படலம் 29: பிராயச்சித்த விதி...
601. யானை, நாய், மனிதன், பெண், ஒட்டகம், எருமை, கழுதை, எருது இவைகளைக் கொன்றால் உபவ்ரதத்தைச் செய்ய வேண்டும். அவைகளைத் திருடினால் முன் கூறியதில் பாதி பரிஹாரம் செய்ய வேண்டும்.
602. அவைகளின் மாமிசத்தை சாப்பிட்டால் பாதி பரிஹாரம் செய்ய வேண்டும். மேலே கூறியவைகளின் விஷ்டையால் ஸ்பர்சிக்கப்பட்டவைகளைப் புசித்தால் கால்பாகம், பரிஹாரம் செய்ய வேண்டும். மேற்கூறிய பிராணிகள் நம்மை தாக்கினாலோ தொட்டாலோ
603. அவைகளால் நாக்கால் நக்கப்பட் அன்னத்தைச் சாப்பிட்டால் விஷ்டை ஸ்பர்ச தோஷ பரிஹாரத்தில் பாதி செய்ய வேண்டும், அதன் ரோமங்கள் எலும்பு முதலியவைகளைத் தொட்டால் ஸ்னானம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
604. பசுவைக் கொன்றவன் உபவ்ரதத்தை இருமடங்காகச் செய்ய வேண்டும். பசுவை அபஹரிப்பவன் அதில் பாதி பரிஹாரம் செய்ய வேண்டும். அதன் மாமிசத்தை சாப்பிட்டால் கோஹத்திக்கு சமமான பரிஹாரத்தை செய்ய வேண்டும்.
605. பசுமாட்டு கொட்டகையில் வாசம் செய்து கொண்டும் பசுவுக்கு பின்னாலே சென்று கொண்டும் கோதானத்தாலும் சுத்தமாகிறான், பசுமாடு கிடைக்காதபோது பசுமாட்டின் விலைக்கு அதிகமான தனத்தைக் கொடுக்க வேண்டும்.
606. கர்ப்பிணியும், கறக்கக்கூடியதும் நல்ல லக்ஷணம் பொருந்திய ஹோமதேனுவான காராம்பசுவை மாட்டுப் பவுண்டில் அடைத்து வைத்தால் இருமடங்கு பிராயச்சித்தமான விரதத்தை செய்ய வேண்டும்.
607. பசுமாட்டை தடுத்தி நிறுத்தி வைத்தால் 1/4 பாகமும், கட்டிவைத்தால் 1/2 பாகமும், பசுவை சேர்த்து வைத்தால் 3/4 பாகமும், கீழே விழுந்தால் எல்லா பாகமுமாக பரிஹாரம் செய்ய வேண்டும்.
608. மருந்து, உப்பு, போஜனம் பசையுள்ள புண்ணாக்கு அதிகமாகக் கொடுக்கக் கூடாது. காலமறிந்து கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
609. தென்னைக் கயிற்றாலும், முஞ்சைப்பில்லாலும் கட்டக் கூடாது. மேய்ந்து கொண்டிருக்கும் பசு பலஹீனம் காரணமாக கீழே விழுந்தாலும்
610. ஜலத்திலோ, குட்டையிலோ மூழ்கி விபத்துக்குள்ளானாலும் மின்னலால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளானாலும் குழியில் விழுந்தும், எதிர்பாராத விதமாக ஓநாய் முதலியவைகளால் சாப்பிடப்பட்டிருந்தாலும்
611. குளிர்காற்றினால் தாக்கப்பட்டு இறந்தாலும், கட்டு இறுகி இறந்தாலும் வசிக்கப்படாத வீட்டிலோ, காட்டிலோ, வீட்டில் அக்னிபாதையாலோ, மரம் விழுந்தாலுமோ
612. பசுவை கவனிக்காமல் அலக்ஷ்யமாக இருந்தால் அதன் கோமூத்ரம், கோசாணம் அருந்தி மேற்கூறியவைகளான பரிஹாரத்தை செய்வது உசிதமாகும். கன்னிப் பெண்களை நிந்திப்பது, பிறர் மனைவியை நேசிப்பது
613. தன்னை பிறருக்கு அடமானம் வைத்தல், தெய்வ நம்பிக்கை இல்லாமை, ஒழுக்கக் குறைவு, கேட்கக்கூடாததை கேட்பது, நீசர்களின் எச்சிலை சாப்பிடுதல் ஆகிய அனைத்தும் உபபாதகம் எனப்படும்.
614. கள் குடத்தில் இருக்கும் பொருள், கள்ளால் ஸ்பர்சிக்கப்பட்டதாக இருந்தாலும் அதை பானம் செய்ததால் பிராம்ஹணன் இருமடங்கு பரிஹாரம் செய்ய வேண்டும்.
615. சூத்ர கிருஹத்தின் ஆசவுசத்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பிராஹ்மணன் உபவிரதத்தில் பாதியையும் வைச்யனில் ஆசவுசத்தில் சாப்பிட்டால் முன்பு கூறியதில் பாதியும் க்ஷத்திரியாசவுசத்தில் அதிலும் பாதி பரிஹாரமும் செய்ய வேண்டும்.
616. அரசன், நான்காம் வர்ணத்தவர்கள் வைச்யர் இவர்களின் ஆசவுசத்தில் சாப்பிட்டால் பிராம்மணனுக்கு கூறப்பட்டதில் பாதி பரிஹாரம் செய்ய வேண்டும். வைச்யன் நான்காம் வருணத்தவன். வீட்டில் ஆசவுசத்தில் சாப்பிட்டால் க்ஷத்தியனுக்கு சொன்ன பரிஹாரத்தில் பாதியைச் செய்ய வேண்டும்.
617. தனக்கு ஆசவுசமாக இருக்கும்போது சாப்பிட்டாலும், அந்த்யேஷ்டியில் சாப்பிட்டாலும், தன்னுடையதை விட அதிகமான ஆசவுசத்தில் சாப்பிட்டாலும் தன்வீட்டு ஆசவுசத்தில் சாப்பிட்டாலும்
618. 3/4, 1/2, 1/4 பாகம் பிரகாரம் பரிஹாரம் செய்ய வேண்டும், க்ஷத்திரிய வைச்யர்கள் சூத்ரனுடைய ஆசவுசத்தில் போஜனம் செய்தால் முன்கூறிய பிரகாரம் பரிஹாரம் செய்ய வேண்டும்.
619. அறியாமையால் விஷ்டை, சிறுநீர் இவைகளை உட்கொண்டால் உபவிரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் பஹிஸ்டா ஸ்த்ரீயிடம் முத்தம் கொடுப்பது சண்டாள ஸ்த்ரீயிடம் சென்றாலும்
620. வண்ணாத்தி முதலானவர்கள் ஸம்ஸர்கம் செய்தாலும் கோழிச் சொல்லுதல் ஆகிய இந்த பாபங்களுக்கு உபவிரதம் பரிஹாரம் ஆகும். இதுவரை சொல்லப்பட்டது பிராம்மண பாபத்திற்கு பரிஹாரமாக கூறப்பட்டுள்ளது.
621. சண்டாளன், வியாபாரி, வண்ணான் இவர்களின் பெண்களிடம் போகம் செய்தால் முன் கூறியவற்றில் 2 மடங்கு செய்ய வேண்டும். தன் வீட்டு ரஜஸ்வலை ஸ்த்ரீயிடம் சென்றால் பிராமணன் விரதம் மட்டும் செய்ய வேண்டும்.
622. பிராம்மண ஸ்தீரி ஸங்கமம் செய்தால் உபவிரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். க்ஷத்திரிய வைச்ய சூத்ரஸ்திரி ஸங்கமத்தில் 3/4, 1/2, 1/4 என்று பரிஹாரம் செய்ய வேண்டும்.
623. பிராம்மண ஸ்திரீ சூத்ர சேர்க்கையால் பதிதையாகி ஸந்ததியுடன் கூடியவளாக இருந்தாலும், பிராம்மண ஸ்திரீ, பிராம்மணனுடன் சேர்ந்ததற்கான உபவிரதத்தில் பாதி அளவு ஓர் முறை சங்கமம் ஆன பக்ஷத்தில் அனுஷ்டிக்கலாம்.
624. ஒரு மாதத்துக்குமேல் உபவிரதம், ஆறு மாதத்துக்கு மேல் அனுவிரதம், அதற்கு மேலும் இருந்தால் மஹாவிரதம், மூன்று வருடத்திற்கு மேல் ஆனால் அவள் தள்ளப்பட்டவளாகிறாள்.
625. அரசரின் மனைவியாக இருந்தால் இதில் பாதி பரிஹாரமும், வைச்ய ஸ்திரீயானால் அதிலும் பாதி பரிஹாரமும், சூத்ரனிடம் சேர்ந்த சூத்ர ஸ்திரீயானால் அதிலும் பாதி பரிஹாரமும் செய்ய வேண்டும்.
626. சூத்ரன் ஸங்கமனம் செய்தால் அவ்வாறே சுத்தியின் பொருட்டு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். மேற்கூறியபடி கன்னிகை ஸ்திரீயிடம் ஸங்கமமனால் முன்பு கூறிய பிராயச்சித்தம் 2 மடங்காக அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
627. பிராம்ஹணன் முதலியோருடைய கன்யா ஸ்திரீ ஸங்கமத்தால் வைச்யன் பாதி பரிஹாரமும் க்ஷத்ரியன் அதிலும் பாதியையும், பிராம்மணணாக இருந்தால் அதிலும் பாதியையும் செய்ய வேண்டும்.
628. அனுலோம ஜாதிகளில் தன்தாயார் வழியில் கூறப்பட்டதை பரிஹாரமாக செய்ய வேண்டும். சண்டாளாதிகள் விஷயத்தில் சூத்ரர்களுக்கு சொன்ன பரிஹாரத்தில் இருமடங்கு செய்ய வேண்டும்.
629. மனிதன் மிருகஜாதிகளிடம் தேஜஸை விட்டாலும், பெண் குறியற்ற பிரதிலோம ஜாதி யினரிடத்தில் தேஜஸை விட்டாலும் ஜலத்தில் தேஜஸை விட்டாலும் ஒரு வருடம் முடிய விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
630. நதி, பர்வதம் (மலை) உழுதமண், மூங்கில் முதலியவைகளில் தேஜஸ்ஸை விட்டால் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். கை விடப்பட்டவன் வேறொரு பெண்ணுடன் ஸங்கமம் ஏற்பட்டால் தோஷசாந்திக்காக சண்டாள விஷயத்தில் கூறப்பட்ட பரிஹாரத்தில் பாதியை செய்ய வேண்டும்.
631. மேற்கூறியவர்கள் கர்பவதியாகி விட்டால் பிராயச்சித்தம் செய்வது கடினம், கர்பம் வெளிவந்தால் இருமடங்கு பிராயசித்தம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
632. வீட்டில் நடமாடவும், வெளியில் சொல்லுதலும் கூடாது. அன்னம் புசிக்க கூடாது, கணவருடன் படுத்துக் கொள்ளக் கூடாது, பந்துக்களுடன் உணவு அருந்தக் கூடாது.
633. பகலில் பெண்ணுடன் ஸங்கமம் செய்து விட்டு குளிக்காமல் சாப்பிட்டால் ஆண்குறியை இரும்புக் கம்பியால் கட்டி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
634. பிராம்மணன் பிரதிலோமர்களின் மீதமுள்ளதை சாப்பிட்டால் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஸமமான ஜாதியினருடைய எச்சிலை சாப்பிட்டால் உபவாசம் இருந்தால், தோஷத்திலிருந்து விடுபட்டு சுத்தனாகிறான்.
635. நடுத்தரமானவன் தாழ்ந்தவன் ஆகியோருடைய எச்சிலை சாப்பிட்டால் ஆயிரம் அல்லது பத்தாயிரம் தடவை ஜபத்தையும், ஸமமான ஜாதியினருடைய எச்சிலை சாப்பிட்டால் இரண்டு அல்லது மூன்று நாள் உபவாசம் பரிஹாரமாகும்.
636. தாழ்ந்தவர்களின் எச்சில் ஸம்பந்தம் இருந்தால் முன்கூறிய பரிஹாரத்தை 100 மடங்கு அதிகப்படுத்தி செய்ய வேண்டும். ஜபம் உபவாசம் ஆகிய இவைகளும் ஓர் இரவு முதலான அதிக மடங்காக பலமடங்கு ஜபம் உபவாஸ விருத்தியுமாகும்.
637. ஆதிசைவர், சிவ பிராம்மண பெருமக்களை நிந்திப்பது, கள்குடிப்பது ஸ்திரீ பழக்கம், ஸ்திரீ ஹிம்சை, மருந்து விற்று பிழைப்பு, வட்டிக்கு விட்டு பணத்தைப் பெருக்குதல், பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்தலும்
638. எல்லா கார்யத்திலும் தகுதியை பயன்படுத்துதலும், பெரிய இயந்திரங்களை இயக்கம் செய்வதும், ஸொந்த வேதசாகை, அக்னி, புத்ரன் முதலியவர்களை கைவிடுவதும் பாப செயலாகும்.
639. எள், நெல், பயறு, உளுந்து, செந்நெல், அவரை, கொள்ளு, கடலை, துவரை, கடுகு, பார்லி, மொச்சை, யவை
640. கங்கு என்ற திணை, தான்யம், கேழ்வரகு, காட்டுநெல், வரகு முதலிய தானியம் சதையுடன் கூடியவை, சதை இல்லாதவை ஆகியவற்றைத் திருடுதல் பாபமாகும். இதற்கு விரதத்தை அனுஷ்டித்து பரிஹாரம் செய்ய வேண்டும்.
641. வாஹனம், படுக்கை, ஆஸனம், வெண்கலம், பித்தளை, கற்செட்டி, இரும்பு, தகரம், செம்பு, ஈயம், வஸ்திரம் முதலியவைகளை திருடினால் முன்பு கூறிய பரிஹாரத்தை
642. மூன்று மடங்கு அதிகப்படுத்தி செய்தால், திருட்டுக் குற்றத்தால் ஏற்பட்ட பாபத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. குரங்கு, நாய், மான், விஷ்டையை புசிக்கும் பன்றி
643. நல்லவைகளும், தீயவைகளுமான பிராணிகள், சிவனின் பொருட்டு வெட்டப்பட்டாலோ முயல், திமிங்கிலம், நரி, சங்கு, முதலை ஆகியவைகளை
644. கொன்றாலும் அந்த பாபம் நீங்க விரதத்தை அனுஷ்டித்தால் சுத்தனாகிறான். ஆந்தை, கழுகு, நாரை, பெருங்கழுகு, காகம், நீர் வாழும் காகம், நீர்வாழ் மயில்
645. கோழி, பருந்து சேவல், அன்னபக்ஷி, மயில், மைனா, குயில், ஓணான், மரங்கொத்து குருவி, நீர்நாரை
646. புறா, கொக்கு, வான்கோழி, சிட்டுக்குருவி, வயதான பறவைகள், கீரி, சக்ரவாகம், கவுசிகம் என்ற கோட்டான், கிளி.
647. தவளை, பசு, எருமை, உடும்பு, பச்சோந்தி, எலி, பாம்பு, மூஞ்சுறு, மீன், ஆமை, நண்டு
648. தேள், கிளிஞ்சல், விட்டில்பூச்சி, ஈ, எரும்பு, மண்புழு, யானை, சிலந்தி மற்றும்
649. பூமியில் இருப்பவைகளும், நீரில் இருப்பவைகளுமான பிராணிகளையும் ஆகாயத்தில் பறந்து செல்லும் பக்ஷிகளையும், பிராம்ஹணன் வதம் செய்தால் விரதத்தில் 1/4 பாகத்தை அனுஷ்டித்தால் பாபம் போகும்.
650. எலும்பில்லாத பிராணிவதை விஷயத்தில் நூறு தடவை அகோர மந்திர ஜபம் செய்ய வேண்டும். வேறு விதமாகவும் பரிஹாரம் இவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது.
651. தெரிந்து கொண்டே வேண்டுமென்று பிராணிகளைக் கொன்றவன் பசுக்களின் கொட்டகையில் அகோர மஹாமந்திரத்தை ஜபிக்க வேண்டும். சுராபானம் செய்தாலும் சிவாலயத்தில் வாமதேவ மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
652. எதிர்பாராத வகையில் திருட்டை செய்தால் மயானத்தில் அகோரமந்திர ஜபத்தை செய்யவேண்டும். அறியாமல் குருஸ்திரீ ஸங்கமம் செய்தால் காட்டில் தத்புருஷ மஹாமந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.
653. எல்லா பிராணிகளுடன் ஸங்கமம் செய்தால் மலையின் உச்சியில் ஸத்யோஜாத மந்திர ஜபம் செய்ய வேண்டும். வேண்டுமென்றே பஹிரங்கமாக மேலே கூறிய பாபங்களைச் செய்தால் ஸத்யோஜாத மந்திரத்தை லக்ஷம் தடவை ஜபித்தால் சுத்தனாகிறான்.
654. இஷ்டமில்லாமலோ, பலாத்காரமாகவோ ரஹஸ்யமாகவோ, படப்படப்பாலோ (மேல் கூறிய பாபங்களை) செய்தால் ஆயிரம் முறை ஸத்யோஜாத மந்திரத்தையும் அல்லது வேண்டுமென்றோ ரஹஸ்யத்தில் செய்திருந்தாலும் பத்தாயிரம் முறை ஸத்யோஜாத மந்திரத்தையும் ஜபம் செய்தால் பாபம் நீங்கி சுத்தனாகிறான்.
655. தெரியாமலோ அல்லது தெரிந்தோ மேற்கூறிய பாபங்களை செய்தால் 20,000 முறை ஸத்யோஜாத மந்திரத்தை ஜபித்தால் சுத்தி அடைகிறான். குருத்ரோஹத்தை தவிர மற்றவைகளை தெரிந்து செய்தால் பரிஹாரம் உண்டு.
656. குருத்ரோக பாபத்திற்கு பரிஹாரமாக ஆசார்யன் க்ருச்ர விரதத்தை அனுஷ்டித்து ஹோமம் செய்ய வேண்டும். இதை தவிர வேறு பரிஹாரம் இல்லை.
657. பிராம்மணர் க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் இவர்களுக்கு பிரம்மஹத்தி, ஸுராபாநம், ஸ்தேயம் முதலிய பாபங்கள் ஸமமானவைகள் அதீக்ஷிதனான சூத்ரன் மத்யபானம் செய்தால் பாபம் ஸ்வல்பமாக இருக்கும்.
658. தீøக்ஷ இல்லா சூத்ரனுக்கு சுராபானம் தடைசெய்யப்படவில்லை. மற்றவர்களான பிராம்மண, க்ஷத்ரிய, வைச்யர்களுக்கு சுராபாணம் குடித்தால் நியமத்துடன் அகோர மந்திரத்தை 300 முறை ஜபம் செய்யவேண்டும்.
659. குருஸ்திரீ ஸங்கமம் என்ற பாபம் நான்கு வர்ணத்தவருக்கும் ஸமமானதே. குருத்ரோகமே சிவத்ரோகம் என்றும் கூறப்படுகிறது. இந்த பாபங்கள் செய்தவன் மஹாபாதகனாகிறான்.
660. ப்ருத்வீ சம்பந்தமான மண்ணிலிருந்து உண்டான மரம், தேஜஸ் ஸம்பந்தப்பட்ட திரவ்யமின்றி திருடுவதை அறியாமல் செய்தால் ஸத்யோஜாத மந்திர ஜபத்தால் சுத்தி ஏற்படுகிறது.
661. 25 தடவை ஸத்யோஜாத மந்திரஜபம் செய்யவும் தெரியாமல் செய்திருந்தால் 100 தடவை ஸத்யோஜாத மந்திர ஜபம் செய்ய வேண்டும். நெய், உப்பு, சர்க்கரை முதலியவைகளை
662. தெரிந்தோ, தெரியாமலோ திருடினால் முன்போல் வாம தேவ மந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும். வெண்கலம், பித்தளை முதலிய தேஜஸ் ஸம்பந்தப்பட்ட ஸாதனங்களையும் திருடினால்
663. பசுவையையும் இஷ்டமிருந்தோ இஷ்டமில்லாமலோ திருடினால் நெய்க்கு கூறியபடி 100 வாமதேவ மந்திர ஜபம் செய்ய வேண்டும். புஷ்பம், சந்தனம் இவைகளை அபஹரித்தாலோ, மனிதனையோ, ஸ்திரீயையோ
664. காளை மாட்டையோ, யானை, குதிரை முதலிய வஸ்துக்களை திருடினால் தத்புருஷ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். பால், தண்ணீர், ஆயுதம் ஆகியவைகளை திருடினால் ஈசான மந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும்.
665. இஷ்டமில்லாமல் சாப்பிடத்தகாத பதார்த்தங்களை சாப்பிட்டால் வாமதேவ மந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும். இஷ்டப்பட்டு சாப்பிடத்தகாத பதார்த்தங்களை சாப்பிட்டால் அதுவும் (மத்யம்) கள் இல்லாமல் இருந்தால் 300 முறை வாமதேவ மந்திர ஜபம் செய்ய வேண்டும்.
666. பஹிஷ்டா ஸ்திரீயின் அன்னத்தை இஷ்டப்பட்டு புசித்தால் 10,000 முறை வாமதேவ மந்திரத்தையும், பஹிஷ்டா ஸ்திரீயின் அன்னத்தை அறியாமையால் உண்டால் பத்து ஆவ்ருத்திக்கு மேல் 300 ஆவ்ருத்திக்குள் ஜபம் செய்து ஸ்நானம் செய்வதால் சுத்தி ஏற்படுகிறது.
667. அதற்கு மேல் புசித்தால் 100 ஆவ்ருத்தி முதல் 500 ஆவ்ருத்தியும் இரவு உபவாஸமும் கூறப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்டால் மூன்று நாட்கள் உபவாசமும் 10000த்துக்கு மேற்பட்ட ஜபமும் பரிஹாரம் ஆகும்.
668. தன் ஜாதியை சேர்ந்த தீக்ஷித ஸ்பரிசத்தில் ஆசமனத்தால் சுத்தமாகிறான். தீøக்ஷ இல்லாதவனுடைய ஸ்பர்சத்தில் தன் தீக்ஷõநாம மஹாமந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும்.
669. தீøக்ஷயுடன் கூடிய தீக்ஷிதருடைய ஸ்பர்சம் ஏற்பட்டால் முன்போல் பிராயச்சித்தம் தீøக்ஷ இல்லாதவருடைய ஸ்பர்சம் ஏற்பட்டால் ஸ்நானம் செய்து 200 முறை தீக்ஷõநாம மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.
670. தீøக்ஷ உள்ளவர் தீøக்ஷ இல்லாதவரை தொட்டால் 300 ஆவ்ருத்தி ஜபத்துடன் உபவாஸத்தால் பரிசுத்தனாக ஆகிறான்.
671. தீøக்ஷ உள்ளவர் சூத்ரரால் ஸ்பரிசிக்கப்பட்டாலும் சூத்ரனை தீøக்ஷயுள்ளவர் தொட்டாலும் 500 ஆவ்ருத்தி (தீக்ஷõ நாமமந்திரத்தை) ஜபிக்க வேண்டும்.
672. மற்ற வைச்ய, க்ஷத்ரிய, ஜாதிதீøக்ஷ இல்லாதவர் தீøக்ஷ உள்ளவரைத் தொட்டால் தன்னுடைய சுத்திக்காக 3/4 பங்கு பரிஹாரம் செய்ய வேண்டும். சூத்ர ஸ்பர்சித்தால் மூன்று நாட்கள் உபவாஸம் இருந்து 10000 ஆவ்ருத்தி மந்திரஜபம் செய்ய வேண்டும்.
673. ஸத்யோஜோத மஹாமந்திரத்தை விசாரணையின்றி ஜபிக்க வேண்டும். சண்டாள சங்கமம் ஏற்பட்டால் க்ருச்ர விரதத்தை அனுஷ்டித்து 10000 முறை அகோர ஜபத்தை செய்ய வேண்டும்.
674. வீட்டில் பாபிகள் பிரவேசித்தால் வீட்டு பாண்டங்களை எறிந்துவிட்டு வீடு பூறாவும் பசுஞ்சாணத்தால் மெழுகி கிருச்ரவிரதத்தை செய்தால் சுத்தி ஏற்படும். அந்த வீட்டில் சாப்பிட்டால் தப்தக்ருச்ரத்தை அனுஷ்டிக்கவும்.
675. பதிதனுடன் தெரிந்து கொண்டே சாப்பிட்டால் பதிதனுக்கு ஸமமாக ஆகிறான், வீட்டில் வண்ணான் முதலியோர் தெரியாமல் பிரவேசித்தால் 5000 அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
676. கூலிக்கு பூஜை செய்யும் தேவலகர்களுடன் கூடினால் சாந்திராயண விரதம் அனுஷ்டித்தலால் சுத்தி அடைகிறான். தங்கம், வெள்ளி முதலிய பாத்ரங்கள் தண்ணீரால் சுத்தமாகின்றன.
677. சங்கு முதலியவைகள் உமியாலோ, கடைசலாலோ சுத்தியடைகின்றன. வெண்கலம் சாம்பலால் சுத்தியடைகிறது. செம்பு புளியால் சுத்தியாகிறது.
678. மேற்கூறிய எச்சில்பட்ட பாத்திரங்களுக்காக சுத்தி பிரகாரம் வரிசையாக கூறப்பட்டது. எச்சில்பட்ட பாத்திரங்களை பிரோக்ஷணம் செய்தால் அவைகள் சுத்தமாகிவிடுகின்றன. இதில் சந்தேகம் இல்லை.
679. சுரக்காய் குடுக்கை, மூங்கில் கூடை முதலிய பாத்திரங்களை கோமயத்தால் மெழுகினால் சுத்தியையும் மரத்தால் செய்யப்பட்டதும் உயர்ந்ததான தங்கம், வெள்ளி முதலிய உலோக பாத்திரங்களும் ஜலசம்பந்தத்தினால் சுத்தமாகிறது.
680. தோல், கயறு, துணி இவைகள் உப்பு (உவர் பூமி) ஜலத்தால் சுத்தமாகின்றன. ஜலம் நிறைந்த பாத்திரங்களை தர்பையை அக்னியில் கொளுத்தி அந்த பாத்திரங்களை மூன்று முறை சுத்துதல் என்ற பர்யக்னி கரணம் செய்தால் சுத்தி ஏற்படுகிறது.
681. புல், கட்டை, விறகு முதலியவை பிரோக்ஷணம் செய்தால் சுத்தமாகிறது. பசுஞ்சாணத்தைக் கரைத்து தெளித்து கோடு கிழித்தால் (கோலமிட்டால்) பூமிசுத்தியடைகிறது.
682. மூங்கில் பாத்திரம், மண்பாண்டம், மலம் முதலியவைகளால் பாதிக்கப்பட்டால் அவைகளை எறிந்து விடலாம். நிர்மால்ய ஸம்பந்தம் உள்ளதும் விடத்தக்கதே. பஹிஷ்டா பெண் மூன்று நாள் வீட்டுக்கு ஆகாமல் இருந்து நான்காம் நாள் ஸ்னானம் சுத்தத்தை அவளுக்குக் கொடுக்கும்.
683. மீதமுள்ளவைகளுக்கு முன்போல் சுத்தம் ஏற்படுகிறது. ஜலத்தினால் வஸ்திர சுத்தி ஏற்படுகிறது. சரகு, தொன்னை முதலியவைகளை போஜனகாலத்தில் உபயோகித்தால்
684. உபயோகித்த பொருள்களை தியாகம் செய்வதுதான் பரிசுத்தமாகும். உண்மை பேசுவதால் மனதுக்கு சுத்தி ஏற்படுகிறது. கண், காது முதலிய இந்திரியங்களுக்கு யமம், நியமம் முதலிய யோகங்களால் சுத்தி ஏற்படுகிறது.
685. விசாரணையின்றி கர்வத்திற்கு அடக்கமே பரிஹாரமாகும். புலி போன்ற சிறந்த முனிவர்களே பிறருடைய சேர்க்கையை விட்டுவிடுவதால் புத்திக்கு சுத்தி ஏற்படுகிறது.
686. விதிப்படி செய்த பிராணாயாமத்தால் பிராணன் சுத்தியடைகிறது. தியானத்தால் மனது ஒருமைப்பாட்டை அடைந்து சஞ்சலம் இல்லாமையை அடைகிறது.
687. ஜீவன் விவேகத்தால் சுத்தமடைகிறான் விசாரணையின்றி. இதில் சந்தேகம் இல்லை. நாய், பூனை, கழுதை முதலியவைகள் நாக்கால் ஸ்பர்சித்தால் ஸ்நானம் செய்ய வேண்டும்.
688. நாபிக்கு கீழே அல்லது மேலே நக்கினால் ஏழு தடவை களிமண்ணால் சுத்தி செய்வதாலும் (தலை) சிரஸ் வரை ஸ்பரிசித்தால் ஸ்னானம் செய்து (பஞ்சாக்ஷர) அங்கமந்திரம், பிரம்ம மந்திர ஜபம் செய்தால் சுத்தியை அடைகிறான்.
689. 100 தடவையோ அல்லது 200 தடவையோ மந்திர ஜபம் செய்ய வேண்டும், சிவதீøக்ஷ இல்லாதவன் தொட்டால் ஆக்னேய ஸ்னானம் என்ற பஸ்ம ஸ்னானத்தை செய்ய வேண்டும்.
690. அறிந்த தன்மையால் நிர்மால்ய கலப்பு ஏற்பட்டால் சண்டிகேஸ்வரரை பூஜிக்கவும், அந்த தேவத்வனான சிவனுடைய மூலமந்திரத்துடன் அங்கமந்திரத்தையும் 100 தடவை ஜபிக்கவும்.
691. அறியாமையால் நிர்மால்ய கலப்பு ஏற்பட்டால் பரமேஸ்வரனின் மூலமந்திரத்தை மட்டும் 100 தடவை ஜபிக்க வேண்டும். கல்லாலான கற்சட்டி முதலிய ஜலத்தினாலும், மத்தினால் கடையப்படுவதினால்
692. ஜலத்திலிருந்து உண்டான சங்கு முதலான பொருள்கள் சுத்தமாகின்றன. எல்லா மூங்கில் பொருள்களும் தண்ணீரினாலும், கெட்டியான பசையுள்ள பாத்திரங்கள் காயவைப்பதாலும் சுத்தம் ஏற்படுகிறது என்று பாத்திரங்களின் சுத்தி கூறப்படுகிறது.
693. அசுத்தமான பதார்த்தங்களுக்கு தீர்த்தப் பிரோக்ஷணத்தால் சுத்தி ஏற்படுகிறது. தேன், கரும்புசார் இவைகள் கொதிக்கவைக்கப்படுவதால் சுத்தமாகின்றன.
694. பழங்களுக்கு அலம்புவதால் சுத்தி ஏற்படுகின்றது. நன்கு பார்ப்பதினால் தயிர் சுத்தியடைகிறது. காய்ச்சப்படுவதால் பால் சுத்தியடைகிறது. சமைக்கப்பட்ட பதார்தங்களை பிரோக்ஷணம் செய்வதால் சுத்தம் ஏற்படுகிறது.
695. குருவான சிவாச்சாரியருக்கு சாஸ்திரத்தின் வாக்கியத்தினால் சுத்தி ஏற்படுகிறது. வாக்கால், மனதால், சரீரத்தாலும், வேறொருவன் தனக்கு துன்பத்தை உண்டு பண்ணினான் என்பதை
696. ஏமாற்றமாக அறிந்தே துக்கத்தை அடைந்தவன் சக்தி ஜபம் செய்ய வேண்டும், ஸமயதீøக்ஷ உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும் சக்தி ஜபத்தை செய்யவேண்டும்.
697. துணி, படுக்கை, ஆசனம் முதலியவைகளைத் திருடினால் 100 காயத்ரீயை ஜபிக்க வேண்டும். ஆசார்யன், தெய்வம், அக்னி இவர்களை ஆராதிக்கும் விஷயத்தில் நிந்தனைக்குரிய தாழ்ந்தவனிடம் தெரிவித்தால் 100 காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும்.
698. பொருளை எடுத்து வருபவனுக்கு நியாயமின்றி சுத்தி ஏற்படுகிறது. களைத்தவர்களுக்கும், வியாதியால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் ஸந்நியாஸிக்கும் எவனொருவன் கொஞ்சம் மருந்தை கிரஹித்துக் கொண்டு மருந்து கொடுக்கிறானோ அவனுக்கு இதில் திருட்டு குற்றம் இல்லை.
699. எல்லோரிடத்திலும் மருந்து எப்போதும் கிரஹித்துக் கொள்ளலாம் தோஷமில்லை, ஜலத்துடன் கூடியதாக உப்பை திரும்பவும் காய்ச்சுவதால் உப்புக்கு சுத்தி ஏற்படுகிறது.
700. அதர்ம வழியில் பொருளை சேகரித்து எவனொருவன் தர்மத்தை விரும்புகிறானோ அதற்காகவும் பிறருக்காக உயிரையும் விடுவானாகில் அவன் பிரம்மஹத்தி தோஷம் செய்தவனாகிறான்.
701. தெய்வத்திற்காகவும் ஆசார்யன் தந்தை இவர்களுக்காகவும் தனக்காகவும் எவனொருவன் உயிரைவிடுகிறானோ அவன் பிரம்மஹத்தி செய்தவன் என கூறப்படுகிறான்.
702. வீட்டுக்கு நெருப்பு வைப்பவன், விஷம் கலந்த உணவை கொடுப்பவன், எப்பொழுதும் கையில் கத்தி முதலிய ஆயுதங்களை வைத்திருப்பவன், பிறருடைய பொருளை அபஹரிப்பவன், வயல் மனைவி இவர்களை அபஹரிப்பவன், இவர்கள் ஆறுபேரும் ஆததாயீ எனப்படுவர். (ஆததாயீ என்றால் பிறருக்கு தொல்லை கொடுத்து அவர்களை கொலை செய்ய முயற்சிப்பவன் எனப் பொருள்படும்).
703. தன்னை கொல்ல வருபவனை சண்டையில் ஆயுதங்களால் மரணமடையச் செய்பவனுக்கும் கலக்க முற்ற நிலையில் அழிக்க வருபவனை அழிப்பவனுக்கும் ப்ரூணஹத்தி என்றதோஷம் இல்லை என்பதாகும். (ப்ரூண கரு)
704. தன்னைக் கொல்லவருபவன் இளைஞனாயினும், சிறுவனாயினும், கிழவியானாலும், பலசாத்திரங்களை படித்த பிராம்மணனாயினும் அவனை கவலையின்றி வதம் செய்யலாம்.
705. எந்த ஜனங்கள் தற்கொலை (ஆத்மஹத்தி) செய்து கொள்கிறார்களோ அவர்கள் இறந்த பிறகு காரிருள் சூழ்ந்ததும் சூர்யபிரகாசம் இல்லாத அசூர்யம் என்ற நகரத்தை அடைகிறார்கள்.
706. கஷ்டம் ஏற்பட்டது என்பதற்காக உடனே தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. வைராக்யத்தை அடைந்தோ, மறுபடியும் சவுக்யங்களை அடைந்தோ,
707. தியானத்தால் மனதை ஸ்திரப்படுத்தி பரமேஸ்வரனிடம் மனதைச் செலுத்தி பிராணத்யாகம் செய்ய வேண்டும். சிவன், அக்னி, குரு ஆகிய மூவரையும் நிந்திப்பதைக் கேட்டு தன் சரீரத்தை தியாகம் செய்யவேண்டும்.
708. சிவன், அக்னி, குரு ஆகிய மூவரையும் தூஷணை செய்தவனை வதம் செய்தால் பாபம் இல்லை, அவன் சிவசாயுஜ்யத்தை அடைகிறான். சைவனையும் பாபசுதனையும் காலமுகனையும் கபாலதாரணம் செய்பவனையும்
709. ஒருவன் வதம் செய்தால் உலகம் முழுவதும் அந்த துஷ்டனால் வதை செய்யப்பட்டதாகக் கொள்வேன், பிரம்மஹத்தி செய்வதனும் நன்றி கெட்டவனும் பிராயச்சித்த கர்மாவினால் சுத்தமாகின்றனர்.
710. சரணமடைந்தவனைக் கொல்பவன், பெண்ணைக் கொன்றவன் இவர்களை இருவரும் பாபம் செய்தவர்கள். அவ்வாறே ஆகம சாஸ்திரத்தை கைவிட்டவன் தங்கத்தை திருடியவனுக்கு ஸமமான பாபத்தைச் செய்தவனாக ஆகிறான்.
711. குதிரை ரத்னம் மனிதன் ஸ்திரீ, பூமி, பசு ஆகிய இந்த பொருளைத் திருடுவதும், ஒருவன் புதையலில் ஒளித்து வைத்திருப்பதைத் திருடுவதும் இவைகள் எல்லாம் ஸ்வர்ண ஸ்தேயத்திற்கு ஸமமாகும்.
712. ஆதிசைவரை கொல்லுவதும் பொய் சொல்வதும், நல்ல மனதையுடையவனைக் கொல்வதும் முன்கூறியபடியே ஸ்வர்ணஸ்தேயத்திற்கு சமமாகும். பெரிய மஹான்களை கொல்வது பெரிய சாபமேற்படும்.
713. மருந்து, உணவு கொடுப்பவனுக்கும் வயிற்றுப் பிழைப்புக்காக பிராணிகளை கட்டிப் போட்டு வைப்பவனுக்கும் பாபம் கிடையாது. இனி (உத்ஸவ பிராயச்சித்தம்)
714. ஒவ்வொரு வருடம், மாதம், திதி, புண்ய நக்ஷத்திரம், முன்பு தீர்மானித்து எவ்வளவு தின எண்ணிக்கையால் உத்ஸவம் அனுஷ்டிக்கப்பட்டதோ அதன்படியே
715. பேரீ முதலிய வாத்யங்கள் முழங்க ஒன்பது தினங்களோ, அல்லது 27 நாட்களோ, அல்லது 18 தினங்களோ ஓர்தினமோ மகோத்ஸவம் நடக்கவேண்டும்.
716.ற அப்படி இல்லாவிட்டால் தேசத்திற்கும், அரசருக்கும் தோஷம் ஸம்பவிக்கும், அந்த பாபம் நீங்க முதலில் சாந்தி செய்யவேண்டும். பிறகு முன்கூறிய பிரகாரம் உத்ஸவத்தை நடத்தவேண்டும்.
717. உற்சவம் வேறு மாதத்திலோ, அல்லது அதே மாஸத்திலோ, நடக்கவேண்டும். அதே நாளில் இரண்டு மடங்காக மூர்த்தி ஹோமத்தையோ, திசாஹோமத்தையோ கிரமமாக செய்து.
718. விதிமுறைப்படி உத்ஸவத்தை நடத்த வேண்டும். கொடியேற்றும் தினம் ஒன்பது தினத்தையும் உத்ஸவத்தின் திருநாட்களாக கருத வேண்டும்.
719. திருவிழாவை ஏழு தினங்களுக்கு உட்பட்ட 6 தினங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். ஸ்வயம்பூ லிங்கமாக இருந்தால் இந்த விதானம் பொருத்தமாக இருக்கும்.
720. மானுஷலிங்கம், பாணலிங்கம், முதலியவைகள் விஷயத்தில் மாஸநக்ஷத்ரம், தீர்த்த நக்ஷத்ரம், இவைகளை வேறு பிரகாரமாக சேர்க்கலாம்.
721. உற்சவம் தினங்கள் குறைந்து நல்லவிதமாக அனுஷ்டிக்கப்பட்டால் அதன் பலன் அளவற்றதாகும். அரசாங்க குழப்பம், பஞ்சமேற்பட்ட சமயம், அரசன், திருடனால் பயம் ஏற்பட்ட பொழுதும்
722. உற்சவம் நடத்த போதுமான நிதி வசதி இல்லாமையாலும், வேறு சில காரணங்களாலும், முன்போல் விஸ்தாரமாக உற்சவம் நடத்த முடியாமல் போனால் விதிப்படி சாந்தி ஹோமம் செய்யவேண்டும்.
723. நாட்கள் குறைவாக இருந்தாலும், முன் கூறிய பிரகாரம் உற்சவத்தை நடத்தவேண்டும். ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு ஸ்வல்பமான சில நாட்களிலாவது உற்சவம் நடத்துவது சிறந்த முறையாகும்.
724. ஒன்றுமே இல்லாமல் இருந்தால் பெருத்த குற்றம் ஏற்படும். அதனால் அதற்கு பரிஹாரமான சாந்தியையும் சாந்தி ஹோமத்தையும், மூர்த்திஹோமத்தையும் செய்யவேண்டும்.
725. இந்த முறைப்படி ஆரம்பிக்கப்பட்ட விசேஷ உத்ஸவாதிகள் எந்த மனிதனால் இடையூறு காரணமாக நடைபெறாமல் இருந்தால் தேசத்திற்கு அழிவு ஏற்படும்.
726. அப்பொழுது சாந்தி ஹோமத்தை செய்து உற்சவத்தை மறுபடியும் செய்யவேண்டும். விருஷபத்திற்கு பூஜை யில்லாமல் கொடி ஏற்றப்பட்டால்
727. பசுமாடுகள் அழிந்துபோகும். ஆகையினால் சாந்தி ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும். விருஷபத்திற்காக ஹோமத்தை கொடிமரத்திற்கு அடியில் இருந்து செய்யவேண்டும்.
728. மேல்பாகத்தில் மந்திரநியாஸம் முதலிவைகளை மானஸீகமாகச் செய்ய வேண்டும், துவஜா ரோஹணம் இல்லாமல் இருந்தால் அரசருக்கு தோல்வி ஏற்படும்.
729. ஆசார்யன் பரிஹாரத்தை செய்து கொடியேற்ற வேண்டும். (கொடி) த்வஜத்தை வீதி வலமின்றி இருந்தால் கிராமங்களிலும் நகரங்களிலும் அசுபம் ஏற்படும்.
730. அப்பொழுது எல்லாதோஷங்களையும், போக்வதற்காக சாந்தி ஹோமத்தைச் செய்ய வேண்டும். வேதிகையானது இல்லாமல் இருந்தாலும், லக்ஷணமும், இல்லாமல் இருந்தாலும் அசுபத்தை கொடுக்கும்.
731. சாந்தி ஹோமத்தைச் செய்து வேதிகையை லக்ஷணத்துடன் கூடியதாக நிர்மாணிக்க வேண்டும். த்வஜதண்டம் லக்ஷணம் இல்லாமல் இருந்தால் பிரதான கர்தாவுக்கு தீமை ஏற்படும்.
732. அப்பொழுது மூர்த்திஹோமத்தையோ அல்லது சாந்திஹோமத்தையோ அனுஷ்டிக்க வேண்டும். உபதண்டம் அதன் உரிய லக்ஷணப்படியில்லையெனில் தேசத்திற்கு எதிரிகளால் பயம் உண்டாகும்.
733. த்வஜ தண்டத்தில் மேல்பாகம் ஸ்கந்தம் என்ற பாகத்தின் அளவு குறைவு ஏற்பட்டால் சாந்தி ஹோமம் செய்யவும் கொடிமரம், உபதண்டம், ஸ்கந்தபாகம், இவைகள் பிளவு ஏற்பட்டால்.
734. சாந்தி என்ற ஹோமத்தை செய்து இரண்டாகவே பிளவு ஏற்பட்டால் சாந்திஹோமத்தை செய்யவேண்டும். கொடி அதின் அமைப்பின்றி இருந்தால் அரசாங்கத்திற்கு பயம் ஏற்படும்.
735. ஆகையால் லக்ஷணத்துடன் கூடிய வேறு ஒரு த்வஜத்தை கொடியேற்றுவதற்காக கொண்டுவர வேண்டும். சாந்தி கர்மாக்கள், செய்து புத்திமான லக்ஷணத்துடன் கூடிய த்வஜத்தை ஆரோஹணம் செய்ய வேண்டும்.
736. இவ்விதமாகவே விருஷபத்தின் விஷயத்திலும் பிராயச்சித்தத்தை செய்யவேண்டும். கொடிக்கு மேல்பாகபிரம்பு இல்லாமல் இருந்தால் ஈசான மகாமந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும்.
737. துவஜத்திற்கு கீழ் பிரம்பு இல்லாமல் இருந்தால் தோஷமில்லை. துவஜக்கயிறு அறுந்தால் எதிரிகளால் இடையூறு ஏற்படும். அதற்கு சாந்தி ஹோமத்தைச் செய்யவேண்டும்.
738. எலி முதலிய பிராணிகளால் கொடிச்சீலை முதலியவைகள் துண்டிக்கப்பட்டால் சாந்தி ஹோமத்தைச் செய்ய வேண்டும். கொடி கீழே பூமியில் விழுந்தால் அரசாங்கத்திற்கு கெடுதல் ஏற்படும்.
739. அப்பொழுது சாந்தி ஹோமத்தை செய்து சாஸ்திர பிரகாரம் துவஜாரோஹணத்தைச் செய்யவும் துவஜம் பின்னமாக்கப்பட்டு இருந்தால் சாந்தி கர்மாவை செய்யவேண்டும்.
740. ஏழு நாட்களுக்குள் வேறு ஒரு கொடியை ஏற்ற வேண்டும், ஏழுநாட்களுக்கு முன்னதாகவே (சிலநாட்களில்) குறைவான தினங்களில் துவஜாரோஹணம் செய்வது விசேஷமானது.
741. அப்பொழுது மூர்த்திஹோமத்தையோ, அல்லது சாந்தி ஹோமத்தையோ செய்து துவஜாரோஹணம் செய்ய வேண்டும். கொடியேற்றியிருக்கும் போது மேலே உள்ள மூன்று சட்டங்கள் உடைந்து போனாலோ
742. தொங்கிக் கொண்டிருந்தாலோ தோஷத்தை உண்டுபண்ணும். அதனால் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். தர்பமாலை இல்லாமல் இருந்தால் சாந்திஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
743. பிறகு துவஜதண்டத்தை லக்ஷணத்துடன் கூடியதர்பமாலையால் சுற்றிக் கட்டவேண்டும். கயிற்றாலோ, தர்பமாலையாலோ விதிப்படி பிரதக்ஷிணமாக சுற்றி கட்டவேண்டும்.
744. தர்பமாலை துவஜதண்டத்தில் நன்கு இணைக்கப்படாவிட்டால் 1000 தடவை அகோரஜபம் செய்ய வேண்டும் பிரக்ஷிணமாக தர்பமாலைகளை சுற்ற வேண்டும்.
745. உபதண்டம் கூர்ச்சம் இல்லாமல் இருந்தால் அகோரமந்திரத்தை 300 தடவை ஜபிக்க வேண்டும். கொடிமரத்தில் மணி இல்லாமல் இருந்தால் விருஷபத்திற்கு ஸாந்நித்யம் இல்லாமல் போகும்.
746. அதனால் தேசிகன் அகோரமந்திரத்தை 300 தடவை ஜபிக்க வேண்டும் துவஜத்தில் இருக்கும் மணி கீழே விழுந்தால் 300 ஆவ்ருத்தி அகோர மஹாமந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
747. தண்டத்தில் ஏறிதர்பம், கொடி முதலியவைகளை கட்டுவது கூடாது. ஏனென்றால் தண்டநாதன் ஸாக்ஷõத் பரசிவஸ்ரூபம் துவஜாரோஹண: ஸமயத்தில் கும்பங்களுக்கு நியாஸம் செய்யப்படாமல் இருந்தால்
748. வ்ருஷப கும்பம் உடைந்திருந்த காரணத்தால் நியாஸம் செய்யாமல் இருந்தால் துவஜாரோஹணத்தை செய்து சாந்தி ஹோமத்தை செய்து கும்பத்தை முன்போல் ஸ்தாபனம் செய்து.
749. மனதில் விருஷபத்தை தியானித்துக் கொண்டு மந்திரந்யாஸம் செய்யவேண்டும். அப்பொழுது ஆவரணகும்ப தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படாமல் இருந்தால்
750. ஒவ்வொரு கும்பத்திலும் அந்த விருஷத்தின் அந்தந்த மந்திரங்களால் 100 தடவை ஜபம் செய்ய வேண்டும். ஏற்றப்பட்ட துவஜம், துவஜவளையத் திலிருந்து தொங்கினால்
751. ஒன்று அல்லது இரண்டு, மூன்று அங்குலம் இருந்தால் தோஷமில்லை. அதற்கு கீழே 12 அங்குலம் இருந்தால் 300 தடவை அகோரஜபம் செய்யவேண்டும்.
752. அதற்கும் கீழே கொடி தொங்கினால் சாந்தி ஹோமத்தைச் செய்து விருஷப பூஜை செய்து துவஜாரோஹணத்தைச் செய்யவேண்டும்.
753. பேரீ, வாத்யம், அடிப்பது இல்லாமல் இருந்தால் மனிதர்கள் ஊமையாகப் பிறப்பார்கள். சாந்தி ஹோமத்தைச் செய்து பிறகு பேரீ வாத்யத்தை முழங்க வேண்டும்.
754. உற்சவாரம்பத்திற்கு முன்பாக தேவதைகளை ஆஹ்வானம் செய்வதுடன் கூடிய தேவதைகளின் ஆவாஹனம் இல்லாமல் இருந்தால் தேவதைகளுக்கு ஸாந்நித்யம் இல்லாமல் போய்விடும்.
755. சாந்தி ஹோமத்தைச் செய்து முன்போல் தேவதைகளை, ஆஹ்வானம் செய்யவேண்டும். சிவன், பார்வதி, சுப்ரமண்யர், மஹாகணபதி, சூர்யன் சண்டிகேச்வரர் முதலியவர்கள்
756. அழைக்கப்படாமல் இருந்தால் தோஷம் ஏற்படும். ஆபத்து காலத்தில் மற்ற தேவதைகளை அழைக்கக் கூடாது. கொடி ஏற்றப்பட்ட பிறகு தேவதைகளை அழைத்துமோ, அழைக்காமலுமோ இருக்கலாம்.
757. பேரீவாத்யத்தை அடித்து முழங்குவது வழக்கம்போல் செய்யலாம். பேரீவாத்யத்தின் தோல் கிழிந்திருந்தாலும், பேரியின் பக்க பாகம், பேரியின் வலது, இடது வளையம் உடைந்துபோன்றும்
758. 300 ஆகோரமந்திரத்தை ஜபித்து வேறு ஒரு பேரியைக் கொண்வு வரலாம். அவ்வாறே வேறு வட்ட வடிவபாகத்தை தயார் செய்து கொண்டு வந்து முன்போல் பேரியை அடிக்கலாம். (டமாரம்)
759. அடிக்கும் வட்ட வடிவமானது தரையில் விழுந்தால் 300 தடவை அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும். அந்தக் காலத்திலோ (த்வஜாரோஹண) பலிகாலத்திலோ, பேரீ அடிப்பவன் கீழே விழுந்தால்
760. தேசத்திற்கு ஏற்பட இருக்கும் அவலநிலைப் போக்க சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். பேரீவாத்யம் தரையில் விழுந்தால் அரசருக்கு மாபெரும் பயம் உண்டாகும்.
761. அப்பொழுது சாந்தி ஹோமத்தைச் செய்து பேரியை ஹ்ருதய மந்திரத்தால் பூஜிக்கவேண்டும். யாகசாலை அக்னிபட்டு எரிந்திருந்தாலும், லக்ஷணம் இல்லாமல் இருந்தாலும்
762. விமானமோ, குண்டமோ, வேதிகையோ, எரிந்தாலும், அமைப்பு முறையின்றி இருந்தாலும், அரசாங்கத்தின், கெடுதலை அறியவும் மேற்கூறியவைகள் உற்சவகாலத்தில் ஏற்பட்டால் முறைப்படி சரிசெய்து உத்ஸவத்தை செய்ய வேண்டும்.
763. உற்சவ ஆரம்பம் முதல் தீர்த்ததினம் வரை ஒவ்வொரு நாளும் சாந்தி ஹோமத்தைச் செய்ய வேண்டும். (தீர்த்த) உற்சவ முடிவில் யாகசாலை லக்ஷணம், இல்லாமல் இருப்பது தெரிந்தால்
764. அந்தோஷ நிவ்ருத்திக்காக ஒரு நாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். விக்ரஹப்ரதிஷ்டையிலும் பரிஹாரத்திலும் இது பொது விதியாகும்.
765. ஸ்னபநத்திலும், ப்ரோக்ஷணத்திலும், மாஸ பூஜையிலும், பவித்ரோத்ஸவத்திலும், உத்ஸவத்திற்கு அங்கமான காரியத்திலும், ஜீர்ணோத்தாரத்திலும், ஆத்யேஷ்டிகை பூஜையிலும்
766. நித்யபூஜை , விசேஷபூஜை, காம்யமான மற்றுமுள்ள கர்மாக்களிலும் மேற்கூறியபடி செய்யவும் யாகத்தின் முடிவு நாளில் யாகங்களின் கருவிகள் பழுது அடைந்தாலும்
767. ஒரு நாள் உத்ஸவமாக இருப்பினும் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். உத்தம, மத்யம, அதமமான கருவிகளுக் அழிவு ஏற்பட்டால்
768. சாந்தி ஹோமத்தைச் செய்து அகோர மந்திரத்தை 200 தடவையோ, அல்லது 300 தடவையோ ஜபிக்கவேண்டும். கும்பஸ்தாபன ஸ்தண்டிலம் அதனங்கம் சரியாக அமையாவிடில் சாந்திஹோமம் செய்ய வேண்டும்.
769. பயிர்கள் அழிவு என்ற தோஷ நிவ்ருத்திக்காக முன்போல் ஸ்தண்டிலத்தை அமைக்கவேண்டும். சிவகும்பத்திற்கும், வர்த்தனிக்கும், ஆவரண கடங்களுக்கும்
770. உத்ஸவத்திற்கு அங்கமான இதர கலசங்களிலும் உடைசலோ, அல்லது ஓட்டையோ, விரிசலோ ஏற்பட்டு கும்பங்கள் லக்ஷணம் இல்லாமல் இருந்தால்
771. சாந்திஹோமத்தை செய்து 500 தடவை, அகோரமந்திர ஜபத்தைச் செய்யவேண்டும். தோஷத்திற்கு பரிஹாரம் செய்ய 100, அல்லது 300 என்ற ஸங்க்யையில் அகோர ஜபம் செய்யவேண்டும்.
772. புதிய கும்பம் முதலியவைகளைக் கொண்டு வந்து முன்போல் ஸ்தாபனம் செய்யவேண்டும். வர்த்தனீ கும்பம், கடம், வித்யேச்வரதேவதைகள்.
773. தங்கமயமான தாமரைப்பூ இல்லாமல் ஸ்வல்பமான தங்கத்துடன் கூடினதாக இருந்தால் கர்தாவான பிரதான பருஷனுக்கு தாரித்ரியம் ஏற்படும். அதனைபோக்க 1000 முறை அகோரஜபம் செய்ய வேண்டும்.
774. அந்த தாரித்ரியம் நீங்குவதற்காக சாஸ்திரத்தில் சொல்லியபடி ஸ்வர்ணாதிகளை திரும்பவும் கும்பத்தில் போடவும் கும்பம் முதலியவைகள் வஸ்திரம் இல்லாமல் இருந்தால் ஜனங்களுக்கு வராரோகம் ஏற்படும்.
775. ஆகையால் ஆசார்யன் 1000 முறை அகோரமந்திரஜபம் செய்து திரும்பவும் வஸ்திரத்தை கொடுக்க வேண்டும். கும்பரத்னங்கள் குறைந்திருந்தாலும், அகோரஜபம் முன்கூறியபடி செய்து கும்பரத்னங்களைப் போட வேண்டும்.
776. நூல், கூர்சம், தேங்காய், மாவிலை முதலியவைகள் இல்லாமல் இருந்தால் முன்கூறியபடி பரிஹாரம் செய்ய வேண்டும். முன்பு கூறப்பட்ட ரக்ஷõபந்தனம், அதன் அங்கம் முதலியவை இல்லாமல் இருந்தால்.
777. அந்த யாகம் (ஹோமம்) பயனற்றது. ஆகையினால் அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவிருத்தி செய்வதற்காக சாந்திஹோமத்தை செய்து ரக்ஷõ சூத்ரத்தை கட்டவேண்டும்.
778. ரக்ஷõபந்தனத்தின் அங்கங்களில் லோபம் ஏற்பட்டால் 300 முறை அகோரஜபம் செய்ய வேண்டும். அப்பொழுதே அதிவாஸம் செய்யும் பூஜைகளுக்கு பகலில் ரக்ஷõபந்தனம் செய்யலாம்.
779. ஸ்வாமியை முன்பு இருந்த இடத்தில் ஸ்தாபித்து பிறகு ரக்ஷõ பந்தனத்தை செய்யவேண்டும். மண்டபத்திற்கு ஸ்வாமியை கொண்டு வந்த பிறகு ரக்ஷõசூத்ரம் கட்டினால் 150 தடவை அகோரஜபம் செய்யவேண்டும்.
780. பலி, தாளம் முதலியவை இல்லாமல் இருந்தால் 1000 தடவை அகோரஜபம் செய்யவேண்டும் தீபம் இல்லாமல் இருந்தால் 2 மடங்காக தீபங்களை சேர்க்க வேண்டும்.
781. உத்ஸவ காலங்களில் ஊர்வலமின்றி இருந்தால் ஜனங்களுக்கு எல்லாவித பாபங்களும் ஸம்பவிக்கும். ஒவ்வொரு ஸ்வாமி புறப்பாட்டிலும் ஸ்னபநம் சாந்திஹோமம் இவைகளைச் செய்யவேண்டும்.
782. மழைகாலத்திலும், புயல் காற்றிலும், அரசாங்க குழப்பத்திலும், எங்கும் பயம், நிறைந்த ஸமயத்திலும் ஸ்வாமியை கிராமபிரதட்சிணமாகக் கொண்டு போக வேண்டாம். தேவாலயத்தை பிரதட்சிணம் செய்தால் போதும்.
783. ஆசார்யன் அப்பொழுது ஸ்வாமிக்கு அபிஷேகம் (ஸ்னபனா) செய்து சாந்திஹோமத்தைச் செய்ய வேண்டும். (ஹேவி ப்ரேந்திரா) ஒரே பூமியில் ஊரில் வாஸ்துவில் சிவோத்ஸவம் நடந்து வரும் பொழுது
784. வேறு தேவதை உற்சவம் நடந்தால் கிராமத்திற்கு கஷ்டம் உண்டாகும். அந்ததோஷத்தைப் போக்குவதற்காக சாந்திஹோமத்தை செய்யவேண்டும்.
785. அவ்வாறே (கிராமதேவதை) தேவீ சாந்தியிலும் பிராயச்சித்தத்தை செய்யவேண்டும். அங்காரக பலி என்ற தீமிதி உத்ஸவத்தை யாமள தந்திரப்படி செய்வதில் குற்றமில்லை.
786. தவறுதலாக வாம, பைரவ, தந்திரப்படி பலி நடந்தால் கிராமத்திற்கு குறைவு ஏற்படும். அறியாமையால் பலி கொடுத்தால் சாந்திஹோமத்தை செய்ய வேண்டும்.
787. அவ்வாறு அம்பாள் சன்னதி விஷயத்திலும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஜனஸஞ்சாரம் இல்லாத கிராமத்தை அடைந்து பலியும், உற்சவமும் செய்யப்பட்டால்.
788. அப்பொழுது தேசத்திற்கு அழிவு ஏற்படும். அப்போது சாந்தியைச் செய்யவேண்டும். ஆலயத்திலோ, தேவலாயத்தை சுற்றி பலிபோடுவ தாவது (என்பது)
789. பிறருடைய பூமியைவிட ஆலயத்தைச் சேர்ந்த பூமியில் போடுவது சிறந்தது தேவலாயத்திலிருந்து எட்டியுள்ள பூமியைவிட அருகில் இருக்கும் பூமியில் பலிபோடுவது சிறந்தது.
790. பலவிதமான மரங்கள் நிறைந்ததும், பல வீடுகளோடு, கூடியதும். ஆன இடம் முன்பு கூறியதை விட உயர்ந்தாகும். அதற்கு மாறுதலாக இருந்தால் கஷ்டம் ஏற்படும்.
791. பிராம்மண க்ஷத்ரிய வைச்யர்களின் வாசஸ்தல பூமி சிறந்ததாக கூறப்படுகிறது. சக்தியற்றவர்களுக்கு வேறு இடம் அனுகல்பமாக கூறப்படுகிறது.
792. அனுலோம ஜாதியின் இடமோ அல்லது அப்ராம்மணரின் இடமோ மத்யமமாக கருதப்படுகிறது. அவர்களும் இல்லாமல் இருக்கும் பிரதிலோமனின் இடம் சிறந்தது இல்லாததாகப் பொருள் கொள்ளவேண்டும்.
793. உன்புறமான வாஸ்துவை விட வெளிச்சுற்று பலிபோடுவதற்கு விசேஷமாகும். ஒரே இடத்தில் பலியும் ஸ்வாமிவலம் வருவதும் ச்ரேஷ்டமாகும்.
794. அசக்தர்களுக்கு மத்யமாக வேறு இடத்தில் செய்ய வேண்டும். அசக்தர்கள் விஷயத்தில் சாந்தி ஹோமத்தைச் செய்யவேண்டும்.
795. விதாநம் என்கிற உபசாரக்கொடி அல்லாமல் இருந்தால் அகோரமந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும். த்வஜம் இல்லாமல் இருந்தால் 100 தடவை அகோரஜபத்தை செய்யவேண்டும்.
796. இரவில் த்வஜம் இல்லாமல் இருந்தால் தோஷம் இல்லை. ப்ராம்மணேத்தமர்களே! பலிக்கு உள்ள திரவியங்கள் இல்லாமல் இருந்தால் மக்களுக்கு பசி உபத்ரவம் உண்டாகும்.
797. 200 தடவை அந்த கிழமையின் அதிபதி மந்திரத்தை ஜபிக்கவேண்டும். மற்றொரு பூஜா காலத்தில் பலித்ரவியங்களுடன் கொடுக்க வேண்டும்.
798. பலிதானம் செய்யாவிடில் மனிதர்களுக்கு பசியால் உபத்ரவம் ஏற்படும். பிறகு மூர்த்தி ஹோமத்தைச் செய்து மூர்த்தி வலம் வந்த பிறகு பலியிட வேண்டும்.
799. தேவாலயத்தில் பலி இல்லாமல் இருந்தால் 100 தடவை அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும். கிராமத்தின் எந்த திசையில் பலி இல்லையோ, அங்கு ஸம்ஹிதா ஹோமத்தைச் செய்யவேண்டும்.
800. அந்தந்த திக்பாலகர்களின் மந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும். (உற்சவத்தில்) ஊர்வலம் வரும் காலத்தாலோ, அல்லது ஊர்வல முடிவிலோ பலியிட வேண்டும்.
801. அன்னத்திலான லிங்கம் இல்லாமல் இருந்தால் பூமியில் துர்பிக்ஷம் உண்டாகும். சாந்தி ஹோமத்தை செய்து அன்ன லிங்கத்துடன் பலியை செய்யவேண்டும்.
802. அன்னலிங்கம் உடைந்து விழுந்தாலும் தேசத்திற்கு துர்பிக்ஷம் ஏற்படும். அந்த அன்னலிங்கத்தை த்ருடமாகச் செய்து அஸ்திரத்தை பூஜிக்க வேண்டும்.
803. விதிப்படி ஸம்ஹிதாஹோமத்தை செய்து அதே இடத்தில் எடுத்து வந்து அந்த அன்னலிங்கம் விழுந்த இடத்திலிருந்து வலமாக பூஜையை செய்ய வேண்டும்.
804. கீழே அன்னம் விழுந்தால் அதை உபயோகிக்ககூடாது. வேறு அன்னத்தை தயாரித்து பூஜிக்க வேண்டும். முன்புபோல் உற்சவ புறப்பாட்டை முடித்துவிட்டு ஸம்ஹிதாஹோமத்தைச் செய்யவேண்டும்.
805. பலி பாத்திரம் விழுந்தால் அகோர மந்திரத்தை 1000 தடவை ஜபம் செய்ய வேண்டும். பலிபாத்திரம் உடைந்திருந்தால் வேறு பாத்திரத்தைக் கொண்டுவந்து பலிதிரவியத்தை வைக்க வேண்டும்.
806. தசாயுதங்கள் பூமியில் உண்டானாலும் விழுந்தாலும், உடைந்துபோனாலும் சாந்திஹோமம் செய்ய வேண்டும்.
807. மரத்தால் செய்யப்பட்ட ஆயுதங்கள் உடைந்தோ, வெடித்தோ, இருந்தால் வேறு ஆயுதங்களைத் தயாரித்து உலோகம் முதலிய பொருட்களால் ஆனவை சிதிலமடைந்தாலும் மாற்று ஆயுதங்களை செய்து
808. ஸம்ஸ்காரம் செய்து அந்தந்த மந்திரங்களால் மீதமுள்ள பூஜையை முடிக்க வேண்டும். அனுகர்மமுறைப்படி பிராயச்சித்தம் செய்து உலோகம் முதலானவைகளால் தசாயுதம் செய்து ஸ்தாபிக்க வேண்டும்.
809. கோயில் முதலான இடங்களில் அஸ்த்ர தேவர் (சூலம்) கீழே விழுந்தால் அரசருக்கு அரசாங்கத்திற்கும் பயம் உண்டாகும். திசாஹோமம் செய்து அஸ்திரபூஜை செய்யவேண்டும்.
810. விரிசல் உடைசல், முதலியவைகள், அஸ்திர தேவருக்கு ஏற்பட்டால் அனுகர்ம முறைப்படி சரி செய்தேறா அல்லது வேறு அஸ்திரதேவரையோ வைத்து முன்பு போல் திருவிழாவைச் செய்ய வேண்டும்.
811. உற்சவம் முடிந்ததும் (திருவிழா) விரிசல் உடைசல் ஏற்பட்டதை (பழைய அஸ்திரராஜரை) அனுகர்ம முறைப்படி சரிசெய்து ஸம்ப்ரோக்ஷணம் செய்து அஸ்திரராஜரைப் பிரதிஷ்டை செய்யவேண்டும்.
812. உற்சவ ஊர்வல மையத்திலோ, மற்ற காலத்திலோ உற்சவ பிம்பங்கள் விழுந்தால் அரசன் மரணமடைவான். உடனேயே பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.
813. உற்சவ விக்ரகம் அங்கங்களோடு ஓர்முழ அளவு கீழே விழுந்தாலும் இருமுழமோ மூன்றுமுழமோ அதற்கு மேற்பட்ட அளவில் கீழே விழுந்தால் வரிசைப்படி பிராயச்சித்தம் செய்யவேண்டும்.
814. ஸம்ஹிதாஹோமம், சாந்திஹோமத்தையும், சாந்தி என்ற ஹோமத்தையும், மூர்த்திஹோமம், திசாஹோமத்தையும் செய்ய வேண்டும். ஸ்நபனாபிஷேகம் செய்வித்து லக்ஷம் ஆவ்ருத்தி அகோரமந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
815. நைவேத்யத்தை ஸமர்பித்து மீதமுள்ள நாட்கள் உற்சவத்தின் (திருவிழா) சாதாரணமான முறையில் நடத்த வேண்டும். அங்கங்களில் குறை ஏற்பட்டிருந்தால் அனுகர்ம முறைப்படி சேர்ப்பது முதலான பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும்.
816. அதிவாஸம் முதலிய கர்மாக்களை உடனே செய்யவேண்டும். ஆசார்யன் மாதம், நக்ஷத்திரம், திதி, வாரம் (தினம்) இவைகளை கவனியாமல்
817. மறுபடியும் ரக்ஷõபந்தனம் செய்து உற்சவம் முதலியவைகளை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். பிரதான (முக்கிய) அங்கங்கள் இல்லாவிடிலும் அனுகர்ம முறைப்படி சரிசெய்ய வேண்டும்.
818. இணைத்தலை முடிக்கும் வரை வேறு பேரங்களை வைத்து உத்ஸவத்தை நடத்த வேண்டும். தேசிகனாவன் தினந்தோறும் சாந்திஹோமம் செய்ய வேண்டும்.
819. வேறு இடத்திலிருந்து விக்ரத்தை எடுத்து வந்தாவது திருவிழாவை நடத்தவேண்டும். கர்ப்பக்ருஹத்வாரம் முதலிய அளவுப்படியோ, விருப்பப்பட்ட அளவுப்படியோ
820. பிம்பத்தை அனுகர்ம முறைப்படி செய்து முறைப்படி பிரதிஷ்டை செய்து முடிவில் அங்குரார்பணத்தை செய்து
821. ஒன்பது நாட்கள் முதலான தேவரின் உத்ஸவத்தை செய்ய வேண்டும். சிவலிங்க விஷயத்திலும் இவ்வாறே முன்பு சொல்லப்பட்ட பிராயச்சித்த கார்ய சமமே ஆகும்.
822. உற்சவம் நடக்கும் பொழுது ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட விக்ரஹம் கிராமத்தை விட்டு வெளியில் செல்வது உசிதமல்ல. தூஷிக்கத்தகுந்ததாகும். அதனால் அரசருக்கு பயம் உண்டாகும்.
823. அந்த தோஷத்தை போக்குவதற்கு சாந்தி ஹோமத்தையோ, ஸம்ஹிதாஹோமத்தையோ, செய்ய வேண்டும். பூஜைக்கிரியைகளை செய்து கொண்டிருக்கும் ஆசார்யன் கீழே விழுந்தால்
824. கிராமத்திற்கு கெடுதல் ஏற்படும் அதற்காக அகோரமந்திரத்தை 500 ஆவ்ருத்திஜபம் செய்ய வேண்டும். சாதகர் கீழே விழுந்தாலும் முன்போல் 500 தடவை அகோரஜபம் செய்யவேண்டும்.
825. அந்த ஸமயத்தில் பலிபீடம் விழுந்தால் 100 தடவை அகோரஜபம் செய்யவேண்டும். தசாயுதம் அஸ்திரதேவர், அன்னலிங்கம், ஸ்வாமியை சுமப்பவர்கள் தரையில் விழுந்தால்
826. ஆசார்யன் 100 தடவை அகோர ஜபம் செய்ய வேண்டும். இருமடங்காக (200) சிவமூல மந்திரத்தையும் அஸ்திர மூலமந்திரத்தையும் ஜபிக்க வேண்டும். முழுமையான ஸந்தியை முதலிய பூஜைகள் தவறினாலும்
827. பாத்யாதிகள், சந்தனம், புஷ்பம், தூபம், தீபங்கள் (தூண்டாத) அணையாவிளக்கு, நைவேத்யங்கள் முதலியவை இல்லாமல் இருந்தால்
828. முன்பு கூறிய பிரகாரம் ஆசார்யனால் பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும். யாகசாலை பூஜாஹோமம் தடைப்பட்டாலும், ஹோமதிரவியங்கள் குறைந்திருந்தாலும்
829. சிவனை ஆவாஹனம் செய்யப்பட்ட யாகாக்னி அணைந்தாலும், சாமான்யமான அக்னி அணைந்தாலும் முன்போல் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். தேர் ஓட்டம் இல்லாமல் இருந்தால் மனிதர்கள் மிகவும் கீழ்த்தரப்பட்டவர்களாகிறார்கள்.
830. அப்பொழுது சாந்திஹோமத்தை செய்து ரதாரோஹணத்தை நடத்த வேண்டும். ரதத்தில் (தேரில்) ஸ்வாமி திருவீதி (உலா) வலம் வரும் ஸமயத்தில் தேர் முதலியவைகள் முறிந்துபோனால் பூமிக்கு பங்கம் ஏற்படும்.
831. ஆகையினால் இணைப்பதற்கு தகுந்தவைகளை இணைத்து சீர்திருத்தம் செய்து சாந்தியை செய்யவேண்டும். அந்த இடத்திலோ, அல்லது கோயிலிலோ வீதி உலா சமயத்தில் ஏற்பட்ட குற்றத்தை போக்க
832. இணைத்து சீர்திருத்தம் செய்யமுடியமால் போனால் வேறு ரதம் (தேரை) ஒன்றைக் கொண்டு வர வேண்டும் அல்லது பல்லக்கு முதலியவைகளில் பரமேச்வரனை ஆரோஹணம் செய்து
833. பிறகு முன் போலவே பரமேச்வரனை ஆலயத்தில் இருக்கச் செய்யவேண்டும். உற்சவ (திருவிழா) வேடிக்கை தர்சன காலத்தில் சண்டை, கலஹம் உண்டானால்
834. சாந்தி ஹோமத்தைச் செய்து பத்தாயிரம் தடவை அகோரஜபம் செய்ய வேண்டும். உற்சவ (திருவிழா) வேடிக்கை தர்சனம் இல்லாமல் ஸம்ஹிதா ஹோமத்தைச் செய்யவேண்டும்.
835. முறைப்படி நீராஜனம் (தீபாராதனை) இல்லாமல் இருந்தால் முன்போல் பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும். ஸ்வாமி திருவீதி வலம் வந்த பிறகு ஸ்நபனாபிஷேகம் இல்லையெனினும் சாந்தி ஹோமம் செய்யாவிடினும்
836. தேவதா, ஸாந்நித்யம், குறைந்து விடும். ஆதலால் தேவதாஸாந்நித்யம் ஏற்படும் பொருட்டு (சித்திப்பதற்கு) மூர்த்தி ஹோமம், ஸ்நபநாபிஷேகம் சாந்திஹோமத்தை செய்ய வேண்டும்.
837. ஆசாரக்குறைவாக உள்ளவர்கள் இருக்கும் இடத்தில் ஸ்வாமியின் திருவீதி ஊர்வலம் நடைபெற்றால் விசேஷ ஸ்நபந அபிஷேகம் மிகவும் விஸ்தாரமாக சாந்திஹோமத்தையும் செய்யவேண்டும்.
838. ஸ்வாமிக்கு எண்ணைக்காப்பு இல்லாமல் இருந்தால் மனிதர்களுக்கு தலைவலி முதலிய சிரோரோகம் ஏற்படும். அந்ததோஷ நிவ்ருத்திக்காக சாந்திஹோமத்தைச் செய்து தைலாபிஷேகத்தை செய்யவேண்டும்.
839. முன்பு ஸங்கல்பிக்கப்பட்டபடி நடராஜ மூர்த்தியின் உற்வசம் இல்லாமல் இருந்தால் எல்லோரும் பாபிகளாக ஆவார்கள் அதற்காக சாந்தியைச் செய்ய வேண்டும்.
840. சாந்தி செய்த பிறகு சவுகர்யப்பட்ட காலத்தில் நடராஜ வீதிவலத்தை செய்யவேண்டும். யாத்ராதானம் இல்லாமல் இருந்தால் அந்த யாத்ரை பயனற்றதாக ஆகும்.
841. அதற்காக சாந்தி ஹோமம் செய்து முன்பு போல் நடேசரை ஊர்வலமாக வரச் செய்ய வேண்டும். ஸ்வாமிக்கு வேட்டை ஊர்வலம் இல்லாமல் இருந்தால் அரசருக்கு தோல்வி ஏற்படும்.
842. அதனால் சாந்திஹோமத்தை செய்து சவுகர்யமான இஷ்டதினத்தில் வேட்டை உற்சவத்தை நடத்த வேண்டும். ரக்ஷõபந்தன மஞ்சள் நீர் விளையாட்டு இல்லாமல் இருந்தால் கங்கை முதலிய திவ்ய நதிகளின் ஸான்னித்யம் இருக்காது.
843. சூர்யோதயத்திற்கு பிறகு மஞ்சள் நீர் விளையாட்டு செய்யப்பட்டால் அதன் பரிஹாரமாக சாந்திஹோமம் திசாஹோமம் செய்யவேண்டும்.
844. கொடி ஏறி இருக்கும் ஸமயத்தில் மஞ்சள் நீர் விளையாட்டு செய்யப்பட்டாலும் வேறு இடத்தில், மஞ்சள் நீர் விளையாட்டை செய்தோ செய்யாமலோ இருக்கலாம்.
845. சூர்ணோத்ஸவமோ அல்லது அதனுடைய அங்கமோ இல்லாமல் இருந்தால் வியாதி, பீடை உண்டாகும். சூர்ணோத்ஸவம் இல்லையென்றால் சாந்திஹோமத்தையும் அதன் அங்கம் இல்லை என்றால் ஸம்ஹிதா ஹோமத்தையும் செய்ய வேண்டும்.
846. தீர்த்தவாரி ஆலயத்திற்கு உட்பட்டதாக செய்யபடாவிட்டாலும், சூர்ணோத்ஸவ சுற்றுதல் செய்யப்படாவிட்டாலும் ஸம்ஹிதாஹோமத்தை செய்ய வேண்டும்.
847. புண்ய தீர்த்தில் தீர்த்த ஸ்னானம் இல்லாமல் இருந்தால் யாகசாலை ஹோமம் பயனற்றதாகும். அதற்காக சாந்தியை செய்து தீர்த்தவாரியை நடத்த வேண்டும்.
848. முன்பு நதி முதலியவைகளில் நடைபெற்ற தீர்த்தஸ்னான முறை தற்சமயம் மாறி இருந்தால் தோஷம் ஏற்படும் அதன் நிவ்ருத்திக்காக சாந்தி ஹோமத்தை செய்யவேண்டும்.
849. தீர்த்தவாரியின் அங்கமான கார்யங்களில் குறைவு ஏற்பட்டால் ஸம்ஹிதாஹோமம் செய்ய வேண்டும். கோயில் மண்டபத்தில் மனிதன் பிறந்தாலோ, இறந்தாலோ ராஜாவுக்கு மாபெரும் பயமேற்படும்.
850. பிறப்பு, இறப்பு ஏற்பட்டவர்களை கோயிலிருந்து நீக்கி பசுஞ்சாண தீர்த்தத்தால் பிரோக்ஷிக்க வேண்டும். அந்த பிறகு இறந்தவர்கள் எந்த வழியில் சென்றார்களோ
851. அந்த வழியில் புண்யாக பிரோக்ஷணத்தை செய்யவேண்டும். பிறந்த, இறந்த இடமானது தோண்டபடுவையாக இருந்தால் தோண்டி வெட்டி எடுக்க வேண்டும்.
852. அசுத்தமான மண்ணை எடுத்துவிட்டு சுத்தமான மண்ணை நிறப்ப வேண்டும். பிறகு இறந்த இடத்தின் அருகில் உள்ள சுவர் முதலான இடங்களை கோமயத்தினால் (பசுஞ்சானம்) மெழுக வேண்டும்.
853. புண்யாக வாசனம் பஞ்சகவ்யத்தால் பிரோக்ஷணம் செய்யவேண்டும். சிவப்ராம்மணருக்கு உணவு அளித்து அவ்விடத்தை ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.
854. கர்பகிருஹத்தில் முன்கூறிய அசந்தர்பம் நடந்தால் ஸ்பனாபிஷேகம் செய்து சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். அர்த்த மண்டபத்தில் முன் கூறிய சம்பவம் நடந்தால் சாந்தி ஹோமம் இல்லாமல் ஸ்நபனத்தை செய்ய வேண்டும்.
855. உற்சவ மூர்த்தி மண்டபத்தில் மேற்கூறிய சம்பவம் நடந்தால் ஸ்நபனம் இல்லாமல் சாந்தி ஹோமத்தை உட்பிராகார பிரதேசங்களில் அச்சம்பவம் நடந்தால் புண்யாஹ பிரோக்ஷணத்தை செய்ய வேண்டும்.
856. உட்பிராகாரங்களில் இருக்கும் மூர்த்திகளுக்கு சாந்தி ஹோமத்துடன் ஸ்நபனாபிஷேகம் செய்ய வேண்டும். அங்கு இருக்கும் பீடங்களையும் பஞ்சகவ்யத்தால் சுத்தியின் பொருட்டு பிரோக்ஷிக்க வேண்டும்.
857. மண்பாண்டங்களை விலக்க வேண்டும். மரத்தாலான பாத்திரங்களை ஜலத்தால் அலம்ப வேண்டும். வெளிப் பிராகாரத்தில் முன்கூறிய அசுத்தமானவை சம்பவித்தால் ஸ்நபனத்துடன் திசாஹோமத்தை செய்ய வேண்டும்.
858. மடப்பள்ளி முதலிய இடங்களில் மரணம் ஸம்பவித்தால் முன்போல் சுத்தி பரிஹாரங்களை செய்து வாஸ்து சாந்தியை செய்யவேண்டும்.
859. பிறகு சாந்தி ஹோமத்தையும் மூர்த்தி ஹோமத்தையும் செய்ய வேண்டும். மூன்றாவது பிராகாரத்தில் மரணம் முதலியன ஏற்பட்டால் சாந்தி ஹோமத்தை செய்யவேண்டும்.
860. தேவாலத்திலிருந்து 12 தண்ட அளவுக்கு உட்பட்ட தான இடத்தில் மனிதன் இறந்துபோனால் அவற்றை வெளியில் கொண்டு சென்றுவிட்டு நித்ய, நைமித்திகாதிகள் செய்யவேண்டும்.
861. சவத்தை வெளியேற்றாமல் நித்ய நைமித்திக பூஜைகள் நடந்தால் கிராமத்திற்கு நாசம் ஏற்படும். அதற்காக ஸ்நபனாபிஷேகம் செய்ய வேண்டும். ஆலயத்தில் பறவைகள், வீட்டு விலங்குகள், மிருகங்கள், பிரஸவித்தாலோ இறந்தாலோ
862. பாம்பு பிறந்தாலும், தேசமக்களுக்கு பலவித கெடுதல்கள் உண்டாகும். அந்த இடத்தில் கோமயத்தால் மெழுகி பஞ்சகவ்யத்தால் பிரோக்ஷணம் செய்யவேண்டும்.
863. கர்பகிருஹத்தில் மேற்கூறியவை மரணம் அடைந்தால் ஸ்நபன அபிஷேகத்துடன் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். அர்த்த மண்டபத்தில் முன்பு சொன்னவைகள் மரணம் அடைந்தால் ஸ்நபன அபிஷேகம் மட்டும் செய்யவேண்டும்.
864. உற்சவதேவதா மண்டபத்தில் பிராணிகளின் மரணம் ஏற்பட்டால் பஞ்ச கவ்யத்தால் மூர்த்திகளை பிரோக்ஷித்து சந்தனம், புஷ்பம், முதலியவைகளால் பூஜித்து சாந்தி ஹோமத்தை செய்யவேண்டும்.
865. இப்பொழுது கூறப்பட்ட பரிஹாரம் அனைத்தும் உற்சவகாலங்களுக்கும், உற்சவமில்லாத ஸமயத்திலும் பொதுவானதாகும். ஆசார்யனுடைய தலைப்பாகையோ, மேல்வஸ்திரமோ இடுப்பு வேஷ்டியோ, பூணூலோ
866. ஆசார்யனுடைய தலையோ, அக்னியால் பாதிக்கப்பட்டால் கிராமத்தில் ஜனங்களுக்கு ஜ்வாபாதை உண்டாகும். அந்த தோஷத்தைப் போக்குவதற்காக
867. ஆசார்யன் ஸ்நானம் செய்து ஆசாரத்துடன் இருந்து கொண்டு சாந்திஹோமத்தைச் செய்ய வேண்டும். ஹேமுனீஸ்வரர்களே கர்த்தாவாக இருந்தாலும், ஹோமம் செய்பவர்களாக இருந்தாலும் இதே பரிஹாரமாகும்.
868. வஸ்திரம், படுக்கை, ஆஸனம், ஆகியவைகள் அக்னியால் பாதிக்கப்பட்டாலும், எலிகளால் கடித்து கிழிக்கப்பட்டு இருந்தாலும், அவைகளின் பலன் கூறப்படுகிறது.
869. வஸ்திரமூலையில் அக்னிதாஹம் ஏற்பட்டிருந்தால் அபிவிருத்தியும், சவுக்யமும் உண்டாகும். ஓரத்தில் தீப்பிடித்திருந்தால் கஷ்டம் ஏற்படும். வஸ்திர தலைப்பின் ஆரம்பம் நடுபாகம் முடிவுபாகம் எரிந்தால் புத்ரலாபமும் புகழும் ஏற்படும்.
870. ஓரமாக இருந்தால் கஷ்டம், வியாதி, மரணமும் பிரம்மபாகமான நடுபாகம், கிழக்கு, தெற்கு ஆக்னேயம் இந்த திசைகளில் ஏற்பட்டால்
871. அந்தந்த திக்கில் உள்ள ஜனங்களுக்கு பெரியதோஷம் கூறப்பட்டுள்ளது. இதுமாதிரியான தோஷம் எங்கும் கூறப்படவில்லை. இவ்வாறே ஜனங்களின் தோஷ நிவிருத்திக்காக விதிப்படி ஸ்னானம் செய்து
872. 1000 ஆவ்ருத்தி ஆகோர ஜபம் செய்து கடிக்கப்பட்ட வஸ்திரங்களை எரித்துவிட வேண்டும். மனிதர்கள், சிவபக்தர்கள், தீக்ஷிதர்கள், சிவபெருமான் இவர்களுக்கு அர்பணம் செய்யப்பட்ட ஆடையோ,
873. தெய்வத்தின் வஸ்திரமோ அக்னியால் பாதிக்கப்பட்டால் பஞ்சகவ்யத்தால் பிரோக்ஷித்து சுத்தியின் பொருட்டு ஸம்ஹிதா ஹோமத்தையோ அல்லது 1000 ஆவ்ருத்தி அகோர ஜபத்தையோ செய்யவேண்டும்.
874. யாகசாலையில் சிவதீøக்ஷ இல்லாதவர், மற்ற சூத்ரர்களாலும், திரவ்யங்களுடன் பிரவேசிக்கப்பட்டால் அஸ்திர தீர்த்தத்தால் பிரோக்ஷணம் செய்து 10 தடவை அகோரமந்திரத்தை ஜபிக்கப்படவேண்டும்.
875. கும்பம் முதலிய திரவ்யங்கள் ஆதிசைவர் அல்லாதவர்களால் தொடப்பட்டாலும் வேறு பாத்ராதிகளை ஏற்கவும், யாகசாலைக்குள் நாய் முதலியவை நுழைந்தால் ஸம்ஹிதாஹோமத்தைச் செய்யவேண்டும்.
876. பிற்படுத்தப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் யாகசாலைக்குள் பிரவேஸித்து ஸ்பர்சிக்கப்பட்டால் பசுஞ்சாணத்தால் மெழுகி, புண்யாக ப்ரோக்ஷணத்துடன் பஞ்சகவ்யப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.
877. ப்ரஸவத்தீட்டுள்ளவர்களும், இறப்புத் தீட்டு உள்ளவர்களும் கும்பங்களை தொட்டால் அக்கும்பங்களை தள்ளுபடி செய்து பசுஞ்சாணத்தால் மெழுகி பர்யக்னி கரணம் என்று வாஸ்து சாந்தியை செய்யவேண்டும்.
878. பிறகு மூர்த்தி ஹோமத்தைச் செய்து கடைசியில் கும்பங்களை முன்போல் ஸ்தாபனம் செய்ய வேண்டும். நாய் முதலியவைகளால் ஸ்பர்சம், ஏற்பட்டால் முன்கூறிய முறைப்படி பரிஹாரத்தை செய்யவேண்டும்.
879. சண்டாளர் முதலியோர் யாகசாலையில் அதனருகிலும் பிரவேசித்தால் ஸ்வாமிக்கு ஸ்நபனம் செய்வித்து திசாஹோமத்தைச் செய்யவேண்டும்.
880. அவர்கள் மூர்த்திகளை தொட்டால் முன்புபோல் ஸ்நபனாபிஷேகம் செய்து திசாஹோமத்தைச் செய்ய வேண்டும். யாகசாலை, அக்னியால் பாதிக்கப்பட்டால் அரசருடைய மாளிகையில் பயம் உண்டாகும்.
881. முன்பிருந்த கும்பங்களை, அகற்றிவிட்டு ஈச்வரனைப் பூஜித்து மூர்த்தி ஹோமத்தைச் செய்து முன்புபோல் யாகசாலையை நிர்மாணித்து
882. உடனே அதிவாஸ முறைப்படி கும்பங்களை ஸ்தாபித்து முன்பு போல எரியாத யாக மண்டபத்தில் யாகசாலை கார்யங்களை செய்ய வேண்டும்.
883. மடப்பள்ளி, ஆஸ்தான மண்டபம், கோபுரம் முதலியவை அக்னியால் பாதிக்கப்பட்டிருந்தால் சாந்தி ஹோமத்தைச் செய்து முன்பு கூறிய பிரகாரம் கார்யங்களைச் செய்யவேண்டும்.
884. பந்தல் தீக்கிரையானால் ஸம்ஹிதா ஹோமத்தைச் செய்யவேண்டும். கர்ப கிருஹம் அர்த்தமண்டபம், உற்சவமூர்த்திகள்
885. உள்பிரகார உள்பாகம், வெளிபாகம், வெளிப்பிரகாரம், இவைகளில் அக்னிபாதை ஏற்பட்டால் ஸ்வாமிக்கு ஸ்நபனாபிஷேகம் செய்து திசாஹோமம் மூர்த்தி ஹோமத்தைச் செய்யவேண்டும்.
886. லிங்கம், மூர்த்தம் இவைகள் அக்னிபாதை ஏற்பட்டால் சாந்தி என்ற ஹோமத்தையும், சாந்தி ஹோமத்தையும் ஸம்ஹிதா ஹோமத்தையும், செய்து அதற்காக கூறப்பட்ட பரிஹாரத்தையும் செய்யவேண்டும்.
887. பரிவார தேவாலயம் அக்னியால் பாதிக்கப்பட்டால் உற்சவ மூர்த்தி மண்டபத்திற்கு சொன்ன பரிஹாரத்தை செய்ய வேண்டும். உற்சவகாலத்திலும், உற்சவமல்லாத காலத்திலும் இப்பரிஹாரம் பொதுவானது ஆகும்.
888. கிராம, நகரங்களில் வீடுகள் அக்னியால் பாதிக்கப்பட்டால் ஸம்ஹிதா ஹோமத்தை செய்ய வேண்டும். மாபெரும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சாந்திஹோமத்தை செய்யவேண்டும்.
889. பிராயச்சித்தம், செய்யாவிட்டாலும், ஆசார்யனுக்கு வஸ்திரம், உத்தரீயம், தலைப்பாகையுடன் தங்கத்தால் ஆன மோதிரம் தோள்வளை, அரைஞான், காதணி, பூணூல் ஆகியவையோ,
890. அல்லது முடியாத பக்ஷத்தில் தங்க மோதிரத்தையாவது இஷ்டப்பட்ட பொருள்களையோ கொடுக்கப்படாவிட்டால் அகோர ஜபத்தை 100 தடவை ஜபம் செய்து அவற்றை கொடுத்தல் வேண்டும்.
891. பல ஆசார்யர்களின் கலப்பு ஏற்பட்டால் அரசருக்கு அழிவு ஏற்படும். ஒரே ஆலயத்தில் ஒரே ஆசார்யனால் பூஜைகள் செய்யப்படவேண்டும். பல பூஜைகளின் சேர்க்கை ஏற்பட்டால் ஆசார்யகலப்பு ஏற்படும்.
892. ரிஷிகள் கூறுகிறார்கள் ஜலம் முதலியவைகளை கொண்டு வருதல், சந்தனம், புஷ்பம் தூபம் முதலியவைகளை தயார் செய்தல்
893. தீபம் நைவேத்யம் தயார் செய்தல், ஸ்வாமிக்கு நித்ய பூஜை செய்தல், உற்சவமூர்த்திகள் பூஜை பரிவார தேவதை பூஜைகள்
894. நித்யோத்ஸவங்கள் பாடச்செய்தல், அபிஷேகத்திற்கு உபகரணங்களை வரிசையாக கற்பித்தல் உத்ஸவங்களின் பூர்வாங்கமான கார்யங்களைச் செய்தல் தேவதைகள் ஆவாஹணம் முதலியன
895. அச்சமயத்தில் மூலஸ்தான லிங்கத்திற்கு பூஜை நித்யஹோமங்கள், இவ்வாறாக இவைகளை பலமனிதர்கள் செய்யவேண்டியிருப்பதால் எவ்வாறு ஒரு ஆசார்யன் செய்யமுடியும்
896. சிவன் கூறுகிறார். பெரிய அறிவாளிகளே! ஸாதுக்களே! நீங்கள் கேளுங்கள். இதற்குத்தகுந்த ஸமாதானத்தைக் கூறுகிறேன். ஒரே ஆலயத்தில், நித்ய, நைமித்தக காம்யபூஜைகள் இருப்பின் அதை
897. ஒரே ஆசார்யன் செய்யவேண்டுமென்பது என்னால் நன்கு கூறப்பட்டது. எவ்வாறெனில் ஆசார்யனுடைய புத்ரனோ அல்லது பேரனோ அல்லது அவருடைய உறவினரோ
898. ஆசார்யனால் தீøக்ஷ செய்து வைக்கப்பட்டவர்களும், ஆசார்யருடைய உத்தரவுக்குக் கீழ்படிந்தவர்களும் ஆதிசைவகுலத்தில் உதித்தவர்களால் பிராம்மணர் க்ஷத்திரியர் வைச்யர்
899. சூத்ரர்களும், அனுலோம ஜாதியினரும் அவ்வாறே, பாட்டு பாடுபவர்கள், ஆடுபவர்கள், தேவதாஸிகள் என்ற என்னுடைய தாஸிகளும் ஆசார்யருடைய உத்தரவை ஏற்று செய்பவர்கள் எவர் உண்டோ அவர்கள்
900. அந்தந்த கார்யங்களைச் செய்திருந்தாலும், அரசரால் நியமிக்கப்பட்ட சிற்றரசர்கள் அரசர் ஆணையை நிறைவேற்றுவது போல் ஆசார்யன் செய்ததாகவே ஆகும்.
901. சிற்றரசர்கள் செய்தது எப்படி அரசருடைய, காரியமோ, அப்படியோ இங்கும், ஆசார்யனுடைய ஆக்ஞையால் மற்றவர்கள் செய்தாலும் அது ஆசார்யன் செய்ததாகவே கொள்ள வேண்டும்.
902. அப்படி இல்லாமல் இருந்தால் ஸாங்கர்யதோஷம் ஏற்படும். எந்த கிரியைகள் உள்ளவைகளோ அவைகளை மறுபடியும் மறுபடியும் சாஸ்தி ரோக்தமான பரிஹாரம் செய்யவேண்டும்.
903. எல்லா கிரியைகளிலும் சாஸ்திரத்தில் கூறப்படாததை செய்யக்கூடாது. அப்படி சாஸ்திரத்தில் கூறப்படாததை செய்தால் அரசனுக்கு கலக்கம் ஏற்படும்.
904. அந்த தோஷத்தைப் போக்குவதற்கு சாஸ்திரத்தில் கூறப்பட்ட சாந்தியை செய்யவேண்டும். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை முதலில் செய்து பிறகு அதிகப்படி செய்வது சுகாபிவ்ருத்தியை தரும்.
905. ஆகையால் எப்படியாவது முயற்சி செய்து முன்பு செய்ததை விட அதிகமானதாகவே செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிகாம மஹாதந்திரத்தில் பிராயச்சித்த விதியாகிற முப்பதாவது படலமாகும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 9 அக்டோபர், 2024
படலம் 29: பிராயச்சித்த விதி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக