சனி, 24 ஆகஸ்ட், 2019

உலகம் போற்றும் அருளாளர்களில் "ஆதிசங்கரர்" முதன்மையானவர்.

கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய
"பிரஸ்னோத்தர
ரத்ன மாலிகா"
என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில... :

கேள்வி (1)
எது இதமானது ?

பதில் (*)
தர்மம்.

(2)  நஞ்சு எது ?

(*)  பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

(3)  மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?

(*)  பற்றுதல்.

(4)  கள்வர்கள் யார் ?

(*)  புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

(5)  எதிரி யார் ?

(*)  சோம்பல்.

(6)  எல்லோரும் பயப்படுவது எதற்கு ?

(*)  இறப்புக்கு.

(7)  குருடனை விட குருடன் யார் ?

(*)  ஆசைகள்
உள்ளவன்.

(8)  சூரன் யார் ?

(*)  கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

(9)  மதிப்புக்கு மூலம் எது ?

(*)  எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

(10)  எது துக்கம் ?

(*)  மன நிறைவு இல்லாமல் இருப்பது.

(11)  உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?

(*)  குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

(12)  தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?

(*)  இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.

(13)  சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?

(*)  நல்லவர்கள்.

(14)  எது சுகமானது ?

(*)  அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

(15)  எது இன்பம் தரும் ?

(*)  நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

(16)  எது மரணத்துக்கு இணையானது ?

(*)  அசட்டுத்தனம்.

(17)  விலை மதிப்பற்றதென எதைக்
குறிப்பிடலாம் ?

(*)  காலமறிந்து செய்யும் உதவி.

(18)  இறக்கும் வரை உறுத்துவது எது ?

(*)  ரகசியமாகச் செய்த பாவம்.

(19)  எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?

(*)  துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !

(20)  சாது என்பவர் யார் ?

(*)  ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

(21)  உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?

(*)  சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

(22)  யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?

(*)  எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

(23)  செவிடன் யார் ?

(*)  நல்லதைக்
கேட்காதவன்.

(24)  ஊமை யார் ?

(*)  சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

(25)  நண்பன் யார் ?

(*)  பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

(26)  யாரை விபத்துகள் அணுகாது ?

(*)  மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.
-----------------------------------------
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் (பகுதி-1)

பூர்வ பாகம் (முற்பகுதி) விஷ்ணு வணக்கம்

1. ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே

வெண்மையான ஆடையை உடுத்தியவரும், எங்கும் நிறைந்துள்ளவரும், நிலவு போன்ற குளிர்ந்த திருமேனி வண்ணத்தைப் பெற்றவரும், நான்கு கைகளை உடையவரும், மலர்ச்சி பொங்கும் திருமுகத்தைக் கொண்டவருமான பகவானை எல்லாத் தடைகளும் நீங்க வேண்டித் தியானிப்போம்.

ஸேனைமுதலியார் வணக்கம்.

2. யஸ்ய த்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

யானை முகன் முதலான பரிவாரக் கூட்டங்களுக்குத் தலைவராகவும், தம்மையே தியானம் செய்பவருக்கு வருகின்ற எல்லா இடையூறுகளையும் நீக்கி மகிழ்ச்சி அளிப்ப வருமாகிய ஸேனை முதல்வரின் திருவடிகளை வணங்குகிறோம்.

வியாசர் வணக்கம்.

3. வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :பௌத்ர மகல்மஷம்
பராஸராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத் தொகுத்தளித்தவர் வியாச பகவான். அவரை முதலில் வணங்குவோம். ஸ்ரீராமாயணத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர் வசிஷ்டர். வசிஷ்டரின் பிள்ளை சக்தி. சக்தியின் பிள்ளை பராசரர். பராசரரின் பிள்ளை வியாசர். வியாசரின் பிள்ளை சுகப்பிரம்மம்.

இவ்வாறு திருமாலின் தமராகப் பலதலைமுறைகளாக இருந்து வரும் நல்ல மரபில் குற்றமற்ற தவச் செல்வராக விளங்குபவர் வியாச பகவான். இத்தகைய பெருமைக்குரிய வியாச பகவானை முதலில் வணங்குவோம்.

4. வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணுவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:

விஷ்ணு வடிவமாக உள்ள வியாசராகவும், வியாசர் வடிவமாக உள்ள விஷ்ணுவாகவும், வேதக் களஞ்சியமாகவும் உள்ள வசிஷ்டர் குலத்தோன்றலாகிய வியாச பகவானை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம்.

மகாவிஷ்ணு வணக்கம்.

5. அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே

மாறுபாடில்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம்பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.

6. யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணுவே ப்ரப விஷ்ணவே
ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

சர்வ வல்லமை பொருந்தியவர் விஷ்ணு. பிறவித் துன்பமாகிய தளையானது, அப்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே விடுபட்டுப் போய்விடும். அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய மகா விஷ்ணுவை வணங்குவோம்.

(மேலே கூறப்பட்ட ஆறு ஸ்லோகங்களும் மகா பாரதத்தில் உள்ள ஸஹஸ்ரநாமப் பகுதியில் காணப்படவில்லை. எனவே, பாஷ்யகாரர்களும் (விளக்கவுரையாளர்களும்) இவற்றுக்கு விளக்கவுரை எழுதவில்லை. எனினும், நெடுங்காலமாக இந்த ஆறு ஸ்லோகங்களும் பக்தர்களால் வழிவழியாகப் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது என்பர் அறிஞர்.)

பூர்வ பாகம் (முற்பகுதி)
பாகம் 2

வியாசரின் மாணாக்கர் வைசம்பாயனர். ஜனமே ஜயன் என்னும் மன்னனுக்குப் பாரதத்தை உபதேசித்தவர். ஜனமே ஜயன் என்னும் மன்னவன் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பெருமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் அவாவினால், வைசம்பாயனர் ஜனமே ஜயனுக்கு இதனை உபதேசித்தார்.

ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்துக்குப் பீடிகையாகத் தொடங்குகிறது இந்த வரி.

ஸ்ரீ வைஸம்பாயந உவாச...

ஸ்ரீவைசம்பாயனர் ஜனமே ஜயனிடம் கூறியது.
இப்படித் தொடங்குகிறது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம உபதேசம்.

1. ஸ்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ:
யுதிஷ்டிர : ஸாந்த நவம் புநரே வாப்ய பாஷத

எல்லாத் தருமங்களையும், பாவங்கள் அனைத்தையும் போக்கும் முறைகளையும் பீஷ்மர் தருமருக்குக் கூறிவந்தார். இவை அனைத்தையும் ஒன்று விடாமல் தருமர் பீஷ்மரிடம் கேட்டறிந்தார். மேலும் பீஷ்மரை நோக்கித் தருமர் மீண்டும் கேட்கலானார்.

யுதிஷ்டிர, உவாச - (தருமர் கூறியது):

2. கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த : கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்

3. கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்

சந்தனு மகாராஜாவுக்கும் கங்காதேவிக்கும் பிறந்தவர் பீஷ்மர். இவர் மகா ஞானி. ஞானத்தைச் சொல்பவர் பீஷ்மர், கேட்பவர் தரும தேவதையின் புதல்வர். சொல்லப்படும் பொருளோ ஆசார்யரால் விரும்பிப் போற்றப்படுகிறது. (கேட்பவனுக்கு நல்லவற்றைச்செய்யும் என்னும் நம்பிக்கையுடனும், நல்ல மனதுடனும் சொல்கிறார். சொல்லும் பீஷ்மரும், கேட்கும் தருமரும் ஒருவருக்கொருவர் பிரியமானவர். எனவே, மேன்மையை அளிக்கும் நல்லவை இங்கே கேட்கப்படுகின்றன.) தர்மங்களில் சிறந்ததாகப் பீஷ்மர் எதைக் கருதுகிறாரோ, அதை வெளியிட வேண்டுமென்று தருமர் கேட்கிறார்:

1. சாஸ்திரங்களில் மிக உயர்ந்த தெய்வமாக - ஒப்பற்ற தெய்வமாகக் கூறப்படும் தெய்வம் எந்தத் தெய்வம் என்று கருதுகிறீர்?

2. இகம், பரம் ஆகிய இரண்டிலும் விருப்பமுடன் அடையத்தக்க பொருளாக இருப்பது எது?

3. யாரைப் புகழ்ந்து பாடி வழிபட்டால் உயர்ந்த நலனைப் பெற முடியும்.

4. யாரை மனதால் தியானித்தும், வாக்கால் திருநாமங்களைச் சொல்லியும், மலர் கொண்டு கையினால் அர்ச்சித்தும் பெறுதற்கரிய பலனைப் பெறமுடியும்?

5. எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாகத் தங்களால் மனதாரக் கருதும் தருமம் எது?

6. பிறத்தல், வளர்தல், மூப்பெய்தல், இறத்தல், புண்ய பாபங்களுக்கேற்பப் பயனை அனுபவித்தல் ஆகியவற்றைக் கொண்ட உயிர்கள் எதை ஜபித்துப் பிறவித் தளையிலிருந்து விடுபட முடியும்? (மோட்ச சாதனத்தைத் தருவது எது?)

(இவ்வாறு கேள்விகள் கேட்ட தருமருக்குப் பீஷ்மர் கூறலானார்.)

ஸ்ரீ பீஷ்ம உவாச:

ஸ்ரீ பீஷ்மர் கூறலானார்:

4. ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புரு÷ஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித:

அசைபவை, அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட உலகத்துக்குத் தலைவனும், தேவர்களுக்கெல்லாம் தேவனும், அளந்து காணமுடியாத பெருமை உடையவனுமாகிய வள்ளல்களில் சிறந்தவனை இடைவிடாத முயற்சியுடன் அவனது ஆயிரம் திருநாமங்களைச் சேதனன் துதி செய்தும்;

5. தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம்
த்யாயந் ஸ்துவந்ந மஸ்யம்ஸ் யஜமா நஸ் தமேவ ச

ஸஹஸ்ரநாமத்துக்குப் பொருளாக உள்ள - மாறுபாடில்லாத அந்தப் பரம்பொருளையே இடைவிடாத நினைவின் தொடர்ச்சியாக - தைல தாரையைப் போல் பக்தியுடன் அர்ச்சித்தும், எனதாவியும் உனதே என்று தாளும் தடக்கையும் கூப்பிக் கோல் போல் விழுந்து வணங்கியும் மேலும் தியானித்தும் வணங்கியும் வழிபடுபவன்;

6. அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வ துக்காதிகோ பவேத்

ஆதியும் அந்தமும் இல்லாமல் எல்லாக் காலங்களிலும் இருப்பவனும், எங்கும் நிறைந்துள்ளவனும், எல்லா உலகங்களுக்கும் மேலான தலைவனும், எல்லா நடப்புகளையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவனுமாகிய விஷ்ணுவை எப்போதும் போற்றிவருபவன் எல்லாத் துன்பங்களையும் கடந்து எம்பெருமானைச் சேர்ந்து பகவத் அநுபவமான எல்லையற்ற ஆனந்தத்தை அநுபவிப்பான்.

7. ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்த நம்
லோக நாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம்

வேதத்தினிடமும் தவத்தினிடமும் நட்பு கொண்டவனும், எல்லாத் தருமங்களையும் அறிபவனும், உலகங்களால் கொண்டாடப்படும் புகழை வளர்ப்பவனும், எல்லா உலகங்களுக்கும் தலைவனும், உயர்ந்த ஐஸ்வர்யங்களை இயல்பாக உடையவனும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே கருணை காட்டுபவனும், பரம்பொருளாக இருந்து எல்லா உயிர்களுக்கும் பிறப்பு இறப்பினைக் கூட்டுவிப்பவனுமாகிய பிரம்மத்தையே ஒருவன் போற்றி வருவானாயின், அவன் எல்லாத் துன்பங்களையும் கடந்து செல்பவன் ஆவான்.

8. ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோ மத:
யத் பக்த்யா  புண்டரீகாக்ஷம் ஸ்தவை ரர்ச்சைந் நர: ஸதா

செந்தாமரைக் கண்ணனான பகவானை, மனிதனாகப் பிறந்தவன் எப்போதும் பக்தியுடன் அவனது பெருமைகளைச் சொல்லும் தோத்திரங்களால் வழிபாடு செய்யக் கடமைப் பட்டிருக்கிறான்.

இவ்வாறு வழிபாடு செய்யும் தருமத்தையே எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

9. பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப:
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம்

சிறந்ததும் பெரியதுமாகிய ஒளி எதுவோ, சிறந்ததும் பெரியதுமாகிய தவமே வடிவாக உள்ளது எதுவோ, சிறந்ததும் பெரியதுமாகிய பிரம்மம் எதுவோ, சிறந்த புகலிடம் எதுவோ ஒப்பற்றதாகிய அதுவே அடையத்தக்க புகலிடம்.

10. பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம்
தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா

பரிசுத்தமானவற்றுள் பரிசுத்தமாகவும், மங்களமானவற்றுள் மங்களமாகவும், தெய்வங்களுக்குள் தெய்வமாகவும், உயிர்களுக்குள் உயிர்தரும் தந்தையாகவும் உள்ளவன் யாரோ, அவனே உலகில் ஒரே தெய்வமாக இருக்கிறான்.

11. யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ் யுக க்ஷயே

12. தஸ்ய லோக ப்ரதா நஸ்ய ஜகந் நாதஸ்ய பூபதே
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம்

உயிர்கள் அனைத்தும் ஆதியுகத்தின் தொடக்கத்தில் எவரிடமிருந்து பிறந்தனவோ, யுகத்தின் முடிவில் மீண்டும் அவை எவரிடத்தில் மறைகின்றனவோ, உலகத்தைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், உலகத்துக்குக் காரணமானவரும், உலக நாயகருமாக எங்கும் விளங்குபவர் எவரோ அவரே விஷ்ணு. இத்தகைய உயர்வும் சிறப்பும் மிக்க மகாவிஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்கள் பாவங்களையும், பயங்களையும் போக்குவன. அந்த ஆயிரம் நாமங்களையும் என்னிடம் கேட்பாயாக.

(இவ்வாறு அம்புப் படுக்கையில் இருந்தவாறே பீஷ்மர் தருமபுத்திரருக்கு ஆயிரம் நாமங்களைக் கூறலானார். மேலும், பீஷ்மர் தருமருக்குக் கூறுகிறார்.)

13. யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மந:
ரிஷிபி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே

பகவான் அளவிட முடியாத பெருமையுடையவன். அவனே மகாத்மா. எந்தெந்த நாமங்கள் பகவானுடைய கல்யாண குணங்களினாலும், சரிதத்தினாலும் பிரசித்தி பெற்றவையோ, ஆத்ம ஞானிகளான ரிஷிகளால் எங்கும் பாடப்பெற்றவையோ அவற்றை ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு உனக்குச் சொல்லுகிறேன். (இந்த இரண்டாம் பகுதியில் உள்ள ஸ்லோகங்கள் பதின்மூன்றும் மகாபாரதத்தில் உள்ளன. பாஷ்யங்களிலும் உள்ளன.)

(பூர்வ பாகம்(முற்பகுதி)

பாகம் 3

1. ருஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாந் ரிஷி:
சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீ ஸுத:

2. அம்ருதாம் ஸுத்பவோ பீஜம் ஸக்திர் தேவகி நந்தந:
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஸாந்த்யர்த்தே விநி யுஜ்யதே

3. விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புரு÷ஷாத்தமம்

வேதவியாசர் ஆயிரம் திருநாங்களைக் கண்டறிந்த மகரிஷி. இந்த ஸ்லோகங்கள் அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்தவை. அநுஷ்டுப் சந்தஸ் என்பது 32 உயிரெழுத்துகளுள்ள ஸ்லோகம். இந்த ஆயிரம் திருநாமங்களுக்குரிய தேவதை, தேவகி புத்திரனான ஸ்ரீகிருஷ்ண பகவான்.

அம்ருதாம் சூத்பவ. என்பது (சந்திர வம்சத்தில் உதித்தவன்) பீஜம் (ஆதாரம்.) தேவகி நந்தனன் என்பது சக்தி. த்ரிஸாமா என்பது (சாம ரிக்குகளால் பாடப்பட்டவன்) இதயம்.

மந்திர ஜபம் சாந்தியின் பொருட்டுப் பயன்படுகிறது. இதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கப்பெறுகிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளவரும், எப்போதும் வெற்றியையே உடையவரும், எல்லாவற்றிலும் உறைபவரும் , பல வடிவங்களைக் கொண்டவரும், அரக்கர்களுக்குப் பகைவரும், புரு÷ஷாத்தமராகவும் உள்ள மஹா விஷ்ணுவை வணங்குகிறேன்.

(இந்த மூன்றாம் பகுதி பாரதத்திலும் இல்லை; பாஷ்யங்களிலும் இல்லை. நடைமுறையில் மட்டுமே உள்ளது.)

பூர்வ நியாஸம்

(மூன்றாம் பாகத்திலுள்ள ஸ்லோகங்கள் உரைநடையாக அநுசந்திக்கும் முறை இனி சொல்லப்படுகிறது.

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவாந் ரிஷி:

அநுஷ்டுப் சந்த:

ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா
ஸ்ரீமந் நாராயணோ தேவதா
அம்ருதாம் ஸுத்பவோ பாநுரிதி பீஜம்;
தேவகீ நந்தந: ஸ்ரேஷ்டேதி ஸக்தி;;
உத்பவ; ÷க்ஷõபணோ தேவ இதி பரமோ மந்த்ர;;
சங்க ப்ருந் நந்த்கீ சக்ரீ தி கீலகம்;
சார்ங்க தந்வா கதாதர இத்யஸ்த்ரம்
ரதாங்க பாணி ர÷க்ஷõப்ய இதி நேத்ரம்;
த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம்;;
ஆநந்தம் பர ப்ரஹ்மேதி யோநி;;
ருது: சு தர்ஸந: கால இதி திக்பந்த;;
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யாநம்;
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே
ஸ்ரீ ஸஹஸ்ரநாம ஜபே விநியோக;

விஷ்ணுவின் இந்த திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மகாமந்திரநாம ஸ்தோத்ர மகா மந்திரத்துக்குப் பகவான் வேதவியாசர் ரிஷி; அநுஷ்டுப் சந்தஸ்; பரமாத்வான ஸ்ரீமகா விஷ்ணு - ஸ்ரீமந்நாராயணன் தேவதை; சந்திர குலத்துதித்த சூரியன் குலவிளக்கு என்பது பீஜம் (மூலகாரணம்); தேவகீ நந்தனாகிய ஸ்ரீகிருஷ்ணன் சக்தி; உத்பவ: ÷க்ஷõபனோ தேவ; என்பது இதன் உயர்ந்த மந்திரமாம்; திருவாழி, திருச்சக்கரம், நாந்தக வாள் ஏந்தியவன் கீலகம் (அச்சாணி); இதன் காப்பு (கவசம்) த்ரிஸாமா ஸாமக; ஸாம; ஆநந்தம் பரப்ரஹ்ம என்பது யோநி (கர்ப்பம்); ருதுஸ்ஸுதர்சந: கால என்பது திக்குகளை அடக்கிப் பரப்பு; (எத்திக்கிலிருந்தும் தீமை வராமல் இந்த மகாமந்திரத்தால் காப்பு); எங்கும் நிறைந்தவன் என்பது தியானம், எம்பெருமானுக்குக் கைங்கர்யமாக அவனுடைய திருநாமங்களை அநுஸந்தித்துத் தொழுதல் அதாவது ஸ்ரீமஹா விஷ்ணுவின் திருவருள் சித்திக்கும் பொருட்டு ஸஹஸ்ர நாம ஜபத்தில் இதற்குப் பயன் என்பதாம்.

(மூன்றாம் பகுதி வசனம் முற்றுப் பெறுகிறது.)

தியான சுலோகங்கள்

த்யாநம்

1. க்ஷீரோ தந்வ ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்தி காநாம்
மாலா க்லுப்தா ஸநஸ்த : ஸ்படிக மணிநிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க:
கப்ரை ரப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை:
ஆநந்தீ ந : புநீயா தரிநளிந கதா ஸங்க பாணிர் முகுந்த :

2. பூ : பாதௌ யஸ்ய நாபிர் வியத சுரநிலஸ் சந்த்ர ஸுர்யௌச நேத்ரே
கர்ணா வாஸா : ஸிரோ த்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேய மப்தி:
அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர நர ககோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம்ரம் யதே தம் த்ரிபுவந வபுஷம் விஷ்ணு மீஸம் நமாமி

3. ஸாந்தா காரம் புஜக ஸயநம் பத்மநாபம் சுரேஸம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருஸம் மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம்
வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்

4. மேக ஸ்யாமம் பீத கௌஸேய வாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீ காய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்

5. ஸஸங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ் ஸ்தல சோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம்

6. சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸநோ பரி
ஆஸீந மம்புதஸ் யாமம், ஆயதாக்ஷ மலங்க்ருதம்

7. சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாஸ்ரயே

1. தூய்மையான இரத்தினங்களை மணல் பரப்பாக உள்ள திருப்பாற்கடல் எனப்படும் இடத்தில் முத்துமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஆசனத்தில் எழுந்தருளியிருப்பவரும், படிக மணிகளைப் போன்ற முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவரும், மேலே விளங்கும் வெண்மையான மேகங்கள் பலவற்றால் துளிக்கப்படும் அமுதத் திவலைகளால் மகிழ்பவரும், திருவாழி திருச்சங்கு கதை பத்மம் ஆகியவற்றைத் திருக்கைகளில் ஏந்தியவரும், மேலே உலவுகின்ற வெண்மையான மேகங்கள் பொழிகின்ற அமிர்த தாரைகளால் மகிழ்பவருமான முகுந்தன் ஸ்ரீமந் நாராயணன் நம்மைப் புனிதர் ஆக்கிக் காப்பாராக!

2. (இந்தச் சுலோகம் பெருமானுடைய பெரு வடிவத்தை வருணிக்கிறது.)

பூமி, பெருமானின் திருவடிகள், ஆகாயம் அவனது நாபி; வாயு பிராணன்; சந்திரனும் சூரியனும் திருக்கண்கள்; திக்குகள் திருச்செவிகள்; தேவலோகம் திருமுடி; அக்கினி திருமுகம்; சமுத்திரம் வயிறு; தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள், நாகர், கந்தருவர், அசுரர் எனப்பலரும் உள்ள உலகங்கள் அவனுள் ஆடிக்களிக்கின்றன. மூன்று உலகங்களும் அவனது திருமேனியாக உள்ளன. அனைத்தையும் காப்பவனான இப்படிப்பட்ட விஷ்ணுவை வணங்குகிறேன்.

3. பெருமான் சாந்தமே வடிவானவர்; திருவனந்தாழ்வானாகிற திருவணை மேல் பள்ளி கொள்பவர்; நாபியில் தாமரைப்பூவை அழகாகப் பெற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; உலகுக்கு ஆதாரமாய் இருப்பவர். ஆகாயம் போல் பரந்துள்ளவர்; மேக வண்ணர்; அனைத்து லக்ஷணங்களும் பொருந்திய திருமேனி உடையவர்; திருமகளின் உள்ளத்தைக் கவர்ந்தவர்; செந்தாமரைக் கண்ணர்; யோகத்தில் இருந்து கொண்டு தியானிக்கும் ரிஷிகளின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவர்; பிறவிப் பிணியைப் போக்குபவர்; அனைத்துலகுக்கும் தலைவர். இத்தகைய மகா விஷ்ணுவை வணங்குகிறேன்.

4. கருமுகில் போன்ற வண்ணத்தையுடைய திருமேனியர், மஞ்சள் பட்டாடை உடுத்தியவர்; ஸ்ரீவத்சம் எனப்படும் மறுவைத் திருமார்பில் அடையாளமாகக் கொண்டவர்; கௌஸ்துப மணியால் பிரகாசிக்கும் அங்கங்களை உடையவர்; புண்ணிய புருஷர்களால் சூழப் பெற்றவர்; தாமரை போன்ற திருக்கண்களை உடையவர். எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவர். இப்படிப்பட்ட மகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.

5. சங்கும் சக்கரமும் தாங்கியவராய், முடியும் குண்டலமும் அணிந்தவராய், பொன்னாடை உடுத்தியவராய், தாமரைக் கண்ணராய், மாலை அணிந்த மார்பில் கௌஸ்துபம் ஒளி வீசுபவராய், நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்.

6. பாரிஜாத மரத்தின் நிழலில் தங்கச் சிம்மாசனத்தில் அமர்ந்தவரும், மேக வண்ணரும், நீண்டு அகன்ற கண்களை உடையவரும், அலங்கரிக்கப்பெற்றவரும்.

7. சந்திரன் போன்ற முகத்தினரும், நான்கு திருக்கரங்களை உடையவரும், ஸ்ரீவத்ஸம் தோன்றும் திருமார்பினரும், ருக்மணி சத்யபாமை ஆகிய இருவருடனும் சேர்ந்து விளங்குபவருமாகிய ஸ்ரீகிருஷ்ணரைச் சரணடைகிறேன்.

(இந்த ஏழும் தியான சுலோகங்கள், இவை மகா பாரதத்திலும், பாஷ்யங்களிலும் இல்லை என்பர் அறிஞர்.)
(தியான ஸ்லோகங்கள் முடிவுற்றன.)

தியான முடிவில் பஞ்ச பூஜை செய்தல் நலம். அவையாவன:
1. லம் - ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி.
2. ஹம் - ஆகாஸாத்மனே புஷ்பை; பூஜையாமி.
3. யம் - வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி.
4. ரம் - அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி.
5. வம் - அம்ருதாத்மனே அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி.
ஸம் - ஸர்வாத்மனே ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி.
***********
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்

1. ஓம் விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு:
பூத க்ருத்பூத ப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந:

1. விஸ்வம் - இது மேலான நிலையைச் (பரத்வத்தைச்) சொல்லும் திருநாமம்.
2. விஷ்ணு - எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகப் புகுந்திருப்பவன்.
3. வஷட்கார - எல்லாவற்றையும் தம் வசத்தில் வைத்துக் கொண்டு ஆள்பவன் - நியமிப்பவன்.
4. பூதபவ்ய பவத்ப்ரபு - முக்காலத்திலுள்ள பொருள்களுக்கெல்லாம் தலைவன்.
5. பூதக்ருத் - (தனதிச்சையாலே) எல்லாவற்றையும் படைப்பவன்.
6. பூதப்ருத் - எல்லாவற்றையும் தாங்குபவன்.
7. பாவ: எல்லாப் பொருள்களுடனும் கூடியிருப்பவன்.
8. பூதாத்மா - உலகத்துக்கு உயிராயிருப்பவன்.
9. பூதபாவந- எல்லாப் பொருள்களையும் விருத்தியடையும்படிப் பாதுகாத்து வளரச் செய்பவன்.

2. பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி :
அவ்யய : புருஷஸ் ஸாக்ஷீ ÷க்ஷத்ரஜ்ஞோ அக்ஷர ஏவ ச

10. பூதாத்மா-தூய்மையான இயல்புடையவன்.
11. பரமாத்மா- பரமபுருஷன் (மேலானவன்)
12. முக்தாநாம் பரமாகதி - முக்தி அடைந்தவர் அடையும் உயர்ந்த இடம்.
13. அவ்யய: (முக்தனைத் தன்னைவிட்டு) விலக்காதவன்.
14. புருஷ -(வேண்டியவற்றையெல்லாம்) மிகுதியாகக் கொடுப்பவன்.
15. ஸாக்ஷீ - (தன்னை அனுபவித்து மகிழும் முக்தர்களைப்) பார்த்து மகிழ்பவன்.
16. ÷க்ஷத்ரஜ்ஞ - (முக்தர்கள் தம்மை இடைவிடாமல் அநுபவிப்பதற்குத் தக்க) இடமான விபூதியை அறிந்தவன்.
17. அக்ஷர-(அநுபவிக்க அநுபவிக்க மேலும் மேலும் பெருகும் இன்ப வெள்ளம்) குறையாதவன்.

3. யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர:
நாரஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மாந் கேஸவ : புரு÷க்ஷõத்தம:

18. யோக - மோட்ச சாயுஜ்யத்துக்குத்தானே உபாயமாக இருப்பன்.
19. யோகவிதாம் நேதா - தன்னையை உபாயமாகப் பற்றாதவர்களையும், வலியச் சென்று தானே வழிகாட்டுபவன்.
20. ப்ரதாந புருஷேச்வர - பிரக்ருதியையும், ஜீவாத்மாவையும் எல்லா வகையாலும் நியமித்து நடத்துபவன்.
21. நாரஸிம்ஹவபு:- மனிதனும் சிங்கமும் கலந்த தெய்வீக உருவத்தைப் பக்தனுடைய பயத்தைப்போக்க எடுப்பவன்.
22. ஸ்ரீமாந் - அழகன். (அழகினால் பக்தர்களை மகிழச்செய்து உலகத்தைக் காப்பவன்)
23. கேசவ:- (உவமை கூற முடியாத கருமையும் மனமும் உடைய) கருங்குழலை உடையவன்.
24. புரு÷ஷாத்தம:- புருஷர்களுள் மிகவும் சிறந்தவன்.

4. ஸர்வஸ் ஸர்வஸ் சிவஸ் தாணுர் பூதாதிர் நிதி ரவ்யய:
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர:

25. ஸர்வ - எல்லாமாயிருப்பவன்.
26. சர்வ - அழிப்பவன் - (தீமையை விலக்குபவன்; மங்களம் தருபவன்.)
27. சிவ-மங்களத்தை அளிப்பவன்.
28. ஸ்தாணு - (அடியார்களுக்கு அருள்புரிவதில்) நிலையாய் இருப்பவன்.
29. பூதாதி - எல்லாவற்றாலும் விரும்பப் படுபவன்; எல்லாவற்றையும் சரீரமாக உடையவன்.
30. நிதிரவ்யய: குறைவற்ற நிதியாய் இருப்பவன்.
31. ஸம்பவ - (தேவைப்படும் போதெல்லாம்) அவதாரம் செய்பவன்.
32. பாவந: - வாழ்விப்பவன்.
33. பர்த்தா - ஆதரிப்பவன் (காப்பாற்றுபவன்)
34. ப்ரபவ: சிறப்பாகத் தோன்றுபவன். (தன்னிச்சையால் பிறப்பவன்)
35. ப்ரபு - ஸமர்த்தன். (தனது மேன்மை சிறிதும் குன்றாதவன்)
36. ஈஸ்வர:- ஆளுகின்ற ஈசன்.

5. ஸ்வயம்பூஸ் ஸம்பு ராதித்ய : புஷ்கரா÷க்ஷõ மஹாஸ்வந :
அநாதி நிதநோ தாதா விதாதா தாது ருத்தம:

37. ஸ்வயம்பு - தானே தோன்றியவன்.
38. சம்பு - பேரின்பத்தை விளைவிப்பவன்.
39. ஆதித்ய :- (சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பதால்) சூரியன்.
40. புஷ்கராஜ: தாமரைக் கண்ணன்.
41. மஹாஸ்வந: வழிபடுவதற்கு உவப்பான திருநாமத்தை உடையவன்.
42. அநாதிநிதந: ஆதியும் அந்தமும் இல்லாதவன்.
43. தாதா - படைப்பவன்.
44. விதாதா - கர்ப்பத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்பவன்.
45. தாது ருத்தம - பிரமனைக் காட்டிலும் சிறந்தவன்.

6. அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ : பத்மநாபோ அமரப்ரபு :
விஸ்வகர்மா மநுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ :

46. அப்ரமேய: அறிவுக்கெட்டாத பெருமைகளை உடையவன்.
47. ஹ்ருஷீகேச: இந்திரியங்களை அடக்கி ஆள்பவன்.
48. பத்மநாபன்: நாபியிலிருந்து நீண்ட தண்டையுடைய தாமரைப்பூ அழகன்.
49. அமரப்ரபு : தேவர்கள் தலைவனாயிருந்து நிர்வாகம் செய்பவன்.
50. விச்வகர்மா: உலக நடைமுறைகளைத்தானே செய்பவன்.
51. மநு: மனதில் நினைத்த மாத்திரத்திலேயே உலக நியதிகளைச் செய்பவன்.
52. த்வஷ்டா: பெயர்கள், உருவ அமைப்புகள் முதலானவற்றைப் பாகுபாடு செய்பவன்.
53. ஸ்தவிஷ்ட : மிகவும் பெரியவன்.
54. ஸ்தவிர: எக்காலத்தும் நிலைத்திருப்பவன்.
55. த்ருவ : மாறாமல் நிலையாய் இருப்பவன்.

7. அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ : பிப்ரதர்தந:
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம்

56. அக்ராஹ்ய: கிரகிக்க முடியாதவன். (தானே காரணமாகவும் (கர்த்தாவாகாவும் இருப்பவன்)
57. சாச்வத: நிரந்தரமாக இருப்பவன்.
58. க்ருஷ்ண: மிகுந்த மகிழ்ச்சி உடையவன்.
59. லோஹிதாக்ஷ: செந்தாமரைக் கண்ணன்.
60. ப்ரதர்தந: (பிரளய காலங்களில் எல்லாவற்றையும் அழிப்பவன்) தன்னுள் மறைத்து வைத்திருப்பவன்.
61. ப்ரபூத: நிறைந்தவன்.
62. த்ரிககுத்தாமா: (த்ரிககுப்தாமா) - பரமபதத்தை இருப்பிடமாக உடையவன். (மூன்று முகப்புகளை உடைய வராகமாக அவதரித்தவன்)
63. பவித்ரம்: தூய்மையான வடிவினை உடையவன்.
64. மங்களம் பரம்: சிறந்த மங்களமாய் இருப்பவன்.

8. ஈஸாந : ப்ராணத : ப்ராணோ ஜ்யேஷ்ட ஸ்ரேஷ்ட : ப்ரஜாபதி :
ஹிரண்ய கர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதந :

65. ஈசாந: அடக்கி ஆள்பவன்.
66. ப்ராணத: பிராணனைக் கொடுப்பவன். (பலன் தருபவன்)
67. ப்ராண: உயிராக இருப்பவன்.
68. ஜ்யேஷ்ட: முதன்மையானவன்.
69. ச்ரேஷ்ட: மிகவும் மேன்மையுற்றவன்.
70. ப்ரஜாபதி: நித்ய சூரிகளுக்குத் தலைவன். (அமரர்கள் அதிபதி.)
71. ஹிரண்யகர்ப்ப: மிகவும் விரும்பத்தக்க பரம பதத்தில் நித்யவாசம் செய்பவன்.
72. பூகர்ப்ப: பூமிப்பிராட்டிக்கு நாயகன்.
73. மாதவ: திருமகள் கேள்வன்.
74. மதுஸூதந: மது என்னும் அரக்கனை அழித்தவன்.

9. ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம : க்ரம :
அநுத்தமோ துராதர்ஷ : க்ருதஞ : க்ருதி ராத்மவாந்

75. ஈஸ்வர: அனைத்துக்கும் தலைவன்.
76. விக்ரமீ - மிக்க வலிமையுடையவன்.
77. தந்வீ - சாரங்கம் என்னும் வில்லை உடையவன்.
78. மேதாவீ - அனைத்தும் அறிந்தவன்.
79. விக்ரம: கருட வாகனன்.
80. க்ரம: (அளவற்ற ஐஸ்வர்யங்களால்) செழிப்புற்றவன்.
81. அநுத்தம: தனக்கு மேம்பட்டவர் இல்லாதவன்.
82. துராதர்ஷ: கலக்க முடியாதவன்.
83. க்ருதஜ்ஞ : (சேதநர்களால் செய்யப்படும் புண்ணிய பாபரூபமான) செயல்கள் அனைத்தையும் அறிபவன்.
84. க்ருதி: செய்விப்பவன்.
85. ஆத்மவான் - எல்லா ஆன்மாக்களையும் தன்னுடைய ஆன்மாவாக உடையவன்.

10. சுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா : ப்ரஜாபவ :
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வ தர்ஸன:

86. ஸுரேச: பிரமாதி தேவர்களுக்குத் தலைவன்.
87. சரணம் - உபாயமாய் இருப்பவன்.
88. சர்ம - உயர்ந்த பலனாய் இருப்பவன்.
89. விச்வரேதா: அகில உலகங்களுக்கும் காரணமானவன்.
90. ப்ரஜாபவ: பிரஜைகளுக்கு இடமாயிருப்பவன்.
91. அஹ: பகல் போலத் தெளிவாக விளங்குபவன்.
92. ஸம்வத்ஸர: சேதநரிடம் நன்றாக இருப்பவன்.
93. வ்யால: தன்வசப்படுத்துபவன்.
94. ப்ரத்யய: நம்பிக்கை உண்டாக்குபவன்.
95. ஸர்வதர்சந: தனது மகிமைகளை எல்லாம் பக்தர்களுக்கு முழுமையாகக் காட்டுபவன்.

11. அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதி ரச்யுத :
வ்ருஷா கபிரமேயாத்மா ஸர்வ யோக விநிஸ்ருத :

96. அஜ: தடைகளை விலக்குபவள்.
97. ஸர்வேச்வர: (தன்னைப் பற்றியவரைத்) தானே சென்றடைபவன்.
98. ஸித்த: தேடி அலைய வேண்டாதபடித்தானே உபாயமாய் நிற்பவன்.
99. ஸித்தி: அடைய வேண்டிய பேறாக இருப்பவன்.
100. ஸர்வாதி: எல்லாப் பலன்களுக்கும் ஆதிகாரண பூதன்.

(முதல் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

101. அச்யுத: தன்னைப் பற்றியவரை நழுவ விடாதவன்.
102. வ்ருஷா கபி - தர்மமே வடிவான மகா வராக அவதாரமானவன்.
103. அமேயாத்மா - அறிய முடியாதவன்.
104. ஸர்வயோக விநிஸ்ருத: எல்லா உபாயங்களாலும் அடையத்தக்கவன்.

12. வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ் ஸம :
அமோக : புண்டரீகா÷க்ஷõ வ்ருஷகர்மா வ்ருஷா க்ருதி :

105. வஸு: சிறிது அநுகூல புத்தியுள்ளவரிடத்தும் அன்புடன் வசிப்பவன்.
106. வஸுமநா: தன்னை அடைந்தவரைப் பெருஞ் செல்வமாக நினைப்பவன்.
107. ஸத்ய: தன்னை அடைந்தவர்களுக்கு அநுகூலன்.
108. ஸமாத்மா - அடியார் எவரையும் சமமாகப் பாவிப்பவன்.
109. ஸம்மித: (அடியார்க்கு) அடங்கிய பொருளாய் இருப்பவன்.
110. ஸம - எல்லாரிடத்தும் சமமாய் இருப்பவன்.
111. அமோக: (அடியாரின்) உறவு வீண் போகாமல் காப்பவன்.
112. புண்டரீகாக்ஷ - விண்ணோர்க்குக் கண் போனவன்.
113. வ்ருஷகர்மா - நற்செயல்களைச் செய்பவன்.
114. வ்ருஷாக்ருதி - தருமமே வடிவானவன்.

13. ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வ யோநிஸ் சுசிஸ்ரவா :
அம்ருத்ஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா :

115. ருத்ர: (ஆனந்தக்) கண்ணீர் விடச் செய்பவன்.
116. பஹுசிரா: தலைவன் பலவற்றை உடையவன்.
117. பப்ரு: தாங்கி நிற்பவன்.
118. விச்வயோநி: எல்லா உலகத்தவருடன் உறவு கொண்டவன்.
119. சுசிச்ரவா: தூய சொற்களையே கேட்பவன்.
120. அம்ருத: ஆரா அமுதன்
121. சாச்வத ஸ்தாணு: என்றும் நிலைத்து நிற்பவன்.
122. வராரோஹ: அடை யத்தக்க மேலானவன் (பரமபரநாதன்)
123. மஹாதபா: எல்லையில்லாத ஞானமுடையவன். (ஞானமூர்த்தி)

14. ஸர்வகஸ் ஸர்வவித் பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந:
வேதோ வேத விதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:

124. ஸர்வக: எல்லா உலகங்களையும் தன்னிடம் வைத்துள்ளவன்.
125. ஸர்வ வித் - எல்லாவற்றையும் அடைபவன்.
126. பாநு : விளக்கமாக இருப்பவன்.
127. விஷ்வக் ஸேந: எங்கும் எவரையும் காத்தலுக்குரிய சேனையை உடையவன்.
128. ஜநார்த்தந: பகைவர்களை அழிப்பவன்.
129. வேத: வேத சாஸ்திரங்களைத் தருபவன்.
130. வேதவித் - வேதப்பொருளை ஐயந்திரிபின்றி அறிந்தவன்.
131. அவ்யங்க - வேதாங்கங்கள் நிறைந்திருப்பவன்.
132. வேதாங்க: வேதங்களை அங்கமாக (சரீரமாக) உடையவன்.
133. வேதவித் - வேதப் பொருளான தர்மங்களை அறிந்தவன்.
134. கவி: (அனைத்தையும்) ஊடுருவிப் பார்ப்பவன்.

15. லோகாத்யக்ஷஸ் ஸுராத்ய÷க்ஷõ தர்மாத்யக்ஷ : க்ருதாக்ருத :
சதுராத்மா சதுர் வ்யூஹஸ் சதுர் தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ:

135. லோகாத்யக்ஷ: உலகங்களை நன்கு அறிந்தவன்.
136. ஸுராத்யக்ஷ - தேவர்களை நன்கு அறிந்தவன்.
137. தர்மாத்யக்ஷ: தர்மத்தை நன்கு அறிந்தவன்.
138. க்ருதாக்ருத: இகபரபலன்களை அளிப்பவன்.
139. சதுராத்மா - நான்கு வடிவங்களைத் தரிப்பவன்.
140. சதுர்வ்யூஹ: நான்கு வியூக மூர்த்திகளாக இருப்பவன்.
141. சதுர்த்தம்ஷட்ர: நான்கு முன்பற்களை உடையவன்.
142. சதுர்புஜ: நான்கு திருக்கைகளை உடையவன்.

16. ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி : புநர்வஸு

143. ப்ராஜிஷ்ணு: நான்கு திருக்கைகளுடன் கூடிய உருவத்துடன் பக்தர்களுக்குத் தன்னை ஒளிரச் செய்பவன்.
144. போஜநம் - உணவு, (அநுபவிப்பதற்குப் பொருளாய் இருப்பவன்.)
145. போக்தா - உண்பவன் (அநுபவிப்பவனாக இருப்பவன்,)
146. ஸஹிஷ்ணு: மன்னிப்பவன். (எல்லாப் பாவங்களையும் பொறுத்து அருள்பவன்.)
147. ஜகதாதிஜ: உலக ஆரம்பத்தில் இருப்பவன்.
148. அநக: குற்றமற்றவன்.
149. விஜய: வெற்றியை உடையவன் (வெற்றியை அருள்பவன்)
150. ஜேதா - வெற்றி பெறுபவன்.
151. விச்வ யோநி: உலககாரணன்.
152. புநர்வஸு: (எல்லாத் தேவர்களிடத்தும் அந்தராத்மாவாக வசிப்பவன்) வாழ்பவன்.

17. உபேந்த்ரோ வாமந: ப்ராம்சு : அமோகஸ் சுசிரூர்ஜித:
அதீந்த்ரஸ் ஸங்க்ரஹஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:

153. உபேந்த்ர: இந்திரனுக்குத் தம்பியானவன் (வாமனன்)
154. வாமனன்: ஒப்பற்ற குறள்வடிவினன் (குள்ளன்)
155. ப்ராம்சு: உயர்ந்தவன் (திரிவிக்ரமன்)
156. அமோக: பழுது படாதவன்.
157. சுசி - தூயவன் (அமலன்)
158. ஊர்ஜித: வல்லமை படைத்தவன்.
159. அதீந்த்ர: இந்திரனுக்கு மேம்பட்டவன்.
160. ஸங்க்ரஹ: எளிதில் கிரகிக்கப்படுபவன் (எளிவரும் இயல்பினன்)
161. ஸர்க - (தன்னைத் தானே பல உருவங்களில்) படைத்துக் கொள்பவன்.
162. த்ருதாத்மா-ஆன்மாக்களைத் தரித்திருப்பவன்.
163. நியம: அடக்குபவன். (அடக்கி அருள்புரிபவன்)
164. யம: (அனைத்தையும்) ஆள்பவன்.

18. வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத் ஸாஹோ மஹாபல:

165. வேத்ய: அறியக் கூடியவன். (யாவரும். அறிதற்கு எளிதானவன்)
166. வைத்ய: வித்தைகளைக் கற்றறிந்தவன், (பிறவி நோய்க்கு மருந்தை அறிந்தவன்.)
167. ஸதாயோகீ - எப்பொழுதும் விழித்தே இருப்பவன்.
168. வீரஹா - வீரர்களைக் கொல்பவன்.
169. மாதவ: வித்தைக்கு ஈசன்.
170. மது - தேனைக் காட்டிலும் இனியவன்.
171. அதீந்த்ரிய: புலன்களுக்கு அப்பாற்பட்டவன்.
172. மஹாமாய: மாயை என்னும் திரையினால், தன்னை மறைத்துக் கொள்ளும் சக்தி படைத்தவன்.
173. மஹோத்ஸாஹ: மிகவும் ஊக்கமுடையவன்.
174. மஹாபல: மிகவும் வலிமை வாய்ந்தவன்.

19. மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி:
அநிர்தேஸ்ய வபு: ஸ்ரீ மாந் அமேயாத்மா மஹா அத்ரித்ருக்

175. மஹாபுத்தி: பேரறிவாளன் (எல்லையில்லா ஞானி)
176. மஹாவீர்ய: மிகுந்த வீர்யம் உடையவன்.
177. மஹாசக்தி: மிகுந்த திறமை உடையவன்.
178. மஹாத்யுதி: மிகுந்த ஒளியுள்ளவன்.
179. அநிர்தேச்யவபு: உவமை சொல்லமுடியாத திருமேனி உடையவன்.
180. ஸ்ரீமாந்: திருமேனிக்குத் தகுந்த திருவாபரணங்களான செல்வம் படைத்தவன்.
181. அமேயாத்மா-அளவிட்டு அறியமுடியாதவன்.
182. மஹாத்ரித்ருக் - பெருமலையையும் தாங்கும் திறம் படைத்தவன்.

20. மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்பதி:
அநிருத்தஸ் சுரா நந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி:

183. மஹேஷ்வாஸ: சர மழை பொழிபவன் (வில்லாளி)
184. மஹீபர்த்தா: பூமியைத் தாங்குபவன்.
185. ஸ்ரீநிவாஸ: அலர்மேல் மங்கை உறைமார்பன்.
186. ஸதாங்கி - பக்தர்களுக்குப் புகலிடமாக உள்ளவன்.
187. அநிருத்த: ஒருவராலும் தடைசெய்ய முடியாதவன்.
188. ஸுராநந்த: அமரர்களுக்கு ஆனந்தம் அருளுபவன்.
189. கோவிந்த: தேவர்களால் துதித்தற்குரியவன் (ஏத்தும் சொல் மாலைகளைப் பெறுபவன்)
190. கோவிதாம்பதி: வேதத்தை அறிந்த ஞானிகளால் ஆராதிக்கப்படும் பகவான்.

21. மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம:
ஹிரண்ய நாபஸ் சுதபா : பத்மநாப : ப்ரஜாபதி:

191. மரீசி - கிரணமானவன் (ஒளியானவன்)
192. தமந: அடங்கச் செய்பவன்.
193. ஹம்ஸ: அன்னமாக அவதரித்தவன்.
194. ஸூபர்ண: அழகிய இறக்கைகளை உடையவன்.
195. புஜகோத்தம: திரு அனந்தாழ்வானுக்குத் தலைவன்.
196. ஹிரண்ய நாப: அழகிய நாபியை உடையவன்.
197. பத்மநாப: அழகிய தாமரையைத் தன் நாபியில் உடையவன்.
198. ஸூதபா: சிறந்த ஞான முள்ளவன்.
199. ப்ரஜாபதி: நாபித்தாமரையில் உண்டான பிரமனுக்குத் தலைவன்.

22. அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர:
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா சுராரிஹா

200. அம்ருத்யு: இறப்பில்லாதவன். (நித்ய மூர்த்தி)

(இரண்டாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

201. ஸர்வத்ருக் - அனைவரையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.
202. ஸிம்ஹ:- நரசிங்கப் பெருமான்.
203. ஸந்தாதா - பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவன்.
204. ஸந்திமாந் - தன்னைச் சேர்ந்தவரை விடாது என்றும் வைத்திருப்பவன்.
205. ஸ்திர: என்றும் நிலையாய் இருப்பவன்.
206. அஜ: பிறவாதவன். (பிறப்பில்லாதவன்)
207. துர்மர்ஷண: பகைவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒளியை உடையவன்.
208. சாஸ்தா-பகைவர்களைக் கலக்குபவன் (சாசனம் பண்ணுபவன்)
209. விச்ருதாத்மா - வியந்து கேட்கப்படும் சரித்திரம் உடையவன்.
210. ஸுராரிஹா - தேவர்களின் பகைவர்களைத் தொலைப்பவன்.

23. குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம:
நிமி÷ஷா அநிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ :

211. குருர்குருதம: பரமாசாரியன் (குருவுக்கெல்லாம் குரு)
212. தாம: உலகங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவன்.
213. ஸத்ய: அடியார்க்கு நல்லவன்.
214. ஸத்ய பராக்ரம: (வஞ்சனை அற்ற ஆற்றலுடையவன்.
215. நிமிஷ: கண்மூடி (பாகவத விரோதிகளுக்கு அருள் புரியாதவன்)
216. அநிமிஷ: கண்மூடாதவன். (கண்ணிமைக்காமல் பக்தர்களைக் காப்பவன்)
217. ஸ்ரக்வீ - மாலையணிந்தவன் (வைஜயந்தீ என்னும் மாலை அணிந்தவன்.)
218. வாசஸ்பதி - சொல்லுக்கு அதிபதி. (சொல் வல்லான்)
219. உதாரதீ - சிறந்த ஞான முடையவன்.

24. அக்ரணீர் க்ராமணீ : ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்

220. அக்ரணீ - அடியார்களை மேலும் மேலும் உயரச் செய்பவன்.
221. க்ராமணி - தலைவன்.
222. ஸ்ரீமாந் - சிறப்புடையவன்.
223. ந்யாய - நீதிமான்.
224. நேதா - கரைசேர்ப்பவன். (தின்திருவடிக் கீழ் சேர்ப்பவன்)
225. ஸமீரண: சிறந்த செயல்களைச் செய்பவன்.
226. ஸஹஸ்ரமூர்த்தா - ஆயிரம் தலைகளுடையவன்.
227. விஸ்வாத்மா - எங்கும் நிறைந்துள்ளவன்; பரவியுள்ளவன்.
228. ஸஹஸ்ராக்ஷ: ஆயிரம் கண்களை உடையவர். (விராட்ரூபி)
229. ஸஹஸ்ரபாத்: ஆயிரம் கால்களை உடையவர்.

25. ஆவர்த்தநோ நிவ்ருத் தாத்மா ஸம்வ்ருதஸ் ஸம்ப்ர மர்தந:
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீ தர:

230. ஆவர்த்தந: (உலகச் சக்கரத்தைச்) சுழலச் செய்பவன்.
231. நிவ்ருத்தாத்மா - எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன்.
232. ஸம்வ்ருத: நன்கு மறைக்கப்பட்டவன்: மறைந்துள்ளவன்.
233. ஸம்ப்ரமர்த்தந: (அஞ்ஞானமான இருளை அழித்து) உள்ளதை உள்ளபடி உணரச்செய்பவன்.
234. அஹஸ் ஸம்வர்த்தக: காலத்தை நடத்துபவன்.
235. வஹ்நி: உலகங்களைத் தாங்கிப் பரமாகாசமாக இருப்பவன்.
236. அநில:- வாழச் செய்பவன்.
237. தரணீதர:- தாங்குபவற்றையும் தாங்குபவன்.

26. சுப்ரஸாத : ப்ரஸந்நாத்மா விஸ்வத்ருக் விஸ்வபுக் விபு:
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராய்ணோ நர:

238. ஸுப்ரஸாத: மிகவும் அருள் புரிபவன்.
239. ப்ரஸந்நாத்மா - தெளிவான சிந்தை உடையவன்.
240. விச்வத்ருக் - எல்லாவற்றையும் படைப்பவன்.
241. விச்வபுக்விபு:- எங்கும் பரந்திருந்து காப்பவன்.
242. ஸத் கர்த்தா - நல்லார்களை இயல்பாகப் பாதுகாப்பவன்.
243. ஸத்க்ருத - நல்லார்களால் (சாதுக்களால்) வழிபடக்கூடியவன்.
244. ஸாது: தன்னை அண்டியவர்களுக்கு நல்லவன்.
245. ஜஹ்நு:- அடியார் அல்லாதவர்க்குத் தனது பெருமையைக் காட்டாதவன்.
246. நாராயண: நாராயணன். (எல்லா உயிர்களையும் தாங்குபவன்)
247. நர: அழியாதவன்.

27. அஸங்க்யேயோ அப்ர மேயாத்மா விஸிஷ்ட ஸ்ஸிஷ்டக்ருச் சுசி:
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்தி ஸாதந:

248. அஸங்க்யேய: எண்ணில் அடங்காதவன்.
249. அப்ரமேயாத்மா: எல்லாவற்றிலும் பரந்திருப்பவன்.
250. விசிஷ்ட:- தனிச் சிறப்புடையவன்.
251. சிஷ்டக்ருத் - (நற்குண நற்செயல்களை உடைய) சிஷ்டர்களை உயர்த்துபவன்.
252. சுசி: தூய்மையுடையவன். (தன்னியல்பான ஒளியுடையவன்)
253. ஸித்தார்த்த: எல்லாவற்றையும் உடையவன்.
254, 255. ஸித்தித:- சித்திகளை அளிப்பவன்.
256. ஸித்தி ஸாதந:- அடையும் உபாயமாக உள்ளவன்.

28. வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ரு÷ஷாதர :
வர்த்தநோ வர்த்த மாநஸ்ச விவிக்தஸ் ஸ்ருதி ஸாகர:

257. வ்ருஷாஹீ - அடையும் நாள் நல்ல நாளாக இருப்பவன்.
258. வ்ருஷப: கருணையைப் பொழிபவன்.
259. விஷ்ணு: எங்கும் பரந்திருப்பவன்.
260. வ்ருஷபர்வா - தருமமென்னும் படிகளால் அடையத்தக்கவன்.
261. வ்ரு÷ஷாதர:- தருமமே உருவான வயிற்றை உடையவன்.
262. வர்த்தந: (வழிபடுவோரை) வளர்ப்பவன்.
263. வர்த்தமாந - வளர்ச்சி அடைபவன்.
264. விவிக்த:- உலகில் யாரையும் விடத் தனிச் சிறப்புடையவன்.
265. ச்ருதி ஸாகர: வேதக்கடல் (வேத முடிவானவன்)

29. கபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸுநைக
ரூபோ ப்ருஹத் ரூபஸ் ஸிபிவிஷ்ட : ப்ரகாஸந:

266. ஸுபுஜ:- அழகிய தோள்களையுடையவன்.
267. துர்த்தர:- தடுக்க முடியாத வல்லமையுடையவன்.
268. வாக்மீ - பாராட்டும் படியான வாக்குடையவன்.
269. மஹேந்த்ர: சிறந்ததும் அழிவற்றதுமாகிய செல்வம் உடையவன்.
270. வஸுத:- தனமாகவே உள்ளவன்.
271, 272. நைகரூப:- பல உருவங்களை உடையவன்.
273. ப்ருஹத்ரூப: பெரிய உருவத்தை உடையவன்.
274. சிபிவிஷ்ட - ஒளிக்கிரணங்களிலும் வியாபித்துள்ளவன்.
275. ப்ரகாசந:- விளங்கச் செய்பவன்.

30. ஓஜஸ் தேஜோ த்யுதிதர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந:
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி:

276. ஓஜஸ் தேஜோத்யுதிதர:- வலிமை, பராக்கிரமம், ஒளி ஆகிய எல்லாம் உடையவன்.
277. ப்ரகாசாத்மா-ஒளிவடிவானவன்.
278. ப்ரதாபந: பகைவரைத் தனது கோபத்தால் எரித்துவிடுபவன்.
279. ருத்த:- சம்பத்தால் எப்போதும் நிரம்பியிருப்பவன்.
280. ஸ்பஷ்டாக்ஷர:- தெளிவாக எழுத்துகளை உச்சரிப்பவன்.
281. மந்த்ர:- மந்திரமாயிருப்பவன்.
282. சந்த்ராம் சு: வெண்மதிபோன்று குளிர்ந்த ஒளியை உடையவன்.
283. பாஸ்கரத்யுதி:- சூரியனைப்போன்ற ஒளியை உடையவன்.

31. அம்ருதாம் ஸுத்பவோ பாநு: ஸஸ பிந்துஸ் சுரேஸ்வர:
ஒளஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்ய தர்ம பராக்ரம:

284. அம்ருதாம் சூத்பவ:- அமுதமயமான கிரணங்களுடன் சந்திரனுக்குப் பிறப்பிடமாயுள்ளவன்.
285. பாநு:- சூரியன்.
286. சசபிந்து:- தீயவர்களை அழிப்பவன்.
287. ஸுரேஸ்வர:- இமையோர் தலைவன்.
288. ஒளஷதம்:- மருந்தாயிருப்பவன்.
289. ஜகத்ஸேது:- அணையாயிருப்பவன்.
290. ஸத்ய தர்மபராக்ரம:- கல்யாண குணங்களும், பராக்ரமும் என்றும் கொண்டிருப்பவன்.

32. பூதபவ்ய பவந்நாத : பவந : பாவநோ அநல:
காமஹா காம க்ருத் காந்த : காம : காம ப்ரத ப்ரபு :

291. பூதபவ்யபவந்நாத:- முக்காலங்களிலும் உள்ளவற்றுக்குத் தலைவன்.
292. பவந: சஞ்சரிப்பவன்.
293. பாவந: தூய்மை அளிப்பவன்.
294. அநல: (அருள் புரிவதில்) திருப்தி அடையாதவன்.
295. காமஹா - ஆசைகளைப் போக்குபவன்.
296. காமக்ருத் - ஆசைகளை (பக்தர்களுக்கு) வளர்ப்பவன்.
297. காந்த: விரும்பப் படுபவன்.
298. காம:- ஆசைப்படத்தகுந்தவன்.
299. காமப்ரத:- விருப்பங்களைக் கொடுப்பவன்.
300. ப்ரபு:- பிரபுவாய் இருப்பவன்.
(மூன்றாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

33. யுகாதி க்ருத் யுகா வர்த்தோ நைக மாயோ மஹாஸந:
அத்ருஸ்யோ அவ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜித நந்தஜித்

301. யுகாதிக்ருத் - யுக ஆரம்பத்தின் படைப்புக் கடவுள்.
302. யுகாவர்த்த: யுகங்களைத் திரும்பத் திரும்ப வரும்படிச் செய்பவன்.
303. நைகமாய: அநேக மாயைகளை உடையவன்.
304. மஹாசந: (உலகமுண்ட) பெருவயிற்றன்.
305. அதருசய: காணமுடியாதவன்.
306. வ்யக்த ரூப: தெளிவாகக் காணப்படும் திருமேனியை உடையவன்.
307. ஸஹஸ்ரஜித் - காலங்களை வெற்றி கொள்பவன்.
308. அநந்தஜித் - எல்லை காண முடியாத திருமேனியை உடையவன்.

34. இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட : ஸிகண்டீ நகு÷ஷா வ்ருஷ
க்ரோதஹா க்ரோத க்ருத் கர்த்தா விஸ்வ பாஹுர் மஹீதர:

309. இஷ்ட அவிசிஷ்ட: வேறுபாடு எதுவுமின்றி விரும்பப்படுபவர்.
310. சிஷ்டேஷ்ட: பெரியோரால் விரும்பப்படுபவன்.
311. சிகண்டி - சிறந்த தலையணியுடையவன்.
312. நஹுஷ: கட்டுபவன்.
313. வ்ருஷ: (எல்லா விருப்பங்களையும்) பொழிபவன்.
314. க்ரோதஹா - கோபத்தை வென்றவன்.
315. க்ரோதக்ருத் - கோபமுள்ளவன்.
316. கர்த்தா - வெட்டுபவன்.
317. விச்வபாஹு: நன்மை செய்யும் புயங்களை உடையவன்.
318. மஹீதா: பூமியைத் தாங்கி நிற்பவன்.

35. அச்யுத: ப்ரதித :ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ:
அபாந்நிதி ரதிஷ்டாந மப்ரமத்த : ப்ரதிஷ்டித :

319. அச்யுத: நழுவாதவன்.
320. ப்ரதித: புகழ்பெற்றவன்.
321. ப்ராண: உயிரானவன்.
322, 323. வாஸவாநுஜ: இந்திரனுக்குப் பின் பிறந்தவன்.
324. அபாம்நிதி: கடல்களுக்கு ஆதாரமானவன்.
325. அதிஷ்டாநம்: ஆசனமாக இருந்தவன்.
326. அப்ரமத்த: ஊக்கம் உடையவன், விழிப்புடையவன்.
327. ப்ரதிஷ்டித: நிலை பெற்றவன்.

36. ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயு வாஹந:
வாசுதேவோ ப்ருஹத் பாநு ராதிதேவ : புரந்தர:

328. ஸ்கந்த: வற்றச் செய்பவன்.
329. ஸ்கந்ததர: அசுரர்களை அழித்த தேவ சேனாதிபதியைத் தாங்குபவன்.
330. துர்ய: தாங்குபவன்.
331. வரத: வரங்களைத் தருபவன்.
332. வாயு வாஹந: வாயுவை நடத்திச் செல்பவன்.
333. வாஸுதேவ: வாசுதேவன். (எங்கும் வசிப்பவன்)
334. ப்ருஹத்பாநு: மிக்க ஒளியையுடையவன்.
335. ஆதிதேவ: ஊழி முதல்வன்.
336. புரந்தர: இருப்பிடங்களை (அசுரர்களின்) பிளப்பவன்.

37. அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸுரஸ் ஸெளரிர் ஜநேஸ்வர:
அநுகூலஸ் ஸதாவர்த்த : பத்மீ பத்ம நிபேக்ஷண:

337. அசோக: துன்பங்களை அழிப்பவன்.
338. தாரண: தாண்டுவிப்பவன்.
339. தார: காப்பவன்
340. சூர: சமர்த்தன்.
341. சௌரி: சூரனின் பிள்ளை.
342. ஜநேச்வர: பெருவெள்ளம் போன்ற செல்வம் படைத்தவன்.
343. அநுகூல: எல்லைக்குள் நிற்பவன்.
344. சதாவர்த்த: சுழல்கள் பலவற்றை உடையவன்.
345. பத்மீ - தாமரையைக் கையில் உடையவன்.
346. பத்மநிபேக்ஷண: இனிய பார்வையை உடையவன்.

38. பத்ம நாபோ அரவிந்தாக்ஷ : பத்ம கர்ப்பஸ் ஸரீரப்ருத்
மஹர்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹா÷க்ஷõ கருட த்வஜ:

347. பத்மநாப: தாமரை மலரை உந்தியில் பெற்ற தனிப்பெரும் நாயகன்.
348. அரவிந்தாக்ஷ: செந்தாமரைக் கண்ணன்.
349. பத்ம கர்ப்ப: தாமரையை ஆசனமாக உடையவன். (இதயக் கமலத்தில் எழுந்தருளியிருப்பவன்.)
350. சரீரப்ருத் - சரீரத்தைத் தாங்குபவன்.
351. மஹர்த்தி: பெருஞ்செல்வம் உடையவன்.
352. ருத்த: விருத்தியடைபவன்.
353. வ்ருத்தாத்மா - நிறைவுற்ற ஆத்ம வடிவினன்.
354. மஹாக்ஷ: சிறந்த அச்சினை உடைய வாகனமுடையவன்.
355. கருடத்வஜ: கருடக்கொடி உடையவன்.

39. அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர் ஹரி:
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ் ஜய:

356. அதுல: ஒப்பில்லாதவன்.
357. சரப: அழிப்பவன்.
358. பீம: (தன் ஆணையைக் கடப்பவருக்கு) பயங்கரன்.
359. ஸமயஜ்ஞ: காலம் அறிந்தவன்.
360. ஹவிர்ஹரி: அவியுணவை ஏற்பவன்.
361. ஸர்வலக்ஷணலக்ஷண்ய: எல்லாச் சுபலட்சணங்களும் பொருந்தியவன்.
362. லக்ஷ்மீவாந்- பூமகளின் கேள்வன்.
363. ஸமிதிஞ்ஜய: வெற்றி மகளை உடையவன்.

40. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ:
மஹீதரோ மஹாபாகோ வேகவாந் அமிதாஸந:

364. விக்ஷர: குறைவற்றவன்
365. ரோஹித: சிவந்தவன்.
366. மார்க்க: தேடப்படுபவன்.
367. ஹேது: காரணமாயிருப்பவன்.
368. தாமோதர: உலகங்களை வயிற்றில் தாங்குபவன்.
369. ஸஹ: பொறுமையுள்ளவன்.
370. மஹீதர: பூமியைத் தாங்குபவன்.
371. மஹாபாக - மகா பாக்யமுடையவன்.
372. வேக வாந் - வேகம் உள்ளவன்.
373. அமிதாசந: பெருத்த உணவு உண்பவன்.

41. உத்பவ : ÷க்ஷõபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப : பரமேஸ்வர:
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ:

374. உத்பவ: பந்தத்தை விலக்குபவன்.
375. ÷க்ஷõபண: (படைக்குங்காலத்தில்) கலக்குபவன்.
376. தேவ: விளையாடுபவன்.
377. ஸ்ரீகர்ப்ப: திருமகளைப் பிரியாதவன்.
378. பரமேச்வர: பெரிய மேன்மையை உடையவன்.
379. கரணம்: உபாயமாயிருப்பவன்.
380. காரணம்: இயக்குபவன்.
381. கர்த்தா: செயல்படுபவன்.
382. விகர்த்தா: மாறுதல் அடைபவன்.
383. கஹந - அறிவுக் கெட்டாதவன்.
384. குஹ - காப்பாற்றுபவன்.

42. வ்யவஸாயோ வ்யவஸ் தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநதோ த்ருவ:
பரர்த்தி : பரம ஸ்பஷ்டஸ் துஷ்ட : புஷ்டஸ் சுபேக்ஷண:

385. வ்யவஸாய: விண்மீன்களுக்கு ஆதாரமாய் இருப்பவன்.
386. வ்யவஸ்தாந: காலமாறுதல்களுக்கு அடிப்படையானவன.
387. ஸம்ஸ்தாந: எல்லாவற்றையும் ஒரு கால கட்டத்தில் முடிப்பவன்.
388. ஸ்தாநத: மேலான வீட்டினை (ஸ்தானத்தை) அளிப்பவன்.
389. த்ருவ: நிலைத்திருப்பவன்.
390. பரர்த்தி: மேலான குணபூர்த்தி உள்ளவன்.
391. பரமஸ்பஷ்ட: வெளிப்படையாகக் காணும் மேன்மையுடையவன்.
392. துஷ்ட: மகிழ்ச்சி நிறைந்தவன்.
393. புஷ்ட : நிரம்பியவன்.
394. சுபேக்ஷண: மங்களமான பார்வையுடையவன்.

43. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோநய:
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம:

395. ராம: யாவரையும் மகிழச் செய்பவன்.
396. விராம: பிறரை ஓயச் செய்பவன்.
397. விரத: ஆசையை அறவே நீக்கியவன்.
398. மார்க்க: தேடப் படுபவன்.
399. நேய: கட்டளையிடப் பெறுபவன்.
400. நய: நடத்துபவன்.

(நான்காம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
401. அநய: பகைவரால் அணுக முடியாதவன்.
402. வீர: வீரத்தால் எதிரிகளை நடுங்கச்செய்பவன்.
403. சக்திமதாம் ச்ரேஷ்ட - சக்தி படைத்தவருள் சிறந்தவன்.
404. தர்ம: தருமமே வடிவானவன்.
405. தர்ம விதுத்தம: தருமம் அறிந்தவருள் முதல்வன்.

44. வைகுண்ட : புருஷ ப்ராண : ப்ராணத : ப்ரணவ :ப்ருது:
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ:

406. வைகுண்ட: தடைகளைப் போக்கித் தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்.
407. புருஷ: தூய்மை அளிப்பவன்.
408. ப்ராண: உய்விப்பவன் (உயிராயிருப்பவன்.)
409. ப்ராணத: உயிரை அளிப்பவன்.
410. ப்ரணம்: வணங்கத்தக்கவன்.
411. ப்ருது: பெரும்புகழுக்குரியவன்.
412. ஹிரண்ய கர்ப்ப: பொன்புதையலைப் போன்றவன்.
413. சத்ருக்ந: பகைவர்களை முடிப்பவன்.
414. வ்யாப்த: அன்பு, கருணை போன்றவற்றால் நிரம்பியவன்.
415. வாயு: செல்பவன் (இருக்கும் இடம் தேடி அருள் புரிபவன்)
416. அதோக்ஷஜ: அநுபவிக்க அனுபவிக்கக் குறையாதவன்.

45. ருதுஸ் சுதர்ஸந : கால : பரமேஷ்டீ பரிக்ரஹ :
உக்ரஸ் ஸம்வத்ஸரோ த÷க்ஷõ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண:

417. ரிது: அணுகுபவன்: (தானே வந்து புகுபவன்)
418. ஸுதர்சந: பார்வைக் கினியவன்.
419. கால: தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்.
420. பரமேஷ்டீ: பரமபதத்தில் உள்ளவன்.
421. பரிக்ரஹ: யாவற்றையும் தன்னுடன் சேர்த்துக் கொள்பவன்.
422. உக்ர: (பகைவர்களிடத்துக்) கோபமானவன்.
423. ஸம்வத்ஸர: பொருந்தி வாழ்பவன்.
424. தக்ஷ: விரைந்து செயல்படுபவன்.
425. வச்ராம: ஓய்வெடுக்கும் இடமாயிருப்பவன்.
426. விச்வ தக்ஷிண: எல்லார்க்கும் நல்லவன்.

46. விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு : ப்ரமாணம் பீஜமவ்யயம்
அர்த்தோ அநர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந:

427. விஸ்தார: விஸ்தார மானவன்.
428. ஸ்தாவரஸ்தாணு - ஆறியிருப்பவன். (மனச்சாந்தியுடையவன்)
429. ப்ரமாணம்: பிரமாண மானவன். (அதிகாரியாயிருப்பவன்)
430. பீஜம் அவ்யயம் - அழிவில்லாத வித்தாக இருப்பவன்.
431. அர்த்த: அடையத்தக்கதான பயனாக உள்ளவன்.
432. அநர்த்த: அற்பப் பயனாய் இருப்பவன்.
433. மஹாகோச: வைத்த மாநிதி: (ஊனமில் செல்வன்)
434. மஹா போக: இன்பங்கள் அனைத்தும் அளிப்பவன்.
435. மஹாதந: அளவற்ற பெருந்தனமாய் இருப்பவன்.

47. அநிர் விண்ணஸ் ஸ்தவிஷ்டோ பூர் தர்ம யூபோ மஹாமக:
ந க்ஷத்ர நேமிர் ந க்ஷத்ரீ க்ஷம: க்ஷõமஸ் ஸமீஹந:

436. அநிர்விண்ண: சோம்பல் இல்லாதவன்.
437. ஸ்தவிஷ்ட: பெருத்தவன் (ஸ்தூல வடிவினன்)
438. பூ: அனைத்தையும் தாங்குபவன்.
439. தர்மயூப: தர்மத்தைத் தலைமையாகக் கொண்டவன்.
440. மஹாமக: வேள்வி வடிவானவன்.
441. நக்ஷத்ர நேமி: விண்மீன்களை இயக்குபவன்.
442. நக்ஷத்ரீ: விண்மீன்களை உடையவன்.
443. க்ஷம: பொறுமையுள்ளவன்.
444. க்ஷõம: குறைந்து உள்ளவன் (நுட்பமானவன்)
445. ஸமீஹத: பிறரை இயங்கச் செய்பவன்.

48. யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாம் கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்

446. யஜ்ஞ: யாகமாக உள்ளவன்.
447. இஜ்ய: யாகத்தால் வழி படத்தக்கவன்.
448. மஹேஜ்ய: (பிறதெய்வங்களின்) சிறந்த வழிபாட்டையும் ஏற்பவன்.
449. க்ரது: செய்யப்படும் அனைத்துக் கர்மாக்களாலும் ஆராதிக்கப்படுபவன்.
450. ஸத்ரம்: ஸ்திரரூபியானவன் (ரிஷிகளால் பல யாகங்களால் பல காலங்களில் செய்யப்படும் யாக வடிவானவன்.)
451. ஸதாம்கதி: சாதுக்களுக்கு அடையத்தக்கவன்.
452. ஸர்வதர்சீ: எல்லாவற்றையும் பார்த்து அறிபவன்.
453. நிவ்ருத்தாத்மா: எந்தப் பொருளிலும் பற்றில்லாத மனமுடையவன்.
454. ஸர்வஜ்ஞ: தானே சிறந்த தர்மம், தானே சிறந்த பயன் என்பதை அறிந்தவன்.
455. ஜ்ஞாநம் உத்தமம்: மேலான ஞானமயமானவன்.

49. சுவ்ரதஸ் சுமுகஸ் ஸூக்ஷ்மஸ் சுகோஷஸ் சுகதஸ் சுஹ்ருத் :
மநோ ஹரோ ஜித க்ரோதோ வீரபாஹுர் விதாரண:

456. ஸுவ்ரத: கர்மத்தை விடாமல் அநுஷ்டிப்பவன்.
457. ஸுமுக: மலர்ந்த திருமுகம் உடையவன்.
458. ஸுக்ஷம: மிகவும் நுட்பமானவன்.
459. ஸுகோஷ: வேதத்தின் குரலாக உள்ளவன். (வேதங்களாலும், உபநிஷதங்களாலும் ஒலிக்கப்படுபவன்.)
460. ஸுகத: மேலான இன்பமயமான பயன் தருபவன்.
461. ஸுஹ்ருத்- சிறந்த நண்பனாக இருப்பவன்.
462. மநோஹர: மனதைக் கவரக் கூடியவன்.
463. ஜிதக்ரோத: கோபத்தை வென்றவன்.
464. வீரபாஹு: மிக்க பலமுடைய கைகளையுடையவன்.
465. விதாரண: வெட்டுபவன்.

50. ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்:
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்ந கர்ப்போ தநேஸ்வர:

466. ஸ்வாபந: தூங்கச் செய்பவன். (எதிரிகளை நினைவிழக்கச் செய்பவன்.)
467. ஸ்வவச: தன் வசத்தில் எப்போதும் இருப்பவன்.
468. வ்யாபீ: எங்கும் பரந்திருப்பவன்.
469. நைகாத்மா: அநேக உருவங்களில் இருப்பவன்.
470. நைகர்மக்ருத்: அநேக செயல்களைச் செய்பவன்.
471. வத்ஸர: எல்லாப் பொருளிலும், எல்லாரிடத்தும் உள்ளுறைபவன்.
472. வத்ஸல: அன்புடையவன்.
473. வத்ஸீ: குழந்தைகளை (ஆன்மாக்களை) உடையவன்.
474. ரத்ந கர்ப்ப: (சங்கு சக்கரம்) முதலான நிதியை யுடையவன்.
475. தநேஸ்வர: ஐஸ்வர்யங்களை உடனே அளிப்பவன்.
-----------------------------------------
ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்

வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

அதஸு புஷ்பஸங்காசம் ஹாரநூபுர சோபிதம்
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்த்ர நிபாநநம்
விலஸத் குண்டலதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம்
பர்ஹி பிஞ்சாவசூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீ மூத ஸந்நிபம்
யாதவானாம் சிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ருக்மிணீ கேலிசம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம்
அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம்!
ஸ்ரீநிகேதம் மஹேஸ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வந்மாலா விராஜிதம்
சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி
வைகுண்ட ஏகாதசியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?

ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று  பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும்.
வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதியில் விமரிசையான ஏற்பாடுகள்!

திருப்பதி: வரும், 11ம் தேதி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதியில், விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமலையில், வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே, வைகுண்ட வாசல் திறந்திருக்கும். அந்த, இரண்டு நாட்களும், பக்தர்கள் அவ்வழியில், தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். அதனால், திருமலையில், இவ்விரு நாட்களும், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். நேற்று காலை முதல், திருமலையில் வாடகை அறையின் முன்பதிவு தொடங்கியது. மாலை நேரத்திற்குள், 5,000 அறைகள், வி.ஐ.பி.,களுக்காக முன்பதிவு செய்யப்பட்டன. இன்று, இந்த முன்பதிவு, 7,000த்தை தொடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலையில், பக்தர்கள் தங்க, வாடகைக்கு விடப்படும் அறைகளின் எண்ணிக்கை, 8,000. இதில், 7,000 அறைகள், வி.ஐ.பி.,களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், முன்பதிவு செய்யப்படுகிறது. மீதம் உள்ள, 1,000 அறைகளில், 50, 100 ரூபாய் வாடகை அறைகள் மட்டுமே, சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கிடையே, வைகுண்ட ஏகாதசிக்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அனைத்து ஏற்பாடுகளும், திருமலையில் தயார் நிலையில் உள்ளன. அதிகாலை, 1:45 மணியிலிருந்து, காலை, 7:00 மணி வரை, வி.ஐ.பி., தரிசனம் முடிந்த பின், தர்ம தரிசனமும், பாத யாத்திரை பக்தர்களின் தரிசனமும் தொடங்க உள்ளது. பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, 10ம் தேதி மதியம், 2:00 மணி முதல், வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசி, துவாதசி இரண்டு நாளுக்கும், 40 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. திருமலைக்கு வரும், பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, வி.ஐ.பி.,களுக்காக, 60 டிக்கெட்டுகள் மட்டுமே, அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக, தேவஸ்தான செயல் இணை அதிகாரி, சீனிவாசராஜு தெரிவித்தார்.
-----------------------------------------
கிருஷ்ண பாதம்

உலகினை அளந்திட்ட பாதம்!
உயிர்களுள் இழைந்திட்ட பாதம்!
அலர்மேலு அணைத்திட்ட பாதம்!
அணைத்துயிர் பிணைத்திட்ட பாதம்!
புலர்காலை துயில் எழுப்ப
புவியுயிர் மலரிட்ட பாதம்!
மலர் மங்கை ஆண்டா ளுமே
மகிழ்வுடன் மனம் தொட்ட பாதம்!

கற்பகத் தருமலர் பாதம்!
கண்ணனின் சிறுமலர் பாதம்!
வற்றிடா அருள்மலர் பாதம்!
வண்ணனின் வளர்நிறை பாதம்!
பற்றிடும் பதமலர் பாதம்!
பார்த்தனுக் கருளிய பாதம்!
சுற்றிடும் காந்தனின் பாதம்!
சுகம் தரும் சாந்தனின் பாதம்!

தரையினிற் நடந்திட்ட பாதம்!
தமையுடன் கடந்திட்ட பாதம்!
மறையொலி உரைத்திட்டோன் பாதம்!
மனமொழி நிறைத்திட்டோன் பாதம்!
மறைமுனி அழைத்திட்ட பாதம்!
மகிழ்குரு மலைத்திட்ட பாதம்!
உரை சொல்லும் உன்னத பாதம்!
உயர்ந்திட்ட மன்னவ பாதம்!

ஆழிரேகை உயர்த்திட்ட பாதம்!
அகலிகையை உயிர்த்திட்ட பாதம்!
ஆலிலையும் அணைத்திட்ட பாதம்!
ஆயர்குலம் பிணைத்திட்ட பாதம்!
காளிங்க நர்த்தன பாதம்!
காத்தருளும் வித்தக பாதம்!
மாலெனும் உயர்ந்தவன் பாதம்!
மாதுடை கவர்ந்தவன் பாதம்!

கண்ணனாய் ஓடிய பாதம்!
கால்விரல் தேடிய பாதம்!
வண்ணமாய் மாறிய பாதம்!
வனக்குகன் நாடிய பாதம்!
மண்ணினுள் ஆடிய பாதம்!
மணிப் பொன்னும் சூடிய பாதம்!
வெண்ணுறி விரும்பியோன் பாதம்!
வெள்ளத்தை அருந்தியோன் பாதம்!

உலகினைப் படைத்தவன் பாதம்!
உயிர்களைக் காப்பவன் பாதம்!
அழகினிற் கவர்ந்தவன் பாதம்!
அனைத்திற்கும் பகிர்ந்தவன் பாதம்!
துலங்கிடம் துணைவனின் பாதம்!
துணைவரும் இறைவனின் பாதம்!
வழங்கிடும் வள்ளலின் பாதம்!
வாமன வல்லவன் பாதம்!

ஆயருடன் ஆடிய பாதம்!
ஆழ்கடல் தேடிய பாதம்!
மாயனாம் மன்னவன் பாதம்!
மயக்கிடும் என்னவன் பாதம்!
தாயென நிற்பவன் பாதம்!
தரணியின் கற்பக பாதம்!
தூயனாய் ஆள்பவன் பாதம்!
துளசியுள் வாழ்பவன் பாதம்!

அறவழி காட்டிடும் பாதம்!
அருள்நெறி ஊட்டிடும் பாதம்!
உறவென உணர்த்திடும் பாதம்!
உதவிடும் உத்தமன் பாதம்!
சுரங்களின் நாயகன் பாதம்!
சுகம் தரும் தென்றலின் பாதம்!
வரங்களை வழங்குவோன் பாதம்!
வசந்தமாய் துலங்குவோன் பாதம்!

பரமபத பனிமலர் பாதம்!
பக்தர்கள் அணிமலர் பாதம்!
கரம் தரும் கண்ணனின் பாதம்!
கலியுக மன்னனின் பாதம்!
அரசனாய் ஆள்பவன் பாதம்!
அகத்தினுள் வாழ்பவன் பாதம்!
பரம்பொருள் வேந்தனின் பாதம்!
பரவசம் ஈந்தவன் பாதம்!

பொற்கழல் அணிந்தவன் பாதம்!
பொல்கஜன் அழித்தவன் பாதம்!
வற்றிடா செல்வனின் பாதம்!
வழியுரை சொல்பவன் பாதம்!
முற்றிலா முகுந்தனின் பாதம்!
முழுமதி வதனனின் பாதம்!
ஒற்றுமை விமலனின் பாதம்!
ஒளிர்ந்திடும் நிமலனின் பாதம்!

கீதையைப் பகிர்ந்தவன் பாதம்!
கிளிமலர் குழலவன் பாதம்!
பாதையை உரைத்தவன் பாதம்!
பார்த்திப சாரதி பாதம்!
மாதுடை கொடுத்தவன் பாதம்!
மடிதுயர் தடுத்தவன் பாதம்!
பாதுகை வழங்கிய பாதம்!
பரதனும் வணங்கிய பாதம்!

கூடல் அழகரின் சுந்தர பாதம்!
மதுர வல்லியின் மனமகிழ் பாதம்!
ஆடல் மயில் சோலை அழகரின் பாதம்!
அமுத கள்ளழக காந்தனின் பாதம்!
ஈடிலா சீனிவாச வேங்கடன் பாதம்!
வெங்கடாஜலபதியின் பிரஸன்ன பாதம்!
காடு கஜனருள் காளமேக பாதம்!
மோகன வல்லியின் மோகூரான் பாதம்!

கருடவாகன ஸ்ரீ வத்ஸ பாதம்!
கமலக் கண்ணனின் ஸ்ரீஹரி பாதம்!
தருவென வரம் தரும் ஸ்ரீராமர் பாதம்!
தாமோதரனாம் ஸ்ரீதரன் பாதம்!
புரு÷ஷாத்தமனின் புண்ணிய பாதம்!
பீதாம்பரனின் வைகுந்த பாதம்!
பெரு வினை தீர்க்கும் கிருஷ்ணரின் பாதம்!
விதிதனை மாற்றும் விஸ்வரூப பாதம்!

குவலயம் முறித்திட்ட சதுர்புஜ பாதம்!
குவியலாய் வரமிடும் குருவாயூர் பாதம்!
தவமென கிடைத்திட்ட தயாபரன் பாதம்!
தானென துணைவரும் தசாவதாரன் பாதம்!
நவமணி யொளிதரும் நர்த்தன பாதம்!
நம்பினோர்க் கருளிடும் நாரண பாதம்!
உவகையின் மொழியுடை உச்சித பாதம்!
உண்மையின் தத்துவ அச்சுத பாதம்!

பிரளய வெள்ளத்தில் ஆடிய பாதம்!
பிரகலாதன் வாய் சூடிய பாதம்!
இரணியனை வதம் செய்த வீரத்தின் பாதம்!
இலையினிற் இழைந்திட்ட கோகுல பாதம்!
மரணபயம் மாய்த்திடும் மாதவன் பாதம்!
மது சூதனனின் மலரிதழ் பாதம்!
பரமதயாளனின் பத்ம நற் பாதம்!
பாண்டவ தூதனின் பூரண பாதம்!

சங்கு சக்கரனின் சகஸ்ரம பாதம்!
சத்ய நாராயணனின் திவ்ய பொற்பாதம்!
ரங்க நாதனின் சயன பொற்பாதம்!
ராதா கேசவ ராகவ பாதம்!
தங்க நான்மறை மீட்டவன் பாதம்!
மந்தார மத்தினை நிறுத்தியோன் பாதம்!
எங்கும் நிறைந்திட்ட பலராமர் பாதம்!
எண்ணிய தளத்திடும் பரசுராம பாதம்!

அழகிய மணவாளனின் ஆராவதன் பாதம்!
அப்பக் குடத்தானின் அப்பலரெங்க பாதம்!
அழகிய சிங்கரின் குந்த நாயக பாதம்!
ஆதி கேசவ சியாமளமேனியர் பாதம்!
உலகளந்த பெருமானின் திரிவிக்கிரம பாதம்!
உய்யவந்தானின் அபயப்பிரத பாதம்!
நிலாத்திங்கள் துண்டத்தான் அருமாகடற் பாதம்!
காய்சின வேந்தனின் சுந்தரர் ராஜ பாதம்!

மீனாள் உமையாள் அண்ணன் பெருமாள் பாதம்!
சித்திரரத வல்லப பவளகனிவாய் பாதம்!
தேனாய் வரமிடும் ஹரசாப விமோசனர் பாதம்!
மிதிலை வில்முறித்த சீதா மணவாளர் பாதம்!
மானான மாரீசனை வதைத்திட்ட பாதம்!
மாயச் சகடத்தினை உதைத்திட்ட பாதம்!
தேன் துயிலரங்க ரெங்கநாதர் பாதம்!
ஆண்டளக்கும் ஐயன் மணிக்குன்றன் பாதம்!

விஜயராகவ பிரகதவரத பாதம்!
வீரராகவ மரகத மதுர பாதம்!
கஜேந்திர வரத ரமாமணி நயன பாதம்!
சுகந்தவன நாத வீர சயன பாதம்!
வசந்த வல்வில் வாசுதேவ பாதம்!
வையங் காத்திட்ட புஷ்ப பூரண பாதம்!
திசை யெலாம் நிறைந்திட்ட திருநறையாண் பாதம்!
தீபப் பிரகாச யோக நரசிம்மர் பாதம்!

பக்தவச்சலனின் பரமபத பாதம்!
பத்தராவிப் பெருமாள் திவ்யப் பிரகாச பாதம்!
சக்ரதர சந்திர சூடப்பெருமாள் பாதம்!
சௌந்தர்ய ராஜனின் ஜகதீஸ்வர பாதம்!
அக்கரை வண்ண ஆதிவராஹன் பாதம்!
அம்ருத நாராயண கோலப்பிரான் பாதம்!
அகோபில நரசின் அரவிந்த லோசன பாதம்!
அனந்த பத்மநாப ஆதிகேசவ பாதம்!

திருவாழ் மார்பன் ஒப்பிலியப்ப பாதம்!
தேவாதிராஜன் செங்கண்மால் பாதம்!
திருமூழிக் களத்தான் நின்ற நம்பி பாதம்!
காட்கரையப்பன் கமலநாத பாதம்!
திருக்குறளப்பன் தேவப்பிரான் பாதம்!
யதோத்காரி கருணாகர கண்ணபிரான் பாதம்!
உரக மெல்லணையான் சௌமிய நாராயண பாதம்!
இமய வரப்பனாம் மாயப்பிரான் பாதம்!

மகர நெடுங்குழை ராஜகோபால் பாதம்!
வடிவழகி நம்பி ஜகத்ரட்சக பாதம்!
சகல நலந்தரும் சத்யகிரியான் பாதம்!
பத்ரி நாராயண பாலாஜியின் பாதம்!
பகலவ ஒளிதரும் பாம்பணையப்ப பாதம்!
விஜயாசனன சாரங்கபாணி பாதம்!
சுகநலம் அருளிடும் சாரநாதன் பாதம்!
குடமாடு கூத்தனருள் ஆமருவியப்பன் பாதம்!

பவளவண்ணனின் பரிமளரங்க பாதம்!
தோத்தாத்ரி நாதன் கல்யாண நாராயண பாதம்!
தவமென வரம் தரும் வேங்கட கிருஷ்ண பாதம்!
தர்மத்தின் வழி நின்ற தாடாளன் பாதம்!
நவமணி ஒளிதரும் லட்சுமி வராஹ பாதம்!
சயனப் பெருமாள் சாந்த நரசிம்ம பாதம்!
கவலைகள் களைந்திடும் தெய்வநாயகன் பாதம்!
வெண்சுடர்ப் பெருமாள் பேரருளாளன் பாதம்!

சத்திய மூர்த்தியின் ஜகந் நாத பாதம்!
நீலமுகில் வண்ணன் ஆதிப்பிரான் பாதம்!
நித்திரை அழகுடை பாண்டுரெங்க பாதம்!
நீர் வண்ண நாயக கள்வரின் பாதம்!
வைத்த மாநிதி வடபத்ர சாயீ பாதம்!
கோலவில்லிராமன் புண்டரீகாட்சன் பாதம்!
வித்தக பெரிய பெருமாள் சௌரிராஜ பாதம்!
சொன்ன வண்ணம் செய்த நம்பெருமாள் பாதம்!

தாமரைக் கண்ணுடையன் தேவிப் பெருமாள் பாதம்!
தானென துணைவரும் நந்தாவிளக்கு பாதம்!
தாமரையாள் கேள்வன் வேதராஜ பாதம்!
வயலாளி மணவாள கோபாலகிருஷ்ண பாதம்!
ராமஜெனகை நாராயண சலசயனர் பாதம்!
நம்பிக்கை ஒளியூட்டும் நான்மதியர் பாதம்!
வாமனனாய் உருவெடுத்த உலகளந்தோன் பாதம்!
வளங்கள் பெற வரங்கள் தரும் ஸ்ரீ வாரி பாதம்!

கருடாழ்வார் அன்பாய் சுமந்திட்ட பாதம்!
ஹனுமந்தன் நெஞ்சுள் நிறைந்திட்ட பாதம்!
நறுவாழ்வு நலமளிக்கும் நாவாய்குந்தன் பாதம்!
பெண்மையினால் அமுதுகாத்த மோகினியின் பாதம்!
தரணியெலாம் போற்றுகின்ற தாமரைக் கண்ணன் பாதம்!
தசரதனின் செல்வனான ராமசுப பாதம்!
நரசிங்க வல்லியார்க்கு நெகிழ்வு தந்து பாதம்!
நம்பிக்கை நலன் கொடுக்கும் லட்சுமிபதி பாதம்!

வசுதேவர் தேவகிக்கு தரிசனம் தந்த பாதம்!
யசோதா நந்தரிடம் கிருஷ்ணராய் வந்த பாதம்!
சிசுவதை கம்சனவன் ஆணவம் ஒழித்த பாதம்!
பூதகியை தாடகையை புவியினிலே அழித்த பாதம்!
பசுங்கன்று வற்காசுரனை விளாமரத்தில் வதைத்த பாதம்!
அகாசுரன் பகாசுரனின் ஆற்றலெலாம் சிதைத்த பாதம்!
விசுவாச நந்தரையும் இந்திரனிடம் மீட்டோன் பாதம்!
கோவர்த்தனம் பிடித்து கல்மழையில் காத்தோன் பாதம்!

கதிரோனை சக்கரத்தால் மறைத்திட்டோன் பாதம்!
பாண்டவர்க்கு ஆ(ட்)சி தந்து நிறைத்திட்டோன் பாதம்!
துதியாத துரியோதனை சாய்த்திட்டோன் பாதம்!
மதியாத துச்சாதனனை மாய்த்திட்டோன் பாதம்!
பதிவிரதை திரௌபதிக்கு துகில் கொடுத்தோன் பாதம்!
கர்ணனுக்கும் அருள் வழங்கி தாரை ஏற்றோன் பாதம்!
விதுரநீதி தழைத்திடவே விருந்துண்டோன் பாதம்!
விளையாட்டாய் அத்தனையும் ஆட்டுவிப்போன் பாதம்!

விராதனை புவியுள் அமிழ்த்திட்ட பாதம்!
ஜடாயு சபரியன்புள் அமிழ்ந்திட்ட பாதம்!
மராமர மரத்தினையே சிதைத்திட்ட பாதம்!
வாலியை போரினிலே வதைத்திட்ட பாதம்!
இராவண கர்வத்தினை வீழ்த்திட்டோன் பாதம்!
விபீடணர், சுக்ரீவரை வாழ்த்திட்டோன் பாதம்!
பராபரம் தானெனவே உணர்த்திட்ட பாதம்!
பரம்பொருள் கல்கியாக உயர்ந்திட்ட பாதம்!

நாவடி யமர்ந்தோன் நாயக பாதம்!
நலவளம் பகிர்வோன் நற்றுணை பாதம்!
மூவடி யளந்தோன் சேவடி பாதம்!
பாற்கடல் செல்வ விஷ்ணுவின் பாதம்!
கோவடி இசைந்தோன் கோவிந்த பாதம்!
கோசலை மைந்தனின் கோதண்ட பாதம்!
பாவழி நுழைந்தோன் பரந்தாம பாதம்!
திவ்யப் பிரபந்தத் தீபஒளி பாதம்!

முதலாழ்வார் மூவர் பற்றிட்ட பாதம்!
மழிசையர் மங்கையர் சுற்றிட்ட பாதம்!
பதமலர் ஆண்டாள் தொட்டிட்ட பாதம்!
பெரியாழ்வார் நம்மாழ்வார் கற்றிட்ட பாதம்!
மதுரகவி பாணாழ்வார் மகிழ்ந்திட்ட பாதம்!
குலசேகரர் பொடியாழ்வார் நெகிழ்ந்திட்ட பாதம்!
மதிமா முனியிருவர் மயங்கிட்ட பாதம்!
மகிழ்கூரர் ராமானுஜர் வியந்திட்ட பாதம்!

மூவடி யளந்தோனின் பாதத்தைப் பற்றிடுவோம்!
பரமபத வைகுந்த பேரின்பம் பெற்றிடுவோம்!
சேவடி யழகினையே செவிகுளிர உரைத்திடுவோம்!
செவ்விதழழகனையே செந்தமிழில் நனைத்திடுவோம்!
காவலாய் இருக்கும் வேந்தன் காலடியில் கற்றிடுவோம்!
கருணையினால் கவரும் கண்ணன் திருவடியை சுற்றிடுவோம்!
பூவடி நற்பாதத்தை நாவினிக்க நாமுரைக்க
புண்ணியம் கோடிதரும் பூரணன் ஹரியின் பதமே!
பாஸ்கர ராயர்

பாஸ்கர ராயர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாகா என்னும் ஊரில் கி.பி., 1690ல் பிறந்தார். தந்தையின் பெயர் கம்பீர ராயர். தாயாரின் பெயர் கோனாம்பிகா. விச்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் 1690 முதல் 1785 வரை இருக்கலாம் என்று உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். தந்தை கம்பீரராயர் பெரிய பண்டிதர். ஒழுக்க சீலர். சாஸ்திரங்களையும், புராணங்களையும் கரை கண்டவர். அவர் தமது திருக்குமாரனுக்கு இளவயதிலேயே சரஸ்வதி உபாசனை செய்து வைத்தார். பின்னர், காசிப் பட்டணத்திற்கு அவரை அழைத்துச் சென்று நரசிம்மானந்த நாதர் என்னும் பெரியாரிடம் வித்தியாப்பியாசத்திற்காக விட்டுவைத்தார். அவரிடம் தமது ஏழாவது வயதிற்குள்ளேயே சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். மகா வித்வானான சபேச்வரர் என்ற அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். பின்னர் கங்காதர வாஜ்பேயீ என்பவரிடம் கௌடதர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதிகமாகப் பழக்கத்திலில்லாத அதர்வண வேதத்தை முறையாகக் கற்றுக் கொண்டு பிறகு அதை சொல்லித் தந்தார். தேவி பாகவதத்தைப் பிரவசனம் செய்து அதன் புகழை ஓங்கச் செய்தார். பாஸ்கர ராயர் ஆனந்தி என்ற பெண்ணை மணந்து கொண்டார். தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு பாண்டுரங்கன் என்று பெயரிட்டார்.

இவருக்கு வித்யையை <உபதேசம் செய்து, பாஸுராநந்த நாதர் என்று தீட்சா நாமம் அளித்தவர் சிவதத்த சுக்லர் என்ற மகான். பின்னர் பாஸ்கரராயர் தம் மனைவி ஆனந்திக்கு வித்யையை உபதேசம் செய்து பத்மாவதி அம்பிகா என்ற தீட்சா நாமத்தை அளித்தார். கூர்ஜர தேசத்திற்குச் சென்று வல்லபாசாரிய மதத்தைச் சார்ந்த வித்வான் ஒருவரை வாதத்தில் வென்றார். அடுத்து மத்வ மதத்தைச் சார்ந்த பண்டிதர் ஒருவரையும் வெற்றி கண்டு, அவரது <உறவினர் பெண் பார்வதியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். காசியில் தங்கியிருந்தபோது இவர் பெரியதொரு சோமயாகம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் சந்திரசேனன் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி, கிருஷ்ணா நதிக்கரையில் சில காலம் வாழ்ந்து வந்தார். அதற்குப் பிறகு தஞ்சை மன்னர் இவரை அன்புடன் அழைக்கவே, தமிழகத்திற்கு வந்து குடியேறினார். இவரது குருவான கங்காதர வாஜ்பேயீ, அப்போது காவிரியின் தென்கரையில் <உள்ள திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அவர் அருகிலேயே வாசம் செய்ய பாஸ்கரராயர் விரும்பியிருக்க வேண்டும். அதற்கிணங்க தஞ்சை மன்னரும், திருவாலங்காட்டுக்கு வடகரையில் உள்ள செழிப்பான கிராமத்தை மகானுக்கு அளித்திருக்கிறார். அது பின்னர் பாஸ்கரராஜபுரமாக மாறியிருக்கிறது.

பாஸ்கரராஜபுரத்தில் வெகுகாலம் வசித்து, அம்பாளின் உபாசனையில் திளைத்து, தமது இறுதிக்காலத்தை மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூரில் கழித்த பாஸ்கரராயர், அங்கு தமது 95-வது வயதில் தேவி சரணங்களை சென்றடைந்தார். அவர் காலத்திற்குப் பிறகு, அவரது துணைவியார் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேச்வர் ஆலயத்தை நிர்மாணித்திருக்கிறார். இந்த ஆலயம் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் உள்ள  திருவாலங்காடு அருகே அமைந்துள்ளது. ஸ்ரீவித்யை உபாசகர்களில் தலைசிறந்தவரான பாஸ்கரராயர் அம்பாளின் வரப்பிரசாதத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறார். நமது சநாதன வைதீக மார்க்கத்தில் அசையாத பற்றுக் கொண்டிருந்தவர். குப்தவதீ என்னும் தமது சப்தசதீ வியாக்கியானத்தில் ஆதிசங்கர பகவானை வெகுவாகத் தோத்திரம் செய்துள்ளார். பாஸ்கரராயர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பல எழுதியுள்ளார் என்றும், அவற்றில் பெரும்பகுதி தற்போது கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். வேதாந்தம், மீமாம்ஸை, வியாகரணம், நியாயம், சந்தஸ், காவியம், சுருதி, ஸ்மிருதி, புராணம், தோத்திரங்கள், மந்திர சாஸ்திரம் முதலிய துறைகளில் இவர் இயற்றியுள்ள நூல்களை ஆராய்ந்தோர், இம்மகானுக்குத் தெரியாத வித்தையோ, சாஸ்திரமோ இல்லை என்று தீர்மானமாகச் சொல்கிறார்கள். மந்திர சாஸ்திர ரகசிய நுணுக்கங்கள் பற்றி அவர் அறியாதது ஒன்றுமேயில்லை. மந்திர சாஸ்திரத்திலேயே பதினேழு நுண்ணிய ஆராய்ச்சி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இவற்றில் ஒன்றுதான் சௌபாக்ய பாஸ்கரம் என்ற லலிதா சகஸர நாமம் விளக்க உரை நூல். இவர் லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதியதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. ஒரு முறை இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் முன் நின்று லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இவர் பாராயணம் செய்ததை கேட்டு மகிழ்ந்த அம்பாள், இவர் முன் தோன்றி, இவருக்கு ஆசிர்வாதம் தந்து இதற்கு விளக்கவுரை எழுதும் படி கூறினாள். அம்மன் கூறியதை சிரமேற்கொண்ட பாஸ்கரராயர் திருக்கோடிக்காவல் என்ற கோயிலில் லலிதா சகஸ்ர நாமத்தின் விளக்க உரையை அரங்கேற்றி அதற்கு "சௌபாக்ய பாஸ்கரம் என்ற நாமம் சூட்டினார். அவர் இந்த பாஷ்யத்தைப் பன்னிரெண்டு பாகங்களாப் பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் சூரியனுடைய பன்னிரண்டு கலைகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமது பாஷ்யத்தின் முன்னுரை சுலோகம் ஒன்றில் பாஸ்கரராயர், கிழக்கில் பிரம்ம புத்திரா நதி ஓடும் காமரூபம் என்ற அஸ்ஸாம், மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தார தேசம், தெற்கில் ராமரால் கட்டப்பட்ட சேது, வடக்கில் பனி மூடிய கேதாரம், இவற்றுக்கு இடையே உள்ள பிரதேசத்தில் வாழும் வித்வான்களுக்கு இந்த எனது லலிதா சகஸ்ரநாம வியாக்யானம் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று கூறியுள்ளார்.

பாரதம் பெற்றெடுத்த மாமேதைகளில் ஒருவர் பாஸ்கரராயர். அவரது மகிமைகளை அறியும்போது, ஆதிசங்கர பகவத்பாதருக்கும், அப்பய்ய தீட்சிதருக்கும் அடுத்தபடியாக இந்த மகானை மதிப்பிடத் தோன்றும். வித்யையின் உட்பொருளையும், மந்திர சாஸ்திர ரகஸ்யங்களையும் மிக ஆழமாக அறிந்திருந்த இவருக்கு அடுத்தபடியாகச் சொல்ல வேண்டுமானால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரைத்தான் குறிப்பிட வேண்டும். காசியிலிருந்தபோதே பாஸ்கரராயர் வாமாசர சம்பிரதாயப்படி தேவி உ<பாசனை செய்து வந்திருக்கிறார். இதை அங்குள்ள பண்டிதர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். அவரை அவமானப்படுத்த எண்ணம் கொண்டு, அவர் செய்த மகா யாகத்திற்குச் சென்று, மந்திர சாஸ்திர சம்பந்தமான கேள்விகளை சரளமாகக் கேட்டு அவரை மடக்கப் பார்த்தனர். ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கரராயர் சரியாக பதில் சொன்னார். அப்போது அங்கு இருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற மகான், பண்டிதர்களை நோக்கி, பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் அமர்ந்து விடையளித்து வருவதால் நீங்கள் தோற்பது நிச்சயம், பேசாமல் இருங்கள் என்று எச்சரித்தார். அப்போது நாராயண பட்டர் என்ற பண்டிதர், பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் பிரசன்னமாயிருப்பதைத் தரிசனம் பண்ணவேண்டும் என்று விரும்பவே பாஸ்கரராயர் காலையில் அம்பிகைக்குச் செய்த அபிஷேக நீரால் நாராயண பட்டரின் கண்களைத் துடைத்தார் குங்கும சுவாமி. அடுத்த கணம் பட்டரின் கண்களுக்கு, பாஸ்கரராயரின் தோளின் மீது அமர்ந்திருந்த பராசக்தி தரிசனம் அருளினாள். நாராயண பட்டர் பரவசத்தில் மூழ்கி, கண்ணீர் உகுத்தபடி, மகானின் காலில் விழுந்து வணங்கினார். இதர பண்டிதர்களும் அறியாமையால் செய்த தங்கள் தவற்றுக்கு பாஸ்கரராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும் கூறப்படுவது உண்டு. அவர் திருவிடைமருதூர் மகாதானத் திண்ணையிலுள்ள தூணில் சாய்ந்து கொண்டு <உட்கார்ந்திருப்பது வழக்கம். அப்போது தினமும் வேப்பத்தூரிலிருந்து ஒரு சந்நியாசி அந்த இல்லத்தைக் கடந்து கொண்டு மகாலிங்கசுவாமி தரிசனத்திற்குப் போவார். ஆனால், பாஸ்கர ராயர் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யமாட்டார். இது அவ்வூர் மக்களுக்கு சற்று வியப்பை ஊட்டியது. சிலர் ஆத்திரமடைந்தார்கள். ஒருநாள் கோயிலில் பாஸ்கர ராயரும் அந்த சந்நியாசியும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர், துறவியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதற்கு பாஸ்கரராயரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது பாஸ்கரராயர், இல்லறத் தர்மத்தின்படி தாம் சந்நியாசிக்கு நமஸ்காரம் செய்திருந்தால், அவரது தலை சுக்கு நூறாக உடைந்திருக்கும் என்றும், அவரது உயிரை காப்பாற்றுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். பின்னர் அதை நிரூபிப்பதற்காக அத்துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் முதலியவற்றை ஓரிடத்தில் வைத்து அவற்றிற்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்தார். அடுத்த கணம் அவை மூன்றும் சுக்கு நூறாக உடைந்து சிதறின. அதைக் கண்டதும் அத்துறவி பாஸ்கரராயரின் மகிமையை உணர்ந்தார். பொது மக்களும் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.
--------------------------------------
மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.

இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார். இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் அங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார். இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார்.

பின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத தீட்சை வழங்கினார். அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரது பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போனார். அப்பா! நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்... இல்லையில்லை... மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா... மாணிக்கவாசகன், என்றார் பெருமான். அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார். மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவகைங்கர்யம்செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார்.

பாண்டியமன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே! மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே! நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது. கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், மாணிக்கவாசகா! நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம்,அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர்.

நீண்டநாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார். ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலைமதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டான். அன்று இரவே அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாகி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தனர். தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா! இதென்ன சோதனை! குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் விட்டார். சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது.

மாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார். வைகை நதியின் வெள்ளப் பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று பிழைப்பவள். அவள் தினமும் முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள். அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. கூலிக்கு ஆள் தேடினாள். சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்து கூலி ஆள் போல பாட்டி முன் வந்து நின்றார். பாட்டி! உனக்கு பதிலாக நான் கரையை அடைக்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு பிட்டு மட்டும் கொடுத்தால் போதும் என்றார். பாட்டியும் ஒத்துக் கொண்டாள். பின் ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். அப்போது அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்ததைக் கண்ட சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கு வந்து அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. உடனே அந்த கூலியாள் ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டியதும் வெள்ளம் வற்றிவிட்டது. இதைக் கண்ட மன்னன் அதிசயித்தான். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானத்தில் வந்த சிவகணங்கள் தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார், தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு இந்த அரசாங்கம்? இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா! திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே! என்றார். தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார். அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார். அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும்.

ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.
--------------------------------------
ஸ்ரீபடே சாஹிப்

விழுப்புரம் - பாண்டிச்சேரி மெயின் ரோட்டில் (வில்லியனூர் வழி) உள்ளது கண்டமங்கலம். அதாவது கண்டமங்கலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு சுமார் 20 கி,மீ,; பாண்டிச்சேரிக்கும் சுமார் 20 கி. மீ. தொலைவு. இந்தப் பேருந்து தடத்தில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் இறங்கிக் கொண்டு, சுமார் 2 கி. மீ. தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்கிற ஊர் உள்ளது. இங்குதான் ஸ்ரீபடே சாஹிப்பின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா அடையாளங்களையும் துறந்தார். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். சாயபு என்பது பொதுவான பெயர். படே என்றால் உயர்ந்த என்று பொருள். உயர்ந்த உத்தமமான மகான் என்கிற பொருளில் இவர் படே சாயபு என்று அழைக்கப்பட்டு வருகிறார். மகான் படே சாஹிப் எவரிடமும் பேசியதில்லை. எப்போதும் மௌனம்தான். தன் வாழ்நாளில் இவர் காத்து வந்த மௌனம், இவருடைய தியானத்துக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. தன் வாழ்வில் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். மகானின் அருள் பெற்றுத் திரும்பிய பலரின் வாழ்வும் ஜகஜோதியாகப் பிரகாசித்தது. இவரது சந்திப்பிலேயே சகாயம் பெற்றார்கள், இவரைத் தேடி வந்தவர்கள்.

ஆசிர்வாதத்தால் நோயாளிகள் குணமடைந்தனர். தீரவே தீராது என்று பலர் அனுபவித்து வந்த வியாதிகள், இவரது ஸ்பரிசத்துக்குப் பின் நிரந்தரமாக நீங்கி விட்டது. ஒருமுறை இவரை கருநாகம் தீண்டியது. சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி நீல நிறத்தில் காணப்பட்டார். பக்தர்கள் அனைவரும் என்ன நடக்குமோ என்றிருந்த வேளையில் சாஹிப்பை தீண்டிய கருநாகம் வந்து விஷத்தை அனைத்தும் எடுத்து விட்டு அவர் பாதங்களுக்கருகில் விழுந்து வணங்கி உயிர் விட்டது. அந்த கருநாகத்திற்கு மோட்சம் அளித்தார் மகான் அவர்கள். மேலும் திருடுவதையேக் குலத்தொழிலாக வைத்திருந்த திருடர்கள் திருந்தினார்கள். மொத்தத்தில், படே சாஹிப்பின் தரிசனம் பெற்று சகல ஜீவ ராசிகளும் பலனடைந்துள்ளன. மகான் அவர்கள் தன்வந்திரி லோக தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். வியாதியின் அவஸ்தையுடன் தன்னிடம் வருபவர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்புவார். இன்னும் சிலருக்குத் தன்னிடம் உள்ள கொட்டாங்குச்சியில் இருந்து நீர் தருவார். நோயின் வீர்யம் அதிகம் இருப்பவர்களிடம் அங்குள்ள கொன்னை மரத்தை அடையாளம் காட்டி, அதைச் சுற்றி வா என்று ஜாடையால் சொல்வார்.

படே சாஹிப்பிடம் வந்தாலே, வியாதிகள் தீர்கின்றன என்ற பேச்சு எங்கெங்கும் பரவி, அவர் வாழ்ந்த காலத்தில் தினமும் ஏராளமானோர் இவரைத் தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர். படே சாஹிப் எங்கே, எப்போது பிறந்தார்? அவருடைய அவதார தினம் எது போன்ற தகவல்கள் தெரியவில்லை, என்றாலும், அவர் ஜீவ சமாதி ஆனது கி.பி. 1868-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி என்கிற குறிப்பு இருக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. ஆயில்ய நட்சத்திரம். எனவே, இவரது ஜீவ சமாதியில் செவ்வாய்க்கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் வழிபாடு விசேஷமாக இருக்கும். மகானின் அருளாசி வேண்டி திரளான பக்தர்கள் குவிவார்கள். வழிபாடுகளும் சிறப்பாக இருக்கும். தவிர குருவாரம் என்பதால் வியாழக்கிழமைகளிலும், விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பிஸ்கெட், சாக்லெட் மிகவும் உகந்த பிரசாதம் என்கிறார் இந்த ஜீவ சமாதியின் பூசாரி. ஜீவ சமாதிக்கு வருகிற பக்தர்கள் வாங்கி வரும் பிஸ்கெட் மற்றும் சாக்லெட்டுகளை அதிஷ்டானத்தில் வைத்து விட்டு பக்தர்களிடம் தருகிறார் பூசாரி. அங்கு இருக்கும் அனைவருக்கும் அது விநியோகிக்கப்படுகிறது. இன்றைக்கும் தன் ஜீவ சமாதி தேடி வரும் பக்தர்களின் பிணியை - அபூர்வ மருத்துவராக இருந்து தீர்த்து வருகிறார் படே சாஹிப். இவரது தரிசனத்தால் பலன் பெற்றவர்களே இதற்கு சாட்சி!

ஆதிசங்கரர் அவதாரம் - ஒன்று...

ஆதிசங்கரர் அவதாரம் - ஒன்று

கி.பி. நான்காம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாதரை வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒருநாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு சிவகுரு, புத்திசாலி குழந்தைதான் வேண்டும் என்றார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள். வைகாசி மாதம் பஞ்சமியன்று சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல, சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே. பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தான தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்தளித்து கொண்டாடினார். சோதிடர்கள் இவன் ஒரு பெரிய ஞானியாவான் என்று கூறினார்கள்.

இளம் குழந்தையைச் சுற்றி நாகமொன்று சிறிது நேரம் விளையாடிய பின், விபூதியாகவும் ருத்ராட்சமாகவும் மாறியதாலும், உடலில் சிவச்சின்னங்கள் இருந்ததாலும் குழந்தைக்கு சங்கரர் என்று பெயர் சூட்டப்பட்டது. குறும்புக் கண்ணனைப் போலவே, குட்டிச் சங்கரரும் குழந்தை பருவத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம். இரண்டு வயதிலேயே சங்கரர் எழுத்துக்களை வாசிக்க வல்லவரானார். படிக்காமலேயே காவியம் முதலியவற்றை அறிந்தார். குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போதே தந்தை சிவகுரு காலமானார். மிகவும் துக்கமடைந்த தாய் ஆர்யாம்பாள் உறவினர்களின் உதவியுடன் அவருக்கு பூணூல் போட்டு, தகுந்த குருவிடம் வேதம், சாஸ்திரம் முதலியவைகளை பயில சேர்த்து விட்டார். இவர் சிவனின் அவதாரமானதால் குருவால் கூறப்பட்டதையெல்லாம் ஒரு தடவையிலேயே புரிந்து கொண்டார். அத்துடன், அறிய வேண்டிய சகல முக்கிய சாஸ்திரங்களையும், இரு வருடங்களுக்குள்ளேயே கற்றுக் கொண்டார்.
--------------------------------------------
கனகதாரா ஸ்தோத்திரம்-2

குருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்துவிட்டு பிறகு உண்பது சங்கரரது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு ஏழை அந்தணர் அயாசகன் வீட்டு வாசலில் நின்று கொண்டு சங்கரர், பவதி பிக்ஷõம் தேஹி என்றார். ஒளிவீசும் முகத்துடன் திகழும் இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக தன்னிடம் ஏதுமில்லையே என்று  அந்த ஏழையின் மனைவி வருந்தினாள். பின் வீடு முழுவதும் தேடி, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்றை சங்கரருக்கு தானமாக அளித்தாள்.  இந்த கருணைச் செயல் சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது.  வறுமையில் வாடும் போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த சங்கரர், அக்குடும்பத்தின் வறுமை நீங்க லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடித்துதித்தார். 19வது ஸ்லோகம் பாடி முடித்த போது அந்த ஏழையின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனியை நிரப்பி மகாலட்சுமி  பொன்மழை பொழிந்தாள். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய திரிதியை நாளில் நடந்தது. (இதன் அடிப்படையில் தான் இப்போதும் கூட அட்சய திரிதியை நாளில் காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது) சங்கரர் ஏழு வயதிற்குள் எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுமுடித்து குருகுலத்திலிருந்து தன் இல்லம் வந்து தன் தாய்க்கு பணிவிடை செய்து வந்தார்.
--------------------------------------------
பால லீலை-3

தினந்தோறும் சங்கரரின் தாய்  ஆர்யாம்பாள் குளிப்பதற்கு வெகுதொலைவில் உள்ள பூர்ணா நதி சென்று நீராட வேண்டியிருந்தது.  இதனால் மிகவும் சிரமப்படுவதாக எண்ணிய சங்கரர் நதி தேவதையைப் பிரார்த்தித்தார். உடனே அந்த நதி பராசக்தியின் உத்தரவின் பேரில் தன் திசையை மாற்றிக் கொண்டு சங்கரரின் வீட்டிற்குப் பக்கத்தில் ஓட ஆரம்பித்தது. (இந்த நதி தான் தற்போது காலடியருகில் ஓடும் பூர்ணா நதி). இதைக் கண்ட மக்கள் அனைவரும் வியப்புற்று தங்களுக்கு ஒரு மகான் கிடைத்துவிட்டதாக எண்ணி ஆனந்தம் அடைந்தனர். சங்கரரின் பெருமையை கேள்விப்பட்ட கேரள தேசத்து அரசன் ஒரு சமயம் யானை முதலிய காணிக்கைகளுடன் தன் மந்திரியை சங்கரரிடம் அனுப்பினார். இது கண்ட சங்கரர் பிரம்மச்சாரியான தனக்கு இது ஒன்றும் தேவையில்லை என்று கூறி காணிக்கைகளைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதைக் கேட்ட அரசன் தானே சங்கரரின் இருப்பிடத்திற்கு வந்து அவரை வணங்கி சந்தோஷம் அடைந்தான். பதினாராயிரம் பொன்களையும், தான் இயற்றிய மூன்று நாடகங்களையும் சங்கரருக்கு சமர்ப்பித்தார். நூல்களின் பெருமையைப் பாராட்டிய சங்கரர் அரசனைப் பார்த்து இந்த பொன் எனக்கு அவசியமில்லை. உன் ராஜ்யத்தில் உள்ளவர்க்கே கொடுப்பாய் என்று சொன்னார். தனக்கு நற்குணங்கள் நிறைந்த புதல்வன் பிறக்க வேண்டும் என்று அரசன் வரம் கேட்க, புத்திரகாமேஷ்டி யாகம் செய்து புத்திரனை பெறுவாய் என்று சங்கரர் அனுக்ரஹித்தார். ஏழுவயதுக்குள்ளாகவே இவ்வளவு ஞானமும், வைராக்கியமும், தவமும் பெற்ற சங்கரர், உலகத்தை ரக்ஷிக்க அவதரித்த பரமேஸ்வரரின் அவதாரம் தான் என்பதை நாம் அறியலாம்.

துறவறம்: ஒருநாள் உபமன்யு, ததீசி, கௌதமர், அகஸ்தியர் முதலிய மாமுனிவர்கள் சங்கரரின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களை தகுந்த மரியாதையுடன் உபசரித்த ஆரியாம்பாள், எனது குழந்தை மிகச்சிறுவயதிலேயே மிகப்பெரிய வித்வானாகவும் செயற்கரிய செய்கை உடையவனாகவும் திகழக் காரணம் என்ன என்று அம்முனிவர்களிடம் கேட்டாள். அகத்தியர் சிவபெருமானே இந்த திருக்குழந்தையாக அவதாரம் செய்திருப்பதாகவும், பதினாறு வயதே இவன் ஆயுள். ஆனால் சில காரணங்களுக்காக வியாசரின் அருளால் மீண்டும் 16 ஆண்டு கிடைக்கும் என்று கூறி மறைந்தனர். இதைக்கேட்ட ஆர்யாம்பாள் மிக்க வருத்தமுற்றாள். சிறுவயதிலிருந்தே சங்கரருக்கு, உலகைத் துறந்து சன்னியாசி ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்குத் தம் அன்னையின் அனுமதியைக் கேட்டார். ஆனால் அதற்கு ஆர்யாம்பாள் அனுமதி தர மறுத்துவிட்டாள்.

ஒருநாள் குளிப்பதற்காக தாயுடன், சங்கரர் பூர்ணா நதிக்குச் சென்றார். அப்பொழுது ஒரு முதலை சங்கரரின் காலைப் பற்றிக் கொண்டது. சங்கரர் உரத்த குரலில், அம்மா! முதலை என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. சன்னியாசி ஆக எனக்கு அனுமதி கொடு. அப்பொழுது தான் முதலை என் காலைவிடும் என்று சொன்னார். செய்வதறியாது தவித்த ஆர்யாம்பாள் சங்கரர் சன்னியாசியாகலாம் என்று அனுமதி கொடுத்தாள். உடனே சங்கரர் அதற்குரிய மந்திரங்களை சொல்லி துறவறம் மேற்கொண்டார். இதனால் முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது. பிரம்மாவின் சாபத்திற்கு உட்பட்ட ஒரு கந்தர்வன் தான் அந்த முதலையாக மாறியிருந்தான். சங்கரரின் கால்பட்டதும் சாபவிமோசனம் பெற்ற கந்தர்வன் சங்கரரை வணங்கி வாழ்த்தி விட்டு தன் இருப்பிடம் சென்றான். கரைக்கு வந்த சங்கரர் வீட்டிற்கு வராமல், துறவியாய் உலக சஞ்சாரம் செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் உன்னை கவனித்துக் கொள்வார்கள் என்றும் தாயிடம் கூறினான். அதற்கு தாய், என் கடைசிக்காலத்தில் நீயே வந்து எனக்கு இறுதிக்கடன்களை செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு சங்கரர் ஒப்புக் கொண்டு சன்னியாசம் புறப்பட்டார். அதற்கு முன் தாயார் வழிபாடு செய்வதற்காக பூர்ணாநதியின்  கரையில், தன் கைகளால் ஒரு கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இதுவே தற்போது காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோயிலாகும். இந்த சிலை குருவாயூர் கிருஷ்ணர் சிலையைப் போலவே "அஞ்சனா என்ற உலேகாத்தால் ஆனது.

குரு கோவிந்தபாதர்

காலடியிலிருந்து சன்னியாசிகளுக்கு உரித்தான காவி உடையில் இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிப் பாதயாத்திரை சென்றார். பல மாதங்களுக்குப் பின்னர் சங்கரர் நர்மதைக் நதிக் கரைக்கு வந்தார். அங்கிருந்த ஒரு குகையில் மிகப்பெரிய ஞானியான கோவிந்தபாதர் வசித்து வந்தார். ஆதிசேஷனின் அவதாரமாகிய அவரை சங்கரர் வணங்கி, தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். கற்று உணர்ந்ததை எல்லாம், அனைவரும் ஏற்கும் அளவுக்கு, எளிமையாக எடுத்துக் கூறும் திறனைப் பெற்றதோடு, மாற்றுக் கருத்துக்களுக்கும், முழுமையடையாத சித்தாந்தங்களுக்கும், முதிர்ச்சி பெறாத போதகர்களுக்கும் எதிராக வாதமிட்டு அத்வைத தத்துவத்தை நிலைப்பிக்கும் திறமையையும், குருவருளால் ஆதிசங்கரர் விரைவிலேயே பெற்றார்.

முதல் சீடர் பத்மபாதர்: குருவின் விருப்பபப்படி சங்கரர் காசிக்குச் சென்று கங்கையின் புனித நதிக்கரையில் தங்கினார். வேதங்களையும், உபநிடதங்களையும் கற்க எத்தனையோ சீடர்கள் இவரை வந்தடைந்தனர். சில காலம் காசியில்  தங்கியிருந்து விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதும், சீடர்களுக்கு வேதபாடம் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தார். இவரை அடைந்த சீடர்களில் சனந்தனன் என்ற ஒரு சீடரும் இருந்தார். மிகச் சிறந்த அறிவாளி. ஒருநாள் இவர் கங்கையின் எதிர்க்கரையில் இருந்தார். வகுப்பு நேரம் நெருங்கி விட்டது, ஆற்றைக் கடக்க எண்ணிக்கொண்டிருக்கையில் கங்கையில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டது. வகுப்பைத் தவறவிட்டு விடுவோமோ என்று கவலைப்பட்ட அவர், தன் குருவை மனதில் நினைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கினார். இவரின் குருபக்தியைப் பார்த்த கங்காதேவி, இவரின் பாதஅடிகளை தாமரை மலரால்(பத்மத்தால்) தாங்கிக் கொள்கிறது. அன்று முதல் இவர் பத்மபாதர் ஆனார். இவர் தான் சங்கரரின் முதல் சீடர். காசியில் இருந்தபோது சங்கரர் முக்கிய இறைநூல்களான பகவத்கீதை, பிரம்மசூத்ரம், உபநிடதங்கள் போன்றவற்றுக்கு பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதினார்.

விஸ்வநாதரின் திருவிளையாடல்

ஒருநாள் கங்கையில் நீராடி விட்டு, காசிவிஸ்வநாதரையும் தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சிவபெருமான், சங்கரரிடம் திருவிளையாடல் புரியத் தொடங்கினார். நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு ஒரு சண்டாளன்  (தீண்டத்தகாதவன்) உருவில் அவர் முன் தோன்றினார். அவனைப் பார்த்து சங்கரர், சண்டாளனே! விலகிப் போ என்றார். அதற்குச் சண்டாளன் சிரித்துக் கொண்டே, எதை விலகிப்போகச் சொல்கிறீர், இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா. தாங்களோ எல்லோருக்கும் இரண்டும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை போதித்து வருகிறீர்களே! வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் தோன்றியது? என்று வினவினார். இதைக் கேட்ட சங்கரர் எவன் இப்படி ஆத்மநிலையை அடைந்திருக்கிறானோ அவன் சண்டாளனாயிருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி, அவனே என் குரு என்ற பொருள்பட மனீஷா பஞ்சகம் என்று போற்றப்படும் 5 ஸ்லோகங்களைப் பாடி சாஷ்டாங்கமாக சண்டாளன் காலில் விழுந்தார். உடனே சண்டாளன் மறைந்துபோய், ஜடை, மகுடம், சந்திரன் முதலியவைகளை அணிந்திருந்த காசி விஸ்வநாதர் நான்கு வேதங்களுடன் அவருக்கு தரிசனம் கொடுத்தார். வியாசமுனிவரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுக என்று கூறி விட்டு மறைந்தார்.

வேதவியாசரை சந்தித்தல்

சங்கரர் எழுதியிருந்த பிரம்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றி வாதிடுவதற்காக அதன் மூலநூலான பிரம்ம சூத்ரத்தை எழுதிய வியாசரே வயதான அந்தணர் வடிவில் சங்கரரைக் காண வந்தார். சங்கரர் தன் சீடர்களுக்கு பிரம்மசூத்ர விளக்கவுரையை கற்பித்துக் கொண்டிருந்தார். தம்மோடு விவாதிக்கும்படி கூறிய முதியவர், மூன்றாவது பிரிவின் முதலாவது சூத்திரமான ததனந்தரப்ரதிபத்தைள என்ற சூத்திரத்திற்கு என்ன உரை எழுதியிருக்கிறாய் என்று கேட்டார். சங்கரர் கூறிய விளக்கத்தைக் கேட்டு திருப்தியடைந்தார் முதியவர். இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சங்கரரின் சீடரான பத்மபாதர், பிரம்ம சூத்திரம் எழுதிய வேதவியாசர் தான் வந்துள்ளது என்பதை உணர்ந்தார். உடனே பத்மபாதர் இருவரின் காலிலும் விழுந்து, சங்கரரோ சிவபெருமானின் அவதாரம். வேதவியாசரோ சாட்சாத் நாராயணனே ஆகும். இந்த இருவரும் இப்படி விவாதித்தால் என்னைப் போன்ற வேலைக்காரன் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். வந்தவர் வியாசர் என்று தெரிந்ததும், சங்கரர் தம் விவாதத்தை நிறுத்தி, மிக்க மரியாதையுடன் அவர் காலில் விழுந்தார். வியாசர் அவரை மனம் குளிர ஆசிர்வதித்தார். என்னுடைய சூத்திரங்களுக்கு தகுந்த முறையில் அவைகளின் உட்கருத்தை நன்கு வெளிக்கொண்டு வரும் முறையில் உரை எழுதியிருக்கிறாய். எனவே நீ இந்த விளக்க உரையை உலகில் பிரசாரம் செய்வாயாக என்றும் கூறினார். அதுகேட்ட சங்கரர், தனக்கு ஏற்பட்ட ஆயுள் 16ம் முடிந்துவிட்டபடியால் கங்கையில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் தம் உடலைத் தியாகம் செய்யப் போவதாக கூறினார். அதற்கு வியாசர் உலக நன்மைக்காக இன்னும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது எனவே மேலும் 16 ஆண்டுகள் நீ பூமியில் வாழ்வாயாக! என்று வரம் கொடுத்து மறைந்தார். வியாசரின் அருளால் சங்கரரின் வாழ்காலம் இரட்டிப்பாக்கப்படுகிறது. பிறப்பில் விதிக்கப்பட்ட வெறும் 16 வயதுடன், பரம்பொருளை உலகிற்கு உணர்த்துவிப்பதற்காக இன்னும் 16 வயது சேர்த்து சங்கரரின் வயது 32 வயதானது.

குமரில பட்டரும், மண்டன மிஸ்ரரும்: வியாசரின் அறிவுரைப்படி இமயம் முதல் குமரி வரை பல ஊர்களுக்கும் சென்று அத்துவைத தத்துவத்தை பிரசாரம் செய்தார். பிரயாகை என்னும் ஊரில் குமரிலபட்டர் என்னும் பெரிய அறிஞர் இருந்தார். இவர் வேதங்களை முழுவதும் கற்றறிந்தவர். யாகங்கள் செய்வதிலும் வல்லவர் என்பதை அறிந்த சங்கரர் இவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஒரு பௌத்தரைப் போல வேஷம் போட்டுக் கொண்டு, ஒரு பௌத்த மடத்தில் சேர்ந்தார் குமரிலபட்டர். அங்கு பாடம் கற்றுக்கொண்டிருக்கும் போது, ஒரு பௌத்த குரு வேதங்களை கண்டனம் செய்வதைக் கேட்டு மனம் தாங்காமல் அழுதார். இதைக் கண்ட  பௌத்த குரு, இவன் உண்மையான பௌத்தர் அல்லர் என்று அவரை ஓர் உயர்ந்த கட்டிடத்தின் மேல்மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். வேதம் உண்மையாகில் என் உயிர் காப்பாற்றப்படட்டும் என்று கூறி கீழே விழுந்தும் ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் பிழைத்துக் கொண்டார். பௌத்த மதத்தை கண்டித்து நூல்களை இயற்றி, பௌத்த குருவிற்கு துரோகம் செய்ததற்கு பிராயச்சித்தமாக உமித்தீயில் தன் உடலை தியாகம் செய்ய எண்ணி தீயில் இறங்கிக் கொண்டிருந்தார். இதை அறிந்த சங்கரர், வேதத்தை பழிப்பவர்களை கண்டிக்க அவதாரம் செய்த முருகப்பெருமானே நீர் என்று அறிந்து கொண்டேன். எனது நூல்களுக்கு நீ தான் உரை எழுத வேண்டும் என்றார். தனக்கு அதில் விருப்பமில்லை என்பதை உணர்த்திய குமரிலபட்டர், நர்மதை நதிக்கரையில் உள்ள மகிஷ்மதி நகரில் மண்டனமிஸ்ரர் என்னும் வேதவிற்பன்னர் வசிப்பதாகவும், அவரோடு வாதிக்கும்படியும் கூறினார். குமரில பட்டருக்கு பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்து விட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு சங்கரர் மகிஷ்மதி நோக்கிச் சென்றார்.

சரஸ்வதி முன்னிலையில் வாதம் செய்தல்

சங்கரரும், அவருடைய சீடர்களும் நர்மதை நதியில் நீராடிவிட்டு, மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தார். அவரது வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. சங்கரர் தம் யோக சக்தியைக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே அவரது தந்தையாருக்கு திதி நடந்து கொண்டிருந்தது. திதி முடியும் வரை காத்திருந்த சங்கரர், மண்டன மிஸ்ரரை வாதத்திற்கு அழைத்தார். மண்டன மிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் மிகச்சிறந்த பண்டிதை. உபயபாரதியை நடுவராக நியமித்து இருவர் கழுத்திலும் மாலை இடப்படுகிறது. யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவர் போட்டியில் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. சங்கரர் தோற்றால் இல்லற வாழ்க்கையும், மண்டனமிஸ்ரர் தோற்றால் சன்னியாச வாழ்க்கையும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாதம் நடைபெற்றபின் மண்டனமிஸ்ரரின் மாலை வாடத் தொடங்கியது. உபயபாரதி, தன் கணவராகிலும் மண்டனமிஸ்ரரே தோல்வியுற்றார் என அறிவித்தார். தான் தோல்வியுற்றதாக மிஸ்ரரும் ஒப்புக்கொண்டார். சங்கரர், அவருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சுரேஷ்வராச்சாரியார் என்ற பட்டத்தையும் கொடுத்தார். மண்டன மிஸ்ரர் பிரம்மாவின் அவதாரம், அவரது மனைவி உபயபாரதி சரஸ்வதியின் அவதாரம். சங்கரர் மிஸ்ரரை வென்ற பிறகு உபயபாரதி தான் சத்யலோகத்திற்குச் செல்வதாகக் கூறினாள். அதற்கு சங்கரர் வனதுர்கா மந்திரத்தால் அதை தடுத்து, தாங்கள் சித்ரூபிணியான பரதேவதை பக்தர்களின் நன்மைக்காக லக்ஷ்மி முதலான தேவதைகளாகவும் நீங்கள் விளங்குகிறீர்கள். நான் விரும்பும் சமயம் நீங்கள் போகலாம் என்று வேண்டவே அம்பிகையும் அதற்கு சம்மதித்தாள். சங்கரர் மீண்டும் சீடர்களுடன் யாத்திரையாகப் புறப்பட்டு மஹாராஷ்டிரம் சென்று அத்வைத தத்தவத்தை பிரசாரம் செய்தார்.
சம்மட்டி அடி - ஸந்த்யா வந்தனமும் காயத்ரியும்!!!

மனு ஸ்ம்ருதியில் 'ரிஷயோ தீர்க்க ஸந்த்யாவாத் தீர்க்கமாயுர் அவாப்நுயு ப்ரக்ஞாம் | யசச்ச கீர்த்திம் ச பிரஹ்ம வர்ச்சஸமேவ்ச' என்று இருக்கிறது.

இதன் அர்த்தம் என்ன என்றால், ரிஷிகள் தீர்க்காயுள், ஞானம், தேஜஸ் அடைந்ததற்குக் காரணம் அவர்கள் விடாமல் செய்து வந்த ஸந்த்யா வந்தனத்தின் பலன்தான். ஸந்த்யா வந்தனத்தின் பலனைத் தெரிந்து கொள்ள இது ஒன்றே போதும். ஏராளமான பொருட் செலவு செய்து உபநயனம் செய்து வைத்தால் பலன் பூஜ்யமாகி விடாமல் பார்த்து கொள்வது இன்றைக்கு இருக்கிற பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் பொறுப்பாகும். அவர்கள் தான் இதைக் கண்காணிக்க வேண்டும்.

நம்முடைய பெரியோர்கள் ஸந்த்யா வந்தனத்தை ஒவ்வொரு காலத்திலும் தவறாமல் அதன் விதிப்படி செய்து வந்தார்கள். அதனால், அவர்கள் சகல வளங்களோடு வாழ்ந்தார்கள். ஆனால், இப்போதோ, ஆங்கில படிப்பு படித்த அநேகம் பேர், ஸந்த்யா வந்தனத்தை முறையாகச் செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வேளை இதைச் செய்வது, நாகரீகக் குறைபாடு என்று கூட சிலர் நினைக்கிறார்கள்.

ஸந்த்யா வந்தனம் போன்ற கர்மாக்கள் முறையான படி ஒழுங்காக நடைபெறாததன் காரணமாக இப்போது லோக க்ஷேமத்தில் குறைவு ஏற்பட்டிருக்கின்ற காரியங்கள் தோன்றி இருக்கின்றன. ஒருவர் ஸந்த்யா வந்தனத்தை ஒழுங்காகச் செய்வதால் அவருக்கு மட்டுமே அந்த நற்பலன் போய்ச் சேருவதில்லை. உலகில் இருக்கின்ற அனைவருக்குமே அந்தப் பலன் போய்ச் சேருகிறது. இதனால் தான், ராஜாக்கள் தங்கள் ராஜ்யத்தில் வசித்து வந்த அந்தணர்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்களது நித்ய கர்மாக்களைக் குறைவில்லாமல் செய்தால், நாட்டில் வளம் பெருகும் என்று அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

தற்போதைய நிலையில் அக்னி மறையும் தருவாயில் இருக்கிறது. இனி மேலாவது எல்லோரும் ஸந்த்யா வந்தனத்தை ஒழுங்காகச் செய்ய ஆரம்பித்தால், மறைந்திருக்கும் அக்னி, பூர்ண ஜ்யோதியை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.இதன் மூலம் உலக நலன் விருத்தி ஆகும். எல்லா ஜீவராசிகளும் சந்தோஷத்தை அடையும்.

சைக்கிள் வேகமாகச் செலுத்தப்படும் போது, பெடல் பண்ணாது இருந்தாலும், கொஞ்சம் தூரத்திற்குத் தானாகவே சென்று கொண்டிருக்கும். அது போல ஸந்த்யா வந்தனம் போன்ற கர்மாக்கள் செய்யப்பட்டுத் திடீரென்று நின்று விட்டாலும், முன்னோர்கள் செய்த கர்ம பலத்தைக் கொண்டு இப்போது நன்றாக இருப்பது போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், அது நிலையானதல்ல.

தாமதமாகக் கிளம்பும் ஒருவன், தான் பிடிக்க வேண்டிய ரயிலைத் தவற விட நேர்ந்தால், போக வேண்டிய காரியம் நஷ்டம் ஆகிவிட்டதே என்பதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறான். ஆனால், உலக நலனுக்காகத் தான் செய்ய வேண்டிய ஸந்த்யா வந்தனக் கடமையை விட்டு விட்டால், அதற்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல் இருக்கிறான்.

காயத்ரி மந்திரத்தைத் தினமும் குறைவுபடாமலும், வசதிப்பட்டால் சொல்ல வேண்டிய அளவுக்கு அதிகமாகவும் ஒருவன் ஜபிக்க வேண்டும். இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. எவன் ஒருவன் ச்ரத்தையுடனும், பக்தியுடனும் காயத்ரி மந்திரத்தைத் தினமும் த்யான பூர்வமாக ஜபித்து வருகிறானோ, அவன் பக்தி ச்ரத்தையை அனுசரித்து, அதே ஜன்மாவிலோ அல்லது தொடர்ந்து வரும் ஜன்மாக்கள் ஒன்றிலோ மிகப் பெரிய பதவியை அடைகிறான்.