புதன், 16 செப்டம்பர், 2020

13:ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி. பி. 235 - கி.பி. 272 வரை}

நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் அலங்கரித்துளனர்.

 
13:ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி. பி. 235 - கி.பி. 272 வரை}




ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கெடில நதிக்கரையில் உள்ள சிற்றூரில் பிறந்த அந்தண ரத்தினமாவார். ஸ்ரீதர பண்டிதர் இவருக்கு தந்தையாகும் பாக்கியத்தை பெற்றவர். இவருக்கு பெற்றோர்கள் வைத்த நாமதேயம் சேஷய்யா. 'குரு எவ்வழி சீடர் அவ்வழி' என்கிறபடி குருவைப் போல இவரும் ஸ்ரீ காமகோடி பீட நிர்வாகத்தை சிஷ்யரிடம் ஓப்படைத்து மௌன விரதம் மேற்கொண்டு அவதூதர் போல பிரம்ம வரிஷ்டராய் காஞ்சி நகர்ப்புறத்தில் இருந்தார். கி. பி. 272-ல் கர வருஷம் மிருகசீரிஷம், சுக்லப்பிரதமையன்று காஞ்சியில் ஸ்ரீ காயாரோஹணேஸ்வரர் ஆலயத்திலுள்ள சிவலிங்கத்தோடு ஐக்கியமாகி சித்தியடைந்தார்.

கருத்துகள் இல்லை: