புதன், 10 ஜனவரி, 2024

காமாக்ஷி கல்யாண மண்டபத்தில்

இன்று காலை முதலே காமாக்ஷி கல்யாண மண்டபத்தில் பம்மல் விஸ்வநாதன் அவர்கள் தொடர்ந்து அராஜகமாக உள்ளே நுழைந்து கல்யாண மண்டபத்தின் மேனேஜராக இருக்கும் சரவணனை மிரட்டி கல்யாண மண்டபத்தின் சாவியை பறித்து சென்று வேறு ஒரு பூட்டை பூட்டி சென்றுள்ளார். பின் சரவணனையும் போலிஸ் ஸ்டேஷனில் விசாரிக்க அழைத்து சென்றார்கள். இதனிடையே கௌரி காமாக்ஷி அவர்கள் யார் மீதும் எந்த விதமான புகாரும் தெரிவிக்காமல். அவரின் சொந்த முயற்சியில் பெரியவாளின் அனுகிரஹத்தாலும் அவர்களால் எந்த அளவுக்கு முடியுமோ அதை முயற்சித்தது டி.ஐ.ஜியிடம் பேசி, டி.ஐ.ஜி அவர்கள் டி.எஸ்.பி.யிடம் பேசி, டிஎஸ்பி அவர்கள் இன்பெட்டரை அழைத்து சமாதனமாக பேசி சாவியை மீண்டும் சரவணிடம் தர சொல்லி உள்ளார்கள். மடத்தின் சார்பாக பம்மல் விஸ்வ நாதன் பேசுவதால் இன்ஸ்பெக்டர், சப்இன்பெட்டர், சரவணன், பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் மடத்திற்கு சென்றுள்ளார்கள். இனி பால பெரியவா தான் சாவியை யாரிடம் தர வேண்டும் என்ற முடிவை  பெரியவா தான் எடுக்க வேண்டும். ஆனால் பெரியவா வீடியோ கின்பிரஸ்சில் இருப்பதாக சொல்லி உள்ளார்கள். இதனிடையே மடத்தின் ஸ்ரீகார்யம் அவர்கள் கல்யாண மண்டப சாவியை பம்மல் விஸ்வநாதனிடம் கொடுக்க சொல்லி இருக்கார் ஸ்ரீகார்யம். போலிசும் கல்யாண மண்டப சாவியை பம்மல் விஸ்வநாதனிடம் வழங்கிவிட்டார்கள்.

 எனக்கு ஒரு சந்தேகம்?

மடத்தின் சொத்துக்களை யார் நிர்வாகம் செய்ய வேண்டும்? ஸ்ரீகார்யமா, பெரியவாளா அல்லது டிஸ்டிக்களா? ஒருவரிடம் இருந்து நிர்வாகத்தை வேறு ஒருவரிடம் கொடுக்க நினைத்தால் அதை முறையாக எப்படி செய்ய வேண்டும்? சென்ற ஆண்டு கொரொனா முதல் அலையின் போது எஸ்.யூ.டி மருத்துவ கல்லூரியை விற்றார்கள். இன்னும் அந்த பிரச்சனையே முடிந்த பாடு இல்லை. அதற்குள் இந்த ஆண்டு இரண்டாவது அலையில் கல்யாண மண்டப பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. சுமுகமாக பேச வேண்டிய ஒன்றை தேவையில்லாமல் பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள். ஏன் இவர்கள் இப்படி தவறான அனுகுமுறையில் செல்கிறார்கள் என்றே தெரிய வில்லை. பெரியவா கௌரி காமாக்ஷியை அழைத்து பேசினாளே எல்லாம் சரியாகி விடும். அப்படியும் இல்லை என்றால் ஸ்ரீகார்யமாவது கௌரி காமாக்ஷியை அழைத்து பேசினால் இது பிரச்சனையே இல்லாமல் சுமுகமாக முடிந்திருக்கும். போலிஸ் வரை சென்று மடத்தின் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசிம் இல்லையே? மடத்தை நிர்வாகம் செய்வது கூட டிரஸ்டிக்கலாக மட்டுமே இருக்குமோ? அப்போ ஸ்ரீகார்யம்? 2016 முதல் கல்யாண மண்டபத்தை நிர்வகித்து வந்தவர் கௌரி காமாக்ஷி தான். புது பெரியவா தான் கௌரி காமாக்ஷியிடம் கல்யாண மண்டபத்தை தந்தார். பெரியவா சித்திக்கு பிறகும் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாகவம் ஆக மொத்தம் ஆறு ஆண்டுகளாக கௌரி தான் பார்த்துக் கொண்டு இருந்தார். [இன்று காலை வரை] ஆனால் கடந்த நான்கு நாட்களாக பம்மல் விஸ்வ நாதன் அவர்கள் கல்யாண மண்டபத்தை அவரின் கட்டுபாட்டில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். எனக்கு ஒன்று புரியவே இல்லை. மடத்தை நிர்வகிப்பது யார்? சங்கரா பள்ளிகள், மருத்துவ மனைகள், முதியோர் இல்லங்கள், கல்லூரிகள், கல்யாண மண்டபங்கள், மற்றும் மடத்தின் அசையும் சொத்து, அசையா சொத்து இவற்றை எல்லாம் யார் நிர்வாகம் செய்கிறார்கள். நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன் டிரஸ்டிக்கள் பெரியவாளால் நியமிக்க பட்டவர்களே! அவர்கள் அதில் எந்த முதலீடும் செய்ய வில்லை. பிறகு எப்படி டிரஸ்டிக்கள் கோடி கோடியாக மடத்தின் மூலம் இவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இது ஏதோ கடந்த நான்கு நாட்களாக இவர்கள் இதை செய்திருக்க முடியாது திட்டமிட்டு தான் செய்திருக்க முடியும். ஏன் தொடர்ந்து கௌரி காமாக்ஷி அவர்களையே இந்த மடத்தின் நிர்வாகிகள் கார்னர் செய்கிறார்கள்?

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த பூமியில் வாழ போகிறோம். எதை எடுத்துக் கொண்டு வந்தோம் எதை எடுத்துக் கொண்டு போக போகிறோம். நெற்றியில் வைக்கும் ஒரு ரூபாய் கூட நம்முடன் வர போவது இல்லை. அடியேனை பொருத்தவரை ஆறு அடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லை. நாளை நம்மீது ஒருவரின் சடலம் கூட இருக்கும். இருக்கும் காலத்தில் தான் மனிதன் என்னென்ன ஆட்டம் போடுகிறான். இன்று இறந்தால் நாளைக்கு பால்...... இது தான் வாழ்கை..... புரிந்தவர்களுக்கு புரியட்டும்.......



கருத்துகள் இல்லை: