திங்கள், 13 ஜூலை, 2020

வினையும் அதன் மறுவினையும் சமமாகவும் எதிரானதாகவும் இருக்கும்’ என்று கூறியது நியூட்டனின் சித்தாந்தம்.

இதை இயற்பியல் உலகில் அப்படியே நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இதன் ஆன்மிகப் பயன்பாடு தான் ‘Karma Theory’ என்று சொல்லப்படும் வினைப்பயன் கொள்கை.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’,

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’,

‘தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்’ என்றும் முன்னோர்கள் வேண்டிய அளவு நம்மை எச்சரித்தனர்.

ஆனால் நாம் ‘மூத்தோர் சொல் வார்த்தை விஷம்’ என்று பெரும்பாலும் நினைக்கிற காலத்தில் இருக்கிறோம்.

தவறு செய்தவன் நம் கண் முன்னாலேயே தண்டனை பெறவேண்டும், இல்லையென்றால் தெய்வம் என்ற ஒன்றே கிடையாது எனப் பேசுகிறோம்.

தமிழில் ‘தெய்வம்’ என்ற சொல்லுக்கு ‘விதி’ என்ற பொருளும் உண்டு.

‘விதி’யை யார் விதித்தார்கள்? யாருமல்ல, நாமேதான்!!!.

அதனால்தான் சங்கப் புலவன் ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று மிக உறுதியாகக் கூறினான்.

இந்து மதம், கடவுளை சாட்சி பூதம் என்று ஒரு நிலையில் சொல்கிறது.

நீங்கள் வானத்தை நோக்கி எச்சில் துப்பினீர்கள்,

அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது. உடனே வானம் என்மீது எச்சில் துப்பியது என்று அலறி என்ன பயன்?

வானம் பார்த்துக் கொண்டு தான் இருந்தது. வானம் மிக மேலே இருக்கிறது.

உங்களைப் பழிவாங்க அதற்கு நேரம் இல்லை.
நீங்கள் துப்பியதை இயற்கை மீண்டும் உங்கள் மேலேயே விழுமாறு செய்தது.

வானத்தை நோக்கி எச்சில் துப்பினால் எச்சில் விழும்,
அமிலத்தை ஊற்றினால்…
ஊற்றியவன் அமில மழையில் நனைவான், உருக்குலைந்து தான் போவான்.

அப்போது, ‘ஐயோ, இறைவா! உனக்கு என்மீது கருணை இல்லையா?’ என்று கதறுகிறான்.

அவநம்பிக்கைப் படுகிறான்.
மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படித் துன்பம் வருகிறது? என்று புலம்புகிறான்.

சில சமயம் கடவுள் நம்பிக்கையையே இழக்கிறான்.

கீரை விதை போட்டால் ஆறு மாதத்தில் பலன்.

வாழை நட்டால் ஒரு வருடத்தில் பலன்.

தென்னை நட்டால் நான்கு வருடத்தில் பலன்.

தேக்கு மரம் அறுபது வருடங்கள் எடுக்கிறது.

அதேபோல, நமது நல்ல, தீய செயல்களும் பலன் தர அவற்றின் தன்மைக்கு ஏற்பக் குறைவாகவோ அதிகமாகவோ நாள் எடுக்கின்றன.

நமது கரும வினைகளை முன்னோர்கள் மூன்று வகையாகப் பிரித்தார்கள்:

பிராரப்தம், ஆகாமியம், சஞ்சிதம் என்பவையே அவை.

பிராரப்தம்
என்பது பலன் தரத் தொடங்கி விட்ட வினைகள்.

விதைத்து, மரம் வளர்ந்து, கனி தரத் தொடங்கிவிட்டது.
நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுகதுக்கங்கள் இந்த வினைப் பயன்கள்தாம்.

ஆகாம்யம் என்பது விதைத்து வளரத்தொடங்கிவிட்ட பயிர் போல.
அது மரமா,செடியா, கொடியா என்பதைப் பொறுத்துத் தக்க சமயத்தில்,
இந்தப் பிறவியிலேயே பலன் தரும்.

சஞ்சிதம் என்பது விதைக் கையிருப்பு. ஆனால் பயிராகவில்லை.
இந்தப் பிறவியிலோ இன்னும் வரும் பிறவிகளிலோ எப்போது வேண்டுமானாலும் பலன் தரும்.

‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’ என்று ஆண்டாள் திருப்பாவையில் இரண்டு வகை வினைகளைக் கூறுகிறாள்.

ஒன்று, முன்பே செய்துவிட்ட பிழை, அடுத்தது, இன்னும் வரப்போகும் பிழை (அதாவது அந்தப் பாவங்களின் விளைவு).

ஆக, பாவம், புண்ணியம் இவை இரண்டின் மூட்டையைச் சுமந்து பிறப்பு வருகிறது.

அந்தப் பிறப்பு மனிதப் பிறப்பாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

பாவ புண்ணிய மூட்டையின் பலனாக மீண்டும் மனிதனாகத்தான் பிறக்க வேண்டும் என்பதில்லை என்று சொல்லி நிறுத்தினேன்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல் விருகம் ஆகிப்
பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

என்று திருவாசகத்தில் (சிவபுராணம், 26-32) எப்படி மனிதன் கல் போன்ற ஜடப்பொருள் தொடங்கி புல் முதல் தேவர் வரையான (ஓரறிவிலிருந்து பல்லறிவுடைய பிறவிகள்) பல வகைப் பிறப்பும் எடுத்துத் துயரப்பட்டேன் என்று பட்டியலிடுகிறார்.

ஒருமுறை புத்தரின் முக்கியச் சீடரான மௌத்கல்யாயனர் மற்றும் லட்சணர்
கிருத்திர கூட மலையிலிருந்து இறங்கி வரும் போது பாம்புத் தோற்றம் கொண்ட பேயைப் பார்க்கின்றனர்.

இந்த அதிசயத்தைப் போய் அவர்கள் புத்தரிடம் கூறியதும் அவர் கூறினார்:

“புதிதாகக் கறந்த பால் உடனே தயிராகாது. அதுபோலத்தீய செயல்களின் விளைவுகள் உடனே தெரிவதில்லை.

அத் தீய செயல்களின் பலன்கள் நீறு பூத்த நெருப்புப் போலமறைந்திருந்து பாவம் செய்த அறிவிலிகளைச் சுடுகின்றன.”என்று கூறினார் (
தம்மபதம்: மூடர் இயல்: 12).

மேலும் அவர் அந்தப் பேயின் பின்புலத்தை இவ்வாறு விளக்கினார்,

“காஸ்யப புத்தர் என்று ஒருவர் இருந்தார். அவரது காலத்தில் துறவிகள் பலர் ஊருக்குள் சென்று பிச்சை எடுத்தனர்.

இவர்களை விரும்பாத ஒருவன்  பிட்சுக்களின் குடில்களைத் தீயிட்டுக் கொளுத்தினான்.

அதன் காரணமாகவே அவன் பாம்பு உருவம் கொண்ட பேயாகப் பிறப்பெடுத்திருக்கிறான்” என்று விளக்கினார்.

எதுவரை செயல்களைச் செய்கிறோமோ, அதுவரை பிறப்பும் இறப்பும் என்னும் சுழல் நம்மைத் தொடரும்.

இன்பம் துன்பம் என்னும் இருமைகள் இருக்கும்.

முற்பிறவியும் மறுபிறவியும் நிச்சயம் உண்டு.

அப்படி செயலைத் தவிர்க்க வேண்டுமா?

அது தனிக் கேள்வி.

அதற்கு விடை சொல்லப் போனால் இன்னும் பெரிதாக விரியும்.

ஆனால், ஒருவன் துன்பப்படும் போது

“இது உன் வினைப்பயன்” என்று கூறிப் பாராமுகமாக இருக்கும் உரிமை சக மனிதனுக்குக் கிடையாது.

கருணை உள்ளவனே ஆன்மிகவாதியாக முடியும்.

அதனால் தான் வள்ளலார் பெருமான், ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று உருகினார்.

அன்பினால் பிறருக்குச் செய்யும் தன்னலம் கருதாத சேவை மனிதனின் ஆணவத்தை அழித்து,

அவனை உயர் நிலைக்குக் கொண்டு செல்கிறது.அதனால்தான் தன்னலம் கருதாத பேரன்பே ஆன்மிகம்.

எல்லாவுயிரும் தம்முயிர்போல் எண்ணுவதே ஆன்மிகம்.

ஆன்மிக வழி ஒன்றே பிறப்பு-இறப்புச் சுழலினின்று விடுபடுவதற்கான தந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறது.

முன்னர் பாவ-புண்ணியங்களை வெவ்வேறு காலங்களில் விளையும் விதைகள்.

அந்த விதைகளை வறுத்து விட்டால் விளையாதல்லவா?

அதுதான் சூட்சுமம்.

சிவாயநம ,,
              🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதைச் செய்வது அறநிலையத் துறையா அல்லது மக்களுக்கு நல்லது செய்வதாக நினைக்கும் அமைப்புக்களோ, தனிநபர்களோவா தெரியாது.

ஆனால் இது முட்டாள்தனம்.

ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்யூபிரஷர் செருப்பு வாங்குவதை விட, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்யூபிரஷர் உபகரணங்கள் வாங்குவதை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு அக்யூபிரஷர் தெரப்பிஸ்ட்டுகளைப் பார்க்க காத்திருப்பதை விட,

எளிய, காஸ்ட் எஃபெக்டிவ் பிராஸஸ் கருங்கல் தரையில் நடப்பது. கோயிலை ஐம்பது சுற்று சுற்றுகிறேன், நூறு சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு சுற்றிவிட்டு உடலும் மனமும் ஆரோக்யமாக இருப்பதை வியப்பார்கள். அந்தப் பலனை ஆண்டவனுக்கு அட்ரிப்யுட் செய்வார்கள்.

மலைகளில் கோயில்கள் அமைத்ததற்கும், பிரஹாரங்களைக் கருங்கல் கொண்டு அமைத்ததற்கும் காரணம் அக்யூபிரஷர் என்பதை அறிக. வாரம் ஒரு முறையாவது மலையில் அமைந்த கோயில் ஒன்றுக்குப் போய் வாருங்கள்,

உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
ஶ்ரீசித்சக்தி மஹிமை:

ஸம்விதாநந்த ரூபிணியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியை ஆத்மஸ்வரூபமாக உணர்வதே ஶ்ரீவித்யையின் லக்ஷ்யம். மற்ற பலன்கள் எல்லாம் லக்ஷ்யமல்ல!!

பாவனோபநிஷத், லலிதோபநிஷத், ஶ்ரீசக்ரோபநிஷத் மூன்றுமே "ஸ்வயமேவ ஆத்மா லலிதா" என்று ப்ரத்யக்ஷமாகக் கூறுகின்றன.

மஹாயாகக்கரமத்தில் பாஸ்கராச்சார்யாளும் "ஸம்விந்மாத்ர ரூப காமேச்வராங்க நிலயாயை, ஸச்சிதாநந்த ப்ரஹ்மாத்மிகாயை பரதேவதாயை லலிதாயை மஹாத்ரிபுரஸுந்தர்யை நம" என்கிறார்.

கேவலஞான மயமான ஶ்ரீகாமேச்வரன் மடிமீது (ஆத்மஞானத்தை விட உயர்ந்த பரஞானமில்லாததால் ஶ்ரீகாமேச்வரன் ஸம்விதாநந்த மயமானவர்), கேவலாத்ம(தன்னைத் தவிர்த்து வேறொன்றில்லாத ஏகசைதன்ய பரவஸ்து) வடிவினளாக ஶ்ரீலலிதா பரமேச்வரி ஜ்வலிக்கிறாள்.

ஆத்மஞானமான ஶ்ரீகாமேச்வரன் மூலமாக, ஆத்ம தத்வமான ஶ்ரீலலிதாம்பாளை உணர்கிறோம்!! உணர்ந்ததும் ஆத்மாவே ஆத்மஞானமாக விளங்குவதைத்தான் சிவசக்தி ஸாமரஸ்ய ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி லலிதை என்று உணரப்படுகிறது.

தந்த்ரராஜதந்த்ரத்தில் ஶ்ரீவித்யையில் அனேக ப்ரயோகங்கள் கூறப்படுகிறது. ஶ்ரீமத்பஞ்சதசாக்ஷரிக்கும் அனேக ப்ரயோகங்கள் உண்டு!! திதிநித்யைகள் பதினைந்து பேருக்கும் தனித்தனி ப்ரயோகங்கள் ஸமுத்ரம் போல் உள்ளது.

ஆனால் இதெல்லாம் தேவி உபாஸனையின் லக்ஷ்யமா!? என்று கேட்டால் இல்லையென்றே தான் சொல்லவேணும்!! தேவி உபாஸனையின் லக்ஷ்யம் என்றவென்ளால் கைவல்ய மோக்ஷமே!!

ஸமுத்ரத்திலிருந்து தெறித்த திவலைகள் போல் கேவலானந்தவடிவினளான ஶ்ரீலலிதையிடமிருந்து தெறித்தத் துளிகள் நாம் அனைவரும்!! ஸமுத்ரத்திலிருந்து தெறித்த திவலை மறுபடி ஸமுத்ரத்தில் சேர்வது போல் ப்ரஹ்மானந்த வடிவினளான நிர்குண ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியினோடே ஐக்யமடைவதே கைவல்யம் எனப்படும்!!

ஶ்ரீலலிதை அக்கைவல்யத்தை தான் கொடுப்பவள் என்பதை ஸாலோகாதி முக்திகளை சொல்லாத ஸஹஸ்ரநாமம். கைவல்யத்தை மட்டுமே இருமுறை அழுத்திச் சொல்கிறது. ஒரு ஶ்ரீவித்யோபாஸகன் இத்தகைய கைவல்யத்தை மட்டுமே நாட வேண்டுமே அன்றி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது.

மோக்ஷத்தை எங்ஙனம் அடைவது என்பது பெருங்கேள்வியாக உள்ளது அல்லவா!! கலிப்ரபாவமோ கொடுமை!!? கலி தோஷம் க்ரூரமாக உள்ள இந்த ஸமயத்தில் மோக்ஷத்தை நாடிப்போவதெல்லாம் ஸாத்யமா!!?

பார்வதி பரமசிவனிடம் கேட்கிறாள் "மஹாதேவா!! நீலகண்டா!! சைவம், வைஷ்ணவம், ஸௌரம் முதலிய மார்க்கங்கள் ஆயிரம் இருக்கும் போது மிகக்கடினமான ஶ்ரீவித்யையில் ஏன் நீங்கள் ஜனங்களை ப்ரவேசிக்கச்சொல்கிறீர்கள்!!"

மஹாதேவர் சொன்னார் "மலையரசன் மகளே!! அஞ்ஞானம் எனும் இருளால் சூழப்பெற்றது இவ்வுலகு. உன் வடிவான ஶ்ரீவித்யை எனும் சூரியன் உதிக்காத வரை இந்த இருள் விலகாது!!" என்றார்.

ஶ்ரீவித்யை ஞானஸூர்யன். ஆனால் மிகக்கடினமாயிற்றே!! இப்போது உபாஸனை சுருங்கிச்சுருங்கி நவாவரணமும் சுருங்கியாயிற்று!! உபாஸனையிலும் லகு வந்தாயிற்று!! எல்லாவற்றிலும் லகு வந்தாயிற்று !! அது வேறு விஷயம்!!

ஶ்ரீசக்ர நவாவரணம் என்பது மஹாயாகம்!! பஞ்சதசீ/ஷோடஷீ என்பது ஆத்மவித்யை. ஆத்மஸாக்ஷாத்கரமே இதனுடைய பலன்.

இவ்விதம் ஆத்மஸாக்ஷாத்காரத்தை அடைவதென்பது எல்லோர்க்கும் சுலபமா என்றால் நிச்சயம் இல்லை!! ஶ்ரீசக்ர நவாவரணமே செய்தாலும் அந்தர்யாகம், காமகலா த்யானம் முதலியவற்றில் பாவனையிலாவது குண்டலினி சக்தியை எழுப்புதல்/ ஶ்ரீவித்யா ஸ்வரூபத்தை தானாக பாவித்தல் என்பதெல்லாம் செய்ய வேண்டும்!!

கலிதோஷத்தால் அஸுத்தமடைந்திருக்கும் மனதில் பாவனை லபிப்பதற்கே மிகுந்த ப்ரயத்தனம் வேண்டும். பிறகு ஶ்ரீவித்யையை தானாக (முகம் பிந்தும் க்ருத்வா முதலியவற்றில் கூறியுள்ளபடி) பாவிப்பதற்கு எவ்வளவு காலமாகுமோ தெரியாது!!

அப்போது, எப்படித்தான் அம்பாளிடத்திற் லயத்தை அடைவது!! முக்தியை நோக்கிச்செல்ல என்ன தான் வழி!! உபாஸகர்கள் ப்ரயத்தனம் செய்துகொண்டே இருப்பின் அம்பாள் வழிகாட்டுவாள். ப்ரயத்தனம் செய்தாவது தேவி ஸாக்ஷாத்காரத்தை அடைய முடியும்!! இந்த உபாஸனையெல்லாம் இல்லாத ஸாதாரண நம் போன்ற பக்தர்களுக்கு என்ன வழி!!?

அனைத்து தந்த்ரங்களும் தந்த்ரராஜம், தக்ஷிணாமூர்த்தி ஸம்ஹிதை, த்ரிபுரார்ணவம், ஞானார்ணவம் என ஆர்ணவம் எனும் ஸமுத்ரமாக பலகடின வழிகளில் லலிதோபாஸனா பத்ததியைக் கூறுகிறதே தவிர சுலபமான வழியைக் கூறுகிறதா!!?

ஸுபகோதயம், சுபாகம பஞ்சகம் முதலியவற்றில் தக்ஷிணத்தை விட கடினமான ஞானமார்க்கமான ஸமயத்தைப் பற்றியே கூறுகிறது. கௌலதக்ஷிணங்களையாவது அவலம்பிக்கலாம் அன்றி அவலம்பிக்கிறோம் என்று பெயரிலாவது பூஜிக்கலாம். ஶ்ரீஸமயாச்சார மஹாவித்யை லபிப்பதே மிக துர்லபம்!!

ஷட்சக்ரங்களிலும் ஶ்ரீவித்யையை பாவித்து, ஸஹஸ்ரகமலத்தில் ஐக்யபாவம் செய்து, அம்ருதரஸம் பெருகி இதையெல்லாம் நினைக்கவே கடினமாக உள்ளது. பயமாக இருக்கிறது. சுலபமான வழியைத் தான் தந்த்ரங்கள் கூறுகிறதா!!?

நிச்சயம் கூறுகிறது. தந்த்ரராஜம் எனும் மிகப்பழமையான மஹாக்ரந்தத்தில் உபாஸனை இல்லாது மோக்ஷமடையும் வழியும், ஜீவன் முக்தியை மட்டும் விரும்புவோரின் ஶ்ரீசக்ர பூஜையும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது ஸஹஸ்ரதளத்தில் யந்த்ர பாவனை செய்து, அம்பாளை பிந்துவில் பாவித்து பூஜிப்பது.

முதலாவது, உபாஸனை இல்லாது முக்தி அடைய முடியுமா!!? என்ற கேள்விக்கு விடை!!- நிச்சயம் முடியும்

குண்டலினி முதலிய யோகமார்க்கங்கள் அறியாதவர்கள், அதயந்த பக்தியுடன் ஶ்ரீலலிதாம்பாளை நாட்யம் அல்லது ஸங்கீதம்/ பஜனை, மற்றும் ப்ரவசனம் இவற்றால் ஆராதிப்பவர்கள் ஜீவன்முக்தர்களாகி ஶ்ரீலலிதா பரமேச்வரியின் ஸாயுஜ்யம் அடைவர் என்று ப்ரத்யக்ஷமாக தந்த்ரராஜத்தில் கூறியிருக்கிறது.

1) ஶ்ரீலலிதாம்பாளின் வைபவங்களை ந்ருத்ய ஸாஸ்த்ரத்தின் மூலமாக பரதம் முதற்கொண்ட அனைத்து ஸாஸ்த்ரங்கள் மூலமாகவும் காண்பிப்பவர் ஜன்மாவின் இறுதியில் ஶ்ரீபுரம் சென்று ஶ்ரீலலிதையுடன் ஐக்யமடைவர்.

2) ஶ்ரீதேவியின் பெருமையை நாதோபாஸனை மூலமாக அதாவது ஸங்கீதத்தின் மூலமாக ஸங்கீர்த்தனம் செய்பவர் ஶ்ரீபுர ஸாயுஜ்யம் அடைந்து லலிதையுடன் ஐக்யத்தை அடைவர். ஸங்கீத மும்மூர்த்திகளும் இதற்கு ஸாக்ஷி. மூவருமே ஶ்ரீவித்யோபாஸகர்கள் தான்.

கர்நாடக ஸங்கீதம் ராக தாள பாவங்களெல்லாம் கடினமாயிற்றே என்பின், இங்கு குறிப்பிடப்பட்டது நாம ஸங்கீர்த்தனம். ஶ்ரீவித்யா நாமஸங்கீர்த்தம். ஸந்தேஹமே இல்லாது ஶ்ரீலலிதா பரமேச்வரியின் நாமஸங்கீர்த்தனைத்தினை செய்து கடினமில்லாமல் முக்தியை ஸுலபத்தில் கொடுத்துவிடும். ஸமஸ்த பாபங்களையும் அழித்து ஜன்மாந்த்ரத்தில் முக்தியையும் அளித்துவிடும். ஶ்ரீலலிதாம்பாளின் நாமஸங்கீர்த்தனம் என்பது மிகுந்த புண்யம் வாய்த்தது. ஶ்ரீலலிதா நாமஸங்கீர்த்தனம் இதுவரை ப்ரபலமாகவில்லை. இனியாவது எல்லாவிடங்களிலும் சென்று ஜனங்களுக்கு க்ஷேமத்தை உண்டு பண்ணட்டும்!!

3) ப்ரவசனம் -- ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் கதாச்ரவணங்களை உபந்யஸித்தல். உபநாயஸிப்பது என்பது ப்ரவசனம் செய்வது கேட்பது இரண்டிற்கும் பொருந்தும். ஶ்ரீலலிதோபாக்யானம், த்ரிபுராரஹஸ்யம், தேவி பாகவதம், காமாக்ஷி விலாஸம் முதலய புண்ய சரித்ரங்களை மிகுந்த பக்தி ச்ரத்தையுடன் உபந்யஸிக்க வேண்டும்!! அத்யந்த பக்தியுடன் கேட்க வேண்டும்!! அங்ஙனம் செய்யின் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான அம்பாளின் சரணாவிந்தங்களை ஸுலபமாய் அடைந்து, கைவல்ய மோக்ஷத்தை அடையலாம்.

தேவி ப்ரவசனங்கள் தமிழுலகில் மிகமிகக் குறைவு என்பது துக்கிக்கவேண்டிய விஷயம். தெலுங்கு தேசத்தில் ஶ்ரீஸாமவேதம் ஷண்முக சர்மா, ஶ்ரீசாகண்டி கோடீச்வரராவ் முதலியோர் ஶ்ரீவித்யையைப் பற்றியும், ஶ்ரீகாமாக்ஷி பற்றியும், ஶ்ரீலலிதோபாஸனை பற்றியும் வருடக்கணக்கில் உபந்யஸித்துள்ளர். உபந்யஸித்து வருதிறார்கள்.

தமிழுலகில் அம்பாளுக்கென்று உபந்யஸிப்பது தற்காலத்தில் மிகமிக்குறைவாக உள்ளது மிக வருத்தமான விஷயம். ஶ்ரீஅநந்தராம தீக்ஷிதரின் தேவிபாகவதம், ஶ்ரீக்ருஷ்ண மூர்த்தி ஸாஸ்த்ரிகளின் லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம் முதலியவை அற்புதமான ப்ரவசனங்கள்.

மேலும் திருச்சி ஶ்ரீராதாக்ருஷ்ண ஸாஸ்த்ரிகளின் ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம, ஸௌந்தர்யலஹரி, தேவி பாகவத, தேவி மாஹாத்ம்ய, லலிதா த்ரிசதி ப்ரவசனங்கள் முதலியவை பொக்கிஷங்கள்.

ஶ்ரீகோடாவெங்கடேச்வர ஸாஸ்த்ரிகள் தற்காலத்தில் தேவிபாகவத ப்ரவசனம் செய்துள்ளார். மற்றும் தேவி பரமான நிறைய விஷயங்களை ப்ரவசனம் செய்துள்ளார். அவர் ஶ்ரீதேவியின் பாதகமலங்களில் சீக்ரமாகவே சேர்ந்தது நமக்கெல்லாம் பெரிய துக்கம்.

மேலும் ஶ்ரீராஜகோபால கனபாடிகள் ஸௌந்தர்யலஹரி ப்ரவசனம் அற்புதமாகச் செய்துள்ளார்.

தற்போது சாக்த பரமாக ப்ரவசனம் செய்து ஶ்ரீஅரவிந்த் ஸுப்ரமண்யம் Aravind Subramanyam அண்ணா தான். ஶ்ரீலலிதோபாக்யானத்தை அண்ணாவைத் தவிர்த்து வேறு யாரும் செய்து பார்த்ததில்லை.

ஜனங்களுக்கு ஒரு வேண்டுகோள் எனில் ஶ்ரீதேவி நாம ஸங்கீர்த்தனம்,
ஶ்ரீலலிதாம்பாள் கல்யாணம், ஶ்ரீதேவி பாகவத, மாஹாத்ம்ய, ஶ்ரீலலிதோபாக்யன ப்ரவசனங்கள் நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இது போன்ற தேவி ஸம்பந்தமான விஷயங்கள் பெருக ஜகத்தில் மங்களம் பெருகும். லௌகீகத்தில் ஸமஸ்த ஸுகங்களும் பெருகி மறுவாழ்வில் மோக்ஷமும் கிட்டும்!!

இப்படி கைமேல் ஸர்வ ஸௌபாக்யங்களையும் வழங்கும் பராசக்தியின் அம்ருதம் இருக்க, அதை உபயோகித்துக்கொள்ள வேண்டியது நமது கடமை!!

ஶ்ரீதேவியின் பஜனையையும், ஶ்ரீலலிதா நாம ஸங்கீர்த்தனத்தையும், ஶ்ரீலலிதாம்பாளின் ப்ரவசனங்களும் எட்டுத்திக்குகளிலும் சென்று சேர்ப்பது நமது கடமை என்று நினைத்துச் செயல்படுவோம்!!

ஶ்ரீதேவியின் அருள் அதை கூட்டிவைக்கட்டும்!!

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:

-- மயிலாடுதுறை ஶ்ரீராமராகவன்

ஞாயிறு, 12 ஜூலை, 2020

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில், தூத்துக்குடி
பரிந்துரைக்கப்பட்டது

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் கன்னியாகுமரி செல்லும் பாதையில் திருச்செந்தூரில் இருந்து  65 கி.மீ. தொலைவில் உள்ளது. தூத்துகுடியில் இருந்து திருச்செந்தூர்  20 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த  கோயில் 150 ஆண்டுகள் பழமையானது, மற்றும் மிகவும் பிரபலமான தசரா திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும் ஆண்டின் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள்.

இந்த திருவிழாவின் போது தமிழ் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பல நாட்டுபுற நடன கலைஞர்கள் கலைசேவைக்காக இங்கு ஒன்று கூடுவர்.
சிவன்  அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
 மூலவர்    :     அமிர்தகடேஸ்வரர்
அம்மன்   :     அபிராமி
 தீர்த்தம்    :     அபிராமி அமிர்த புஷ்கரிணி
 பழமை    :     500 வருடங்களுக்குள்
ஊர்    :     சேலையூர் கேம்ப்
மாவட்டம்    :     சென்னை
மாநிலம்    :     தமிழ்நாடு
திருவிழா:  மாசி மகம், சிவராத்திரி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம்.    
             
ஸ்தல சிறப்பு:  இங்கு சுவாமியும், அம்பாள் இருவருமே சுயம்பு என்பது சிறப்பு, திறக்கும் நேரம்:காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சேலையூர் கேம்ப், சென்னை.    
           
தகவல்: கோயிலுக்குள்ளாகவே அபிராமி அமிர்தபுஷ்கரிணி(திருக்குளம்) அமைந்துள்ளது. சுற்றுச்சுவர்களில் கங்கை முதல் காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகளை அமைத்து, அந்த நதிச் சிலைகளிலிருந்து நீர் கொட்டுவதுபோல அமைத்துள்ளார்கள். வருடந்தோறும் மாசி மகத்தன்று இந்த நதிகளுக்கு சிறப்பாக விழாவும் கொண்டாடுகிறார்கள்.   
            
ஸ்தலபெருமை:  மாசி மகத்தன்று 18 நதிகளின் புனித நீர் கொணரப்பட்டு, ஹோமங்கள் வளர்த்து, 18 குடங்களில் உள்ள தீர்த்தத்தால் 18 நதி தேவதைகளுக்கும் தனித்தனியாக பூஜை செய்து, பின்னர் இந்த 18 நதி நீரை திருக்குளத்தில் கலக்கிறார்கள். இதன்பின்னரே பக்தர்கள் 18 நதிகளிலும் தனித்தனியாக கொட்டும்  தீர்த்தத்தில், வரிசையாக குளத்தைச் சுற்றி நீராடுகிறார்கள். நிறைவாக 18 நதி நீரும் கலந்துள்ள இந்தத் திருக்குளத்தில் நீராடுகிறார்கள். பின்னர் சிவனையும் அம்பாளையும் வணங்கி அர்ச்சனை செய்தல் சிறப்பு. ஸ்நானம் செய்ய இயலாத பக்தர்கள் தலையில் இந்த நதி நீரை ப்ரோக்ஷித்துக் கொள்ளலாம். திருக்கடையூரில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் போன்று இங்கும், மாதத்துக்கு நான்கு ஐந்து சஷ்டியப்த பூர்த்தி ஹோமங்களை அவரவர் வசதிக் கேற்ப எளிமையாக நடத்துகிறார்கள்.

அபிராமிக்குச் சிறப்பானது தை அமாவாசை. அன்று, மாலை 4.30-5 க்குள் அபிராமி அந்தாதி பாட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். பாராயண நிறைவில் அம்மனுக்கு 9 வகையான பதார்த்தங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அன்னை மிகச்சிறந்த வரப்பிரசாதி. இங்குள்ள அம்பாள் ஒரு அடியை முன்னே எடுத்துவைத்து நமக்கு அருள்வதுபோல் இருக்கும் காட்சி ஒரு சிறப்பம்சம். அம்பாளை ஒருதரம் பிரதக்ஷிணம் வந்தாலே, ÷ஷாடச மண்டபத்தில் அமைத்திருக்கும் ÷ஷாடச லக்ஷ்மிகளையும் வலம் வந்த பலன், வெள்ளிக் கிழமைகளில் இந்த ÷ஷாடச லக்ஷ்மிக்கு சிறப்பு அர்ச்சனையும் உண்டு.
     
 ஸ்தல வரலாறு:  1970-ல் காஞ்சி மகாபெரியவர் சென்னை விஜயம் செய்தபோது இவ்வூரில் பழங்காலச் சிலைகள் புதைந்துள்ளன. அவற்றைக்கண்டு பிடித்துக் கோயில் கட்டுங்கள் என்று அருளாசி வழங்கக் கிடைத்ததுதான் இத்திருக்கோயில். இக்கோயில் இருந்த இடம் முன்னர் மண்மேடாக இருந்தது. அதை அகற்றும்போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் சிலையூர் என வழங்கப்பட்டுவந்த இந்த ஊர். நாளடைவில் சேலையூராக மாறிவிட்டது 1972-ஆண் ஆண்டு கிராமப் பெரியோர்களால் முதலில் அபிராமி அம்மன் கோயிலும், அமிர்தகடேஸ்வரர் கோயிலும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.    
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சுவாமியும், அம்பாள் இருவருமே சுயம்பு என்பது சிறப்பு.
சிவன் :அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்    :  திரியம்பகேஸ்வரர்
அம்மன்    :     கருமாரி திரிபுரசுந்தரி
தல விருட்சம்    :     இலந்தை மரம்
பழமை    :     500 வருடங்களுக்குள்
ஊர்    :     சாமியார்தோட்டம்
மாவட்டம்    :     சென்னை
மாநிலம்    :     தமிழ்நாடு
 
திருவிழா: பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, பகல் பத்து - ராப்பத்து விழாக்கள், அனுமன் ஜெயந்தி,பங்குனி உத்திரம், சிவராத்திரி      

 முகவரி: அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், அசோக்நகர்- சாமியார் தோட்டம், சென்னை.    
           
பொது தகவல்:  இங்கு செல்வ விநாயகர், வைத்தீஸ்வரன், முத்துக்குமார சுவாமி, துர்கை, ஸ்ரீநிவாச பெருமாள் ஆகிய தெய்வங்களும் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.  திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.  
             
 ஸ்தல பெருமை:  சில வருடங்களுக்கு முன் கால பைரவர் மற்றும் மனைவி லோபா முத்திரையுடன் அகத்தியர் ஆகியோரின் விக்கிரகத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதோஷ வழிபாடும், இறைத் திருமேனிகளுக்குச் செய்யப்படுகிற அலங்காரங்களும் இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள்! புதன் மற்றும் சனிக்கிழமைகளில், பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர், சுதர்சனர் ஆகியோரைத் தரிசித்துப் பலன் பெறுகின்றனர், பக்தர்கள். ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு துளசி மாலையும் பத்மாவதி தாயாருக்கு தாமரைப் பூவும் சார்த்தி வழிபட... விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை! கருமாரி திரிபுரசுந்தரி அம்பிகைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, புடவை சார்த்தி வணங்கினால், விரைவில் குழந்தை பாக்கியம் பெறலாம்; சகல சவுபாக்கியங்களுடன் வாழலாம் என்பது ஐதீகம். சரபேஸ்வரருக்கும், அனுமனுக்கும் இங்கே தனித் தனிச் சன்னதிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரருக்கும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, துர்கைக்கு ராகு கால பூஜை என மாதம் முழுவதும் வழிபாடுகள் குறையற நடைபெற்று வரும் இந்தக் கோயிலில், மார்கழி மாதத்தில்... ஸ்ரீநிவாச பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் பகல் பத்து - ராப்பத்து விழாக்கள், உத்ஸவங்கள் எனக் களை கட்டியிருக்கும்! அதேபோல், அனுமத் ஜயந்தி நாளில்.. ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சார்த்தி, விசேஷ அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி தருவார் அனுமன். முக்கியமாக... மூலவர் திரியம்பகேஸ்வரர், அம்பாள் கருமாரி திரிபுர சுந்தரி ஆகியோருக்கு பங்குனி உத்திர நன்னாளில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். கருமாரி திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரியம்பகேஸ்வரரையும் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாச பெருமாளையும் வழிபட வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.    
             
ஸ்தல வரலாறு:  சுமார் 50 வருடங்களுக்கு முன் இலந்தை மர நிழலில் சூல வடிவினளாக அருள்பாலித்து வந்தாளாம் கருமாரி திரிபுரசுந்தரி. பிறகு பக்தர் சக்தி சுந்தரேசன் மற்றும் அந்தப் பகுதி மக்களின் பெரு முயற்சியால் அழகிய கோயில் கட்டப்பட்டு, அங்கே விக்கிரகத் திருமேனியளாக குடியேறினாள் என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் அபய - வரத முத்திரைகளும், சூலமும், உடுக்கையும் கொண்டு ஒரு காலை தரையில் தொங்கவிட்டு, இன்னொரு காலை மடித்து, வீராசனத்தில் காட்சி தருகிறாள் கருமாரி திரிபுரசுந்தரி. தேவியின் சிரசுக்கு மேல் ஐந்துதலை நாகம் படமெடுத்து நிற்பது போன்ற அமைப்பு சிலிர்க்கச் செய்கிறது.    
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு கையில் திருச்சாத்துருண்டையை ஏந்திய கோலத்தில் முத்துக்குமார சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு.
அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில்
 மூலவர் :  சுயம்புநாதர்
 அம்மன்/தாயார் :  பிரம்பசக்தி
 தல விருட்சம் :  கடம்பமரம்
 தீர்த்தம் :  தெப்பகுளம்
 பழமை :  1000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர் :  வீரைவளநாடு
 ஊர் :  உவரி
 மாவட்டம் :  திருநெல்வேலி
 மாநிலம் :  தமிழ்நாடு

திருவிழா: வைகாசி விசாகம் (3 நாள்) - மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல் - 3 லட்சம் பேர் கூடுவர். தைப்பூசம் - 1 நாள். ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் இக்கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வெள்ளமாக கூடுவர். தவிர வைகாசி விசாகம், தைபூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகியவை இத்தலத்து விழாக்களாகும். தவிர பௌர்ணமி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தமிழ் மாதப்பிறப்பு தைப்பூசம் பிரதோசம் தீபாவளி, பொங்கல், ஆகிய நாட்களில் கோயிலில் விசேச பூஜைகளும் அபிசேக ஆராதனைகளும் நடக்கும். அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
  
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மார்கழி மாதம் முழுக்க 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம்.
  
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி: அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில், உவரி - 628 658, திருநெல்வேலி மாவட்டம் 

பொது தகவல்:பனையும் தென்னையும் பாக்கும் வாழையும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை கிராமத்தில்தான் இந்த உவரி கோயில் உள்ளது.  
பிரார்த்தனை:எந்த நோயாக இருந்தாலும் 41 நாள் கடல் நீராடி சுயம்புலிங்க நாதரை தொழுதால் தீருகிறது. நொண்டிகள், கூன், குருடு, மனநோயாளிகள், பில்லி, சூன்யம், பேய் பிசாசு பிடித்தவர்கள் அகியோரது பிரச்னைகள் இங்குள்ள சுயம்புலிங்கநாரை வழிபட்டால் தீருகிறது.கல்யாண வரம், குழந்தைபாக்கியம் வேண்டுவோர் இத்தலத்து ஈசனை வணங்கினால் அந்த வரங்கள் கிடைத்து வருவது இத்தலத்து பக்தர்கள் காலம் காலமாக பார்த்து வரும் உண்மை.மனஅமைதி இழந்து தவிப்போர் இத்தலத்துக்கு வந்தால் மனநிம்மதி கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து போட்டு வழிபடுதல் இங்கு விசேஷமான வழிபாடாக உள்ளது. நாகர் அடித்து வைப்பார்கள். 
தலபெருமை:இறைவனின் சிறப்புடைய 25 மூர்த்தங்களில் ஒன்று லிங்கோத்பவர். இங்கே இறைவன் சுயம்பு லிங்கோத்பவராக உள்ளார்.சூரிய அபிசேகம் : சூரியன் தன் பொற்கரங்களால் இறைவனை இத்தலத்தில் ஆராதிப்பதே தனி அழகு என்று சொல்லலாம். மார்கழி மாதம் 30 நாளும் சுயம்பு லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும். வேறு சில ஆலயங்களில் இது போல் சூரிய ஒளி லிங்கத்தின் மேல் விழுவதுண்டு என்றாலும் அங்கெல்லாம் ஒருநாள் இருநாள் மட்டுமே விழும். மாதத்தின் முப்பது நாளும் முழுமையாக சிவலிங்கத்தின் மீது மேல் சூரிய ஒளிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான்.இயற்கையே இறைவனுக்குக் கவரி வீசுவது உவரியில்தான்.கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம்.மனமுருக வழிபட்டால் வயிற்று வலி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நோய்குணமாகிறது.இந்த கடற்கரைக்கோயிலுக்கு ஒருமுறை சென்றவர்கள் மிகுந்த மனநிம்மதியோடு திரும்பி வருவார்கள்.சுற்றுலாப்பயணிகள் வந்து போகுமளவுக்கு சிறப்புடைய அழகிய கோயில்.

தல வரலாறு:அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது ரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீராக தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் சொல்ல பனை ஓலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மார்கழி மாதம் முழுக்க 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம்.
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்

மூலவர்:காமாட்சி அம்மன்
உற்சவர்:காமாட்சி அம்மன்
அம்மன்:காமாட்சி
தல விருட்சம் :செண்பகம்
தீர்த்தம்:பஞ்ச கங்கை
ஆகமம் பூஜை :சிவாகமம்
பழமை: கிருதயுகம்,திரேதாயுகம், துவாபரயுகத்தில்,கலியுகம் என நான்குயுகங்கள் கண்ட கோவில்
புராண பெயர்:கச்சி
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:ஆதிசங்கரர்.

திருவிழா:மாசியில் பத்துநாள் பிரம்மோற்சவம் புரட்டாசியில் நவராத்திரி திருவிழா ஐப்பசியில் அவதார உற்சவம் ஆகியவை ஆண்டு திருவிழாக்கள்.ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்பு பூஜை நடக்கும்.தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு விஜயதசமி தீபாவளி பொங்கல் நாட்களில் அம்மன் தங்கரதத்தில் உலா வருவாள்.  
      
தல சிறப்பு:அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும்.இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார்.தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது.இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.  
      
திறக்கும் நேரம்:காலை 5மணி முதல்12.30மணி வரை,மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்;முகவரி:அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,காஞ்சிபுரம்-631 501.காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91-44-2722 2609 
     
பொது தகவல்:காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் அன்னபூரணி சன்னதி உள்ளது. ஐப்பசி மாதம் இங்கு அன்னாபிஷேகம் நடக்கும்.இந்த சன்னிதானத்தில் தர்ம துவாரம் பிக்ஷத்துவாரம் உள்ளது.
அம்பிகையை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக"பவதி பிக்ஷாம் தேஹி''என கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் என்பது விதி.இப்படி செய்து வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவு கொடுத்து காப்பாற்றுவாள் என்பது நம்பிக்கை.இத்தலத்தில் உள்ள அம்மன் பக்தர்களை தன் குழந்தைகளைப் போல் பார்ப்பதால் வேண்டிய வரங்கள் எல்லாமே கொடுத்தருள்கிறாள்.அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது. இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.தவிர திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோசம் ஏற்படுவதில்லை.எனவே நவகிரக தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடல் நலம்.குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்ததால் தான் ராமர்,லட்சுமணர் பிறந்தனர் என்று கூறப்படுவதுண்டு.

தலபெருமை:துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும் பரசுராமரால் திரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும்,தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும் ஆதிசங்கரரால் கலியுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு. இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன.அவற்றை ஸ்தூலம்,சூட்சுமம்,காரணம் என்று கூறுவார்கள்.பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால்"காமகோடி காமாட்சி'என அழைக்கப்படுகிறாள்.காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது.இவ்வூரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது.காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.

மகாவிஷ்ணுவின் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்வர் பெருமாள் சன்னதி காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் அருகிலேயே இருப்பது சிறப்பான அம்சமாகும்.இந்த கோயிலின் விசேஷ அம்சம் துண்டீர மகாராஜா சன்னதி ஆகும்.இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.அவன் காமாட்சியை நாள்தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான்.இவனது பக்திக்கு மகிழ்ந்த அம்மன் தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள்.கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயருடன் அவதரித்தார்.ஆகாசராஜனுக்கு பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார்.துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது.துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில் காமாட்சி சன்னதிக்கு எதிரே உள்ளார்.இவரை வணங்க செல்லும் போது மவுனமாக செல்ல வேண்டும்.பேசிக்கொண்டு சென்றால் அம்மனை தரிசித்த பலனை இழப்பதுடன் துண்டீர மகாராஜாவின் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம்.அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,ஈஸ்வரன்,சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும்,நான்கு கைகளுடனும் காட்சிதருகிறாள்.கைகளில் பாசம்,அங்குசம்,புஷ்ப வானம் கரும்புவில் ஏந்தியிருக்கிறாள்.காமாட்சிக்கு லலிதா,ராஜராஜேஸ்வரி,திரிபுரை,சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு.

கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று.காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் காமாட்சி கோயிலை தவிர அங்கெல்லாம் வேறு அம்பாள் சன்னதி கிடையாது.கிருதயுகத்தில் 2000 சுலோகங்களால் துர்வாசராலும் திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமராலும் துவாபர யுகத்தில் 1000 சுலோகங்களால் தௌம்யா சார்யாரும் கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் பாடிய பெருமை காமாட்சிக்கு உண்டு.இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி,லட்சுமி,அரூப லட்சுமி,சியாமளா,வாராஹி,அன்னபூரணி,அர்த்தநாரீ ஸ்வரர்,தர்மசாஸ்தா, துர்வாச முனிவர் ஆதிசங்கரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.இங்குள்ள பெருமாள் கள்வன் என அழைக்கப்படுகிறார்.இக்கோயிலுக்குள் உள்ள இவரது சன்னதி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிற சிறப்பு பெற்றது.இவ்வாலயத்தினுள் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ள காயத்ரி மண்டபத்தின் மத்தியில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள்.இம்மண்டபத்தினுள் 24 ஸ்தம்பங்கள்(தூண்கள்)உள்ளன.24 அட்சரங்கள் 24 தூண்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு.இதேநிலையில் இதே போல் மண்டபத்தின் கீழே இருப்பதாவும் ஐதீகம்.அதனால் தான் விவரம் அறிந்தவர்களாக இருப்பின் காயத்ரி மண்டபத்திற்குள் சென்று நின்று வணங்கமாட்டார்கள்.காரணம் அம்பாள் மீதே நிற்ககூடாது என்ற அச்சம் தான் என்றும் கூறுகின்றனர்.துர்வாசர் இவர் சிறந்த தேவி பக்தர்.லலிதாஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர்.இவரே இப்போதுள்ள அம்மனின்மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர்.அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவருக்கே.இது அம்மனின் எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக விளங்கினாளாம்.ஆகையால் இந்த ஸ்ரீ சக்கிரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினாராம்.இவருக்கு இக்கோயிலில் தனி சன்னதி உண்டு.இங்கு காமகோடி காமாட்சி,தபஸ் காமாட்சி,பங்காரு காமாட்சி,அஞ்சன காமாட்சி,உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர்.

காமாஷி தத்துவம்:காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி.கா என்றால் ஒன்று.ம என்றால் ஐந்து.ஷி என்றால் ஆறு.அதாவது ஐந்து திருநாமங்களையும் சக்தி பேதம் மூன்று. சிவபேதம் இரண்டு விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள். மற்றும் கா என்றால் சரஸ்வதி.மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள்.காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும்.இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள்.பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.
 
தல வரலாறு:பண்டாசுரன் என்ற அசுரன் யாரையும் வெல்லும் வரமும் தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான்.ஆனாலும் அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில் அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால் அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள்.கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார்.
 
சிறப்பம்சம்:அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகோடி பீடமாகும்.இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார்.தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.
எனக்கு இவரையும் இவர் பாடல்களையும் ரொம்ப பிடிக்கும்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் வைராக்கியம் பிறக்கும்... இவருக்கு அந்த பக்தி வைரக்கியம் பிறந்தது அவரின் குழந்தை இறப்பில்......

நண்பர் ஒருவரின் இந்தபதிவை பார்த்த பொழுது அவ்வளவு மகிழ்வாக இருந்தது.... அதான் அவர் பர்மிசனோட காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன்... இவங்க முன்னாடிலாம் நாம சாதாரணம்....

பூந்தானம்

1547 மாசி மாதம் அசுவினி நாளில் ,
கேரளா
மலப்புறம் மாவட்டத்தில்
பெரிந்தல்மண்ணைக்கு
அருகிலுள்ள கீழாற்றூரில்,ஒரு நம்பூதிரி
பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.

பூந்தானம் என்பது அவர்கள் இல்லத்தின் பெயர். இல்லப்பெயரே அவரது பெயராக  நிலைத்துவிட்டது.

அதிகமாக படிக்காதவர் இவர்.

20 வயதில் திருமணம் நடைபெற்றது.

நீண்ட காலமாக அவருக்கு குழந்தை இல்லை.

நீண்ட வேண்டுதலுக்கு பிறகு இவருக்கு ஒரு மகன் பிறந்தார்.
தன்
குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனபோது அன்னப்ராசனம்
அமுது ஊட்டும் நிகழ்வு செய்ய நாள் குறித்து, உறவினர்களை எல்லாம் அழைத்திருந்தார்.

அன்னப்ராசன தினத்தன்று, வீட்டில் உள்ள எல்லாரும் சீக்கிரமே எழுந்துவிட்டனர்.

அவர் மனைவி, குழந்தையை நீராட்டி, புதுத் துணிகள் உடுத்தி விட்டு, அலங்கரித்து, தாய்ப்பால் கொடுத்துவிட்டு, குழந்தையை ஒரு துணியில் சுற்றித் தூங்க வைத்தாள்.

குழந்தை உறங்க ஆரம்பித்ததும் உறவினர்களை வரவேற்கச் சென்றாள்.

கேரளத்தில், மிகவும் மடியாக இருக்கும் பெண்கள் கையில் தாழங்குடையையையும், மேலே வெள்ளைத்துணியையும் போர்த்தியிருப்பார்கள்.

வந்திருந்த பெண்களில் ஒருவர், தான் போர்த்தியிருந்த துணியை, குழந்தை இருப்பதை அறியாமல் அதன்மேல் போட்டாள்.

பின்னால் வந்த அனைவரும் மேலே மேலே துணிகளைப் போட்டார்கள்.

அன்னப்ராசனம் நடக்கவேண்டிய நேரம் நெருங்கவே, குழந்தையை எடுத்து வர உள்ளே சென்று பார்த்த போது, குழந்தை மூச்சு முட்டி இறந்துவிட்டிருந்தது.

நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தை இறந்ததைக் கண்ட  பூந்தானத்தின் மனைவி  நிலைகுலைந்து போனாள்.

அழுது அரற்றினாள்.

கிருஷ்ணா ஏன் இப்படி? என்று கதறினார் பூந்தானம்.

அவரது சோகத்தைக் கண்ட குருவாயூரப்பன், "பூந்தானம் கவலைப் படாதே! இனி நானே உன் பிள்ளை, என்று கூறி அவர் மடியில் அமர்ந்து, உன் மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?" என்று கேட்டான்.

கண்ணனைத் தன் மடியில் கண்ட பூந்தானம், பரவசமடைந்து, "கண்ணனே என் மடியில் குழந்தையாகத் தவழும்போது, எனக்கென்று பிள்ளையும் வேண்டுமோ?" என்று பக்தியில் தன்னை மறந்தார்.

‘ஞானப்பான’ என்ற தத்துவ முத்துக்கள் அவர் வாயிலிருந்து கவிதையாக வந்து விழுந்தது. சோகமே ஸ்லோகமானது.

‘ஞானப்பான’ எளிய மலையாள நடையில் உயர்ந்த தத்துவக் கருத்துகளைக் கொண்ட ஓர் காவியம்.

ஞானத்தைத் தரும் பானை அதாவது ஞானக் களஞ்சியம் என்றே சொல்லலாம்.

‘ஞானப்பானை' சாஸ்வதமற்ற வாழ்க்கையைப் பற்றிய ஓர் கவிதை.

இவரது வீடான பூந்தானம் இல்லம் என்பது இப்போது குருவாயூர் தேவஸ்வத்தின் கீழ் உள்ளது.

பூந்தானம்
நாராயண பட்டதிரியிடம்
ஞானப்பானை நூலை
கொடுத்து செம்மைப் படுத்தித் தருமாறு கேட்டார்.

இருவரும் பக்தியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.
பட்டதிரி மெத்தப் படித்த மேதாவி.

நாராயணீயம் என்ற உன்னதக் காவியத்தை எழுதிய புலவர்.

பூந்தானம் படிப்பறிவற்றவர்.
“ஞானப்பானை’ என்ற தத்துவ பக்திக் கவிதைகளின் ஆசிரியர். பூந்தானத்திற்கு பட்டதிரியிடம் மிகுந்த மதிப்புண்டு.

தெய்வீக மொழியான சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட சுலோகங்களையே பகவான் விரும்புவார் என்றும் நாட்டு மொழியான மலையாளக் கவிதைக்கு செவி சாய்க்க மாட்டரென்றும் சொல்லி மறுத்து விட்டார் பட்டதிரி.

நாராயண பட்டத்ரி பூந்தானத்தை, பாமரர் என்று அலட்சியப்படுத்த
மனம் வருந்திய பூந்தானம் குருவாயூரப்பனிடம் முறையிட்டார்.
பின்
துக்கத்துடன் வீடு திரும்பினார் பூந்தானம்.

பட்டதிரி ஒரு சுலோகம் இயற்றியதும் அதைக் கேட்டு பகவான் காட்சி தருவதும் வழக்கம். அன்று இயற்றிய சுலோகத்தைப் பாடிய பின்னும் பகவான் பிரத்யட்சமாகாமற்
போகவே வேதனைப்பட்டார் பட்டதிரி.

மனமுருகி வேண்டிய பிறகு குருவாயூரப்பன் காட்சியளித்தாராம்.

பூந்தானம் என்று ஒரு பக்தன் மலையாளத்தில் இயற்றிய கவிதை கேட்டு மயங்கி நின்றதில் பட்டதிரிக்கு காட்சியளிக்க தாமதமாகி விட்டது என்று விளக்கினாராம் கண்ணன்

இவ்வளவு நடந்தும் தானே பக்தியில் கவிதை புனைவதில் பெரியவன் எனும் எண்ணம் பட்டத்திரியிடம் மிகுதியாக இருந்தது.
.
பூந்தானம் பட்டத்திரியை குருவாகவே பார்த்தார்.

பூந்தானம் நம் கிருஷ்ணரை எப்படி மனதால் எந்த உரு கொண்டு வணங்க வேண்டும்
கண்ணனின் முழு வடிவத்தை தியானிக்க முடியாமல் சிரமப்படுகிறேன். நல்லதொரு வழியை காட்டுங்கள்...’ என, பணிவோடு
கேட்கவே

பட்டத்திரி எந்த வேடத்திலும் நீங்களும் வணங்களாம்
ஏன் கருமையான எருமை உரு கொண்டும் வணங்கலாம் என கூற

பூந்தானம். அன்றிலிருந்து தினந்தோறும் கண்ணனை எருமைமாடு வடிவத்தில் மனதுள் இருத்தி தியானிக்க ஆரம்பித்தார்.

அவருடைய தீவிரமான தியானத்தால், அவருக்கு, எருமை மாடு வடிவத்திலேயே காட்சி கொடுத்தார், கண்ணன்.

ஓர் நாள்

குருவாயூரில் திருவிழாக் காலம். கண்ணக் கடவுள் உற்சவ மூர்த்தியாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

பக்தர்களோடு பக்தர்களாக நாராயண பட்டதிரியும் பூந்தானமும் முன்வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.

உற்சவ மூர்த்தியைத் தோளில் சுமந்திருந்த அன்பர்கள் பல்லக்கை வெளியே கொண்டுவர முனைந்தார்கள்.

கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ ஏதோ இடித்தது. எங்கே எது இடித்துத் தடுக்கிறது என்று பல்லக்குத் தூக்கியவர்கள் ஆராய்ந்தார்கள்.

அவர்கள் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை.

அப்போது பட்டதிரியின் அருகே நின்றிருந்த பூந்தானம் பரபரப்படைந்தார்.

உற்சவ மூர்த்தி நடைதாண்டி வெளியே வர இயலாமல் எது தடுக்கிறது?

காரணம் தெரியாமல் பல்லக்குத் தூக்கியவர்கள் தவித்தபோது பூந்தானம் உரத்துக் குரல் கொடுத்தார்.

கொஞ்சம் சாய்த்துப் பல்லக்கை எடுங்கள். மேலே எருமை மாட்டின் வாலாலோ, உடலாலோ எந்தப் பிரச்னையுமில்லை. கொம்புதான் முட்டுகிறது.

அதனால் தான் உற்சவ விக்ரகம் வெளியே வர இயலாதிருக்கிறது. சாய்த்து எடுத்தால் வெளியே கொண்டுவந்து விடலாம்!

அப்போது

மூல விக்ரகத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் ஓடோடி வந்தார்.

உற்சவ விக்கிரகத்தைப் பார்த்துப் படபடவெனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

பிறகு சொல்லலானார்.
“”அன்பர்களே! நான் அர்ச்சனை செய்துகொண்டே இருந்தபோது குருவாயூரப்பனின் மூல விக்ரகம் திடீரென ஒரு மகிஷமாக (எருமை) மாறியது. தன் எருமைக் குரலில் “”என் பக்தன் பூந்தானம் என்னை, நாராயண பட்டதிரி சொன்ன அறிவுரைப்படி, எருமை வடிவில் தியானம் செய்கிறான். அதனால் தான் உனக்கு இந்தக் காட்சி கிட்டியிருக்கிறது. உற்சவ மூர்த்தியைச் சுமந்து செல்பவர்களிடம் இதைத் தெரிவி என எனக்கு உத்தரவிட்டார்!
என்றார்.

பூந்தானம் சாதாரண பக்தரல்ல. அவர் கடவுளைக் கண்ட மகான்!”
அர்ச்சகர் பூந்தானத்தின் கால்களில் கண்ணீர் பெருக விழுந்து வணங்கினார்.

இதையெல்லாம் கவனியாத பூந்தானம், ஒரே ஒரு கொம்புதான் மேலே இடிக்கிறது. இன்னொரு கொம்பு இடிக்கவில்லை. விரைவில் உற்சவ மூர்த்தியை வெளியே கொண்டு வாருங்கள்!” என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்!

அவர் சொன்னபடியே சாய்த்து எடுத்துவந்தவுடன் பல்லக்கு எளிதாக வெளியே வந்துவிட்டது.

மறுகணம் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எல்லோரும் கேட்கும் வகையில் உற்சவ விக்கிரகத்திலிருந்து “ம்மா!’ என்ற எருமை மாட்டின் கம்பீரக் குரல் எழுந்து அந்தப் பிரதேசமெங்கும் எதிரொலித்தது!

எருமை மாட்டு வடிவில் கண்ணனைக் காணாவிட்டாலும் அந்த சப்தத்தைக் கேட்ட பட்டதிரி மெய்சிலிர்த்தார்.

கண்களில் கண்ணீருடன் உற்சவ மூர்த்தியை வணங்கியவர், தான் சொன்னதை மனப்பூர்வமாக ஏற்று எருமை வடிவில் கண்ணனைக் கண்ட மகான் பூந்தானத்தின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

“”படிப்பால் என்ன பயன்! பக்தியல்லவா முக்கியம்! ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்டதற்காக பகவான் காட்சி கிடைத்துவிடுமா என்ன! உள்ளார்ந்த பக்திக்கல்லவோ என் கண்ணன் உருகுவான்!
என்றார் பட்டத்தரி.

பட்டதிரியின் உருக்கமான பேச்சை பூந்தானம் கவனித்தாய்த் தெரியவில்லை. “”ஆகா! என் குருவாயூரப்பன் என்ன அழகாக வாலை அசைக்கிறார்! என மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

பாகவதம் பூந்தானம் சிவபெருமான்

பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள்

ஒரு நாள் கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.

 பூந்தானம் கொட்டியூர் சென்று அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார்.

தினசரி கோவிலில் சிவன் முன்னால் பாகவத ப்ரவசனம் செய்தார்.

நூற்றுக்கணக்கான மக்கள் அவருடைய இனிமையான பிரவசனத்தைக் கேட்டார்கள்.

ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணர் விளையாட்டாக ருக்மிணியிடம், சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் போன்றோர் இருக்கும்போது என்னை ஏன் திருமணம் செய்தாய் என்று பரிஹாஸமாகப் பேச, ருக்மிணி மயங்கி விழ, பின்னர் கிருஷ்ணர் சமாதானம் செய்வதைக் கூறும் ஸர்க்கம்.

பூந்தானம் இந்தப் பகுதியை வாசித்து முடித்து, அடுத்த நாள் தொடர்வதற்கு வசதியாய் அந்த அத்தியாயத்தின் முடிவில் அடையாளம் வைத்தார்.

ஆச்சர்யப்படும் வகையில் அடுத்த நாள் அவர் வைத்த அடையாளம் அந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் இருந்தது.

அதனால் மறுபடியும் அந்த ஸர்க்கத்தையே வாசித்தார்

மீண்டும் சில நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து நடந்தது.

கோவிலை மூட வேண்டிய நேரம் வந்தது.

பூந்தானம் பிரவசனத்தை முடித்து, வீட்டிற்குத் திரும்பும் வழியில் பாகவத புத்தகத்தைக் கோவிலிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார்.

அதை எடுக்க மீண்டும் கோவிலுக்குச் சென்றார். ஆனால் நடை சாத்திவிட்டார்கள். யாருமே அருகில் இல்லை.

அவர் ப்ரவசனம் செய்த பாகவத அத்தியாயத்தின் அதே பகுதியை யாரோ கோவிலின் உள்ளிருந்து சொல்வதைக் கேட்க முடிந்தது.

 சாவி த்வாரத்தின் வழியே உள்ளே பார்த்தார்.

பரமசிவனே அதைப் படித்துக் கொண்டிருந்தார்.

பார்வதிதேவியும், பூதகணங்களும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பூந்தானம் அசையாமல் அதைக் கேட்டார்.

கடைசியில் சிவன் பார்வதியிடம், நான் படித்த இந்த பாகவத ஸர்க்கம் உனக்குப் பிடித்ததா? என்று கேட்க,

பார்வதி, “ நன்றாக இருந்தது,
ஆனால் பூந்தானம் சொன்னதைப்போல் இல்லை” என்று கூறினாள்.

சிவனும், உண்மைதான் நானும் பூந்தானம் சொல்வதையே கேட்க ஆசைப்படுகிறேன்.

அதனால்தான், தினமும் அவர் வைத்த அடையாளத்தை இந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் வைத்தேன் என்று கூறினார்.

வெளியே நின்றுகொண்டிருந்த பூந்தானம் இதைக் கேட்டவுடன் மெய்சிலிர்த்து, க்ருஷ்ணா, க்ருஷ்ணா என்று உரக்கக் கூறினார்.

அவர் மீண்டும் பார்த்தபோது, சிவபெருமானும் பார்வதியும் மறைந்து விட்டனர்.

மோதிரம்

ஒருநாள் பூந்தானம் குருவாயூர் கோயிலில் வழிபட சென்றார். அப்போது நேரம் பிந்தி விட்டது. மாலை இருள் சூழ்ந்துவிட்டது.

அந்த நேரத்தில் வழிப்பறி கள்வர்கள் இரண்டு மூன்று பேர் சூழ்ந்து, அவரது மூட்டை முடிச்சுகளை பறித்துவிட்டு, அவரை மரத்தில் கட்டி வைத்து, கொல்ல வேண்டும் என்று நினைத்தார்கள்.

அந்த நேரத்தில் சட சட வென்று ஒரு குதிரைக் குளம்புகளின் ஒலி கேட்டது. ஒரு நிமிடத்தில் அந்த ஊர் அரசன் "சாமுதிரிபாடின்" அமைச்சரான "மங்காட்டச்சன்" என்ற வீரர் அங்கே தோன்றினார்.

கள்வர்கள் கதிகலங்கி ஓடி மறைந்தனர்.

தனது உயிரை காத்த அமைச்சரிடம் மிகுந்த நன்றி உடையவராகி பூந்தானம் அவருக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினார்.

ஆனால் மங்காட்டச்சன் பூந்தானத்தின் கை விரலில் உள்ள மோதிரத்தை கொடுக்க ஆசைகொண்டார்.

அந்த மோதிரம் பூந்தானத்தின் குருவாகிய மேல்பத்தூர் நாராயண பட்டதிரியால் அவருக்கு ஆசீர்வதித்து கொடுக்கப்பட்டது.

அதனால் அதை அமைச்சருக்கு சற்று தயக்கத்துடன் கொடுத்து அனுப்பினார்.

அன்று இரவு குருவாயூர் கோவில் தலைமை பூசாரியின் கனவில் பகவான் தோன்றி, "நாளை நிர்மால்ய பூஜை வேளையில் என் விரலில் புதியதோர் மோதிரத்தை காண்பாய். அதனை பூந்தானம் வரும்போது அவரிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொல்லி மறைந்தார்.

அதே போல் மறுநாள் காலை பூந்தானம் ஆலய வழிபாட்டிற்கு வந்தபோது மேல்சாந்தி (தலைமை பூசாரி) பூந்தானத்திடம் அந்த மோதிரத்தை பகவான் கனவில் சொல்லியபடி கொடுத்தார்.

பூந்தானத்திற்கு அப்போது தான் உண்மை விளங்கியது. தன்னை கொள்ளைக் காரர்களிடமிருந்து பகவானே மாறுவேடத்தில் வந்து காப்பாற்றி அருளினார் என்று அறிந்து அளவில்லாத ஆனந்தமும், பக்தியும் கொண்டு ஆடிப் பாடினார்

மஞ்சுளா தரை

மஞ்சுளா என்ற பக்தை தினமும் இரவில் குருவாயூரப்பனுக்குச் சார்த்த பூமாலை கொண்டு வருவது வழக்கம்.

ஒருநாள் தாமதமானதால், கோயில் நடை மூடப்பட்டு விட்டது. கலக்கமடைந்தாள் மஞ்சுளா. அப்போது அவளை ஆசுவாசப்படுத்திய பூந்தானம் அடியார்,

அவள் நின்றிருக்கும் ஆல மரத்தின் அடியையே இறைவனின் திருவடியாக பாவித்து, பூமாலையை அங்கேயே சமர்ப்பிக்கும்படி சொன்னார்.

மஞ்சுளாவும் அப்படியே செய்தாள்.

மறுநாள் காலையில் மேல்சாந்தி, விக்கிரகத்தின் மீதுள்ள பூமாலைகளை அகற்றும்போது, ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லை.

அதைக் கண்ட பூந்தானம் பக்தி பரவசத்துடன், 'மஞ்சுளாவின் மாலை என்றால், அதுவும்  விழட்டும்’ என்றார்.

உடனே மாலை கீழே விழுந்தது,

அதனால், அந்த ஆலமரம் உள்ள இடம் பூஜைக்குரியதானது. அதை 'மஞ்சுளால் தரை’ என்பர்.

அன்னப்ராசனம்

குருவாயூரில் எல்லா நாட்களிலும் அன்னப்ராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தால், இங்கு வந்து சோறு ஊட்டுவதாக வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.

தவிர, குருவாயூரப்பனின் சந்நிதியில் சோறு ஊட்டினால், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வளர குருவாயூரப்பன் அருள் புரிவான் என்பது நம்பிக்கை.

அடிமை கிடத்தல்

அடிமை கிடத்தல் என்றொரு பிரார்த்தனை யும் இங்கே உண்டு. குழந்தைகளை பகவானின் குழந்தையாக பாவித்து, நடையில் கிடத்திவிட்டுத் திரும்புவர்.

பின்பு மற்றொருவர் மூலமாக குழந்தையை எடுத்து வரச் செய்வர்.

அதற்கான காணிக்கையை உண்டியலில் செலுத்துவர். இதற்கு அடிமை கிடத்தல் அல்லது நடை தள்ளுதல் என்று பெயர்.

மூலவருக்கு முன்புறம் தென் பகுதியில் வாணலி போன்ற பெரிய பாத்திரத்தில் குந்துமணிகள் இருக்கும். பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பின், தங்கள் குழந்தைகளின் கைகளால் அந்தக் குந்துமணிகளை வாரி எடுக்கச் செய்து, மீண்டும் அதிலேயே போடச் செய்வர். இதனால் குழந்தைகள் துறுதுறுப்புடன் திகழ்வர் என்பது ஐதீகம்.

ஆள் ரூபம் சமர்ப்பித்தல்’

அங்கங்களில் நோய் நொடி உள்ள பக்தர்கள் தங்களது குறை தீர்ந்தால், குறிப்பிட்ட கண், கை, கால் போன்ற அங்கங்களை மரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றில் செய்து சமர்ப்பிப்பதை 'ஆள் ரூபம் சமர்ப்பித்தல்’ என்பர்.

ஞானப்பானை

மனிதப்பிறவியின் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்தக் கவிதையிலிருந்து சில துளிகள்:

"எத்ர ஜென்மம் மலத்தில் கழிஞ்ஞதும்

எத்ர ஜென்மம் ஜலத்தில் கழிஞ்ஞதும்

எத்ர ஜென்மங்ஙள் மண்ணில் கழிஞ்ஞதும்

எத்ர ஜென்மங்ஙள் மரங்ஙளாய் நின்னதும்

எத்ர ஜென்மங்ஙள் மரிச்சு நடன்னதும்

எத்ர ஜென்மங்ஙள் ம்ருகங்ஙள் பஷுக்களாய்"

மானிடப் பிறவி அரியது. முன்பு புழுவாய், பூச்சியாய், மிருகங்களாய், மரங்களாய், பல ஜன்மங்களை எடுத்து பின்னர் இப்போது கிடைத்திருக்கிறது இந்த மனிதப் பிறவி. குறுகிய காலம் மட்டுமே இருக்கும் இந்த வாழ்க்கையில் நாம் பகவானது திருநாமத்தை உச்சரிக்காமல் இருக்கின்றோமே? என்று ஆச்சர்யப்படுகிறார் பூந்தானம்.

"இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா
இனி நாளேயும் எந்தென்னறிஞ்ஞிலா
இன்னீக்கண்ட தடிக்கு வினாசவும்
இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா"

நேற்று வரை என்ன நிகழ்ந்தது  என்று  அறியவில்லை, இனி நாளை என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை, இன்றிருக்கும் இந்த சரீரத்திற்கு அழிவு எந்த நேரத்தில் என்றும் அறிவதில்லை.

"நம்மெயொக்கேயும் பந்திச்ச ஸாதனம்
கர்மம் என்னறியேண்டது முன்பினால்
முன்னில் இக்கண்ட விஸ்வம் அசேஷவும்
ஒன்னாயுள்ளொரு ஜ்யோதிஸ்வரூபமாய்"

நம் அனைவரையும் இந்த உலகத்தில் கட்டி இருப்பது கர்மமே என்பதை அறிய வேண்டும். ப்ரளயத்தில் நாம் காணும் இந்த உலகமெல்லாம் ஒன்றேயான ஒரே ஜோதிஸ்வரூபத்தில் ஒடுங்குகின்றது.

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுதானந்த கோவிந்த மாதவா

சச்சிதானந்த நாராயணா ஹரே!!!

1640 ஆம் ஆண்டில் பூந்தானம் இந்த உலகத்தை விட்டு வெளியேறினார்.

ஒரு நாள் கிருஷ்ணன் பூந்தானத்தை ‘என்னிடம் வா’ என்று அழைத்தார்.

மிகுந்த சந்தோஷமடைந்த பூந்தானம், வீட்டில் உள்ளவர்களிடம்,

நாளை விஷ்ணுதூதர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார்கள். வீட்டை நன்கு அலங்கரியுங்கள்; யாரெல்லாம் கிருஷ்ணனைக் காண வருகிறீர்கள் என்று கேட்டார்.

அவர் சொர்க்கத்திற்கு புறப்படுவதாக அறிவித்தபோது, தன்னுடன் சேர விரும்பும் எவரையும் அவர் அழைத்தார்.

இதை கிராம மக்கள் அனைவரும் மறுத்துவிட்டனர்.

எப்போதும் கிருஷ்ணனை நினைத்து அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என அவ்வூர் மக்கள் நினைத்தார்கள்.

இறுதியில், நோய்வாய்ப்பட்ட மனைவி மற்றும் பராமரித்த ஒரு வேலைக்காரி ஆகியோரோடு பரலோக பதவி அடைந்தார்.

இவர் "ஞானப்பான", "சந்தானகோபாலம்", "ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்", "குசேல விருத்தம்", "சுபத்ரா கரணம்", "108 ஹரி" "கனசங்கம்" போன்ற பல பக்தி பாடல்களை பாடி மலையாள மொழியின் புண்ணிய பெருமையை வளர்த்துள்ளார்.

சந்தான கோபாலம் என்ற நூலை எழுதிக் கொண்டிருந்த போது பகவானது இருப்பிடம் ஆகிய வைகுண்டத்தை வருணிக்க முனைந்தார்.

எவ்வளவு வியந்து, புகழ்ந்து எழுதிய போதிலும் அவருக்கு மன நிறைவு உண்டாகவில்லை. அன்று இரவு தூங்கும் போது தெய்வீக கனவு ஒன்றைக் கண்டார்.

அதில் அவர் வைகுண்டம் சென்று இருந்ததாகவும், அங்கு உள்ள பக்தர்கள் எல்லாம் முன்னாளில் பூலோகத்தில் அவரது பாகவத பாராயணம் கேட்டு பரகதி அடைந்தவர்களாகவும், அவர்களின் வேண்டுகோளின் படி வைகுண்டத்திலும் பாகவத பாராயணம் செய்து எல்லோரையும் பரவச படுத்தியதாகவும் கனவு கண்டார். கனவில் கண்டது போலவே வைகுண்டத்தை தனது நூல் ஆகிய சந்தான கோபாலத்தில் பாடி வைத்துள்ளார்.
*''இரக்கம் புரிவோம்''*
......................................................

இரக்கமற்றவர்களை நாம் மனிதர்கள் என்றுக் கூறவியலுமா...? இரக்கமே ஒரு மனிதனை நாகரிகமானவன் ஆக்குகிறது. மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது...

அனைவரும் அடுத்தவர்மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் கலகங்கள் ஏது...? வாதங்கள் ஏது...?

மனம் மென்மைப்படும் பொழுது இரக்க உணர்வு தாமாகவே மனதில் எழுகிறது. ஆதிமனிதன் நாகரிகம் அடைந்ததன் வெளிப்பாடுதான் அவனது இரக்க உணர்வு...

மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன, தாய்ப்பறவை எங்கோ சென்று இரை தேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பி வந்தபோது திடுக்கிட்டு அலறியது...

ஒரு அரவம் (பாம்பு) மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பதுவே அதன் நோக்கம்...

தாய்ப் பறவையால் அந்த அரவத்தினை என்ன செய்யவியலும்...?

சேடனே...! சேடனே...!! எங்களை விட்டுவிடுங்கள் என்றபடி கரைந்தவாறு கெஞ்சியது அந்தத் தாய்ப்பறவை...! (சேடன்-பாம்பு)

திரும்பிப் பார்த்த சேடனோ! , “ஏன் எதற்காக ஓலமிடுகிறாய்...?” என்றது.

 _*“அண்ணா! நீங்கள் எவ்வளவு பெரியவங்க! உங்களைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் எங்கள் மேல் நீங்க இரக்கப்படக் கூடாதா..?” எனக் மெல்லியக் குரலில் கெஞ்சியது பறவை...*_

“அப்படியா...?” என்றது சேடன்.

“அண்ணா என் குழந்தைகளை விட்டுவிடுங்கள்! நாங்கள் பிழைத்துக் கொள்கிறோம்”

“நான் கேட்பதற்குச் சரியான பதிலைச் சொல்லி விட்டால், நான் உன் குழந்தைகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறேன்” என்றது அந்த அரவம்...

“கேளுங்க அண்ணா” சொல்கிறேன் என்றது தாய்ப் பறவை...

“உன் வாயில் தற்போது என்ன வைத்திருக்கிறாய்...?”

“என் குஞ்சுகளுக்குச் சிறிது இரை கொண்டு வந்து இருக்கிறேன் அண்ணா...!”

“என்ன இரை அது...?”

“சிறிய புழுக்கள் அண்ணா...!”

“உன் குழந்தைகளின் இரைக்காகச் சென்ற நீ, அந்தப் புழுக்களுக்கு இரக்கம் காட்டவில்லை, ஆனால், என்னிடம் மட்டும் இரக்கம் காட்டச் சொல்கிறாயே...!"

சேடன் கேட்ட அந்தக் கேள்விக்கு அந்தப் பறவையால் எந்த பதிலும் கூற இயலவில்லை...

இதுதான் நமது வாழ்க்கையின் நியதி...!

உன்னைவிட பலம் குறைந்தது உனக்கு இரையாகிறது...!
என்னை விட பலம் குறைந்தது எனக்கு இரையாகிறது...!!

இப்படி இல்லாமல் தானே உற்பத்தி செய்து வாழ வழி இருக்கிறவர்கள் மனிதர்கள்தான், ஆனால், அவர்களே அப்படி வாழ்வதில்லை, பல உயிரினங்களைக் கொன்று உண்டு வாழ்ந்து வருகிறார்கள்...

இப்படிப்பட்ட சூழலில் என்னை இரக்கம் காட்டச் சொல்வது சரிதானா...?

நீயே ஆலோசித்துக் கொள். இன்று நீ என்னை அண்ணா என்று அன்போடு பலமுறை அழைத்தாய், அந்த மகிழ்ச்சியில் இன்று உன் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தையும் நான் விளைவிக்கப் போவதில்லை.

என் பசிக்கு நான் வேறு வழியைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றபடி அந்த அரவம் சென்றுவிட்டது...

சேடன் சென்ற அந்தத் திசையைப் பார்த்துத் திகைத்து
நின்றது தாய்ப் பறவை...!

*ஆம் நண்பர்களே...!*

*அனைத்து உயிர்களிடத்தில் இரக்கம், அன்பு செலுத்துவோம், உயிர்களிடத்திலும் இரக்கமாக இருப்பது நமது நோய் எதிர்ப்புத் திறன் அமைப்பிற்கு சிறந்தது. அது மனிதர்களின் அகவையை நீட்டிக்கும், இதை நீங்கள் பணம் கொடுத்துப் பெறவேண்டாம். இது எளிமையான ஒன்று...!"*
Shared Post :

கிருஷ்ணனிடம்  போகலாமா?
இது  ஒரு  சுவாரஸ்யமான  விஷயம்.  நம்  ஊரில்  எண்ணற்ற  சிதம்பரம்,   பழனி,  மதுரை போன்றவர் இருப்பது  போல மலையாள  தேச த்தில்   வீட்டு பேரில்  நிறைய  பேர்  இருக்கிறார்கள். மலப்புரம் அருகே  கீழாத்தூர்   என்கிற ஊரில் இப்படி  பூந்தானம்  என்ற வீட்டு பெயர் கொண்ட  ஒருவர்  இருந்தார்.  அவருக்கு  பெற்றோர்  வைத்த  பெயர்  காணாமல் போய் விட்டது. பரம  கிருஷ்ண பக்தர்.  பக்கம் பக்கமாக  நிறைய  கிருஷ்ணன்மீது  இனிமையாக  மலையாளத்தில்  ஸ்லோகங்கள் எழுதியவர்  பாவம் ஒரு  குறை  அவருக்கு  வெகுநாளாக.   மடியில்  வைத்து கொஞ்ச  ஒரு  பிள்ளை  இல்லையே?.கிருஷ்ணனிடம் முறையிட்டால்  வீண் போகுமா?  ஒரு  பிள்ளை பிறந்தான்.  அவனுக்கு  தக்க  பிராயத்தில்  அன்ன  பிராசனம்  ஏற்பாடு தடபுடலாக நடந்தது.  சில நேரங்களில்  நமது  வாழ்க்கையில்  கொஞ்சம்  கூட   எதிர் பாராத சில  நிகழ்வுகள்  ஏற்பட்டு நாம்  நிலை குலைந்து  போகிறோமல்லவா?   இத்தகைய  ஒரு  இக்கட்டான  சூழ்நிலை பூந்தானத்தையும்  விடவில்லை.
சொந்தம், சுற்றம்,  அக்கம் பக்கம்  எல்லாரையும் கூப்பிட்டு அனைவரும் அனைவருமே  வந்தாயிற்று.  ஜே ஜே  என்று ஜனங்கள் எல்லாரும்   கூடியிருக்க  அன்ன பிராசனம்  நடக்க வேண்டிய  நேரத்துக்கு  ஒரு  மணி  முன்பாக  அந்தகுழந்தை  இறந்து விட்டது.  எவ்வளவு  பேரிடி.  எப்படி பட்ட  சோகம்??
என்னப்பனே  கிருஷ்ணா  என்னடா  இது?  கதறினார்  பூந்தானம் கிருஷ்ணனிடம்.
குருவாயுரப்பன் என்ன   செய்தான்?  “பூந்தானம்  கவலையே  வேண்டாம்  நானே உங்கள்  பிள்ளை  எங்கே  உங்கள்  மடி”  என்று அவர் மடியில் வந்து அமர்ந்து கொண்டான்.  படுத்து கொள்ளட்டுமா”  என்றான்.   தன்னை மறந்து   ஆனந்த பரவசத்தில்   பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து  தெள்ளிய  எளிய  மலையாள  கவிதை  பிறந்தது.
"நம்  உள்ளத்தில்  என்றும் வந்து  நடமாட  கிருஷ்ணன்  இருக்கும் போது   தனியாக நமக்கு  என்று  ஒரு  பிள்ளை எதற்கு ?"  கடல் மடையென்ன  கவிதை பிறந்து  அனைவரும்  அந்த  பக்த ரசத்தில்  மூழ்க  இது  ஒருவருக்கு  பிடிக்க வில்லை.  பிரபல  மேல்பத்தூர்  நாராயண  பட்டாத்ரி  தான் அவர்.   குருவாயுரப்பன் மீது  நாரயணீயம்  எழுதியவர். அவர்  பூந்தானத்தை  இவனெல்லாம்  ஒரு கவிஞனா  சம்ஸ்க்ரிதம் தெரியாதவன்,  இலக்கணம் தெரியாதவன்  என்று இகழ்ந்தார்.  குருவாயூரில்  குடிகொண்டுலா  நமது  கிருஷ்ணனுக்கு  இது  பிடிக்கவில்லை  ஒருநாள்  பட்டாத்ரி
தன்னை காண வந்தபோது  "பட்டாத்ரி நான்   சொல்கிறேனே என்று  வருத்தபடாதே   எனக்கென்னமோ உன்  ஸம்ஸ்க்ரித இலக்கணம்  தோய்ந்த  ஸ்லோகங்களை காட்டிலும்  பூந்தானத்தின்  மலையாள பாஷையில் உள்ள   பக்தி பூர்வ ஸ்லோகங்கள்  ரொம்ப  பிடிக்கிறதே  என்ன  செய்ய"  என்றான்  கிருஷ்ணன்.   அதற்கப்பறம்  பட்டாத்ரி ஓடி  சென்று பூந்தானத்தின்  காலில்   விழுந்து மன்னிக்க வேண்டினார்  என்பது   சாதாரண விஷயம்.
பாகவதத்திலும்  கிருஷ்ண கானத்திலும்  காலம்  ஓட  ஒருநாள்  கிருஷ்ணன் பூந்தானத்தை  இனி தன்னுடன் வைத்துகொள்ள  ஆசை மேலிட  ''என்னிடம்  வா''  என்று  அழைத்தான்.  பரம  சந்தோஷம் அவருக்கு.    யார் யார்  எல்லாம்  என்னோடு  கிருஷ்ணனிடம்  வருகிறிர்கள்  என்ற  அவர் அழைப்பை  கேட்ட அன்பர்கள்  தலை தெறிக்க  ஓடிவிட்டனர்.  அவர்   வீட்டில்  பணிபுரிந்த  ஒரு  பெண்மணி   ''அய்யா  என்னையும்  கிருஷ்ணனிடம்   அழைத்து செல்கிறீர்களா?'' என்று  வேண்டினாள்.  குறித்த   நேரத்தில்  உடலோடு  பூந்தானமும்  அந்த  பெண்மணியும்   கிருஷ்ணனோடு ஒன்றற கலந்தனர்
பக்தியை வெளிப்படுத்த  மொழியோ இலக்கணமோ  தேவையில்லை. உள்ளத்தில்  எண்ணம்  ஒன்றே  போதுமே