சந்தேகம் தான் தீயை வைக்கும்!
எந்தப் பொருளைப் பார்த்தாலும், மெய்ப்பொருளான கடவுளையே பார்க்கப்
பழகுங்கள். இதனால், நான் என்னும் சிறிய எண்ணம் அற்றுப் போய் விடும்.அன்பும்
தெய்வமும் ஒன்றே. தெய்வமாகிய இறைநிலையை உணர்ந்தால், மனம், அன்பு நிலையில்
மலரத் தொடங்கும். உலகில் நிகழும் ஒவ்வொன்றும் கடவுளின் செயலே. இந்த உண்மையை
உணர்ந்து கொண்டால் இயற்கை, நீதி, தர்மம் இவற்றுக்கு முரண்படாமல் வாழ
முடியும்.கடமையை உணர்ந்துசெயலாற்றினால்,
சமுதாயத்தில் எல்லா மக்களின் உரிமையும், நலமும் காக்கப்படும்.கடமையில்
சிறந்தவன் கடவுள் நாட்டமுடையவனாக இருப்பான். கடவுளை உணர்ந்தவன்கடமையில்
ஈடுபாட்டுடன் இருப்பான்.உள்ளத்தில் கருணை,உடையில் ஒழுக்கம், நடையில்
கண்ணியம் இவையேநல்லோரின் அடையாளங்கள்.ஆக்கத்துறையில் அறிவைச்
செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். வாழ்வில் உயர்வு அடைவீர்கள்.கடவுளே
எல்லாமுமாக இருக்கிறார். நமக்கும்கடவுளுக்கும் ஒரு சங்கிலிப்பிணைப்பு
இருக்கிறது.
வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வில்
துன்பமே அதிகமாகும். இன்பம்பெற வேண்டுமானால், உணவு, உறக்கம், உழைப்பு,
எண்ணம் என ஒவ்வொன்றையும் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இனிய மொழி
பேசுபவர்கள், உலகையே வசப்படுத்துவதோடு, வெற்றிகரமான வாழ்வு நடத்தும் ஆற்றல்
பெற்றிருப்பர்.பிறக்கும் போது யாரும் எதுவும் கொண்டு வந்ததில்லை. போகும்
போதும் கொண்டு போவதும் இல்லை. இந்தசமுதாயமே நமக்கு வாழ்வு அளித்துக்
கொண்டிருக்கிறது.அறிவாற்றல், உடல் ஆற்றல் இரண்டாலும் முடிந்த செயல்களை,
சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டியது மனிதனின் கடமை.வாழ்க வளமுடன் என்று
ஒருவருக்கொருவர் வாழ்த்தும் போது, பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான
கதவும் திறக்கப் படுகிறது.பிறருக்கு நன்மையைச் செய்வதும், பயன் பெற்றவர்கள்
நிறைவோடு வாழ்த்துவதும் தான் உண்மையான புகழாகும்.உண்மையில் மனிதனுக்கு ஒரு
எதிரி இருக்கிறான் என்றால், அது அவன் உள்ளத்தில்எழுகின்ற ஒழுங்கற்ற எண்ணங்
களும் சந்தேகமும்தான். சந்தேகம் வாழ்வில் தீயை வைக்கும்.எண்ணத்தில்
உறுதியும், ஒழுக்கமும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டால், எண்ணிய
அனைத்தையும் எண்ணிய படியே பெற்று மகிழலாம்.
நம்பிக்கை வாழ்வில்
தீபமேற்றும். மனதை அடக்க நினைத்தால் அலையும். அதையே அறிய நினைத்தால்
அடங்கத் தொடங்கி விடும்.உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும்
நம்மனதில்தான் இருக்கிறது. தன்னை தானே சீர்படுத்திக் கொண்டு விட்டால், இந்த
மண்ணிலுள்ள எல்லா இன்பமும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.வாழ்வில் வெற்றி பெற
விரும்பினால், எதிர் வரும் பிரச்னையை நேருக்கு நேர் துணிவுடன் மோதும்
அணுகுமுறை வேண்டும்.ஆசையை அடியோடு ஒழித்து விடுவது இயலாத காரியம். ஆசையை
சீர்படுத்திக் கொண்டால் வாழ்வில் துன்பம் குறைந்து விடும்.எந்தச்
சூழ்நிலையிலும்,ஒருவரை கோபம் அணுகாவிட்டால், அவரது மனம்பக்குவம் அடைந்து
விட்டதாக கொள்ளலாம்.