புதன், 30 அக்டோபர், 2013

சாய்பாபா -பகுதி 3

இனிமையான அந்த இசை எங்கிருந்து வந்தது என கொண்டமராஜூவுக்கு புரியவில்லை. அதே நேரம் ஈஸ்வரம்மாவின் கணவர் வெங்கப்பராஜூவின் கனவிலும் அதே இசை கேட்டது. அவர் கலக்கமடைந்தவராய் மறுநாள் ஜோதிடர் இல்லத்திற்கு சென்றார். என் வீட்டில் கேட்கும் அந்த இசை எங்கிருந்து வருகிறது? என்றார். உங்கள் வீட்டில் யாராவது கர்ப்பமாக உள்ளார்களா? என்றார் ஜோதிடர். இதெப்படி அவருக்கு தெரிந்தது. நம் மனைவி அல்லவா கர்ப்பமாக இருக்கிறாள்? கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கும், இசைக்கும் என்ன சம்பந்தம்?. சிந்தித்த வெங்கப்பராஜூவின் முகத்தில் ஓடிய சலனங்களை வைத்தே புரிந்து கொண்ட ஜோசியர், சொல்லுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் அந்த கர்ப்ப ஸ்தீரி யார்? என்றார். என் மனைவி தான்,. நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் மனைவியின் வயிற்றில் இருக்கும் அந்த குழந்தையை தூங்க வைக்கவே அந்த தேவகானம் எழுகிறது. அது ஒரு தெய்வக்குழந்தை, என்றார் ஜோதிடர். ஆச்சரியம், மகிழ்ச்சி, ஆர்வம் தொற்றிக் கொள்ள வீட்டிற்கு வந்தார் வெங்கப்பர். மனைவியை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார். 1926 நவம்பர் 22ம் தேதி இரவில் ஈஸ்வராம்பாவுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. மாமியார் லட்சுமம்மா அருகிலிருந்த அர்ச்சகர் வீட்டில் நடந்த சத்யநாராயண பூஜைக்கு சென்றிருந்தார். மருமகளுக்கு பிரசவ வேதனை ஏற்பட்ட செய்தியை வேலைக்காரனிடம் சொல்லி அனுப்பினர். அவர் பிரசாதம் பெற்றுக் கொண்டு வருவதாக சொல்லி விட்டார். சற்று நேரத்தில் பிரசாதத்துடன் வீட்டுக்கு வந்தார். மருமகளுக்கு கொடுத்தார்.

கவலைப்படாதே! நிச்சயமாய் ஆண்மகன் பிறப்பான். அவன் உலகத்திற்கே சொந்தமானவனாக விளங்குவான், என்றார். நவம்பர் 23ம் தேதி காலை 5.06 மணிக்கு பிரசவம் நிகழ்ந்தது. பூவுலகம் மகிழ அவதரித்தார் தெய்வமகன் பாபா. அந்த வீட்டில் உள்ளவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்று கார்த்திகை மாதம் திங்கள்கிழமை திருவாதிரை நட்சத்திரம். பொதுவாக குழந்தை பிறந்ததும் என்ன செய்யும்? வீறிட்டு அழும். இந்தக்குழந்தையும் அழுதது. ஆனால் மெல்லிய குரலில் சிறிது நேரம் அழுது விட்டு ஓய்ந்து விட்டது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களெல்லாம் பார்க்க வந்தனர். அதிலும் அவர்களுக்கு அடுத்து, இரண்டாவது வீட்டில் வசித்த சுப்பம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஜாதி வித்தியாசம் பாராத பெண்மணி அவர். அவரது கணவர் தான் அவ்வூர் கர்ணம். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. அதனால் குழந்தையைக் கண்டதும் அள்ளி, அணைத்து கொஞ்ச ஆசைப்பட்டு ஓடோடி வந்தார். அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பிரசவம் பார்த்த பெண் ஈஸ்வரம்மாவின் அருகில் கிடந்த குழந்தையைக் கவனித்தாள். குழந்தை படுத்திருந்த துணி மேலும் கீழும் அசைந்தது. ஏதோ மன பிரமை என நினைத்தவளின் கண்களில் திரும்பவும் துணி ஆடுவது தெரிந்தது. என்ன இது! துணி மேலும் கீழும் ஆடுகிறதே! குழந்தையும் மேல் நோக்கி எழுந்து தாழ்கிறதே! என சந்தேகப்பட்டவளாய், குழந்தையை தூக்கினாள். துணியின் அடியில் ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கிடந்தது. துணியை தூக்கியவுடன் அது சென்று விட்டது. பயமும், வியப்பும் மேலிட பாம்பை பார்த்தாள் பிரசவம் பார்த்த பெண். ஆனால் அந்தப் பாம்பு நாராயணனை சுமக்க வந்த ஆதிசேஷன் போன்றது என்பதை அவளால் அறிய முடியவில்லை. இவ்வூருக்குள் பாம்பு வருவது சகஜம் என்ற அளவிலேயே எடுத்துக் கொண்டாள். சத்ய நாராயண பூஜை நேரத்தில் பிறந்ததால் குழந்தைக்கு, சத்யநாராயணன் என பெயர் வைத்தனர்.

சத்யா என்பது அவனது செல்லப்பெயர். சத்யாவின் அழகை கண்டு விரும்பி அவனைப் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாரும் தூக்கி சென்று கொஞ்சுவார்கள். இருப்பினும் கர்ணம் மனைவி சுப்பம்மாள் வீட்டில் தான் சத்யா நீண்ட நேரம் இருப்பான். வீட்டிற்கு வந்தால் தாத்தா கொண்டமராஜூவிடம் இருப்பான். அவர் தனியாக ஒரு கூரை அமைத்து அங்கு தங்கியிருந்தார். அங்கு தான் பூஜைகளைச் செய்வார். நம் வீட்டில் பூஜை நடக்கும் போது நம் குழந்தைகள் விளக்கை இழுக்கும். குங்குமத்தை கொட்டி விடும். தீப்பெட்டியை எடுத்து விளையாடும். இப்படி குழந்தைகள் செய்யும் எந்த சேஷ்டையையும் செய்வதில்லை சத்யா. அமைதியே வடிவாக இருப்பான். தாத்தா செய்யும் பூஜைகளை அந்த சின்ன வயதிலும் கூர்ந்து கவனிப்பான். அவன் அறைக்குள் இருந்தால், தாத்தாவுக்கும் பூஜை செய்யும் போது தனி பலமே வந்தது போல இருக்கும். விறுவிறுவென ஏற்பாடுகளைச் செய்து பூஜையைக் கவனிப்பார். சத்யா பிறந்து 9 மாதம் ஓடி விட்டது. அமைதியே வடிவாய் இருக்கும் தன் குழந்தையை பார்த்து தாய் ஈஸ்வராம்பாவுக்கு சற்று கலக்கமும் ஏற்படுவதுண்டு. அழக்கூட செய்வதில்லையே இந்தக் குழந்தை. இவன் ஏன் இப்படியே இருக்கிறான்?. மற்ற குழந்தைகளைப் போல துறுதுறுவென இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று எண்ணியபடியே சமையலறையில் பால் காய்ச்சி கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக தொட்டிலில் கிடந்த குழந்தை அழுதது. அழுகை நிற்கவில்லை; அதிகரித்தது. ஈஸ்வராம்பாவுக்கு சந்தேகம். அழாத குழந்தை வீறிட்டு அழுகிறது. பூச்சி எதுவும் கடித்து விட்டதா? குழந்தைக்கு வயிறு வலிக்கிறதா? பெற்ற தாயின் மனம் பரபரத்தது. அவர் கலங்கிப் போய், சத்யா ஏண்டா அழுகிறாய்? என்றவராய், சமையல்கட்டிலிருந்து வெளியே வந்து தொட்டிலைப் பார்த்தார். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அங்கே....?
சாய்பாபா - பகுதி 2

ஈஸ்வராம்பாவுக்கு சற்று நடுக்கம். என்ன இது! இப்படி ஒரு தேஜஸான ஒளி...! இது ஏன் என்னை நோக்கி பாய்ந்து வருகிறது? கலவரப்பட்ட அந்தத் தாய் அந்த ஒளியின் சக்தியை தாங்க முடியாமல் மயங்கி விட்டார். முதல் மூன்று குழந்தைகளுக்கு பிறகு நான்காவதாக ஒரு ஆண் மகன் பிறக்க வேண்டும் என்பது ஈஸ்வராம்பாவின் விருப்பம். ஆனால் அடுத்தடுத்து நான்கு முறை கருவுற்றாலும் கர்ப்பம் கலைந்து விட்டது. ஈஸ்வராம்பா மிகவும் மன வருத்தமடைந்தார். அவரது மாமியார் லட்சுமம்மா தன் மருமகள் மீது உயிரையே வைத்திருந்தார். உலகத்தில் உள்ள மாமியார்களெல்லாம் தன் மருமகளை நடத்தும் முறை பற்றி லட்சுமம்மாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு மருமகள் மெச்சும் மாமியார் அவர்.தெய்வக் குழந்தை பிறக்கப்போகும் அந்த வீட்டில் இருந்தவர்களின் குணமும் தெய்வீகமானதாகவே இருந்தது. லட்சுமம்மா தன் மருமகள் கருவுற பகவானை பிரார்த்தித்தபடியே இருந்தார். ஒருமுறை ஒரு வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு சத்தியநாராயண பூஜை நடந்தது. அந்த பூஜை மிகவும் விசேஷமானதாகும். பக்தி சிரத்தையுடன் அதை நடத்தினால் நல்லதை தவிர வேறெதுவும் நடக்காது. அந்த பூஜையில் கலந்து கொண்ட லட்சுமம்மா, இருக்கும் விரதங்களுடன் இந்த விரதத்தையும் தன் வீட்டில் மேற்கொண்டார்.

அர்ச்சகர் ஒருவர் இதை மிகவும் சிறப்பாக நடத்தி தந்தார். ஒருமுறை லட்சுமம்மாவின் கனவில் தோன்றிய சத்தியநாராயணர், உன் வீட்டில் ஒரு அற்புதம் நிகழப் போகிறது,என கூறி இருந்தார். இந்த நேரத்தில் தான் இந்த நீல ஒளி அற்புதம் நிகழ்ந்தது. அந்த ஒளி ஈஸ்வராம்பாவின் வயிற்றில் அணுஅணுவாய் இறங்கியது. கிணற்றடியில் மயங்கிஇருந்த ஈஸ்வராம்பா சற்று நேரத்தில் எழுந்தார். அவரது மாமியார் அவரை ஏற்கனவே எச்சரித்திருந்தார். இதுபோல ஏதாவது அற்புதம் நடந்தால் நீ அஞ்ச வேண்டாம் மருமகளே, என சொல்லி இருந்ததால், ஈஸ்வராம்பா இதுபற்றி முதலில் பயந்தாலும் பின்பு சுதாரித்துக் கொண்டார். சிறிது காலத்தில் கர்ப்பமாகவும் ஆனார். மருமகள் கர்ப்பமானதை அறிந்து லட்சுமம்மா பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் பூஜை, புனஸ்காரங்களில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டார். ஈஸ்வராம்பாவை அனைவரும் அன்புடன் கவனித்துக் கொண்டனர். அப்போது தான் அந்த கிராமத்திற்கு வந்தார் வெங்காவ தூதர். ஏற்கனவே வெங்காவதூதர் என்ற பக்திமானின் வம்சத்தவரேகொண்டம ராஜூவின் குடும்பத்தினர். அவரைப் போலவே பெயர் கொண்ட ஒருவர் வந்ததும், கொண்டமராஜூ மகிழ்ச்சி கொண்டார்.

மகாராஷ்டிராவில் இருந்து வந்த அவரது பிரசங்கம் நகைச்சுவையாக இருக்கும். இதற்காகவே மக்கள் அவரைச் சுற்றி சுற்றி வருவார்கள். கடவுள் மனிதனுக்கு கொடுத்தமிகப் பெரிய வரப்பிரசாதம் நகைச்சுவை. இதை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் கூட்டம் என்றுமே அதிகமாக இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. ஒருநகைச்சுவை பட்டிமன்றம் என்றால் கூட எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பது நாம் அறிந்தது தான். கொண்டமராஜூ அவரது பிரசங்கத்தை தவறாமல் கேட்கச் செல்வார். ஒருமுறை வெங்காவ தூதர், கொண்டமராஜூவை ஒரு தனியிடத்தில் சந்தித்தார். அவரது கையைப் பிடித்தார். பேச வாய் வரவில்லை. இருப்பினும் நா தழுதழுக்க, ராஜூ!  நாராயணன் இங்கு அவதரிக்க போகிறார். அதற்காக காத்திரு, என காதோரமாக சொன்னார். கொண்டமராஜூவும் தலை அசைத்தார். ஆனால் எங்கே எப்படி நாராயணன்அவதாரம் எடுக்கப் போகிறார் என்பது அவருக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் கொண்டமராஜூவின் வீட்டில் விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அவர் வீட்டில் இரவு நேரத்தில் இனிய இசை ஒலித்தது. வெங்கப்பராஜூ நாடகங்கள் மீது அபிமானம் கொண்டவர். அவரது வீட்டில் நாடக ஒத்திகைகள் நடந்து கொண்டிருக்கும். நாடகத்துக்காக யாரோ இசைக்கருவிகளை மீட்டுகிறார்களோ என அந்த அறையைப் போய் பார்த்தால் அங்கு யாருமே இல்லை. கொண்டமராஜூ அதிர்ச்சி அடைந்தார். அப்படியானால் அந்த தெய்வீக இசை எங்கிருந்து வந்தது? அதை மீட்டியவர் யார்?
மகான்கள்

சாய்பாபா -பகுதி 1


கிராமத்தில் இருந்த பசுக்கள் பால் கறக்க மறுத்தன. குழந்தைகள் பாலின்றி சிரமப்பட்டனர். அந்த ஊருக்கு யாராவது புது பசுக்களை வாங்கி வந்தால் அவை நோய் கண்டு இறந்தன. ஊரெங்கும் ஒரே பாம்பு புற்றுகளாக காட்சியளித்தது. எப்போதும் இல்லாத வகையில் திடீரென புற்றுகள் தோன்றக் காரணம் என்ன என்ற விசாரணை ஆரம்பமானது. அவ்வூர் பசுக்களை மேய்க்கும் இடையனை பிடித்து மக்கள் விசாரித்தனர். அவன் சொன்ன விஷயம் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் ஒருமுறை வழக்கம் போல் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஒரு மாட்டிடம் மட்டும் தொடர்ந்து பால் இல்லாமல் இருந்தது. மதிய நேரத்தில் பார்த்தால் அந்த பசுவின் மடி நிறைந்திருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மடி காலியாகி இருக்கும். பால் இல்லாதது பற்றி மாட்டின் சொந்தக்காரர் கேட்டால் அவன் பதில் சொல்லி ஆக வேண்டுமே என்ற பயம். யாராவது அந்த மாட்டின் பாலைக் கறக்கிறார்களா என அவன் கண்டுபிடிக்க முயன்றான்.

ஒருநாள் மாட்டின் பின்னாலேயே சென்றான். அந்த மாடு ஒரு புற்றின் அருகில் போய் நின்றது. புற்றிலிருந்து ஒரு நாகப்பாம்பு வெளியே வந்தது. அந்த பாம்புக்கு குழந்தையின் முகம் இருந்தது. அது பசுவிடம் பால் குடிக்க ஆரம்பித்தது. இடையனுக்கு வந்தது கோபம்! அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்தான். ஒரே போடாக அதன் தலையில் போட்டான். அலறித்துடித்த பாம்பு சாபமிட்டது. என்னைக் கொன்ற இந்த ஊரில் இனி எந்த மாடும் பால் கறக்காது. இந்த ஊரெல்லாம் பாம்பு புற்றாகி மக்களை பயமுறுத்தும். யாரும் நிம்மதியாக தூங்க முடியாது. இந்த ஊரின் பெயரே இனி புற்றூர் என மாறும். பசுக்கள் வளர்ப்போர் பெரும் நஷ்டமடைவர், என்று சொல்லி விட்டு இறந்து போனது. அன்றுமுதல் தான் ஊரில் இந்த நிலை ஏற்பட்டு விட்டதாக இடையன் கூறினான். மக்கள் மிகவும் வருத்தப்பட்டனர். இந்த நிலைமையை மாற்றாவிட்டால் ஊரையே காலி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உண்டாயிற்று. அந்த ஊரின் பெயர் கொல்ஸ்பள்ளி. ஆனாலும் பசுக்கள் அதிகம் இருந்ததால், அதை ஆயர்பாடி என்றே செல்லமாக அழைத்தனர்.

செல்வச் செழிப்பு மிக்க அவ்வூர் வாடி வதங்கிப் போனதால் மக்கள் வாழ்வதற்கே சிரமப்பட்டனர். ஏழ்மை தாண்டவமாடியது. அவ்வளவு சிரமத்திற்கிடையிலும் ஒரு குடும்பம் மட்டும் புகழோடு விளங்கியது. ராஜூ வம்சத்தாரின் ஆளுகைக்கு உட்பட்டு அப்பகுதி அமைந்திருந்தது.  அந்த வம்சத்தில் ஒரு காலத்தில் மிகப் பெரிய அறிஞராகவும், மகானாகவும் விளங்கியவர் வெங்காவ தூதர். அவர் வம்சாவழியில் வந்தவர் ரத்னாகர கொண்டம ராஜூ. நூறாண்டு காலம் வாழ்க, என்ற வாழ்த்து இவருக்கு தான் பொருந்தும். ஏனெனில் இவர் நூறு வயது வாழ்ந்தவர். ராமாயணத்தை எப்போதும் படித்துக் கொண்டிருப்பார். ராமாயண கதைகளை மக்களுக்கு கூறுவார். ராமாயணத்தில் என்ன கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்வார். கொண்டமராஜூக்கு இரண்டு மகன்கள். இவர்களுக்கு தங்கள் குடும்பத்தின் குல விளக்காக விளங்கிய வெங்காவ தூதரின் பெயரையே வைத்தார் கொண்டமராஜூ. மூத்த மகன் பெத்த வெங்கப்ப ராஜூ என்றும், இளைய மகன் சின்ன வெங்கப்ப ராஜூ என்றும் அழைக்கப்பட்டனர்.

பெத்த வெங்கப்ப ராஜூ வளர்ந்ததும் அவருக்கு ஈஸ்வாராம்பா என்ற பெண்மணியை மணமுடித்து வைத்தார் கொண்டம ராஜூ. இவர்கள் இல்லறத்தை நல்லறமாக நடத்தி ஒரு ஆண் மகனையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றனர். பெரிய மகன் பெயர் சேஷமராஜூ. மகள்கள் வெங்கம்மா, பர்வதம்மா. இனிமையாக கழிந்து கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையில் மேலும் இனிமை சேர்க்க விரும்பினார் பகவான். ஒருநாள் கொண்டமராஜூவின் மனைவி ஒரு கனவு கண்டார். அவரது கனவில் சத்ய நாராயணன் தோன்றினார். அம்மா! நாளை உன் மருமகள் உடலில் ஒரு வியக்கத்தக்க மாற்றம் ஏற்படும். அதுகண்டு பயப்பட வேண்டாம், என்றார் சத்திய நாராயணன். மாமியார் தன் மருமகளை அழைத்து விபரம் சொன்னார். மருமகள் ஈஸ்வராம்பா அன்று கிணற்றடியில் நின்று பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.  தண்ணீர் இறைக்க ஆரம்பித்தார். அப்போது வானிலிருந்து ஈஸ்வராம்பாவை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது அந்த நீல நிற ஒளி.
12.மதுரகவி ஆழ்வார்

பயோடேட்டா

பிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம்
நட்சத்திரம் : சித்திரை, (வளர்பிறைசதுர்த்தசி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி
பாடல்கள் : 96
சிறப்பு : ஆழ்வாராயிருந்து இன்னொரு ஆழ்வாரைப் பாடிய பேறு பெற்றவர், நம்மாழ்வாரைப் புகழ்ந்தவர்.

கருடாழ்வாரின் அம்சமாக திருக்கோளூர் என்ற திவ்யதேசத்தில் அவதரித்தவர் மதுரகவி ஆழ்வார். செவிக்கு இனிமையாக செஞ்சொற்களால் கவிதை பாடும் வல்லவர் ஆதலால் இவர் மதுரகவி ஆழ்வார் என புகழப்பட்டார். ஒருமுறை இவர் அயோத்தியில் உள்ள ராமபிரானை வணங்கிவிட்டு அங்கேயே சிலகாலம் தங்கினார். ஒருநாள் தான் பிறந்த திருக்கோளூர் பெருமானை தென்திசை நோக்கி வணங்கும்போது வானத்தில் ஒரு ஜோதி தெரிவதைக் கண்டார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களும் அந்தத் தென்திசை நோக்கிப் புறப்பட்டார். ஆழ்வார் திருநகரி வந்தவுடன் அந்த ஜோதியைக் காணாத ஆழ்வார், அந்த ஊர் மக்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன எனக் கேட்டார். ஊர் மக்களும், அந்த ஊர் புளிய மரத்தினுள் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி கூறினார்கள்.

நம்மாழ்வாரின் முன் சென்ற மதுரகவி ஆழ்வார், நம்மாழ்வாருக்கு காது கேட்குமா என அறிய ஒரு குண்டுக்கல்லை தூக்கிப்போட்டார். அந்த சத்தத்தால்  நம்மாழ்வார் கண் விழித்தார். இவர் நம்மிடம் பேசுவாரா என்பதை அறிய செத்த பின் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் ? (உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து எதனைஅனுபவித்து எங்கே இருக்கும் ?) எனக் கேட்டார். அதற்கு, பிறந்தது முதல் பெற்றவர்களிடம்கூட பேசாத நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்று பதில் உரைத்தார். மதுரகவி ஆழ்வார், தன்னை ஆட்கொள்ளுமாறு நம்மாழ்வாரிடம் வேண்ட அவரும் நம் பிரபந்தங்களை ஓலைப்படுத்தும்படி ஆணையிட்டார். நம்மாழ்வார் காலத்துக்குப் பின் அவரது விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளச் செய்தார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவர்கள் நம்மாழ்வாரை வாதத்திற்கு அழைத்தனர். அவர் இல்லாததால்  மதுரகவி ஆழ்வார், முன்னூறு சங்கப்புலவர்கள் ஏறிய சங்கப்பலகையில் நம்மாழ்வார், பாடிய ஓலையை வைத்தவுடன் பலகை கவிழ்ந்தது. அனைத்துப்புலவர்களும் பொற்றாமரைக்குளத்துக்குள் விழுந்துவிட்டனர். நம்மாழ்வார் பகவானின் அம்சம் என்பதை சங்கப்புலவர்கள் உணர்ந்தனர். மதுரகவி, ஆழ்வார் தம் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும் பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி உயர்வுற்றார். பெருமாளின் 108 திருப்பதிகளில் மதுரகவி ஆழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஒரு கோயிலை மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். அந்தக்கோயிலிலும் பெருமானைக் கூடபாடாத மதுரகவி ஆழ்வார் தன் குருவான நம்மாழ்வாரைப் போற்றி கண்ணிநுன் சிறுத்தாம்பு என்ற திவ்ய பிரபந்தத்தை பாடினார்.

மதுரகவி ஆழ்வார், நம்மாழ்வார் (1)

1. ஆழ்வார் திருநகரி (அருள்மிகு ஆதி நாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி)
11.நம்மாழ்வார்

பயோடேட்டா

பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின்  அம்சம்

வைணவத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வரைத் தான் குறிக்கும். வடமொழியின் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு ஒப்பான திருவாய் மொழி உள்ளிட்ட நான்கு தமிழ் பிரபந்தங்களை அருளியவர் நம்மாழ்வார். ஆழ்வார் அவதரிக்கும் போது ஆத்ம ஞானத்தை மறைக்கிறசடம் என்னும் காற்று தம்மை நெருங்க அதனைக் கோபித்துக் கொண்டார். அதனாலேயே இவருக்கு சடகோபன் என்கிற பெயர் உண்டாயிற்று. மேலும் இவருக்கு பராங்குரர், வகுளாபரணர் என்ற பெயர்களும் உண்டு ஆழ்வார் பிறந்த போதிலிருந்தே பால் உண்ணாமலும், அழாமலும், சிரிக்காமலும், வளர்ந்து வந்தார். இதனால் பெற்றோர் மிகவும் வருந்தினர். திருவநந்தாழ்வான் திருப்புளிமரமாக வளர்ந்திருக்க அந்த மரத்தடியில் தொட்டில் கட்டி மாறன் என்ற பெயரிட்டு அங்கேயே விட்டுப்போனார்கள். ஆழ்வாரும் திருப்புளி மரத்தில் குகை போன்ற பொந்தில் பதினாறு வருஷங்களை கழித்தார். திருமாலுக்குரிய திவ்விய தேசங்களில் 37 திவ்விய தேசங்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார்.

அயோத்தியில் இருந்த மதுரகவி ஆழ்வார் தெற்கே வந்து நம்மாழ்வாரை வணங்கி அவருக்கு சேவை செய்து வந்தார். நம்மாழ்வார் பெருமானின் குணங்களை சொல்ல சொல்ல மதுர கவியாழ்வார் எழுதுவார். நம்மாழ்வார் அனுபவித்து சொல்லும் பொழுது மயக்கம் அடைந்து விடுவார். அப்பொழுதெல்லாம் மதுரகவியாழ்வார் தான் இவரை மயக்கம் தெளிவிப்பார். நம்மாழ்வார் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே இவ்வுலக வாழ்க்கையை வேண்டினார். இப்பொழுதும் ஆழ்வார் திருநகரியில் இவர் தவம் செய்த புனித புளியமரம் உள்ளது. பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார் தனியாக சென்று 16 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 19 கோயில்களையும் என மொத்தம் 35 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

நம்மாழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-16

1. ஸ்ரீவைகுண்டம் (அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி)
2. நத்தம் (அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி
3. திருப்புளியங்குடி (அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி
4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு  ஸ்ரீநிவாசன் திருக்கோயில்(நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி (திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
4ஏ. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி,(திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
5. பெருங்குளம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி)
6. தென்திருப்பேரை (அருள்மிகு மகா நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி)
7. திருக்கோளூர் (அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில்(நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி)
8. வானமாமலை (அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி)
9. திருப்பதிசாரம் (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர் கோவில், கன்னியாகுமரி)
10. திருவட்டாறு (அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி)
11. திருவனந்தபுரம் (அருள்மிகு  அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், கேரளா மாநிலம்)
12. ஆரம்முளா (அருள்மிகு  திருக்குறளப்பன் திருக்கோயில்,திருவாறன் விளை,பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்)
13. திருவண்வண்டூர் (அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
14. திருக்கடித்தானம் (அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம், கேரளா மாநிலம்)
15. திருக்காக்கரை (அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
16. திருச்செங்குன்றூர் (அருள்மிகு  இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரளா மாநிலம்)

நம்மாழ்வார் மற்ற ஆழ்வார்களுடன்  சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-19

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் (5)

1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு  மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)

நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் (1)

1. ஆழ்வார் திருநகரி (அருள்மிகு ஆதி நாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி)

நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் (1)

1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)

நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)

நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)

நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார் (1)

1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார் (1)

1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
10.குலசேகர ஆழ்வார்

பயோடேட்டா

பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம்
நட்சத்திரம் : புனர்பூசம், (வளர்பிறை துவாதசி திதி)
கிழமை : வெள்ளி
தந்தை : திட விரதன்
எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
பாடிய பாடல்  : 105
சிறப்பு : மன்னனின் மகனாய் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்.

திருமாலின் திருவருளால் சேர மன்னன் திடவிரதன் என்பவனுக்கு  கவுஸ்து அம்சமாக குலசேகராழ்வார் அவதரித்தார். தனது தந்தைக்குப்பின் சேரநாட்டை மிகவும் சிறப்பான ஆட்சி செய்தார். இவரது சிறப்பான ஆட்சி கண்டு பொறாமைப்பட்டு இவருடன் போருக்கு வந்த சோழ, பாண்டிய மன்னர்களை வென்று, தமிழகத்தை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இவரது வீரத்தை கண்ட பாண்டியமன்னன் தன் மகளை இவருக்கு திருமணம் செய்து வைத்தார். வீரம், போர், நான், எனது என்ற அகங்காரத்துடன் இருந்த குலசேகராழ்வாரின் மனதில் திருமால் புகுந்து, மாயையை விலக்கி தன் மீது மட்டும் நேசம் உடையடவராக மாற்றினாõர். இதனால் மனம் மாறிய குலசேகராழ்வார் இது நாள் வரை தான் செய்து வந்த அற்பத்தனமான செயல்களை நினைத்து வருந்தினார். அத்துடன் நாளுக்கு நாள் நாராயணன் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் மிகுதியானது. இந்த அன்பையும் பக்தியையும்,

செந்தழலே வந்து அழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெம்கதிரோறரு
அல்லால் அலராவால்;

வெம்துயம் வீட்டாவிடினும் விற்
றுவக் கோட்டு அம்மானே ! உன்
அந்தம் இல்சீர்க்கு அல்லால்
சுகம் குழைய மாட்டேனே

என்று பாடி அதன் படி வாழ்ந்தும் வந்தார். அத்துடன் நாள்தோறும் வைணவப் பெரியவர் மூலம் ராமாயணக் கதைகளை கேட்டும் வந்தார். ராமாயணக்கதை கேட்ட போது ராமர் சீதையைக் மீட்க அரக்கர்களுடன் போர் புரிந்தார் என்பதை கேட்ட போது உணர்ச்சிவசப்பட்டு அந்த அரக்கர்களுடன் சண்டை போ தன் படையை தயார் செய்தவர். இப்படி பெருமாள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த மன்னர், ஒருநாள் திடீரென தன் நாட்டை ஆளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு பெருமானை தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.  இவர் பெருமாள் மேல் பாடிய பாசுரங்களுக்கு பெருமாள் திருமொழி என்று பெயர், இவர் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளை பூமாலையாலும் பாமாலையாலும் பூஜை செய்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் சென்று பெருமாளை தரிசித்து நிற்கும் போது இறைவன் பேரருளால் இவ்வுலகை விட்டு வைகுண்டம் சேர்ந்தார்.  பெருமாளின் 108 திருப்பதிகளில் குலசேகர ஆழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 7 கோயில்களையும் என மொத்தம் 8 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

குலசேகர ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில் - 1

1. திருவித்துவக்கோடு (அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு,பாலக்காடு, கேரளா மாநிலம்)

குலசேகர ஆழ்வார் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து  மங்களாசாசனம் செய்த கோயில் - 7

குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. திருச்சித்ர  கூடம் (அருள்மிகு கோவிந்த ராஜ பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
2. திருவாழித் திருநகரி, (அருள்மிகு லட்சுமி நரசிம்மர், தேவராஜன் திருக்கோயில், திருவாழித் திருநகரி, நாகப்பட்டினம்)

குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் (1)

1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)

குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)

குலசேகர ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

குலசேகர ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
09.திருப்பாணாழ்வார்

பயோடேட்டா

பிறந்த இடம் : உறையூர் (திருச்சி)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு, துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம்.
நட்சத்திரம் : ரோகிணி (வளர்பிறைதுவிதியை திதி)
கிழமை : புதன்
எழுதிய நூல் : அமலனாதிபிரான்
பாடிய பாடல் : 10
சிறப்பு : திருமாலின் ஸ்ரீவத்சத்தின் அம்சம்

இவர் தினமும்  கையில் வீணையேந்தி காவிரியாற்றின் தென்கரைக்கு செல்வார். அங்கிருந்தபடியே ஸ்ரீரங்கப்பெருமாளை நோக்கி பாடுவார். ஒருமுறை இப்படி பெருமாளை நோக்கி பாடிக்கொண்டிருக்கும் போது சாரங்கமுனி  என்பவர் பெருமாளை நீராட்ட பொற்குடத்தில் நீர் எடுத்து  சென்றார். அப்போது, தான் செல்வதற்காக கைதட்டி திருப்பாணரை விலக கூறினார். பெருமானின் நினைப்பிலேயே இருந்ததால் சாரங்க முனிவர் கூப்பிட்டதை திருப்பாணர் கவனிக்க வில்லை. இதனால் கோபம் கொண்ட சாரங்கமுனி திருப்பாணரை கல்லால் எறிந்து அவர் தலையில் ரத்தம் வர செய்தார். இதன் பின் பொற்குடத்தில் இருந்த நீரை எடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய சாரங்கமுனி முயன்றபோது பெருமாளின் தலையில் ரத்தம் வருவதை பார்த்து துடித்தார். இதற்கான காரணத்தை அறிய முடியாததால், ஏதும் சாப்பிடாமல் உறங்கி விட்டார். பெருமாள் சாரங்கமுனி கனவில் தோன்றி ஆற்றின் கரையில் நின்று  என்னைப்பாடிக் கொண்டிருந்த திருப்பாணரை கல்லால் தாக்கினாய். என் உள்ளம் உண்மையான பக்தனான திருப்பாணர் மீது இருந்ததால், அவன் மீது எறிந்த கல் என் மீது பட்டது.

எனவே திருப்பாணரிடம் சென்று மன்னிப்பு கேட்டு, அவனை தோள்மீது  சுமந்து கோயிலுக்கு வந்து என்னை தரிசனம் செய்ய வைப்பாயாக என்று பெருமாள் கூறி மறைந்தார். பெருமானின் உத்தரவுப்படி சாரங்கமுனி திருப்பாணரை தோளில் சுமந்து பெருமாளை தரிசனம் செய்ய வைத்தார். இதுதான் வரை பெருமாளை பார்த்திராத திருப்பாணர் பெருமாளின் பாதம் முதல் உச்சி வரை பார்த்து மகிழ்ந்தார். இந்த மகிழ்ச்சியில் தான்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்தானை
அண்டா கோனணி அரங்னென் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாயே

என்று பத்துப்பாசுரங்களையும் பாடிமுடித்தார். திருப்பாணாழ்வார் கடைசிப்பாகத்தில் அரங்கண் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணாவே என்ற இறுதி அடியைப்பாடி முடித்ததுமே அனைவரும் காணும்படி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து தோன்றாத்தன்மை பெற்று இவ்வுலகை விட்டு மறைந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருப்பாணாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 3 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார்,  (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
08.திருமங்கையாழ்வார்

பயோடேட்டா

பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்
நட்சத்திரம் : கார்த்திகை (பவுர்ணமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,   திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை,  பெரிய   திருமடல்,சிறிய திருமடல்.
பாடிய பாடல் : 1253
சிறப்பு : திருமாலின் சார்ங்கம் என்ற வில் லின் அம்சமாக   பிறந்தவர், மன்னனாகப் பிறந்து பக்தி   மார்க்கத்தில்திளைத்தவர்.

பெற்றோர்கள் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த மன்னன், நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன், திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேலோக கன்னி, கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும், அறிவையும் கேள்விப்பட்ட  திருமங்கைஆழ்வார் இவளைத்திருமணம் செய்ய விரும்பினார். விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையின் பேரில்  அமுது படைத்து, படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. வழக்கமாக சோழமன்னனுக்கு கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். கோபமடைந்த மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்றுநாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார். பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும், பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மன்னனுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார். இதையறிந்த மன்னன் ஆழ்வாரைப் பணிந்து, பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே, ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.
வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆழ்வார் திருடனாக இருந்தாலும் தன் உணவுக்கு கூட அதை எடுக்காமல் யாசித்து சாப்பிட்டார்.

பெருமாளின் 108 திருப்பதிகளில் இவர் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.  12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-46

1. திருப்புல்லாணி (அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில்,  திருப்புல்லாணி, ராமநாதபுரம்)
2. திருமயம் (அருள்மிகு  சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை)
3. திருக்கரம்பனூர் (அருள்மிகு புரு÷ஷாத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி)
4. கண்டியூர் (அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்)
5. நைமிசாரண்யம் (அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உ.பி.)
6. ஜோதிஷ்மட், திருப்பிரிதி(அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உ.பி.)
7. சிங்கவேள்குன்றம் (அருள்மிகு பிரகலாத வரதன்,நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா)
8. திருஎவ்வுள் (அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்)
9. தின்னனூர் (அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்)
10. திருத்தண்கா (அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
11. திருப்பரமேஸ்வர விண்ணகரம் (அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், திருப்பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்)
12. திருப்பவள வண்ணம் (அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்)
13. திரு நீரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
14. திரு காரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
15. திருக்கார் வானம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
16. திருக்கள்வனூர் (அருள்மிகு ஆதிவராக பெருமாள், கள்வப்பெருமாள் திருக்கோயில்கள், திருக்கள்வனூர், காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
17. நிலாத்திங்கள் துண்டான் (அருள்மிகு சந்திர சூடப் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்டான், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
18. திருப்புட்குழி (அருள்மிகு விஜய ராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம்)
19. திருவஹீந்தபுரம் (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்)
20. காழிச்சீராம விண்ணகரம் (அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்)
21. திருக்காவளம்பாடி (அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
22. திருவெள்ளக்குளம் (அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
23. கீழைச்சாலை (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
24. திருப்பார்த்தன் பள்ளி (அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருப்பார்த்தன் பள்ளி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
25. திருமணிக்கூடம் (அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
26. மணிமாடக் கோயில் (அருள்மிகு நாராயணன் திருக்கோயில், மணிமாடக் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
27. அரியமேய விண்ணகரம் (அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
28. வன் புருத்÷ஷாத்தமம் (அருள்மிகு புருத்÷ஷாத்தமன் திருக்கோயில், வன் புருத்÷ஷாத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
29. திருத்தேற்றி அம்பலம் (அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தேற்றி அம்பலம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
30. வைகுந்த விண்ணகரம் (அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
31. செம்பொன் சேய் கோயில், (அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்சேய் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
32. தலைசிங்க நான்மதியம் (அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்)
33. இந்தளூர் (அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்)
34. தேரழுந்தூர் (அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்)
35. திருச்சிறுபுலியூர் (அருள்மிகு அருள் மாகடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்,  திருவாரூர்)
36. நாகை (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், நாகபட்டினம்)
37. திருக்கண்ணங்குடி (அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர்)
38. திருக்கண்ண மங்கை (அருள்மிகு பக்தவத்ஸலப்  பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்)
39. திருச்சேறை (அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்)
40. திருநறையூர் (அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்)
41. திருவெள்ளியங்குடி (அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்)
42. நந்திபுர விண்ணகரம் (அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தஞ்சாவூர்)
43. ஆதனூர் (அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்)
44. திருப்புள்ளபூதங்குடி (அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், திருப்புள்ளபூதங்குடி, தஞ்சாவூர்)
45. திருக்கூடலூர் (அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்)
46. திருக்கோழி (அருள்மிகு அளகிய மணவாளர் திருக்கோயில்,  உறையூர், திருச்சி)

திருமங்கை ஆழ்வார் மற்ற ஆழ்வார்களுடன்  சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-36

திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (4)

1. திருநீர்மலை (அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், திருநீர்மலை, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)
2. திருவிடந்தை (அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், திருவிடந்தை, காஞ்சிபுரம் மாவட்டம்)
3. திருக்கடல் மல்லை (அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்)
4. அத்திகிரி (அருள்மிகு வரதராஜப்  பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார்  (1)

1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)

திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)

1. திரு ஊரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருமங்கையாழ்வார், பேயாழ்வார் (1)

1. திருக்கடிகை (அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், சோளிங்கபுரம், வேலூர்  மாவட்டம்)

திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (5)

1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு  மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)

திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் (3)

1. பத்ரிநாத் (அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத், உ.பி,)
2. சாளக்கிராமம், முக்திநாத் (அருள்மிகு மூர்த்தி திருக்கோயில், சாளக்கிராமம், நேபாளம்)
3. திருக்கூடல் (அருள்மிகு கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில், திருக்கூடல், மதுரை)

திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் (2)

1. திருச்சித்ர  கூடம் (அருள்மிகு கோவிந்த ராஜ பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
2. திருவாழித் திருநகரி, (அருள்மிகு லட்சுமி நரசிம்மர், தேவராஜன் திருக்கோயில், திருவாழித் திருநகரி, நாகப்பட்டினம்)

திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (1)

1. திருத்தங்கல் (அருள்மிகு குண்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்)

திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் (1)

1. திருஆய்பாடி (அருள்மிகு நவமோகனகிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உ.பி.)

திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)

1. திருவல்லிக்கேணி (அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை)

திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் (1)

1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)

திருமங்கையாழ்வார், பேயாழ்வார்,  நம்மாழ்வார் (1)

1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)

திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்(1)

1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)

திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் (2)

1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)

திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார்,  பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)

1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்  திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)

திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் (2)

1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)

திருமங்கை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)

1. திருப்பாடகம் (அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்)

திருமங்கை ஆழ்வார் ,பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் (1)

1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)

திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், நம்மாழ்வார் (1)

1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)

திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் (1)

1. திருக்கோஷ்டியூர் (அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)

திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)

1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் (1)

1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)

திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
07.தொண்டரடி பொடியாழ்வார்

பயோடேட்டா

பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்
நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
பாடிய பாடல் : 55
வேறு பெயர் : விப்பிர நாராயணர்
சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்

சோழநாட்டின் திருமண்டங்குடி என்ற கிராமத்தில் வேத விசாரதர் என்பவர் சிறந்த திருமால் தாசராக விளங்கி வந்தார். இவர் எப்பொழுதும் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பூமாலைகள் தொடுத்து பெருமாளுக்கு சாற்றி வந்தார். அந்த உலகளந்த பெருமாளின் கருணையால் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருமாலின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாக ஒரு புதல்வர் பிறந்தார். பெற்றோர்களும் அவருக்கு விப்பிர நாராயணர் என்று பெயர் சூட்டினார்கள். சகல கலைகளையும் கற்றுணர்ந்த விப்பிரநாராயணருக்காக விண்ணுலகிலிருந்து, திருமாலின் சேனைத்தலைவரான சேனை முதலியர் பூமிக்கு வந்து உண்மைப்பொருளை உணர்த்தி சென்றார். இதன் பிறகு விப்பிர நாராயணருக்கு அரங்கனைப்பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. இதனால் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரிய விரதத்தையே உயர்வாக எண்ணி வாழ்ந்து வந்தார்.

ஒரு முறை திருமாலின் திருத்தலங்கள் அனைத்தையும் பார்த்து வர ஆசைப்பட்டு முதலில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்தார். அவர் பெருமையை கேட்டறிந்தார். அரங்கனைப்பார்த்த மகிழ்ச்சியில் திருமால் பெருமைக்கு நிகரில்லை எனவே பெருமானே போதும் வேறெதுவும் வேண்டியதில்லை என்று நினைத்து, பச்சை மாமலைபோல் மேனி ! பவள வாய்க் கமலச் செங்கண், அச்சுதா ! அமரா ! ஆயர்தம் கொழுந்தே எனும் இச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே  என்று நெஞ்சுருகி பாடினார். ஸ்ரீரங்கத்துப்பெருமாளுக்கு சேவை செய்வதற்காக கோயிலிலேயே தோட்டம் அமைத்து பூக்களை பறித்து பெருமாளுக்கு தினமும் மாலை தொடுத்து கொடுப்பார். அதன் பின் பிற வீடுகளுக்கு  சென்று உணவு வாங்கி அருந்துவார். இவருக்கு ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. அனைவரிடமும் சமமாக பழகுவார். இதை சோதிக்க நினைத்தார் பரந்தாமன்.

திருக்கரம்பனூரில் தேவி, தேவதேவி என இரு தாசிகள் இருந்தனர். இவர்கள் உறையூர் அரசசபையில் ஆடி பாடி பரிசுகள் பல பெற்று திரும்பும் வழியில் விப்பிர நாராயணரின் தோட்டத்தின் அழகில் மயங்கி அதை பராமரிப்பவர் சந்திக்க சென்றார்கள். ஆனால் இவர்கள் வந்ததையோ, இவர்களது  பேச்சையோ கவனிக்காமல் பெருமாளுக்கு பூமாலை தொடுப்பதிலேயே கவனமாக இருந்தார். இவரது கவனத்தை திருப்பி தன் மீது எப்போதும் மாறாத அன்புவைக்க சபதம் ஏற்றாள். அதேபோல் பெருமாளுக்கு தானும் சேவை செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக விப்பிர நாராயணரின் மனதில் இடம் பிடித்தார். தேவதேவி இல்லாமல் தான் இல்லை என்ற நிலைக்கு மாறி விட்டார். தன் குடும்பத்தை பார்க்க சென்ற தேவதேவியுடன் விப்பிரநாராயணனும் சென்றார். அவரிடம் இருந்த செல்வம் எல்லாம் தீர்ந்ததால் தேவ தேவியில் தாயாருக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே வெளியே சென்று தோட்டத்தில் அமர்ந்தார். அப்போது பெருமாள் ஒரு பொன் கிண்ணத்தை விப்பிர நாராயணன் கொடுத்ததாக தேவதேவியின் தாயாரிடம் கொடுத்தார். மறுநாள் கோயிலில் தங்ககிண்ணம் காணாமல் தேவதேவியின் தாயாரையும், விப்பிரநாராயணனையும் விசாரித்து விட்டு இவரை மட்டும் சிறையிலடைத்தான் மன்னன். மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி விப்பிரநாராயணனின் பெருமைகளை கூறி அவரை விடுவிக்க கூறினார். அதன்பின் விப்பிரநாராயணன் தொண்டரடிப்பொடியாழ்வாராக நெடுங்காலம் பெருமாளை  பாடி இறைவனுடன் கலந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் தொண்டரடி பொடியாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 2 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

தொண்டரடி பொடியாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)

தொண்டரடி பொடியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார்  (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
06.ஆண்டாள்

பயோடேட்டா

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம்
நட்சத்திரம் : பூரம் (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
பாடிய பாடல் : 173
சிறப்பு : கரும்பார் குழல் கோதை என்ற சிறப்பு பெயர் பெற்றவள், திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது, ஆண்டாளை எடுத்து சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து ரெங்கமன்னாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கியப்பணியாகும். மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள். ஒருமுறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறுமாலை கொண்டு வரும்படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலையை ஆண்டாள் அணிவதை கண்டார். ஆண்டாளை கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள்.

ஸ்ரீ ரங்கப்பெருமாளை திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையும். காதலின் வரமாக நாச்சியார் திருமொழியையும், காதலின் வீரமாக நாச்சியார் திருமொழியையும் பாடினார். தன தந்தையிடமும் இந்த தெய்வீக திருமணம் பற்றி கூறினார். ஆழ்வாரும் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றி வந்தார். இதைக்கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தை சிறப்பாக நடந்த ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல ஆண்டான் விருப்பப்பட்டாள். ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய ரெங்கநாதர் அவனை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். பங்குனி உத்திரநன்னாளில் ஆண்டாள் ரெங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது. பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஆண்டாள், பெரியாழ்வார் (1)

1. ஸ்ரீவில்லிபுத்தூர் (அருள்மிகு வடபத்ரசாயி திருக்கோயில் (ஆண்டாள்), ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்

ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருஆய்பாடி (அருள்மிகு நவமோகனகிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உ.பி.)

ஆண்டாள், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)

ஆண்டாள், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் (1)

1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)

ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)

1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் (1)

1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)

ஆண்டாள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

ஆண்டாள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
05.பெரியாழ்வார்

பயோடேட்டா

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர்
தாய் : பதுமவல்லி
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
நட்சத்திரம் : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)
கிழமை : திங்கள்
எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
பாடிய பாடல் : 473
சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்

பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர் . ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயிக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டுவதை தன் முக்கிய பணியாக கொண்டிருந்தார் இவர். அக்காலத்தில் மதுரையில் அரசனான வல்லபதேவ பாண்டியன் நகர சோதனை வரும் போது ஒரு வேதியர் திண்ணையில் படுத்திருப்பதை கண்டு ஒரு நல்ல வார்த்தை சொல்லும்படி கேட்டார். அந்த வேதியரும் மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும், இரவுக்காகப்பகலிலும். கிழப்பருவத்திற்காக வாலிபத்திலும், மறுமைக்காக இம்மையிலும் முயற்சிக்க வேண்டும் என்ற சுலோகத்தை சொன்னார். மன்னனும் தம் அரசவையிலுள்ள செல்வ நம்பி என்ற அந்தணரிடம் இது பற்றி கூறினார். அதற்கு செல்வ நம்பி பரத்வ நிர்ணயம் பண்ணி அதனடியாகப் பேறு பெற வேண்டும் என்று கூறினார்.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெருமாள் விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி மதுரையில் நடந்த சம்பவத்தை கூறி உனக்குத்தான் பொற்கிழி, சென்று வாரும் என்றார். அதற்கு விஷ்ணு சித்தர், கல்லாதவனான என்னால் முடியுமா ? என்று கேட்க, பெருமாளும் இதற்கு நானே பொறுப்பு என்றார். விஷ்ணு சித்தர் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக்கொண்டார். எல்லோரும் பாராட்டி ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இக்கோலத்தை ரசிக்க பெருமாள், பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார்.

ஆழ்வார் மருண்டார். நல்ல காலத்திலேயே இம் மண்ணுலகில் தீங்கு செய்வர். இக்கலியிலே முகம் காட்டுகிறானே, இதனால் கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால். யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் பண்ணினார். எனவே தான் ஆழ்வார்களிலே பெரியாழ்வார் எனப்பட்டார். பொற்கிழியை கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் பெருங்கோயிலுக்கு சமர்ப்பித்து மீண்டும் தொண்டு செய்தார். கண்ணன் லீலையை முற்றும் அனுபவித்து அதன் விளைவாக பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தை வெளியிட்டார். பெரியாழ்வாரின் வம்சத் தோன்றல்கள்  வேதப்பிரான் பட்டர்கள் என்ற திருநாமத்துடன் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகிறார்கள். பெருமாளின் 108 திருப்பதிகளில் பெரியாழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோயில்களையும் என மொத்தம் 19 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பெரியாழ்வார் தனியாக சென்று  மங்களாசாசனம் செய்த கோயில் - 2

1. திருவெள்ளறை (அருள்மிகு பூண்டரிகாக்ஷன் திருக்கோயில், திருவெள்ளறை, திருச்சி)
2. கடிநகர் (அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், தேவப்பிரயாகை, உ.பி.)

பெரியாழ்வார் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து   மங்களாசாசனம் செய்த கோயில் - 17, பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (3)

1. பத்ரிநாத் (அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத், உ.பி,)
2. சாளக்கிராமம், முக்திநாத் (அருள்மிகு மூர்த்தி திருக்கோயில், சாளக்கிராமம், நேபாளம்)
3. திருக்கூடல் (அருள்மிகு கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில், திருக்கூடல், மதுரை)

பெரியாழ்வார், ஆண்டாள் (1)

1. ஸ்ரீவில்லிபுத்தூர் (அருள்மிகு வடபத்ரசாயி திருக்கோயில் (ஆண்டாள்), ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்

பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருஆய்பாடி (அருள்மிகு நவமோகனகிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உ.பி.)

பெரியாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் (2)

1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)

பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)

பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் (1)

1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)

பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)

பெரியாழ்வார், பூதத்தாழ்வார்,  திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் (1)

1. திருக்கோஷ்டியூர் (அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)

பெரியாழ்வார், ஆண்டாள், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)

1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் (1)

1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)

பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)