வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ஒரு பசுவின் உருக்கமான கதை

ஒரு பசுவின் உருக்கமான கதை




ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது. அதை பார்த்து அவன் கேட்டான்.நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன் அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்றுகேட்டான். அப்பொழுது கோமாதா சொன்னது. நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது. எந்த தப்பும் செய்யாமல் யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை நீ கொன்று என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன். பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன். ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள். என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்து சமையலுக்கு உபயோகித்தீர்கள். அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன் படுத்தீனீர்கள். அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள். என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள். என் உடம்பில் முப்பத்தி முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள். ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க முடிந்தது. அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான். என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய். உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன். ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான்.எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்? உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.

(உங்களால் முடிந்த அளவு எல்லோருக்கும் இதை தெரியப்படுத்தி கோமாதாவின் ருணத்தை (கடன்) தீர்க்கவும்)

சாதுர்மாஸ்யம்


சாதுர்மாஸ்யம்

ஒவ்வோர் ஆண்டும் ச்ராவண பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரையில் உள்ள காலம் நான்கு மாதத்தில் சாதுர்மாஸ்யம் வரும். அதாவது ஸ்ராவண ஏகாதசி துவாதசி முதல் கார்த்திகை ஏகாதசி துவாதசி வரையில் உள்ளவைகள் சாதுர்மாஸ்யங்கள். நாலு மாசம் சாதுர்மாஸ்யம் என்றால் சாதுர்மாஸ்யம் ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை நான்கு மாதம். அந்த ஆவணி மாதத்தில் ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனித்துக் கொள்கிறார். இதற்கு சயன ஏகாதசி என்று பெயர். கார்த்திகை மாத ஏகாதசியில் விஷ்ணு பகவான் விழித்துக் கொள்கிறார். இதற்கு உத்ஸான ஏகாதசி என்று பெயர்.அந்த ஆவணி மாத ஏகாதசி முதல் கார்த்திகை மாத ஏகாதசி வரை உள்ள காலங்களை நான்கு மாதங்களை சாதுர்மாஸ்யம் என்று சொல்லுவார்கள். பொதுவாக அந்தக் காலத்திலே மழை காலம் கூட இருக்கும். ஆகவே அந்தக் காலத்தில் ஒரே இடத்தில் தங்கி சத்சங்கங்கள், பஜனைகள், வேதாந்த காலட்சேபங்கள் முதலியவைகள் எல்லாம் பெரியோர்கள் எல்லாம் செய்வார்கள். ரிஷிகள் எல்லாம் செய்வார்கள். நாரத மஹரிஷி கூட அவர் பிறப்பதற்கு முன்பு இது போன்று சாதுக்கள், மஹரிஷிகள் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய காலத்தை நான்கு மாதம் ஓரிடத்தில் அனுஷ்டானம் செய்த பொழுது அவருடைய தாயார் அவர்களுக்கு சேவை செய்து அந்த ப்ரஸாதத்தினால் நாரத மஹரிஷி பிறந்ததாக வரலாறு உண்டு.

இந்த சாதுர்மாஸ்யம் மொத்தம் இரண்டு வீதம். ஒன்று,  இல்லறத்தார்கள். ப்ரஹ்மச்சாரிகள் க்ரஹஸ்தர்கள் ஆண், பெண் அனைவரும் நான்கு மாதங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் ஒரே இடத்தில் கொண்டு ஒரு பந்தலிலோ கோயிலிலோ அல்லது பொது இடத்திலோ நதி தீரத்திலோ உட்கார்நது கொண்டு இறைவனைப் பற்றி பாடல்கள் ஜபங்கள் பாராயணங்கள் ஸ்தோத்ரங்கள் த்யானங்கள் இவைகளிலேயே காலத்தை கழிப்பது பகவத் சிந்தனையைத் தவிர வேறு ஒன்றும் செய்வது இல்லை. அது ஒரு விதமான சாதுர்மாஸ்யம். சன்யாசிகள் போன்றவர்கள் நான்கு மாத காலங்களிலும் பன்னிரெண்டு மாதங்களில் எட்டு மாதம் யாத்திரை செய்து விட்டு இந்த நான்கு மாத காலம் எந்தவித யாத்திரையும் செய்யாமல் ஒரே இடத்தில் தங்க வேண்டும். பொதுவாக சன்யாசிகளுடைய விதி ஒரு நாளைக்கு மேல் ஒரு ஊரில் தங்கக்கூடாது. பெரிய ஊராக இருந்தால் மூன்று நாள் தங்கலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. க்ராமைக ராத்ரம் ஒரு க்ராமத்துக்கு க்ராமம் ஒரு ராத்ரம் தான் தங்கலாம் என்று நியதி. சன்யாசிக்கு மூன்று நாட்கள் பெரிய ஷேத்ரங்களில் தங்கலாம் இப்படி எப்போதுமே போய்க்கொண்டிருக்கும் ஒரு இடத்தில் விச்ராந்தியாக இருந்து சில சாதனைகளை செய்வதற்கும் அதே சமயத்தில் அஹிம்சையை அடிப்படையாக கொண்ட சன்யாசிகளும் ஆனதினால் இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் அதாவது மழைக்காலத்தில் அந்தக் காலம் அப்பொழுது சில புழுக்கள் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும். அவைகளை காலில் மிதிபட்டோ மற்றவை மூலமாகவோ ஹிம்சையாகும். அந்த ஹிம்சை கூட செய்யாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அஹிம்சையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நான்கு மாதம் சுற்ற வேண்டாம் என்பதற்காகவும் சாதுர்மாஸ்யம் சன்யாசிகள் அனுஷ்டிப்பார்கள். அதே நான்கு மாதங்களில் அவர்களும் த்யானங்களை செய்து கொண்டு சாதனை செய்து கொண்டு இருப்பார்கள்.

இதைத் தவிர இந்த சாதுர்மாஸ்ய காலத்திலேயே ஆகாவரண சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. முதல் மாதத்திலே பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். இரண்டாம் மாதத்திலே தயிர் சாப்பிடக் கூடாது. மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். மூன்றாவது மாதத்திலே கறிகாய்கள் சாப்பிடக் கூடாது. மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். நான்காவது மாதத்திலே இரண்டாகப் பிளக்கக் கூடிய பருப்புகளை சாப்பிடக்கூடாது மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். கார்ததிகை மாதம் த்வாதசி அன்று அனைத்தையும் கலந்து வைத்து பகவானுக்கும் படைத்து விட்டு அந்த கார்த்திகை ஏகாதசி அன்று கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் கல்யாணம் செய்து விட்டு துவாதசி அன்று பாராயணம் செய்வது வழக்கம். பாரணை என்று சொல்லுவார்கள் பாரணை என்றால் உபவாசம் இருந்து மறுநாள் செய்வது பாரணை. அப்படி கார்த்திகை மாதம் ஏகாதசிக்கும் உபவாசம் இருந்து இந்த சாகா வ்ரதம் ப்ரகாரம் ஒவ்வொரு மாசம் ஒன்றை ஒன்றை விட்டு விட்டு கார்த்திகை மாசம் துவாதசி அன்று கிருஷ்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்து அன்றைய தினம் எல்லா விதப் பொருட்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து பிறகு தாம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு. இது சன்யாசிகள், க்ரஹஸ்தர்கள், ப்ரஹ்மச்சாரிகள், வானப்ரஸ்தர்கள் அனைவரும் செய்யக்கூடியது. பிராமணர்கள் மாத்திரம் அல்ல அனைத்து வகுப்பினரும் கூட செய்வார்கள்.இது மஹாராஷ்டிரத்திலும் ஆந்திராவிலும் மிகவும் பிரசித்தமாக நடைபெற்று வருகிறது. கன்னட தேசத்திலும் சில பேர் செய்கிறார்கள். தமிழ்நாட்டிலே மிகவும் குறைந்த பேர்கள் தான் இந்த சாகா விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த சாதுர்மாஸ்யத்தை கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு.

சன்யாசிகள் மாத்திரம் தான் சாதுர்மாஸ்யம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ் நாட்டிலே கடைப்பிடிக்கிறார்கள். அதுவும் நாலு மாசத்திற்கு முடியாததினால் இரண்டு மாசத்திலே செய்யலாம் என்று ஒரு வேத வாக்கியம் இருப்பதினால் நான்கு மாசத்திற்கு பதிலாக நான்கு பட்சமாக வைத்துக்கொண்டு நான்கு பட்சங்களிலே இரண்டு மாசங்களிலே இந்த சாதுர்மாஸ்ய வ்ரதத்தை முடித்து விடுகிறார்கள். அப்படி நான்கு மாதத்தில் நான்கு பட்சங்களை வைத்துக் கொண்ட இரண்டு மாசத்தில் முடிக்கக் கூடிய சன்யாசிகள் கூட சிலர் சாகா வ்ரதத்தை கடைப்பிடிப்பார்கள் நான்கு மாசமும். அதாவது பால் சேர்க்காமல் இருப்பது தயிர் சேர்க்காமல் இருப்பது காய்கறிகள் சேர்க்காமல் இருப்பது இரண்டாக பிளக்கக்கூடிய பருப்பு வகைகளை சேர்க்காமல் இருப்பது இந்த விரதத்தை மாத்திரம் நான்கு மாதம் எங்கு இருந்தாலும் கடைப்பிடிப்பார்கள். இப்படி இந்த வகையிலும் உண்டு. இப்படி சாதுர்மாஸ்யம் என்பது பழங்காலம் தொட்டு வருகிறது. அன்றைய தினம் பூஜையில் முதல் முதல் இந்த சாதுர்மாஸ்ய ஆரம்பம் ஆவணி மாசம் ஏகாதசி அன்று {க்ராவண ஏகாதசி அன்று} முடிவு கார்த்திகை ஏகாதசி த்வாதசி அன்று. ஆனால் சாதர்மாயஸ்த்தைத் தவிர சன்யாசிகள் செய்யகக கூடிய சாதுர்மாஸ்யம் வ்யாஸ பூஜை என்பது பௌர்ணமியிலிருந்து ஆரம்பிக்கும் ச்ராவண பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரையில் நடைபெறும். அன்றைய தினம் அவர்கள் நான்கு மாதம் வெளியே போக மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு இந்த கார்யங்களை எல்லாம் செய்வார்கள். இது ச்ராவண மாத பௌர்ணமியிலிருந்து கார்த்திகை மாதம் பௌர்ணமி வரையில் இருக்கும். பௌர்ணமிக்கு பௌர்ணமி அவர்களுக்கு விசேஷம். அது போன்று சாதுர்மாஸ்ய்தைப் பற்றி விசேஷம் உண்டு. அந்த சாதுர்மாஸ்யத்தை முதன் முதலாக அந்தக்காலம் முதல் கடைப்பிடித்து வந்தவர் வேதவியாசர். ஆகவே அந்த சாதுர்மாஸ்ய ஆரம்பத்தை வேதவியாச பூஜை என்றும் குறிப்பிடுவார்கள். ஆகவே வியாச பூஜையைத்தான் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் கைக் கொள்வது.

வியாழன், 17 செப்டம்பர், 2020

குரு தட்சிணைமஹா பாரதத்தில் தெரியாத செய்தி

குரு தட்சிணைமஹா பாரதத்தில் தெரியாத செய்தி

துரோணர் ஏகலைவனிடம் கட்டை விரலை வாங்கினார், அவர் ஒரு கொடூரக்காரர், இரக்கமில்லாதவர்  என ஏக குற்றசாட்டுகள்  வரும்

உண்மையில் நடந்தது என்ன? அந்த துரோணரின் நிலை பரிதாபமானது

ஆம், துரோணர் அந்த அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது.

சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர்

அந்நாளில் ராஜவம்சத்துக்கு மட்டுமே ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும், எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் எனும் தந்திரம் அது

அவ்வகையில் பாண்டவரும், கவுரவரும் பயில்கின்றார்கள், தேரோட்டி மகனான கர்ணனும் படிக்கின்றான்

அவர்கள் அரங்கேற்றம் முடிந்தபின்புதான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகின்றது

அரசவாரிசுகளையும் மீறி ஒரு வேட்டுவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரசகுடும்பத்துக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகையில் வீழ்ந்தால் முடிந்தது கதை,

நாட்டு மக்களை சேர்த்து கலகம் செய்தால் இன்னும் மோசம்

அதற்காக வேட்டுவனை அரண்மனைக்கும் அழைக்கமுடியாது சட்டம் இடம் கொடாது

இப்படி ஒரு சிக்கல் இருக்க அவனை சந்திக்க கிளம்புகின்றது மேலிடமும், துரோணரும் அர்ஜூனனும்,

அர்ஜூனனை மீறி ஜொலித்து நிற்கின்றான் ஏகலைவன், அவனை விட்டுவைப்பது நல்லதலல் என மேலிடம் முடிவெடுக்கின்றது

ஏகலைவன் குரு என யார் என கேட்க அவன் துரோணர் சிலையினை காட்டுகின்றான், ஆம் துரோணரை மனதால் வணங்கி வளர்ந்து தானே வித்தை கற்றவன் ஏகலைவன்

எல்லோரும் அதிர்கின்றனர், காரணம் துரோணர் அரசகுடும்பத்துக்கு மட்டுமே ஆசிரியர்..

அப்படியானால் இவனை இவ்வளவு திறமையாக அவர் உருவாக்க காரணம் என்ன எனும் சந்தேக கேள்விகள் எழுகின்றன‌

துரோணர் அரச குடும்பத்துக்கு எதிராக ஒருவனை ரகசியமாக வளர்ப்பதாக சந்தேகம் அவர்மீதே படர்கின்றது,

அரசகுடும்பத்துடன் உறவாடுவது ராஜநாகத்துடன் உறவாடுவதற்கு சமம்

சிக்கலில் தவிக்கின்றார் துரோணர், ராஜதுரோக குற்றசாட்டு அவர்மேல் சுமத்தபடும் ஆபத்து நெருங்கிற்று, இதன் சூத்திரதாரி கண்ணன்

அவரை காக்கும் ஒரே நம்பிக்கையாக ஏகலைவன் நிற்கின்றான், அவன் நிச்சயம் துரோணரின் பெருமை, துரோணரின் மாபெரும் மகிழ்ச்சியும் சாதனையும் அவன்

ஆனால் விதி?

துரோணருக்கு அவனை விடவும் முடியவில்லை எடுக்கவும் முடியவில்லை, தவிக்கின்றார்.

ஆம் அரச கட்டளை மீறி அவர் என்ன செய்யமுடியும்?

அவனை கொல்லவேண்டிய இடம் அது, ஆம் அரசனின் கோபம் அவனை முதலில் கொல்லும் துரோணரை அடுத்து கொல்லும், ராஜதுரோகம் எனும் குற்றத்துக்கான தண்டனை அது

யோசித்தார் துரோணர், அந்த சீடன் அழிவதில் அவருக்கு விருப்பமில்லை அவனை பலமிழக்க வைத்தால் போதுமென குருதட்சனையாக கட்டைவிரலை கேட்கின்றார்

குரு கேட்டால் தலைகொடுக்கவும் துணியும் ஏகலைவன் கட்டை விரலை மகிழ்வாய் கொடுத்து பலமிழக்கின்றான், இனி அவனால் வில்வித்தை அவ்வளவு துல்லியமாக செய்யமுடியாது

குருவுக்கு சிஷ்யன் கொடுக்கும் காணிக்கை அவரை காக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை , கண்ணீரோடு அவனின் கட்டை விரலை தாயத்தில் வைத்து கழுத்தில் கட்டிகொள்கின்றார் துரோணர்

அந்த காட்சி உருக்கமானது, கண்ணீர் வரவழைக்கும் காட்சி அது. துரோணருக்கு அவனை போல மாணவன் இல்லை, நல்ல ஆசிரியனுக்கு சிறந்த மாணவனை விட பெருமை எது?

ஆனால் விதி?

அப்பக்கம் ஏகலவைனுக்கோ குருநாதருக்காக வித்தையினையே கொடுத்துவிட்ட தியாக மகிழ்ச்சி, தன் கட்டைவிரல் அவர் கழுத்தில் இருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி

தானே அவரின் மார்பில் சாய்ந்ததாக மகிழ்ந்தான், துரோணர் அரண்மனை திரும்பினார்

ஆம் துரோணர் அவன் உயிரை காத்தார், அவன் துரோணர் உயிரை காத்தான்

காலங்கள் ஓடின பாண்டவருக்கும், கவுரவருக்கும் யுத்தம் நெருங்கிற்று, ஒவ்வொருவரின் பலத்தையும் அளந்த கண்ணன் துரோணர் பக்கமும் வருகின்றான், ஏற்கனவே கட்டை விரல் வாங்க காரணமே அந்த மாயவனே

(ஆம் வித்தை ஒன்றுக்காக கர்ணணையே அரசனாக்கி கைக்குள் வைத்திருக்கும் துரியன் , ஏகலைவன் கிடைத்தால் விடுவானா? கண்ணனின் கவலை அவனுக்கு)

துரோணர் கழுத்தில் இருப்பது உன்னதமான சிஷ்யனின் காணிக்கை, அது துரோரணை சாகவிடாது , அது இருக்கும்வரை துரோணர் வீழமாட்டார்

என்ன செய்யலாம்?

அதே வித்தைதான், ஏழை அந்தணராக மாறிய கண்ணன் யாசகனாய் வந்தான், தன் மகளுக்கு திருமணமென்றும் ஒரு தாலிக்கும் வழியில்லை எனவும் அழுது அந்த தாயத்தையே உற்று பார்த்தான்

குறிப்பறிந்த துரோணர் இதைவிட பெரும் தாலி இல்லை, இது ஆசிமிக்கது என அதை வழங்கினார், துரோணரின் கழுத்தில் இருந்து அந்த பெரும் கவசத்தை அகற்றினான் கண்ணன்

அதன்பின் எல்லாம் முடிந்தது, சாகும் வேளையில் துரோணர் முன் தன் புல்லாங்குழலை காட்டினான் கண்ணன், ஆம் அதில் அந்த விரலை பதித்திருந்தான்

அதை கண்டவுடன் துரோணருக்கு எல்லாம் விளங்கிற்று, மெல்ல பேசினான் கண்ணன் அவன் குரல் அந்த ஞான தத்துவத்தை போதித்தது

"துரோணாச்சாரியே.. சிஷ்யர்களில் எல்லாம் உயர்ந்தவன் ஏகலைவன், ஆசிரியரில் எல்லாம் உயந்தவன் நீ

உங்களுக்குள்ளான உணர்வும் புரிந்துணர்வும் பாசமும் எந்த குருவுக்கும் சீடனுக்கும் அமையாது

அவனை அன்றே நீ கொன்றிருந்தால் நீ பாவிபாயிருப்பாய், விட்டிருந்தால் அவனை நீனே வளர்த்தாய் என பழிசுமந்திருப்பாய் , அவன் பாண்டவர் பக்கம் வந்தாலும் கவுரவர் பக்கம் வந்தாலும் பழி உனக்கே

உன் மாணவர்களின் அர்ஜூனன் பெரும் அடையாளம் ஆனால் நீ நேரடியாக பயிற்றுவித்தாய், ஆனால் உன்னை மனதால் வணங்கி வளர்ந்த ஏகலைவனே அவனை விட உயர்ந்தவன், ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடையாளம்

அங்கு உன் உயிரை அவன் காத்து மாணவனின் கடமையினை செய்தான், நீ அவன் உயிரை காப்பாற்றி ஆசிரியனுக்குரிய கடமையினை காத்தாய்

நீ கேட்டவுடன் கொடுத்த அந்த விரல் அவனின் தியாகத்துக்கும் குருசிஷ்ய பாவத்துக்கும் என்றும் எடுத்துகாட்டாய் இருக்கும், உன் பெயர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான்..."

அந்த புல்லாங்குழலின் இருந்த விரலை நோக்கியபடியே உயிர்நீத்தார் துரோணர்

ஆம் நல்ல மாணவன் ஆசிரியர் அளவு வரலாற்றில் நிலைப்பான் என்பதுதான் ஏகலைவன் வாழ்வின் தத்துவம்.

புதன், 16 செப்டம்பர், 2020

13:ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி. பி. 235 - கி.பி. 272 வரை}

நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் அலங்கரித்துளனர்.

 
13:ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி. பி. 235 - கி.பி. 272 வரை}




ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கெடில நதிக்கரையில் உள்ள சிற்றூரில் பிறந்த அந்தண ரத்தினமாவார். ஸ்ரீதர பண்டிதர் இவருக்கு தந்தையாகும் பாக்கியத்தை பெற்றவர். இவருக்கு பெற்றோர்கள் வைத்த நாமதேயம் சேஷய்யா. 'குரு எவ்வழி சீடர் அவ்வழி' என்கிறபடி குருவைப் போல இவரும் ஸ்ரீ காமகோடி பீட நிர்வாகத்தை சிஷ்யரிடம் ஓப்படைத்து மௌன விரதம் மேற்கொண்டு அவதூதர் போல பிரம்ம வரிஷ்டராய் காஞ்சி நகர்ப்புறத்தில் இருந்தார். கி. பி. 272-ல் கர வருஷம் மிருகசீரிஷம், சுக்லப்பிரதமையன்று காஞ்சியில் ஸ்ரீ காயாரோஹணேஸ்வரர் ஆலயத்திலுள்ள சிவலிங்கத்தோடு ஐக்கியமாகி சித்தியடைந்தார்.

12:ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி {கி. பி. 172 - கி. பி . 235}

நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

12:ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி {கி. பி. 172 - கி. பி . 235}




ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1

பாலாற்றங்கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். இவர் வாத்ஸ்யாயன கோத்திரம். தந்தை பெயர் ஸ்ரீ வத்ஸபட்டர். பெற்றோர் இவருக்கு வைத்த நாமதேயம் ஹரி. இவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதியிடம் ஸ்ரீ மட நிர்வாகத்தை ஒப்படைத்து 'சார்வ பௌம' என்னும் சிறப்பான யோக நிஷ்டையைக் கடைபிடித்தவர். கி. பி.235-ஆம் ஆண்டு ஆனந்த வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷ நவமியன்று சேஷாசலத்திலுள்ள ஒரு குகையில் மறைந்தருளி அழியாப் பேரானந்தம் அடைந்தவர்.

திங்கள், 14 செப்டம்பர், 2020

அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்!

அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்!

கோயில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன் வாசுகி சிலைகள் உள்ளன. ஒவ்வொர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.

மயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள். அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோயில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரமாக இருக்கிறது. இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முற்பட்ட கோயிலாகும். நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோயிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சன்னதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோயில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோயிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து வருகிறது. கோயிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.

நாளை தொடரும்


ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி. பி. 127 - 172 வரை}

 நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!

11: ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி. பி. 127 - 172 வரை}

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கன்னட அந்தண மரபினர். தந்தையின் பெயர் 'உஜ்வலபட்டர்' பெற்றோர் இவருக்கு வைத்த நாமதேயம் 'ஈச்வர வடு'. சிவ அத்வைத நெறியில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர் கி. பி. 172 ல் விரோதி கிருது ஆண்டு, சித்திரை மாதம், சுக்ல பக்ஷ தசமியில் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார்.


ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ஸ்ரீ சுரேஸ்வரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு. 69 - 127 கி.பி}


 10:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

ஸ்ரீ சுரேஸ்வரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு. 69 - 127 கி.பி}
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

இரண்டாம் ஸ்ரீ சுரேஸ்வரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தண குலத்தவர். கொண்காணத்து மஹாபலேஸ்வரம் என்ற ஊரில் வசித்த ஈஸ்வர பண்டிதர் என்பவரின் குமாரர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் மகேஸ்வரர். இவரும் பல ஆண்டுகள் வட இந்தியா எங்கும் விஜய யாத்திரைகள் மேற்கொண்டு வேத நெறியைப் பரப்பினார். காஞ்சியில் அக்ஷய வருடம் கி.பி.127-ல் ஆடி பௌர்ணமியன்று இவர் சித்தியடைந்தார்.

சனி, 12 செப்டம்பர், 2020

ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு. 28 - 69கி.பி}


 9: நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

 ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு. 28 - 69கி.பி}

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர நாட்டு அந்தணர் ஆத்மன ஸோமயாஜி என்பவரின் திருமகனார். பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் கங்கையா. 'கர்க்கா' என்பது குலவழிப்பட்டம். இவருடைய பீடாதிபத்தியத்தை ஸ்ரீ காமகோடி பீடத்தின் பொற்காலமென்றே குறிப்பிடலாம். ஸ்ரீ ஆதிசங்கரர் வகைப்படுத்திய ஆறு சமயங்களும் பரவப் பாடுபட்ட இவர் 'தாந்திரீய' வழிபாட்டு முறைகளை வேரறுத்தார். காலத்தால் மாசு சூழ்ந்த சநாதன தர்ம நெறியை இவர் தூய்மைப்படுத்தி பெருமை சேர்த்தார். ஞான மார்க்கத்தை, பக்தி நெறியை மக்களுக்கு எடுத்துரைத்தார். பக்தி மார்க்கத்தாலும் இறைவனை அடைய முடியும் என்று காட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்களுக்கு முன்னோடி எனத்தக்க இவர், காசி, காஞ்சி, திருவொற்றியூர், திருவானைக்காவல் ஆகிய ஸ்தலங்களில் யந்திரப் பிரதிஷ்டை செய்தார்.

அரும் பணிகளாற்றிய இவர் கி.பி.69ல் விபவ ஆண்டு கார்த்திகை மாதம், க்ருஷ்ணபக்ஷம், திருதியை திதியில் விந்திய மலைப்பகுதியில் சித்தியடைந்தார்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

8:ஸ்ரீ கைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

8:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!
 

8:ஸ்ரீ கைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். (கி.பி.55 - கி.பி.28)

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ கைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர தேசத்து அந்தணகுலத்தவர்.திருப்பதியில்வாழ்ந்த"த்ரைலிங்கசிவய்யா"என்பவரின்புதல்வர்.பெற்றோர்இவருக்குஇட்டநாமதேயம்'மக்கண்ணா'இவரை'சச்சிதானந்தர்'எனவும்'கைவல்யயோகி'எனவும் கூறுவார்கள்.இவர் தம் வாரிசாக ஸ்ரீ க்ருபா சங்கரரை நியமித்தார்.இவர் கி.பி.28-ல் சர்வதாரி ஆண்டு தைமாதப் பிறப்பன்று காஞ்சி 'மண்டன மிச்ரர்'அக்ரஹாரத்திலுள்ள 'புண்யரஸா' என்னும் பகுதியில் சித்தியடைந்தார்.


ஸ்ரீ கருப்பஸ்வாமி அஷ்டோத்ர ஸதநாமாவளி

ஸ்ரீ கருப்பஸ்வாமி அஷ்டோத்ர ஸதநாமாவளி


: -


த்யாந ஸ்லோகம் : -

வந்தே காலாப்ர வர்ணம்
த்விபுஜம் அஸிகதாம்
தீப்தாகர்ண தம்ஷ்ட்ராம்
பீமம் பீமாங்கரூபம்
ப்ரணதபயஹரம்
பாதுகாரூட ந்ருத்தம்
பாலம் பாலார்க்க காந்திம்
ஸிதவஸநதரம் காளகம்
குஞ்ஜிதாங்க்ரீம் வ்யாகீர்ண
கேஸபந்திம் மதுமத முதிதம்
ஸ்யாமளம் க்ருஷ்ணபுத்ரம்.


ஓம் நீலமேகாய நம
ஓம் நீலவர்ணாய நம
ஓம் நீலபுஷ்ப ப்ரியாய நம
ஓம் நிதயே நம
ஓம் நிஸி நாதாய நம
ஓம் நிஸி பூஜிதாய நம
ஓம் நிஸி ஸஞ்ஜாரிணே நம
ஓம் நிஸி ரூபாய நம
ஓம் நிஸி ப்ரியாய நம
ஓம் நிகம ஸஞ்ஜாரிணே நம 10.

ஓம் நித்யாய நம
ஓம் நித்ய ஸூர்யாய நம
ஓம் நிராமயாய நம
ஓம் நிஸிகந்தபுஷ்ப ப்ரியாய நம
ஓம் நிடிலோர்த்வ புண்ட்ராய நம
ஓம் கோர ( தீர ) ரூபாய நம
ஓம் கோர ( தீர ) வேஷாய நம
ஓம் அகோர லோஸநாய நம
ஓம் விஸாலாய நம 20.

ஓம் குருகௌரீ கேஸாய நம
ஓம் நீலவஸ்த்ர மாலிகோஜ்வலாய நம
ஓம் ஸித்ரவஸ்த்ர ப்ரியாய நம
ஓம் கட்கஹஸ்தாய நம
ஓம் தண்டஹஸ்தாய நம
ஓம் பாத பாதுக ஸஞ்ஜாரிணே நம
ஓம் பீதாம்பரதராய நம
ஓம் பூதநாயகாய நம
ஓம் பயங்கராய நம
ஓம் பிஸாஸ நாஸாய நம 30.

ஓம் தூம்ரபத்ர ப்ரியாய நம
ஓம் பிஸாஸ மர்த்தநாய நம
ஓம் தூபகந்த ப்ரியாய நம
ஓம் கேளீ விலாஸகாய நம
ஓம் மதநோல்லா ஸகாய நம
ஓம் மன்மத வேஷாய நம
ஓம் மத்ஸ்ய ரூபிணே நம
ஓம் விநோத வேஷோஜ்வலாய நம
ஓம் வீர ஸூர பராக்ரமாய நம
ஓம் வ்ருத்தாய நம 40.

ஓம் த்வார நாதாய நம
ஓம் கோபுர வாஸிநே நம
ஓம் க்ராம நாதாய நம
ஓம் க்ராம ரக்ஷகாய நம
ஓம் க்ருணீ ரக்ஷகாய நம
ஓம் குடும்ப ரக்ஷகாய நம
ஓம் குஸல புத்ர வர ப்ரஸாதாய நம
ஓம் குல தீப ஸந்த்ரிகாய நம
ஓம் குமார கணநாதாய நம
ஓம் குமார கோபுர மண்டப நிலையாய நம 50.

ஓம் குருநாதாய நம
ஓம் குருநாத பூஜகாய நம
ஓம் குருநாத ஸேவிதாய நம
ஓம் குளான்ன ப்ரியாய நம
ஓம் குள மோதக ப்ரியாய நம
ஓம் திவ்ய புஷ்ப ப்ரியாய நம
ஓம் குளாபிஷ்ட ப்ரியாய நம
ஓம் நாகவல்லீ கமுக ப்ரியாய நம
ஓம் திவ்ய கந்த ப்ரியாய நம
ஓம் பரிமள பஸ்மாங்காய நம 60.

ஓம் பரிமள வாஸந ப்ரியாய நம
ஓம் பக்த ரக்ஷகாய நம
ஓம் பக்த பரிபாலகாய நம
ஓம் ப்ரஸண்டாய நம
ஓம் ப்ரஸண்ட பராக்ரமாய நம
ஓம் பகவகண்டாஸிணே நம
ஓம் கடிஹஸ்தாய நம
ஓம் கராள ஹஸ்தாய நம
ஓம் ப்ருகுடீ வர்ணாய நம
ஓம் வராஹ ரக்த ப்ரியாய நம 70.

ஓம் அஜிபலி ப்ரியாய நம
ஓம் அண்ட வாஸிநே நம
ஓம் பிண்ட ஜந ரக்ஷகாய நம
ஓம் ஸுக்ரவார துஷ்டாய நம
ஓம் இந்துபூஜ்யா நிஸி ஸந்துஷ்டாய நம
ஓம் க்ரந்தி நாஸகாய நம
ஓம் க்ரஹ ரூபிணே நம
ஓம் துஷ்ட க்ர‌ஹ ரூபிணே நம
ஓம் துஷ்ட க்ர‌ஹ பஞ்ஜநாய நம
ஓம் துர்நிரீக்ஷாய நம 80.

ஓம் துஷ்ட பயங்கராய நம
ஓம் துஸ்ஸ்வப்ந ரூபாய நம
ஓம் துஸ்ஸ்வப்ந ஸாரிணே நம
ஓம் துஸ்ஸ்வப்ந நாஸகாய நம
ஓம் விலாஸ வேஷாய நம
ஓம் விஷ்ணுமாயா ரூபிணே நம
ஓம் ருத்ரமாயா ரூபிணே நம
ஓம் நந்தி த்வார நிலையாய நம
ஓம் உக்ர வ்ருக்ஷ நிலையாய நம
ஓம் அட்டஹாஸாய நம 90.

ஓம் அஹங்காராய நம
ஓம் அதிஸௌர்யாய நம
ஓம் அநாதநாதாய நம
ஓம் அகில ரக்ஷகாய நம
ஓம் ஸ்ரீ க்ருஷ்ண வர்ணாய நம
ஓம் பாதுகாரூடாய நம
ஓம் கஸ்தூரி திலகோஜ்வலாய நம
ஓம் ம்ருகமத சந்தண லேபநாய நம
ஓம் வேணுகான ஸ்ரவண லோலாய நம
ஓம் அஸ்வாரூடாய நம 100.

ஓம் வ்யாக்ர ஸர்மாம் பரதராய நம
ஓம் ரணரங்க தீராய நம
ஓம் ஸிகண்டீ கீதஸ்ரவண ப்ரியாய நம
ஓம் ஸ்ரீம் மோஹனகாராய நம
ஓம் ஸௌம் ஸௌம்யாய நம
ஓம் ஹம் ஹம்ஸாய நம
ஓம் க்லீம் ஸாத்யாய நம
ஓம் க்ருஷ்ண புத்ராய நம 108.

- இதி ஸ்ரீ கருப்பஸ்வாமி அஷ்டோத்ர ஸதநாமாவளி ஸம்பூர்ணம்.