நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!!
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.
12:ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி {கி. பி. 172 - கி. பி . 235}
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1
பாலாற்றங்கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். இவர் வாத்ஸ்யாயன கோத்திரம். தந்தை பெயர் ஸ்ரீ வத்ஸபட்டர். பெற்றோர் இவருக்கு வைத்த நாமதேயம் ஹரி. இவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதியிடம் ஸ்ரீ மட நிர்வாகத்தை ஒப்படைத்து 'சார்வ பௌம' என்னும் சிறப்பான யோக நிஷ்டையைக் கடைபிடித்தவர். கி. பி.235-ஆம் ஆண்டு ஆனந்த வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷ நவமியன்று சேஷாசலத்திலுள்ள ஒரு குகையில் மறைந்தருளி அழியாப் பேரானந்தம் அடைந்தவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக