JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
சனி, 12 செப்டம்பர், 2020
ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு. 28 - 69கி.பி}
9: நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!
ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு. 28 - 69கி.பி}
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.
ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர நாட்டு அந்தணர் ஆத்மன ஸோமயாஜி என்பவரின் திருமகனார். பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் கங்கையா. 'கர்க்கா' என்பது குலவழிப்பட்டம். இவருடைய பீடாதிபத்தியத்தை ஸ்ரீ காமகோடி பீடத்தின் பொற்காலமென்றே குறிப்பிடலாம். ஸ்ரீ ஆதிசங்கரர் வகைப்படுத்திய ஆறு சமயங்களும் பரவப் பாடுபட்ட இவர் 'தாந்திரீய' வழிபாட்டு முறைகளை வேரறுத்தார். காலத்தால் மாசு சூழ்ந்த சநாதன தர்ம நெறியை இவர் தூய்மைப்படுத்தி பெருமை சேர்த்தார். ஞான மார்க்கத்தை, பக்தி நெறியை மக்களுக்கு எடுத்துரைத்தார். பக்தி மார்க்கத்தாலும் இறைவனை அடைய முடியும் என்று காட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்களுக்கு முன்னோடி எனத்தக்க இவர், காசி, காஞ்சி, திருவொற்றியூர், திருவானைக்காவல் ஆகிய ஸ்தலங்களில் யந்திரப் பிரதிஷ்டை செய்தார்.
அரும் பணிகளாற்றிய இவர் கி.பி.69ல் விபவ ஆண்டு கார்த்திகை மாதம், க்ருஷ்ணபக்ஷம், திருதியை திதியில் விந்திய மலைப்பகுதியில் சித்தியடைந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக