ஜ்யேஷ்ட = மூத்த; கனிஷ்ட = இளைய
அப்பாவின் சகோதரர்கள்:-----------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .
அண்ணன் தம்பிகள்: ------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. .
புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி
அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி
பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி
மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸ்நேகிதர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மூன்று தடவை தர்ப்பணம்.செய்யவும்.
க்ஞாதா அக்ஞாத காருணீக வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே வர்கத்வய பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.
பூணல் வலம்
நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ:
பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த
யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம்
வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.
தேவதாஶ்ச பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நம:
இதை சொல்லிக் கொண்டே மூன்று தடவை, தர்பணம் செய்த தாம்பாளத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.
பூணல் இடம்.;
உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு.
அல்லது ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை: பதிபிள் பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶார தஞ்ச அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி
அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம் செய்ய வேண்டும்.
ஹிரன்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ணிய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.
மயா அனுஷ்டித மஹாளய உத்திஸ்ய தில தர்ப்பண மந்திர ஸாத்குண்யம் யதா சக்தி ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே.
ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பண மஸ்து என்று கையினால் ஜலத்தை கீழே விடவும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 10 ஜனவரி, 2024
பித்துர் வர்க்கம்
உபநயனம்
உபநயனம் உத்திராயனத்தில் செய்ய வேண்டும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயனம். யஜுர் வேதிகள் சுக்ராஸ்தமனம் இல்லாத காலத்திலும், ருக் வேதிகள் குரு அஸ்தமனம் இல்லாத காலத்திலும், ஸாம வேதிகள் செவ்வாய் அஸ்தமனம் இல்லாத காலத்திலும், சுக்கிரன், குரு , செவ்வாய் நீச மில்லா காலங்களிலும் செய்ய வேண்டும்.
வேதம் பயிலக்கூடாத நாட்களிலும் உபநயனம் செய்யக்கூடாது.
உபநயன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் எந்த கிரஹமும் இருக்க கூடாது. பையனுக்கு சந்திராஷ்டம தினத்திலும் செய்ய கூடாது.
பையனின் சஷ்டாஷ்டக ராசியிலும் லக்னமாக வைக்க வேண்டாம். சுக்ல பக்ஷம் சிறந்தது. ஜன்ம சந்திர லக்னங்கள் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும். தாரா பலம், சந்திர பலம் நன்றாக உள்ள நாட்களில் செய்ய வேண்டும். கசரம் சுத்தமாக இருக்க வேண்டும்.
பஞ்சகம் சுத்தமாக இருக்க வேண்டும். கரி நாள், தனிய நாட்களில் செய்ய கூடாது. மரண யோகம், உத்பாத யோக நாட்களில் செய்யக்கூடாது. ஆடி, ஆவணி, புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் செய்யக்கூடாது.
அமாவாசை, பெளர்ணமி, பிரதமை. ரிக்தை ஸப்தமி அஷ்டமி, நவமி த்ரயோதசி, சதுர்தசி ஆகிய திதிகளில் உபநயனம் செய்யக்கூடாது. பையன் ஜன்ம நக்ஷத்திலிருந்து எண்ணி 2,4,6,8,9 வர வேண்டும். 1,3,5,7 நக்ஷத்திரங்களில் செய்ய கூடாது. அந்தந்த தமிழ் மாத விஷ சூன்ய திதி, நட்சத்திரம் லக்னம் வேண்டாம். திதிகளின் விஷ சூன்ய ராசிகளும் வேண்டாம். வருஷம், ருது மாதம், திதி, நக்ஷதிரம் முடிவில் செய்யக்கூடாது. ஒரே நாளில் இரண்டு நக்ஷத்திரமோ, திதியோ உள்ள நாட்களும் வேண்டாம்.
திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் சிறந்தது. உபநயனம் செய்ய போகும் தமிழ் மாதத்தில் இரண்டு பெளர்ணமியோ அல்லது இரண்டு அமாவாசையோ அல்லது மாத பிறப்பு இரண்டோ அல்லது மாத பிறப்பு இல்லாமலோ இருக்க கூடாது.
திதி, நக்ஷத்திர, லக்ன தியாஜ்யம் இல்லாத லக்னத்தில். உபநயனம் செய்ய வேண்டும்.
பையனின் தாயார் ஆறு மாததிற்கு மேல் கர்பமாக இருந்தால் அந்த பையனுக்கு அப்போது உபநயனம் செய்ய கூடாது.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் உபநயனம் செய்வதற்கு சிலாக்கியமில்லை.,
ஸந்தியா காலங்கள், ராத்திரி, அபராஹ்னம் மலமாசம் சிலாக்கியமில்லை.
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் சுபம்.
ராகு காலம், யம கண்டம், இல்லமல் இருக்க வேண்டும். சுப ஹோரையில் அமைய வேண்டும். அக்னி நக்ஷத்திர காலமும் சிலாக்கியமில்லை.
காமாக்ஷி
காமாக்ஷி அம்பாள் ஏதோ ஐநூறு வருங்களோ, ஆயிரம் வருடங்களோ பழமை இல்லை யுகங்கள் கடந்து நமக்கு இன்றளவும் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறாள் காமாக்ஷி. கிருதயுகத்தில் இருந்து இருக்கிறாள் காமாக்ஷி. திரேதாயுகத்தில் தசரத மஹாராஜா பிள்ளை வரம் வேண்டி காமாக்ஷியை தரிசித்து பிரார்த்தனை செய்த பின் தான் ராமரின் அவதாரமே. துவாபர யுகத்திலும் கிருஷ்ணரின் காலத்திலும் காமாக்ஷி அருள் பாலித்தார். தற்போது கலியுகத்திலும் நாம் அனைவரும் தரிசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இருப்பதிலேயே கலியுகம் தான் மிக மோசமாக இருக்கும், பாவங்கள் நீக்கமென நிறைந்து இருக்கும், அநியாயங்கள் நடக்கும், பிராமணர்கள் ஆச்சார அனுஷ்டானத்தை விட்டு விடுவார்கள் என்பதெற்கெல்லாம் ஆதாரமாக தற்போது எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவே மிக சரியான முன் உதாரணமாக இருக்கின்றது.
எங்கே சென்று கொன்று இருக்கிறது நமது கலாச்சாரமும் ஆச்சார அனுஷ்டானமும் என்றே தெரிய வில்லை. சமீபத்தில் காமாக்ஷி அம்மன் கோவிலில் கார்த்திக்குக்கு பூஜை முறை வழங்கியதே மிக பெரிய தவறு அப்படி இருக்க மேலும் இரண்டு பேர் காமாக்ஷி அம்மன் கர்ப்பகிரகத்திற்கு செல்வது எந்த விதத்தில் இவர்கள் அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை. கர்ப்பகிரகற்திற்குள் செல்ல சில அத்யாவசியமான சாஸ்திரங்கள் உண்டு. ஒன்று வேற்று மத பெண்ணை திருமணம் செய்து கொள்ள கூடாது, கடல் தாண்டி செல்ல கூடாது. ஆனால் இவர்கள் இன்று செய்துக் கொண்டு இருப்பது மிக பெரிய பாவ செயல். ஒன்று சங்கரும் வேற்று மத பெண்ணை திருமணம் செய்து கொண்டு உள்ளார். அதே போல் நடனம் அண்ணாவின் அண்ணா பாலசுப்பிரமணியன் அவர்களின் மகன் வெளிநாடு சென்று வந்துள்ளார். அவர் வெளிநாடு சென்றது தவறு என்று சொல்ல இல்லை. ஆனால் தற்போது காமாக்ஷி கர்ப்பகிரகத்தில் செல்வது தான் தவறு. வெளி நாடு சென்றால் அதாவது கடல் தாண்டி சென்றால் மீண்டும் கர்ப்ப கிரஷத்தின் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. அதே போல் தான் ஸ்ரீமடத்திலும் வெளிநாடு சென்றவர்களுக்கு பெரியவா கரங்களால் தீர்த்த பிரசாதம் தர மாட்டார்கள். இதற்கு உதாரணமாக எம். எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் அவரின் கணவருக்கு மஹா பெரியவா தீர்த்த பிரசாதம் கொடுக்க வில்லை என்று நாம் படித்து தெரிந்து கொண்டு இருப்போம். இப்படி எல்லாம் சாஸ்த்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கும் போது அதை எல்லாம் மீறி இன்று இப்படி இவர்கள் செய்வது ஞாயமா? யார் இவர்களுக்கு சொல்வது? இவற்றை எல்லாம் யார் சரி செய்ய போகிறார்கள்? அல்லது இதையெல்லாம் நாம் சகித்துக் கொண்டு கண்டும் காணாமல் இருக்க வேண்டுமா? ஏன் இவர்களுக்கு அம்பாளிடம் பயமோ, பக்தியோ கொஞ்சம் கூடவா இருக்காது. இதை எல்லாம் சரி செய்ய வேண்டியது யாருடைய கடமை?
சாதுர்மாசிய விரதம்
இந்து சமயத்தில் சாதுர்மாசிய விரதம்
என்பது துறவிகள் மழைக்காலமான ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை, நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, வேத வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும். இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிரை தவிர்ப்பார்கள். நான்காம் மாதம் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் கடைபிடிக்கும் விரதத்தை, வேதம் மற்றும் வேதாந்தக் கல்வியை கற்பித்த குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாத பௌர்ணமி அன்று துறவிகள், வேதவியாசரை வழிபட்டுத் துவக்குவார்கள். குரு பூர்ணிமா என்று அழைக்கப்படும் வியாச பௌர்ணமி நாளில் (ஆடிப் பௌர்ணமி) எங்கிருந்தாலும் குருவை மனதார வணங்கினால், தாங்கள் பெற்ற வேதாந்தக் கல்வி மேன்மேலும் சிறப்பாக வளரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.
இன்று குரு பூர்ணிமா..!
வெயில்கால கதிர்திருப்பத்திற்குப் பின் வரும் முதல் பௌர்ணமி (ஆனி மாதம்) (ஹிந்தி காலன்டர் எனும் சுரியனை மையமாக வைத்து வரும் ஹிந்து காலன்டர்(அதாவது அமாவாசைக்கு மறுதினம் மாதப்பிறப்பு: அதன் அடிப்படையில் தான் எல்லாப் பண்டிகைகளும் அனுஷ்டிப்பு : அந்த வழக்கின் படி இது ஆஷாடமாதம் எனும் ஆடிமாதம்) )குரு பௌர்ணமி எனப்படுகிறது.
குரு பூர்ணிமா என்றால் என்ன?
குரு பூர்ணிமா என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆனி (ஆஷாட) மாதமும் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றது.
தட்சிணாமூர்த்தியாக ஈசன் அமர்ந்த குரு பௌர்ணமி நாள் இன்று!
இன்று ஆனி (ஆஷாட) பௌர்ணமி. இந்த நாளை வியாச பூர்ணிமா, குரு பௌர்ணமி என்றும் அழைப்பார்கள்.
வியாசபூஜை எனும் குருவழிபாடு இந்த நாளில் விசேஷம். கல்வி, கலைகள் கற்ற மாணவர்கள் ஆடி மாதம் வரும் பௌர்ணமியில் கல்வி மற்றும் ஞானம் அளித்த குருவினை வணங்கி வழிபடுவார்கள்.
அதுமட்டுமின்றி கலை, கல்வியின் தெய்வங்களான கீதை அருளிய ஸ்ரீகிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி, குருபகவான், புதன் போன்றவர்களை வணங்கி அருள்பெறுவார்கள்.
பாரதம் சொன்ன வியாசர், ராமாயணம் எழுதிய வால்மீகி, உபநிடதங்களுக்கு விளக்கம் இயற்றிய ஆதிசங்கரர், மத்வர், ராமானுஜர் போன்ற ஞானியர்களையும் வணங்குவது வழக்கம். இந்த நாளில் ஞான வடிவாக புத்த பகவானை வணங்குவதும் பௌத்தர்களின் வழக்கம்.
தட்சிணாயணத்தின் முதல் பௌர்ணமியான இன்றுதான் ஆலமர்ச்செல்வனான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியே தெற்கு நோக்கி அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு மௌன நிலையில் முத்திரை காட்டி உபதேசித்தார். ஆதிசிவன் குருவாக இருந்து உபதேசித்த நாள் என்பதால் இந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
குருவின் திருவருள் நிரம்பி வழியும் இந்த நாளில் நமக்கு கல்வியும் ஞானமும் வழங்கிய எல்லா குருமார்களையும் வணங்கி மானசீக வாழ்த்தைப் பெற்றுக்கொள்வோம்.
இந்த நாளில் மேற்கொள்ளப்படும் தியானமும் தவமும் சிறப்பானவை என ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன.
ஆதியோகியாம் சிவனிடம் இருந்து அவரது 7 சிஷ்யர்களான சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானம் பரிமாறப்பட்ட முதல் நாள், ஆதியோகியாம் சிவன் ஆதிகுருவாக பரிணமித்த திருநாள், குருபௌர்ணமித் திருநாள். ஆதிகுரு பரிமாறிய ஞானத்தை சப்தரிஷிகள் உலகமெங்கும் கொண்டு சேர்த்தனர்.
இன்றும்கூட உலகின் எந்த மூலையில் ஆன்மீக செயல்முறை பின்பற்றப்பட்டாலும் அது ஆதியோகி சிவன் உருவாக்கிய அடித்தளத்தில் இருந்தே வேர்விட்டுள்ளது.
ஏன் கொண்டாடப்படுகிறது:
ஆதி கடவுளான மகா விஷ்ணுவிடம் இருந்த வேதங்களை, அவரின் அம்சமான வியாசர் எனும் மகரிஷி 4 வேதங்களாக பிரித்தார்.
அதை மேலும் எளிமையாக புரிந்து கொள்ள 18 புராணங்களாக தொகுத்தார். இப்படி வேதங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தொகுத்ததோடு, வழி வழியாக அது ஒரு குருவிடம் இருந்து அவரது சீடருக்கு கொண்டு வரப்பட்டது,
அப்படி வாய் மற்றும் காது வழியே கடந்து இத்தனை காலங்களாக வேதங்கள் கடந்து வந்துள்ளன.
ஹயகிரீவர் அவதாரம்:
மகா விஷ்ணு ஹயகிரீவரராக அவதரித்து குருவாக இருந்து உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது.
குரு பகவானன தட்சிணாமூர்த்தி:
சைவர்களைப் பொருத்த வரையில் தெற்கு திசையைப் பார்த்து கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்து மெளன உபதேசமாக சனாதன குமரர்கள் 4 பேருக்கு உபதேசம் செய்து வருகிறார்.
அவருடைய உபதேசங்கள் அடுத்தடுத்து வழி வழியாக சங்கராச்சார்யார்கள் மூலமாக நாம் வாழும் காலம் வரை வந்ததாக கூறப்படுகிறது.
உபதேசம் செய்த முருகப் பெருமான்:
முருகப்பெருமான் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து சிவ பெருமான், அகஸ்தியர், அருணகிரி நாதர் ஆகிய மூவருக்கு சொன்னதாக கூறப்படுகிறது.
சிவ பெருமானுக்கே உபதேசம் செய்ததால் தகப்பன் சாமி என முருகன் அழைக்கப்படுகிறார்.
குரு பூர்ணிமா முக்கியத்துவம்:
மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தை பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப் படுத்தினார்கள்.
அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக “குரு பூர்ணிமா” கொண்டாடப்படுகிறது. இப்படி குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் வியாசர், தட்சிணா மூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கம்.
குரு பூர்ணிமா தினத்தில் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்த குருவை நாம் மனதார நினைத்தலும், கோயிலுக்கு சென்று வணங்குவதும் நல்லது.
தற்போது நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் தினம் போலவே, காலம் காலமாக குருவை நினைக்கும் வகையில், தான் கற்று வெளியேறிய பிறகும் தன்னுடைய குருவை நினைக்க வேண்டும் என்பதற்காக பின்பற்றப்பட்டு வந்த தினம் தான் குரு பூர்ணிமா என்பதால், இன்று குறைந்த பட்சம் நம் குருவை நினைக்கவாவது செய்யலாம்.
இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்
எங்கே செல்கின்றது நம் சாஸ்த்திர, சம்பிரதாயம்?
எங்கே செல்கின்றது நம் சாஸ்த்திர, சம்பிரதாயம்?
காஞ்சி காமகோடி பீடத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காமாக்ஷி அம்பாள் கோவிலில் அம்பாளுக்கு சாற்றிய அஷ்ட பந்தனம் எலி தின்று விட்டதாக சொல்லி இன்று யாருக்கும் தெரியாமல் கும்பகோணத்தில் இருந்து தினகரசர்மா அவர்களை நேற்றே வர வைத்து முறையாக செய்யப்பட வேண்டிய சாஸ்திரங்களை செய்யாமல் அவசர அவசரமாக தற்போது அஷ்ட பந்தனம் சாற்றி உள்ளார்கள். சுப்பையா ஸ்தபதி அவர்கள் முன்னிலையில். மஹா பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து பூஜை செய்த அஷ்டபந்தனம் எலி தின்றதாக சொல்லப்படுகிறது.
கௌரி காமாக்ஷிக்கு செய்த துரோகத்திற்கு இந்த காமாக்ஷியிடம் இவர்கள் மாட்டிக் கொண்டனர். ஏழு வருடங்களாக காமாக்ஷி கல்யாண மண்டபத்தை நிர்வாகம் செய்து வந்த காமாக்ஷியிடம் இருந்து ஒரே நாளில் வெளியேற்றி வேறு ஒருவரிடம் கொடுக்கப் பட்டதோ அதே போல், ஒரே நாளில் காஞ்சி காமாக்ஷிக்கு அஷ்ட பந்தனம் சாற்றி உள்ளார்கள். இது எந்த விதத்தில் ஞாயம்? இவர்கள் நினைத்தால் அஷ்ட பந்தனத்தை எப்படி வேண்டுமானாலும் சாற்றலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வெளி உலகத்திற்கு சொல்லவே வேண்டிய அவசியம் இல்லை.
சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்க வேண்டாமா? அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டாமா? மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டாமா? இந்த கடுமையான கொரோனா காலத்தில் இந்த மாதிரியான தவறான காரியங்களை மடமே செய்யலாமா? மடம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது? கலாகர்ஷணம் செய்ய வேண்டாமா? [கலையை ஆவாகனம் செய்வது] அம்பாளின் சக்தி, அறுபத்தி நான்கு கலைகளை ஒரு குடத்தில் ஆவாகனம் செய்து அதை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டாமா?. அப்படி ஏதாவது செய்தார்களா? யாக வேள்விகள் செய்தார்களா? யார் கொடுத்த யோசனையில் இவர்கள் இப்படி செய்கிறார்கள். சட்டத்தை ஆளுபவர்கள் சட்டத்தை மீறுவது போல் இவர்களும் வேதத்தை, சாஸ்திரத்தை, சம்பிரதாயத்தை, தர்மத்தை மீறுகிறார்கள். எல்லாவற்றிலும் நிபுணரான தினகரசர்மாவும் உடந்தையாக இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. காமாக்ஷி அம்பாளின் சாபத்திற்கு வெகு விரைவில் ஆளாவார்கள். துக்ளக் ஆட்சி நடைப்பெற்று கொண்டு இருக்கிறதோ??.
ஆதி சங்கரர் காமாக்ஷியை முதல் முறையாக தரிசிக்க வந்த போது காஞ்சி நகரமே பெரும் பஞ்சத்திலும், ஊரே வறண்டும், நோயின் கொடுமையும் இருந்ததை வரலாறு சொல்கிறது. ஏன் என்றால் கபாலிகளிடம் அம்பாள் மாட்டிக் கொண்டு பல பலிகள் கொடுக்கப்பட்டு அம்பாள் கடும் கோபத்தில், உக்கிரகத்லும் இருந்தால். இதை கண்ட ஆதி சங்கரர் கமாக்ஷியின் உக்கிரத்தை தனித்து ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த பின் தான் அம்பாள் சாந்தமடைந்தால் என்பது உண்மையான வரலாறு. இது அனைவருமே அறிவீர்கள். அன்று காபாளிகலிடம் இருந்து மீட்டார் ஆதி சங்கரர். இன்று இவர்கள் இப்படி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக அஷ்ட பந்தனம் சாற்றுவதால் காஞ்சிபுர மக்களுக்கும், உலகத்திற்கும் பெறும் கேடு வந்து விடாதா? ஏற்கனவே கொரானாவால் உலகமே அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறது. மக்கள் துன்பப்பட்டால் யார் அவர்களை காப்பாற்ற வேண்டும். உலகை காக்கும் பொறுப்பு இவர்களுக்கும் உண்டு என்பதை மறந்து விட்டார்களோ? ஏற்கனவே கொரானா முதல் அலை, இரண்டாம் அலை என்று மக்கள் பெரும் கஷ்டத்தில் இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தி ஒன்று ஞாபகம் வருகிறது, செய்தி சேனலில் ஆகஸ்ட் மாதம் முதல் கொரானா மூன்றாம் அலை மிக கொடுரமாக இருக்கும் என்று டெல்லி ஏம்ஸ் மருத்துவர்கள் நேற்று முன் தினம் சொன்னது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது.
எது தர்மம்... இதோ இதுவே முறையான தர்மம் ....
செட்டியார் கடையில் இருந்து கெமிக்கல் மருந்தை சாற்றலாம்.
உலகத்திற்கு தெரியாமலும், யாரிடமும் தெரிவிக்காமலும் சாற்றலாம்.
ஒரே நாளில் பூட்டிய சாவியை எடுத்தது போல் அஷ்ட பந்தனத்தை ஒரே நாளில் ரகசியமாக மாற்றலாம்.
ஏன் என்றால் தர்மமே இவர்களுக்கு கிடையாது என்பதும் இரண்டு நாட்களுக்கு முன் காமாக்ஷி கல்யாண மண்டபம் ஒரு சாட்சி. இன்று காமாக்ஷி கோவிலில் நடந்ததும் ஒர் சாட்சி.
ஏன் இவர்கள் எதையுமே முறையாக செய்ய மாட்டார்களா? ஏன் இப்படி தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள். முறையாக கௌரியிடம் பேசி என்ன நடைமுறையோ அதன் படி செய்து கல்யாண மண்டபத்தை கேட்டு இருக்கலாம். அதை செய்ய வில்லை. மடத்தின் ஸ்ரீகார்யம் டிரஸ்டிக்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி தான் நடக்கும் என்கிறார் ஸ்ரீகார்யம். டிரஸ்டிகள் யார் என்றே எனக்கு புரியவில்லை. அவர்கள் தான் எல்லாவற்றையும் பார்கிறார்கள் என்றால் எதற்காக ஸ்ரீகார்யம்? தர்மத்தை மீறினால் அது நல்லதுக்கு இல்லை. எதையும் முறையாக செய்யலாம். இப்படி அராஜகமாக எடுத்தோம், கவிழ்தோம் என்று செய்ய கூடாது. ரவுடிகளின் ராஜ்யம் போல் இருக்க கூடாது. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எல்லாம் கலிகாலம்.
மேலும் தற்போது கார்த்திக்கு பூஜை முறை இன்று பால பெரியவா வழங்கி உள்ளார். எத்தனை பேருக்கு தெரியும் இவர் இதற மத பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று. கார்த்திக் எப்படி அம்பாளுக்கு பூஜை செய்வதற்கு உத்தரவு கொடுத்தார்கள். இதே புது பெரியவா நடனம் அண்ணாவின் மகன் ஸ்ரீராமிற்கு நான்கு வருடங்கள் முன்பே புது பெரியவா பூஜை முறை வழங்கினார். அப்போது பால பெரியவாளிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றார்கள். ஆனால் பால பெரியவா ஸ்ரீராமை இப்போ பூஜை முறைக்கு வேண்டாம் பிறகு நான் சொல்கிறேன் என்று சொன்ன பெரியவா இன்று வரை பூஜை முறை வழங்க வில்லை. தன்னோட குருநாதர் பூஜை செய்வதற்கு முறை கொடுத்தும் இன்றுவரை ஸ்ரீராமுக்கு வழங்க வில்லை. நடனம் அண்ணாவோ, அவரின் பையன் ஸ்ரீராமோ இன்று வரை பொருமையாகவும், பெரிய மனதோடும் இருக்கலாம், ஆனால் இன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்ரீராமிற்கு பூஜை வழங்காதது மனசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அனைவரும் அர்சகர் ஆகலாம் என்பதை அவருக்கு முன்பே தொடங்கி வைத்ததற்கு முதலில் பாரட்ட வேண்டும்.
பெரியவா சரணம்
அடியேனின் தந்தையை பற்றிய ஒரு நினைவாற்றல்
என்றென்றும் நீங்கா நினைவில் இருக்கிறோம் அப்பா....
தந்தையர் தினத்தை முன்னி்ட்டு அடியேனின் தந்தையோடு வரலாறு....
வெகு நாட்களாகவே அடியேனின் தந்தையை பற்றிய ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆவளோடு இருந்தேன். இன்று தந்தையர் தினம் என்பதால் அடியேனின் தந்தை பாலு சாஸ்திரிகள் அவர்களை பற்றி மிக எளிமையாக ஒரு சிறு கட்டுரை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
அடியேனின் தந்தை கும்பகோணம் பாலு சாஸ்திரிகள். இயர் பெயர் பால சுப்பிரமணியன்.1943 ஆம் ஆண்டு மன்னார்குடி மாவட்டம் சித்தமல்லியில் வெங்கடராமன் மீனாக்ஷி சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு ஆறு பிள்ளைகளில் இவர் கடைக்குட்டியாக பிறந்தார். உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் பெண்கள், இரண்டு ஆண் குழந்தைகள். அப்பாவுக்கு ஒரு அண்ணா உண்டு, சிறு வயதிலியே இறந்து விட்டார். கடைக்குட்டி சிங்க குட்டியாக பிறந்தார். அக்கால கட்டத்தில் மிகவும் சிறப்பாக வாழ்ந்த குடும்பம். அதுவும் எங்கள் தாத்தாவின் உழைப்பை சொல்லி மாளாது. தாத்தா பூரணமாக வேதாத்தியானம் படித்தவர். ஆச்சார, அனுஷ்டானத்தில் கடுமையாக இருந்தவர். ஆதனாலேயே மகனை வேத பாடசாலையில் சேர்த்து படிக்க வைத்தார். அவரும் சிறந்த முறையில் வேதாத்யானத்தை பெரும் புலமையோடு முடித்தார்.
படிப்பு முடிந்த உடன் திருமணம். திருமணத்தின் போது தந்தையின் வயது பத்தொண்பது. சிமிழி ஸ்ரீராமா & மீனாக்ஷி தம்பதிகளின் மூத்த பெண்ணை கைப்பிடித்தார். அப்போது அடியேனின் தாயாருக்கு வயது ஒன்பது. பெரிய மனுஷியாக கூட ஆகவில்லை. பதிமூன்று வயதில் அடியேனின் தாயார் முதல் குழந்தையை ஈன்றெடுத்தார். அடியோனோடு உடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். முதல் இரண்டும் பெண், மூன்றாவதாக அடியேன், நான்காவதாக ஒரு பெண் எனக்கு தங்கையாக பிறந்தாள். பின் தந்தை பிழைப்புக்காக கும்பகோணம் ராஜு சாஸ்திரிகள் அவர்களிடம் வைதீகத்திற்கு வந்தார் தந்தை. ராஜு சாஸ்திரிகள் அடியேனின் தந்தையின் மாமா ஆவார்.
கும்பகோணத்தில் பேரும், புகழோடும் குடும்பம் நடந்தது. குழந்தைகள் எல்லாம் வளரவே வருமானம் போததால் சென்னைக்கு குடி வந்தார்.
சென்னையில் குரோம்பேட்டையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை தொடங்கி, படி படியாக உயரத்திற்கு வந்தார். குரோம்பேட்டையில் தனக்கென முத்திரை பதித்தார். கிரகஸ்தர்கள் அப்பாவின் மீது மிகுந்த மரியாதை வைத்தார்கள். மிகவும் எளிமையாகவும், அனைவரிடமும் அன்பாகவும் பழக்க கூடியவர். கிரகஸ்தர்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் காரியங்களுக்கு அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை பெற்று குடும்பம் நடத்தி வந்தார். தனது கடின உழைப்பால் அவரின் பெயரிலேயே ஒரு தெரு அமைத்து, கிரகஸ்தர்களின் உதவியோடு தனக்கென ஒரு நிலம் வாங்கி அதில் ஒரு எளிமையான வீடு கட்டி பெருமையோடு வாழ்ந்து வந்தார். கிரகஸ்தர்கள் கும்பகோணம் பாலு சாஸ்திரிகள் என்ற பெயரோடு கூடவே குரோம்பேட்டை பாலு சாஸ்திரிகள் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவரின் வெண்கல குரலுக்கு அனைவரும் அடிமை என்றால் அது மிகையாகாது. அப்படி ஒரு குரல் வளம் கொண்டவர். அதே நேரத்தில் வைதீக காரியங்களை எதற்காகவும் குறைக்க மாட்டார். சாஸ்திரத்தில் எப்படி சொல்லப்பட்டுள்ளதோ அப்படி செய்து தருவார். குரோம்பேட்டையில் என்னற்ற வைதீகர்களை கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அப்பாவின் சிஷ்யராக இன்றும் குரோம்பேட்டையில் நிறைய வைதீகர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் அப்பாவிடம் வைதீகம் பார்த்து இருக்கிறார்கள்.
வேதீகத்தையும் தாண்டி தனது சொந்த ஊரில் குலதெய்வ கோவிலான ஆகாச வீரனார் கோவிலையும் கட்டினார். வலம்புரி விநாயகர், ஆகாச வீரனார், முருகன் ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்து சிறப்பாக கும்பாபிஷேகம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆரம்ப கால கட்டத்தில் இந்த கோவிலில் உருவம் கிடையாது. தீபம், அரிவாள், கதை ஆகியவை மட்டுமே வெட்ட வெளியில் இருந்தது. வெட்ட வெளியில் எவ்வளவு காற்று அடித்தாலும் தீபம் இனையவே அனையாது. அவ்வளவு சக்தி உண்டு எங்கள் ஆகாச வீரனாருக்கு. பின் அப்பாவுக்கு உத்தரவாகி தனது உருவத்தை காட்டி அப்பாவை கோவில் கட்ட ஆகாச வீரனார் கனவில் கேட்டுக் கொண்டதின் பேரில் கோவில் அப்பாவால் கட்டப்பட்டது. கோவிலுக்கும் முதல் செங்கல்லை ஜகத் குரு ஜயேந்திர பெரியவா தான் தந்தையின் கனவில் தோன்றி எடுத்து வைத்தார். அப்போது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது என்றும் மழையில் நனைந்த படி பெரியவா முதல் செங்கல்லை எடுத்து வைத்தது போல் கனவில் அனுக்கிரஹம் செய்தா ஜயேந்திர பெரியவா. தற்போது பூஜைகளும் சிறப்பாக நடை பெற்று வருகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேல் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர பெரியவா மீது அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். அதனாலேயே பெரியவாளுக்கும் தந்தையை மிகவும் பிடிக்கும். பெரியவாளை இரண்டு முறை குரோம்பேட்டைக்கு அழைத்து வந்துள்ளார். முதல் முறையாக 2004 ஆம் ஆண்டு ஐந்து நாட்கள் காமாக்ஷி கல்யாண மண்டபத்தில் சந்திர மௌளீஸ்வர பூஜையோடும், இரண்டாவது முறையாக பெரியவாளின் எழுபத்தி ஐந்தாவது ஜயந்தி [2012 ஆண்டு] மஹோட்சவத்திற்காகவும் அழைத்து வந்து மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்தார். காலங்கள் உருண்டு ஒடின. தந்தைக்கு எழுபது வயது பீமரதாஸாந்தி இல்லத்திலேயே வெகு விமரிசையாக நடந்தது. நாளாக நாளாக உடலில் தளர்வு ஏற்பட்டது. சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி காலை ஏழரை மணிக்கு பெரியவாளின் பாதார விந்தத்தில் சரணடைந்தார். இப்படி ஒரு தந்தை எங்களுக்கு கிடைத்த பெருமையோடும், மிகவும் பாக்கிய சாலிகளாக, தங்களின் நீங்கா நினைவோடு வாழ்ந்து வருகிறோம் அப்பா.
தந்தையை பற்றி இன்னும் எழுதுவதற்கு ஏராளமாக உள்ளது. இனினும் மிக சுருக்கமாக அடியேன் எழுதி உள்ளேன்.
காமாக்ஷி கல்யாண மண்டபத்தில்
இன்று காலை முதலே காமாக்ஷி கல்யாண மண்டபத்தில் பம்மல் விஸ்வநாதன் அவர்கள் தொடர்ந்து அராஜகமாக உள்ளே நுழைந்து கல்யாண மண்டபத்தின் மேனேஜராக இருக்கும் சரவணனை மிரட்டி கல்யாண மண்டபத்தின் சாவியை பறித்து சென்று வேறு ஒரு பூட்டை பூட்டி சென்றுள்ளார். பின் சரவணனையும் போலிஸ் ஸ்டேஷனில் விசாரிக்க அழைத்து சென்றார்கள். இதனிடையே கௌரி காமாக்ஷி அவர்கள் யார் மீதும் எந்த விதமான புகாரும் தெரிவிக்காமல். அவரின் சொந்த முயற்சியில் பெரியவாளின் அனுகிரஹத்தாலும் அவர்களால் எந்த அளவுக்கு முடியுமோ அதை முயற்சித்தது டி.ஐ.ஜியிடம் பேசி, டி.ஐ.ஜி அவர்கள் டி.எஸ்.பி.யிடம் பேசி, டிஎஸ்பி அவர்கள் இன்பெட்டரை அழைத்து சமாதனமாக பேசி சாவியை மீண்டும் சரவணிடம் தர சொல்லி உள்ளார்கள். மடத்தின் சார்பாக பம்மல் விஸ்வ நாதன் பேசுவதால் இன்ஸ்பெக்டர், சப்இன்பெட்டர், சரவணன், பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் மடத்திற்கு சென்றுள்ளார்கள். இனி பால பெரியவா தான் சாவியை யாரிடம் தர வேண்டும் என்ற முடிவை பெரியவா தான் எடுக்க வேண்டும். ஆனால் பெரியவா வீடியோ கின்பிரஸ்சில் இருப்பதாக சொல்லி உள்ளார்கள். இதனிடையே மடத்தின் ஸ்ரீகார்யம் அவர்கள் கல்யாண மண்டப சாவியை பம்மல் விஸ்வநாதனிடம் கொடுக்க சொல்லி இருக்கார் ஸ்ரீகார்யம். போலிசும் கல்யாண மண்டப சாவியை பம்மல் விஸ்வநாதனிடம் வழங்கிவிட்டார்கள்.
எனக்கு ஒரு சந்தேகம்?
மடத்தின் சொத்துக்களை யார் நிர்வாகம் செய்ய வேண்டும்? ஸ்ரீகார்யமா, பெரியவாளா அல்லது டிஸ்டிக்களா? ஒருவரிடம் இருந்து நிர்வாகத்தை வேறு ஒருவரிடம் கொடுக்க நினைத்தால் அதை முறையாக எப்படி செய்ய வேண்டும்? சென்ற ஆண்டு கொரொனா முதல் அலையின் போது எஸ்.யூ.டி மருத்துவ கல்லூரியை விற்றார்கள். இன்னும் அந்த பிரச்சனையே முடிந்த பாடு இல்லை. அதற்குள் இந்த ஆண்டு இரண்டாவது அலையில் கல்யாண மண்டப பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. சுமுகமாக பேச வேண்டிய ஒன்றை தேவையில்லாமல் பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள். ஏன் இவர்கள் இப்படி தவறான அனுகுமுறையில் செல்கிறார்கள் என்றே தெரிய வில்லை. பெரியவா கௌரி காமாக்ஷியை அழைத்து பேசினாளே எல்லாம் சரியாகி விடும். அப்படியும் இல்லை என்றால் ஸ்ரீகார்யமாவது கௌரி காமாக்ஷியை அழைத்து பேசினால் இது பிரச்சனையே இல்லாமல் சுமுகமாக முடிந்திருக்கும். போலிஸ் வரை சென்று மடத்தின் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசிம் இல்லையே? மடத்தை நிர்வாகம் செய்வது கூட டிரஸ்டிக்கலாக மட்டுமே இருக்குமோ? அப்போ ஸ்ரீகார்யம்? 2016 முதல் கல்யாண மண்டபத்தை நிர்வகித்து வந்தவர் கௌரி காமாக்ஷி தான். புது பெரியவா தான் கௌரி காமாக்ஷியிடம் கல்யாண மண்டபத்தை தந்தார். பெரியவா சித்திக்கு பிறகும் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாகவம் ஆக மொத்தம் ஆறு ஆண்டுகளாக கௌரி தான் பார்த்துக் கொண்டு இருந்தார். [இன்று காலை வரை] ஆனால் கடந்த நான்கு நாட்களாக பம்மல் விஸ்வ நாதன் அவர்கள் கல்யாண மண்டபத்தை அவரின் கட்டுபாட்டில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். எனக்கு ஒன்று புரியவே இல்லை. மடத்தை நிர்வகிப்பது யார்? சங்கரா பள்ளிகள், மருத்துவ மனைகள், முதியோர் இல்லங்கள், கல்லூரிகள், கல்யாண மண்டபங்கள், மற்றும் மடத்தின் அசையும் சொத்து, அசையா சொத்து இவற்றை எல்லாம் யார் நிர்வாகம் செய்கிறார்கள். நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன் டிரஸ்டிக்கள் பெரியவாளால் நியமிக்க பட்டவர்களே! அவர்கள் அதில் எந்த முதலீடும் செய்ய வில்லை. பிறகு எப்படி டிரஸ்டிக்கள் கோடி கோடியாக மடத்தின் மூலம் இவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இது ஏதோ கடந்த நான்கு நாட்களாக இவர்கள் இதை செய்திருக்க முடியாது திட்டமிட்டு தான் செய்திருக்க முடியும். ஏன் தொடர்ந்து கௌரி காமாக்ஷி அவர்களையே இந்த மடத்தின் நிர்வாகிகள் கார்னர் செய்கிறார்கள்?
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த பூமியில் வாழ போகிறோம். எதை எடுத்துக் கொண்டு வந்தோம் எதை எடுத்துக் கொண்டு போக போகிறோம். நெற்றியில் வைக்கும் ஒரு ரூபாய் கூட நம்முடன் வர போவது இல்லை. அடியேனை பொருத்தவரை ஆறு அடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லை. நாளை நம்மீது ஒருவரின் சடலம் கூட இருக்கும். இருக்கும் காலத்தில் தான் மனிதன் என்னென்ன ஆட்டம் போடுகிறான். இன்று இறந்தால் நாளைக்கு பால்...... இது தான் வாழ்கை..... புரிந்தவர்களுக்கு புரியட்டும்.......
கூடலி சிங்கேரித் மடம்
கூடலி சிங்கேரித் திருமடம்
(துங்கபத்ரா சிங்கேரி)
கர்நாடக மாநிலத்தில் ஷிமோகாவிற்கு அருகில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் கூடலி எனும் நகரமும், துங்கைக் கரையில் சிங்கேரியும் இருக்கின்றன. இந்த இரு இடங்களிலும் புகழ் பெற்ற சங்கர மடங்கள் இருக்கின்றன.
கூடலி... வித்யாநகரம், தட்சிண வாரணாசி, ஹரிஹர க்ஷேத்ரம், தட்சிண ப்ரயாகை, ராமக்ஷேத்ரம் எனும் பல சிறப்புப் பெயர்களுடன் கூடிய புகழ் மிக்க இடமாகும். மேலும், பீடத்தின் அதிதேவதையான சாரதாப் பிராட்டியே கூடலியில் இருப்பதாகவும், நவராத்திரியின்போது சிங்கேரிக்கு வருவதாகவும் செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. இந்தக் கதை மெய்யோ பொய்யோ.. இதன் உண்மைத் தன்மையை பிராட்டியே அறிவாள். இது பழைய நூல்களிலும் பதிவாகி உள்ளது என்பதை மட்டும் சொல்லி இதை இத்துடன் விடுத்து மேற்கொண்டு தொடருவோம்.
கூடலி உண்மையான சிங்கேரியே
என்பதை உறுதிபடுத்த வேண்டி கூடலி மடத்தினர் பல ப்ராசீன சாசனங்கள், உடன்படிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட ஆவணங்களைச் சேர்த்து அனேக நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.
ஆயினும், நம்மைப் பொருத்தவரை, போற்றுதற்குரிய இவ்விரண்டு மடங்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் கிடையாது,
இதுவரை கிடைத்துள்ள பழைய சரித்திர ஆவணங்களின் அடிப்படையில் இவ்விரு அத்வைத பீடங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே நாம் ஆராய்வோம்.. அத்துடன் அமைவோம்.
கூடலியும், சிங்கேரியும் ஒரே கொடியில் பூத்த இரு மலர்கள் எனக் கொள்வர் பெரியோர்.
இந்த இரண்டு பீடங்களும் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து மாறுபாடுகளாலும், காலச் சூழலாலும் அப்போதிருந்த அரசர்களையும், நீதிமன்றங்களையும் அணுகியிருப்பினும், இருவரது குரு பரம்பரைப் பட்டியல்களும் ஸ்ரீ நரசிம்ம பாரதி என்னும் ஆசார்யர் வரைக்கும் ஒன்றாகவே இருக்கின்றன என்பதை நவீனரும் ஒப்புக் கொள்கின்றனர்.
பழைய கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்டவற்றில் இருவருக்குமே சிங்கேரி என்னும் முன்னொட்டு தரப்பட்டுள்ளதையும், கூடலி மடத்தின் பலமான சரித்திரப் பின்னணி பற்றியும் மைஸூர் தொல்லியல் துறை ஆண்டறிக்கைகள் வாயிலாக நாம் அறியலாம்.
பி.கு: தற்கால வெகுஜன ஊடகங்களின் வாயிலாக மட்டுமே கர்நாடக மாநிலத்தில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு அத்வைத மடம் அல்லது மற்ற மடங்களையும் பற்றி இதுவரை மேலோட்டமாக அறிந்து வந்திருப்போர், இந்தப் பதிவுகளை நிதானமாக ஒரு தடவைக்கு இருமுறையாக வாசிக்க நன்கு தெளிவாகும். அனைத்து அத்வைத மடங்கள் மற்றும் ஆசார்யர்கள் மீது மதிப்பும் உண்டாகும்.
படங்கள்: ஸ்ரீகூடலீ ச்ருங்கேரி பீடம் ஜகத்குரு மஹாஸம்ஸ்தான ஸிம்ஹாஸனம்..
கயா ஸிராத்தம்...
சங்கர பகவத்பாதாள் அவர் எழுதிய இந்த அதி அத்புதமான ஸ்லோகத்தை பார்ப்போம்.
ஹரி ஓம் சங்கர பகவத்பாதாள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ ஆசிர்வதிக்கட்டும் அன்பே சிவம்
''கயே கயே கயே என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் ஐந்து ஸ்லோகங்களை இயற்றினார்.
விஷ்ணு பாதம்
பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். ''கயே கயே கயே என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.
ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு. ஷோடசி தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்து கொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.
ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய
''அடே பயலே அம்மா, அப்பா உயிரோடு இருக்கும் போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்து கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி, கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது.
“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்கள் அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' [தமிழில் சின்ன 'ட"] ஆல மரம். சென்னைக்கருகே திரு ஆலம் காடு [திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.]
இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.
1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?
2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.
3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
அம்மா நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டு தாங்க முடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்த போது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த மூன்றாவது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு என் தாயே.
4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''அம்மா இந்த நான்காவது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக - ஒரு பரிசு - என்றே ஏற்று கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.
5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனம் முன் வந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''
6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''குழந்தை வயித்திலே இருக்கும் போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம் அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'
7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் நேரம் தவறாமல் பால் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த ஏழாவது பிண்டம்.
8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்து கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த எட்டாவது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே.
9. தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''நான் சுகவாசி எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம் எதுவுமே தெரியாது. நீ தான் இருந்தாயே பார்த்து, பார்த்து அவ்வப்போது எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த ஒன்பதாவது பிண்டம்.
10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக பத்தாவது பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா.
11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''வெளியே பனி குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து, ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்த வேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற்க்கு ஏற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பதினோறாவது பிண்டம் எடுத்துக்கொள்.
12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண் விழித்து உன் உடல் அதற்காகத்தான் இந்த பன்னிரெண்டாவது பிண்டம் தருகிறேன்.
13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு, ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த பதிமூறாவவது பிண்டம் தான் அம்மா.
14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் இப்போது பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் - நீ இல்லா விட்டால் நானே எது? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த பதினான்காம் பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.
15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
திருப்பி, திருப்பி சொல்கிறேனே நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி,பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதி உபகாரம் இந்த பதினைந்தாவது பிண்டம் ஒன்றே.
16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த பதினாறாவது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே.... என்னை மன்னித்து ஆசிர்வதி தாயே....
ஸிராத்தம்....
ஸிராத்தம் ஒன்று
மஹாளய பட்சத்தில் சொல்ல வேண்டு்ம் என்று தோணித்து...
இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாளில் அரசாண்ட ராஜாக்களுக்கு ரிஷிகள் சொல்லியருளியது... அதில் சிலதை சொல்ல னுமுன்னு தோணித்து....
அதாவது அன்னவாஹார்யம்ன்னு சொல்லப்படும் ஸிராத்தமானது ஒவ்வொரு அமாவாசை தோறும் செய்வது சிறப்பு. பிதுருயாகமானது தேவர் அஸுரர் மனிதர் கந்தர்வர் நாகர் அரக்கர் பிசாசர் கின்னரர்கள் ஆகியோரும் பிதுருக்களை பூஜிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாசமும் கைகூப்பி பணிவுடன் அந்த ஸிராத்ததை செய்ய வேண்டும். அதை தவிர ஷ்ண்ணவதின்னு சொல்லக் கூடிய 96 நாட்கள் வருடத்திற்கு உகந்தவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்...
உதாரணமாக பிரதமையில் பூஜிப்பதால் அழகான குழந்தைகளும் குடும்பபாங்கான ஸ்திரீயும் மணவாட்டியாக வருவாள். துவிதியையில் ஸிராத்தம் செய்ய பெண் குழந்தைகள் கிடைக்கும் திருதியையில் செய்வதால் குதிரைகளுக்கும் சதுர்த்தியில் செய்வதால் ஆடுமாடு நான்கு கால் பிராணிகளும் விருத்தியுண்டாகும்.
பஞ்சமியில் ஸிராத்தம் முறையாக செய்பவனுக்கு அதிக புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும். ஷஷ்டியில் செய்பவன் ஒளி பெறுவான். சப்தமியில் செய்பவன் பயிர் செழித்து வளரும். அஷ்டமியில் செய்பவன் வர்த்தக லாபத்தை அடைவான்.
நவமியில் செய்பவனுக்கு ஒற்றை குளம்புள்ள பிராணிகள் விருத்தியாகும். தசமியில் செய்தால் ஆட்கள் கிடைப்பார்கள். ஏகாதசி ஸிராத்ததால் வஸ்திராபரணங்களை மிகுதியாக அடைந்து மகிழ்வான். மேலும் சாஸ்திரோத்தமான பிள்ளைபேறு கிடைக்கும். துவாதசி சிராத்ததால் அதிக பொன் வெள்ளி விருத்தியாகும்.
திரயோதசியில் செய்பவனுக்கு மனிதரில் சிறந்தவனாக ஆக்கப்படுவான். சதுர்தசியில் செய்வது அவ்வளவு உசிதமல்ல... [தேவை இருப்பின் மட்டுமே அனுமதி]. அமாவாஸை ஸிராத்ததால் விரும்பினவற்றை அடைவான்.
கிருஷ்ணபட்சமானது சுக்கிலபட்சத்தை விட ஸிராத்தத்திற்க்கு விஷேஷமாகும். அதே போல முற்பகலை விட பிற்பகலே விஷேஷம்....
இதே போல் ஸிராத்த பொருட்கள் என்னென்ன குடுத்தால் எவ்வளவு திருப்தி என்பதையும் நட்சத்திரங்களில் செய்தால் என்ன பலன் அப்படிங்கறதையும் வரும் பதிவுகளில் சொல்லறேன்...
மஹாளபட்சம் முறையா அனுசரியுங்கள்... யதா சக்தியாக என்ன தரமுடியுமோ அதை தானம் தாருங்கள்...
இப்பவும் சொல்லறேன்...ஸிராத்தம் தர்ப்பணம் எல்லாம் பரிகாரம் அல்ல... நாம் வாங்கின கடன். அந்த கடனை இந்த ஜீவன் தேக காலம் இருக்கும் வரை முழுவதும் அடைக்கனும்... இதை பரிகாரமா சோதிடத்தில் சொல்வது பாபம். மனிதனா பிறப்பவருக்கும் பொது இது... அதிலேயும் ப்ராமணனா பிறந்து சந்தியாவந்தனம் செய்யாமல் தர்ப்பணம் செய்யாமல் இருப்பது கொடிய நரகத்தில் வாசம் செய்வதற்க்கு சமம்...
இது நம் தர்மம்... அனைவரும் முடிந்த வரை செய்யவும்...
வியாழன், 7 டிசம்பர், 2023
பல மடங்கு பலன் தரும் ஸ்படிக லிங்கங்கள்!
பல மடங்கு பலன் தரும் ஸ்படிக லிங்கங்கள்!
சைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. முப்பத்திரண்டு வகையான புனிதமான பொருட்களால் லிங்கங்கள் செய்யப்படுகின்றன. அவை செய்யப்படும் பொருளுக்கேற்ப அருள் வழங்கும் தன்மையவை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த முப்பத்திரண்டு வகையிலும் சேராமல் சுயம்புவாக அதாவது இயற்கையாக கிடைக்கக்கூடியதுதான் ஸ்படிக லிங்கம். அதனால் இது மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்படுகிறது. ஸ்படிகம் சிவனின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனிலிருந்து விழுந்ததாகக் கூறுவோரும் உண்டு. ஸ்படிகம் என்பது ஒரு வகை கிரிஸ்டல். தூய்மையான நிலையில் கண்ணாடி போலக் காணப்படும். இது மிகவும் குளிர்ந்த தன்மையது. அதனால் இதன் மணிகளை மாலையாகக் கோத்து பெரியவர்கள் அணிவதும் உண்டு. ஸ்படிகம் இமய மலையின் அடி ஆழத்திலும் விந்திய மலை மற்றும் சங்ககிரி மலையின் சில பகுதிகளிலும் கிடைக்கும். இது மிகவும் விலைமதிப்புள்ளது. பாரதத்தின் வடபகுதியில் இருந்த ஸ்படிகம் தென்பகுதி வந்தது சுவாரசியமான கதை. ஆதிசங்கரர் கைலாய மலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சிவபெருமான் அவருக்குக் காட்சி அளித்து, ஐந்து ஸ்படிக லிங்கங்களை அளித்து அவற்றை பூஜிக்கும் முறை பற்றியும் விளக்கமாக கூறியருளினார். அவை முக்தி லிங்கம், வர லிங்கம், மோட்ச லிங்கம், போக லிங்கம், யோகலிங்கம் எனப் பெயர் கொண்டவை. அந்தப் பஞ்ச லிங்கங்களை ஆதிசங்கரர் ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.
முக்தி லிங்கம் - கேதார்நாத், வரலிங்கம் - நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம் -சிருங்கேரி, யோகலிங்கம் - காஞ்சி. சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் சந்திர மவுலீஸ்வரராக வழிபடப்படுகிறது. தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது. முன்னால் இருந்த ஸ்படிக லிங்கத்தில் கீறல்கள் விழுந்ததால் அதற்குப் பதிலாக, இமயமலையிலிருந்து 6 இன்ச் உயர லிங்கம் எடுத்து வரப்பட்டு 2011-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. உற்சவ மூர்த்தி இங்கே கண்ணாடிக் கருவறையில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். இவருக்கு முன்னால் மற்றொரு சிறிய சன்னதி இருக்கிறது. இங்குதான் ஸ்படிக லிங்கம் நந்தியோடு சேர்த்து பூஜிக்கப்படுகிறது. இது பழம் பெருமை வாய்ந்தது. அதே போல ராமேஸ்வரம் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இது விபீஷணனால் இங்கே கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள். ராமரும் சீதையும் பூஜித்த லிங்கமாக இது கருதப்படுகிறது. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால், அதிகாலையில் அதாவது காலை 4 மணி முதல் 5 மணி வரை, இக்கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் முன் ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. கோயிலில் இந்த தரிசனத்திற்கென்று தனி டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. இந்த வழிபாடு முடிந்ததும் கோயிலில் இருக்கும் எல்லா தீர்த்தங்களிலும் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இவை தவிர திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யத்திலும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது. இக்கோயில்கள் தவிர வேறு சில இடங்களிலும் ஸ்படிக லிங்கங்கள் உள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்திலேயே லிங்க வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இறைவனின் உருவமற்ற தன்மையை (நிராகார) குறிக்கும் வகையிலும், அவனின் குணமற்ற (நிர்க்குண) தன்மையைக் குறிக்கும் வகையிலும் ஸ்படிக லிங்கங்கள் குறியீடுகளாகக் கருதப்பட்டு பூஜிக்கப்பட்டன. ஸ்படிகம், பக்கத்தில் உள்ள பொருளின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது. இதன் இருப்பு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. யஜுர் வேதம் சிவனை ஜோதி ஸ்படிக மணி லிங்க வடிவானவன் என்று கூறுகிறது. சிவன் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் விளங்குகிறார் என்பது இதன் விளக்கம். ஸ்படிகத்தின் ஒவ்வொறு அணுவிலும் சிவனின் குற்றமற்ற தூய்மை நிறைந்திருக்கிறது. ஸ்படிக லிங்கங்களின் மகிமை குறித்து மார்க்கண்டேய சம்ஹிதையில் விரிவாகக் கூறப்படுகிறது. சரி! இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை பயன் பெற எப்படி வழிபட வேண்டும்?
ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனிச் சிறப்பு என்னவென்றால் இது ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்க கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்றும், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்கள் ஒரு பாண லிங்கத்துக்குச் சமம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பாண லிங்கம் என்பது கண்டகி நதிக்கரையில் இயற்கையாகக் கிடைக்கும் சாளக்கிராமங்களைப் போல நர்மதை நதியில் கிடைக்கும் இயற்கையான லிங்கங்களாகும். ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.
பொதுவாகவே மந்திர சித்தி, அதாவது சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும். ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. உதாரணமாக லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால் பலன் பல மடங்கு பெருகி வரும். ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம். தீய எண்ணங்கள், பிறரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள், அலைபாயும் மனம், தெளிவற்ற சிந்தனை இவற்றோடு வணங்கினால் எதிர்மறையான பலன் ஏற்பட்டுவிடும். அதனால் ஸ்படிகத்தை வணங்கும்போது மிகவும் கவனம் தேவை. ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது. விசேஷமானது.
ஸ்படிக மணி மாலையை வைத்து மந்திரங்கள் ஜபிப்பவர்களுக்கு பலன் முழுவதுமாகவும், விரைவிலும் கிட்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் ஸ்படிக மணி மாலை அணிந்து இருந்ததால்தான் அவருக்கு மனத்திண்மையும், தோற்றப் பொலிவும், திடமனதும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது. அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? எல்லாம் தவிடுபொடியாகிவிடாதா? வீட்டில் வைத்தும் ஸ்படிக லிங்கத்தை பூஜிக்கலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பாலாலும் பழச்சாறுகளாலும் தூய நன்னீராலும் அபிஷேகம் செய்து, பூக்களால் பூஜித்து தூப தீபம் காட்டி வழிபட சகல பாவங்களும் நீங்கும். வீட்டில் ஐஸ்வர்யமும் சந்தோஷமும் பெருகும்.
ஸ்படிக லிங்கத்தின் மற்றொரு பெரும் சிறப்பு, இது தாந்திரீகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது என்பதாகும். மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல், பின்னி சூனியங்கள் முதலியவற்றை எடுப்பவர்கள் அவை தங்களைத் திருப்பித் தாக்காமல் இருக்க ஸ்படிகலிங்க வழிபாடு செய்வார்கள். அதனால் அபிசார தோஷம் (ஏவல் பில்லி சூனியங்களால் பிரச்சினை) உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின் முன் மனமொடுங்கி தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் அமர்ந்தால் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடலாம். வியாபாரிகள் இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டிலோ தங்கள் வியாபாரக் கேந்திரத்திலோ வைத்து வழிபடலாம். முறைப்படி பூஜிப்பதால் ஸ்படிகம் தன ஆகர்ஷண சக்தி படைத்ததாக மாறுகிறது. அதனால் நல்ல லாபம் கிடைப்பதுடன் தொழிலும் மேலும் மேலும் விருத்தியடையும். மாணவர்களும் கூட ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். தொடர்ந்து இதைப் பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தாலே நல்ல ஞாபக சக்தி, விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவை கிட்டும். இதற்கு தினமும் பூஜை செய்ய நல்ல மனத்திண்மையும் நேர் வழியில் செல்ல விருப்பமும் உண்டாகும். மொத்தத்தில் இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஸ்படிகம் நன்மையே செய்யும்.