதி முடித்தது தான் மேலானபணி என்பது என் கருத்து. அதுவே என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தது. சீதாபிராட்டியைத் தியானிப்போமாக. நம்முடைய பிழைகள் அதிகம். அவளுடைய கருணையன்றி நமக்கு கதியில்லை. "குற்றம் செய்யாதார் எவர் தாம் என்று கேட்ட அவள் நம்மையும் காப்பாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த சீதை : கம்பர் பாடிய கம்பராமாயணம் புகழ்பெற்றது. அவர் தன் நூலில், சீதையை இலங்கைக்கு ராவணன் தூக்கிச் சென்ற நிகழ்ச்சியை விவரிக்கும்போது, வால்மீகியிடம் இருந்து வேறுபடுகிறார். ராவணன் சீதையைக் கையால் தீண்டாமல், பர்ணசாலையோடு (சீதை தங்கியிருந்த இடம்) பெயர்த்துக் கொண்டு போனதாக குறிப்பிடுகிறார். ஒரு கொடியவன் ஒரு பெண்ணிடம் அதர்மமாக நடந்து கொண்டான் என்று சொல்லக்கூட, கம்பரின் அன்பு நெஞ்சம் இடம் தரவில்லை. துளசிதாசர் தன்னுடைய இந்தி ராமாயணத்தில் ராவணன் தூக்கிச் சென்றது உண்மையான சீதை அல்ல என்று கூறுகிறார். ராவணன் வந்த போது பிராட்டியார், மாயா சீதையை உருவாக்கி விட்டு மறைந்து விட்டதாகவும், ராமன் அக்னி பரீட்சை நடத்தும்போது உண்மையான சீதை தீயில் இருந்து வந்தததாகவும் குறிப்பிடுகிறார். இந்த ராமாயணம் வடநாட்டு மக்களிடம் பெரிதும் பரவியுள்ளது.

காட்டுக்குச்சென்ற கட்டுச்சோறு : ராமபிரான் காட்டுக்குச் செல்லும்போது கட்டுச்சோறு கொண்டு சென்ற விபரம் உங்களுக்கு தெரியுமா? கோசலையின் மணிவயிறு, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனைப் பெற்றெடுக்கும் பேறு பெற்றது. அவள் தன் பிள்ளையைக் கண்ணின் மணிபோல காத்து வந்தாள். எந்தப் பிள்ளை வெளியூருக்குக் கிளம்பினால் அப்பா தன் பங்குக்கு பணமும், அம்மா பசிக்கு கட்டுச்சோறும் கொடுத்து அனுப்புவது அக்கால வழக்கம். ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது. அப்போது தசரதர் பிள்ளைக்கு "சத்தியம் என்னும் பணத்தை தந்தார். கோசலை ஒரு விசேஷமான கட்டுச்சோறு செய்து கொடுத்தாள். "ஒருநாள் இருநாள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கெட்டுப்போகாதது இது என்று ராமனிடம் சொன்னாள். ""என் கண்ணே! ராகவா! நீ எந்த தர்மத்தை பக்தியோடு அனுசரித்து வந்தாயோ அந்த தர்மத்தையே கட்டுச்சோறாக தருகிறேன். அதை என்றென்றும் பின்பற்று. அது உன் உடனிருந்து காக்கும், என்று ஆசியளித்தாள்.

ராமராஜ்ய மன்னர்கள் : ராவணவதம் முடிந்து ராமர்,சீதை, லட்சுமணர் அயோத்தி திரும்பினர். ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தேறியது. மங்களஇசை முழங்கியது. அந்தணர்கள் வேதம் ஓதினர். சங்குகள் முழங்கின. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். தவஞானிகள் மந்திரம் சொல்லி புனிதநீரால் ராமனுக்கு அபிஷேகம் செய்தனர். தம்பியர் சூழ்ந்து நின்று வெண்சாமரம் வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான். அனுமன் ராமபிரானின் திருவடிகளைத் தாங்கி நின்றார். அப்போது குலகுரு வசிஷ்டர் கிரீடத்தை ராமனின் தலையில் சூட்டி மகிழ்ந்தார். அக்காட்சியைக் கண்ட அனைவரும் தங்களையே மன்னர் போல உணர்ந்து மகிழ்ந்தனர். தங்கள் தலையிலேயே கிரீடம் வைத்தது போல எண்ணினர். ஏனென்றால், ராமராஜ்யத்தில் ஏற்றத்தாழ்வு என்பதே கிடையாது. அனைவரும் சமமாக மதிக்கப்பட்டனர். கடைநிலையில் உள்ள பிரஜையாக இருந்தாலும், ராமபிரான் அவருடைய எண்ணத்திற்கும் மதிப்பளித்து அரசாட்சி நடத்தினார்.

பத்துதலை ராணனை ஒற்றைத்தலை ராமன் வென்றான் : தர்மத்தை ஒருவன் பின்பற்ற வேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற மனநிலை வேண்டும். தர்மவாதிகளை உலகம் பரிகாசம் செய்தாலும், விடாமல் பின்பற்றும் தைரியம் வேண்டும். ராமபிரான் வாழ்வில் எத்தனையோ துன்பத்தைச் சந்தித்தாலும் தர்மத்தைக் கைவிடவில்லை. எவன் ஒருவன் தர்மத்தைக் காக்கிறானோ அவனைத் தர்மம் காக்கும். ராமபிரானும், ராவணனும் தர்மத்தைப் பின்பற்றும் விஷயத்தில் எதிர் துருவங்கள். ராமனுக்கு ஒரு தலை. ராவணனுக்கு பத்துத்தலை. ஒருதலையிடம் பணிவும், தர்மமும் இருந்தது. பத்துதலையிடம் ஆணவமும், அதர்மமும் இருந்தது. அதர்மம் ஆயிரம் வழிகளில் தர்மத்தைச் சுற்றி வளைத்தாலும், தர்மமே இறுதியில் வெற்றி பெறும் என்பதை ராமகாவியம்வலியுறுத்துகிறது. இதையே "தர்மம் தலை காக்கும் என்று இன்றும் போற்றுகின்றனர்.

அருள் கொடு அயோத்தி ராமா! ராமநவமி பிரார்த்தனை : ராமநவமியன்று மட்டுமல்ல! யாரொருவர் தினமும் காலையில் இந்தபாராயணத்தைப் பக்தியுடன் படிக்கிறாரோ, அவர் பக்தர்களில் சிறந்த ரத்தினமாவார். ரகுகுல திலகமான ராமச்சந்திரமூர்த்தியின் திருவருளால் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு அடைவார்.

* புன்சிரிப்பும், இனிய பேச்சும் கொண்டவரே! செந்தாமரைக் கண்களால் அருள்பவரே! அகன்ற நெற்றியை உடையவரே! நீண்ட குண்டலங்களை அணிந்தவரே! ரகுவம்ச திலகமே! ராமபிரானே! உமது மலர்முகத்தைத்
தியானிக்கிறோம்.

* பகைவர்களுக்கு பயத்தைக் கொடுப்பவரே! வேண்டியவர் விரும்பும் வரங்களைத் தருபவரே! சிவதனுசை முறித்து சீதாதேவியை திருமணம்
செய்தவரே!, ராமபிரானே! உமது மலர்முகத்தை வணங்குகிறோம்.

* பத்மம், அங்குச ரேகைகளைக் கொண்ட கைகளால் பக்தர்களுக்கு மங்களத்தைஅருள்பவரே! ஞானியர்களின் மனம் என்னும் வண்டால் சேவிக்கப்படுபவரே! கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யாவின் சாபத்தைப்போக்கியவரே! ராமபிரானே! உமது மலர்முகத்தைப் போற்றுகிறோம்.

* வேதங்களால் துதிக்கப்படுபவரே! நீலவண்ணம் கொண்டவரே! ரகுவம்ச நாயகரே! நீலரத்தினம் பதித்த ஆபரணங்களை அணிந்தவரே! பக்தியில் சிறந்தவர்களால் பூஜிக்கப்படுபவரே! முத்துக்கள் இழைத்த சிம்மாசனத்தில்
வீற்றிருப்பவரே! பட்டாபிஷேக ராமபிரானே! உமது மலர்முகத்தைச் சிந்திக்கிறோம்.

* எல்லாவித பாவங்களையும் போக்குபவரே! கிரகதோஷத்தை நீக்குபவரே! பார்வதிதேவியும், பரமேஸ்வரனும் பக்தியுடன் பூஜிக்கும் திருநாமத்தைக் கொண்டவரே! விஷ்ணு சகஸ்ர நாமத்தால் ஆராதிக்கப்படுபவரே! ராமபிரானே! உமது மலர்முகத்தை எண்ணி மகிழ்கிறோம்.
-------------------------------------------------------------------------------
சீதை ராமனுக்கு கூறிய மூன்று விதமான பாவங்கள்!

ஒரு கணவன் கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு பிறருடன் அனாவசியமாக சண்டைப் போட்டால் மனைவி அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி அவன் கோபத்தைத் தடுக்க வேண்டும். மாறாக அவன் தவறு செய்யும் போது அதை அனுமதித்து விட்டு துன்பம் நேர்கையில் அவனோடு சேர்ந்து துயரப்படுவதில் பயனில்லை. செய்தக்க அல்ல செயக்கெடும் என்பது போலவே செய்தக்க செய்யாமையினும் கெடும் அல்லவா? இதற்கு ராமாயணத்திலேயே பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஸ்ரீராமபிரான் தண்டகாரண்யத்துக்குப் போன போது ஸுதீஷர் முதலிய மகரிஷிகள் அவரைக் கண்டார்கள். தாங்கள் அரக்கர்களால் படும் துன்பங்களை அவரிடம் கூறி அவர்களைத் தண்டிக்கும் படி கேட்டுக்கொண்டார்கள். ஸ்ரீராமரும் அவ்வாறே அரக்கர்களை அழிப்பதாக வாக்களித்தார். பின்னர் சீதாபிராட்டி இதைத் தவறு என்று கருதி அன்போடும் இதமாகவும் சில வார்த்தைகளை ஸ்ரீ ராமபிரானுக்குச் சொன்னாள். உலகத்தில் மூன்று விதமான பாவங்கள் ஏற்படுவது உண்டு. அவை: 1. பொய் வார்த்தை, 2. பிறர் மனைவியைக் கவர்வது, 3. பகைமையில்லாதவரிடம் கொள்ளும் கோபமும் அதனால் ஏற்படும் நாசமும். தங்களுக்குப் பொய் என்பதே நாவில் வந்ததில்லை. பிற பெண்களைத் தாங்கள் இச்சிப்பதேயில்லை. ஆனாலும் மூன்றாவது தோஷம் ஒரு வித தீங்கும் நமக்குச் செய்யாதவர்களைக் கொல்வது. இதை நீங்கள் புரிவது நியாயமில்லை.

ஒரு மகரிஷி செய்த கடும் தவத்தைக் கெடுக்க கூர்மையான கத்தி ஒன்றை தேவேந்திரன் அவரருகில் கொண்டு வந்து வைத்து விட்டான். தியானம் முடிந்த பின் அந்த ரிஷி கத்தியைக் கையில் எடுத்து பலவிதமாகப் பயன் படுத்தி தமது தவப்பயனை இழந்தார் என்று ஒரு வரலாறு உண்டு. தங்களுக்குத் தெரியாத நியாயமில்லை. நான் தங்களுக்குப் புத்தி புகலவில்லை. ஆனால்  நினைவுபடுத்துகிறேன். எதற்கும் தம்பி லட்சுமணனைக் கலந்து கொண்டு நியாயப்படி செய்யலாம் என்றாள். இதைக் கேட்ட ராமபிரான் நீ சொல்வது தான் நியாயம். ஆனால் நான் அரக்கர்களைத் தெரிந்து கொண்டு அவர்களின் கொடூரங்களை அறிந்த பின்னரே அவர்களை அழிக்க முற்படுகிறேன் என்றார். இது போல் ராமாயணத்தில் சுக்ரீவன், வாலியை சண்டைக்கு இழுத்த போது வாலியின் மனைவி தாரை வாலியிடம் வந்து ராமன் என்பவன் அவனுக்கு உதவிகரமாக வந்திருக்கிறான். அவன் மகா பராக்கிரமசாலி. தாங்கள் சண்டைக்குப் போக வேண்டாம் என்று சொல்லித் தடுத்தும் வாலி சண்டைக்குச் சென்று உயிரை இழந்தான். அது போலவே ராவணனும், தன் மனைவி மண்டோதரி சொன்ன வார்த்தையைக் கேட்காமல் உயிரை இழந்த போது மண்டோதரி அதையே சொல்லி பிரலாபித்து அழுதாள். ராமர் பிறந்த இடமான அயோத்தியைச் சுற்றி புராதன பல குளங்கள் உள்ளன. அவை ராமாயணம் சார்ந்த பல கதாபாத்திரங்களை நினைவூட்டுகின்றன.

பிரம்ம குளம் : அயோத்தியின் டெக்ரி பஜாரிலிருந்து ராஜ்காட் செல்லும் பாதையில் பிரம்ம குளம் உள்ளது. பிரம்மா இங்கு தங்கி யாகம் செய்து பலன் பெற்றதாக ஐதீகம். இந்தக் குளம் அருகில் பிரம்மாவுக்குக் கோயில் உள்ளது. இந்தக் குளத்தில் குளித்து பிரம்மாவை தரிசித்து மனமார வேண்டினால் பிரம்மலோகம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

சீதா குளம் : ராமர் காலார நடந்த பகுதியை அசோக வனம் என அழைக்கின்றனர். இதனுள் சீதாகுளம் உள்ளது. இந்தக் குளத்தை உருவாக்கியதே சீதா தான் என்பது நம்பிக்கை. வருடா வருடம் அகர்காயன் கிருஷ்ண சதுர்த்தியிலும், வைகாசி சுக்ல நவமியிலும் இந்தக் குளத்தில் குளித்து சீதையை வணங்கினால் பெண்களின் மனம் போல் வாழ்வு அமையும்.

வசிஷ்டர் குளம் : அயோத்தி நகருக்குள் சக்கர தீர்த்தத்தின் அருகே வசிஷ்டர் குளம் உள்ளது. இதன் அருகில் வசிஷ்டர் தன் மனைவியுடன் வசித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் குளத்தில் குளித்தால் வசிஷ்டர் போல் ஞானம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் அருகிலேயே வசிஷ்டர் கோயில் உள்ளது. அவருடன் ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்ணர், சீதா ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர்.

தசரத குளம் : பஞ்சகோசி பரிக்கிரமா சாலையில் தசரத குளம் உள்ளது. பத்ரலாத் பூர்ணிமா தினத்தன்று இங்கு நீராடி பக்தர்களுக்கு அன்பளிப்பு வழங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.

ஹனுமான் குளம் : 250 வருடங்களுக்கு முன் இந்தப் பகுதியை ஆண்ட மன்னர் ஹைக்ரீவ் மகராஜ் இந்த பகுதிக்கு வந்த போது இந்த இடத்தில் தங்க இடம் கொடுத்ததுடன் குளமும் வெட்டிக் கொடுத் தாராம். அப்போது கிடைத்த சலவைக்கல்லாலான அழகிய அனுமன் சிலையை குளத்தின் அருகிலேயே நிறுவியுள்ளனர்.

தன்ட்தவான் குளம் : இந்தக் குளத்தில் தான் ராமரும் சகோதரர்களும் அதிகாலையில் நடந்து வந்து பல்தேய்த்து முகம் அலம்புவார்களாம். ஸ்ரீ ராமநவமியன்று இங்கு நீராடினால் ஜன்ம பாபம் விலகும் என நம்புகின்றனர். இந்த இடத்தில் கௌன்டில்ய முனிவர் ஒரு காலத்தில் தவம் செய்து வந்ததாகவும் அப்போது அவர் அமர்ந்து கொள்ளும் மான்தோல் குளத்தில் விழ... அதிலிருந்து உயிருள்ள மான் ஒன்று எழுந்து கரையேறி முனிவரை தரிசித்து விண்ணுலகம் சென்றது.

வித்யா குளம் : அயோத்தி - தர்ஷன் நகர் வழியில் இந்தக் குளம் உள்ளது. இங்கு வித்யா (சரஸ்வதிக்கு) ஆலயம் உள்ளது. அஷ்டமியன்று பக்தர்கள் இக்குளத்தில் குளித்து, சரஸ்வதியை வழிபட்டு சகல பேறுகளும் பெறுகின்றனர்.

விபிஷணன் குளம் : அயோத்தி ராஜ்காட் பாதையில் தபால் நிலையம் அருகே இந்தக் குளம் உள்ளது. இதில் நீராடினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சூர்ய குளம் : அயோத்தியிலிருந்து ஆறாவது கிலோ மீட்டரில் இந்தக் குளம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இதில் நீராடி சூரியனை பக்தர்கள் வணங்குகின்றனர். சூரிய வம்சத்தைச் சார்ந்த கோஷ் என்ற மன்னன் இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்த போது அங்கு குளம் போன்று தேங்கியிருந்த தண்ணீரில் குளித்தான். அப்போது அவர் உடலில் நீண்டகாலமாக இருந்த தோல் நோய் முற்றிலும் நீங்கியது. பின்னர் அந்தக் குளத்தை புனரமைத்து அருகில் சூரியனுக்கு கோயிலும் கட்டி வைத்தான். இந்தக் குளத்தில் நீராடி, சூரியனை மனமார வேண்டினால் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள் மறைந்து விடுகிறது என்பது நம்பிக்கை.

ஷோன்கார் குளம் : வைகாசி சுக்லதுவாதசியன்று இந்தக் குளத்தில் நீராடினால் செல்வசெழிப்பு ஏற்பட்டு சுகபோகத்துடன் வாழ்வர் என்பது நம்பிக்கை. இதனால் மாசி மகத்தன்று மாமாங்க குளத்தில் குளிப்பது போல் நம்பிக்கையுடன் நீராடி ராமபிரான் அருளைப் பெறலாம்.
---------------------------------------------------------------------------------

சங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா?

சங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

சதுர்த்தியின் மகிமை : சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
---------------------------
---------------------------
---------------------------
நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை - சிவன், தானியம் - கோதுமை, வஸ்திரம் - சிவப்பு, புஷ்பம் - செந்தாமரை, ரத்தினம் - மாணிக்கம், உலோகம் - தாமிரம்.

திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்திற்கு சோமவார விரதம் என்று பெயர். திங்கள்கிழமையன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜனம் அளிப்பது விசேஷம். சந்திரனுக்குரிய தேவதை - துர்க்காதேவி தானியம் - நெல், வஸ்திரம் - வெள்ளை, புஷ்பம் - வெள்ளரளி, ரத்தினம் - முத்து, உலோகம் - ஈயம்.

செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விரதம் நல்ல மேன்மையைத் தரும். சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்கலாம். செவ்வாய்க்குரிய தேவதை - முருகன், தானியம் - துவரை, வஸ்திரம் - சிவப்பு, புஷ்பம் - சண்பகம், ரத்தினம் - பவழம், உலோகம் - செம்பு.

புதன்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கல்வி, ஞானம், தனம் பெருகும். பச்சைபயறு கலந்த சர்க்கரைப் பொங்கல், பழம், பொரி - கடலை நிவேதனம் செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மிகவும் நல்லது. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும், பொன், பொருளைச் சேர்க்கும், புதனுக்குரிய தேவதை - விஷ்ணு, தானியம் - பச்சைப்பயிறு, வஸ்திரம் - பச்சைப்பட்டு, புஷ்பம் - வெண்காந்தள், ரத்தினம் -பச்சை, உலோகம் - பித்தளை.

வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நந்நாள் இந்நாளில் விரதம் இருப்போருக்கு சகலகாரியங்களும் சித்தியாகும், எல்லா நலன்களும் பெருகும், குருவின் அருளால் குழந்தைச் செல்வம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள சஞ்சலம் விலகும் திருமணம் நடக்கும். குரு பகவானின் தேவதை - ருத்ரன் (தக்ஷிணு மூர்த்தி), தானியம் - கொண்டக்கடலை, வஸ்திரம் - மஞ்சள், புஷ்பம் - முல்லை, ரத்தினம் - கனகபுஷ்பராகம், உலோகம் - தங்கம்.

வெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்குப் ப்ரீதி ஏற்படுகிறது. சுக்ரன் சுபிட்சத்தைத் தருவான் ,தொல்லைகள் நீங்கி, நல்லவை நடக்கும். வெள்ளிக்கிழமையன்று அவரவர் குல தெய்வத்தை வழிபாடு செய்வது நல்ல பலன்தரும். சுக்கிரனுக்குரிய தேவதை - வள்ளி, தானியம் - வெள்ளை மொச்சை, வஸ்திரம் - வெண்பட்டு, புஷ்பம் - வெண்தாமரை, உலோகம் - வெள்ளி, ரத்தினம் - வைரம்.

சனிக்கிழமை சனிபகவானுக்கு மிகவும் சிரேஷ்டமான நாள் ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அஷ்டமசனி இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும், ஏழரையாண்டு சனி இருந்தாலும், சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானை வணங்கி வழிபட்டு எள்தீபம் ஏற்றினால் சனி பகவானால் நல்லது உண்டாகும். சனிபகவானுக்குரிய தேவதை -திருமூர்த்தி, தானியம் - எள், வஸ்திரம் - கருப்பு வஸ்திரம், ரத்தினம் - நீலம், புஷ்பம் - கருங்குவளை, உலோகம் - இரும்பு.

ராகுதிசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் காலசர்ப்பயோகம் உள்ளவர்களும் ராகுவிரதத்தை அனுஷ்டிக்கலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு இலுப்பை எண்ணெய்யினால் விளக்கேற்றி மந்தார மலரால் அர்ச்சனை செய்து உளுந்து நிவேதனம் செய்து வழிபட்டால் அளவற்ற நன்மை கிடைக்கும். ராகுக்குரிய தேவதை - பத்ரகாளி, தானியம் - உளுந்து, ரத்தினம் - கோமேதகம், வஸ்திரம் - கருப்பு வஸ்திரம், உலோகம் - கருங்கல், புஷ்பம் - மந்தாரை மலர்.

கேதுதிசை நடப்பவர்களும் ஜாதகத்தில் கேது நீச்ச மடைந்தவர்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். சனிக்கிழமையன்று விநாயகரை 108 பிரதக்ஷணம் செய்து அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபட்டால் அமோகமான சௌபாக்யத்தைத் தரும். கேதுவிற்குரிய தேவதை - விநாயகர், தானியம் - கொள்ளு, வஸ்திரம் - பலகலர் கலந்த வஸ்திரம், ரத்தினம் - வைடூரியம், புஷ்பம் - செவ்வல்லி, உலோகம் - துருக்கல்.
---------------------------
---------------------------
---------------------------
நவராத்திரி வழிபாடும் சிறப்பும்! உயிரைக் காக்கும் நவராத்திரி

நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமே ஜயன் என்ற மகாராஜா வியாச முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி) வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும். இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும் என்றார். இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும் ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. வட மாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை  விரும்புபவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி. கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது. இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்தி தேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். மேலும் இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

தேவியரின் வாகனம்

இந்திராணி - யானை
வைஷ்ணவி - கருடன்
மகேஸ்வரி - ரிஷபம்
கவுமாரி - மயில்
வராகி - எருமை
அபிராமி - அன்னம்
நரசிம்மி - சிங்கம்
சாமுண்டி - பூதம்

அம்பாளை வணங்குவதன் பலன் : அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன. இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜெய் காளி - எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
ஜெய் சண்டிகாதேவி - செல்வம் சேரும்
ஜெய் சாம்பவி - அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
ஜெய் துர்க்கா - ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
ஜெய் சுபத்ரா - விருப்பங்கள் நிறைவேறும்
ஜெய் ரோகிணி - நோய் தீரும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.  கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச்  சொல்லவும்.

பெண்கள் பண்டிகையா?

நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில் இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில் எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா
மகேஸ்வரி - சிவன்
கவுமாரி - குமரன் (முருகன்)
வைஷ்ணவி - விஷ்ணு
வராஹி - ஹரி (வராக அவதாரம்)
நரசிம்மி - நரசிம்மர்
இந்திராணி - இந்திரன்
இதிலிருந்து நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.

அம்மையைத் தடுக்க அஷ்டமி படிப்பு : நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்) நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும் அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது. பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை. நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம். நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.

மூன்று மூன்றாக பிரித்தது ஏன்?

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள்  லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழி முறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி. ஆக காரண காரியங்களுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.

புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில்  சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்) பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.
---------------------------------------------------------------------------------
இந்த என்னுடைய கட்டுரையை சரியாகப் புரிந்துகொள்வதற்க என்னுடைய ஆதிகால வரலாறு. என் குடும்பத்தின் பின்னணி மற்றும் என்னுடைய துன்பங்கள் நிறைந்த நாட்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய முதல் பன்னிரண்டு வருஷ வாழ்க்கையில் சந்தோஷமான நேரம் என்று எதுவும் இருந்ததாகவே நினைவில்லை ஒன்றே ஒன்றைத் தவிற 1947 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்த தினத்தில் எங்கள் ஊரில் நடந்த விழா அது. நாட்டுக்கு சுதந்திரம் என்பது என்ன என்று அப்போது எனக்கு விளங்க வில்லை. 1950 வாக்கில் என்னுடைய பெற்றோர்கள் தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூர் மற்றும் திருவெண்ணை நல்லூர் அருகே இருந்த டி. குளத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தனர். அது தான் என்னுடைய அம்மாவின் பிறந்த ஊர். அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கும் கொடியூர் என்ற ஊர் என் தந்தையின் பிறந்த ஊர். என்னுடைய அம்மாவின் திருமணத்தின் போது அவர்களுக்கு வயது ஐந்து! கல்யாணத்திற்கு சில வருஷங்கள் பின் என்னுடைய அப்பா குளத்தூருக்கு வந்து விட்டார். சுந்தரேச ஐயர் என்பவரின் ஒரே மகளான என் அம்மாவுக்கு அவரிடமிருந்து பல ஏக்கர் விளை நிலங்கள் சொந்தமாயின. என் தந்தை ‘எலிமென்டரி’ ஸ்கூல் படிப்பு முடிந்தவுடன் வேதங்கள் படிக்க முற்பட்டார். ஆனால் வேதபாடசாலைப் படிப்பை முடிக்கவில்லை. அவருடைய முன் கோபம் மிகவும் பிரஸித்தமானது! அதனால் பல வேலைகளை இழந்து கடைசியில் மேட்டுக்குப்பம்  கிராமங்களின் தாற்காலிக மணியக்காரராக (village munsiff) ஆனார். சிறுபையனாயிருந்த அந்த வேலைக்குரிய வாரிசு வயது வந்த பின் அவருக்கு இருந்த அந்த வேலையும் போயிற்று. அதன் பிறகு வக்கீல் குமாஸ்தாவாக சொந்தமாக வேலை செய்ய ஆரம்பித்தார். படிப்பறியாத அந்த கிராம மக்களின் ‘கேஸ்’களை திருக்கோயிலூர் மற்றும் கடலூர் வக்கீல்களிடம் கொண்டு கொடுத்து ஏதோ கொஞ்சம் வரும் படி வந்தது. ஆனால் அந்த கிராமத்தின் பெரும்பாலான மக்கள் நல்ல குணத்தினால் பெரும்பாலான ‘கேஸ்’களை உள்ளூர் பஞ்சாயத்தில் வைத்தே தீர்த்துக் கொண்டனர். என்னுடைய தந்தையின் வருமானம் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. ஒவ்வொரு வருஷமும் என் தாய் ஏக்கர் ஏக்கராகத் தன் நிலங்களை விற்கத் தொடங்கினார். 1950 ஆம் வருஷத்தில் எங்கள் குடும்பத்தின் நிலைமை நம்பிக்கையற்ற மிக மோசமான நிலையை அடைந்தது என்னுடைய இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் ஏற்கனவே திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது. ஒரு இளைய சகோதரியும், ஒரு அண்ணனும் இருந்தனர். அண்ணா கணபதியை திருக்கோயிலில் உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு அப்பா மிகவும் முயன்றார். ஆனால் அவன் படிப்பில் எந்த அக்கறையும் காட்டவில்லை. 1951 ஆம் ஆண்டு அவன் வீட்டை விட்டே ஓடி விட்டான். என்னுடைய ‘எலிமென்டரி’ ஸ்கூல் படிப்புக்குப் பிறகு ஒரு வருஷம் போல் வெறுமனே இருக்க வேண்டி வந்தது. திருக்கோயிலூர் உயர் நிலைப்பள்ளிக்கு அப்பாவால் என்னை அனுப்ப முடியவில்லை.

1949 — 50 வாக்கில் பெரியவா எங்களுடைய கிராமத்தில் முகாமிட்டிருந்தார அதைப்பற்றி எனக்கு மிக மங்கலான நினைவே உள்ளது. பெரியவா எங்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டியதாகவும் அப்போதிருந்த குடும்பநிலையைக் கண்டு எல்லோரையும் மடதில் சேர்ந்து விடும் படி அழைப்பு விட்டதாகவும் என் அம்மா சொன்னார்கள். என்னை ப்ரத்யேகமாக ஆசீர்வதித்ததாகவும் & இவன் உன்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷத்தையும் வளத்தையும் கொண்டு வருவான் என்று சொன்னதாகவும் அம்மா சொன்னார்கள். இதை அவர் சொல்லும் பொழுது நான் அவரை நம்பவில்லை. பின்னால் நடந்த நிகழ்ச்சிகள் பெரியவா உண்மையாக என்னை ஆசீர்வதித்திருக்கிறார்’ என்று நிரூபித்தன (காலம் கடந்த தெளிவு!). மீதி இருந்த கொஞ்சம் கௌரவத்துடன், 1951 இல் அந்த ஊரை விட்டு வெளீயேறி மாயவரத்தில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த மடத்தில் சேர்ந்தனர் என் பெற்றோர்கள்.

என்னுடைய பெரிய அக்காவின் கணவர் குளத்தூரிலேயே அதிகம் படித்த மூன்று, நான்கு பேர்களில் ஒருவர். S.S.L.C—முடித்தவுடன் ஆசிரியர் பயிற்சியை முடித்து விட்டு ஒரு நல்ல ப்ரஸித்தமான ஆசிரியராக ஆனார். 1951—இல் கண்டசிபுரம் என்ற ஊரில் ஆசிரியராக இருந்தார். என் ஏழாவது வகுப்பை அவர்கள் வீட்டில் தங்கி அங்கேயே படித்தேன். அடுத்த வருஷம் அவர் சித்தலிங்கமடம் என்ற ஊருக்கு மாற்றப்பட்ட போது நானும் அவருடன் சென்று எட்டாவது வகுப்பில் படித்தேன். 

அப்பொழுது ஞானானந்தா என்ற ஒரு ஸ்வாமிகளின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. அவர் நான் படித்த பள்ளியின் எதிரில் இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அழகுத் தமிழில் இனிமையாகப் பேசுவார். என்னை “சுந்தரம்” என்று அன்புடன் கூப்பிடுவார். ஒவ்வொரு மாலையிலும் எனக்கு இனிப்புகளும், பழங்களும் தருவார். தினமும் மாலை ஸ்கூல் விட்டதும் நேரே அங்கே போவதற்குப் போதுமான ஊக்குவிப்பு! நான் அவரை என்னுடைய தாத்தாவாகக் கருதினேன். அவருடைய பூர்வ சரித்திரம் அங்கு யாருக்கும் தெரிந்திருக்க வில்லை சில வருஷங்களுக்கு முன்னால் எங்கிருந்தோ அந்த ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு மிகவும் வயதாகிறது என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நான் ஸ்கூலில் என்னென்ன படிக்கிறேன் என்று கேட்பார். கதைகள் சொல்லுவார். நான் அவரிடம் ஈர்க்கப்பட்டேன். நான் ஸ்கூலிலிருந்து அங்கு வரவில்லையென்றால் எனக்காக வாசலில் காத்திருப்பார். சில வருஷங்களுக்குப்பின் அவர் திருக்கோயிலூர் அருகே இருக்கும் அரகண்டநல்லூர் என்ற இடத்திற்குப் போய் விட்டார். அங்கே மிகவும் பிரபலமானார். இப்பொழுது அவர் இல்லை. “தபோவனம்’ தற்பொழுது ஒரு மிகப் பிரபலமான இடம் அதைப் பின் பற்றுபவர்கள் அநேகம். நான் எதற்காக அந்த ஸ்வாமிகளைப் பற்றி இவ்வளவு சொல்கிறேன் என்று நீங்கள் வியக்கலாம். “பெரியவாள் ஒரு நடமாடும் தெய்வம். ஒரு மடத்தின் பீடாதிபதி மட்டும் இல்லை சீக்கிரம் மக்கள் அவருடைய உண்மை ஸ்வரூபத்தைப் புரிந்து கொள்வர். என்று எனக்கு முதல் முதலாக சொன்னவர் அவர் தான்! நான் எப்பொழுது சோர்ந்து போயிருந்தாலும் பெரியவா உன்னையும் உன் குடும்பத்தையும் ரக்ஷிப்பார் என்று கூறுவார். என் தாயார் மாயவரம் போகும் வழியில் தன்னை சந்தித்ததாகவும் சொன்னார்.

மடத்தில் சேர்ந்து சுமார் எட்டு மாதங்கள் கழித்து என் தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதினார். பெரியவா உன்னைப்பற்றி விஜாரித்தார் நீ உயர் நிலைப்பள்ளியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார். என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அன்று வரை எப்படியாவது E.S.L.C வரை படித்து விட்டு ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்று ஒரு ‘எலிமென்டரி’ ஸ்கூல் ஆசிரியராக வர வேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது. உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று அறிந்த போது என் மனத்தில் உற்சாகம் கரை புரண்டது. ஞானானந்த ஸ்வாமிகளின் ஜோசியம் பலிக்கிறதோ என்று எண்ணினேன். 

ESLC முடித்து விட்டு, ஞானானந்த ஸ்வாமியிடம் விடை பெற்றுக்கொண்டு 1952 ஏப்ரலில் பெரியவாளின் முன்பு போய் நின்றேன். அப்பொழுது அவர் மாயவரம் பக்கத்தில் ஒரு இடத்தில் இருந்தார். பெரியவா கேட்டார், “ஹைஸ்கூலில் படிக்கப்போறே இல்லியா?” நான் அதற்கு ஆசைப்படுவதாகவும் ஆனால் எப்படி எங்கே என்று தெரியவில்லை என்றும் பதிலளித்தேன்.

பெரியவா அப்போது எனக்கும் என் தந்தைக்கும் ஒரு புதிர் போட்டார். தென்னாற்காடு தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைகளிலிருந்து ரொம்ப தூரமில்லாமலும் ஒரு பிரபலமான கோயிலும் ‘யுனிவெர்சிடி’யும் இருக்கும் இடமுமான ஒரு பெரிய நகரத்தின் பெயர் என்ன?”
எங்கள் மனத்தில் ‘யுனிவெர்சிடியைப்ப ற்றிய எண்ணம் இல்லாததால் மாயவரமாக இருக்குமோ என்று நினைத்தோம்.

ஆனால் பெரியவா சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசி விட்டு என்னுடைய அம்மாவிடம் சிதம்பரத்தில் குடித்தனம் போடச் சொன்னார். இப்பொழுது நான் அதைப்பற்றி நினைக்கும் போது நானோ என்னுடைய பெற்றோரோ என்னுடைய மேல் படிப்புப்பற்ற ஒரு திட்டம் போடவில்லையென்றாலு ஒரு நினைப்பே கூட இல்லாமல் தான் இருந்தோம். ஆனால் பெரியவா ஒரு முழுத் திட்டமே போட்டு வைத்திருந்ததாக எனக்குத் தோன்றுகிறது.

நான் சிதம்பரத்தில் இருந்த ராமஸ்வாமி செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். படிப்பில் மிகவும் நன்றாகச் செய்தேன். லீவு நாட்களில் பெரியவாளைப் போய்ப் பார்ப்பேன். விரைவில் அவருடைய அணுக்கத் தொண்டனாகவும் ஆனேன். பிரசாதம் கொடுப்பது பக்தர்களுக்கு மெயிலில் பிரசாதம் அனுப்புவது, பக்தர்களின் கடிதங்களைப் பெரியவாளுக்குப் படித்துக் காட்டுவது, தினசரி பத்திரிகைகளைப் படித்துக்காட்டுவது பக்தர்களின் க்யூ வரிசைகளைக் கட்டுப்படுத்துவது, இன்னும் அவர் எனக்கு என்னென்ன பணிகளிடுகிறாரோ அவைகளைச் செய்வது போன்ற பல. 

ஏப்ரல் 15—ஆம் தேதி S.S.L.C பரீக்ஷை எழுதினேன். அதற்குள் பெரியவாளும் மடமும் சின்ன காஞ்சீபுரத்திற்கு சென்று விட்டனர். அந்த சமயத்தில் அவர் அருகிலிருந்த சிவாஸ்தானத்திலும் ஓரிக்கையிலும் முகாமிட்டிருந்தார். பரீக்ஷை முடிந்தவுடன், காஞ்சீபுரம் சென்று அடுத்த இரண்டு மாதங்கள் அவருடன் இருந்தேன். ஜூன் 1955-இல் ‘ஹிந்து’ நாளிதழில் என்னுடைய பரீக்ஷை முடிவு வெளியானபொழுது பெரியவாளிடம் போய் சந்தோஷமாகத் தெரிவித்தேன்..
 
ஜனவரி 23-ஆம் தேதி மெட்ராசிலிருந்து நியூயார்க் போகும் flght—இல் நான் மேட்டூர் ஸ்வாமிகள் சொன்னதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த 26 மணி யாத்திரையில் 8 மணி நேரம், நான் 1952 முதல் 1967 வரையிலான பெரியவாளுடனான என்னுடைய அனுபவத்தை மறுபடி ‘வாழ்ந்து’ கொண்டிருந்தேன். எதிரில் உள்ள திரையில் ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தது. என் மனத்திரையில் வேறு ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ‘நானும் என்னுடைய கஷ்டமான நாட்களையே நினைவில் வைத்திருக்கிறேன்.” என்று. எனக்கு அருகில் அமர்ந்திருந்த என்னுடைய இரண்டாவது மகன் பிரபாகர் அதைக்கேட்டு, “யாரைப்பற்றி எதற்காக நீங்களே சத்தமாகப் பேசிக்கொள்கிறீர்கள் என்று கேட்டான். அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது அதை நிச்சயமாக எழுதுவது என்று உறுதி கொண்டேன். வீட்டை அடைந்த பின் ஜனவரி 25—ஆம் தேதி இரவு எழுத ஆரம்பித்தேன். அதன் பின் வரிசையாக எட்டு இரவுகள், ஒவ்வொரு இரவிலும் நான்கு மணி நேரம், விடாமல் எழுதினேன். ஒவ்வொரு இரவும் அந்த அனுபவங்களைத் திரும்ப ‘வாழ்ந்து’ கொண்டிருந்தேன். அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன். (என்னுடைய மனைவி என்னுடன் அப்போது திரும்பி வரவில்லை). ரமணியின் புல்லாங்குழல் இசையும் லால்குடி ஜயராமனின் வயலின் இசையும் மாத்திரமே கேட்டுக் கொண்டிருந்தது. பெரியவாளுக்குக் கர்னாடக இசையில் இருந்த ஆர்வம் ஞாபகத்திற்கு வந்தது, முக்கியமாக, வீணை இசையில். எங்கே இதை தொடங்குவது என்று ஆலோசித்தேன். முன்னால் எழுதியுள்ள ‘அந்த இரவின் விஸ்வரூப தரிசனத்திலேயே தொடங்கினேன். எனக்குத் தெரியும், அவர் நினைத்தால் நான் எழுதுவதை நிச்சயமாகப் பார்ப்பார் என்று.

இனித் தொடர்வது என்னுடைய சொந்த விஷயம். படித்து முடிக்கும் வாசகர்கள்,, பெரியவாள் என்னுடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒரு பாத்திரமாக இருந்திருக்கிறார் என்று அறிந்து கொள்வர். பெரியவா அவருடைய பரிசோதனைகளுக்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று இப்பொழுதும் நான் ஆச்சரியப்படுவது போலவே, அவர்களும் ஆச்சரியப்படுவர். அவருடைய கடாக்ஷம் எனக்குக் கிடைப்பதற்கு நான் அருகதை உடையவனே இல்லை. நான் எழுதியதில், பெரியவாளுக்குப் பல துறைகளிலும் இருந்த மிக உயர்ந்த திறமையையும் அறிவையும் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை; என்னுடைய வழியில் எழுதியிருக்கலாம்; ஆனால் அந்த முக்கிய விஷயம் பற்றி எண்ணும் பொழுது நான் என்னை ஒரு கடைநிலை சிஷ்யனாகவே கருதுகிறேன்.

1952—இல் இருந்து 1967 வரை உள்ள பதினைந்து வருஷங்கள் பெரியவாளுடன் நெருங்கிப் பழகும் பாக்யம் கிடைத்தது. முக்கியமாக, 1952 முதல் 1960 வரையிலான என்னுடைய பள்ளி மாணவ நாட்களில் பெரியவாளுடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் அவருடைய அணுக்கத் தொண்டனாக பணியாற்றினேன். அவருக்கு என் மேல் ஒரு ப்ரத்யேக அன்பு இருந்தது. மடத்தில் உள்ளவர்களும் மடத்திற்கு வருகிறவர்களும் இதை உன்னிப்பாகக் கவனித்தனர். என்மேல் பொறாமையும் கொண்டணர். நான் இதை மிகவும் ரஸித்தேன்! ஒரு முறை மடத்தின் மானேஜர் ஸ்ரீ விஸ்வனாத ஐயர் (எனக்கு மிகவும் பிடித்தவர்), பெரியவா நெடுநேரமாக தியானம் செய்து கொண்டிருந்த அறைக்குள் செல்ல விரும்பினார். தட்டிக்கதவுக்கு அருகில் நான் காவல் இருந்தேன். விஸ்வநாத ஐயர் பெரியவாளிடம் மிக முக்கியமான ஒரு விஷயம் தெரிவிக்க உள்ளே போக வேண்டும் என மிகவும் வற்புறுத்தினார். நான் அவரிடம் பணிவாக ஆனால் உறுதியாக, அவர் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, இப்போது உள்ளே போக முடியாது என்று மறுத்தேன். அவர் கோபமடைந்து, மடத்தில் இருந்த பக்தர்கள் மத்தியில் கத்தினார், “அந்த துரைஸ்வாமி ஐயரோட பையன் சுந்தரராமன் மடத்துக்கு வந்துட்டா பெரியவா அவனுக்கு முழு அதிகாரம் கொடுத்துடறா! மடமே அவனோட அரசாங்கமாயிடறது.” அன்று பிறகு ஒரு சமயம் அவர் பெரியவாளிடம் இதைப்பற்றிப் புகார் சொன்னார். அதற்குப் பெரியவா தந்த பதில், “ அவன் என்னை இத்தனை நன்னா பாத்துக்கறதுக்கு நீன்னா அவனுக்கு நன்றி சொல்லணும்?”

இந்த ஏழை ஸ்கூல் மாணவனான என்னிடம் ஏன் பெரியவா இத்தனை அன்பும் பரிவும் வைத்திருக்கிறார்? இந்தக் கடாக்ஷத்தைப் பெற நான் அவருக்கு என்ன செய்து விட்டேன்? பல வருஷங்களுக்கு முன் நான் அவரைத் திடீரென்று விட்டு விட்டுப் போன பின்னாலும் வெகு தொலை தூரத்தில் இருந்த போதிலும் அவர் என்னை விடாது ஆசிர்வதித்திருக்கிறார் என்று எண்ணும் போது என் மனது வெடித்து விடும் போல் இருக்கிறது.

1985—இல், நான் மெக்ஸிகோ நகரத்தில் வசித்து வந்தேன். ஒரு நாள் காஞ்சீபுரத்தில் இருக்கும் என் மருமான் சந்த்ருவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. கடைசியாக அவனிடம் இருந்து கடிதம் வந்து பல மாதங்கள் ஆகியிருந்தன. அவன் கடிதம் எழுதியதற்கு முதல் நாள் பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சீபுரம் சென்றிருக்கிறான். எப்போதும் போல் பல பக்தர்களும் அணுக்கத்தொண்டர்களும் இல்லாமல் பெரியவா எல்லோருக்கும் ஒரு புதிர் போட்டார்.

“நான் ஒத்தனை மனஸால் நினைத்தேன். அவன் பறந்து போயிட்டான். யார் அவன்?”

(anusham163’s comment at this stage: இதைப்படித்த எனக்கு துக்கம் பீரிட்டுக்கொண்டு வந்து கதறி அழுது விட்டேன். எத்தனை ஒரு அன்பு இருந்திருந்தால் பெரியவா வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கும்? நம்மைப்போன்ற ஸாதாரண மனிதர்களுக்குத்தான் சுகம், துக்கம், போன்ற உணர்ச்சிகள். மஹான்களுக்கு அதொன்றும் கிடையாது என்றாலும், பெரியவா மனசில் அன்புடன் கூட “திடீரென்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் இந்த இடத்தை விட்டுப் போயிட்டானே” என்ற தாபம் அந்த வார்த்தைகளில் தொனிக்கிறதோ என்ற எண்ணத்தில்தான் நான் அப்படி அழுதேன். ஆனால் அவர் எதை நினைத்து அவ்விதம் சொன்னார் என்று யாரால் சொல்லமுடியும்?)

அரைமணி நேரம் ஆனபிறகும், அந்தப் புதிருக்கு யாராலும் விடை சொல்ல முடியவில்லை. பெரியவாளே கடைசியில் புதிரை அவிழ்த்தார், “அந்த துரைஸ்வமியின் பையன் சுந்தரராமந்தான் அவன்”

பெரியவா எதற்காக என்னைப்பற்றி அன்றைய தினம் குறிப்பிட வேண்டும் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அந்த கடிதத்தைப் படித்து முடித்தவுடன், என்னை நம்புங்கள், என்னுடைய இதயம் நின்று விட்டது போல் இருந்தது; அழுதேன்.
தமிழ் வருடங்களுக்கு சரியான ஆங்கில ஆண்டுகள்!

பிரபவ                   1867-68 1927-28 1987-88
விபவ                    1868-69 1928-29 1988-89
சுக்கில                   1869-70 1929-30 1989-90
பிரமோதூத          1870-71 1930-31 1990-91
பிரஜோத்பத்தி      1871-72 1931-32 1991-92
ஆங்கீரஸ             1872-73 1932-33 1992-93
ஸ்ரீமுக                   1873-74 1933-34 1993-94
பவ                        1874-75 1934-35 1994-95
யுவ                       1875-76 1935-36 1995-96
தாது                      1876-77 1936-37 1996-97
ஈஸ்வர                 1877-78 1937-38 1997-98
வெருதான்ய        1878-79 1938-39 1998-99
பிரமாதி                1879-80 1939-40 1999-2000
விக்ரம                 1880-81 1940-41 2000-01
விஷு                   1881-82 1941-42 2001-02
சித்ரபானு             1882-83 1942-43 2002-03
சுபானு                  1883-84 1943-44 2003-04
தாரண                  1884-85 1944-45 2004-05
பார்த்திப               1885-86 1945-46 2005-06
விய                      1886-87 1946-47 2006-07
சர்வஜித்து            1887-88 1947-48 2007-08
சர்வதாரி               1888-89 1948-49 2008-09
விரோதி                1889-90 1949-50 2009-10
விக்ருதி                1890-91 1950-51 2010-11
கர                          1891-92 1951-52 2011-12
நந்தன                   1892-93 1952-53 2012-13
விஜய                    1893-94 1953-54 2013-14
ஜய                         1894-95 1954-55 2014-15
மன்மத                   1895-96 1955-56 2015-16
துன்முகி                 1896-97 1956-57 2016-17
ஹேவிளம்பி        1897-98 1957-58 2017-18
விளம்பி                  1898-99 1958-59 2018-19
விகாரி                     1899-1900 1959-60 2019-20
சார்வரி                    1900-01 1960-61 2020-21
பிலவ                       1901-02 1961-62 2021-22
சுபகிருது                 1902-03 1962-63 2022-23
சோயகிருது            1903-04 1963-64 2023-24
குரோதி                    1904-05 1964-65 2024-25
விசுவாவசு             1905-06 1965-66 2025-26
பராபவ                    1906-07 1966-67 2026-27
பிலவங்க                1907-08 1967-68 2027-28
கீலக                        1908-09 1968-69 2028-29
சௌமிய                 1909-10 1969-70 2029-30
சாதாரண                1910-11 1970-71 2030-31
விரோதிரிகிருது     1911-12 1971-72 2031-32
பரிதாபி                    1912-13 1972-73 2032-33
பிரமாதீச                 1913-14 1973-74 2033-34
ஆனந்த                    1914-15 1974-75 2034-35
இராக்ஷஸ               1915-16 1975-76 2035-36
நள                            1916-17 1976-77 2036-37
பிங்கள                     1917-18 1977-78 2037-38
காளயுக்தி                1918-19 1978-79 2038-39
சித்தாத்ரி                  1919-20 1979-80 2039-40
ரௌத்ரி                    1920-21 1980-81 2040-41
துன்மதி                    1921-22 1981-82 2041-42
துன்துபி                    1922-23 1982-83 2042-43
ருத்ரோத்காரி           1923-24 1983-84 2043-44
ரக்தாக்ஷி                   1924-25 1984-85 2044-45
குரோதன                  1925-26 1985-86 2045-46
அக்ஷய                      1926-27 1986-87 2046-47.
27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்!

அஸ்வினி  - கேது
பரணி  - சுக்கிரன்
கார்த்திகை - சூரியன்                               
ரோகிணி - சந்திரன்
மிருகசீரிஷம் - செவ்வாய்
திருவாதிரை - ராகு
புனர்பூசம் - குரு (வியாழன்)
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
அஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
சுவாதி - ராகு
விசாகம் - குரு (வியாழன்)
அனுஷம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராகு
பூரட்டாதி - குரு (வியாழன்)
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்.

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பெயர்கள் எந்த எழுத்தில் துவங்க வேண்டும்?

நட்சத்திரம்       நட்சத்திர எழுத்துக்கள்

அசுவினி          சு-சோ-சோ-ல
பரணி                  லி-லு-லே-லோ
கிருத்திகை      அ-இ-உ-ஏ
ரோகிணி            ஒ-வ-வி-வு
மிருகசீரிஷம்  வே-வோ-கா-கி
திருவாதிரை    கு-க-ங-ச
புனர்பூசம்         கே-கோ-ஹா-ஹீ
பூசம்                   ஹு-ஹே-ஹோ
ஆயில்யம்       டி-டு-டெ-டோ-டா
மகம்                  ம-மி-மு-மே
பூரம்                   மோ-டா-டி-டு
உத்திரம்           டே-டோ-பா-பி
அஸ்தம்           பூ-ஜ-ண-டா
சித்திரை           பே-போ-ரா-ரி
சுவாதி               ரு-ரே-ரோ-தா
விசாகம்           தி-து-தே-தோ
அனுஷம்         ந-நி-நு-நே
கேட்டை           நோ-யா-யீ-யு
மூலம்                யே-யோ-பா-பி
பூராடம்              பூ-தா-பா-டா
உத்திராடம்      பே-போ-ஷ-ஜி
திருவோணம் ஜு-ஜெ-ஜொ-க
அவிட்டம்        க-கீ-கு-கே
சதயம்               கோ-ஸ-ஸீ-ஸு
பூரட்டாதி          ஸ-ஸோ-தா-தீ
உத்திரட்டாதி  து-த-ஜ-ஞ
ரேவதி                தே-தோ-ச-சி
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 35 ॐ

சித்சபையின் தோற்றமும் அங்கே உள்ள மூர்த்திகள் பற்றியும் விரிவாக ஏற்கெனவே பார்த்தோம். அந்த சித்சபையில் நடராஜரின் வலது பக்கமாய் ஒரு நீலத் திரை தொங்கவிடப் பட்டிருக்கும். அதற்குத் தரிசனம் செய்யவும் தனியான சாளரம் போன்ற அமைப்பு உண்டு. அதன் வழியாகத் தான் தரிசனம் செய்ய முடியும். அந்தத் திரையைத் திறந்து கற்பூர ஆரத்தி காட்டும் போது தங்கத்தால் ஆன வில்வ மாலை மட்டும் எந்த உருவத்தின் மேலும் சாத்தப்படாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். அருவமான இறைவன் எங்கும் நிறைந்து உள்ளான். எல்லா உயிர்களிடமும் காணப்படுகிறான். அனைத்தும் அவனே! என்றாலும் பாமர மக்களுக்குச் செளகரியத்திற்காக அவன் உருவம் எடுத்து வருவதே நடராஜர். உருவமாக "ரூப" தத்துவத்தை நிரூபிக்கிறார் இவர். இங்கே உள்ள ஸ்படிக லிங்கமோ "அருவுரு"வாகக் காட்சி அளிக்கிறது. இது படிப் படியாக இறைவனின் வழிபாட்டுக்கு உதவி செய்கிறது. முதலில் உருவத்தை வழிபடும் மனிதன் பின்னர் தெளிந்து அருவுருவத்தை வழிபட ஆரம்பித்து மெய்ஞானம் பிறக்க இறைவன் எங்கும் நிறைந்தவன் என உணருகிறான். இந்த அரிய தத்துவம் தான் சிதம்பர ரகசியம் எனச் சொல்லப் படுகிறது. தங்கள் ஞானக் கண்ணால் அனைவராலும் நம்முள்ளே உறையும் இறைவனைக் காண முடியாது என்பதற்காகவும் இறைவனின் மனோசக்தி இந்த இடத்தில் உறைந்திருப்பதாலும் தான் இங்கே அவனுக்கு உகந்த வில்வ தளங்களால் மாலையிட்டு அந்த உருவம் அற்றப் பரம்பொருளை வணங்கச் செய்கின்றனர். சிவனும், சக்தியும் ஐக்கியம் ஆகிய மந்திர சொரூபமான திருவம்பலம் எனவும் இதைச் சொல்லலாம். ஆனால் நாம் காண்பது என்னமோ ஒரு வில்வ மாலை தான். குறிப்பால் தான் உணர்த்துவார்கள். இந்த உலகை அதைப் படைத்த இறைவனாக அதாவது விராட புருஷனாக வைத்துக் கொண்டால் அதன் நடுப்பாகம் ஆன இதயம் தான் இந்தச் சன்னதி. எல்லாக் கோவில்களையும் போல் இங்கே இறைவனின் மூலஸ்தானம் ஆன நடராஜர் சன்னதி நடுவிலும் இருக்காது. சற்றே இடப் புறம் ஒதுங்கியே இருக்கும். நம் இதயம் எவ்வாறு இடப்புறம் ஒதுங்கி இருக்கிறதோ அப்படி இருக்கிறது. நம் இதயத்தை ஒரு தாமரை மலராக உருவகப்படுத்தினால் அதனுள் உறையும் ஜோதி தான் இறைவன். இங்கே தான் இதயத்தின் உள்ளே உள்ள தாமரை மலரில் ஜோதி ரூபமாக இறைவன் உறைகிறார் என்பது ஐதீகம். நம்முள்ளே உள்ள இறைவனை நாம் கண்டு உணர்ந்து ஞானம் அடைய வேண்டியே இத்தனை ரகசியாமாக இதைப் பாதுகாக்கிறார்கள்.

நம் உடலையே ஒரு கோயிலாக எடுத்துக் கொண்டால் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஆட்சி செய்யும் இடம் ஆன ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு தேவதைக்கு உரியது. அப்படிப் பார்த்தால் ஆகாயத்துக்கு உரியது இதயம். இதயம் துடிக்கவில்லை என்றால் நாம் இல்லை. அந்த இதயம் துடிப்பதை இந்த இறைவனால் தான். ஆகவே தான் "சிந்தையில் சிவனை நிறுத்திக் கொள்ள"ச் சொன்னார்கள் நம் பெரியோர்கள். நிறுத்தி அவனுக்குக் கோயிலும் கட்டினார். பூசலார் நாயனார். யோகக் கலை வல்லுனர்கள் தங்கள் இதயத்தில் இறையை நிறுத்தி தியான முறையில் வழிபடும் திறமை பெற்றவர்கள். அந்த யோக முறைப் படியும் இது "அனாஹதம்" எனப்படுகிறது. அனாஹதம் தான் சரியான வார்த்தை. ஒரு முறைக்குப் பலமுறையாகச் சரி பார்த்து விட்டேன். சாதாரண மனிதர்களால் முடியாத ஒன்றை மறைமுகவாகவேனும் அவனுக்கு உணர்த்தும் வண்ணம் ஏற்பட்டது தான் இந்தச் சிதம்பர ரகசியம். இன்னும் எளிமையாகச் சொன்னால் "ஜீவாத்மா"வும் "பரமாத்மா"வும் ஐக்கியம் ஆகும் இடம் எனவும் சொல்லலாம். ஆகாயத்தின் தன்மை இருப்பதால் இந்த இடத்தில் உருவம் ஏதும் இல்லாமல் நிர்மலமாக இருப்பதால் தான் சிதம்பரம் நகரை பஞ்ச பூதத் தலங்களில் "ஆகாயத் தலம்" என்றும் சொல்லுவார்கள்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
பஞ்சாங்கம் என்பது என்ன?

நக்ஷத்திரம், திதி, வாரம், கரணம், யோகம் என்னும் பஞ்ச அங்கங்களைக் கொண்டது தான் பஞ்சாங்கம். பழைய புராதன பழக்கவழக்கங்களில் பஞ்சாங்கம் பார்ப்பது மிக முக்கியமான  ஒன்று என்பது எல்லோரும் அறிந்தது தான். இது ரிஷிகளாலும், ஞானிகளாலும் கொண்டுவரப்பட்டவை. கிரக அசைவுகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் எளிதாக தெரிந்து கொள்ள ஜோதிடர்களுக்கு உதவும் ஒரு கை ஏடு என்றே சொல்லலாம். இதற்கு முன்னால் இன்றைய அறிவியலால் நிற்கக் கூட இயலாது. மழை வரும் காலம் கிரகண காலம் என்று எல்லாமே மிகத் துல்லியமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நமது முன்னோர்களால் கணித்துத் தரப்பட்ட பரிசு தான் இந்த பஞ்சாங்கம். ஆகவே தினமும் எல்லோரும் பஞ்சாங்கம் பார்க்கவும்.