புதன், 10 ஜனவரி, 2024

காமாக்ஷி

காமாக்ஷி அம்பாள் ஏதோ ஐநூறு வருங்களோ, ஆயிரம் வருடங்களோ பழமை இல்லை யுகங்கள் கடந்து நமக்கு இன்றளவும் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறாள் காமாக்ஷி. கிருதயுகத்தில் இருந்து இருக்கிறாள் காமாக்ஷி. திரேதாயுகத்தில் தசரத மஹாராஜா பிள்ளை வரம் வேண்டி காமாக்ஷியை தரிசித்து பிரார்த்தனை செய்த பின் தான் ராமரின் அவதாரமே. துவாபர யுகத்திலும் கிருஷ்ணரின் காலத்திலும் காமாக்ஷி அருள் பாலித்தார். தற்போது கலியுகத்திலும் நாம் அனைவரும் தரிசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இருப்பதிலேயே கலியுகம் தான் மிக மோசமாக இருக்கும், பாவங்கள் நீக்கமென நிறைந்து இருக்கும், அநியாயங்கள் நடக்கும், பிராமணர்கள் ஆச்சார அனுஷ்டானத்தை விட்டு விடுவார்கள் என்பதெற்கெல்லாம் ஆதாரமாக தற்போது எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவே மிக சரியான முன் உதாரணமாக இருக்கின்றது.

எங்கே சென்று கொன்று இருக்கிறது நமது கலாச்சாரமும் ஆச்சார அனுஷ்டானமும் என்றே தெரிய வில்லை. சமீபத்தில் காமாக்ஷி அம்மன் கோவிலில் கார்த்திக்குக்கு பூஜை முறை வழங்கியதே மிக பெரிய தவறு அப்படி இருக்க மேலும் இரண்டு பேர் காமாக்ஷி அம்மன் கர்ப்பகிரகத்திற்கு செல்வது எந்த விதத்தில் இவர்கள் அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை. கர்ப்பகிரகற்திற்குள் செல்ல சில அத்யாவசியமான சாஸ்திரங்கள் உண்டு. ஒன்று வேற்று மத பெண்ணை திருமணம் செய்து கொள்ள கூடாது, கடல் தாண்டி செல்ல கூடாது. ஆனால் இவர்கள் இன்று செய்துக் கொண்டு இருப்பது மிக பெரிய பாவ செயல். ஒன்று சங்கரும் வேற்று மத பெண்ணை திருமணம் செய்து கொண்டு உள்ளார். அதே போல் நடனம் அண்ணாவின் அண்ணா பாலசுப்பிரமணியன் அவர்களின் மகன் வெளிநாடு சென்று வந்துள்ளார். அவர் வெளிநாடு சென்றது தவறு என்று சொல்ல இல்லை. ஆனால் தற்போது காமாக்ஷி கர்ப்பகிரகத்தில் செல்வது தான் தவறு. வெளி நாடு சென்றால் அதாவது கடல் தாண்டி சென்றால் மீண்டும் கர்ப்ப கிரஷத்தின் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. அதே போல் தான் ஸ்ரீமடத்திலும் வெளிநாடு சென்றவர்களுக்கு பெரியவா கரங்களால் தீர்த்த பிரசாதம் தர மாட்டார்கள். இதற்கு உதாரணமாக எம். எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் அவரின் கணவருக்கு மஹா பெரியவா தீர்த்த பிரசாதம் கொடுக்க வில்லை என்று நாம் படித்து தெரிந்து கொண்டு இருப்போம். இப்படி எல்லாம் சாஸ்த்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கும் போது அதை எல்லாம் மீறி இன்று இப்படி இவர்கள் செய்வது ஞாயமா? யார் இவர்களுக்கு சொல்வது? இவற்றை எல்லாம் யார் சரி செய்ய போகிறார்கள்? அல்லது இதையெல்லாம் நாம் சகித்துக் கொண்டு கண்டும் காணாமல் இருக்க வேண்டுமா? ஏன் இவர்களுக்கு அம்பாளிடம் பயமோ, பக்தியோ கொஞ்சம் கூடவா இருக்காது. இதை எல்லாம் சரி செய்ய வேண்டியது யாருடைய கடமை?



கருத்துகள் இல்லை: