ஞாயிறு, 7 ஜூன், 2020

இதுவா ஆலயம் தொழும் வழிமுறை?

இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன்,
சனிக்கிழமைகளில், சிவாலயங்களில் கூட்டம்
நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா
என்று, நம் மனதுக்குள் உற்சாகம்
தொற்றிக்கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால் ...

என்னடா இது? நமக்கு முன்னே இங்கே
நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே
இறைவன் திருமுன்பில் (சந்நிதி) யாரையுமே
காணவில்லையே? வந்த கூட்டம் எங்கே? மாயமாய் மறைந்து போனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போது தான் கூட்டமே தென்படுகிறது. அடடா, என்னே அதிசயம்!

இராகுகால துர்க்கை, தெற்குக் கோட்டத்து
தட்சிணாமூர்த்தி, நவக்கிரகத் திருமுன்பில்
எள்விழ இடமில்லை!

ஆகா…..நவக்கிரக திருமுன்பில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளென்ன? நல்லெண்ணெய் தீபமென்ன? ஒன்பது முறை பிரதட்சிணமென்ன? இத்யாதி... இத்யாதி...

நிமிடத்திற்கு ஓர் அலங்காரம், விநாடிக்கு ஓர்
அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள்
எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள், அவரவர் கிழமைகளில்!

ஆனால், இங்கே, மூலமூர்த்தி திருமுன்போ?
சுத்தம்! ஒரு ஈ, காக்கை கூட இல்லை!

என்ன தானய்யா  நடக்கிறது இங்கெல்லாம்?

நீங்கள் வழிபடும் சிவனை விட  சக்தி
வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?

"நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கிய
நாவுக்கரசர் பரம்பரையில் வந்தவர்கள்;
“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே” என்று
உரத்துச்சொன்ன சம்பந்தர் மரபில்
வந்தவர்கள் சில்லாண்டிற் சிதையும் சில சிறு தேவர்களை நாடிப்போய் வீழ்ந்து கிடப்பது நியாயந்தானா?

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை!

நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க
தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி, உங்களுக்கு மிகுந்த சோதனைக்காலம் இது; தக்க தோஷபரிகாரம் செய்தேயாகவேண்டும்,
இல்லையேல், அவ்வளவு தான் என்றுகூறி அவர்களைத் தவறாக வழிநடத்தும் சில பிரபல ஆன்மீக வியாபாரப் பத்திரிகைகள், ஆன்மீக வியாபாரப் பேச்சாளர்களைத்தான் சொல்லவேண்டும்!

சோதிடம் ஒரு அருங்கலை! மறுப்பேயில்லை!

நல்லதோ, கெட்டதோ, நடக்கப்போவதை
அறிந்துகொள்ளும் ஆவலில், சோதிடர்களை
நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல
நாள் பார்க்க, அவர்களைத்
துணைக்கழைப்பதையோ, தவறென்று
கூறவில்லை. ஆனால், திருக்கோயில்
வழிபாடுகளிலேயே சோதிட நம்பிக்கை
மூக்கை நுழைப்பதை எந்த வகையிலும்
ஏற்றுக்கொள்ளவே முடியாது!

ஆயிரத்துமுன்னூறு வருடங்களுக்கு முன்பே
சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா!

இறைநம்பிக்கை கொண்ட அடியாரை, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று; பிறகேன் இத்தனை அச்சம்?

ஆழ்ந்துபார்த்தால் ஒன்று மட்டும்
தெளிவாகிறது. இப்படி தோஷ பரிகாரம்,
கிரகப்பெயர்ச்சி, என்று ஆயுளைக் கழிக்கும்
எல்லோருமே, தன்னம்பிக்கை அற்றவர்கள்!

எடுத்ததற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்கள்!

யாரையும் ஏளனம் செய்வதற்காக இதைக் கூறவில்லை!

தயவு செய்து உண்மையை உணர்ந்து
கொள்ளுங்கள்.

இறைவழிபாட்டைப் பொறுத்தவரை, நம்
சமயத்தில் முழு எழுவரல் (சுதந்திரம்)
இருப்பது உண்மை தான். அதைத் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள்! தவறாகச் செயல் படுத்தாதீர்கள்! இது தான் இதன் உட்பொருள்.

மிகப்பழைய ஆலயங்களுக்குச்
சென்றீர்களானால், அங்கே நவக்கிரகத்
திருமுன்புகளே இராது! அப்படி இருந்தால் அது பிற்சேர்க்கையாகத்தான் இருக்கும்! 500
வருடங்கட்கு முன்பு எந்தச் சிவாலயத்திலுமே நவக்கிரக சந்நிதிகள் இருந்ததில்லை என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்தந்த சிவாலயத்தில் அந்தந்த  மூர்த்தியும் உடனாய அம்பிகையும்  மட்டுமே  பிரதிஷ்டை  செய்யப்படிருந்தன. கோஷ்டங்களில், ஆகம விதிப்படி அமையவேண்டிய தெய்வங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. தேவர்கள் யாராவது அந்த ஆலய இறைவனை வழிபட்டு நன்மை பெற்றதாகத் தலவரலாறு இருந்தால் அந்த மூர்த்திக்குத் தனி சந்நிதி அமைக்கப் ப்படலாம் : திருவாஞ்சியத்தில் யமன்; திட்டை,  குருபகவான்; கஞ்சனூர், சுக்ரன் இத்யாதி. இத்தனித் திருமுன்பு அந்தந்த தெய்வத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவம் என்று மட்டுமே கருத வேண்டுமேயன்றி, மூலவருக்கு ஈடாக அவரை ஒருபோதும் கருதலாகாது. சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான திருநள்ளாறு -  இன்று சிவன்கோயில் இல்லை! அது சனிபகவானின் பரிகார ஸ்தலம்! திங்களூர் சந்திரன் கோயில்! வைத்தீசுவரன் கோவில், செவ்வாய் கோயில்! இப்படித்தான் இன்று அவை பிரபலம்பெற்று விளங்குகின்றன.

நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக்
கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற
வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரி
யவை! அவை ஒரு மானிடனின் பிறப்பு முதல்
இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை!

உண்மைதான்!

ஆனால், ஆணை செலுத்துபவனிடமே
அடைக்கலம் புகுந்தால், அவை நம்மை என்ன
தான் செய்யமுடியும்? அதை விடுத்து,
கிரகங்களை மட்டுமே ஆராதிப்பது, நமக்கு அருளக் காத்திருக்கும் இறைவனை அவமதிக்கும் செயல் ஆகும் அல்லவா? இன்று தேனுபுரீஸ்வரம் என்னும் பட்டீஸ்வரத்திற்குச் செல்வோர் பலர் அங்குள்ள துர்க்கையை மட்டுமே வழிபட்டுவிட்டு, பட்டீஸ்வரரைக் கண்டுகொள்ளாமலே வருவது கண்கூடு. இத் தலத்தில்தான் இறைவன் ஞானசம்பந்தருக்கு முத்துச்சிவிகை அளித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

கோளறு பதிகம், திருநீலகண்டப் பதிகம் போன்ற பனுவல்கள்  நமக்குற்ற எத்தகைய ஆபத்துக்களையும் நீக்கக் கூடியவை.  அவற்றைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டால் நாளென் செயும்? கோளென் செயும்? வினை தான் என்செயும்? நல்லதே நடக்கும். நால்வர்
நூல்களை நாளும் ஓதி, மூலவரான
சிவபெருமானை வழிபடுவதை விட நம் இடர்
களைவதற்கான உபாயம் வேறு ஏதுமில்லை
என்பதை நன்றாக நினைவில் வைக்கவும்.
மூலமூர்த்தியை வழிபட்ட பின் தான்
நவகிரகங்களை வழிபட வேண்டும். இதில் மாற்றம் இல்லை. சிவபெருமானை விடுத்துச் செய்யும் நவக்கிரக வழிபாட்டால் யாதொரு பலனும் இல்லை.

தோஷநிவர்த்தி, பரிகாரம், அது, இது என்று
கொட்டும் பணத்தில் ஒரு பங்கையாவது வசதிகுறைந்த சிவாலயங்களின் பராமரிப்பு நிமித்தமும், சிவனடியார் பொருட்டும் செலவழித்தால் சிவபுண்யம் பல்கிப்பெருகி,
இம்மையிலும், மறுமையிலும் நமக்குற்ற நல் இன்பம் தருமல்லவா? வரியோர்க்கு உதவுதல் எத்தனை பெரிய தர்மம்? அன்ன தானம், வஸ்திர தானம் என, அடியார்க்குச் செய்யும் தொண்டுகள் ஆண்டவனையே சென்றடைவதாக அல்லவா திருமூலர் கூறுகிறார்? "நடமாடக்கோயில் நம்பர்க்கு ஒன்றீயின் / படமாடக்கோயில் பகவற்கதாமே"
இறைவன் நம்பக்கம் இருந்தால் நம்மை எந்த சக்தியால் தான் எதிர்க்க இயலும்? சிந்திப்பீர்!

(முகநூல் நண்பர்களுக்காக : ய. விஷ்வநாத் தாஸ்)
இது என்னுடைய பழைய கட்டுரை. மறுபடியும் புதிய நண்பர்களுக்கு வேண்டி மறு பதிவிடுகின்றேன்.

ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும் :-

ஹிந்து தர்மத்தில் மிக நீண்டகாலமாகப் போற்றப்படும் பழம்பெரும் வழிபாடுகளுள் ஸ்ரீருத்ரவழிபாடும் முதன்மையானது. வேதங்களிலும், மஹாபாரதம், இராமாயணம் முதலாய இதிஹாசங்களிலும் சிவபெருமானே ஸ்ரீருத்திரர் என்று கூறப்படுகிறார். ருத்திரசேனைக்கு அவர் தலைவராக இருப்பதால், மஹாருத்திரர் என்றும் குறிப்பிடப்படுகிறார். பொதுவாகவே, ருத்ரர் என்ற சொல் சிவப்பரம்பொருளையே குறிப்பதாயினும், அது பலருக்கும், பல குழுக்களுக்கும் பெயராக இருந்துள்ளமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

சைவாகமங்களிலும் சைவசித்தாந்தமரபிலும், பரசிவத்திலிருந்து தோன்றியவர்களே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐம்பெரும் மூர்த்திகள் இவர்களே முறையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களையும் ஆற்றுவதாயும் சித்தாந்தவிளக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும், சைவதந்த்ரங்கள் இந்த உலகம் காலாக்னி ருத்ரரினின்று தோன்றியதாயும், இறுதியில் அவரிலேயே ஒடுங்கும் என்றும் குறிப்பிடுவதாயும் தெரிகின்றது.

ஒருவரா..? பதினொருவரா..? பலரா..?

சிவபுராணங்களில், பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு பிரம்மனுக்கு உதவியாக இருப்பதற்காக சிவபெருமான் பிரம்மாவின் நெற்றியிலிருந்து ருத்திரர்களைப் படைத்ததாக கூறுகின்றன. இவ்வாறு தோன்றியவர்கள் “ஏகாதசருத்ரர்கள்” என்ற
பதினொரு பேராவர். சாக்ததந்திரங்களில் இந்த ருத்ரர்கள் மஹாசக்தியின் காவல் தேவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இந்த வகையில் ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுர சுந்தரியின் ஸ்ரீசிந்தாமணி கிரகத்தைக் காவல் புரியும் எண்ணில்லாத ருத்ரர்கள் பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது.

வேதத்தில் ருத்திரர்களைப் போற்றும் பகுதி ருத்ரீயம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர, மானிடர்களும் தம் தவவலிமையால், உருத்திரகணத்தவராயினர் என்றும் அறிய முடிகின்றது. இவர்களிடையே பலகுழுக்கள் காணப்பட்டதால், அவர்கள் “உருத்திரபல்கணத்தர்” எனப்பட்டனர்.

உருத்திரர் என்பது தமிழா? சம்ஸ்கிருதச்சொல்லா..? என்பதே பேராய்விற்குரிய ஒன்றாகும். தமிழில் ‘உரு’ என்றால் மேலான என்றும், திரம் என்றால் வழி என்றும் பொருள்கொண்டு உருத்திரர் என்றால், மேலானவழிச்செல்ல முயல்பவர்கள் என்று காட்டுகின்றனர்.

இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்கண்ணர்’ என்ற நாமம் உண்டானது. முன்பு இருந்து மறைந்ததாக கருதப்படும் ‘லெமூரியா’ என்ற கடல் கொண்ட தமிழ்மண்ணில் வாழ்ந்த பலருக்கும் நெற்றிக்கண் இருந்தது என்றும் அவர்களே ‘உருத்திரர்’ எனப்பட்டனர் என்றும் கூட, சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வடமொழியில் ருத்ரன் என்றால், ‘அழச்செய்பவன்’ என்பது பொருளாகும். யாரை..? என்ற வினா எழும்புகிற போது, தீயவர்களை என்று குறிப்பிடுவர். இதைவிட, ருத்ரன் என்பவன் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் குறிப்பிடுவர்.

இதனைக் கந்தபுராணம்

இன்னலங்கடலுள் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரமமூர்த்தி உருத்திரனெனும் பேர் பெற்றான்
என்கிறது.

பதினொரு ருத்ரர்

ஒரு சமயம் பிரமனால், படைப்புத் தொழிலைச் செய்ய இயலாது போயிற்று. அவன் சோர்ந்து விழுந்து இறந்த போது, அவனது உடல், பரசிவனருளால் பதினொரு கூறாகி எழுந்ததென்றும் அப்பதினொரு கூறுமே ஏகாதச ருத்ரர்கள் என்று மத்ஸயபுராணம் குறிப்பிடுகின்றது.

வேறு நூல்களில் இந்த வரலாறு சிறிது வித்தியாசமாக சொல்லப்படுகிறது. பிரமனின் வேண்டுகோளின் படி சிவனால் பிரமனது நெற்றியிலிருந்து பதினொரு ருத்ரர் உருவாக்கப்பட்டனர். அவர்களினைக் கண்ட பிரமன் மயக்கமுற அவர்களே  தாமே படைப்புத்தொழிலைச் செய்யத்தொடங்கினராம். ஓவ்வொரு ருத்திரரும் கோடி ருத்ரரைப் படைக்க, பிரமன் சோர்வு நீங்கி எழுந்த போது, அங்கே பதினொரு கோடி ருத்திரர்கள் காணப்பட்டனராம்.. இதனால், வெகுண்ட பிரமன் சிவனிடம் அழுது விண்ணப்பம் செய்தான்.

எனவே, சிவபெருமான் ருத்ரர்களை அழைத்து படைப்புத்தொழிலைத் தொடர வேண்டாம் என்று கட்டளையிட்டு, அவர்களுக்கென்று, புதிய உலகம் ஒன்றைப்படைத்து அங்கே சென்று வாழக்கட்டளையிட்டருளினார்.. இந்த ருத்ரர்கள் வழிபாடு செய்த லிங்கங்களை “ருத்ரகோடீஸ்வரர் என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த ருத்திரர்கள் தம் உலகிற்கு அப்பாலும் போர்த்தொழில் செய்யும் வீரர்களிடமும் அவர்களின் ஆயுதங்களிலும், அவர்களின் கோபத்திலும் வந்து தங்குவதாயும் குறிப்பிடப்படுகின்றது.

இவர்களுக்கு உருவம் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை. இவர்களை குறிக்க பதினொரு லிங்கங்களை அமைத்துப் பூஜிக்கும் வழக்கமே காணப்பட்டது. என்றாலும், காஞ்சி கைலாசநாதர் கோவிலில் “ஏகாதசருத்ரரின்” சிற்பங்கள்
காணப்படுகின்றன.

இவர்களின் பெயர்கள் முறையே மஹாதேவன், ஹரன், ருத்ரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசானன், விஜயன், பீமதேவன், பவோத்பவன், கபாலி, சௌம்யன் என்பனவாகும்.

இவர்கள் வழிபட்ட லிங்கங்களில் முறையே தோமரம், கொடி, வாள், வஜ்ரம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டு, வில், மழு ஆகிய ஆயுதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகின்றது.

ஸ்ரீமத் பாகவதத்திலும் ருத்ரர்களின் வரலாறு சிறிது வித்தியாசமாகப் பேசப்பட்டிருக்கிறது. அவர்களின் பெயர்கள் அஜர், ஏகபாதர், அக்னிபுத்திரர், விரூபாட்சர், ரைவதர், ஹரர், பகுரூபர், த்ரியம்பகர், அசுரேசர், சாவித்ரர்,சயந்தர் என்பனவாகும்.

திருக்கச்சி ஏகம்பரைப் போற்றிய திருநாவுக்கரசர்

“விரைகொள் மலரவன் வசுக்கள் “ஏகாதசர்கள்” வேறுடைய
இரைக்கும் அமிர்தக்கரிய ஒண்ணா எங்கள் ஏகம்பனே”

என்று பாடுவதால், ஏகம்பரை ஏகாதசருத்திரர்கள் போற்றி வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகின்றது

சதம் என்றால் நூறு. இந்தவகையில் எண்திசையிலும், ஆகாயத்திலும், பாதாளத்திலுமாக திசைக்குப் பத்துப்பேராக விரிந்து நிற்கும் நூறு ருத்திரர்களை “சதருத்ரர்கள்” என்று குறிப்பிடுகின்றனர். இந்த நூற்றுவரின் பெயர்களும் பல நூல்களில் காணப்படுகின்றன. வேதங்களும் இவர்களைப் போற்றுகின்றன. இவர்கள் கடல் மீதும் ஆகாயத்திலும் பயணம் செய்ய வல்லவர்கள். மான், மழு தரித்தவர்கள், சிவனைப் போன்ற உருவத்தினர் என்று பலவாறாக கருதப்படுகின்றது.

வேதங்களில் இந்திரன் முதலியவர்களைப் பற்றிக்குறிப்பிடும் போது, நம: என்ற சொல் பெயருக்குப் பின்னே குறிப்பிடப்படுகின்றது. ஆனால், அதே வேதங்கள் ருத்ரரைக் குறிப்பிடும் போது முதலில் வணக்கமாகிய “நம:” என்று சொல்லி அதன் பின் நாமத்தைச் சொல்வதையும் அவதானிக்கலாம். ஆனால், இந்த வேதப்பகுதிகள் யாவும் மூலருத்ராகவும் ஸ்ரீருத்ரராகவும் விளங்கும் மஹாருத்ரரான சிவப்பரம்பொருளையே சுட்டும் என்பதே வைதீகசைவர்களின் நம்பிக்கை.

சிவனால், அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்டது பாசுபதாஸ்திரம், ஆனால், சிவனால் முருகனுக்கு வழங்கப்பெற்றது “ருத்ரபாசுபதாஸ்திரம்” என்ற மஹாஸ்திரம் என்று கந்தபுராணம் சொல்வதும் இங்கு சிந்திக்கத்தக்கது.

ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரஜெபமும்

திரயீவித்யா என்ற ரிக்,யஜூர், சாமம் என்ற மூன்று வேதங்களுக்கும் நடுவில் இருப்பது யஜூர்வேதம். அது சுக்லயஜூர்வேதம், கிருஷ்ணயஜூர்வேதம் என்று இரண்டு பிரிவாகிறது. அதில் கிருஷ்ண யஜூர்வேதத்தின் நடுவில் ஏழு
காண்டங்கள் கொண்ட தைத்திரீய சம்ஹிதையில் நடுவிலுள்ள நான்காவது காண்டத்தில் ஐந்தாவது ப்ரச்சனமாக இருக்கிறது ஸ்ரீருத்ரம்.

இந்த ஸ்ரீருத்திரத்தில் 11 அனுவாகங்கள் உள்ளன. இது ஸ்ரீ ருத்ரம், மஹாருத்ரம், சதருத்ரீயம், நமகம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீ ருத்ரத்தின் நடுவில் சிவ நாமம் பதிந்திருப்பது அற்புதத்திலும் அற்புதமாகும்.

நீரில் நின்று கொண்டு ஸ்ரீ ருத்ரம் சொன்னால் மழை வர்ஷிக்கும் என்பது நம்பிக்கை. இதனை சிவலிங்க அபிஷேகத்திலும், சிவபூஜையிலும் தவறாமல் பயன்படுத்தி வருவார்கள்.

பலரும் இதனை தமிழில் மொழிபெயர்க்கவும், அதே போல, கவிநடையிலேயே தமிழ் வடிவம் பெறச்செய்யவும் முயன்று வந்திருக்கிறார்கள். சைவர்களின் முக்கியமான ஒரு பிரமாணமாகவே ஸ்ரீ ருத்ரத்தை நாம் தரிசிக்கலாம்.
திருநாவுக்கரசு நாயனார் பாடிய நின்ற திருத்தாண்டகமும் தமிழில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் என்று போற்றப்பட்டு வருகின்றது.

ருத்ர பாராயண கிரமத்தில், ஸ்ரீ ஏகாதசருத்ரீயம், ருத்ரஏகாதசீ, மஹாருத்ரம், அதிருத்ரம் என்கிற விசேடமான விரிவான பலர் கூடி பாராயணம் செய்யும் மரபுகளும் வைதீக சைவர்களின் வழக்கில் விரவிக்காணப்படுகின்றன.
இப்போதெல்லாம் சிதம்பரம் முதலிய திருக்கோவில்களில் ஏகாதசருத்ரஹோமம் போன்றவை மிகவும் பிரபலமடைந்துள்ளன. இதற்கு காரணமாக உடனடியாக பலனும், சிவனருளும் கிடைப்பதாகச் சொல்லப்படுகின்றது.

பெரிய புராணத்தில் ‘உருத்திரபசுபதி நாயனார்’ என்பவரும் 63ல் ஒருவர். இவர் ருத்ரம் ஓதியே நாயனார்களில் ஒருவரானவர். அதைத் தவிர ஆலய வழிபாடுகளோ, அடியார் வழிபாடுகளோ கூட இவர் செய்ததாகச் சொல்லப்படவில்லை. ஆக, இவர் வரலாறு ருத்ரம் ஓதுதலில் சிறப்பை உணர்த்தவே பெரிய புராணத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ருத்ரவீணை, ருத்ரபிரியாகை, ருத்ரபர்வதம், ருத்ரரிஷி துர்வாஷர், சதுர்த்தசீ ருத்ரவிரதம் , ருத்ரபட்டம், ருத்ராக்னி, ருத்ரதீபம், போன்றவையும் ருத்ரம் சார்ந்து சிந்திக்க வேண்டியனவே.

ருத்ரர் வழிபாடு

ருத்ரமூர்த்திக்கு ஆலயங்கள் , சந்நதிகள் அமைந்திருப்பது மிகவும் குறைவு. என்றாலும் திருமாணிக்குளி பீமருத்ரர் ஆலயம் ருத்ரருக்கான ஆலயங்களில் பிரபலமானது. கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியில் அம்புஜாட்சி உடனாய வாமனபுரீஸ்வரராலயம் அமைந்துள்ளது.

இங்கு கருவறையின் முன்பு திரையிடப்பட்டு நீலவண்ணத்தாலான அத்திரையில் சிவப்பு வண்ண நூலால் ‘பீமசங்கரர்’ என்ற பீமருத்ரரின் திருவடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். சிறப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடைய இந்த ருத்ரரின் திருவடிவம் அக்னிஜ்வாலையுடன் எட்டுக்கரங்களுடன் காணப்படுகின்றது. இக்கோவிலில் நடத்தப்படும் நான்கு கால பூஜைகளும் இந்த திரையிலுள்ள பீமருத்ரருக்கே நடத்தப்படுகின்றன. பூஜை முடிந்ததும் உள்ளே உள்ள சிவலிங்கத்திருமேனிக்கு தீபாராதனை மட்டுமே செய்யப்படுகிறது. இத்தகு புதுமையான வழிபாட்டிற்கு பல புராணக்கதைகளை அத்தலபுராணம் பேசுகிறது.

இதே போல, திருக்குடந்தை என்ற கும்பகோணத்தில் நாகநாதசுவாமி கோவிலில் பிரளயகாலருத்ரருக்கு திருவடிவம் அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. திருவெண்காட்டில் அகோரருத்ரருக்கு அழகான பெரிய வடிவம் உள்ளது. அதே போல, திருவண்ணாமலையில் காலாக்னிருத்ரர் சந்நதி இருக்கிறது. ஆனால், அம்மூர்த்தியை பைரவர் என்றே அழைத்து வழிபாடாற்றுவதாயும் தெரியவருகின்றது.

இதே போல, பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹாதேவன் என்ற அஷ்டருத்ரருக்கும் திருக்கடவூரில் திருமாளிகைச்சுற்றில் திருவுருவங்கள் உள்ளதாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் அத்திருவடிவங்களின் மேல் அஷ்டவசுக்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதாயும் தெரியவருகிறது. ஆனால், சிலர் அஷ்டபைரவர்களையும் வேறு சிலர் சிவனுடைய ஆஷ்டு வித்யேஸ்வரரையுமே அஷ்ட
ருத்ரராக கருதுகின்றனர். எனவே, இது தொடர்பில் ஆய்வுகள் நடைபெற வேண்டிய தேவையுள்ளது.

மயானத்தில் சிவபெருமான் ருத்ரதாண்டவம் செய்வதாக குறிப்பிடப்படுகிறது. இங்கே காட்டப்படும் மய என்பதற்கு உருவாக்குதல் என்றும், அயனம் என்பதற்கு தொடர்ந்து செல்லுதல் என்றும் பொருள். இதனை ஸ்மசானம் என்ற சொல்லால் குறிப்பது தவறு என்றும் பெரியவர்கள் காட்டுவர். இதனால், உருத்திரசமயிகளும் பாசுபதர்களும் தம் வழிபாட்டிடங்களை மாயானம் என்று சொன்னார்கள் என்றும் தெரிய வருகின்றது. கச்சிமயானம், திருக்கடவூர்மயானம்,
வீழிமயானம், காழிமயானம், நாலூர் மயானம் என்ற ஐந்து மயானங்கள் சிவவழிபாட்டாளர்களுக்கு முக்கியமானவையாக காட்டப்படுகின்றன.

இதே போல, ருத்ரவழிபாடுகள் ஈழத்தில் நடைபெற்றமைக்கான ஆதாரங்கள் இப்போது இல்லாதவிடத்தும், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஸ்தலங்களை அடுத்து ருத்ரமயானங்கள் அருகில் காணப்படுவதும், அருகிலேயே ஆலய தீர்த்தம் உள்ளதும், அங்கெல்லாம் ருத்ரவழிபாடு நடந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் என்ற ஊரில் மயானத்திற்கு மிக அண்மையாக, மயானத்தை நோக்கிய வண்ணம் பெரியதொரு சிவாலயம் இராஜகோபுரத்துடன் காணப்படுவதும், ருத்ரவழிபாட்டுடன் இணைத்து சிந்திக்க வைக்கிறது. இதனை
விட, பிற்காலத்தில் இங்கிருந்த ருத்ரவழிபாடு பைரவ வழிபாட்டுடன் கலந்திருக்கலாம் என்றும் எண்ண முடிகின்றது.

ஆக, ருத்ரர் பற்றிய விளக்கங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அது பற்றிய பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் ருத்ரரை சிவனுடன் இணைத்தும், கலந்தும், பேதப்படுத்தியும் மாறுபட்டும் சிந்திக்கும் நிலைமைகளும் விரவிக்கிடக்கின்றன. எனவே, ருத்ரர் பற்றியும் ஸ்ரீ ருத்ரம் பற்றியும் ஆய்வுகள் மேம்படவேண்டும். இது வரை ஆய்வுகள் நடைபெற்றிருந்தால் அவை பிரபலப்படுத்தப்பட வேண்டும். அதன் வாயிலாக, சைவத்தமிழ்ச்சான்றோர்கள் ருத்ரர் பற்றிய தெளிவு உண்டாக வழி செய்ய வேண்டும்.

தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையார போற்றி போற்றி.
திருச்சிற்றம்பலம்

சனி, 6 ஜூன், 2020

குரு பார்வை கோடி நன்மை !!!

ஒருமுறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான்.

அவர் தனக்கு தெரிந்ததை எல்லாம் அவனுக்கு கற்று கொடுத்தார்.

சந்திரன் அதனைக் கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான்.

சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான்,

பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் சரியாக கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.

சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான்.

அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான்.

ப்ரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார்.

அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன.

சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.

குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது.

தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க,

குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது.

திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி,

மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க,

பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.

தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய,

குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது.

குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.

அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது.

சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

தன் கணக்கு சரியாகவே இருந்ததுபோலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.

ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது?

குழந்தை எப்படிப் பிழைத்தது?

தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது.

புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார்

ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்?

சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான்.

ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தபோதும், கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை உணர முடியும்.

குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.

சில நேரங்களில் நமது குரு (ஆசாரியன் பார்வை ஆசி பூரணமாக நம்மிடம் இருந்தாலும்) கடாச்சம் கூட கோடி நன்மை தரும். எனவே

எப்பொமுதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஆசாரியனை சேவிக்க சென்று வருவோம்- காரணமே இல்லாவிட்டால் கூட.

 *ஆசாரிய தேவோ பவ:*
ததீசி _ இந்திரன்
வஜ்ராயுதம்
பரம் வீர் சக்ரா

ததீசி முனிவர் வேத கால மகாரிசிகளுள் ஒருவர்.

இவர் அதர்வண மகரிஷி மற்றும் சிட்டி தேவி ஆகியோரின் மகனாவார்.
அதர்வண வேதத்தை தந்தவர் அதர்வண மகரிஷி ஆவார்.

இவரது மனைவியின் பெயர் சுவர்ச்சா.

ததீசி - சுவர்ச்சா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்
பிப்பலாத மகரிஷி ஆவார்.

ததீசி முனிவர் மிகச்சிறந்த சிவபக்தர்.

அவர், தம் மனைவியுடன் பல்லாண்டு காலம் நைமிசாரண்யத்தில் இன்றைய லக்னோ உத்திரபிரதேசம் அருகே பல காலம் தவம் புரிந்து சிவனைப் பூஜித்து வந்தார்.

ஒருநாள் க்ஷுவது என்ற மன்னனுடன் கருத்து வேறுபாடு காரணமாக இவர் போர் புரியும் சூழல் ஏற்பட்டது.

போரில் இவர் க்ஷுவது மன்னனின் பின்னந்தலையை தாக்க அவன் மூர்ச்சித்து வீழ்ந்தான்.

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து முன்பை விட உக்கிரத்துடன் போரிட்டான்.

ததீசியின் உடலை க்ஷுவது மன்னன் பிளந்தான்.

ததீசி முனிவர் சுக்கிராச்சாரியாரின் உதவியை நாட அவர், இவரது காயங்களை தனது யோக சக்தியினால் குணப்படுத்தினார்.
உடலை சீர்படுத்தினார்.

பின்னர் இவருக்கு மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார்.

இருப்பினும் செய்த தவறுக்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்.

இவரது தவத்தை கண்டு இரங்கிய சிவபெருமான் இவருக்கு காட்சி தந்து

1) இவரது எலும்புகள் வஜ்ஜிரத்தை (மின்னல்) போல உறுதியுடையதாக ஆகட்டும்.

2) இவரை எவரராலும் கொல்ல முடியாது

3) இவரை எவரும் துன்புறுத்தவும் முடியாது.

என்ற வரங்களை வழங்கினார்.

பாற்கடலில் அமுதம் கடைவதற்காக தேவர்களும், அசுரர்களும் முடிவு செய்தனர்.

தேவர்களும் தங்களின் ஆயுதங்கள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தேவரிஷி நாரதர் “தேவர்கள் தங்களின் ஆயுதங்களைப் ததீசி முனிவரிடம் கொடுத்து பாதுகாக்க சொல்வதே சிறந்தது” என்று கூறினார்.

தேவர்களும் தங்களின் ஆயுதங்களை ததீசியிடம் கொடுத்து “நாங்கள் திரும்பி வந்து கேட்கும் வரை ஆயுதங்களை பாதுகாக்க வைத்திருங்கள்” என்று கூறினர்.

முனிவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆயுதங்களை தன்வசம் வைத்துக் கொண்டார்.

பாற்கடலை கடைந்த பின்பு வந்த அமிர்தத்தை தேவர்கள் பருகி சீரஞ்சீவி ஆயினர். தங்களின் ஆயுதங்கள் குறித்து மறந்து போயினர்.

ததீசி முனிவரும் தேவர்களிடம் அவர்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தார். நாட்கள் நகர்ந்தன. தேவர்கள் திரும்பி வரவில்லை.

ததீசி முனிவரும் தேவர்களின் ஆயுதங்களை பாதுகாக்க முடியாமல் தனது
தவ வலிமையால் அவற்றை திரவமாக்கி குடித்து விட்டார். தேவ ஆயுதங்களின் சக்தி முழுவதும் முனிவரின் முதுகெலும்பில் போய் சேர்ந்தது.

இந்நிலையில் விருத்தாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனுடைய தவத்தினைப் பாராட்டி பிரம்மதேவர் அவர் முன் தோன்றினார்.

அவரிடம் இருந்து அசுரன் “எனக்கு உலகின் உலோகம் மற்றும் மரத்தால் ஆன ஆயுதத்தாலோ, பஞ்சபூதத்தாலும், எந்த உயிரிகளாலும் ஆபத்து ஏற்படக் கூடாது” என்ற வரம் வேண்டும் என்று கேட்டான்.

பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அருளினார்.

பிரம்மாவின் இந்த வரத்தால் மிகவும் கர்வம் கொண்ட விருத்ராசுரன் அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான்.

யாராலும் அவனை வெல்ல இயலவில்லை. ரிஷிகள் தேவர்களும் கூட அவனை வெல்ல முடியாமல் திகைத்தனர்.

எந்த ஆயுதம் கொண்டு அவனைத் தாக்கினாலும் மரணம் கிடையாது என்ற சாகாவரம் பெற்ற காரணத்தால் அவனை வீழ்த்த இயலவில்லை.

தேவர்கள் அனைவரும்
சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர்.

உலக உயிர்களின் துன்பம் கண்டு சிவன் அவர்களுக்கு அனுக்ரகம் செய்ய எண்ணினார். “ததீசி முனிவர் மனமுவந்து தனது முதுகெலும்பை கொடுத்தால் அதை ஆயுதமாக்கி அந்த அசுரனை நீ வென்று விடலாம்”
என்றார்.

நைமிசாரண்யம் அருகே ஒரு மலை மீது ஒரு காலில் நின்றபடியே தவம் செய்யும் ததீசி மகரிஷியை கண்டான்.

நேரே அவர் முன் சென்று நின்று கைதொழுதான். வெகு நேரம் கழித்துக் கண் திறந்த ரிஷி ததீசி இந்திரனை ஆச்சரியமாகப் பார்த்தார்.

தான் வந்த காரணத்தையும் சிவபெருமான் கூறியதையும் கேட்டபோது, “ஓ…. இதற்காகத் தான் அப்படியெல்லாம் நடந்ததா?” என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை அல்லவா…?

ததீசி முற்றும் துறந்தவர். இந்த உடல் மீது பற்றற்றவர்.

மேலும் உலக நன்மைக்காகவும் விருத்ராசுரன் அழிக்கப்படவும் தனது எலும்பு பயன்படுவதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

“தாரளமாக எடுத்துக்கொள் தேவேந்திரா…! இது நான் செய்த பாக்கியம்!!” என்கிறார் புன்முறுவலுடன்.

ததீசி முனிவர் சம்மதித்துவிட்டாலும் இவரது முதுகெலும்பை சேதமின்றி எப்படி எடுத்துக்கொள்வது என்று தேவேந்திரனுக்கு புரியவில்லை.

அவனது தவிப்பை உணர்ந்த ததீசி மகரிஷி, “தேவந்திரா பசுமாடு ஒன்றை அழைத்து வா…. என் உடல் முழுதும் உப்பை தடவு. நான் யோக நிஷ்டையில் ஆழ்ந்துவிடுகிறேன். பசுவை கொண்டு என் உடல் மீது உள்ள உப்பை நாவினால் அகற்றச் செய். சதை அப்படியே தனியே வந்துவிடும். பின்னர் நீ தேவையான எலும்பை சேதமின்றி எடுத்துக்கொள்ளலாம்…” என்கிறார்.

அதன்படியே தேவேந்திரன் ஒரு பசுவைக் கொண்டு ததீசி முனிவரின் சருமத்தை நாவினால் நக்கச் செய்து எவ்வித சேதமும் இன்றி முதுகெலும்பை எடுத்துவிடுகிறான்.

பின்னர் அதை ஆயுதம் செய்ய தேவலோக சிற்பி விஸ்வகர்மாவிடம் கொடுக்கிறான்.
விஸ்வகர்மா அந்த எலும்பை செதுக்கி வஜ்ராயுதம் செய்கிறார்.

அவர் அதற்காக அந்த எலும்பை செதுக்கும்போது அதன் ஒரு சில துளிகள் பூமியில் சில இடங்களில் விழுகின்றன.

அந்த துளிகளின் வீரியத்தால் அங்கு வைர சுரங்கங்கள் தோன்றுகின்றன.

பூமியில் வைர சுரங்கங்கள் தோன்றிய வரலாறு இது தான். வஜ்ராயுதத்தின் மற்ற துளிகள் பட்ட இடங்களில் நவரத்தினங்களில் மற்ற ரத்தினங்கள் தோன்றின.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற வஜ்ராயுதத்தை வைத்து விருத்ராசுரனை இந்திரன் வென்று விடுகிறான்.

வஜ்ராயுதம் இந்திரனின் வலிமை மிக்க ஆயுதமாகவும் விளங்கியது.

பலசாலிகளான கருட பகவானும், அனுமனும் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டனர்.

கருட பகவான் தனது ஒரு சிறகினை இழந்தும், அனுமன் மூர்ச்சை அடைந்தும் இவ்வாயுதத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

தற்போது இந்திய அரசின் உயரிய விருதான பரம் வீர் சக்ராவின் மேல் ததீசி முனிவரின் முதுகெலும்பு படம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈவ் யுவோன் மேடே டி மரோஸ்
சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்.

சுவிட்சர்லாந்தில் ஒரு ஹங்கேரிய தந்தை ஆண்ட்ரே டி மேடே மற்றும் ரஷ்ய தாய் மார்த் ஹென்ட்ஸெல்ட் ஆகியோருக்குப் பிறந்த ஈவ் தனது ஆரம்பகால குழந்தைப் பருவத்தை ஜெனீவாவில் கழித்தார்,

1929 ஆம் ஆண்டில், அவர் இளம் வயதிலேயே , ​​தனது வாழ்க்கையில் விக்ரம் ராம்ஜி கானோல்கரை சந்தித்தார்.
காதல் கொண்டார்.
கானோல்கர் யுனைடெட் கிங்டமில் உள்ள சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள ராயல் மிலிட்டரி அகாடமியில் பயிற்சியளிக்கும் ஒரு இளம் இந்திய ராணுவ கேடட் ஆவார்

1932 இல், ஈவ் மற்றும் விக்ரம் லக்னோவில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்திய
மேஜர் ஜெனரல் விக்ரமுடன்
திருமணத்திற்குப் பிறகு ஈவ் சாவித்ரி பாய் கானோல்கர் ஆனார்.

சைவ உணவு உண்பவர் ஆனார் சரளமாக மராத்தி, சமஸ்கிருதம் மற்றும் இந்தி பேசக் கற்றுக்கொண்டார்.

அவர் இந்திய பாரம்பரிய இசை, நடனம் மற்றும் ஓவியம் கற்றுக்கொண்டார்.

அவர் எப்போதுமே ஒரு இந்தியர் “ஐரோப்பாவில் தவறாக பிறந்தார்” என்று கூறிக்கொண்டார்.
அயல்தேசத்தை சேர்ந்தவள் என்ற வார்த்தையை வெறுத்தார்கள்.

இந்து புராணங்களில் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார், இந்து வேதங்கள் பண்டைய வரலாறு
ஆகியவற்றை கரைத்து குடித்தார்.
இதுவே
பரம் வீர் சக்ராவின் படைப்பாளரான மேஜர் ஜெனரல் ஹிரா லால் அடால், பதக்கத்தை வடிவமைப்பதில் சாவித்ரி பாயின் உதவியைக் கேட்க வழிவகுத்தது,

இந்திரனுக்கு உதவி செய்த ததீசி முனிவர் தன் தியாகத்தால் கொடுத்த முதுகெலும்பே
விருத்ராசுரனை கொல்ல உதவியதை நினைத்து
தியாகத்தின் பதக்கத்தை
சாவித்ரி ஒரு எளிய ஊதா நிற நாடாவுடன் வடிவமைத்தார்.

பதக்க முகத்தில் பதிக்கப்பட்டிருப்பது இந்திரனின் வஜ்ராவின் நான்கு பிரதிகளாகும், இது ததீசியின் தியாகத்தை பிரதிபலிக்கிறது.
வஜ்ராக்களுக்கு இடையில் புடைப்பு- அசோக சின்னம். பதக்கம் வெண்கலத்தால் செய்யப்பட்டது.
கல் நாதஸ்வரம்

இசை உலகின் *கலை பொக்கிஷம்!*
கோயில் நகரம்  என்றழைக்கப்படும்   *கும்பகோணத்தில்* அமைந்துள்ள மகாமக *தீர்த்தவாரியின்* முதன்மை திருக்கோயிலான  *ஆதி கும்பேஸ்வரர்* கோயிலில் உள்ள *பெட்டகத்தில் பொக்கிஷமாக* பாதுகாக்கப்பட்டு வருகிறது *கல் நாதஸ்வரம் ஒன்று*.

*சிற்பியின்  கை  வண்ணத்தில்* கல் நாதஸ்வரமாக  *பிறந்து,* இசை வல்லுநர்களின் உயிர் காற்றுடன் கலந்து இதயத்தை மயங்க வைக்கும்  இன்னிசையாக  தவழ்ந்து *ராகங்களின் சுவடுகளை சுமந்து வரும்* இந்த  கல் நாதஸ்வரம்  *உருவாகி* ஆண்டுகள்   பல நூறு   இருக்கலாம் என்பது   ஆய்வாளர்கள்  கருத்து.

இந்தக் *கல் நாதஸ்வரம்,* சாதாரண  நாதஸ்வரத்தை  விட  *சுமார்  ஆறு மடங்கு கூடுதல்* எடையுடையது. 

சுமார் *இரண்டடி நீளமுடையதாகவும்*  வட  இந்தியக் குழல் இசைக்கருவியான  *ஷெனாய்  மாதிரியான* அமைப்பிலும்  உள்ளதாகும்.

*மூவாயிரம் ஆண்டுகள்* பாரம்பரியம் கொண்ட தமிழர் இசையானது *அதிகாலை துயில் எழுப்புவதில்* தொடங்கி,  *நள்ளிரவு உறங்கும் காலம் வரை* இசைக்கும் *தமிழர் மரபாகும்.*

*பருவத்துக்கு  ஏற்ற* கருவிகளை உருவாக்கி அதில் *உருவாகும்  இசையினை* இசைத்து இறைவனை வணங்கினர்  *ஆதி தமிழர்கள்* என்பது வரலாறு.  

மரத்தில் செய்வதற்கும் *முந்தைய ஆதிகாலத்தில்* இக்கருவியை *கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம்* என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் *கணிப்பு.*

இதற்குச் சான்றாக, *ஆயிரம் ஆண்டுகளுக்கு* முற்பட்டதாகக் கருதப்படும் *கல் நாதஸ்வரம்* கும்பகோணம் *ஆதிகும்பேஸ்வரர்* ஆலயத்திலுள்ளது.

மற்றொரு கல் நாதஸ்வரம்: தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான  *ஆழ்வார் திருநகரியில்* உள்ள *ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும்* ஒரு *கல் நாதஸ்வரம்* உண்டு.

சுமார் *350 ஆண்டுகளுக்கு முன்* அரசாண்ட *கிருஷ்ணப்ப நாயக்கர்* என்ற மன்னரால் *இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட   இந்த கல் நாதஸ்வரம்.*

இப்போது *வெறும் காட்சிப்பொருளாக* மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.
*கல் நாதஸ்வரத்தின் உடல் அமைப்பு* :

*முகப்பில்* உள்ள முக்கிய பாகமான *சீவாளி,* காவிரிக்கரையில் விளையும் *ஒரு நாணல் புல்லில்* செய்யப்படுகிறது.

கல் நாதஸ்வரத்தில், *உலவுப்பகுதி மூன்று* உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு *வெண்கலப்பூணல்* இணைக்கப்பட்டு *வெங்கல அனசுடன்*   மிக நேர்த்தியாக  *உருவாகி உள்ளது     இந்த கல் நாதஸ்வரம்.*

"" *மரத்தால் செய்யப்படும்   நாதஸ்வரங்களில்*   ஏழு  ஸ்வரங்கள் இருக்கும், ஆனால், *கல் நாதஸ்வரத்தில்* 6 ஸ்வரங்கள் *மட்டுமே இருக்கும்.*

அதனால்   *சண்முகப்ரியா, கல்யாணி* போன்ற *பிரதி மத்திம ராகங்கள்* மட்டுமே *வாசிக்க முடியும்.* 

இதில்  *3முதல் 3- 1/2  கட்டை  சுதியில்*   வாசிக்க இயலும். 

மேலும், சங்கராபரணம், *கரகரப்பிரியா, தோடி* போன்ற *சுத்த மத்திம ராகங்களை* இந்த நாதஸ்வரத்தால் *வாசிக்க முடியாது.* 

முழுமையாகவும் அடர்த்தியாகவும் *மூச்சை உள்ளே செலுத்தினால்* மட்டுமே  இதில்  *நல்இசை  கிடைக்கும்* எனவும்   *பயிற்சி இருந்தால்* மட்டுமே *இதை வாசிக்க முடியும்''* என்கிறார் திருக்கோயில் *வித்வான்  சாமிநாதன் பிள்ளை*.

குடந்தையில் வாழ்ந்து *மறைந்த   நாதஸ்வர மேதை  கும்பகோணம்  பக்கிரி சாமி  பிள்ளை* சுமார் 60 வருடங்களுக்கு முன்   கும்பேஸ்வரர் ஆலய முக்கிய விழாக்களில்  இந்த *கல் நாதஸ்வரத்தை* வாசித்துள்ளார். 

அவருக்கு பின்   திருக்கோயில் நாதஸ்வர  வித்வானாக   இருந்த *குஞ்சிதபாதம்  பிள்ளை,* 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார்.  

அவருக்கு பின் வாசித்து வருபவர் தற்போதுள்ள *நாதஸ்வர கலைஞர்*   ஆவார்.

""சுமார்   15   வருடங்களுக்கு முன் *நடிகர் திலகம் சிவாஜி கணேசன்*   மனைவி   கமலா கும்பகோணம்  ஆதிகும்பேஸ்வரர்  ஆலயத்திற்கு வந்தபோது      கல் நாதஸ்வரத்தினை இசைக்க சொல்லி  கேட்டு சென்றார்  என்பதையும்     அதன்பின்  ஒரு விழா காலத்தில் நடைபெற்ற  *சப்தாவர்ணம்*  எனும் திருநாள் விழாவில்   திருக்கோயில்   *இசைக்கலைஞர்*  இதனை வாசித்தார். 

அவரே மறுபடியும் *29 செப்டம்பர் 2017* அன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு *கல் நாதஸ்வரத்தில்* ஒரு மணி நேரம் வாசித்தார்'' என்று திருக்கோயில் நிர்வாக  அதிகாரி  தெரிவித்தார்:

சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர்.

*ஸ,ரி,க,ம,ப, த,நி* ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று  மஹாபாரதம் கூறும்.

ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.

இசை ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள்.

*சட்ஜமம்* மயில் அகவுதலையும்;
*ரிஷபம்* மாடு கத்துதலையும்;
*காந்தாரம்* ஆடு கத்துவதையும்;
*மத்யமம்* அன்றில் பறவை கூவுதலையும்;     *பஞ்சமம்* குயில் கூவுதலையும்;
*தைவதம்* குதிரை கனைப்பதையும், *நிஷாதம்* யானை பிளிறுவதையும் ஒத்து இருக்கிறது என்று தமிழர்கள் இனம் கண்டனர்.
👏👏👏👏👏
படித்ததில் வியந்தது..
கருத்துகள்
😇😇😇😇😇
                               🤗🤗🤗🤗🤗🤗
*லிங்க புராணம் ~ பகுதி — 10*

  *மாயனை வென்ற ததீசி*
=======================

சனத்குமாரர் நந்தியை வணங்கி., ஐயனே., ததீசி முனிவர் மாயனை வென்ற., தாங்கள் கூற்றினைக் கடந்த வரலாற்றினை அன்பு கூர்ந்து சொல்ல வேண்டும் என்று வேண்டினார். ஒரு சமயம் பிரம்மன் தூங்கிய போது எழுந்த தும்மலிலிந்து சுபன் தோன்றினான். அவன் இந்திரன் அருளால் வஜ்ராயுதம் பெற்றும் மக்கள் நலம் காக்கும் மன்னனாகத் திகழ்ந்தான். மன்னனும்., ததீசியும்., ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது யார் பெரியவர் என்ற போட்டி எண்ணம் தோன்ற ஒவ்வொருவரும் தானே பெரியவன் என்று வாதித்தனர். மன்னவர்களை அண்டியே மறையோர் வாழ்கிறார் என்று கூற., ததீசி முனிவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்தணனே பெரியவர். எம்மை நீங்கள் பூஜிக்க வேண்டும் என்று கூறி அரசன் தலையில் ஓங்கி அறைந்தார். மன்னன் மிக்க கோபத்துடன் வஜ்ராயுதத்தை எடுத்து ததீசி மார்பிலே அடிக்க., அவர் ரத்தம் கக்கி துடிதுடித்து மயங்கி விழுந்தார். நினைவு திரும்பியதும் முனிவர் அரண்மனையை விட்டு வெளியேறினார். ததீசி சுக்கிராச்சாரியாரை நோக்கித் தவம் இயற்ற அவர் தோன்றினார். அவரிடம் நிகழ்ந்ததை எல்லாம் கூறி., அரசரின் வஜ்ராயுதத்தால் ஊறு நேர்வதற்கு முன் இருந்த உடலைப் பெற வேண்டினார். அப்போது சுக்கிரர் தனக்கு அச்சக்தி இல்லை என்றும் பரமனை வழிபட்டுக் கோரியதை பெறுமாறும் அறிவுறுத்தினார். ததீசி முனிவர் சிவனை வழிபட., அவர் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க முனிவர் வஜ்ராயுதத்தால் ஊறு நேரா தேகத்தை அருள வேண்டினார். அவ்வாறே ஈசனார் வரம் அருள ததீசி அரசனுடைய அரண்மனைக்கு வந்தார்.

வந்தவர் மன்னனிடம் இப்போது உன் பலத்தைக் காட்டு என்று கூற., மன்னன் மறுபடியும் முனிவரை வஜ்ராயுதத்தால் தாக்க., வஜ்ராயுதம் பொடிப் பொடியாகி விட்டது. முனிவர் கேலியாகச் சிரித்து விட்டுச் சென்றார். மன்னன் திருமாலைக் குறித்து தவமியற்ற., அவரும் அவன் முன் தோன்றினார். மன்னன் நிகழ்ந்தவற்றைக் கூறி ததீசியின் உடலைச் சோதிக்க ஒரு ஆயுதம் வேண்ட., ஈசனார் திருவருள் பெற்ற முனிவரைப் பணிய வைப்பது எப்படி முடியும். எனினும் தானே அந்தணனாக அங்கு வருவதாகக் கூறினார். இவ்வாறு தோன்றிய திருமாலைப் பார்த்த முனிவர்., பரந்தாமா அன்பனுக்கு அருள் புரிய ஏன் இந்த வேடம்? என்று கேட்க., என திருமால் சுய உருவில் தோன்றி முனிவரிடம் வேணியன் அருள் பெற்றவரால் ஆகாதது உண்டோ..! மன்னன் சுபன் என் பக்தன். அவனுடன் நட்புடன் இருக்க வேண்டுகிறேன் என்றார். ததீசி அதை ஏற்கவில்லை. தான் நேரில் வந்து கேட்டும் ஏற்காத முனிவர் மீது கோபம் கொண்ட திருமால்., அவர் மீது சக்கராயுதத்தை வீச., முனிவர் ஈசனைத் தியானித்து நின்றார். சக்கரம் முனிவரை மும்முரம் வலம் வந்து திருமாலிடமே திரும்பியது. அப்போது முனிவர்., "இந்தச் சக்கரம் நீலகண்டன் தந்ததல்லவா..! அது அவர் பக்தருக்குத் துன்பம் தருமா..?" என்று கேட்டார்.

இப்போரில் மாதவனுக்கு உதவ வந்து தேவர்கள் தோற்று ஓடினர். தன்னந்தனியாய் நின்ற மாதவன் மாயையால் முனிவரைக் குழப்ப., ஈசன் தந்த ஞானக்கண் மூலம் முனிவர் எதையும் நன்கு காண முடிந்தது. இவ்வாறு ததீசி முனிவரை வெல்ல முடியாமல் விஷ்ணு மயங்கி இருக்கையில் அங்கே பிரம்மன்., சிவன் தோன்றி இருவரையும் கோபம் நீங்கி சாந்தமடையுமாறு வேண்டினார். திருமால் ததீசியிடம் அவர் தவத்துக்குத் தலை வணங்குவதாகக் கூறி பாற்கடல் திரும்பினார். அது கண்ட சுபன் பாற்கடல் சென்று மாதவனிடம் தன் நிலைமை என்ன என்று கேட்க திருமால் விரோதம் நீக்கி நட்பு பெறுமாறு கூற., மன்னன் ததீசியை வணங்கித் தான் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். முனிவரும் முன்போல் அவனிடம் நட்பு கொண்டிருந்தார். அடுத்து., நந்தி காலனைக் கடந்த விவரத்தைக் கூறலானார்.

தொடரும்.....


*சிவாஷ்டகம்*

*ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஸ்வனாதம்* *ஜகன்னாத னாதம் ஸதானம்த பாஜாம் |*
*பவத்பவ்ய பூதேஸ்வரம் பூதனாதம்., சிவம் ஸம்கரம் ஸம்பு மீஸானமீடே || 1 ||*
அம்பா ஆராதனை

அம்பாளை ஆராதிப்பதற்கு ரொம்ப உத்க்ருஷ்டமான சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிற சம்ப்ரதாயத்தை அனுசரித்து எல்லோரும் அனுஷ்டானம் செய்து கொண்டு வருகிறோம்.

அம்பாளை நாம் சாதாரணமாக ஸஹஸ்ர நாமங்கள் சொல்லி ஆராதிப்பது உண்டு.

ஸஹஸ்ர நாமங்கள் என்று சொன்னால் நாம் சொல்லி வருவது சாதாரணமாக லலிதா ஸஹஸ்ர நாமம்தான்.

அந்த லலிதா ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லி நாம் அம்பாளை ஆராதிப்போம்.

நிஜமாக அந்த ஸஹஸ்ர நாமத்தினுடைய அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டால் அது ஒரு ரொம்பப் பெரிய விஷயம். அது புரிந்து கொண்டு அதன்படி நாம் நடந்துகொண்டால் நாம் அம்பாளுடைய பரிபூரண க்ருபைக்குப் பாத்ரமாவோம்.

ஸஹஸ்ர நாமங்களில் அம்பாளுடைய மகிமை எவ்வளவு? என்பதைச் சொல்லியிருக்கிறது.

அம்பாளுடைய பூஜை பண்ணக் கூடியவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறது.

வேதாந்தத்து சித்தாந்தம் என்ன என்பதையும் இங்கு சொல்லியிருக்கிறது. எல்லாமே சொல்லி இருக்கிறது.

அம்பாளுடைய மகிமை என்ன என்பதன் விஷயம் வரும்போது

“பவதாவ ஸூதா வ்ருஷ்டி: பாபாரண்ய தவானனா
தௌர்பாக்ய தூல வாதூனா
ஜராக் வாந்த ரவிப்ரபா
பாக்யாப்தி சந்த்ரிகா
பந்த சித்த கேகி கனாகனா
போக பர்வத தம்தூளி;
ம்ருத்யு தாரு குடாரிகா

என்று சொல்லியிருக்கிறது.

அவளை (அம்பாளை) பூஜித்தால் என்ன வெல்லாம் கிடைக்கும்? என்றால் கிடைக்காதது ஒண்ணுமில்லை.

 “பவதாவ ஸுதா வ்ருஷ்டி; ‘பவம்’ என்று சொன்னால் இந்த ஒரு சம்சார சக்கரம். சம்சார சக்ரம் என்று சொன்னால் ஜனன மரணாத்மக ஒரு ப்ரவாகம். பிறக்கிறோம். கொஞ்சம் வருஷம் இந்தப் பூமண்டலத்தில் இருக்கிறோம். திரும்ப இந்த சரீரத்தை விட்டு விடுகிறோம். இன்னொரு சரீரம் வருகிறது. அந்த சரீரத்துலே கொஞ்சம் சுகமோ, துக்கமோ அனுபவிக்கிறோம். போய் விடுகிறோம். திரும்ப இன்னொரு சரீரம். இந்த ஒரு சக்ரம், இது தான் சம்சார சக்ரம் என்பது.

எத்தனை காலம் இந்த சக்ரத்தில் சுற்றிக் கொண்டு இருப்பது? இதில் என்ன சௌக்யம் இருக்கிறது? பார்த்தால் இதில் ஒரு சௌக்யமும் இல்லை.

இந்த சக்ரத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அம்பாளுடைய தயவு வேண்டும். அதிலிருந்து விடுதலை கொடுக்கக் கூடியவள் அம்பாள்.

 “பவதாவ ஸூதா வ்ருஷ்டி;” அதாவது அந்த நாமத்துக்கு நேரடியாக அர்த்தம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் காட்டிலே தீப்பிடித்து விட்டால் அந்தத் தீ அணைய வேண்டும் என்று சொன்னால் நாம் ஒரு குடம் ஜலம் கொண்டு போனால் அது ஒண்ணும் அணையாது. ஆனால் ஆகாசத்துலேருந்து பெரிய வ்ருஷ்டி: (மழை)வந்தால்தான் அந்தக் காட்டுத் தீ அணையும். இந்த சம்சார சக்ரம் என்கிற இந்த காட்டுத் தீக்கு அவளுடைய அனுக்ரஹம் என்பது ஒரு பெரிய மழை. அப்பேர்ப்பட்டவள் என்று சொன்னால் இந்த சம்சார பயத்தை போக்கக் கூடியவள்.

இரண்டாவதாக “பாபாரண்ய தாவன லா” என்று சொல்லி இருக்கிறது. பாபங்கள், பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

பாபங்கள் செய்யாதவன் யார்? என்று கேட்டால் யாருமே இல்லை. எல்லாரும் ஏதோ ஒரு விதமாக பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

சிலர் சொல்வார்கள். நான் ஒரு பாபமும் செய்யவில்லை என்று சொல்வார்கள். அது சும்மா நீங்கள் சொல்வதோடு சரி. செய்கையிலே உங்களுக்கு அப்படி இருக்க முடியாது. அது தான் பகவத் பாதாள் ஓர் இடத்திலே, மனிதன் பிறந்த அன்றிலிருந்து சாகிற வரையிலும் ஒரு விதமான பாபமும் செய்யவில்லை என்று நெஞ்சு தட்டிக் கொண்டு சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.

“வாசா’ ஜன்ம ப்ராயண யோஹோ
அந்த ராளே காம்ய ப்ரதி ஸித்த போஹோ ஸர்வாத் மனா வர்ஜனம்
கேனி சித் ப்ரதிக்ஞாதம் அசக்யம்”
பகவத் பாதருடைய வாக்யம் இது.

 “ஸ்வநிபுணானாம் அபி ஸுஷ்மா பராத தர்சனா” அதாவது சம்ஸ்க்ருதத்துலே அவருடைய வார்த்தைக்கு அர்த்தம்.

எவனுமே பிறவியிலிருந்து சாவதற்குள்ளே அந்த சமயத்துலே எந்த விதமான ஒரு காம்ய கர்மத்தையோ, நிஷித்த கர்மத்தையோ அதாவது பாபத்தையோ செய்யவில்லை என்று “ப்ரதிக்ஞா’ செய்ய முடியாது.

எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொள்ளும் நபர்களுக்கும், தனக்குத் தெரியாமலே சில தப்பிதங்கள் நடந்து போய் விடும். அதனாலே நம்மால் பாபங்கள் நடக்கவில்லை என்று நாம் சொல்லவே முடியாது. பின்பு என்ன சொல்லலாம்? நான் தெரிந்து ஒரு தப்பிதமும் செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தெரியாமல் எவ்வளவு தப்பிதங்கள் நடக்கிறதோ தெரியாது. தெரியாமல் தப்பிதம் நடந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமோ என்று யாரும் சொல்லக் கூடாது.

 ஏனென்றால்

“அனிச்ச யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ
தஹத்யே விஹி பாவத:
நெருப்பு இருக்கிறது.

ஒரு சின்னக் குழந்தை நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது தெரியாது. நெருப்பைத் தொட்டு விட்டது. அப்போது அந்த நெருப்பு அந்தக் குழந்தையின் கையில் சுடாமல் விடுமா? சுடும். அப்போது நாம் போய் அதுகிட்ட “என்ன குழந்தை தெரியாமல் தொட்டு விட்டால் அதையே நீ சுட்டு விட்டாயே!” என்று நாம் யாராவது அந்த நெருப்பை சத்தம் போடலாமா?அதே போல் நாம் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாபத்துக்குப் பலன் இருக்கவே இருக்கிறது. அதேபோல் புண்யத்துக்கும் பலன் இருக்கிறது.

ஒருவனுக்குத் தெரியவில்லை. அது புண்யம் என்று சொல்லி பண்ணி விட்டான். ஆனாலும் அந்த புண்யத்துடைய பலன் கிடைக்கத்தான் செய்யும்.அதாவது ஓர் இடத்துலே இந்த மாதிரி ஒரு  ஸத்காலட்சேபம் நடந்து கொண்டு இருந்தது. ஒருவன் வந்தான். இங்கு காலட்சேபம் நடக்கிறது என்பதே தெரியாது. அந்த இடத்துலே உட்கார்ந்தான். ஸ்வாமி தர்சனம் பண்ணினான். போய் விட்டான். அவனுக்கு அந்த பலன் இருக்கவே இருக்கும். பஜனை நடந்து கொண்டு இருந்தது. அவனும் அவர்களோடு சேர்ந்து அந்த பஜனை நாமத்தை உச்சரித்தான். அதனுடைய பெருமை என்ன என்பது தெரியாது. எல்லாரும் பகவான் நாமா சொல்கிறார்கள். அவனும் சொல்லிவிட்டான். அந்த பலன் அவனுக்கு இருக்கவே இருக்கும். அதுதான் பூர்வார்த்தத்துலே சொன்னார்,

 “தஹரர் ஹரதி பாபானே
திஷ்ட தித்மதர விஸ்ம்ருத:
என்று சொன்னார். அதனால் நாம் பாபங்கள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாபம் பாபம்தான். அதற்கு பலனை அனுபவிக்க வேண்டியது உண்டு. அப்போது எத்தனையோ பாபங்கள் நடக்கிறதே இந்த எல்லாப் பாபங்களுக்கும் நாம் ப்ராயச்சித்தத்துக்கு  எங்கே போவது? அந்த ப்ராயச்சித்தங்கள் நமக்குத் தெரியவும் தெரியாது. அதனால் இந்த இத்தனை பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் தேவியினுடைய நாமத்தை உச்சாரணம் செய்தால், தேவியினுடைய மகிமையைச் சொல்லும் போது

ஏகஸ்ய நாம்ணே ஞான  சக்தி:
பாப கானான் நிவர்த்தயே
தன் நிவர்த்ய மதே கர்த்தம்
மானன் லோகாய் ஸதுர்தசே”

இந்தப் பதினான்கு லோகங்களிலே இருக்கக் கூடிய ஜனங்கள் அத்தனை பேரும் செய்த பாபங்கள் எல்லாவற்றையும் தேவியுடைய ஒரு நாமமே போக்கும் என்று அதற்கு அர்த்தம்.

அம்பாளை எப்படியெல்லாம் ஆராதிக்கலாம் என்பதை மேலும் சிந்திப்போம்.

வெள்ளி, 5 ஜூன், 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 09*

        காலனை வென்ற
        சுவேதன் வரலாறு
=======================

சுவேதன் என்ற மறையோன் தன் வாழ்நாள் மிகக்குறைவே என்று அறிந்து ஈசன்தாள் பற்றி., சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து பக்தியுடன் வழிபட்டு வந்தான். எந்த நேரமும்., அவன் செயல் நினைப்பு அனைத்தும் ஈசனைப் பற்றியதாகவே இருந்தது. அவன் ஆயுள் முடியும் நேரம் காலனே நேரில் வந்தான். காலனைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. மேலும் ஈசன் திருவடிகளைப் பற்றினார்க்கு யாராலும்., எவ்விதமும் துன்பம் நேராது என்று காலனிடம் சொன்னான். உன்னால் எனக்கு என்ன பயம் என்றான். அதைக் கேட்ட காலன் கடுஞ்சினம் கொண்டு பாசக்கயிற்றை சுவேதன் மீது வீசினான். கயிறு இறுகத் தொடங்கியது. சுவேதன் "என்னைக் காப்பது நீயே அல்லவா..?" என்று எண்ணியவாறு தான் பூஜித்து வந்த லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டான்.

அடுத்த கணம் லிங்கத்திலிருந்து தோன்றிய பரமன் கோபத்துடன் காலனை உற்று நோக்க அவன் வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிர் நீத்தான். பரமன் சுவேதனுக்கு அழியா வாழ்வைக் கொடுத்து தம் கணங்களில் ஒருவனாக இருக்க அருள் செய்தார். உயிரற்றுக் கிடந்த யமுனை எழுப்பி அவனிருப்பிடம் அனுப்பி வைத்தார். சுவேதன் வரலாற்றைக் கூறிய பிரமன் முனிவர்களிடம், ஈசனைத் தியானித்து அவரைப் பக்தியுடன் ஆராதித்து வாருங்கள். சிவலிங்கம் ஒன்றை அமைத்து அதில் ஈசனைத் தியானித்து மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள். உங்கள் அன்புக்கு ஈசன் கட்டுண்டு அருள்புரிவான் என்றார். அவ்வாறே முனிவர்கள் பக்தியுடன் பூசிக்க திருப்தி அடைந்த ஈசன் அவர்களுக்கு அருள்புரிய முன் தோன்றிய அதே திகம்பர சந்நியாசி கோலத்தில் தாருகாவனம் வந்து சேர்ந்தார். இம்முறை முனிவர்கள் ஈசனை அன்புடன் வரவேற்றனர், வணங்கினர். முனி பத்தினிகளும் அவர்களுடன் ஈசனை வழிபட்டனர். மேலும் அவர்கள் ஈசனை நோக்கி, நாங்கள் செய்த அபசாரங்களை மன்னித்து, அடியார்களாகிய எங்களிடம் அளவற்ற அன்பு பூண்டு, பக்தியுடன் நாங்கள் அளிக்கும் உபசாரங்களை மனமுவந்து ஏற்று அருளவேண்டும் என்று வேண்டினர்.

அப்போது ஈசனின் திகம்பர வடிவம் மறைந்து, கைகளில் மானும், மழுவும் ஏந்தி உமாதேவியுடன் காட்சி அளித்தார். முனிவர்கள் பரமானந்தக் கடலில் மூழ்கினர். நெஞ்சம் உருக ஈசனைப் பக்தியுடன் துதித்து வணங்கினர். சுவேதன் வரலாறு, மார்க்கண்டேயன் வரலாறு போன்றது. மேலும், விரிஞ்சன் முதலான தேவர்கள் பாசுபத விரதத்தை ஆற்றியே அழியா உயர் பதத்தை அடைந்தனர். ஆகவே நீங்களும் அவ்விரதத்தைப் பக்தியுடன் கடைப்பிடியுங்கள் என்று கூறி மறைந்தார் ஈசன். முனிவர்களும் பக்தியுடன் பாசுபத விரதத்தைக் கடைப்பிடித்து வல்வினைகள் தொலையப் பெற்றனர்.

தொடரும்.....

*லிங்காஷ்டகம் தமிழில்....*

ப்ரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவலிங்கம் ।
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எறித்த கருணாகர லிங்கம் ।
இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

வாசமனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம் ।
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம் ।
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம் ।
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்
தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம் ।
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்
எல்லாமாகிய காரண லிங்கம் ।
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

தேவரின் உருவில் பூஜைக்கும் லிங்கம்
தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம் ।
பரமநாதனாய் பரவிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ।।

லிங்காஷ்டகம் இதனை தினமும் சிவ சன்னதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன் சிவனருளும் கொள்வார்….
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….
"வெல்லவே முடியாதது..."
தர்மம்..

மஹாபாரதப்போர்...

18 நாள் யுத்தம்...

வெற்றி பாண்டவர்களுக்கு...

ஆனால், ஒரு விஷயம்...

கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்...

இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்...?

ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

1) ஜயத்ரதன்

2) பீஷ்மர்

3) துரோணர்

4) கர்ணன்

5) துரியோதனன்

6) விதுரர்

இவர்களின் வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் வெற்றியை தந்தது.

இதில் யாரை வீழ்த்த தீட்டிய திட்டம் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?

அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய யுக்தி தான் சிறப்பு வாய்ந்தது என்று நினைப்பார்கள்.

இன்னும் சிலபேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்றும் நினைக்கலாம்.

இதே மாதிரிதான் பீஷ்மர், துரோணர் இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்...

ஆனால் சரியான விடை...

விதுரருக்காக ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் சிறப்பு வாய்ந்தது.

'இது என்ன புது குழப்பம்?

விதுரர் எங்கே சண்டை போட்டார்?

அவரை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்?'
என்ற கேள்விக்கு விடை சொல்லும் முன்...

யுத்தம் நடக்கும் முன்பு நடந்த சம்பவங்களை  பார்ப்போம்...

முதலில் விதுரரை பற்றி தெரிந்து கொள்வோம்...

யார் இந்த விதுரர்?

விதுரர்...

திருதராஷ்டிரருக்கும்,
பாண்டுவுக்கும் தம்பி...

அதாவது,
பாண்டவர்களுக்கும்
கெளரவர்களுக்கும்
சித்தப்பா...

விதுரரின் தாயார் ஒரு பணிப்பெண்ணாக இருந்தவர்.

விதுரர் மகா நீதிமான்...

தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்...

தர்மராஜர்... அப்பழுக்கில்லாதவர்...

'பெண்களை தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என எந்த நிலையிலும் அவர்களை உயர்வாக வைத்து போற்ற வேண்டியவர்கள்' என தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது விதுரர் ஒருவரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் வாய்
திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்...

அதற்கான தண்டனை தான்...
விதுரரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவருக்கும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்பது தர்மத்தின் நியதி.

கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணர் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை.

ஏனெனில்,
ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் இருந்தது.
எனவே அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது.

ஆனால், மேற்கண்ட பண்புகளால் விதுரரை மட்டும்  வீழ்த்தவே முடியாது...

விதுரர் 'வில்' எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது...

யுத்தம் என்று வந்தால்...
மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக, கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற முடியாது.

மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகி இருக்கும்.

அதனால்...
எல்லோரையும் விட மிக முக்கயமான நபர்...
*விதுரர்*தான்.

அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போரிடக் கூடாது.

மேலும், தர்மநெறி படி விதுரர் போரில் மரணமடைய கூடிய நியதியும் கிடையாது.

விதுரரை போரிடாமல் எப்படி தடுப்பது?

ஸ்ரீகிருஷ்ணர் தர்ம வியூகம் அமைக்கிறார்.

அதன்படி,
பாரதப்போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறார்.

'கிருஷ்ணர் வருகிறார்' என்று தெரிந்ததும்... திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.

துரியோதனன் சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, 'ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார்?' என்ற கேள்வி பிறந்தது.

நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.

ஸ்ரீகிருஷ்ணரோ, “நான் தூதுவன்... என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன்.

இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்...” என்றார்.

விதுரருக்கு மகா சந்தோஷம்...

தனக்கு பிரியமான கிருஷ்ணர் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார்.

விதுரர் வீட்டில் கிருஷ்ணர் இரவு பொழுதைக் கழித்தார்...

மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக
வாதாடினார்.

துரியோதனன், "ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப்
பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது..." என்று சொல்லி
கிருஷ்ணரையும் அவமதித்துப் பேசினான்.

கிருஷ்ணரும், "யுத்தம் நிச்சயம்..." என்று சொல்லிவிட்டு
பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.

வழியில்...
கிருஷ்ணருடைய சாரதி, "சுவாமி! எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்?” என்றான்.

கிருஷ்ணா் சொன்னார், "அனைத்தும் நல்லதுக்கே... இதன் விளைவு இப்போது துரியோதனன் சபையில் நடந்து கொண்டிருக்கிறது...” என்று சொல்லி சிரித்தார்.

அதேபோன்று...
அப்போது துரியோதனன் சபையில் எல்லோரும் துரியோதனனிடம் கெஞ்சி, 'கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும்...' என்று வாதாடினார்கள்.

அதில் விதுரர் குரல் தான் ஓங்கி ஒலித்தது.

ஏற்கனவே துச்சாதனன் துயில் உறியும் போது விதுரர் தட்டி கேட்டது...
பாண்டவ தூதரான கிருஷ்ணரை விதுரர் தன் வீட்டில் முதல் நாள் இரவு தங்கவைத்து  உபசாரம் செய்தது...
என துரியோதனனுக்கு விதுரர் மேல் வெறுப்பு இருந்தது...

இதன்மூலம் அவர் பாண்டவர்கள் கட்சி என்றும் ஒரு நினைப்பு.

இப்போதும் விதுரர், கிருஷ்ணர் பேச்சைக் கேட்டு கொண்டு போரை நிறுத்த வாதாடியதும், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது...

என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான்.

குறிப்பாக,
அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.

இதனால்,
விதுரர் மிகுந்த அவமானமடைந்தார்...
ஆவேசமடைந்த விதுரர், சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.

"உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது துரியோதனா!...

 இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன்...
அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்...
 எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை...” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச்
சபையிலிருந்து வெளியேறினார்.

யுத்தம் முடியும் வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து
திரும்பவில்லை...

இப்பொழுது புரிந்து இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டில் ஏன் தங்கினாரென்று...

தங்காமல் இருந்தால்...

விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா?

துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் விதுரருக்கு வந்திருக்கும் அல்லவா?

விதுரர் வைத்திருந்த 'வில்'
தர்ம சக்கரம் கொண்ட மஹாவிஷ்ணுவின் வில்...

'கோதண்டம்' எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது.

அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது.
'காண்டீபம்' என்பது அதன் பெயர்.

போரில் விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது!

இதுவே
பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது...!

தர்மராஜனான விதுரரை ஜெயிக்கவே முடியாது என்ற தர்மம் உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் செய்த மஹா தர்ம யுக்தி தான் மஹாபாரத வெற்றி...!

தர்மத்தை யாராலும் வெல்லவும் முடியாது...

தர்மத்தை போற்றுவோம்...

*நம் தலைமுறைகளுக்கும் தர்மத்தை எடுத்துச் சொல்வோம்...   தர்மம் தலை காக்கும்!  தக்கச் சமயத்தில் உயிர் காக்கும்.   தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்!  தர்மம் நிலைத்து நிற்கும்....

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

வியாழன், 4 ஜூன், 2020

நாம் அறியாத தகவல்...

கண்டிப்பாக படிங்க நண்பர்களே....●

தோழி  வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது தோழியின்  9 வயது மகன்..

●மாமி நவகிரஹம் ஒன்பது உள்ளது. ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளது. மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா?

இது பாரபட்சம் இல்லையா? என கேட்டான்.

□அவனை ஆசீர்வதித்து மகனே நல்ல கேள்வி. பகவான் உனக்கு எல்லா நலனும் வழங்கட்டும் என கூறியவாரே,

எங்கே ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன்.

●சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது.

□வாரத்தின் நாட்கள் கூறு என்றேன்.

●ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, என்றான்.

□இப்போ உன் கேள்வி ராகு, கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை என்பதும், அது பாரபட்சம் என்பதும் தானே என்றேன்.

●ஆமாம்  மாமி என்றான்.

□மகனே பகவான் எந்த காரணத்தை கொண்டும் யாருக்கும் பாரபட்சம் செய்யமாட்டான். அதாவது அவன் பகவானை விரும்பினாலும்,  வெறுத்தாலும் பாரபட்சம் காட்டவே மாட்டான்.

ஹிரண்யனுக்கு பல சந்தர்ப்பங்களை கொடுத்தான். பிரஹலாதனுக்கு அவன் செய்த பல கொடுமைகளில் இருந்து

காப்பாற்றி உணர்த்தினான். ஆனாலும் புரியாமல், தூணை காட்டி கேட்டு இங்கு இல்லையேல் உன் உயிரை எடுப்பேன் என கூறியதால் பகவான் தன் பக்தன் பிரஹலாதன் உயிரை காக்க தூணிலிருந்து தோன்றி அரக்கன் ஹிரண்யன் உயிரை எடுத்தான்.

இராமாயணத்தில் இராவணனுக்கு அவன் எல்லா நண்பர்களும், ஆயுதங்களும் இழந்து தனியாக நின்றபோதும், அவனுக்கு ஒரு நாள் சந்தர்ப்பம் கொடுத்தார். அதாவது

இன்றுபோய் நாளை வா என, எதற்காக சண்டை போடுவதற்க்கா இல்லை. சீதையை கொண்டுவந்து ஒப்படைக்க அதன் மூலம் அவனுக்கு இரக்கம் காட்ட ஆனால் அதை இராவணன் செய்யாத்தால் பகவானால் கொல்லப்பட்டான்.

அது போல் தான் பகவான் தேவர்களுக்கும்*, கிரஹங்களுக்கும் பாற்கடலை கடைந்து வந்த அமுதத்தை பகிர்ந்து அளிக்கும் போது இடையில் புகுந்த அரக்கன் அதை பெற   சந்திரன் அதை காட்டி கொடுக்க பகவான் அசுரன் தலையை துண்டித்து விட அமுதம் பெற்ற அவனுக்கு அழிவு இல்லாததால், அவர்களை இரண்டு கிரஹமாக ஆக்கி இராகு, கேது எனப்பெயர் வைத்து அவர்களுக்கு உரியதாக ராகுகாலம், குளிகைகாலம் என இரண்டு காலத்தை கொடுத்துள்ளார்.

மனிதர்கள் இந்த இராகு காலத்தில் எந்த வேலையைச்செய்தாலும், அது சிரமத்தின் பேரில் தான் நடைபெறும். நற்காரியங்கள் கூடுமானவரை செய்யக்கூடாது. அதேபோல் குளிகனில் கெட்ட காரியங்கள்,  அபர காரியங்கள் செய்யக்கூடாது எனக்கூறி அருளினார்.

●மாமி  அது தெரியும், ஆனால் ஏன் மாமி வாரநாட்களில் அவர்களை சேர்க்கவில்லை என்றான்.

□அவனிடம் உன்னிடம் ஒரு பாக்கெட் பிஸ்கட் தான் உள்ளது, அந்த பாக்கெட் பிஸ்கட்டை நீயும் உன் தங்கையும் பிரித்து சாப்பிட எண்ணும் போது, இடையில் உங்கள் நண்பர் இருவர் வந்தால் என்ன செய்வாய் என்றேன்.

●அந்த பிஸ்கட் பாக்கெட்டில் உள்ளதை கூட வந்தவர்களுக்கும் பிரித்து கொடுத்து சாப்பிடுவோம் என்றான்.

□ஏன் அவங்களுக்கு தனியாக ஒன்றை கொடுக்கலாமே என்றதும்,

●எங்கிட்ட ஒரு பாக்கெட் தானே இருக்கு அப்போ அதிலிருந்து தானே கொடுப்பேன் என்றான்.

□சரியாக சொன்னாய், அதே போல்தான் வாரத்துக்கு நாள் ஏழு என ஏழு கிரகஹங்களுக்கும் ஒன்றாக பகவான் உண்டாக்கி, ஒவ்வொரு நாளுக்கும் இருபத்தினான்கு மணி நேரம் என ஏற்படுத்தி நடத்திவரும் போது இடையில் இரு கிரஹங்கள் வருவதால் என்ன செய்ய என யோசித்த பகவான்,

அனைத்து கிரஹங்களுக்கும் வேலை நேரம் சமமாக இருக்கவேண்டும் அதே நேரம் வார நாட்களையும் கூடுதலாக வருமாறு செய்ய கூடாது என்ற எண்ணத்தில்...

ஏழு கிரஹங்களையும் அழைத்து அவர்கள் ஒவ்வொருவர் நேரத்திலும் மூன்று மணிநேரத்தை எடுத்துக்கொண்டான்.

இப்போ சொல்லு ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்.

●இருபத்திநான்கு மணி நேரம் மாமி.

□அதில் மூணு மணி நேரத்தை பகவானுக்கு கொடுத்தது போக மீதி எவ்வளவு உள்ளது.

●இருபத்து ஒரு மணி நேரம் மாமி.

□இப்போ ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் மாதிரி ஏழு நாட்களுக்கும் எடுத்தால் எவ்வளவு.

●இருப்பதொரு மணி நேரம் மாமி.

□இப்போ பெருமாள் கையில் எவ்வளவு மணி நேரம் உள்ளது.

●ஏழு பெருக்கல் மூணு இருப்பத்தியோரு மணி நேரம்.

□இதைத்தான் தன்னால் தலை துண்டிக்கப்பட்டு உடலால் ஒரு கிரஹமாகவும், தலையால் ஒரு கிரஹமாகவும் ஆன ராகு கேதுவுக்கு பிரித்துக்கொடுத்தார்.

●அதுவும் எப்படி?..

□ஒவ்வொரு கிழமையிலும் ராகு காலமாக ஒன்றரை மணி நேரமும் குளிகை காலமாக ஒன்றரை மணி நேரமுமாக..இப்போ சொல்லு உன்னிடம் இருந்த ஒரு பாக்கெட் பிஸ்கட்டை இடையில் வந்தவருக்கு பகிர்ந்தளித்த மாதிரி,ஏற்கனவே இருந்த ஏழு நாட்களையும் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் சமமாக பகிர்ந்தார்.

ராகுவும், கேதுவும் ஒரே உடலின் இரண்டு அங்கம் ஆனதால், அந்த இருபத்தொரு மணி நேரத்தை இரண்டாக பிரித்து ஆளுக்கு பத்தரை மணிநேரம் அதாவது ஒவ்வொரு நாளிலும். ஒன்றரை மணி நேரம் ஏழு நாட்களில் ஏழு பெருக்கல் ஒன்றரை அதாவது பத்தரை மணிநேரமாக கொடுத்துள்ளார்.

இப்போ சொல்லு பகவான் பாரபட்சம் காட்டியுள்ளானா!!!!..

●இல்லை மாமி ஏழு நாட்களை கொண்ட வாரத்தில் ஒவ்வொருவரிடமும் இருந்து மூணு மணி நேரத்தை குறைத்து வேலை நேரத்தை 21 மணி நேரமாக குறைத்து, அதையே இரண்டு பங்கான அசுரனுக்கு பாதி பாதியாக அதாவது பத்தரை மணியாக, அந்த இருபத்தொரு மணி நேரத்தை பிரித்து கொடுத்துள்ளான் அப்படி தானே என்றான். 

□அப்படிதான் மகனே, பகவான் யாரையும் எந்த காரணத்திற்காகவும் வஞ்சிக்கவோ, பாரபட்சம் காட்டவா மாட்டான். நல்லவர்களை அரவனைப்பதும், துஷ்டனுக்கு சந்தர்பம் கொடுத்து திருத்தவும், சில சோதனைகளை செய்வான். அப்போதும் செய்பவன் அவனே என அவனிடம் நாம் சரணடைந்து விட்டால் போதும் அவன் நம்மை ஆட்கொண்டுவிடுவான்.

பகவான் யாரையும் நம்மைபோல் பாரபட்சமாக நடத்த மாட்டான்.
💐🌹🙏💐🌹🙏💐🌹
*லிங்க புராணம் ~ பகுதி — 08*

       சுதரிசனன் வரலாறு
=======================

உத்தம குலத்தில் பிறந்த அந்தணன் சுதரிசனனும்., கற்பிற் சிறந்த மனைவியும்., அன்றாடம் தன் இல்லத்திற்கு வரும் அதிதிகள் மனம் கோணாமல் அவர்களுக்கு உணவிட்டு., மகிழ்வித்து அனுப்பி வந்தனர். ஒருநாள் ஓர் அதிதி வந்தார். அவரையும் எல்லா வகையிலும் உபசரித்து உணவூட்டினர். இடையில் சுதரிசனன் ஓர் அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் மனைவியிடம் அதிதி மனம் கோணாமல் அவரை உபசரிக்குமாறு கூறிவிட்டுச் சென்றான். உணவருந்திய அதிதி அவளிடம் தனக்கு உடல் சுகமும் அளிக்கும்படி கேட்டான். அவள் பதைபதைத்து விட்டாள். கற்புக்குப் பங்கம் வரும்., அல்லது அதிதிக்கு உபசாரக் குறைவு ஏற்படும் என்று எண்ணி செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது சுதரிசனன் வீடு திரும்பினான். அதிதிக்கு எல்லாச் சௌகரியமும் கிடைத்ததா..? பூரண திருப்தியா..? என்று கேட்க மனைவி பதை பதைத்திருக்க., அதிதி அந்தணர் மனைவி அறுசுவை உண்டியுடன்., உடலுக்குச் சுகம் அளித்து திருப்தி கொடுத்தாள் என்று கூறினார். அப்போது அந்தணன் சினமோ., வெறுப்போ கொள்ளாமல்., தன் மனைவியை அவர் அனுபவித்து விட்டதால் அவள் அதிதியின் சொத்து என்று கூறி., அவளையும் உடன் அழைத்துச் செல்லுமாறு வேண்டினான். அப்போது அந்த அதிதி மறைந்து விட்டார். அங்கே அவர்களுக்குச் சிவபெருமான் காட்சி தந்து., தான் அவர் மனைவியைத் தீண்டவும் இல்லை. அவள் கற்புக்கரசி. புனிதமானவள். பிறவிப் பெரும் துயரினின்று நீங்கள் இருவரும் விடுபட்டு என்னிடம் வந்து சேர்வீராக என்று அருள்பாலித்தார். இவ்வாறு அதிதி பூஜையின் மேன்மையைப் பிரம்மன் தாருகாவனத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும்., அம்முனிவர்கள் இறைவன் திருவடிகளிலேயே சரண் புக., அவரை வழிபடின் அவர் அருளால் முனிவர்களின் துன்பங்கள் நீங்கும் என்று அறிவுறுத்தினார். அடுத்து., பிரம்மன் அவர்களுக்குத் துறவின் தன்மையை எடுத்துக் கூறியதுடன் துறவிகள் மட்டுமின்றி மற்றோரும் ஈசன் பேரருளுக்குப் பாத்திரமானவர்களே. தாம் செய்யும் கர்மாக்களை அந்தப் பெருமானுக்கே அர்ப்பணித்து., அனைத்திலும் ஈசனைக் காண்பவர் முக்தி அடைவர் என்றார்.

தொடரும்.....

*ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்*
*ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் |*
*பராத்பரம் பரமாத்மக லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||*

*லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேஸஸிவ ஸன்னிதௌ |*
*சிவலோகமவாப்னோதி சிவேன ஸஹ மோததே ||*