படலம் 33: சம்ப்ரோக்ஷண விதி...
33 வது படலத்தில் சம்ப்ரோக்ஷண விதி கூறப்படுகிறது. முதலில் எல்லா தோஷத்தையும் போக்கக்கூடிய ஸம்ப்ரோக்ஷண விதியை கூறுகிறேன் என்பது கட்டளையாம். பிறகு ஸம்ப்ரோக்ஷணமானது ஆவர்த்தம், புனராவர்தம், அநாவர்தம், ஆந்தரிதம், என்று நான்கு விதம் ஆகும் என கூறி அவைகளில் இலக்கணம் அவை செய்யும் முறை மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. முதலில் யாத்ரா ஹோமத்துடன் கூடியது ஆவாத்தமாகும். மற்றவைகள், யாத்ரா ஹோமம் இல்லாதவையாகும். பிறகு அவ்வாறு ஆவர்த்த பிரதிஷ்டையில் லிங்க ஸ்தாபனத்தில் கூறி உள்ளபடி மாசம், பக்ஷம், நட்சத்திரம் ஆகிய எல்லாவற்றையும் நன்கு பரிசித்து கார்யாரம்பம் செய்யவும், அனாவிருத்தம் முதலிய மற்ற சம்ப்ரோக்ஷணங்கள் காலங்களை பரிசிக்காமல் செய்யவேண்டும் என்றதான விஷயங்கள் கூறப்படுகின்றன. இவ்வாறு 34 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. எல்லா தோஷங்களையும் போக்கவல்ல ஸம்ப்ரோக்ஷண முறையை கூறுகிறேன். ஆவர்த்தம், அநாவர்த்தம் புநராவர்த்தம் என்றும்
2. பிறகு ஆந்தரிதகமென்றும் ப்ரோக்ஷணம் நான்கு வகைப்படும். முதன்மையான மூலபாலாயத்திலிருந்து மூலஸ்தானத்தில் மூர்த்தியை ஸ்தாபித்து.
3. ஆவர்த்தம் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு அனாவர்த்தம் கூறப்படுகிறது. தகாதவர்களால் தொடப்பட்டாலும் அல்லது விக்ரகம் விழுந்தாலும்
4. ஒரு மாதகாலம் பூஜை இல்லாவிடினும் தளவரிசை விரிசலடைந்திருந்தாலும் லிங்கம், பீடம் அசைவடைந்திருந்தாலும் செய்யும் கிரியைக்கு அனாவர்த்தமெனப்படும்.
5. மூலஸ்தானத்திலிருந்து மூர்த்தி ஜீவனை பாலாலயத்தில் ஸ்தாபித்து திரும்பவும் முன்னமேயுள்ள மூலஸ்தானத்தில் மூர்த்தி ஜீவனை ஸ்தாபித்து புனராவர்த்தனம் எனப்படும்.
6. உத்ஸவ பிம்பங்கள் ஸகளநிஷ்கள பிம்பங்கள் தேவிபிம்பங்கள் ஆகியவைகளின் ஆயுதங்களாலும் வெடித்து இருந்தாலும் மாற்று வர்ணமடைந்தாலும் உருவத்தின் அங்க பாகம் உபாங்கம் குறைவுற்று இருந்தாலும்
7. தோல் ஆடை குறைவுபட்டாலும் ஆயுதமின்றி ஆபரணங்கள் இன்றியும் பத்மபீடமின்றியும் தளவரிசைகள் தேய்மானமடைந்திருந்தாலும்
8. பீடத்தில் அஷ்டபந்தனம் விடுபட்டு இருந்தாலும் அதற்காக செய்யப்படும் கிரியைக்கு அந்தரிதம் என கூறப்படுகிறது. யாத்ராஹோமத்துடன் கூடியது ஆவர்த்த ப்ரதிஷ்டையாகும். மற்றவைகள் யாத்ராஹோம மின்றி செய்யப்படுவது ஸம்ப்ரோக்ஷணமாகும்.
9. ஹே ப்ராம்மணர்களே! ஆவர்த்த பிரதிஷ்டையில் எல்லாவித மாஸம், பக்ஷம், நக்ஷத்ரம் முதலியவைகளை லிங்கபிரதிஷ்டையில் கூறியுள்ள முறைப்படி செய்யவேண்டும்.
10. மற்ற ப்ரதிஷ்டைகளை திதி, நக்ஷத்ரம் கிழமை, அம்சம் முஹூர்த்த காலம் இவைகளை சோதித்து பார்க்காமல் செய்ய வேண்டும்.
11. பிம்ப அமைப்பு முறை சரிசெய்வது ஜலாதிவாஸம், சயனாதிவாஸம் இவைகள் இன்றி அனாவர்த்த ப்ரதிஷ்டையானது ஆவர்த்த பிரதிஷ்டை போல் செய்ய வேண்டும்.
12. இவ்வாறு அனாவர்த்தத்தை அறியவும், இங்கு புனராவர்த்தமானது எல்லாம் ஆவர்த்த பிரதிஷ்டை போல் செய்யவும். ஆனால் மூலஸ்தானத்திலிருந்து தருணாலய பிரதிஷ்டை அவ்விடமிருந்து மூலஸ்தான மூர்த்தி ஜீவசேர்க்கையுடன் கூடியதாகும்.
13. ஹே பிராம்மணர்களே! அந்தரித பிரதிஷ்டையை சுருக்கமாக நான் கூறுகிறேன், ரத்ன நியாஸம் நயோன்மீலனம், ஜலாதிவாஸம்.
14. ஹே பிராம்மணர்களே! சயனாதி வாஸநம் முதலிய பிம்ப கிரியைகளினின்றி பிம்பத்தின் எல்லா அவயவத்தையும் புதிய வஸ்திரத்தினால் மூடி
15. முன்பு கூறப்பட்டுள்ள முறைப்படி கும்பந்யாஸம் ஹோமத்தையும் செய்ய வேண்டும், முடிவில் ஸ்நபனம் செய்யவும். மற்ற பூஜை கார்யங்கள் ஸமமானதாகும்.
16. இவ்வாறு பிரதிஷ்டைகளை யார் செய்கிறானோ, அவன் புண்ய கதியை அடைகிறான்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸம்ப்ரோக்ஷண விதியாகிற முப்பத்தி நான்காவது படலமாகும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 9 அக்டோபர், 2024
படலம் 33: சம்ப்ரோக்ஷண விதி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக